Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
விஸ்வாசம் வசூலை கலாய்த்த தமிழ்ப்படம் இயக்குனர்... 


தமிழ் படம்-2 படத்தை இயக்கிய சி.எஸ். அமுதன் விஸ்வாசம் பட வசூலைக் கிண்டல் செய்யும் தொணியில் ட்விட்டரில் பதில்.
 

பொங்கல் பண்டிகையின் விடுமுறையை முன்னிட்டு அஜித் நடிப்பில் விஸ்வாசமும், ரஜினி நடிப்பில் பேட்ட படமும் கடந்த 10ஆம் தேதி ரிலீஸானது. படம் வெளியான நாள் முதலே இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த இரண்டு படக்குழுவும் அதிகாரப்பூர்வ வசூலை தெரிவித்துள்ளது.
 

முதலில் ரஜினியின் பேட்ட படம், உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்திருந்தது, தமிழகத்தில் மட்டும் 11 நாட்களுக்குள் நூறு கோடியை இத்திரைப்படம் தொட்டுவிடும் என்று தகவல் வெளியாக. அதனை தொடர்ந்து விஸ்வாசம் படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் தொட்டுவிட்டது என்று படக்குழு தகவல் அளிக்க. விஸ்வாசம் திரைப்படத்தை வாங்கி வெளியிட்ட கே.ஜே.ஆர் நிறுவனம், தமிழகத்தில் மட்டும் 125 கோடி வசூலை விஸ்வாசம் வாரி குவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், விஸ்வாசம் படம் பார்க்க சீட்டில்லாமல், அதிகப்படியான நாற்காலிகள் போட்டு பார்வையாளர்கள் பார்த்து வருவதாக தெரிவித்தது.
 

சமூக வலைதளத்தில் இந்த இரு படங்களின் வசூல் விபரங்களை, பலர் கலாய்த்து வந்தனர். இந்நிலையில் தமிழ் படம் 2 இயக்கிய அமுதனிடம் சமூக வலைதளத்தில் ஒருவர் உங்கள் படத்திற்கு எட்டாவது நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்று கேட்க, அதற்கு அமுதன்  ‘ஒரே இருக்கையில் இரண்டு , மூன்று நபர்கள் அமர்ந்திருந்தனர். கூட்டத்தைச் சமாளிக்க கூடுதல் நாற்காலிகள், மெத்தை எல்லாம் திரையரங்களுக்குக் கொண்டு வரப்பட்டதால் அதனைக் கூறுவது கடினம்’ என்றார்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 18-01-2019, 06:35 PM



Users browsing this thread: 12 Guest(s)