20-01-2019, 10:22 AM
எனவே, இப்போது `a la carte’ என்ற முறையில் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது டிராய். இதில் சேனல்கள் அனைத்துக்கும் ஒரு விலை இருக்கும். ஏற்கெனவே டிடிஹெச் நிறுவனங்கள் இந்த முறையில் சேவைகளைப் பெற வழிவகை செய்திருந்தாலும் டிவி சந்தையில் இருக்கும் அனைத்து டிடிஹெச் மற்றும் கேபிள் நிறுவனங்களுக்கும் இந்த முறையிலும், சேனல்களின் விலையிலும் ஒரு பொதுவான ஸ்டாண்டர்ட் இதுவரை இல்லாமல் இருக்கிறது. அந்த ஸ்டாண்டர்ட்டை கொண்டுவரவே இந்த வரைமுறையைக் கொண்டுவந்துள்ளது டிராய். இதன்மூலம் இந்தக் கேபிள் மற்றும் டிடிஹெச் டிவி சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களின் சேவையின் விலைகளும் இனி சீராக இருக்கும்.
கட்டணம் எப்படி நிர்ணயிக்கப்படும்?
இதற்கு எப்படி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்ற குழப்பம்தான் கடந்த ஒரு மாதமாக அனைவரிடமும் நிலவிவருகிறது. 100 சேனல்களைப் பெறுவதற்கு network capacity fee (NCF) எனப்படும் தொகையாக 130 ரூபாய் கட்ட வேண்டும். இதுவும் 18% ஜி.எஸ்.டி வரியுடன் மொத்தம் ரூ.153.40 கட்டணம் வரும். இதில் இலவச சேனல்களாக இருக்கும் 100 சேனல்களை நீங்கள் பெறலாம். 100-க்கும் அதிகமான சேனல்கள் வேண்டுமென்றால் கூடுதல் 25 சேனல்களுக்கு ஜி.எஸ்.டி-யுடன் சேர்த்து ரூ.23.60 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்த 130 ரூபாய் என்பது network capacity fee தானே தவிர, 100 இலவச சேனல்களில் விலை என்று முதலில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. அதில்தான் குழப்பங்களும் தொடங்கின. கட்டணமுள்ள சேனலோ (இதன் கட்டணத்தை இத்துடன் தனியாகச் செலுத்த வேண்டும்), கட்டணமில்லாத சேனலோ மொத்தம் 100 சேனல்கள் வரை பெற இந்த 130 ரூபாய் NCF-ஐ செலுத்த வேண்டும். உதாரணத்துக்கு ஒரு தனியார் நிறுவனம் வழங்கும் உத்தேச திட்டம் ஒன்றைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.