26-01-2019, 12:25 PM
துனுக்குகள்
- கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார்
அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
சிம்ரன் இப்படத்தில் நடித்திருக்கிறார்
இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல ஆண்டாக தொடங்கி இருக்கிறது என்று சொல்லலாம். காரணம் சிவா இயக்கத்தில், அஜித் நடித்த விஸ்வாசம், ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இரண்டு படங்களும் போட்டி போட்டுக்கொண்டு வசூல் சாதனை படைத்து வருகின்றன. தமிழ் நாட்டை பொருத்தவரை அஜித்தின் விஸ்வாசம் படம்தான் அதிக லாபத்தை பெற்றிருக்கிறது என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
உலக அளவில் பேட்ட திரைப்படம் 200 கோடியை தாண்டி இருப்பதாக தகவல்கள் பரவிவருகிறது.
உலகமெங்கும் ரஜினிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது மிகை அல்ல. தென் இந்தியாவில் இயக்கி தயாரிக்கப்பட்ட படங்களில் மொத்தம் 11 படங்கள் உலக அளவில் 200 கோடி வசூல் தந்ததாகவும். அதில் 4 படங்கள் ரஜினியின் எந்திரன், கபாலி, , 2,0 படங்களை தொடர்ந்து காலாவும் 200 கோடி வசூல் சாதனைப் படைத்துள்ளது என தகவல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.