Thriller ரிவன்ஜ் இஸ் பியூட்டிஃபுல்!! - ( completed )
#92
அவளை தூக்கி பெட்டில் போட்டேன், காய்ச்சலுக்கு இன்ஜெக்ஷன் போட்டேன், உடம்பில் காவு இருந்ததால், oinment போட்டேன், ஒரு 1 மணிநேரத்தில் ஹீட் குறைந்தது, பார்க்கவே பாவமாக இருந்தது, இனிமேல் அவள் என்ன செய்தாலும் அவளை அடிக்க கூடாது என்று எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன், நான் நெற்றியை தொட முற்பட்ட போது என் கையை தட்டிவிட்டாள், இட்லியை எடுத்து அவள் முன் வைத்தேன், அதை தூக்கி எறிந்தாள், என் மீது கோபத்தை காட்டினாள்.

நான் பக்கம் போய் இட்லியை எடுத்து பிய்த்து சட்னி சாம்பாரில் தொட்டு அவள் கைகளில் தந்தேன், அதை வாங்கி சாப்பிட்டாள், நாலு சாப்பிட்ட பிறகு போதும் என்றாள்,
நான் மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டேன். 

வீட்டில் நான் மட்டுமே இருந்தேன், அமைதியாக படுத்திருந்தேன், யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க, என் மனைவியும் மகள் தான் போல என்று நினைத்து திறக்க, அதிர்ச்சியாக இருந்தது, மில் அதிபர் ராஜாவின் கைக்கூலி முத்து வந்திருந்தான், நான் அவனை வெளியில் கூட்டி போக நினைக்க, அவன் உள்ளே வந்து sofaவில் அமர்ந்து கொண்டான், நானும் casualஆக என்ன முத்து இந்த பக்கம் என்றேன், ராஜ் அனுப்புச்சாரா என்றேன், இல்லை டாக்டர் நானே தான் வந்தேன் என்றான், செறி என்ன விஷயம் என்றேன் என்னிடம் ஒரு பேப்பர் கட்டிங்கை காட்டினான், அதில் விக்கியின் 
படம் போட்டு காணவில்லை, துப்பு குடுப்போருக்கு 1 கோடி என்று போட்டு இருந்தது, எனக்கு என்ன விஷயமாக வந்திருக்கிறான் என்று புரிந்தது, 

நீயே சொல்லு என்றேன், இல்ல டாக்டர் இந்த பையன உங்கக்கூட பாத்த மாதிரி ஞாபகம் அதான் இங்கே வந்தேன் என்றான், அவன் செய்கை எல்லாம் நக்கலாக இருந்தது, செரி எவ்ளோ வேணும் என்றேன், சூப்பர் தலைவரே நேரா விசயத்துக்கு வண்டீங்க, அதுல 1 கோடின்னு போற்றுக்கு எனக்கு பேராசை எல்லாம் இல்லை, ஒரு 50லட்சம் குடுங்க போதும் என்றான், செரி ok என்றேன், அவனுக்கே ஆச்சரியம், அட இப்படின்னு தெரிஞ்சா இன்னும் அதிகமா கேட்டு இருப்பேனே என்றான், சிரித்தேன், நாளைக்கே வேணும் என்றான், யோவ் அறிவிருக்கா கைலயா அவளோ amountஅ வெச்சுட்டு இருப்பாங்க என்றேன்.

இன்னிக்கு புதன் அப்போ ரெண்டு நாள் கெழுச்சு சனி காலைல 10மணிக்கு இங்கே வர்றேன், செரியா என்றான், வேணாம் நம்பர குடுத்துட்டு போ நான் இடம் சொல்றேன் என்றேன்,  இது நமக்குள் நடக்கும் டீல், யாரிடமும் எதை பற்றியும் பேச கூடாது என்றேன், செரி என்று அவனும் கிளம்பினான், எனக்கு இதயதுடிப்பு அதிகமாக இருந்தது, என்ன செய்வது என்று என்னால் முடிவெடுக்க முடியவில்லை, இவன் மட்டும் இருக்கிறானா, இல்லை இவன் பின்னால் வேறு யாராவதா என்று குழப்பமாக இருந்தது, கண்டிப்பாக ராஜா இதில் involve ஆக வாய்ப்பில்லை, பையனை தூக்கிய நால்வருமே professional கூலிப்படையை சேர்ந்தவர்கள், அவர்கள் தொழிலுக்கு என்று ஒரு அறம் உண்டு, 

அப்போ கண்டிப்பாக இவன் தனியாக தான் இதை செய்கிறான் என்பதை உறுதி செய்தேன், செரி என்ன செய்யலாம் என்பதை தெளிவாக பிளான் போட்டேன், கொலை செய்வது எளிது, ஆனால் அதன் பின்னர் அதை மறைக்க பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டும், மீண்டும் இன்னொரு operationக்கு தயார் ஆனேன், மீண்டும் பெரிய ஆஸ்பத்திரியில் தேவையான உபகரணங்கள் எடுத்து கொண்டேன், என் பழைய கிளினிக்ல் அதற்கு தேவையான எல்லவற்றையம் எடுத்து செட் செய்தேன், பவித்ரா என்ன செய்ய போகிறேன் என்பதை விளங்க முடியாமல் விழித்தாள்.

பவித்ரா வழக்கம் போல உணவுகளை உண்ண ஆரம்பித்து இருந்தாள், சனிக்கிழமை நெருங்க நெருங்க எனக்கு படபடப்பு அதிகமானது, பயத்துடனே எழுந்தேன், காலையில் போன் செய்தான், நான் என் பழைய கிளினிக் பக்கம் வர்ச்சொன்னேன். நான் என் காரில் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன், சொன்னது போலவே அங்கே வந்தான் ஆனால் கூடவே இன்னொருவனை கூட்டி கொண்டு வந்தான், எனக்கு தூக்கி வாரிபோட்டது, கொஞ்சம் கோபமாக ஹே நான் உன்னை தனியா தான வர்ச்சொன்னேன் என்றேன், சிரித்தான், நீங்க என்னை ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றது, அதான் safetyக்கு என்றான்.

எனக்கு கோபமாக வந்தது, நான் கோபமாக உன்னால ஆனதை பாதுக்கோ, பத்து பைசா தர முடியாது என்று சொல்லி காரில் ஏர முற்படும்போது என்னை தள்ளிவிட்டு காரில் இருக்கும் பெட்டியை எடுத்து திறந்து பார்த்தார்கள், அதில் அவனை மயக்கம் அடைய செய்யும் tranquilizer வைத்திருந்தேன்,  
அவனுக கோபமாக பணம் எங்கே என்று கேட்டார்கள், நீ தனியா வரமாட்டேன்னு தெரியும் அதான் என்றேன், என்னை பணத்தை கேட்டு மிரட்டினார்கள், நான் அசரவில்லை. bagஐ தூக்கி என்னிடம் போட்டார்கள், ஒருவனை மயக்கம் அடைய வைக்கும் அளவுக்கு தான் வீரியம் இருக்கும், இன்னொருவனை எப்படியும் சமாளித்து விடலாம் என்று முடிவெடுத்தேன், 

அவர்கள் செல்ல பின்னாடி போய் கூட வந்தவனை கழுத்தில் ஊசி குத்த அவன் மயங்கி விழுந்தான், முத்து அதை கண்டு அலறி ஓடினான், அவனை தொறத்தினேன் அவன் வேகமாக ஓடினான், நான் டேய் நில்லு நில்லு என்று கத்திகொண்டே ஓடினேன், ஒருக்கட்டத்தில் நான் ஏதோ கயிறு போல் வேர்கள் தடுக்க கீழே விழுந்தேன், நல்ல அடி எனக்கு, ஒரு நிமிடம் உடம்பு முழுக்க மறத்து போனது போல ஒரு உணர்வு, அப்படியே மயங்கினேன்.

கொஞ்ச நேரம் கழித்து சுயநினைவு வர எழுந்தேன், பார்த்தால் என்னை ஒரு மரத்தோடு சேர்த்து கட்டிவைத்து இருந்தான், என் கை கால்களில் எல்லாம் சிராய்ப்பு காயம், வலித்தது, முத்து என் முன்னாடி இருந்தான், அவன் நண்பன் இன்னும் மயக்கத்தில் இருந்தான், அவன் அவனை எழுப்புவதில் குறியாய் இருந்தான், எப்படியும் அவன் எழும்ப 10 மணிநேரம் மேல் ஆகும். நான் கூப்பிட்டேன், கட்டை அவிழ்த்து விடு என்றேன், அவனுக்கு பயம் தான் அதிகம், டேய் நான் போட்டது விஷ ஊசிடா அவன் செத்திருவான் என்றேன், அய்யோ மச்சான் என்றான், ஒஹ் இவன் தங்கை புருஷன் போல என்று தெரிந்து கொண்டேன், 

நான் நெனச்சா மட்டும் தான் அவனை காப்பாத்த முடியும் என்றேன், உடனே என் பக்கம் திரும்பினான், இங்கே இருந்து பெரிய ஹாஸ்பிடல் 7 km அங்கே போறதுக்குள்ள அவன் செத்திருவான்டா என்றேன், என்னை என் கிளினிக்குக்கு கூட்டிட்டு போ, நான் காப்பாத்ரேன் என்றேன், அவனும் என் கையை கட்டிய படியே என்னை மரத்தில் இருந்து விடுவித்து என்னையும் அவனையும் காரில் ஏற்றினான், நான் பின்னால் ஏறி கொண்டேன், கொஞ்சம் காட்டு வழி போகும் போது, அவனை பின்னால் இருந்து தள்ளி உதைக்க, அவன் நிலை தடுமாறி மரத்தில் மோதினான், 

கார் முன்பாக நன்றாக அடி பட்டது, எனக்கு இடித்ததில் கையில் நல்ல அடி, எனக்கு ரத்தம் வழிகுறது ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை,  steeringல் தலை அடிபட்டு ரத்தம் அவனுக்கு, நான் முன்னே போய் மீண்டும் அவன் தலையை steering இல் இரண்டு முறை இடித்து மோதினேன், இன்னும் அழுத்தமாக மோத அவன் மூஞ்சி ரத்த களரி ஆனது, நான் அவனை தள்ளி, என் கட்டை அவிழ்த்து வண்டியை என் பழைய கிளினிக்கிற்கு விட்டேன். வண்டியில் இருந்து புகை தள்ளியது, இருந்தும் வண்டியை அழுத்தி பிடித்து என் கிளினிக் வாசலை சென்றடைந்தேன், 

ரத்தம் நெறய போக எனக்கு மயக்கம் வருவது போல ஆனது, நான் உள்ளே போக பவித்ரா என்னை பார்த்து பயந்து அலறினாள், என்னாச்சு என்னாச்சு என்றாள், நான் accident என்று சொன்னேன், இருவரையும் உள்ளே இழுத்து வந்து போட்டேன், அவள் பயத்தில் நடுங்க ஆரம்பித்தாள், என்னாச்சு யாரு இவுங்க என்றாள், என் வண்டில அடி பட்டுடாங்க என்றேன், செரி ஹாஸ்பிடல் போக வேண்டியது தான என்றாள், இல்லை அதில சிக்கல் இருக்கு கொஞ்சம் அமைதியா இரு என்றேன், அவள் விடாமல் பேசிக்கொண்டே இருந்தாள், அவள் பேசுவதால் என்னால் யோசிக்க முடியவில்லை, chloroform கொஞ்சம் எடுத்து என் kerchiefல் நனைத்து அதை வலுக்கட்டாயமாக அவளுக்கு கொடுக்க அவள் மயங்கினாள்...
Like Reply


Messages In This Thread
RE: ரிவன்ஜ் இஸ் பியூட்டிஃபுல்!! - by POPE XVIII - 09-12-2019, 11:07 AM



Users browsing this thread: 7 Guest(s)