23-01-2019, 09:17 AM
இயற்கையா உருவாகி நமக்குப் பலன் தந்த காடுகளை அழித்துவிட்டோம். அதனால், மழை குறைஞ்சுப் போய்ட்டு. வறட்சி ஏற்படுது. புயல், பெருவெள்ளம்ன்னு ஏற்படுது. அதனால், நாம் அனைவரும் நமக்கிருக்கும் மொத்த இடத்தில் சிறிய இடத்தில் இதுபோல மரங்களை வளர்க்க வேண்டும். இல்லைன்னா, நாம் இயற்கைக்குச் செய்த பாவத்தைச் சரி பண்ண முடியாது. நான் வளர்த்த இந்தக் காடு எனது 5 ஏக்கர் வாழைத் தோட்டத்தை கஜா புயல் தாக்குதலிலிருந்து காப்பாத்திட்டு. பக்கத்து தோட்டக்காரங்க வயல்கள்ல பெரிய பலமான மரங்களே காத்துல சாய்ஞ்சுட்டு. ஆனா, எனது 5 ஏக்கர் வாழைத்தோட்டத்திலிருந்து ஒரு வாழை மரத்தைக்கூட கஜாவால் கீழே தள்ள முடியலை.
கஜா புயலைத் தடுத்து, வாழைத்தோட்டத்தைக் காப்பாத்தியது நான் வளர்த்த இந்த நந்தவனக் காடுதான். அதேபோல், இந்த மாவட்டத்திலேயே 100 வயசைத் தாண்டிய வேப்பமரம் ஒன்று எங்க தோட்டத்தில் இருக்கு. எங்க வீட்டைச் சமீபத்தில் சரிபண்ணினோம். அதற்கு, `பலகை செய்ய இந்த மரத்தை வெட்டலாம்'ன்னு பலரும் யோசனை சொன்னாங்க. `வேண்டவே வேண்டாம்'ன்னு ஒத்தக்கால்ல நின்னு அதைத் தடுத்துட்டேன். ஏன்னா, இந்த மரத்தைச் சில மணிநேரத்துல அழிச்சுரலாம். ஆனா, என்ன பண்ணுனாலும், நம்ம வாழ்நாளுக்குள்ள இதுபோல் ஒரு மரத்தை உருவாக்கிவிட முடியாது" என்றார்