01-12-2019, 10:39 PM
(26-11-2019, 09:25 AM)sangavisri Wrote: நண்பர்களே ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்..
நான் ஒன்றும் ஏற்கனவே எழுதப்பட்ட கதையை மறுபதிப்பு செய்யவில்லை. இல்லை வேறு தளத்திலிருக்கும் கதையை இங்கே பதிவிடவில்லை.நண்பர் ஒருவர் கொடுத்த ஒரு வரி கான்செப்டில் கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்காக யோசிக்க வேண்டும், யோசித்து அந்த கதையை படிக்க சுவாரசியாமாக எழுத்து வடிவில் கொண்டுவர வேண்டும். எழுதியது அத்தனையும் ஒரு முறை படித்து பார்த்து தவறுகளை திருத்தி பதிவிட வேண்டும். பதிவிட செர்வர் தடையின்றி ஒத்துழைக்க வேண்டும்.ஒரு கதை எழுத இத்தனை வேலைகள் உள்ளது. இது ஒவ்வொரு கதாசியருக்கும் தெரியும். பல நண்பர்களும் எங்கள் கஷ்டத்தை புரிந்துகொண்டு எங்கள் கதைக்காக காத்திருக்கிறார்கள்.அவர்கள் கதை படிக்கும் ஆவலை கமென்டுகளாக தெரிவிக்கிறார்கள். அதற்காகவே வேகமாக எழுத வேண்டும் என்று கதையை எழுதுகிறோம். ஆனால் உங்களைப் போல சிலரால் அந்த கஷ்டங்களைப் புரிந்துகொள்ள முடியாது. புரிந்து கொள்ளும் அளவுக்கு மனதும் கிடையாது.நண்பரே, உங்கள் கருத்தை நான் பெரிதாக நினைக்கவில்லை. இருந்தாலும் இந்த தளத்தில் கதை எழுதும் ஒவ்வொரு கதையாசிரியரும் படும் கஷ்டத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை பதிவிடுகிறேன். இனி மற்ற கதையிலும் இதுபோன்ற பதிவை பதிவிடவேண்டாம். இது சில கதையாசிரியருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி மீண்டும் கதை எழுதும் ஆர்வம் இல்லாமல் செய்துவிடும்.நன்றி..
Super reply! What a great message. You deserve a lot of appreciation friend. All the best.