Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்!
#4
[Image: Penguins_3_12595.jpg]
தங்கள் உடல்களைக் கொண்டே பெரிய குளிர்க்காப்பகத்தை உருவாக்கும் பென்குயின்கள்
இதில் நடுவில் பனிப்புயல்கள் வேறு தாக்கும். அப்போது வெப்பநிலை மைனஸ் அறுபது செல்சியஸைத் தொடும். அப்போது வெளியிருக்கும் பென்குயின்களால் குளிரைத் துளியும் தாங்க முடியாது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்படும். சில பென்குயின்கள் தடுமாறி கீழே விழும். பென்குயின் கால்களுக்கு நடுவில் முட்டைகள் வேறு இருக்கும். அந்த முட்டையுடன் மீண்டு எழுந்து நகரவேண்டும் இவை. இந்தக் கலவரத்திலேயே முட்டைகளுடன் சேர்த்து பல உயிர்களும் பலியாகும் சோகம் நிகழும். எப்படியோ பனிப்புயல் கடந்துவிட்டது என பென்குயின்கள் நிம்மதி பெருமூச்சு விடும் முன் புயலினால் பாதுகாப்பான பகுதியிலிருந்து தொலைதூரம் அடித்துவரப்பட்டதை உணர்ந்து மீண்டும் அந்த இடத்தை நோக்கி முட்டைகளுடன் கூட்டமாக நகரத்தொடங்கும். அங்குச் சென்று மீண்டும் பிணைந்துகொண்டு அடுத்த புயலுக்குத் தயாராக நிற்கும் இவை. 
இந்த இரண்டு மாத போராட்டத்திற்குப் பிறகு இறுதியாகச் சூரிய ஒளி பிறக்கும். இந்த ஒளியுடன் அடுத்த தலைமுறையின் பென்குயின்களும் முட்டையிலிருந்து பொரித்து வெளிவரத்தொடங்கும். பிறக்கும்போது பெரிய பென்குயின்களிடம் இருப்பது போன்ற இறக்கைகள் இருக்காது. இதனால் குட்டிகள் கறுப்பு வெள்ளை நிறத்தில் வேறு ஒரு தோற்றத்தில் இருக்கும். வளரும் வரை கால்களுக்கு மேல் உள்ள அடைகாக்கும் பையிலேயே இவை பாதுகாப்பாக இருக்கும். இந்தக் குட்டிப் பென்குயின்களுக்கெனவே ஒரு சிறிய உணவை தன்னுள் சேர்த்துவைத்திருக்கும் ஆண் பென்குயின்கள். இது நம் பாலூட்டிகளின் பாலுக்குச் சமமானது. ஆனால் இதை வைத்து சில நாள்களுக்கு மட்டும்தான் தாக்குப்பிடிக்கமுடியும். கடலுக்குச் சென்ற தாய் பென்குயின்கள் உணவுடன் விரைவில் திரும்பினால் மட்டுமே இவை உயிர்வாழமுடியும். இப்படிச் சென்ற தாய் பென்குயின்கள் அனைத்தும் திரும்பும் என்றும் கூறமுடியாது. கடலில் ஆபத்துகள் அதிகம், வேட்டையாடும் விலங்குகளும் அதிகம். இருப்பினும் காத்திருக்கும் குட்டி பென்குயின்களுக்காகப் பெரும்பாலான தாய் பென்குயின்கள் வயிற்றில் அதிக உணவுடன் திரும்பும். வந்ததும் வெற்றிகரமாகப் பாதுகாத்த குட்டி பென்குயின்களை தாயிடம் தந்தை ஒப்படைக்கலாம்
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: கடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்! - by johnypowas - 22-01-2019, 11:45 AM



Users browsing this thread: 1 Guest(s)