19-01-2019, 08:13 PM
டெல்லியில் பணிபுரிந்துக்கொண்டு இருந்த நான், விடுமுறையில் சென்னைக்கு சென்று இருந்தேன். அன்று…சென்னையில் வழக்கம் போல் கொளுத்தும் வெய்யில். நானோ வெய்யிலில் காய்ந்து போய் தாளமுடியாமல், ஒரு பெட்டிகடையில் ஒதுங்கி பெப்சி குடித்துக்கொண்டே தம் அடித்துக்கொண்டு இருந்த நேரம் அது. பாதி பெப்சியும் கால் வாசி சிகரெட்டும் முடித்து இருந்த நேரத்தில் தானா அந்த மோகினி என்னை கடக்க வேண்டும்? சென்னை வெய்யிலில் மக்கள் கறுத்து களிமண்ணாய் கிடக்க, அதற்கு மாறாக, மஞ்சள் நிற மோகினி ஒருத்தி Kinetic Hondaவில் பறந்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு பின்னே, அவள் கட்டி இருந்த காட்டன் புடவையின் முத்தானை, ஒய்யாரமாய் பறந்துக்கொண்டு இருந்தது. கூலிங் கிலாஸ் அணிந்து இருந்ததால் , அவளது முகத்தை கூட சரியாக பார்க்க முடியவில்லை. ‘கண்டதும் காதல்’ என்று சொல்லுவார்களே! அது தான். அதே தான்! சிகரெட்டை தூக்கி எறிந்துவிட்டு, பெப்சியை வைத்துவிட்டு, கடைக்காரரிடம் பணத்தை அழுத்திவிட்டு (மீது சில்லரைக் கூட வாங்காமல்), என்னுடை பைக்கை உதைத்து கிளப்பி அவள் பிடிக்க விரைந்தேன்.
எனக்கு முன்னே சுமார் 500 மீட்டர் தூரத்தில் என் கண்களுக்கு தெரிந்தும் தெரியாமல் அவள் போய்க்கொண்டு இருந்தாள். தாறுமாறான சென்னை டிராபிக்கில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல், இப்படியும் அப்படியும் அவள் வண்டியை ஓட்டியதை பார்க்கும் போது நெஞ்சம் திக் திக் என்று அடித்துக்கொண்டது. நல்ல வேளையாக விநாயக கடவுள் வடிவத்தில் (ஆமாங்க அதே அளவுக்கு தொப்பை!) ஒரு டிராபிக் போலிஸ்காரர் தமது கையை காட்டி வாகனங்களை நிறுத்த, நான் அந்த மோகினியை ஒரு வழியாய் பிடிக்க முடிந்தது. பைக்கை அப்படியும் இப்படியும் நகர்த்தி, அவளுக்கு பக்கத்தில் போய் நிறுத்தினேன். பார்த்தாளா அந்த காதகி! ஊஹ¥ம்..! ஒரு முறைக்கூட திரும்பி பார்க்கவில்லை. ‘ரொம்ப தான் திமிர் பிடிச்சவள் போல..’ என்று உள்ளுக்குள் எண்ணிக்கொண்டேன். ‘ஒரு தடவையாது திரும்பி பார்க்கமாட்டாளா..!’ என்று நெஞ்சம் ஏங்கியது. ஊஹூம் ..! ‘பிளீஸ் .. பிளீஸ்.. கடவுளே! அவளை ஒரு தடவையாது என்னை திரும்பி பார்க்க வைய்யேன்..’ என்று மனதுக்குள் வேண்டாத கடவுள் இல்லை. கடவுள் என்னை கை விட்டுவிட்டார். டிராபிக் போலிஸ் உடையணிந்த விநாயக கடவுள் கையை காட்ட அவள் மீண்டும் பறக்க ஆரம்பித்தாள். ‘என்ன நெஞ்சு அழுத்தம் அவளுக்கு.. இவளை விடக்கூடாது..’ என்று உள்ளுக்குள் கங்கணம் கட்டிக்கொண்டு அவளை விரட்டினேன். மேலும் சுமார் 2 கிமீ சென்றவுடன் ஒரு வங்கியின் முன்னே தனது வண்டியை நிறுத்தி விட்டு அவள் இறங்கினாள். நானும் போய் நின்றேன். ‘பார்க்கமாட்டாளா..’ என்று மீண்டும் எனது மனம் ஏங்க அவளோ என்னை சட்டை செய்யாமல் வங்கியின் உள்ளே சென்றுவிட்டாள். நான் வெளியிலேயே காத்துக்கிடந்தேன். ‘உள்ளே போகலாம்’ என்று என் மனம் சொன்னாலும், எனக்குள் இருந்த கொஞ்ச நஞ்சம் ஈகோ என்னை தடுத்து நிறுத்தியது.
பத்து நிமிடங்களுக்கு பின்னர் அந்த மோகினி திரும்பி வந்தாள். என்னை சுத்தமாக கண்டுக்கொள்ளவில்லை. ‘இவளுக்கு ஒரு வேளை கண் தெரியாதோ..’ என்று எனக்குள் காமன் சென்ஸ் இல்லாமல் கேள்வி தோன்றியது. நான் செய்வது அறியாமல் வெய்யிலில் நின்றுக்கொண்டு இருக்க, தனது வண்டியை கிளப்பிய அவள், அலட்சியமாய் ஒரு பார்வையை என் மீது வீசிவிட்டு புறப்பட்டாள்.
அவள் கூலிங் கிளாஸ் அணிந்து இருந்ததால், அவள் என்னை பார்த்தாளா அல்லது எனக்கு பக்கத்தில் போய்க்கொண்டு இருந்த அந்த சொரி நாயைப் பார்த்தாளா என்று நிச்சையமாய் என்னால் சொல்ல முடியவில்லை! ஆனால், அவ்வளவு அலட்சியம் தெரிந்தது அவளது செய்கையில். கடுப்பாகி போன நான், ‘இவளை விடக்கூடாது.. தாம் அழகுன்னு ரொம்ப தான் ராங்கி பண்ணிக்கிறா..’ என்று நினைத்த படியே அவளை பின் தொடர்ந்தேன். வந்த வழியே அவள் மீண்டும் செல்ல, நானும் விடாமல் பின்னால் தொடர்ந்தேன். ஒரு வழியாக அண்ணா நகருக்குள் நுழைந்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் அவள் தனது வீட்டை அடைய, நானும் பின்னால் சென்று வண்டியை நிறுத்தினேன். நான் வெளியில் காத்துக்கிடக்க, தனது வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்த அவள் வண்டியை நிறுத்தினாள். கீழே இறங்கிய அவள் தனது வீட்டுக்குள் செல்லும் முன், தான் அணிந்து இருந்த கூலிங் கிளாஸை கழற்றி விட்டு ஒரு முறை ஒரே ஒரு முறை என்னைப் பார்த்தாள். அவளது பார்வை என் நெஞ்சில் ‘சுருக்’ என்று ஈட்டியாய் பாய, நான் நிலைக்குளைந்து போனேன். “அது இருக்கட்டும். நீ யார்? நீ எதுக்கு முன்ன பின்ன தெரியாத பெண்ணுக்கு பின்னாடி நாயா அலையரே?” என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அவள் ஒன்றும் முன்னே பின்னே தெரியாத பெண் இல்லை. அவள் எனது வருங்கால மனைவி ஆவாள்.