Romance மெய்நிகர் பூவே
அரவிந்த் மீராவிற்கு கால் செய்து பார்க்க அவள் அவனை தொடர்ந்து புறக்கணித்து கொண்டிருந்தாள். வாட்ஸ் அப் மெசேஜ்களுக்கும் பதில் இல்லை. வாட்சப்பில் அம்முகுட்டி சாரி, சாரிடா செல்லம். இனி இதே மாதிரி உன்கிட்ட பேசமாட்டேன். போன் எடுடி பொண்டாட்டி. 1000 தடவை சாரிடி. லவ் யூ குட்டிமா. இப்படியாக வாய்ஸ் மெசேஜ்களை தட்டி விட்டான். இறுதியாக அழுகிற மாதிரி ஸ்மைலிகளை அனுப்பினான்.
 
அனைத்தும் பார்த்ததற்கு அடையாளமாக ப்ளு டிக் காட்டியது. ஆனால் பதில் இல்லை.
இதை அனைத்தையும் கண்ட மீராவிற்கு கோவம் குறைந்தாலும் அவனை கொஞ்சம் அழைய விட வேண்டும் என்பதற்காகவே பதில் அனுப்பாமல் இருந்தாள். ராஜி அவள் போனை பார்த்து சிரிப்பதை கண்டு அவளிடம் கேட்டாள்.
 
“ என்ன மேடம் லவ்வர்ஸ் ரெண்டு பேரும் இப்போ ரொம்ப ராசி ஆகிட்டீங்க போல. “
 
“ ஆமா. இப்போ உனக்கு என்ன வந்துச்சு. நீதான் என்கிட்ட பேச மாட்டேன்குறியே. எங்களை எல்லாம் உங்க கண்ணுக்கு இப்போ தான் தெரியுதாக்கும். “
 
“ ஏன் மீரா இப்படிலாம் பேசுற. எனக்குன்னு இருக்குற உண்மையான பிரெண்ட் நீ மட்டும் தான. “
 
“ அப்படியா. அப்படின்னா என்கிட்ட நீ எதையாச்சும் மறைக்க பார்க்குறியா ராஜி. “
 
“ இல்ல மீரா ஏன் கேக்குற. “
 
“ நீ ஊருக்கு போயிட்டு வந்ததுல இருந்து உன்கிட்ட நிறைய மாற்றம் தெரியுது. என்கிட்ட சரியாவே பேச மாட்டேங்கிற. உங்கிட்ட ஏதோ ஒரு மாற்றம் எனக்கு தெரியுது. நைட் கூட பேசாம இழுத்து மூடி தூங்கிடுடுற. “
 
“ இல்ல மீரா அப்படிலா ஒன்னும் இல்ல. நானும் கார்த்திக் கிட்ட என்னோட லவ்வ எத்தனையோ வழில சொல்லி பார்த்துட்டேன். அவனுக்கு அது புரியவே மாட்டேங்குது. அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அன்னைக்கு கூட நீ அவனை பத்தி பேசினதும் எனக்கு கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டு. “
 
“ விடு ராஜி அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு. அவன் அவன் பொண்ணுங்க லவ் பண்ண கிடைக்க மாட்டாங்கலான்னு ஏங்கி போய் அலையுராணுக. இவன் கிட்ட வழிய போய் நின்னா அப்படிதான் பண்ணுவான். பேசாம அவனை விட்டுட்டு உன் வேலையை பாரு. “
 
“ ஆமா மீரா. நீ சொல்றது தான் கரெக்ட்.  அப்றம் என்னாச்சு உங்கள் காதல் மேட்டர்  “ பேச்சை மாற்றினாள்.
 
“ புஜ்ஜுமா குட்டிமான்னு, பொண்டாட்டின்னு கொஞ்சிட்டு இருக்கான். அலையட்டும். நல்லா அலையட்டும்.
 
“ அரவிந்த் அண்ணனா இது. ஆபிஸ்ல அப்படி இருக்காங்க. உன்கிட்ட போய் இப்படி கெஞ்சுறாங்க. “
 
“ ஆமா ராஜி. கெஞ்சிதான் ஆகணும். பசங்க நம்ம கைக்குள்ள இருக்குற வரைக்கும் தான் நம்ம சொல்றதை கேட்பாங்க. “
 
“ பார்த்து மீரா ரொம்ப கெஞ்ச விட்டுடாத. பிறகு மிஞ்சிட போறாங்க. “
 
“ ம்ஹூம் அவன்லா அப்படி போக கூடிய ஆள் கிடையாது. இன்னும் எத்தனை தடவை கெஞ்சுவான் பாரேன்.
 
அவள் சொல்ல அரவிந்திடம் இருந்து மற்றொரு மெசேஜ் வந்தது.
 
“ நான் சொல்லல இங்க பாரு. இரு இப்போ என்ன சொல்றான்னு கேளு. “ 
 
ஏய் என்னடி ஓவரா பண்ற. அதான் சாரி கேட்டுட்டேன்ல. பின்ன என்னடி ஓவரா சீன போடுற. நீ ஒன்னும் பேச வேண்டாம். நீயா பேசுற வரைக்கும் நான் உன்கூட பேசமாட்டேன். இருடி உன் நம்பரை ப்ளாக் பண்றேன்.
 
ஆடியோவை கேட்ட ராஜி மீராவை பார்த்து சிரித்தாள்.
 
“ என்னடி இப்படி சொல்றான். நிஜமாவே பண்ணிடுவானோ. “
 
“ என்னமோ கெஞ்ச விடனும். கைக்குள்ள அப்படி இப்படின்னு சொன்ன. இப்போ பார்த்தியா. எனக்கு தெரியாதுப்பா. முதல்ல அரவிந்த் அன்னைக்கு கால் பண்ணு போ. “
 
“ நீ வேற. இரு பேசிட்டு வந்துடுறேன்.
 
“ ஒரு நிமிஷம். கால் பண்ணி என்னனு சொல்லுவ. “
 
“ சாரிடா குட்டி. நான் சும்மா விளையாட்டுக்கு தான பண்ணேன்னு எதையாச்சும் சொல்லி சமாளிக்க வேண்டியது தான் அதுலையே விழுந்துடுவான். “
 
“ நல்லன் தெரிஞ்சி வச்சிருக்க. போ போய் பேசிட்டு வா. “
 
அங்கு கார்த்திக் வீட்டில் கார்த்திக்கிடம் சொன்னான் அரவிந்த்.
 
“ மச்சிவொர்க் அவுட் ஆகிடுச்சுடா. எப்படிடா. லவ்வ பிரிக்கவும் செய்யுற. சேர்த்து விட ஐடியாவும் சொல்ற. உனக்கு எப்படிடா இவ்ளோ மூளை. “
 
“ ரொம்ப பேசாத. கொஞ்ச நாளா மூஞ்ச தூக்கி வச்சிட்டு பேசாம இருந்தன்னு தான் ஐடியா கொடுத்தேன். ஓவரா பேசின கட் பண்ணி விட்ருவேன் பார்த்துக்க.
 
தேங்க்ஸ் மச்சான். உன்ன போய் நான் கெட்டவன்னு நினைசிட்டேன்டா. நீ நல்லவன்டா நீ நல்லவன். சரி இரு பேசிட்டு வந்துடுறேன். இல்ல இல்ல பேசிட்டு ஆபிஸ்ல வச்சி பார்க்குறேன். வரேன் மச்சான் பை. “
 
“ டேய் டேய் என்ன கலட்டி விட்டுட்டு போறியா. இதாண்டா உங்கள எல்லாம் லவ் பண்ண விடாம செய்யுறேன். போ போ . “ சொல்லிவிட்டு பீரை எடுத்து வாயில் கவிழ்த்தான் கார்த்திக்.
Like Reply


Messages In This Thread
RE: மெய்நிகர் பூவே - by enjyxpy - 24-06-2019, 11:46 PM
RE: மெய்நிகர் பூவே - by enjyxpy - 28-06-2019, 08:38 PM
RE: மெய்நிகர் பூவே - by bsbala92 - 02-11-2019, 11:17 AM



Users browsing this thread: 2 Guest(s)