28-01-2019, 09:42 AM
பேட்டிங் வாய்ப்பு இல்லை
விஜய் ஷங்கர் தனக்கு கிடைத்த பந்து வீசும் வாய்ப்புகளிலும், விக்கெட்கள் வீழ்த்தவில்லை. அவர் ஆல்-ரவுண்டர் என்றாலும் பேட்டிங் தான் அவரது முதன்மையான பணி. ஆனால், பேட்டிங் வாய்ப்பு கிடைக்காததால் உலகக்கோப்பை அணியில் விஜய் ஷங்கர் இடம் பெறுவது கடினமே.
பண்டியா சோர்ந்து விட்டாரா?
பண்டியா இடை நீக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். இதனால், மனதளவில் அவர் சோர்ந்து போகாமல் இருக்கிறாரா என பார்ப்பது மிகவும் முக்கியம். அதே போல, தோனிக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து அவர் விரைவில் மீண்டு வருவாரா என்பதும் முக்கியமான விஷயமாக இருக்கிறது.