23-01-2019, 09:14 AM
``ஆரம்பத்தில், `நான் இயற்கை விவசாயம் செய்யப் போறேன்'ன்னு சொன்னதும் வீட்டுல எதிர்ப்பு. `முதலுக்கே மோசமாயிரும்'னு பயந்தாங்க. ஆனா, நான் விடாப்பிடியாதான் செஞ்சேன். முருங்கை, கிழங்கு, வாழைன்னு போட்டேன். இந்தப் பகுதியே வறட்சி மிகுந்த பகுதி. எது போட்டாலும் விளையாத சுண்ணாம்பு மண் நிறைந்த பூமி. கருவேலம் மரங்கள் மட்டுமே வளரும். இன்னொருபக்கம், நிலத்தடி நீர்மட்டமும் 900 அடிக்குக் கீழே போயிட்டு. எங்களுக்கு மூன்று கிணறுகள் இருந்தது. அந்தத் தண்ணீரைக் கொண்டு, மிகவும் சிக்கனப்படுத்தி விவசாயம் பார்த்தேன். மாட்டுச் சாணம், கிடைத்த இலைதழைகளைக் கொண்டு மூடாக்குன்னு போட்டு மெள்ள மெள்ள இந்தப் பூமியை பொன் விளையிற நிலமா மாத்தினேன். அப்புறம், வாழை, முருங்கை, கிழங்குன்னு இந்த மண்ணுக்கு ஏற்ற பயிர்களைப் பயிரிட்டேன். இயற்கை முறையில்தான் வெள்ளாமை பண்ணினேன். பெரிய அளவில் முதலில் லாபம் இல்லை. அப்புறம், எனது தோட்டத்தை ஒருங்கிணைந்த பண்ணையம் பண்ணுற இடமா மாத்தினேன். மெள்ள மெள்ள இயற்கை விவசாயம் எனக்குக் கைகொடுக்கத் தொடங்கிச்சு. என் கணவரும் என்னைப் புரிஞ்சுகிட்டு, உற்சாகப்படுத்தத் தொடங்கினார்