25-10-2019, 09:37 AM
(This post was last modified: 25-10-2019, 10:00 AM by LustyLeo. Edited 2 times in total. Edited 2 times in total.)
(24-10-2019, 10:34 PM)Jeevanantham Wrote: Game4it.. a big question is in mind??We had read a lot of affair stories and even cuckold stories too.. in all husband will be weak or in some fantasy mind .. in that stories will be ignored or the author won't give the importance to him or he'll be the key role in that stories.. but in this story what is it in your mind about husband??
இதுவரை புருஷனுக்கு தான் பவனி தனக்கு துரோகம் செய்றான்னு தெரியாதே. பவனி மேல இருக்க அபரீத அன்பினால் அவன் அவளை முழுவதுமாய் நம்புகிறான். தன்னால் அவளுக்காக நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் அவள் சின்ன சின்ன சந்தோஷத்துக்கு தடையாக இருக்க கூடாது என்றுதான் அவளை இந்த டூர் கு அனுப்பி வைத்தான். வீடியோ கால் பண்ணி பேசியும் அவனுக்கு எந்த சந்தேகம் வராதபடி பவனியும் அவளுடன் இருந்தவர்களும் நடந்து கொண்டார்கள்.
ஒரு முறை அவள் மீது கொண்ட சந்தேகம் உறுதிப்படுத்த பட முடியாமல் போனதால் இனிமேல் அது போல சந்தேகம் கொள்ள கூடாது என்று நினைக்கிறான். அவன் நியமித்த பிரைவேட் டிடெக்ட்டிவ் கூட தேவை இல்லாமல் சந்தேக பட வேண்டாம் என்றே அறிவுறுத்தினார். பவனி விக்ரம் இருவரும் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதாலும், சூழ்நிலைகள் அவர்களுக்கும் சாதகமாக இருந்ததாலும், பிரைவேட் டிடெக்ட்டிவ் ஆள் கூட பவானியின் கள்ள காதலை கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆசிரியர் முதலிலேயே புருஷன் நிச்சயம் ககோல்டு இல்லை என்று சொல்லி விட்டார்.
கல்யாண வீட்டில் சந்தேக உணர்வில் இருந்த போது கணவனின் மனநிலையை பார்க்கும் போது அவன் தெளிவான முடிவு எடுப்பதில் வல்லவன் இல்லை என்று தெரிகிறது. என்னதான் ஆபீஸ் ல சீனியர் மேனேஜர் ஆக இருந்தாலும் பெரிய பெரிய முடிவுகள் எடுத்தாலும், நாளைக்கு தன் மனைவியால் ஒரு பிரச்சனை என்றால் அவனால் ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாது என்றே தோன்றுகிறது.
சிறு வயதில் இருந்தே தன்னுடைய பொருளை அடுத்தவர்க்கு விட்டு கொடுக்க விரும்பாதவன் மோகன். அதனால் பவானியின் செயலை மன்னிக்கவோ அல்லது மீண்டும் அவளை ஏற்று கொள்ளவோ வாய்ப்பு இருக்க முடியாது.
இதில் அவன் மகன் தான் பெரிய முட்டு கட்டை. தாயின் அன்பு இல்லாமல் போனால், அவனின் எதிர்காலம் என்னாகுமோ என்பதை பற்றி தான் மோகனின் வருத்தமாக இருக்கும். அதே சமயம் கள்ள உறவில் ஈடுபட்ட ஒருத்தியிடம் மகனை அனுப்பி வைக்க அவன் விரும்ப மாட்டான். அதுவும் இல்லாமல் மகன் மீது அவன் உயிரை வைத்து இருக்கிறான். உறவினர்களாலும் பெருத்த அவமானத்தை அவன் சந்திக்க நேரிடும்.
பவானியின் கள்ள உறவு தெரிந்தபின் அவள் அதற்கு பின்பு என்ன செய்ய போகிறாள் என்பது பற்றி மோகனுக்கு கவலை இல்லை. டிடெக்ட்டிவ் சொன்னது போல இவனுக்கு ஒரு சில options மட்டுமே உண்டு.
- அழகு பதுமையான பவனியை தன்னால் கவனிக்க முடியவில்லை. அவளுக்கு தேவையான உடல் சுகத்தை தர முடியவில்லை அவளுடைய ஆசைகளை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை அதனால் அவளின் இந்த செயல் நியாயமானதே. எல்லா தவறும் தன்னுடையதே என்று அவளை மன்னித்து அவளது செயலை ஏற்று கொண்டு வாழ்வது. இது ஒரு வகை ககோல்டு தான்.
- குடும்ப நலன் கருதி கள்ள உறவை தெரிந்தது போல காட்டி கொள்ளாமல், கண்டு கொள்ளாமல் இருப்பது. இது அவர்களுக்கு இன்னும் சுதந்திரம் தந்தது போல் ஆகிவிடும். ஆனாலும் பவானியின் சந்தோசமே முக்கியம் என்று இருந்து விடுவது. இது கூட ககோல்டு வகை தான்
- பவனியிடம் அவளது இரண்டாவது குழந்தையை அபார்ட் செய்ய சொல்வது. அவள் மறுத்தால் அவள் குடும்பத்தினரிடம் சொல்லி அவளை வீட்டை விட்டு அனுப்பி விடுவது.
- பவனியிடம் அவளது கள்ள உறவு தனக்கு தெரிந்ததை சொல்லி. மகனுடைய எதிர்காலத்துக்காக மட்டுமே சகித்து கொண்டு ஒரே வீட்டில் இருந்து கொண்டு, வாழ்நாள் முழுக்க அவளுடன் பேசாமல், உறவு கொள்ளாமல் கணவனுக்குரிய கடமைகளை செய்து கொண்டு இருப்பது.
- பவனி நடத்தை பற்றிய விவரங்களை அவளது குடும்பத்துக்கு கொடுத்து பவனியிடம் முறையாக டிவோர்ஸ் பெற்று மகனை தன்னுடன் வைத்து கொள்வது
- ஒரு தந்தையாக அவனை தன்னால் தனியாக வளர்க்க முடியாது என்பதால், விளைவுகள் பற்றி கவலை படாமல் பவனி நடத்தை பற்றிய விவரங்களை அவளது குடும்பத்துக்கு கொடுத்து பவனியிடம் முறையாக டிவோர்ஸ் பெற்று மகனை பவனி தாய் வீட்டில் விட்டு விட்டு விலகி சென்று மறுமணம் செய்து கொள்வது. மகனுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன் அவனை அவ்வப்போது வந்து பார்த்து கொள்வது.