Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போராடுபவர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணை!
#1
போராடுபவர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணை!
தமிழக அரசு தங்களுடைய கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாஸ், தமிழக அரசு தங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என நேற்று அறிவித்திருந்தார்

இதற்கிடையே, தடையை மீறி போராட்டம் மேற்கொண்டு வரும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், போராட்டங்களில் ஈடுபடுவது அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும், இதனால் தேர்வுகளும், மாணவர்களை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் பங்கேற்கும் நோக்கத்துடன் விடுப்பு எடுப்பது விதிமீறல் என்றும் No work No Pay என்ற விதியின் அடிப்படையில் காரணங்கள் இல்லாமல் விடுப்பு எடுத்தால் இடைநீக்கம், ஊதியப் பிடிப்பு உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்புமாறு எச்சரித்துள்ள அவர், 7 ஆயிரத்து 500 ரூபாய் ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து வகுப்புகளை தொடரவும் உத்தரவிட்டுள்ளார்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
போராடுபவர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணை! - by peter 197 - 25-01-2019, 09:25 AM



Users browsing this thread: 1 Guest(s)