26-01-2019, 12:27 PM
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்தியாவின் இன்னிங்ஸை ரோகித் ஷர்மா - ஷிகர் தவான் ஆகியோர் தொடங்கினர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்குச் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் அரை சதங்களைக் கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டணியை டிரென்ட் பவுல்ட் உடைத்தார். இவரது பந்துவீச்சில் தவான் (66 ரன்கள்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரோகித் ஷர்மா சதம் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தவான் வெளியேறிய சிறிது நேரத்தில் ரோகித் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ரோகித் ஷர்மா 96 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்தார்.