22-12-2019, 09:30 PM
நாங்கள் சேர்ந்து ஒரு மாதம் ஆகியிருக்கும்.. ஒரு நாள் காலிங் பெல் எங்கள் டியூசனில் அடித்தது. அந்தக் காலிங்பெல் அடித்தாலே நாங்கள் உற்சாகமிகிவிடுவோம். என்.சி சாரை பார்க்க ஏதேனும் ஆட்கள் வந்தால்.. அவர் போய்விடுவார். அடிக்கடி அவரால் மாடி ஏற முடியாது என்பதால் ஒரு முறை கீழே சென்று விட்டால் மாடிக்கு வர மாட்டார். லீடர் ரூபன் சத்தம் போடாமல் மெதுவாக பேசிக்கொள்ள எங்களை அனுமதிப்பான். அதனால் பல கதைகளை பேசி டியூசனை மகிழ்ச்சியாக முடித்துவிடுவோம்.
அன்று காலிங்பெல் அடித்ததும் ஒரு பையனை கீழே போய் அவருடைய வீட்டில் என்னவென கேட்டு வர சொன்னார். கடைசியாக உட்காந்திருக்கும் செல்வம் இந்தமுறை கீழே போய் வந்தான். "சார் உயரமான பையனை கீழே அக்கா வரச் சொன்னாங்க" என்றான். என்.சி "டேய் பெருசு. நீ போ. தென்னமரத்துல பாதி வளர்ந்திருக்கான்" என்றார் நக்கலாக. என் சகாக்கள் சிரித்தார்கள். நான் சரிசார் என கீழே போனேன்.

sagotharan