காவியாவின் அடுத்த பயணம்(completed)
#1
அர்ஜுன் சிங்கப்பூர் செல்ல சென்னை விமான நிலையத்திற்குபுறப்பட இன்னும் சில நிமிடங்களே இருந்த போது காவியா அவன் அருகே அமர்ந்துகண்கள் நீரினால் நிரம்பி இருக்க அவன் தோள் மேல் சாய்ந்து இருந்தாள்.அர்ஜுனுக்கும் அந்த சுழல் கொஞ்சம் வருத்தத்தை தான் கொடுத்தது.இருப்பினும்இருவரும் அவர்கள் வேலையில் முன்னேற முயற்சிக்கும் போது இது போன்ற சிறுகடினங்களை தாங்க தான் வேண்டும் என்று புரிந்து இருந்தனர். இருப்பினும் இந்தநான்கு வருட திருமண பந்தத்தில் இருவரும் பிரிந்து வாழ போவது இது தான்முதல் முறை என்பதால் ஏற்பட்ட நெகிழ்ச்சி உண்மையானது.அர்ஜுன் காவியாவை சமாதானம் பண்ணுவதாக நினைத்து அவனே தன்னை தேற்றி கொண்டான். காவியாவை இரு கரங்களால் அணைத்து "கவி நேற்று நாம் ரெண்டு பேரும் பேசியது இருவருக்குமே ஒரு வித மன முதிர்ச்சியை கொடுத்துள்ளது. நம் வாழ்க்கையில் நடந்துள்ள சில தவறுகள் அதை தவறுகள் என்று சொல்லுவதை காட்டிலும் சில நிகழ்வுகள் இன்று நாம் வாழும் சுழலில் தவிர்க்க முடியாத இடர்பாடுகள் என்றே எடுத்துகொள்ள வேண்டும் ஆனால் பலர் அதை மறைக்க முயல்வதால் தான் பிரச்சனைகள் தலை தூக்குகின்றன. ஆனால் நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உண்மைகளை பகிர்ந்து கொண்டது நம்முடைய உறவின் நிதர்சனத்தை தான் உறுதி படுத்தி உள்ளது. அவன் பேசுவதை அவன் மேல் சாய்ந்த படி கேட்டுகொண்டிருந்த காவியாவிற்கு மனம் கொஞ்சம் கொஞ்சமாக லேசாவதை உணர முடிந்தது.
காவியாவும் அர்ஜுனும் டின்னெர் ஒன்றாக எடுத்து அர்ஜுன் உடமைகளை சரி பார்த்து வெளியில் வைக்க ஏர்போர்ட் செல்ல டிரைவர் புது வண்டியை வீட்டு முன் கொண்டு வந்து நிறுத்தினான். அவனே மேலே வந்து அர்ஜுன் பெட்டிகளை கீழே இறக்க காவியா கதவை பூட்டி அர்ஜுனுடன் காரில் ஏறினாள். கார் விமான நிலையம் போகும் வரை இருவரும் ஒன்றும் பேசாமல் பயணித்தனர். ஏர்போர்ட் உள்ளே போக அனுமதி சீட்டு வாங்க கவுன்ட்டர் சென்றதும் தான் அன்று பாதுகாப்பு காரணங்களால் இன்று விசிட்டர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்பது தெரிந்தது. காவியா அர்ஜுனை அணைத்து போது இடம் என்று கூட பாராமல் அவனுக்கு அழுத்தமான முத்தம் ஒன்றை பதிக்க அர்ஜுன் அவள் தலை முடியை மெதுவாக தடவி ஐ லவ் யு கவி செல்லம் என்றான் காவியா ஹே குண்டா ஐ டூ லவ் யு என்று மீண்டும் ஒரு அழுத்தமான முத்தம் குடுத்து அவன் உள்ளே செல்ல இவள் வெளியில் நின்று கை அசைத்தாள். அதற்கு மேல் அங்கு நின்று ஒன்றும் செய்ய போவதில்லை என்று தெரிந்து அவள் டிரைவரை அழைத்து வண்டியை எடுத்து வர சொன்னாள்.
ஏர்போர்ட் விட்டு ரோடிற்கு வந்ததும் டிரைவர் மேடம்வீட்டுக்கு தானே என்று கேட்டான். அவன் கேட்டதும் தான் காவியாவிற்கு இன்றுமுதல் காவியா அந்த வீட்டில் தனியாக இருக்க வேண்டும் என்பது நினைவுக்குவந்தது..காவியா ஆமாம் என்று சொல்லி கண்ணாடி வழியாக வெளியே பார்த்துகொண்டு வந்தாள்.கார் கோயம்பேடு தாண்டும் சமயம் காவியா டிரைவரிடம் அவன்வீடு எங்கே இருக்கு என்று கேட்க அவன் நுங்கம்பாக்கம் என்றான்.அடுத்துசொந்த வீடா இல்லை வாடகைக்கு இருக்கியா என்று கேட்க அவன் சென்னையில் தனியாகதான் இருப்பதாகவும் வேறு ஒரு நண்பனுடன் அவன் அறையில் இருப்பதாக சொன்னான்.காவியா அத்துடன் பேச்சை நிறுத்தி கொண்டாள். அவள் வீட்டில் தனியாக பல முறைஇருந்திருக்கிறாள் என்றாலும் இந்த முறை அது நிரந்திரம் என்ற எண்ணம்அவளுக்கு கொஞ்சம் அச்சத்தை குடுத்தது. இன்று மட்டுமாவது அந்த தனிமையைதவிர்க்க எண்ணி ஸ்டெல்லாவுடன் இருக்கலாம் என்று அவளை அழைத்தாள். ஸ்டெல்லாஹலோ சொல்லி என்ன உங்கள் கணவர் கிளம்பியாச்சா நீங்க ஏர்போர்ட் போனீர்களா ஒரேசெண்டி காட்சிகளா என்று அடுக்கி கொண்டே போனாள். காவியா எல்லாவற்றிற்கும்ஆம் என்று சொல்லி அவள் அழைத்த காரணத்தை சொன்னாள். ஸ்டெல்லா காவியா அவளுடன்தங்கலாமா என்று கேட்டதும் உடனே கண்டிப்பாக வாங்க ஐ அம் வெய்டிங் என்றாள்.காவியா கொஞ்சம் நிம்மதி அடைந்து வீடு வருவதை பார்த்து கொண்டு வந்தாள்.வீடு வந்ததும் அவள் டிரைவரிடம் நீ கொஞ்சம் இரு நான் மந்தவெளி போகணும் என்றுசொல்லி உள்ளே சென்று அவள் அலுவலகத்திற்கு தேவையானவற்றை மற்றும் அவளுக்குவேண்டிய உடை எடுத்துக்கொண்டு மீண்டும் காரில் ஏறி மந்தவெளி போக சொன்னாள்.டிரைவர் மேடம் ஸ்டெல்லா மேடம் இடத்திற்கா என்று கேட்டான் அவன் ஏற்கனவே ஒருமுறை வந்திருந்ததால் அவள் ஆமாம் என்றாள். ரோட்டில் வண்டி போக்குவரத்துகுறைந்து இருந்ததால் அவள் ஸ்டெல்லா இடத்தை கொஞ்ச நேரத்திலேயே சென்றடைதாள்

கீழே இறங்கி டிரைவரிடம் நீ வண்டியை உன் இடத்திலேயே இன்று வைத்து கொள்நாளைக்கு காலை எட்டு மணிக்கு இங்கே வந்துடு என்று சொல்லி அவன் கையில்கொஞ்சம் பணத்தை குடுத்தது பெட்ரோல் இருக்க என்று பார்த்துக்க சொன்னாள்.அவன் இல்ல மேடம் சாயந்திரம் தான் ஐயா புல் டான்க் போட்டு வைத்தார்.என்றான். அவள் அவனை அனுப்பி விட்டு ஸ்டெல்லா அறைக்கு சென்றாள்.ஸ்டெல்லா அவள் அறை கதவை திறந்து வைத்து காவியாவிற்காக காத்து இருந்தாள். அந்த பண்பு காவியாவிற்கு மகிழ்ச்சி அளித்தது. கூடவே ஒரு இடறல் இதை மாதிரி தான் வந்தனாவை மிக நெருங்கிய தோழியாக ஏற்று கொண்டேன் ஆனால் சமீபத்தில் வந்தனா நடந்து கொண்ட விதம் காவியாவை எல்லோரிடமும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வைத்தது. ஸ்டெல்லா ஹாய் என்று உரக்க சொல்லி காவியாவை உள்ளே வர சொன்னாள். காவியாவிடம் வேறு எதுவும் கேட்காமல் சாப்பிட்டீர்களா என்று மட்டும் கேட்டு அவள் அறையில் இருந்த சிறிய ப்ரிட்ஜில் இருந்து கோக் கேன் எடுத்து காவியாவின் கையில் குடுத்தாள். காவியா அதை பருகி கொண்டே அவள் வந்ததற்கான காரணத்தை சொல்ல ஸ்டெல்லா நீங்கள் இங்கே வருவதற்கு ஏன் தோழி என்ற ஒரு காரணம் மட்டுமே போதும் வேறு எதுவும் வேண்டாம் என்றாள் காவியா புன்னகைத்து நன்றி என்று சொல்ல ஸ்டெல்லா அவள் வாயை பொத்தி நன்றி சொல்லி என்னை வேறுபடுத்தி விடாதீர்கள் என்றாள். காவியா தலையை ஆட்டி அவள் இனி சொல்ல மாட்டேன் என்று உணர்த்தினாள். அந்த அறையில் மேலும் ஒரு கட்டில் காலியாக இருப்பதை பார்த்து உன் ரூம் மேட் எங்கே என்று கேட்க ஸ்டெல்லா அவள் இந்த அறைக்கு வந்த அன்றே ஒரு நிபந்தனையுடன் தான் வந்ததாகவும் அவளுக்கு தனிமை கொஞ்சம் பிடிக்கும் என்று கூறினாள். காவியா இருக்கையை விட்டு எழுந்து இதை நீ முன்னமே சொல்லி இருந்தால் நான் வந்திருக்க மாட்டேன் இல்ல என்று சொல்ல ஐயோ காவியா நான் சொன்னது ரூம் மேட் பற்றி ஆனால் நீ ஏன் கெஸ்ட் ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு என்றாள். காவியா தான் சொன்னது சும்மா வம்பு பண்ண என்றும் இந்த நேரத்தில் அவளை விரட்டினாலும் அவள் போக முடியாது என்று மீண்டும் இருக்கையில் அமர்ந்தாள். ஸ்டெல்லா ரூம் கதவை மூடி காவியாவை உடை மாற்றி கொள்ள சொல்ல காவியாவும் நைட்டிக்கு மாறி ஸ்டெல்லாவுடன் கடலை போட்டாள். நடுவே ஸ்டெல்லா காவியாவிடம் ஆமாம் இன்று நீங்கள் ஜெய்தீப் சாருடன் மீட்டிங் இருந்தது ஏன் போகவில்லை என்று கேட்க காவியா இல்ல பா காலை வந்தவுடனே என் மெயில் பாக்ஸ்ல் ஜெய்தீப் மெயில் இருந்தது அதில் அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் இன்று சென்னையில் இருக்க முடியாது என்றும் சென்னை வந்ததும் இருவருக்கும் வசதியான தேதியில் இன்று நடைபெற வேண்டிய மீட்டிங்கை வைத்துகொள்ளலாம் என்று கூறி இருந்ததை சொல்ல ஒ அப்படியா காலையிலேயே உங்களிடம் கேட்கணும் நினைத்தேன் ஆனால் இன்று முழுவதும் நீங்கள் ஒரு வித சிந்தனையில் இருந்ததால் கேட்கவில்லை என்றாள்.


இரண்டு பெண்கள் பேசிக்கொண்டால் அதில் கிசுகிசு ஒரு நிச்சய அங்கமாக இருக்கும் இங்கேயும் அதில் வேறுபாடு இல்லை எப்போதுவுமே காவியா வேறு ஒருவரை பற்றி தெரிந்து கொள்வதில் அதிக நாட்டம் காடமாடால் என்றாலும் இன்று ஸ்டெல்லாவிடம் அவர்கள் கிளையில் புரளும் விறுவிறுப்பான கிசுகிசு என்ன என்று கேட்டாள். ஸ்டெல்லா அது AGM பற்றியது என்றும் அவர் பெண்கள் விஷயத்தில் எந்த அளவு பலவீனமானவர் என்று சொல்ல இதற்கு முன் அந்த கிளையில் லோன் ஆபிசராக இருந்த ஜமுனாவை எப்படி அவர் வலைக்குள் விழ வைத்தார் என்று விரிவாக சொன்னாள். காவியா ஆச்சரியத்துடன் நிஜமாகவா நான் AGM பழகிய விதத்தை வைத்து அவர் ரொம்ப நல்ல அதிகாரி என்று தானே நினைத்தேன். என்றாள். ஸ்டெல்லா நீங்க சேர்ந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை அது தான் காரணம் என்று சொல்லி காவியா சின்ன வயது வாழ்கை பற்றி சொல்ல முடியுமா என்று கேட்க காவியா அவளை பற்றிய எல்லோருக்கும் தெரிய கூடிய செய்திகளை மட்டும் கூறினாள். ஸ்டெல்லா காவியா உங்களை போல ஒரு அழகான பெண் காதல் வலையில் சிக்காமல் இருந்தது எப்படி என்று கேட்க காவியா சிரித்து நான் சின்ன வயதில் அழகாக இருக்க மாட்டேன் என்று சொல்லி கண்ணடித்தாள்.. அப்போ நீங்க கண்டிப்பா அந்த ரகசியத்தை எனக்கு சொல்லணும் எப்படி அழகாக இல்லாதவர் அழகு பெட்டகமாக மாறுவது என்று. கவலை படாதே நீ இப்போவே அழகாக தான் இருக்கிறாய் இதற்கு மேல் அழகு சேர்ந்தால் நம்ப வங்கி ஒரு திறமையான அதிகாரியை தமிழ் சினிமாவிற்கு இழக்க வேண்டி இருக்கும் அதனால் அந்த ரகசியம் உனக்கு வேண்டாம் என்றாள்.

ஸ்டெல்லா புன்முறுவல் செய்து காம்ப்ளிமேண்டுக்கு நன்றி என்றாள் காவியா அறையை சுற்றி பார்த்து ரொம்ப நீட்டா வச்சு இருக்கே உனக்கு இதற்கே டைம் சரியா இருக்குமே என்று சொல்லி உன் நேடிவ் எது என்று கேட்டாள் ஸ்டெல்லா நான் பொறந்தது கோவைல ஆனால் வளர்ந்தது படித்தது எல்லாம் பெங்களூர் என் அப்பா ஒரு சாப்ட் வேர் கம்பனியில் HR ஆகா இருந்தார் அதனால் நான் பெங்களூர் வாசியா இருந்தேன். மூன்று வருடம் முன்னே என்னக்கு இந்த வங்கி வேலை வந்த அதே நேரம் அவரும் UK சென்று அங்கே தனியாக ஒரு நிறுவனம் நடத்துகிறார்.அம்மாவும் தம்பியும் அவருடன் சென்றுவிட்டனர் நான் இங்கே இருக்க முடிவு பண்ணி இப்போ சென்னை வாசி என்று சுருக்கமாக சொன்னாள். அப்போ உனக்கு சென்னை வாழ்க்கை பிடித்திருக்காதே என்று கேட்க ஸ்டெல்லா அப்படி இல்லை நான் தண்ணீர் மாதிரி எந்த இடத்திற்கும் பழகி அதன் போக்கில் சென்று விடுவேன். ஆனால் ஒரு விஷயம் என்னால் ஏற்றுகொள்ள முடியாதது இங்கே ஆண் பெண் உறவை மற்றவர்கள் விமர்சிப்பதை. அதில் அவர்களுக்கு என்ன சுகமோ தெரியவில்லை இங்கே ஒரு ஆணும் பெண்ணும் தனியாக செல்வதே பாவமாக எடுத்து கொள்கிறார்கள். சுத்த பத்தாம் பசலி தனம். அதற்காகவே நான் டேடிங் அவௌடிங் பார்டியிங் எல்லாம் தவிர்த்து வருகிறேன். என் ஆண் நண்பர்கள் கூட போன் மூலம் தான் பேசுவார்கள் அப்படியே பார்ப்பதாக இருந்தால் ஏதாவது ஹோட்டலில் காப்பி மீட் மட்டும் தான். அவள் பேசுவதை காவியா கவனமாக கேட்டு கொண்டிருக்க ஸ்டெல்லா நிறுத்தி என்ன காவியா என் புராணம் சொல்லி உங்களை போர் அடிக்கறேனா சாரி பா நீங்க கேட்டதாலே பேச ஆரம்பித்தேன் என்று சொல்ல காவியா "அதெல்லாம் இல்லை ஸ்டெல்லா இந்த வயதில் உனக்கு இருக்கும் ஒரு முதிர்ச்சி கண்டு பெருமை படுகிறேன் உனக்கு என்ன இருவத்திரண்டு வயதுக்கு மேல் இருக்காது சரியா என்றாள். அவள் நான் இன்னும் மூன்று மாதங்கள் கழித்து தான் அந்த வயதை கடப்பேன் என்றாள்.

காவியா அவளிடம் பேசுவதை விரும்ப ஆரம்பித்தாள். ஸ்டெல்லா நீ என்னை விட சின்ன பொண்ணு தான் இருந்தாலும் உன்னிடம் இருக்கும் மேச்சுரிட்டி வைத்து இந்த கேள்வியை கேட்கிறேன் உன்னை பொறுத்தவரை திருமணம் என்ற பந்தம் இந்த யுகத்தில் தேவையா எனக்கு கல்யாணம் என்பது ஒரு புனிதம் என்று திருமணத்திற்கு முன் நம்பி இருந்தேன் ஆனால் இந்த ஐந்து வருட திருமண வாழ்க்கை அந்த எண்ணத்தை தவறு என்று எனக்கு உணர்த்தி விட்டது. எல்லாமே ஆண்களால் நடத்தபடுகிற ஒரு நாடகம் பெண்ணுக்கு தான் திருமணம் முன்னும் அதற்கு பிறகும் கட்டுப்பாடுகள் அறிவுரைகள் எல்லாம் ஆனால் ஆண்கள் அந்த வரைமுறைகளை மதிப்பதில்லை அப்படி இருக்கும் போது நாம் மாத்திரம் ஏன் இன்னும் அந்த போர்வையை போட்டுக்கொள்ள வேண்டும். காவியா இப்படி பேசியது ஸ்டெல்லாவிற்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அவளுடன் இருந்த இந்த குறுகிய காலத்தில் காவியா ஒரு நெருப்பு அவளை நெருங்குவது கடினம் என்று தான் நினைத்திருந்தாள் ஆனால் காவியாவின் அணுகுமுறை அதற்கு எதிர்பதமாக இருந்தது. அதுவே ஸ்டெல்லா மனதில் காவியா பற்றிய நினைப்பை பல மடங்கு உயர்த்தியது. காவியா வெளிப்படையானவள் அதே சமயம் எளிதில் யாராலும் அவளை ஏமாற்றி விட முடியாது என்று புரிந்து கொண்டாள். காவியா கட்டிலின் மேல் இருந்த தலையணைஐ தட்டுவதை பார்த்து அவள் படுக்க விரும்புகிறாள் என்று புரிந்து காவியா நான் காலையில் ஐந்து மணிக்கு தினமும் ஜாக்கிங் போவேன் நாளைக்கு நீங்களும் வாங்களேன் என்று அழைத்தாள். காவியா என் கிட்டே அதற்கான உடையோ காலணியோ இல்லையே என்று சொல்ல அப்போ நாளை ஒரு நாள் என் ஜாக்கிங் வாகிங்க்காக மாத்திக்கறேன் என்றாள். காவியா சரி பா நான் கொஞ்சம் தூங்கு மூஞ்சி நீ தான் என்னை எழுப்பனும் என்று சொல்லி குட் நைட் சொல்லி இருவரும் படுத்தனர்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
காவியாவின் அடுத்த பயணம்(completed) - by johnypowas - 26-01-2019, 08:23 PM



Users browsing this thread: 1 Guest(s)