Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
ஜிப்ஸி
#VeryVeryBad பாடல் டீஸர் அருமையாக உள்ளது. நீதி தேவதையின் வாயில் கருப்புத் துணி கட்டியிருப்பதுடன் டீஸர் துவங்குகிறது. அம்பேத்கர், பெரியார் புகைப்படங்களை காட்டுகிறார்கள். போலீசார் ஜிப்ஸி படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை அழைத்து வரும்போது சிறையில் உள்ளவர்கள் அவரிடம் கேட்கும்கேள்விகள் அருமை.
[Image: thirumurugangandhi-1547808974.jpg]


கைது
தோழர் ஸ்டெர்லைட்டா, அணு உலையா, நியூட்ரினோவா, மணல் கொள்ளையா எதுல உங்களை கைது பண்ணினார்கள் என்று பிற கைதிகள் சந்தோஷ் நாராயணனை கேட்கிறார்கள். மக்கள் விரோத திட்டத்திற்கு எதிரா, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரா துண்டறிக்கை கொடுத்தீர்களா என்று கேட்கும் பெண் யாரை நினைவூட்டுகிறார் என்பது உங்களுக்கே தெரியும். சிறையில் திருமுருகன் காந்தி, பியூஷ் மனுஷ் இருப்பதாகவும் காட்டியுள்ளனர்.

[Image: santhosh-1547808982.jpg]
  

திருநங்கை
சாமியார், திருநங்கைகள் பிரச்சனை, தீண்டாமை சாதிக் கொடுமை, சேலம் 8 வழிச் சாலை போராட்டம், ஈழத் தமிழர் பிரச்சனை, 7 தமிழர் விடுதலை என்று அனைத்து பிரச்சனைகளையும் பேசிவிட்டார் ராஜு முருகன். வெரி வெரி பேட் என்ற பாட்டு போட்டதற்காக கைது செய்ததாக கூறுகிறார் சந்தோஷ் நாராயணன்.
[Image: rajumurugan-1547809263.jpg]
  


ஹிட்
ஏதாவது ஒரு பிரச்சனையை பேசினாலே எதிர்ப்பு கிளம்பி விளம்பரம் கிடைக்கும். ராஜு முருகன் அத்தனை பிரச்சனையையும் கை வைத்துவிட்டார். ஜிப்ஸிக்கு அமோகமாக இலவச விளம்பரம் கிடைத்து சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 18-01-2019, 06:33 PM



Users browsing this thread: 13 Guest(s)