24-01-2019, 06:07 PM
போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேந்திரனிடம் பேசினோம். ``அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளைப் பார்க்கும்போது கோபமும் ஆத்திரமும் தான் வருகிறது. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக்கொண்டு, சம்பளம் போதவில்லை என்று போராட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு ஆசிரியராவது, எங்கள் பள்ளியில் இந்த வசதிகள் போதவில்லை; அரசு உடனே செய்துகொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியதுண்டா. தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு சிறப்பாகப் பாடம் நடத்துகிறார்கள். ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் கொடுமைதான் உங்களுக்கு நன்றாகவே தெரியுமே. இந்த நிலையை மனதில் வைத்துக்கொண்டுதான், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நீக்கிவிட்டு ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்று போராட்டம் நடத்திவருகிறோம்’’ என்று முடித்தார்