Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் - ரவி வர்மா முன்னிலை; ஆடுகளம் நரேன் வெற்றி
சின்னதிரை நடிகர் சங்கத் தேர்தல் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. சிவன் சீனிவாசன், நிரோஷா, போஸ் வெங்கட், ரவி வர்மா ஆகிய நான்கு பேர் தலைமையில் நான்கு அணிகள் களத்தில் இருந்தன. கடைசி நேரத்தில் வாக்குப் பதிவு தொடங்குவதற்குச் சற்று முன்பாக போஸ் வெங்கட் அணியில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட நவீந்தரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் தேர்தல் அதிகாரி லியாகத் அலிகான். இதனால் நவீந்தர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவானது.
[Image: 74_10137.jpg] 
இதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சீரியல் நடிகர்கள், நடிகைகள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 5.35 வாக்குப்பதிவு முடிந்த நிலையில் சற்று இடைவெளிவிட்டு 7 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன்படி, முதலில் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே ரவி வர்மா முன்னிலையில் இருந்தார். இரண்டாம் இடத்தில் தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசனும், மூன்றாவது இடத்தில் நிரோஷாவும், நான்காவது இடத்தில் போஸ் வெங்கட்டும் இருந்து வந்தனர். தொடர்ந்து ரவி வர்மா முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் நிலவிய குழப்பம் காரணமாக முடிவை அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். 


[Image: 75_10260.jpg]
தலைவர் பதவிக்கான வாக்குகள் வேறு பெட்டிகளில் செலுத்தப்பட்டதால் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. கடைசி நேர நிலவரப்படி ரவி வர்மாவே அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  நிறுத்தப்பட்டுள்ள வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ரவி வர்மா அணியைச் சேர்ந்த ஆடுகளம் நரேன் வெற்றி வாகை சூட்டியுள்ளார். பொருளாளர், துணைத் தலைவர், இணை செயலாளர் மற்றும் கமிட்டி உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது. ரவி வர்மா ஆரம்பம் முதலே சின்னத்திரை தேர்தல்களில் நின்று வந்தார். இந்த முறை அவருக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 28-01-2019, 09:53 AM



Users browsing this thread: 4 Guest(s)