19-01-2019, 11:40 AM
2025-ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் : ஆர்.எஸ்.எஸ். முதல்முறையாக கெடு
உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜில் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் பையாஜி ஜோஷி விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பதிவு: ஜனவரி 19, 2019 03:50 AM
பிரயக்ராஜ்,
பையாஜி ஜோஷி பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, “கும்பமேளா நமது கலாசாரத்தையும், பழமையான பாரம்பரியத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பை அளிக்கிறது. அடுத்த 6 ஆண்டுகளில், 2025-ம் ஆண்டு மீண்டும் ஒரு கும்பமேளா நடைபெறும். அப்போது நமக்கு ராமர் கோவில் கிடைத்து இருக்கும். அது தேசத்தின் பெருமை மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாகவும் இருக்கும்” என்றார்.
இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். முதல்முறையாக 2025-ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று மறைமுகமாக கெடு விதித்துள்ளது.