Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
சாத்தியமில்லை:
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க முன்னாள் இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில், "இரண்டு படங்களுக்குமாக அவர்கள் சொன்ன கணக்கு சாத்தியமில்லாத ஒன்று. இரு படங்களும் நன்றாக இதுவரை ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் சொன்ன 100 கோடி, 125 கோடி வசூல் என்பது அதற்குள் கிடைக்க வாய்ப்பில்லை.

வடிகட்டிய பொய்:
இந்த வசூல் நிலவரம் என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு தான் தயாரிப்பாளர் கைக்கு வசூல் பணம் செல்கிறது. அப்படியிருக்கையில் இவ்வளவு தொகையை எப்படி அவர்கள் கூறுகிறார்கள் என்பது தெரியவில்லை. அடுத்த வாரத்தில்தான் உண்மையான வசூல் நிலவரம் தெரியவரும்.
இதுவும் வியாபாரம் தான்:
ரஜினி, கமல், அஜித், விஜய் என யாருக்கும் நான் எதிரியல்ல. இப்படியாக வசூல் நிலவரத்தை மாற்றிக் கூறுவதால் சம்பந்தப்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் அடுத்த பட வியாபாரம் கூடும். மக்கள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்குக் கூடும்
[Image: petta234-1547882345.jpg]
  

உண்மையான நிலவரம்:
இதற்காகத்தான் இப்படி வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள். இதனால் உண்மையான வசூல் நிலவரம் மக்களைச் சென்றடைவதில்லை" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 20-01-2019, 10:53 AM



Users browsing this thread: 4 Guest(s)