25-01-2019, 09:14 AM
NZ vs IND : மந்தனாவின் மரண மாஸ் சதத்தால், நியூசிலாந்தை துவம்சமாக்கிய இந்தியா
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
Highlights
நேப்பியர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணத்தை இந்திய ஆண்கள் அணி மேற்கொண்டுள்ள நிலையில், பெண்கள் அணியும் நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக விளையாடி வருகின்றது.
3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் நியூசிலாந்து, இந்திய பெண்கள் அணிகள் மோதுகின்றன.
இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று நேப்பியர் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது
சுருண்ட நியூசிலாந்து:
நியூசிலாந்து அணி 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவின் ஏக்தா பிஸ்ட், பூனம் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா 2, சிகா பாண்டே 1 விக்கெட் வீழ்த்தினர்.
மந்தனா அபார சதம்:
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய மந்தனா, ஜமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் மிக சிறப்பாக விளையாடினர்.
மந்தனா 104 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் விளாசி 105 ரன்கள் குவித்து அவுட்டானார்.
மற்றொரு புறம் ரோட்ரிக்ஸ் 81*, ரன்கள் அடித்து இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். 33 ஓவரில் ஒரே ஒரு விக்கெட் அதுவும் கடைசி நேரத்தில் இழந்த இந்தியா 193 ரன்களை எடுத்து வென்றி பெற்றது.

- நியூசிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
- மந்தனா 104 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் விளாசி 105 ரன்கள் குவித்தார்.