வயது ஒரு தடையல்ல! - Completed
86.

 அடுத்த நாள் எழுந்து, இருவரும் தயாரானோம். நேற்று போல், இன்றும் சிம்பிளான, ஆனால் அவனுக்காக அலஙரித்துக் கொண்டு, ஒரு காட்டன் புடவையில் வந்தவளை அவனது கண்கள் ரசித்தது.

[Image: monica_22430rs.jpg]

அப்புறம் கேசுவலாகச் சொன்னான்.

 ஏன் லாவி, நீ மாடர்ன் டிரஸ் போட்டு நான் பாத்ததேயில்லைல்ல? சாரி கட்டி இல்லாட்டி, சுடிதார்லதான் பாத்துருக்கேன். நீ போட்டதே இல்லையா என்ன? நீ மாடர்ன் டிரஸ்ல்ல எப்டி இருப்பன்னு ஒரு நாள் பார்க்கனும். 

 முதல்ல மீட்டிங் போலாம் மதன்!

 நேற்றே எல்லாம் செக் செய்து விட்டதால், இன்று இருவரும் சேர்ந்தே போனோம். நேற்று நான் சைட் அடித்தால், இன்று அவன் என்னை சைட்டித்தான். 

 சரியாக லஞ்ச் டைமில் என்னிடம் வந்தவன், முக்கியமான கால்ஸ் இருக்கு. நீ சாப்ட்டுட்டு மதிய, ப்ரோகிராமை ஸ்டார்ட் பண்ணு. நான் லேட்டா வந்து ஜாயின் பண்ணிக்கிறேன் என்றான். மதியம் எல்லாமே, சாதாரண ப்ரோகிராம்கள்தான். அதை நானும், GM, மற்ற டாப் லெவல் ஆட்களும் பார்த்துக் கொள்ள முடியும்.

 ஒரு அரை மணி நேரம் பொறுத்துப் பார்த்தும் அவன் வராததால் கடுப்பான நான், GM ஐ அழைத்து, நீங்க லஞ்ச் முடிச்சிட்டு ப்ரோகிராம்சை ஸ்டார்ட் பண்ணுங்க. நான், பாஸை பாத்துட்டு வந்துடுறேன் என்று சொன்னேன்.

 என்னையே GM கேள்வியாகப் பார்த்தார். என்னதான் செக்ரட்டரி என்றாலும், GM ஐ விட பெரிய ஆளா என்ன? ஆனால், அவருக்கே உத்தரவிட்டால்? அதுவும் நான் புதிதாக ஜாயிண்ட் செய்தவள்.

 ஆனால் நான் அதைக் கண்டுகொள்ளாமல், மெல்ல ஒரு ப்ளேட்டில், அவனுக்குப் பிடித்த டிஃபன் ஐட்டங்களை அடுக்கி, மதன் இருந்த ஆஃபிஸ் அறையை நோக்கி சென்றேன். 

 நான் செய்வதை GM மட்டுமல்லாமல், சில பெரிய தலைகளும் ஆச்சரியமாக கவனித்து தங்களுக்குள் கிசுகிசுத்தனர். ஆனாலும், அவர்கள் அனைவருமே மதனுக்கும், அவன் தாத்தாவிற்கும் மிகவும் விசுவாசமானவர்கள்.

 அவர்களுடைய பேச்சுக்களைக் கண்டு கொள்ளாமல், நான் மதனைத் தேடி செல்லும் போது உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். 

 மத்தவிங்க என்ன பேசுவாங்கன்னு எனக்கு கவலை இருக்குன்னு சொல்லிட்டு, வேணாம்னு போன லாவண்யாவா இது?

 உள்ளே நுழைந்தவளைப் பார்த்து ஆச்சரியமானாலும், காலில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். 

நான் அமைதியாக ப்ளேட்டை அவனருகில் வைத்துவிட்டு, ஸ்பூனை அவன் பக்கம் வைத்தேன். என் செய்கை சொல்லியது, சாப்ட்டுகிட்டே பேசு என்று!

[Image: tamil-movie-actress-monica-saree-stills-6.jpg]

கோபமாக முறைத்து சாப்பிடாமல் இருந்தவனை பதிலுக்கு முறைத்து விட்டு, ஸ்பீக்கர் ஃபோனில் எதிர் பக்கம் இருக்கும் ஆள் தொடர்ச்சியாக பேசும் சமயத்தில் அவனுக்கு ஊட்டி விட ஆரம்பித்தேன்.

 முதல் முறை முறைத்தவனை, கண்டுகொள்ளாமல், அலட்சியமாக, ஸ்பூனை இன்னும் அவன் வாயருகே கொண்டு சென்று அவனைப் பார்த்து சாப்பிடு என்று முறைப்புடன் நான் சொல்லியதைப் பார்த்தவன், பின் அமைதியாக சாப்பிடத் தொடங்கினான்.

 இடையில் நீ சாப்ட்டியா என்று கேட்டவன், நான் அமைதியாக இருந்ததில் புரிந்து கொண்டு, ஆளுக்கு ஒரு வாய் என்று முறை வைத்தான். அப்படியே கால் முடியும் சமயத்தில் இருவரும் சாப்பிட்டு முடித்திருந்தோம்.

 அன்றிரவு, 

 அவனிடம் எனது பொய்யைச் சொல்லத் தயாராகியிருந்தேன். இரவு உணவு முடிந்து, எனதருகில் வந்தவன், என்னைத் தள்ளிக் கொண்டு அவனது அறைக்குள் சென்றான். 

 பெட்டில் அமர்ந்தவன், நான் உட்காராமால், நின்று கொண்டு, ஏதோச் சொல்ல தவிப்பதைப் போல் இருந்த என்னிடம் கேட்டான்.


என்ன?


வ… வந்து, இ… இன்னைக்கு பீரியட்ஸ்!

 ஓஹோ… இட்ஸ் ஓகே! தூங்கலாம். என்றவனின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.

[Image: Monika+south+actress+photo+_7_.jpg]

குட் நைட் என்று சொல்லி கதவை நோக்கி நகர்ந்தவளை, அவன் குரல் தடுத்ததது!

 எங்க போற?

 நான் ஆச்சரியமாகப் பார்த்தேன். எ… என் ரூமுக்கு! அதன் இன்னிக்கு கிடையாதுல்… என்று பேசிய நான் அப்படியே நிறுத்தினேன். ஏனெனில், அவன் என்னை முறைத்துக் கொண்டிருந்தான்.

 எ… என்ன?

 இங்க வா?

 குழப்பத்துடன் அருகில் வந்தவளை, கையைப் பிடித்து இழுத்தான். என்ன நடக்கிறது என்று உணரும் முன், நான் படுக்கையில், அவன் மேல் இருந்தேன். அவன் என்னை அணைத்திருந்தான்.

 என்னை என்னன்னு நினைச்சிட்டிருக்க? உன் உடம்புக்காகத்தான் ரெண்டு நாளா இங்க படுக்கச் சொன்னேன்னு நினைச்சிட்டிருக்கியா? ம்ம்?

 அவன் கோபத்திற்கான காரணத்தை அறிந்த போது, எனக்குச் சிரிப்புதான் வந்தது.  அமைதியாக அவனையே பார்த்தேன்.

 ஒண்ணும் தெரியாத மாதிரி பாக்குறதைப் பாரு. ராட்சசி. இதே வேலை இவளுக்கு! நான் எப்ப கிட்ட வரணும், எப்ப தள்ளி நிக்கனும் எல்லாத்தையும் இவளேதான் முடிவு பண்ணுவா என்று அவன் முணுமுணுத்தது என் காதில் விழுந்தது. அது என் புன்னகையை அதிகரித்தது. இவ்வளவிற்கும் இடையில், அவன் என் அணைப்பை விடவேயில்லை.

 பதில் பேசாமல் அவனை சரியாகப் படுக்க வைத்த நான், கம்பளியை எடுத்து அவனுக்கும் சேர்த்து போர்த்தியவாறு, அவன் மார்புக்குள் சரணடைந்தேன்.

 என்னை அணைத்தவனின் அன்பில் கண் மூடி இரு நொடி இருந்தவள், அப்படியேச் சொன்னேன்.

 இன்னிக்கு அவ ஃபோன் பண்ணச் சொன்னா. பேசி நாளாகுது. அதான் அங்கப் போலாம்னு பார்த்தேன்.

 
மெல்லிய குரலில் சொன்ன என் தன்னிலை விளக்கம் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. 

 
ஓ… அப்ப, போயி பேசிட்டு வா!

 ப்ச்… வேணாம், நாளைக்கு பகல்ல பேசிக்கிறேன்.

 என் பதிலில் அவன் இன்னமும் மகிழ்ந்தான். என்னை இன்னமும் நன்றாக அணைத்துக் கொண்டவன், என் முன் நெற்றியில் மெல்லிய முத்தமிட்டு, என் தலையையும், கன்னக் கதுப்புகளையும் வருடினான். 

 அதற்க்கப்புறம் அப்படியே பேசிய படி தூங்கும் போது மணி 2. நாங்கள் காதலாகவோ, காதலைப் பற்றியோ எதுவும் பேசவில்லை. சொல்லப் போனால் அது முழு நேரப் பேச்சும் அல்ல… பெரும்பாலும் வருடல்களுடன், சாதாரணப் பேச்சாக இருந்தாலும், இருவமே அந்த மோன நிலையிலேயே தொடர்ந்து இருக்க நினைத்தோம்.

 இருவரில் யார் முதலில் தூங்கினோம் என்று கூட தெரியாத அளவிற்கு, அந்த அணைப்பில் கரைந்து மகிழ்ந்திருந்தோம்.

 காலையில் எழுந்த போது மணி 8. ஐயோ மீட்டிங்க்கு லேட்டாச்சு என்று பதறி எழுந்த போது மதன் சொன்னான்.  

இன்னிக்கு மீட்டிங்லாம் போக வேணாம். முக்கியமான செஷன்ஸ் எல்லாம் ஏற்கனவே ஓவர். அதுனால, இன்னிக்கு சும்மா அவுட்டிங் போயிட்டு வரலாம். நான் ஏற்கனவே இன்ஃபார்ம் பண்ணிட்டேன். ஓகேயா?

 எனக்கும் அவனுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று தோன்றியதால், சரி என்றேன்.


போய் ரெடியாகிவிட்டு, அவன் முன் வந்து நின்ற போது, அவன் முகம் ஆச்சரியத்தாலும், மகிழ்ச்சியாலும் அப்படியே மாறியது!

 லா… லாவி!

 வெட்கப்பட்டுக் கொண்டே கேட்டேன். நல்லாயிருக்கா…

 நல்லாயிருக்காவா? சூப்பரா இருக்கடா! உன்கிட்ட இந்த மாதிரி டிரஸ்ல்லாம்… அதுவும் இங்க எப்படி…

 நேத்து ஈவ்னிங் கேப்ல போயி வாங்கிட்டு வந்தேன். 

 
அவன் இன்னும் காதலுடன் என்னை ரசித்தான்.

 ஏனெனில் நான், அவன் கேட்ட படி மாறியிருந்தேன். அதாவது அவன் ஆசைப்பட்ட மாடர்ன் டிரஸ்ஸில்…

[Image: Tamil+Actress+Monica+latest+pics%252C+st...3%2529.jpg]
[+] 4 users Like whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: வயது ஒரு தடையல்ல! - by whiteburst - 10-11-2019, 10:10 AM



Users browsing this thread: 9 Guest(s)