24-01-2019, 09:44 AM
இவர்கள் இருவரின் விக்கெட்டை வீழ்த்த முடியாத காரணத்தால் கடுப்பான பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, பெஹ்லுகுவயோவிடம், ``ஹே கறுப்பு மனிதனே... உனது தாய் எங்கே இருக்கிறார்?” என உருது மொழியில் சொன்னது ஸ்டம்பில் இருக்கும் மைக்கில் தெளிவாகப் பதிவானது.
பாகிஸ்தான் கேப்டனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்தும் சர்ஃப்ராஸ் அகமதுவுக்கு எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன. பலர், சர்ஃப்ராஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சிலர் சர்ஃப்ராஸ் மீது நடவடிக்கை தேவை எனவும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதி வேகப்பந்து வீச்சாளரான அக்தர், இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றார். ட்விட்டரில் பேசியுள்ள அக்தர், ``ஒரு பாகிஸ்தானியாக இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. போட்டியின் தாக்கத்தில் அப்படி பேசியிருப்பார் என்று நினைக்கிறேன். அவர் பொது தளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார் ஆவேசமாக..