26-01-2019, 02:46 AM
பெண்கள் இருவரையும் ஐஸ்கிரீம் பார்லர் அழைத்து சென்றான் நிருதி. ரூபா ஆர்வமாக இருந்தாள். ஆனால் தமிழ்ச்செல்வி கொஞ்சம் பிகு செய்து விட்டு நிருதிக்காக மனமிறங்கியவளைப் போல காட்டிக் கொண்டாள் .
"ஆனாலும் நீ ரொம்பத்தான்டி பண்றே?" என்று தமிழ் மீது பாய்ந்தாள் மனம் பொறுக்க முடியாத ரூபா.
"ஏய்.. நான் என்னடி பண்ணேன்?" என்று கேட்டாள் தமிழ்.
"என்னமோ நீ ஐஸ்கிரீமே சாப்பிட மாட்டாதவளாட்டம் எத்தனை சீன் போடுறே.? பாவம் அந்தண்ணா.. எவ்ளோ ஆசையா இருக்காங்க.. ஆனா நீ.."
"ஏய்.. இரு இரு.. மொத ஒண்ணு சொல்லு நீ எனக்கு பிரெண்டா இல்ல அவருக்கு பிரெண்டா?"
"உனக்குத்தான். அதனாலதான் இன்னும் மரியாதையா பேசிட்டிருக்கேன். இல்லேன்னு வை.. நீ பண்ற ஏத்தத்துக்கெல்லாம்.."
"நீ ஏன்டி தேவையில்லாம இப்போ டென்ஷனாகிக்கறே?"
"உனக்கு நெஜமாவே அவரை பிடிக்கலேன்னா.. நீ பண்றதெல்லாம் ஓகேதான். ஆனா அந்தண்ணாவை உனக்கு எவ்ளோ பிடிக்கும்னு நீயே என்கிட்ட பல தடவை சொல்லியிருக்க. ஆனா இப்ப பாரு உன்னை லவ் பண்றேனு அவரா வாயை தெறந்து சொன்னப்பறமும் நீ என்னமா சீன் போடுற.."
ரூபா மூச்சு விடாமல் பேச.. அவளை இடை மறித்தாள் தமிழ்.
"சரி போதும் . நீ மூடு. இது எங்க ரெண்டு பேரோட பர்ஷ்னல் மேட்டர். அதை நான் பாத்துக்கறேன்"
"ஆனா.. நீ இதுக்கெல்லாம் ஒரு நாள் பீல் பண்ணுவேடி" என்று சாபமிட்டாள் ரூபா.
நிருதி இடையில் எதுவும் பேசவே இல்லை. ஆனால் அவனுக்காக தன் தோழியிடம் சண்டை போடும் ரூபா மீது ஒரு விதமான வாஞ்சை உண்டானது.
மூவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். ஒரே டேபிளில் நிருதி பக்கத்தில் தமிழ் உட்கார்ந்தாள். ரூபா அவர்களுக்கு எதிர் பக்கத்தில் உட்கார்ந்தாள். வெண்ணிலா ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தான்.
"மிஸ் ரூபா" என்றான் நிருதி.
"எஸ் ப்ரோ.." என்றாள் ரூபா.
"உன்னை பத்தி நான் தெரிஞ்சுக்கலாமா?"
"தாராளமா.."
தமிழ் "ஆமா.. இவ பெரிய இவ.." என்று சிரித்தாள். "இப்போதைக்கு இவ என் பிரெண்டு அவ்வளவுதான் போதும் "
"பொறாமை.." என்று சிரித்தாள் ரூபா.
"ஆமாடி.. அப்படித்தான் வெச்சிக்கோ.. அதுக்கு என்ன இப்போ?"
ரூபா நிருதியைப் பார்த்து புன்னகையுடன் கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்டினாள்.
"செம.."
"என்னது?"
"உங்க மேல பயங்கர லவ்ல இருக்கா. உஙக முன்னால சும்மாதான் சீன் போட்டுக்கறா.. மத்தபடி வேற எவளையும் கிட்ட நெருங்க விட மாட்டா.."
"எனக்கே தெரியுது. இதுக்கெல்லாம் உனக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்"
"எனக்கு எதுக்கு ப்ரோ தேங்க்ஸ்?"
"நீ வரலேன்னா.. பொறந்த நாளும் அதுவுமா இன்னிக்கும் என்னை டபாய்ச்சிட்டு போயிறுப்பா." என்று தமிழைப் பார்த்தான்.
தமிழ் லேசான வெட்கத்துடன் சிரித்தாள். அவன் கை மீது தன் கை வைத்துச் சொன்னாள்.
"எனக்கு லவ்னாலே புடிக்காது"
"அப்றம்?"
"ஒன்லி மேரேஜ்.."
"அடிப்பாவி.." என்றாள் ரூபா. "பெரிய பிளான்.."
ஐஸ்கிரீம் வந்தது. பொதுவாக பேசி ஜாலியாகச் சிரித்தபடி ஐஸ்கிரீம் சுவைத்தனர்.
நிருதி பாதி சாப்பிட்ட ஐஸ்கிரீமை தன் பக்கம் இழுத்து தன்னுடையதை அவனுக்கு கொடுத்தாள் தமிிழ்.
"தேங்க்ஸ் டார்லிங் "
ரூபா.. "நடத்துங்க.. நடத்துங்க.." என்றாள்.. !!