26-01-2019, 12:28 PM
பின்னர் இணைந்த விராட் கோலி - அம்பத்தி ராயுடு இணை ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டனர். இதனால் அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் சென்றது. விராட்கோலி 43, ரன்களில் வெளியேற அடுத்து தோனி களமிறங்கினார். சிறிதுநேரத்தில் அம்பத்தி ராயுடுவும் அவுட்டானார். முதலில் நிதானமாக ஆடிய தோனி சிறிது நேரத்தில் அதிரடியில் களமிறங்கினார். அவருக்கு கேதர் ஜாதவ் நன்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் இறுதியில் அதிரடியாக ரன்களை குவித்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய 4 விக்கெட் இழப்பு 324 ரன்கள் எடுத்தது. தோனி 48 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 22 ரன்களுடனும் விக்கெட் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 87 ரன்கள் எடுத்திருந்தார். நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் பவுல்ட், பெர்குசன் தலா விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நியூசிலாந்து அணி 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலையில் உள்ளது.