Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆன்லைன் வர்த்தகத்தில் ரிலையன்ஸ்
#2
முதலாவதாக, குஜராத்தில் தொடங்கப்பட உள்ள இந்த ஆன்லைன் வர்த்தகம், படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும், இதன் மூலம் 12 லட்சம் சிறு வியாபாரிகள் பலன் அடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் செய்யும் ஆர்டர்களுக்கான பொருள்களை சிறு வியாபாரிகளிடமிருந்து பெற்று, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை, ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். 
இந்திய ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் ஆதிக்கமே அதிகம் இருப்பதை `மறைமுக காலனியாதிக்கம்' என்று பொருள்படும்படி பேசிய அவர், ``இந்தியாவில் அரசியல் காலனியாதிக்கத்துக்கு எதிராக, காந்தி போராட்டம் நடத்தினார். இதுபோல் டிஜிட்டல் காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்ட இயக்கத்தைத் தொடங்க வேண்டும். இந்த நவீன உலகத்தில், இன்டர்நெட்தான் புதிய சொத்து. இந்தியாவில் இன்டர்நெட் சேவை என்பது இந்திய மக்களால் கட்டுப்படுத்தப்படும் ஒன்றாக இருக்க வேண்டாம். மாறாக, வெளிநாட்டவர்கள் கைகளில் இது போகக் கூடாது. இந்தப் புரட்சியில் நாம் வெற்றி பெற்றால், இந்திய இன்டர்நெட் கட்டுப்பாட்டை நாம் மீண்டும் இந்தியாவுக்கே கொண்டுவர முடியும்" என்றார்.
[Image: mukesh_ambani_600_18325.jpg]
ஆன்லைன் வர்த்தகத்தில் ரிலையன்ஸ் களம் இறங்கப்போவதாக முகேஷ் அம்பானி அறிவித்திருப்பது, ஏற்கெனவே இதில் முன்னணியில் இருக்கும் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸ் நிறுவனங்கள் மூலம், இந்தியா முழுவதும் பரந்துபட்ட அளவிலான நெட்வொர்க்கை வைத்திருப்பதால், இ-காமர்ஸ் சந்தையில் நுழைவது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எளிதான ஒன்றாகவே இருக்கும். அப்படி ரிலையன்ஸ், ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கிவிட்டால் போட்டி அதிகரித்து, அது மேலும் விலை குறைப்புக்கு வழிவகுக்கும். 
Like Reply


Messages In This Thread
RE: ஆன்லைன் வர்த்தகத்தில் ரிலையன்ஸ் - by johnypowas - 21-01-2019, 09:28 AM



Users browsing this thread: 1 Guest(s)