21-01-2019, 09:31 AM
ஆன்லைன் வர்த்தகத்தில் ரிலையன்ஸ்... கதிகலங்கும் போட்டியாளர்கள்!
மக்கள் செய்யும் ஆர்டர்களுக்கான பொருள்களை சிறு வியாபாரிகளிடமிருந்து பெற்று, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை, ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
இந்நிலையில், ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம் களம் இறங்க உள்ளது. குஜராத்தில் ஜனவரி 18-ம் தேதி, `துடிப்பான குஜராத்’ (Vibrant Gujarat) என்ற உலக முதலீட்டாளர் மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதில் கலந்துகொண்டு பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, ஆர் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸ் நிறுவனங்கள் இணைந்து, புதிதாக ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் நுழைய இருப்பதாக அறிவித்தார்.
மக்கள் செய்யும் ஆர்டர்களுக்கான பொருள்களை சிறு வியாபாரிகளிடமிருந்து பெற்று, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை, ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் நுழைய இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள அறிவிப்பு, இ-காமர்ஸ் சந்தையில் ஏற்கெனவே கோலோச்சிவரும் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு பெரும்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போட்டி அதிகரித்து, பொருள்கள் மீதான விலைக்குறைப்பும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்திய இ-காமர்ஸ் சந்தையில் கணிசமான பங்களிப்பைக்கொண்டுள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் இந்தியா மற்றும் ஃப்ளிப்கார்ட் இன்டர்நெட் ஆகிய நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்து நிர்வகித்துவருகிறது. கடந்த ஆண்டு மே மாதம், ஃப்ளிப்கார்ட்டின் 70 சதவிகிதப் பங்குகளை 16 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது அமெரிக்க நிறுவனமான வால்மார்ட். இதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பிரபலமான அமேசான் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுடன் கடுமையாகப் போட்டிபோட்டு வருகிறது ஃப்ளிப்கார்ட்.