காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#3
கலா எங்களை கடந்து சென்ற பின்னர், அதே கல்லூரி எடுப்பு என்னை அழைத்தான். இந்த முறை அவனது அழைப்பு, சற்று அலட்சியமாகவே இருந்தது. வேறு வழி நானும் அந்த பிரின்சிபால் ஆபீஸ் என்று பெயர் எழுதி இருந்த அலுவலகத்தின் உள் சென்றேன். அதுவரை நான் எந்த வித பயமும் இல்லாமல் தைரியமாகத்தான் இருந்தேன். ஆனால் அந்த ஆபீஸ் என்கிற வார்த்தையை பார்த்த உடன். எனக்கு சிவாஜி பட காட்சிகள் கண்களில் ஓடியது. இறுதியாக கொஞ்சம் மனம் தைரியம் வரவழைத்து கொண்டு உள்ளே சென்றேன். அங்கு ஒரு மூன்று பெரியவர்கள். ஒருவர் குறைந்த முடியுடன், அடுத்தவர் துத்தமாக தலை முடியே இல்லாமல்.இடப்புறம் இருந்தவர் மற்றவர்களை விட கொஞ்சம் அதிகமான முடி, மேலும் தாடியுடன் இருந்தார்கள். அவர்கள் தாங்களே அறிமுகமாகி கொண்டனர். முதலில் ஹெட் ஆப் டிபார்ட்மென்ட், அடுத்தவர் பிரின்சிபால், கடைசியாக இருந்தவர் பைனான்ஸ் பாட பிரிவின் ப்ரோபிச்சர்.

மூவரையும் கண்ட பொழுது எனக்கு என்னென்னமோ தோன்றியது. மூன்று குரங்குகள், மூன்று பணம் விழுங்கும் முதலைகள் என அக்ரீனையாகவே தோன்றியது. ஏதாவது ஏடாகூடாமா கேள்வி கேட்க போறாங்க நான் வசமா மாட்டிக்க போறேன்னு மட்டும் தெளிவா புரிஞ்சது. ஆனா அந்த சொக்க போட்ட மக்கா சொத்த கேள்விகளையே கேட்டார்கள் அவை அனைத்திற்கும் நான் அறிந்த ஆங்கிலத்திலேயே விடை அளித்தேன். (என்ன கேள்வின்னு இப்போ கேட்காதிங்க சத்தியமா இப்போதே நியாபகம் இல்லை)

எல்லா கேள்விகளை கேட்ட பின்னர் பிரின்சிபால் கேட்ட ஒரு கேள்விக்குதான் என்னால் பதிலே சொல்ல முடியவில்லை.

10 , 12 , எல்லாம் 80 % மார்க் வாங்கி இருக்கீங்க, ஏன், Bcom இல் மட்டும் மார்க் 50 % க்கும் கீழ வாங்கி இருக்கீங்க.. என்று என்னை பார்த்து கேட்டார்.

என்னனு பதில் சொல்ல, நான் வேலை பார்த்து படித்ததால் பாடத்தை கோட்டை விட்டேன் என்று சொல்லவா?, அல்லது நான் பயின்ற கல்லூரியில் பார்க்கும் படியாக எந்த பொண்ணும் இல்லை அதனால் பாதிநாள் விடுப்பில் இருந்தேன் என்று சொல்லவா...என்று நான் சிந்தித்து கொண்டு இருக்கும் போதே, அவரே பதிலை அளித்து என் தேடலுக்கு முற்று புள்ளி வைத்தார்.

வாட் ஹரி, எனி பர்சனல் ரீசன்? நோ ப்ரோப்லேம், லீவ் இட்..

ஆனால் உங்களில் BCOM மார்க்குதான் இப்போ பிரச்சனை, எங்களுடைய குறைந்த பட்ச தகுகுதிகுள் இல்லை, நாளை வாங்க நாங்கள் எங்கள் தாளாளரிடம் அனுமதி பெற்று கூறுகிறோம் என்று என்னை புதிராகவே அனுப்பி வைத்தனர். இந்த சோகத்தில் நான் அந்த நோட்டீஸ் போர்டில் என்ன இருந்தது என்று பார்க்கவே இல்லை. வீடு சென்ற உடன் நடந்தவற்றை அம்மாவிடம் சொன்னேன், நீ கவலை படாதே ராசா, நான் வேண்டிகிட்ட சாமி உன்னை நல்ல காலேஜ்-ல சேர்ப்பாள் என்று நம்பிக்கை அளித்தாள்.

அன்றைய பொழுது நண்பர்களுடன் கேலி கிண்டலுடன் சந்தோசமாக கழிந்தது. ஆனால் மனதுக்குள் ஒரு சிறு உருத்தலிருந்து கொண்டே இருந்தது. எப்படியாவது அந்த காலேஜ்-ல சீட் வாங்கிடனும், இல்லைனா எப்படி அந்த காலாவை நான் மீண்டும் பார்ப்பது என்கிற ஏக்கம் தான் என்னை அப்படி சிந்திக்க தூண்டியது.

மறுநாள் மீண்டும் கல்லூரி சென்றேன், அவர்கள் என்னமோ எனக்காக மேலிடத்தில் பரிந்து பேசி சீட் வாங்கி வைத்ததாக சொன்னார்கள்.

அப்பொழுதுதான் புரிந்தது, அவர்கள் காசை ஆட்டை போற சதி செய்தார்கள் என்று. எது எப்படியோ நான் அந்த கலாவுடன் இங்கேயே படிக்க போகிறேன்.. என்கிற சந்தோஷத்தில் அவர்கள் கேட்ட தொகையை காசோலையாக கட்டிவிட்டு வீடு திரும்பினேன். எனக்கு சீட் கிடைத்ததில் அம்மாவுக்கும் சந்தோசம்.

ஒரு வாரம் நான் சந்தோசம், உற்சாகத்துடன் களித்தேன். கல்லூரி திறக்கும் நாள். மிகுந்த தாழ்வு மன பான்மையுடன் உள்ளே சென்றேன் ஏனென்றால், அங்கிருந்தவர்களில் தோற்றம், என்னை மிரட்டியது. அனைவரும் பார்க்க பெரிய இடத்து பிள்ளைகள் போல் இருந்தனர். அவர்களில் ஆடைகளும், காலணிகளும் அதனை பறை சாற்றியது. எனது பாதி சுருங்கிய ஆடை, சற்று பழைய சூ என எனது தோற்றம் எனக்கே வெறுப்பாக இருந்தது. இதுவரை காலாவை காண போகிறேன் என்கிற சந்தோசத்தில் இருந்த நான், எனது தோற்றம் கண்டு வெட்கப்பட்டேன். ஆனால் அங்கு நடந்ததோ வேறு.
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 26-01-2019, 07:30 PM



Users browsing this thread: 16 Guest(s)