22-01-2019, 11:48 AM
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி? -பரபரப்புக் குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம்!
நரேந்திர மோடி அரசாங்கத்தின்மீது எதிர்க்கட்சிகள் வைத்துவரும் முக்கியக் குற்றச்சாட்டுகளில் ஒன்று, ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தேர்தல்களில் வெல்கிறார்கள்” என்பது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்தே, இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுவதுண்டு. ஆனால், 2014 -ம் ஆண்டுக்குப் பின்னர், அந்த இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மை அதிக அளவில் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், ”2014-ம் ஆண்டு தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பி.ஜே.பி-யினரால் ஹேக் செய்யப்பட்டது. அதன் மூலமாகவே, மோடி பிரதமர் பதவியைப் பிடித்தார்” என்று, அமெரிக்காவில் வசிக்கும் மின்னணு தொழில்நுட்ப வல்லுநர் சையத் சுஜா, அதிரவைத்திருக்கிறார். 2014 -ம் ஆண்டு அமைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்புக் குழுவில் அவர் அங்கம் வகித்ததாகச் சொல்லப்படுகிறது.

உத்தரப்பிரதேசம், கர்நாடகம், குஜராத் சட்டமன்றத் தேர்தல்களின்போது, அத்தகைய குற்றச்சாட்டுகள் அதிக அளவில் எழுந்தன. ”மற்ற கட்சிகளின் சின்னங்களை அழுத்தினால், தாமரைச் சின்னத்தில் வாக்குப் பதிவாகிறது” போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், தேர்தல் ஆணையம், “அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவிகிதம் பாதுகாப்பானது” என்று சொன்னது.