Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மோடியின் தமிழகம் வருகை : ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வெடித்தது வார்த்தைப்போர்
#2
தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், காவிரி விவகாரத்தில் மேகதாது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, கர்நாடகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது, நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்டவற்றால் மத்திய அரசு மீது தமிழகத்தில் எதிர்ப்பு காணப்படுகிறது. 
இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் என்.டி.டி.வி.-க்கு அளித்த பேட்டியில், ''மோடி எதிர்ப்புக்கு பின்னால் நாங்கள் இல்லை. இது மக்களின் கோபம். எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும். இப்போது அது செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும். எதற்காக அடிக்கல் நாட்டு விழாவை தாமதம் செய்துள்ளனர்?. தேர்தல் வருவதால் இதுபோன்ற வேலைகளில் பாஜக ஈடுபடுகிறது'' என்றார். 

#GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகுவது இது இரண்டாவது முறை. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை கண்காட்சியில் கலந்து கொள்ள மோடி வந்தார். அப்போது இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. பிரமாண்ட பலூன்களிலும் Go Back Modi என்று எழுதி மோடி எதிர்ப்பாளர்கள் பறக்க விட்டனர்.
மேலும் படிக்க -''தமிழகத்தில் காவி ரத்தம் பாய்ச்சப்பட்டு கொண்டிருக்கிறது''- தமிழிசை
எதிர்ப்புகளை தவிர்க்க சாலை மார்க்கமாக வருவதை விட்டு விட்டு ஐ.ஐ.டி. மெட்ராசில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் ஹெலிகாப்டர் மூலம் வந்தார். இன்று மோடி பங்கேற்கும் மதுரை நிகழ்ச்சிக்கு அருகே வைகோவின் மதிமுக கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மோடி எதிர்ப்பு பிரசாரங்களை பாஜக மறுத்திருக்கிறது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் கூறுகையில், '' ஆன்லைனில் மோடிக்கு எதிராக பணம் செலவழிக்கப்பட்டு பிரசாரம் நடத்தப்படுகிறது. அவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியும். அவர்களை நாங்கள் கண்டுகொள்ளவில்லை'' என்றார். 
மோடி எதிர்ப்பு பிரசாரம் என்பது சரியான அணுகுமுறை அல்ல என்று சிலர் கூறியுள்ளனர். அரசியல் விமர்சகர் சுமந்த் சி. ராமன் தனது ட்விட்டர் பதிவில், ''#GoBackModi என்ற ஹேஷ்டேக்கை இப்போது ட்ரெண்ட் செய்வது சரியான அணுகுமுறை அல்ல. அவர் மிகச் சிறந்த மருத்துவமனையை அமைக்க அடிக்கல் நாட்ட வருகிறார். எதிர்ப்பைக் காட்ட சில நிகழ்ச்சிகள் இருக்கின்றன. ஆனால் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும் அவரை எதிர்ப்பது சரியான அணுகுமுறை அல்ல'' என்று கூறியுள்ளார்
Like Reply


Messages In This Thread
RE: மோடியின் தமிழகம் வருகை : ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வெடித்தது வார்த்தைப்போர் - by johnypowas - 28-01-2019, 09:48 AM



Users browsing this thread: 1 Guest(s)