Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்
#5
[Image: cab_03541.jpg][img=640x0]https://image.vikatan.com/news/2019/01/19/images/cab_03541.jpg[/img]
டாடா ஸ்கை vs டிராய்  
இதற்கிடையில் பிரபல டிடிஹெச் நிறுவனமான டாடா ஸ்கைக்கும் டிராய்க்கும் இந்த விஷயத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைக்காத காரணத்துக்கும் இந்தத் திட்டத்தை டிராய் தாமதப்படுத்தவுள்ளது. எனவே, பழைய குறைந்த விலை திட்டத்திலேயே இப்போது தொடர்வோம் போன்ற தவறான தகவல்களை வாடிக்கையாளர்களுக்குத் தந்ததற்காகவும் டாடா ஸ்கைக்கு கடும் எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளது டிராய். டாடா ஸ்கை சேவையில் இந்தத் திட்டம் குறித்து வரும் செய்தி (ticker) என்ன தெரியுமா?
``After the new government tariff order applies and the prices are finalised we will contact you and migrate your channels and prices. This can take a few days. Till we connect with you, enjoy your current plan at the existing lower prices.’’
இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது டிராய். தாங்கள் தேதி எதையும் தள்ளிவைக்கவில்லை, வாடிக்கையாளர்கள் எந்த அசவுகரியங்களும் இன்றி சேனல்களைத் தேர்வு செய்யவே வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 31 வரை காலம் கொடுக்கப்பட்டது எனத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தெரிவித்தது. மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த டாடா ஸ்கை சார்பில் என்ன நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டுள்ளன என்ற 'Status report'-ஐ சமர்ப்பிக்குமாறு அந்த நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது டிராய்
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: மாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் - by johnypowas - 20-01-2019, 10:38 AM



Users browsing this thread: 1 Guest(s)