19-01-2019, 06:34 PM
சென்னை - தூத்துக்குடி வரை ரூ13,200 கோடி மதிப்பில் புதிதாக 8 வழிச்சாலை - மத்திய அரசு முடிவு
* மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் இருந்து இந்த திட்டத்திற்காக முன்வைத்துள்ள விரிவான திட்ட அறிக்கை நகல் தந்தி டி.விக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
* அதில் பாரத் மாலா திட்டத்தின் கீழ் 13,200 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
* சென்னையிலிருந்து விழுப்புரம் வரை 10 வழி சாலை திட்டமாகவும், விழுப்புரத்திலிருந்து தஞ்சாவூர் திருச்சி வரை 8 வழி சாலை திட்டமாகவும், தஞ்சாவூர், திருச்சியிலிருந்து தூத்துக்குடி வரை ஆறு வழி சாலை திட்டமாகவும் இதை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
* இதன் மூலம் சென்னை-தூத்துக்குடி இடையிலான பயண தூரம் 100 கிலோமீட்டர் வரை குறையும் என கூறப்படுகிறது.
* தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், புதிய பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, மத்திய சுற்றுச்சூழல் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
* 2022ஆம் ஆண்டுக்குள் பசுமை வழிச்சாலை திட்டங்களை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்துள்ளது.