காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#8
முதல் நாள் கல்லூரி முடிந்து வீடு செல்லும் வேளையில் தான், நான் அந்த நோட்டீஸ் போர்டு-டில் இருப்பதை படித்தேன். அதில் கல்லூரியில் நடக்க இருக்கும் சில நிகழ்ச்சியின் குறிப்பு மேலும், நுழைவு தேர்வின் ரிசல்ட் ஒட்டப்பட்டிருந்தது. அதில் முதல் இடத்தில் எனது பெயர் கண்ட உடன் நான் இறக்கை இல்லாமல் பறப்பதுபோல் ஒரு ஆனந்தம், சில நொடிகள் மட்டுமே நீடித்தது. எனக்கு அடுத்த இடத்தில் இருந்த பெயர், என்தலையில் கொட்டி தரைக்கு கொண்டுவந்தது. அது வேறு யாரமல்ல, கலாதான் அவளின் முழுப்பெயர் அப்பொழுதான் நான் தெரிந்து கொண்டேன். அவளின் முழுப்பெயர் கலைமதி. முதல் மூன்று இடத்தை பெற்ற நபர்களின் புகைப்படத்துடன் அந்த லிஸ்ட் ஒட்டப்பட்டிருந்தது. அடுத்துவந்த நாட்களில்தான் நான் தெரிந்து கொண்டேன், ஏன் கலா என்னை பார்த்து முதல் நாள் அப்படி ஓர் பார்வை வீசி சென்றாள் என்று.

அவள் இந்த நுழைவு தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்று முதலிடம் வர வேண்டும் என்பதற்காக கடுமையாக முயற்சி செய்திருந்தாள், ஆனால் அவளால் முதலிடத்தை பெற முடியவில்லை என்பதே அவளின் ஒரே ஆதங்கம். அவள் என்னைபார்த்து நான் அழகு என்பதற்காக அல்ல, இவனெல்லாம் என்னை விட அதிகம் மதிப்பெண் பெற்று விட்டானே என்கிற அலட்சியம் கலந்த ஆக்ரோஷம். என்ன ஒரு பெண்ணடா!!!.

அவளை ஆசையோடு பார்த்த நான் அதுமுதல் மற்ற பெண்களை பார்ப்பது போல் சாதாரணமாகவே பார்த்தேன், யாரிடம் நெருங்கி பழக மாட்டோமா என்று ஏங்கிய நான் அதுமுதல் இவளுடன் அதிகம் சகவாசம் வைத்திருக்க கூடாது என எண்ண தொடங்கினேன். எனது முதல் செமஸ்டர் முடியும் வரை நான் அவளிடம் அதிகம் பேசாமல், ஹாய்!!! பாய்!!! என்கிற மாதிரியே பழகினேன்.

செமஸ்டர் முடிவுகள் இன்று வரலாம் என்று மாணவர்களிடம் ஒரே எதிர்பார்ப்பு. அதுவரை நான் ஏதோ அதிஷ்டத்தில் நுழைவு தேர்வில் முதலிடம் பெற்றேன் அதனால் இம்முறை வரும் முடிவு, எனது வேஷத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிடும் என்று என்னிடமே நான் பழகிய நண்பர்கள் கேலியுடன் பேசினார்கள்.

உண்மையில் நானுமே, என்னால் அதிக மதிப்பெண் வாங்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஒரு ஆசிரியர் ஒரு படி மேலே போய் கலாவிடமும் அவளுடன் நெருங்கி பழகும் அதிகம் படிக்கும் பேர்வழிகள் என்று பெயர்வாங்கிய நண்பர்களிடமும் 'அட்வான்ஸ் விஷேஸ் போர் யுவர் குட் மார்க் ', நீங்க கண்டிப்பா நல்ல மார்க் வாங்குவீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு, அவங்களை பாரு, படிக்க வந்த மாதிரியா இருக்காங்க.. அவங்களும் அவங்க டிரஸ் கோடும் என என்னை சாடைமாடையாக திட்டியும் விட்டு சென்றார்.

அப்பொழுதுதான் எனக்கே என் மேல் சற்று கோபமும் ஆதங்கமும் வந்தது. நாமும் படிச்சு அவங்களை கிழிக்கணும் என்று ஒரு வைராக்கியம் வந்தது.

ஒரு ஆசிரியரே என்னை ஏளனமாக பேசிவிட்டு செல்கிறாரே, என்று சோர்ந்து போய் கல்லூரி நுலகத்தில் ஏதேதோ புத்தகத்தை படிக்கிற மாதிரி ஒரு மாதிரியான மன வேதனையுடன் இருந்தேன். அங்கு எதேர்ச்சையாக வந்த கலா எனக்கெதிராக அமர்ந்து "The Economic Times ' தினசரி நாளிதழை படித்து நண்பர்களுடன் பிசினஸ், ஷேர் மார்கெட் நியூஸ் எல்லாம் கலந்து பேசிகொண்டிருந்தாள்.

இது அவர்கள் தற்செயலாக செய்தார்களா இல்லை என்னை கடுப்பேற்ற செய்கிறார்களா தெரியவில்லை. ஆனால் என்னால் அங்கே இருக்க முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். அன்று மதிய பாடவேளை நாங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் லேப்-பில் இருந்தோம். அப்பொழுதான் அதே ஆபீஸ் ஆஸிஸ்டன்ட் (எடுப்பு) ஒரு சில பேப்பர்கள் பின் செய்து எடுத்து வந்தான்.

[img=8x8],'/images/mobile/posted_0.gif[/img][url=,'/newreply.php?tid=32425&pid=68125][/url]
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 29-01-2019, 10:36 AM



Users browsing this thread: 1 Guest(s)