Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
69.
அடுத்த நாள் யதேச்சையாக அவளும், என் அக்காவும் பேசியதைக் கேட்டேன்.
என்னடி, என்கிட்ட கூட எரிஞ்சு விழுந்தான். நீ கூப்பிட்டவுடனே கம்முனு வந்துட்டான்.
ரொம்பத்தாண்டி அவனை தலைக்கு மேல தூக்கி வெச்சுகிட்டு ஆடுறிங்க! நீங்கல்லாம் அவனைக் கெஞ்சி கூப்புட்டீங்க. ஒர்க் ஆகலை. சரின்னு, நான் போய் திட்டிக் கூப்பிட்டேன். ஒர்க் ஆகிடுச்சி! அவ்ளோதான்.
நீ திட்டுனியா? என்னை விட நீ பயந்த சுபாவம். நானே, சில சமயம் அவன் கோவமா இருந்தா பேச மாட்டேன். நீ எப்பிடிடீ திட்டுன?
தெரில்ல… நான் அதிகம் பழகாதவங்கன்னாதான் அமைதியா இருப்பேன். மதன்கிட்ட எனக்கு அப்படித் தோணலை!
ஓ… டெய்லி ரெண்டு மணி நேரம் பேசிக்கறீங்களோ?
பேசிதான் புரிஞ்சிக்கனும்னு அவசியம் இல்லை. இப்ப நீ மட்டும் என்ன, அவன் கூட டெய்லி ரொம்ப பேசுறியா? ஆனா, அவனை நீ புரிஞ்சிகிட்டதில்லை? அதே மாதிரிதான். நான் வந்ததுல இருந்து பாக்குறேன். நீ சொல்லிக் கேட்டிருக்கேன். அதை வெச்சு, நான் அவனை புரிஞ்சிகிட்டேன். நீயும் கூட, கொஞ்சம் தைரியமா, தாத்தாக்காக வந்து சாப்டுன்னு அதட்டிக் கூப்ட்டிருந்தா, அவனே வந்திருப்பான்.
எனக்கென்னமோ, தாத்தா மதியானமே சாப்பிடலியேன்னு அவனே ஃபீல் பண்ணிட்டு இருந்துருப்பான்னு தோணுது. அதே சமயம் கொஞ்சம் ஈகோ. அவ்ளோதான். நல்லவந்தான். இல்லாட்டி, என் விஷயத்துல தலையிட்டா, வீட்டுக்கு வர விட மாட்டேன்னு சொன்னதுக்கு, உன் சொத்தில்லை, உன் தாத்தா சொத்துன்னு திருப்பி திமிரா நான் பேசியும், அமைதியா சாப்பிட வந்திருப்பானா?
என்னடி சொல்ற? இப்படியில்லாமா பேசுன? உனக்குள்ள ஒரு ஜான்சி ராணி ஒளிஞ்சிருக்கிறதை இப்பதாண்டி பாக்குறேன்! ஹா ஹா!
ஏய் போடி!
அதைக் கேட்டு, எனக்கு அந்த இருவரின் மேலும் நம்பிக்கையும், அன்பும் கூடியது. என்னைச் சரியாக லாவண்யா கணித்திருந்ததும், கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள், என்னிடம் அப்படி பேசியதும் பெரிய ஆச்சரியத்தை அளித்தது. ஏனோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதிற்குள் எழுந்தது.
வேண்டுமென்றே அன்று அவள் கிளம்பும் சமயத்தில் அவளைச் சீண்டினேன்.
நேத்து நான் சாப்ட்டுட்டேன். இப்ப, இது என் சொத்துதான? இப்ப நான் நினைச்சா உன்னை வர வேண்டாம்னு சொல்ல முடியுமில்ல என்று நக்கலாகக் கேட்டேன்…
இதுவரை தானாக பேசாத நான், அன்று பேசியது, அதுவும் வெறுமனே சீண்டலுக்காகத்தான் நான் பேசுகிறேன் என்று தெரிந்த என் அக்காவும், மிகவும் ஆச்சரியமாகி நின்றாள்.
சில நொடிகள் திகைத்த லாவண்யாவும், பின் சொன்னாள்.
சட்டம் தெரியாதா உனக்கு! சட்டப்படி, நீ இன்னும் மைனர். அதுனால டெசிஷன்லாம் நீ எடுக்க முடியாது தெரிஞ்சுதா. மேஜர் ஆன பின்னாடி, சொல்லு பாத்துக்கலாம்… என்று அவளும் சீண்டி விட்டுச் சென்றதைப் பார்த்து, என் அக்காவிற்கு இன்னும் ஆச்சரியமானது.
ஆனால், அவள் சென்றதையே பார்த்துக் கொண்டிருந்த என் உதடுகளில் பல நாட்கள் கழித்து ஒரு புன்னகை குடி வந்தது!
அதன் பின், நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், அவளது செயல்களை அவளையறியாமல் கவனிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவள் என்னுள் நிரம்ப ஆரம்பித்தாள். அடுத்து வந்த சின்னச் சின்ன நிகழ்ச்சிகளிலெல்லாம், அவளுடைய செயல்கள் எனக்குள் சின்னச் சின்ன சலனங்களை ஏற்படுத்தின. தினமும் அவளுடைய வருகையை நான் எதிர் நோக்க ஆரம்பித்திருந்தேன்.
நான் +2வில் எடுத்த மார்க்குக்கு வாழ்த்து சொன்னாள். அவளும், என் அக்காவும் படிக்கும் கல்லூரியில் சேரும் என் முடிவுக்கு மகிழ்ச்சியடைந்தாள். நான் அவளுடைய கல்லூரியை தேர்வு செய்ததற்கு அவளும் ஒரு காரணம்.
அவள் மேலான என் காதல் வலுப் பெறுவதற்கு மிக முக்கிய சம்பவம் அப்பொழுது மீண்டும் நிகழ்ந்தது.
நான் +2 முடித்து விட்டு என்னச் செய்யப் போகிறேன் என்று சொல்லி, இரண்டு நாட்கள் கழித்து…
அன்று தாத்தா ஏனோ மகிழ்ச்சியாக இருந்தார். என் அப்பாவும், அம்மாவும் ஏதோ அலுவலக விஷயமாக வெளியூர் சென்றிருந்தார்கள். அடுத்த இரு நாட்கள், வார இறுதி.
தாத்தா, என்னையும், என் அக்காவையும் கூப்பிட்டார். லாவண்யா சமயங்களில், அக்காவுடன் தங்கி விடுவாள். அன்று அவளும் இருந்தாள்.
தாத்தா கொஞ்சம் பீடிகையுடன் ஆரம்பித்தார். எனக்கு இத்தனை நாளா கவலையா இருந்துச்சு. எனக்கு அப்புறம், உங்களுக்குன்னு யாரு இருக்கான்னு! ஆனா, உன் அக்கா வந்தப்பவே பாதி கவலை தீந்துருச்சு. ரெண்டு பேரும், ஒருத்தருக்கொருத்தர் இருக்கீங்கன்னு. மீதி கவலையும் கூட நேத்து தீந்துடுச்சு!
அக்காதான் கேட்டாள். என்ன தாத்தா சொல்லுறீங்க? அப்படி என்ன நடந்தது?
நேத்து உங்க அப்பாவும், அம்மாவும் வந்து என்னை பார்த்தாங்கம்மா! அவன் ரொம்ப மனசு நொந்து பேசுனான். முன்னல்லாம், காசுன்னு பேசுனவரு, இப்ப அடியோட மாறிட்டாரு. பெத்த புள்ளைங்களே வெறுத்து ஒதுக்குற வாழ்க்கை என்ன மாதிரியான வாழ்க்கை. நாங்களே ஒரு விதத்துல அனாதைங்கதான்னு ரொம்ப ஃபீல் பண்ணாங்க!
உங்க அப்பாவும் சின்ன வயசுல இருந்து பணத்துக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்காரு. இந்த உலகமும் காசில்லாதவங்களை என்னிக்குமா மதிச்சிருக்கு? அதான் காசு வேணும்ங்கிறதுக்காக சில தப்புகளை செய்ய வெச்சிருச்சு. அதனால தயவு செஞ்சு மன்னிச்சிருங்க, என்னையும் ஏத்துக்கோங்கன்னு கெஞ்சி கேட்டுகிட்டாரும்மா!
உங்க அம்மாவும் கூட, நான் வந்ததுல இருந்து மதன் என்னை நெருங்கவே விடலை. என்னை எதிரியாவே பாக்குறான். சின்ன பையன் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னுதான் நான் தள்ளி நின்னேன். மத்த படி நான், மதன்கிட்ட கோபமாவோ, வெறுப்பாவோ பேசி நீங்க பாத்திருக்கீங்களா?
பெத்த புள்ளை, வளர்க்க வேண்டிய புள்ளை ரெண்டு பேரையும் தள்ளி நின்னே பாக்க வேண்டிய கொடுமை யாருக்கும் வரக் கூடாதுன்னு ரொம்ப ஃபீல் பண்ணாங்க. யோசிச்சு பாத்தா, அவிங்க சொன்னது எல்லாம் உண்மைதான்னு தோணுது!
இப்பிடியே எத்தனை நாள், எல்லார் மேலியும் வெறுப்பை காட்டிகிட்டு இருக்க முடியும்? அதுனால, யாருக்கு என்ன பலன்?
அதான் உங்ககிட்ட பேசுறேன். இப்ப எனக்கும் நிம்மதியா இருக்கு. உங்க அப்பா அம்மாவும் திருந்திட்டாங்க. உங்களுக்கும், நீங்க இழந்த அன்பு, பாசம்லாம் இனி கிடைக்கும். எல்லாரும் சந்தோஷமா இருக்கிறதைத் தவிர வேற என்ன எனக்கு வேணும்? என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
எனக்கு, என் அக்காவிற்கும் கூட மனம் கொஞ்சம் நெகிழ்ந்திருந்தது. அதே சமயம் உள்ளுக்குள் கோபமும் இருந்தது. செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு, இப்ப மன்னிப்பு கேட்டா ஆச்சா? அது மன்னிப்பு கேட்ட உடனே கொடுத்துடக் கூடிய தப்பா? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தது.
அதே சமயம், இந்த நிகழ்ச்சி தாத்தாவிற்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுத்திருக்கிறது என்ற உண்மையும் புரிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களுக்குள்ளேயே, இனி வழக்கம் போல, ஒரு இயல்பான குடும்பமாக நாங்கள் இருக்க முடியும், எல்லா மகிழ்ச்சிகளும் எங்களுக்கும் கிடைக்கும் என்ற செய்தி ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.
என்ன இருந்தாலும் பெண் என்பதோடு மட்டுமல்லாமல், இயல்பிலேயே கருணை கொண்டவள் என்பதால், அக்காவும் மிக இளகி இருக்கிறாள், உள்ளுக்குள் இது நல்லது என்ற மனநிலையில் இருக்கிறாள் என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது.
அப்பொதுதான் லாவண்யா பேசத் தொடங்கினாள்!
Posts: 8,657
Threads: 201
Likes Received: 3,311 in 1,858 posts
Likes Given: 6,338
Joined: Nov 2018
Reputation:
25
@whiteburst mudinjavera images add panratha thavirkavum...erkanave website romba slow #DB load athigam... #resource um athigamagitte iruku...
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
70.
இது உங்க குடும்ப விஷயம். நான் தலையிடக் கூடாது. இருந்தாலும், என் ஒபீனியனைச் சொல்லலாமா தாத்தா?
என்னமா இப்படி கேக்குற? நீயும் எனக்கு பேத்தி மாதிரிதாண்டா! அதுனாலதான் உன் முன்னாடி இந்த விஷயத்தை பேசுறேன்.
இல்ல, இவளுக்கும், மதனுக்கும் திரும்ப, அவிங்க அப்பா அம்மாவோட பாசம் கிடைக்குதுங்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, நான் விரும்புறதெல்லாம், அது உண்மையா இருக்கனும்னுதான், இன்னொரு பெரிய ஏமாற்றம் அவங்களுக்கு கிடைச்சிடக் கூடாதுன்னுதான் பயப்படுறேன்.
அக்கா அவளையே ஆழமாகப் பார்த்தாள். தாத்தாவோ குழப்பமாகப் பார்த்தார். நான் அமைதியாக வேடிக்கை பார்த்தேன், வழக்கம் போல!
நீ என்னம்மா சொல்ற? எனக்குப் புரியலை.
தாத்தா, என்னைத் தப்பா நினைச்சிக்காதீங்க. நான் இப்பவும் யாரையும் குற்றம் சாட்டலை. எனக்குள்ள சில சந்தேகங்கள். அதுனாலத்தான் இப்படிச் சொன்னேன்.
சரிம்மா, உனக்கு என்ன சந்தேகம்னு சொல்லு. எங்களுக்கும் புரியுமில்ல?!!
ஏன் தாத்தா, அவிங்க சொன்னது உங்களுக்கு கண்டிப்பா சந்தோஷமா இருந்திருக்கும். அவிங்க, இதை மட்டும்தான் சொன்னாங்களா? இல்ல வேறெதாவது சொன்னாங்களா?
வேற! என்று யோசித்தவர், மெயின் விஷயம் இதுதான்மா. அப்புறம், தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும், இப்பருந்து பாக்க ஆரம்பிச்சா, காலேஜ் முடிச்சிட்டு பண்ணிடலாம். இதுவரை நீங்க எங்களுக்கு செஞ்சதுக்காக, நீங்களே உங்களுக்குப் பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை பாருங்க, என்ன வேலை செய்யனும்னு மட்டும் எங்களுக்குச் சொல்லுங்கன்னாங்க! அதுல எதுவும் தப்பு இருக்குறதா எனக்கு தெரியலையேம்மா…
வேற ஏதாச்சும்?
வேற….. என்று யோசித்தவர், ஆங்… நம்ம மதனை, அவன் ஆசைப்பட்ட படி, IIM ல MBA படிக்க வைக்கனும். ஹைதராபாத்ல, IIM க்கு பெஸ்ட் ட்ரெய்னிங் இன்ஸ்டியூட் இருக்கு. அங்க இருக்குற IIT ல சேத்துட்டு, அப்படியே அந்த ட்ரெயினிங் இன்ஸ்டியூட்ல சேக்கலாம், அங்க வேலை செய்யுறவரை எனக்கு நல்லா தெரியும். நான் அவர்கிட்ட உடனே பேசுறேன்ன்னு சூப்பர் ஐடியா சொன்னாரும்மா? இது ரெண்டுதான் சொன்னாரு!
அடுத்து லாவண்யா கேட்ட கேள்வி, எல்லாரையும் அதிர வைத்தது!
மதன் IIM ல படிக்க ஆசைப்பட்டது, அவிங்களுக்கு எப்படி தெரியும்?
தாத்தாவும் யோசிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் என் அக்கா கோபமாக கேட்டாள்.
இப்ப உன் பிரச்சினை என்னடி? என்னத்தை எங்ககிட்ட இருந்து மறைக்கிற?
அக்காவின் கேள்வியில் எனக்கே வருத்தமாயிருந்தது. என் அக்கா, லாவண்யாவை சந்தேகப்படுகிறாளா? எனக்கே, அவள் கேள்வியில் ஒரு லாஜிக் இருப்பது தெரியும் போது, அக்கா எப்படி அவளைச் சந்தேகப்படுகின்றாள்?!
அடிபட்ட பார்வையுடன், சற்றே கலங்கிய விழிகளுடன், லாவண்யாவும் கேட்டாள்.
நான், உனக்கு கெட்டது நினைப்பேனாடி?
லூசு மாதிரி பேசாத! எனக்கு உன்னைப் பத்தி தெரியும். நீ கண்டிப்பா, எனக்கோ, இல்லை வேற யாருக்குமோ கூட கெட்டது நினைக்க மாட்ட! ஆனா, நீ ஏதையோ மனசுல வெச்சுகிட்டு குழம்புற. எங்களுக்குத் தெரியாத ஏதோ ஒரு விஷயம் உனக்கு தெரிஞ்சிருக்கு. அதுனாலத்தான் இப்படி பேசுற. அது என்னான்னு தெளிவாச் சொன்னாதான், தாத்தாவுக்கும், மதனுக்கும் முழுசா புரியும். ஏன்னா, அவிங்களுக்கு உன்னை ஒன்றரை வருஷமாத்தான் தெரியும். அதான் கேக்குறேன், நீ ஏதாச்சும் மறைக்கிறியா?
லாவண்யா, ஆமாம் என்று தலையாட்டினாள்.
எனக்கு மட்டுமல்ல தாத்தாவிற்கும் அவர்கள் நட்பு, ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, புரிதல் எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. பெற்ற அம்மா அப்பாவைப் பற்றி அவள் குற்றம் சொல்லுகிறாள். ஆனால், இவளோ, நீ ஏதையோ மறைக்கிற என்று சரியாகக் கண்டு பிடிக்கிறாள்!
என்னன்னு சொல்லு.
வந்து, மதன் ரெண்டு நாள் முன்னாடி, நான் +2 முடிச்சு என்ன செய்யப் போறேன், IIM ல சேரப்போறேன்னு சொன்னது எல்லாத்தையும், உங்க அம்மா மறைஞ்சு நின்னு கேட்டுகிட்டு இருந்தாங்க.
அது எல்லாத்துக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும், தாத்தாதான் கேள்வி கேட்டார்.
சரிம்மா, யதேச்சையாக் கூட கேட்டிருக்கலாம். கேட்டதுக்கு அப்புறமும் கூட மதனோட ஆசையை நிறைவேத்த தானே இப்பியும் ஸ்டெப்ஸ் எடுக்குறாங்க?! இதுல என்ன தப்பு?
மேலோட்டமா பாத்தா சரிதான் தாத்தா. சரி நான் சில கேள்விகள் கேக்குறேன். அதுக்கு பதில் சொல்லுங்க.
அன்பு, பாசம்ங்கிறது என்ன அக்ரிமெண்ட்டா? திடீர்ன்னு, இன்ன தேதியில இருந்து இது செல்லும், இது செல்லாதுன்னு பேசுறதுக்கு? மதனுக்கும், பெத்த பொண்ணுக்கும் தப்பு பண்ணதை ஒத்துக்குறவிங்க, அந்தத் தப்பை மறக்கடிக்க என்ன செஞ்சிருக்காங்க? ஏன் இது நாள் வரைக்கும், இது சம்பந்தம்மா இவிங்ககிட்ட பேசவே இல்லை.
ஏம்மா, இவிங்க சின்னப் புள்ளைங்கம்மா! இவிங்ககிட்ட என்னத்தைப் பேசச் சொல்லுற?
தாத்தா, மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க. இவிங்களா சின்னவங்க? வயசுல வேணா சின்னவங்களா இருக்கலாம். மெச்சூரிட்டில, சின்னவிங்களா?
என் ஃபிரண்டு மேல, எனக்கு இவ்ளோ அன்பு வந்ததே, பெத்த அப்பா, அம்மா தப்பு பண்ணாங்கன்னு தெரிஞ்சவுடனே அவிங்ககிட்ட சண்டை போட்டு, திருத்த முயற்சி பண்ணி, கடைசில எதுக்கும் அவிங்க கேட்கலைன்னு தெரிஞ்ச பின்னாடி, அப்படிப்பட்ட உறவே வேணாம்னு தள்ளி நிக்குறா பாத்தீங்களா, அப்ப இருந்துதான்.
அவ ஒண்ணும் இந்த வீட்டுக்கு வந்த பின்னாடி, ஏன் என்கிட்ட சொல்லலைன்னு சண்டை போடலை.
இங்க வர்றதுக்கு முன்னாடியே, நீங்க பண்ணது தப்பு, அதுக்கு பரிகாரமா, அந்த காசு பணம் வேணாம்னு சொல்லிட்டு, மதனை மட்டும் நல்ல படியா வளர்த்துக் கொடுக்கனும், அதான் நியாயம்னு அவிங்க அம்மாகிட்டயே சண்டைக்குப் போயிருக்கா. அப்படிப்பட்டவ இவ! இவளா, சின்னப் பொண்ணு?
என் அக்கா, அவள் அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டது, இந்த வீட்டுக்கும் வருவதற்க்கு முன்பிருந்தே என்ற விஷயம் எனக்கு புதிதாக இருந்தது. அதே சமயம், அவள் மேலான நம்பிக்கை அதிகரிக்கவும் செய்தது. என் யோசனைகளை, அவளுடைய பேச்சு கலைத்தது.
மதன் இடத்துல வேற யாரு இருந்திருந்தாலும், இதே மாதிரி நடந்திருப்பாங்களான்னு எனக்கு தெரியலை. அவன் வயசுக்கு, அவன் ஃபேஸ் பண்ண அதிர்ச்சிகளும் சரி, அதை அவன் எதிர் கொண்ட விதமும் சரி, ஒண்ணும் சாதாரணமானது இல்ல. அப்படிப்பட்ட மதன், தான் அடுத்து MBA எங்க படிக்கனும், எப்படி படிக்கனும், ஏன் படிக்கனும்னு இப்பவே இவ்ளோ தெளிவா இருக்குற மதன் மட்டுன் சின்னப் பையனா என்ன?
சரி இதைப் பத்தி பேச வேணாம். ஆனா, அன்பு காட்டுற மாதிரி ஒரு இடத்துல கூட நடந்துக்கலியே?! முத வருஷம், மதன் அம்மாவுக்கு நீங்க திதி கொடுக்க நினைச்சப்ப கூட, கட்டின கணவரா, அவரு ஒண்ணும் செய்யாமத்தானே இருந்தாரு?! இன்னிக்கு இவ்ளோ முக்கியமான விஷயத்தை நீங்க பேசுறப்ப கூட, அவிங்க உங்க கூட இல்லியே?
எனக்கு என்னமோ, இவிங்க சின்னப்பசங்கன்னு நினைச்சு இவிங்ககிட்ட பேசாம இருக்கலை. அவிங்க காரணமாத்தான், உங்ககிட்ட பேசியிருப்பாங்கன்னு தோணுது!
அப்படி என்னம்மா காரணம்?
அவள் சொன்ன பதில் எல்லாரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அது,
ஏன்னா உங்க கிட்டதான், பாசம்னு சொல்லி ஏமாத்த முடியும். தவிர, நீங்கதான், உங்களுக்கு அப்புறம் இவிங்களுக்கு என்ன வழின்னு ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டு இருக்குறீங்க! ஒருவேளை அவிங்க எமாத்தனும்னு நினைச்சா, உங்களைத்தான், அவிங்களால ஈசியா ஏமாத்த முடியும்! அதான்!
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
71.
லாவண்யாவின் கேள்விகளில் இருந்த தர்க்கம், எல்லாரையும் யோசிக்க வைத்தது. சிறிது நேர யோசனைக்குப் பின், தாத்தாதான் சொன்னார்.
நீ சொல்றது சரிதான்மா! நானே கொஞ்சம் ஏமாந்துட்டேன். ச்சே! அவிங்களைக் கூப்பிட்டு, கட் அண்ட் ரைட்டா, இது ஒத்து வராதுன்னு சொல்லிடுறேன்!
அதற்கும் பதில், லாவண்யாவே சொன்னாள்.
அவசரப்படாதீங்க தாத்தா! நான் சொன்னது எல்லாமே என் டவுட்டுதான். எதுவும் கன்ஃபர்ம் கிடையாது. அப்படியிருக்கிறப்ப, சந்தேகத்தின் பலனை அவிங்களுக்கும் கொடுக்கனுமில்லையா? ஒரு வேளை அவிங்க உண்மையாலுமே மனசு மாறியிருந்தா?
தாத்தா சிரித்துக் கொண்டே சொன்னார். சரி, நான் என்ன பண்ணனும்ன்னும் நீயே சொல்லும்மா!
இதையேச் சொல்லுங்க தாத்தா. முதல்ல, பையன்கிட்டயும், பொண்ணுகிட்டயும் பாசம் காட்டச் சொல்லுங்க. அவங்க, அப்பா, அம்மாவா எத்துக்குற வரைக்கும் பொறுமையா நடந்துக்கச் சொல்லுங்க. அவிங்க ஏத்துகிட்டா, நீங்க ஏத்துக்குறதுல எந்தப் பிரச்சினையும் இல்லைன்னு சொல்லுங்க என்று சொல்லி நிறுத்தியவள்… பின் தயங்கிச் சொன்னாள்.
அதுனால, இப்போதைக்கு மதன் இங்கியேதான் படிப்பான். ஹைதராபாத்லாம் போகலைன்னு சொல்லுங்க என்றாள்.
தாத்தா சரி என்று சொன்னார். ஆனால், அக்காவோ, அவளையே யோசனையாகப் பார்த்தாள்.
என்னடி அப்படி பாக்குற? நான் சொன்னது தப்பா?
நீ சொன்னது எல்லாம் சரிதான். ஆனா, நீ இன்னும் முழுசா உன் மனசுல இருந்ததைச் சொல்லலைன்னு தோணுது!
ஏய்… அப்படில்லாம் இல்லை என்று பதறினாள் லாவண்யா!
உண்மையைச் சொல்லு, அவிங்க இது மாதிரி ஒரு ப்ளானோட தாத்தாவை அப்ரோச் பண்ணதுக்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கும்னு நீ நம்புற! அப்படித்தானே? அது என்னான்னு சொல்லு!
இ… இல்லடி… அது வ… வந்து.
சரி இப்பச் சொல்ல வேணாம். ஒருவேளை, நீ சொன்னது மாதிரி, தாத்தா நடந்ததுக்கப்புறம், அவிங்க ஏமாத்ததான் நினைச்சாங்கன்னு தெரிஞ்சா, அதுக்கப்புறம் நீ சொல்லு! ஓகே?!
ஓகேடி!
அப்ப, நான் நினைச்ச மாதிரியே, உண்மையாலுமே, முழுசா உன் மனசுல இருந்ததைச் சொல்லலை, அப்படித்தானே?!
அக்காவின் கிடுக்கிப்புடி கேள்வியில் லாவண்யா திணறினாள்…
அக்காவோ புன்னகையுடன் சொன்னாள். சரி, நான் நினைச்சது சரியான்னு தெரிஞ்சிக்கதான் அப்படி கேட்டேன். நீ இப்ப எதுவும் சொல்ல வேண்டாம். அப்புறமாச் சொல்லு.
அவர்களுக்கிடையேயான புரிதல், எனக்கும், தாத்தாவுக்கும் நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
இப்படி ஒரு நட்பிற்காக, அக்கா ஆரம்பத்தில் இருந்து, அவள் துணை நிற்பது, மிகவும் சரியே என்று தோன்றியது.
திட்டப்படியே, அவர்கள் ஊரில் இருந்து வந்தவுடன், தாத்தா கொஞ்சம் பிடி கொடுக்காமல் இருந்து, ஒரு 5 நாட்கள் கழித்து, அவர்களிடம் லாவண்யா சொன்ன படியே சொன்னார்.
நீங்க, அவிங்ககிட்ட அன்பா முதல்ல நடந்துக்கோங்க என்று சொன்ன போது கூட லேசாக கடுப்படைந்தாலும், அமைதியாக இருந்தவர்கள், மதன் இங்கதான் படிப்பான், ஹைதராபாத் போக மாட்டான் என்று சொன்னவுடன் வெளிப்படையாக கோபமடைந்தார்கள்.
கோபத்துடன், நீங்கதான் அவிங்களைக் கெடுக்குறீங்க. உங்க காலத்துக்கப்புறம் அவிங்களுக்கு யாரும் துணை வேணாமா? இப்படியே இருங்க என்று கத்தி விட்டுச் சென்றனர்.
முன்பாயிருந்திருந்தால், தாத்தா அதிர்ச்சியடைந்திருப்பாரோ என்னமோ, லாவண்யாவின் பேச்சிலேயே ஓரளவு சுதாரித்திருந்தவர், இவர்களின் கோபத்தால் அதிர்ச்சியடையவில்லை.
நான் கூட நீங்க திருந்தியிருப்பீங்களோன்னு நினைச்சேன். ஆனா, அப்படியில்லைன்னு என்கிட்ட காமிச்சதுக்காக தேங்க்ஸ் என்று புன்னகையுடன் அவர்களைப் பார்த்துச் சொன்னார். தங்கள் குட்டு வெளிப்பட்ட அதிர்ச்சியில், அவர்கள் கோவத்துடன் அந்த இடத்தை விட்டுச் சென்றனர்.
தாத்தா வீட்டுக்கு வந்து எல்லாவற்றையும் சொன்னார். சொல்லி விட்டு, லாவண்யாவிடம்,
தாங்க்ஸ் மா! நீ மட்டும் சொல்லாட்டி, நாங்க ஏமாந்துதான் போயிருப்போம். உனக்குதான் நன்றிக்கடன் பட்டிருக்கேன் என்றார் நெகிழ்ச்சியுடன்.
என்ன தாத்தா பெரிய வார்த்தையெல்லாம் பேசிகிட்டு என்று அவரை ஆறுதல் படுத்தினாள் லாவண்யா!
அக்கா அவளையே பார்த்தாள். சரி, இப்பச் சொல்லு, நீ சொல்லாம விட்ட கதையை? அவிங்க ஏன் இப்படி நடந்துகிட்டாங்க?
ஒரு பெருமூச்சை வெளியிட்ட லாவண்யா அமைதியாகச் சொன்னாள். மதன் தான் காரணம்!
எனக்கே அதிர்ச்சியாய் இருந்தது!
நானா?
ஆமா! மதனுக்கு 18 வயசு முடியப் போகுது. இனி ஆஃபிஸ் வரப் போறேன்னு சொன்னது அவங்களுக்குப் பயத்தை கொடுத்திருக்கும். மதனுக்கு, அவிங்க ரெண்டு பேர் மேலியும் பயங்கரக் கோபம்னு எல்லாருக்கும் தெரியும்.
அப்படியிருக்கிறப்ப. ஆஃபிஸ் முழுக்க அவன் கண்ட்ரோலுக்கு போயிட்டா, அப்புறம் அவிங்களால எதையும் அனுபவிக்க முடியாதில்ல? அதான்!
அவிங்க ப்ளான் ஒர்க் அவுட் ஆகியிருந்தா, மதனால டெய்லி ஆஃபிஸ் வர முடியாது. இன்னும் 6 வருஷத்துக்கு அவிங்க கண்ட்ரோல். அதுக்குள்ள எல்லார்கிட்டயும் கொஞ்சம் நல்ல பேரு எடுத்துட்டா, அப்புறம் ஆயுசுக்கும் பிரச்சினையில்லைல்ல? அதான்!
இது என் டவுட்டாத்தான் இருந்தது. முழுக்கத் தெரியாம சொல்ல வேணாமேன்னு நினைச்சேன். ப்ச்.. என் சந்தேகம் உண்மையாகிடுச்சி!
அதுக்கு ஏம்மா இவ்ளோ ஃபீல் பண்ற? விடும்மா!
இல்ல தாத்தா, எனக்குதான் அப்பா அம்மா இருந்தும் பாசம் கிடக்கலை. அவிங்க மேல டவுட்டா இருந்தாலும், ஒரு வேளை உண்மையாலுமே திருந்தியிருந்தா, இனி உங்களுக்கு அந்தப் பாசம் கிடைக்குமில்லன்னு ஆசையா இருந்தேன். அது நடக்கலைன்னு வருத்தம் அதான்!
சரி விடுடி. தப்பு பண்ணவிங்க கூட ஃபீல் பண்ணலை. நீ என்னமோ இவ்ளோ ஃபீல் பண்ணிகிட்டு இருக்க? அது சரி, எப்ப இருந்துடி இவ்ளோ புத்திசாலித்தனமா யோசிக்க ஆரம்பிச்ச? உண்மையாலுமே புத்திசாலி ஆயிட்டியா என்ன என்று கிண்டல் செய்தாள் அக்கா!
ஏய், பேசிக்காவே நான் புத்திசாலிதாண்டி! உன் கூட சேந்ததுக்கப்புறம்தான், கொஞ்சம் மழுங்கிடுச்சி என்று பதிலுக்கு கிண்டல் செய்தாலும், பின் சீரியசாகச் சொன்னாள்.
நீங்க பிரச்சினைக்கு உள்ள இருந்து யோசிச்சீங்கடி! நான் வெளிய இருந்து யோசிச்சேன். அவ்ளோதான் வித்தியாசம். எனக்கு எத்தனையோ குழப்பமான சமயத்துல, நீ கரெக்ட்டான ஐடியா கொடுத்ததில்லையா? அது மாதிரிதான் என்றாள்!
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
72.
லாவண்யா பேச்சு, அவள் மேலிருந்த அன்பு, மதிப்பு, மரியாதை எல்லாவ்ற்றையும் அனைவரிடத்திலும் கூட்டியிருந்தது.
தாத்தாதான் கேட்டார், எப்பிடியும் எங்களுக்கு இந்த விஷயம் தோணலைல்ல?! அதுவும், நீ, உன் ஃபிரண்டைப் பத்தி தெரிஞ்சி வெச்சிருக்குறது ஒன்னும் பெரிய விஷயமே இல்லை. உங்களுக்குள்ள இத்தனை வருஷப் பழக்கம் இருந்திருக்கு.
ஆனா, என்னைப் பத்தியும், மதனைப் பத்தியும் கூட சரியா தெரிஞ்சி வெச்சிருக்கியே. அது பெரிய விஷயம்தாம்மா என்று பாராட்டினார்.
அப்படில்லாம் இல்ல தாத்தா. யாருன்னு தெரியாமியே என் மேல பாசம் காமிச்ச ஆளு நீங்க. எனக்காக மதன் கிட்ட கூட சண்டைக்கு போனிங்க. அவ்ளோ நல்லவரு தாத்தா நீங்க. அதுனால உங்களைப் புரிஞ்சிக்கிறது ஈசி தாத்தா என்று சிரித்தாள் லாவண்யா!
அக்காதான் சீண்டினாள். சரி, தாத்தாவை ஈசியா புரிஞ்சிக்கலாம். மதனை எப்படி புரிஞ்சிகிட்ட? ஆரம்பத்துல என்கிட்ட எவ்ளோ கோபமா பேசியிருக்கான் தெரியுமா? ஆனா, நீ அவன்கிட்ட அதிகம் பேசுனதே இல்லையே? அப்புறம் எப்படி….?
லாவண்யா படு அலட்சியாமாய் சொன்னாள்.
யாரு அவன் கோபப்படுவானா? அதெல்லாம் சும்மா! தாத்தாவைப் புரிஞ்சிக்கிறது கூட கொஞ்சம் சிரமமா இருந்தது. மதன்லாம் ஒண்ணுமே இல்லை. அவன் கோபம் வர்ற மாதிரி நடிப்பான். அவ்ளோதான். ஆனா, உள்ளுக்குள்ள கோவமே இருக்காது.
உங்க எல்லார் மேலியும் அவனுக்கு பாசம் அதிகம். ஆனா வெளிக்காட்டிக்க மாட்டான். இவன் கோபம் எல்லாம், மத்தவிங்க தன்னை சாதாரணமா நினைச்சிடக் கூடாது, யாரும் ஏமாத்த முயற்சி பண்ணக் கூடாதுன்னு போட்டுகிட்ட முகமூடி என்றாள்.
அவளுடைய கணிப்பு அனைவருக்கும் வியப்பாய் இருந்தது. இவள் இந்தளவு கணிப்பாளா என்று!
எனக்கோ, அவள் என்னைச் சரியாகக் கணித்திருந்தது பெரிய வியப்பாய் இருந்தாலும், வழக்கம் போல, எனது முகமூடியாக, கோபமாக அவளை முறைத்தேன்.
வேதாளம் முருங்கைமரம் ஏறுது. நான் எஸ்கேப்பா என்று அவள், என் அக்காவை இழுத்துக் கொண்டு ஓடினாள்.
அவளுடைய செய்கை, அக்கறை, அன்பு எல்லாம் என் மனதில் இன்னும் பல மாற்றங்களை ஏற்படுத்தின. லாவண்யா மேல் இருந்த அந்த இனம் புரியாத உணர்வு பெருகி, காதலாக மாறி நின்றது. எந்தத் தருணத்தில், எப்படி மாறியது என்று சொல்ல முடியாவிட்டாலும், அது மாறியதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
நான் செய்த ஒரே தவறு, வெண்ணை திரண்டு வரும் முன், பானையை உடைத்தது போல், அவளுக்குள் நான் முழுதும் நிரம்பும் முன், என் காதலை, அதுவும் சின்ன வயதில் சொன்னதுதான். நான் இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம்.
எந்த முன் யோசனையும் இன்றி, ஜோடனையும் இன்றி, மிக கேசுவலாக நான் என் காதலைச் சொன்னேன்.
நான், அவளுடைய கல்லூரியில், இஞ்சினியரிங் சேருவதற்க்கு முதல் நாள், கிளம்பும் சமயத்தில், வீட்டுத் தோட்டத்தில் இருந்த என்னிடம், அவள் வந்து வாழ்த்துக்கள், நாளைக்கு ஃபர்ஸ்ட் டே! என்றாள்.
இதற்கு இடையிலும், நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளாவிடினும், அவள் என் கோபத்தை எப்பொழுதும் பொருட்படுத்தியதே இல்லை!
அவளையேப் பார்த்தவன், இப்ப எனக்கு 18 வயசு ஆகிடுச்சு! இனி நான் சொத்து விஷயத்துலியோ, வேறெந்த விஷயத்துலியும் டெசிஷன் எடுக்கலாமில்ல?
சம்பந்தமேயில்லாமல், இப்பொழுது நான் இதை சொல்லுவதைக் கேட்டு குழம்பிய அவள், ம்ம்ம் எடுக்கலாம். என்ன, இனி நான் வீட்டுக்கு வரக் கூடாதா என்று அலட்சியமாகக் கேட்டாள்.
அவளுக்குத் தெரியும், நான் அப்படிச் சொல்ல மாட்டேன் என்று!
அதெல்லாம் இல்லை. இது வேற விஷயம்.
வேற என்ன விஷயம்?
ஐ லவ் யூ!
வாட்…?
ஐ லவ் யூ?
அதிர்ச்சியில், பல நொடிகள் அமைதியாக இருந்தவள், பின் கோபமாக சிறிது நேரம் கண்டபடி திட்டினாள்.
பின், உன் வயசு என்ன, என் வயசு என்ன, நான் உன்னை விட ரெண்டு வயசு பெரியவ. இந்தச் சமூகம் என்ன நினைக்கும். உன் தாத்தா என்ன நினைப்பாரு? ஏன், உன் அப்பாவே, இதுக்குதான், டெய்லி என் வீட்டுக்கு வந்தியான்னு கேப்பாரு. தவிர, உனக்கு இப்பதான் 18.
இந்த வயசுல இந்த மாதிரில்லாம் தோணத்தான் செய்யும். இது வெறும் இன்ஃபாக்சுவேஷன் தான். அதுனால, இதை மறந்துட்டு, ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு. என்று அட்வைஸ் வேறு செய்தாள்.
அமைதியாக எல்லாவற்றையும் கேட்டவன், பின் அவள் கிளம்பும் போது சொன்னேன். எனக்கு வயசு வித்தியாசம்? எனக்கு அது பெரிய விஷயமா தெரியலை. தாத்தா, கண்டிப்பா, என் விருப்பத்துக்கு எதிர்ப்பு சொல்ல மாட்டாரு. அதுவும் நீ அப்படிங்கிறப்ப, வாய்ப்பேயில்லை. என் அம்மாவை ஏமாத்தி கல்யாணம் பண்ண, என் அப்பவோ, எனக்கு பெருசா எதுவும் செய்யாத இந்த சமூகமோ, என்ன சொல்லும்ங்கிற கவலை எனக்கு கிடையாது. எனக்கு வேண்டியது உன் விருப்பம் மட்டும்தான்.
உனக்கு வேணா, எதைப் பத்தியும், யாரைப் பத்தியும் கவலை இல்லாம இருக்கலாம். ஆனா, என்னால அப்டி இருக்க முடியாது. எனக்கு இந்த சமூகம் என்ன சொல்லும்ங்கிற கவலை இருக்கு. அதுனால, இனி என்கிட்ட இப்டி பேசாத! குட் பை!
அதன் பின், இரண்டு நாட்கள் அவள் என் வீட்டுக்கே வரவில்லை. அக்கா வற்புறுத்தியும், சாக்கு போக்கு சொல்லி தவிர்த்தாள்.
மூன்றாம் நாள், அவளைத் தனியாக சந்தித்த நான், வற்புறுத்தி காரில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.
என்னையும், அவளையும் ஒன்றாகப் பார்த்த என் அக்காவுக்கோ, பெருத்த ஆச்சரியம். தாத்தாவும் வீட்டிலில்லை.
பின் அக்காவிடம் சொன்னேன். உன் ஃபிரண்டு வீட்டுக்கு வராததுக்கு காரணம் நாந்தான். ஏன்னா, ரெண்டு நாள் முன்னாடி, நான் அவகிட்ட ல… லவ் ப்ரபோஸ் பண்ணேன். அதுனாலத்தான் வர மாட்டேங்கிறா என்றேன்.
என்னுடைய தடாலடிப் பேச்சில், இருவருமே வாய் பிளந்து நின்றனர். பின் லாவண்யாவிடம் திரும்பி,
இங்க பாரு, நான் உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணது நம்ம ரெண்டு பேரு சம்பந்தப்பட்ட விஷயம். என்னைப் பொறுத்த வரை, என் முடிவுல மாற்றம் இல்லை. அதை ஏத்துக்குறதும், ஏத்துக்காததும் உன் விருப்பம். நான் உன்னை ஏதாவது டிஸ்டர்ப் பண்ணேனா என்ன?
நான் லவ்வைச் சொன்னேன்னு, நீ, இவளோட ஃபிரண்ட்ஷிப்பை கட் பண்ணாத? ஓகே! என்று சொன்னவன், அக்காவை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றேன்.
அப்பொழுதும் என் நேர்மை அவளை பாதித்தது போலும். அக்கா வேறு அவளை நன்கு திட்டினாள். ஏண்டி என்கிட்ட சொல்லலை? இதுனாலத்தான் ரெண்டு நாளா அவாய்ட் பண்ணியா? ம்ம்?
சாரிடி! எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. என்னால, உங்களுக்குள்ள சண்டை வர்றதை நான் விரும்பலை. அதான்…
அதுக்காக, நீயா உன்னை பிரிச்சிக்குவியா என்று நன்கு திட்டினாள்… திட்டி முடித்த என் அக்காவோ, லாவண்யாவையே ஆழமாகப் பார்த்து சொன்னாள்…
லவ்வை சொன்னவனும், நீயும் நானும் பிரியக் கூடாதுன்னு ஃபீல் பண்ணிட்டு போறான். வேணாம்னு சொன்ன நீயும், நாங்க பிரிஞ்சிடக் கூடாதுன்னு ஃபீல் பண்ற! இப்படி பல விஷயங்கள்ல, நீங்க ரெண்டு பேரும் சரியான ஜோடிதாண்டி என்றாள்.
யதேச்சையாக இதைக் கேட்ட எனக்கும் அதிலிருந்த உண்மை மட்டுமல்ல, இன்னொன்றும் உறைத்தது. அது,
இன்னமும் அவள், எனக்கு பிடிக்கலைன்னு சொல்லவில்லை. சமூகம் என்ன சொல்லும்னு தான் பயப்படுறா என்ற உண்மைதான் அது!
Posts: 3,159
Threads: 0
Likes Received: 346 in 315 posts
Likes Given: 1,312
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 209
Threads: 0
Likes Received: 67 in 63 posts
Likes Given: 3
Joined: May 2019
Reputation:
3
•
Posts: 4
Threads: 0
Likes Received: 1 in 1 posts
Likes Given: 3
Joined: Jun 2019
Reputation:
0
Can't wait bro... Semma feel.. please update ASAP
•
Posts: 48
Threads: 0
Likes Received: 6 in 5 posts
Likes Given: 51
Joined: Jul 2019
Reputation:
0
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
12-10-2019, 08:25 AM
(This post was last modified: 12-10-2019, 08:30 AM by whiteburst. Edited 1 time in total. Edited 1 time in total.)
70.
அதன் பின், அவள் மீண்டும் எப்பொழுதும் போல் வர ஆரம்பித்தாள். ஆனால், அவள் என்னிடமோ, நான் அவளிடமோ எதுவும் பேசுவதில்லை. ஆனால், ஒருவரைப் பற்றி இன்னொருவர், இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள ஆரம்பித்தோம்.
என் மனதில் வந்த காதலைச் சொன்ன எனக்கு, அவள் மனதில் காதல் வந்திருக்குமா என்று யோசித்துப் பார்க்கத் தோணவில்லை. அவள் பிடிக்கவில்லை என்று சொல்லாவிட்டாலும், அவள் சொன்ன காரணங்கள் எனக்கு மொக்கையாக இருந்தாலும், அவள் மனதில் நான் இன்னும் முழுதாக வரவில்லை என்ற உண்மை எனக்கு உறைத்தது.
இப்போதைக்கு இதைப் பற்றி அதிகம் பேசாமல், எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது என்று எனக்குப் பட்டது. தவிர என்ன இருந்தாலும், என்னை வேண்டாம் என்று சொன்னது, எனது ஈகோவை கொஞ்சம் சீண்டியிருந்தது. நான் அறியாத ஒரு விஷயம் இருந்தது. அது,
இதுவரை, காதலைப் பற்றிய சிந்தனையே இல்லாதிருந்த லாவண்யாவிற்கு, என்னுடைய காதல் ஒரு அறிமுகத்தைக் கொடுத்தது. அவள் காதலை மறுத்தாலும், இவன் ஏன் ரெண்டு வயசு சின்னவனாப் போனான் என்ற எண்ணத்தை அவள் மனதில் ஏற்படுத்தியிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, எனக்கு கொடுத்த பதில் உண்மையாகவுமே சரிதானா என்ற குழப்பத்தையும் சலனத்தையும் அவள் மனதில் ஏற்படுத்தியிருந்ததுதான்.
மதனின் கெட்ட நேரம், வேறு யாராவதாக இருந்திருந்தால், லாவண்யா உடனே அவள் தன்னுடைய ஃபிரண்டிடம், மனம் விட்டுப் பேசியிருப்பாள். ஆனால், சொன்னது மதன் என்பதால், அவளால், தன் உயிர் தோழியுடனும் மனதை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
இந்தக் குழப்பங்களும், சலனங்களும், அவள் கண்களில் அலைபாய்தலை கொண்டு வந்தது. மதனும், லாவண்யாவும் அவர்களையறியாமல், மற்றவரை ஆராயத் தொடங்கினர். கூர்ந்து கவனிக்கத் தொடங்கினர். சமயங்களில் ஒருவர் செயலை இன்னொருவர் ரசிக்கவும் தொடங்கினர். ஆனால் இவை எல்லாவற்றையும், இந்த இருவர் மீதும் ஆழமான அன்பை வைத்திருக்கும், அந்த மூன்றாவது ஜீவன் மட்டும் தொடர்ந்து கவனித்துக் கொண்டே வந்தது.
மாதங்கள் இப்படியே ஓடின. இடையில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. மதன் கல்லூரியில் சேர்ந்தான். சொன்ன படி நிறுவனத்தில் தாத்தாவிற்கு உதவி செய்ய ஆரம்பித்தான். சமயங்களில், அவனுடைய புத்திசாலித்தனத்தை அவன் இல்லாத சமயத்தில் தாத்தா சிலாகித்து பேசும் போது, லாவண்யா, ஏனோ தானே சாதித்தது போல் பெருமிதம் கொள்வாள்.
மதன் கல்லூரியில் சேர்ந்து முதல் வருடம் முடியப் போகிறது. கல்லூரியில் அவன் எந்த இடத்திலும் அவனது பணத்தைக் காட்டியதில்லை. அவனுடைய படிப்பு, விளையாட்டில் திறமை, தெளிவான சிந்தனை போன்றவற்றால் அதற்குள்ளாகவே, ஆசிரியர்களிடத்திலும், மாணவர்களிடத்திலும், பெரிய பெயரை வாங்கியிருந்தான். அது அவனுக்கென்று பல பெண் ரசிகைகளை உருவாக்கியிருந்தது. அவனுடைய முதிர்ச்சியான பேச்சும், அப்ரோச்சும், வாட்ட சாட்டமான ஆத்லடிக் உடம்பும், அவன் அக்காவின் வகுப்பில் கூட, சில பெண் ரசிகைகளை உருவாக்கியிருந்தது.
பெண்களை அதிகம் பிடிக்காத அவனுக்கு, பெண்கள் வலிய வந்து பேசும் போது, அவர்களிடம் வழியாமல், விஷயத்திற்காக மட்டும் பேசும், அவன் பழக்க வழக்கம் வேறு, இன்னும் அவனுடைய புகழை கூட்டியிருந்தது.
மதனின் அக்காவின் நண்பர்கள் சிலருக்கு மட்டும், அவளுடைய தம்பி மதன் என்பது தெரியும். அதனால் அவளிடம் வேண்டுமென்றே சிலர், உன் தம்பியை நான் லவ் பண்ணலாம்னு இருக்கேன் என்பார்கள். லாவண்யாவைச் சீண்டுவதற்காகவே, அவன் வயசுல ரெண்டு வயசு சின்னவனாச்சே பரவாயில்லையா என்று அவனது அக்காவும் வம்பு வளர்ப்பாள்.
மூணு வயசு வித்தியாசம் வரனுமே? அவன் 1st இயர் தானே?
1st இயர்தான். ஆனா, அவன் ஸ்கூல் சேந்ததே கொஞ்சம் லேட்டு. அதுனால ரெண்டு வயசுதான் சின்னவன்.
அவன் 5 வயசு சின்னவன்னாலும் கவலை இல்லை. எங்களுக்கு ஓகே! தவிர ஆளு அப்படி ஒண்ணும் சின்னப் பையன் மாதிரில்லாம் இல்லை!
ஏய், இந்த சொசைட்டி என்ன சொல்லும்னு கவலை இல்லையா உங்களுக்கு? அக்கா வேண்டுமென்றே சீண்டினாள்.
அது என்ன கருமத்தையோ சொல்லிட்டு போகுது! அது எதுக்கு எங்களுக்கு? நீ பேசிப் பாரேன், உன் தம்பிகிட்ட!
சனியனுங்களா, தம்பி மூலமா அக்காவுக்கு லெட்டர் கொடுத்த கதையைக் கேட்டிருக்கேன். இந்த உலகத்துலியே, அக்கா மூலமா, தம்பிக்கு லவ் ப்ரபோஸ் பண்ற பொண்ணுங்க நீங்கதாண்டி! அதுவும் கூட்டமா வேற வந்து சொல்லுறீங்க. வெக்கமே இல்லீயா உங்களுக்கு?
ஆம்பிளைகிட்டதாண்டி பொண்ணுங்க வெக்கப்படனும். நீ எதுக்குடி பொண்ணுகிட்டயே வெக்கப்படச் சொல்லுற? அவளா நீயி?
ஏய் ச்சீ! என்னைக் கட்டிக்கிறவரைத்தான், என் தம்பி மாமான்னு கூப்பிடனும். நீங்க என்னான்னா, என்னையே, என் தம்பிக்கு மாமாவாக்குறீங்க?
ஏய் ஓவர் சீன் போடாத? எங்களுக்காக உன் தம்பிகிட்ட பேசப் போறியா இல்லையா?
ஏய் போங்கடி! என்னதான், நான், என் தம்பிகிட்ட அதிகம் பேச மாட்டேன்னாலும், தெரிஞ்சே அவன் வாழ்க்கையை நான் கெடுக்க மாட்டேன். உங்கள்ல ஒருத்தியை என் தம்பிக்கு கட்டி வெச்சு, அவன் வாழ்க்கையை நான் நாசமாக்கனுமா? அதுக்கு அவனை காலத்துக்கும் பிரம்மச்சாரியாவே இருக்கச் சொல்லிடுவேன்…
ஏய்… ஓவரா பேசாதடி! எங்கள்ல ஒருத்தர் கூடவா உன் தம்பிக்கு மேட்ச் இல்லை. சும்மா ரொம்பத்தான்…
ஏய், அப்படி நம்ம கிளாஸ்ல இருந்துதான் ஒருத்தரை கட்டி வெக்கனும்னா…… என்று சொன்னவள் ஓரக்கண்ணால் லாவண்யாவைப் பார்த்தாள்.
இது வரை தன் தோழிகள் மதனைப் பற்றி சொல்லியதால் பொறாமை கொண்டிருந்த, அதற்கு பதிலளித்த அவன் அக்காவின் பேச்சுக்களால் கோபம் கொண்டிருந்த லாவண்யா, இப்போது அவளது சீண்டல் பார்வையில் படபடத்துப் போனாள்.
அவளைச் அதிகம் சீண்ட விரும்பாதவள், என் தம்பி யாரையாவது லவ் பண்ணி, அந்தப் பொண்ணும் திரும்ப லவ் பண்ணா, எனக்கு வயசு எப்படி இருந்தாலும் பிரச்சினை இல்லைப்பா என்று அதற்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.
அதன் பின் சில நாட்கள் கழித்து, லாவண்யாவிற்கு வேறொரு பிரச்சினை வந்தது. அது, அவளுடைய வகுப்புத் தோழன் விஜய், லாவண்யாவிடம் ப்ரபோஸ் பண்ணியதுதான். வெறும் ப்ரபோஸ் அல்ல அது. தன்னை கண்டிப்பாக திரும்பி லவ் பண்ணியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதுதான், அவளுடைய பிரச்சினை.
ஏற்கனவே, அவன் தொடர்ந்து ஃபாலோ செய்வதும், அவளிடம் வழிவதும் என்று இருக்கும் போதே, அவன் எண்ணம் லாவண்யாவிற்கும், மதனின் அக்காவிற்கும் நன்கு தெரிந்தது. அதனாலேயே கொஞ்ச நாட்களாக அவனை அவாய்ட் செய்து வந்தாள் லாவண்யா.
அவனாக புரிந்து விலகிக் கொள்வான் என்று நினைக்கையில், திடீரென வந்து லவ்வைச் சொன்னதும், திரும்ப லவ் பண்ண வேண்டும் என்றதும் அவளுக்கு கடுப்பானது.
அவனை மீண்டும் அவாய்ட் செய்கையில், இரண்டு நாட்கள் கழித்து, அவன் நண்பன் ரமேஷூடன் வந்தவன், ஒழுங்கா லவ் பண்ணு, இல்லை ஆசிட் அடிக்கவும் தயங்க மாட்டேன் என்று மிரட்டி விட்டு சென்றான்.
அதில் மிகவும் பயந்து போனாள் லாவண்யா! அதை அப்படியே மதனிடம், அவனுடைய அக்கா, லாவண்யா சொல்லக்கூடாது என்று சொல்லியும் கேட்காமல், அவள் இல்லாத போது சொல்லிவிட்டாள்.
இதுக்கு எதுக்கு பயப்படுறா அவ? அவன் வீடு தெரியுமில்ல? நேரா, அவிங்க அம்மாகிட்ட போயி, உங்க புள்ளை இப்படி சொல்றாரு ஆண்ட்டி, நான் அவரை லவ் பண்ணட்டுமா, இல்ல ஆசிட் அடிக்க மூஞ்சியைக் காமிக்கட்டுமான்னு கேக்கச் சொல்லு. அவன் ஒரு ஆளுன்னு, பயப்படுறா இவ, என்கிட்ட மட்டும்தான் வீராப்பெல்லாம்… என்று முணுமுணுத்து விட்டு சென்றான் மதன்.
அதே சமயம், இந்தச் சந்தர்ப்பத்தை விடக் கூடாது என்று நினைத்த அவன் அக்காவோ, லாவண்யாவிடம்,
ஏண்டி அந்த விஜய் ஒன்னும் சின்னப் பையன் இல்லீல்ல? ஓரளவு நல்லாதானே இருக்கான். என்னா அரியர் வெச்சிருக்கான் அவ்ளோதானே? எப்டியும் உங்க வீட்ல, ஒரு நல்ல மாப்பிள்ளையை பாக்க மாட்டாங்க. அப்ப, பேசாம இந்த விஜய்யை லவ் பண்ண வேண்டியதுதானே என்று சீண்டினாள்.
ஏய் போடி! நீ எனக்கு சப்போர்ட் பண்ணுவன்னு பாத்தா, அவனுக்கு பேசுற?
உனக்காகத்தாண்டி பேசுறேன். அவனுக்கென்ன குறை? உன்னை விட வயசு கம்மியா? இல்லை கல்யாணம் பண்ணா, இந்த சொசைட்டிதான் ஏதாவது சொல்லுமா? அப்புறம் என்ன? அதுதானே உன் கவலை எப்பவுமே?
லாவண்யா முறைத்தாள்.
ம்க்கும்.. எங்ககிட்டதான் இந்த முறைப்பெல்லாம். அந்த விஜய்கிட்டன்னா பம்முவ! உனக்கெல்லாம், விஜய்தான் கரெக்ட்டு. புடிச்சா லவ் பண்ணு, புடிக்கலைன்னா, புடிக்கிற வரைக்கும் காத்திருப்பேன்னு சொல்றவனை எல்லாம் கண்டுக்க மாட்டீங்க! என்னமோ பண்ணு போ! என்று சென்று விட்டாள்.
ஆனால், அவனுடைய அக்காவிற்கு தெரியும். மதனின் காதல் லாவண்யாவின் மனதில் வேரூன்றுவதற்கான வாய்ப்பை அவள் ஏற்படுத்தி விட்டாள் என்று!
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
12-10-2019, 08:32 AM
(This post was last modified: 12-10-2019, 08:43 AM by whiteburst. Edited 1 time in total. Edited 1 time in total.)
71.
ஹாய், உங்கள்ல விஜய் யாரு? எனக்கு யார் விஜய் என்று தெரியும், இருந்தும் கேட்டேன்!
டேய், நீ மதன் தானே? ஃபர்ஸ்ட் இயர், ஜூனியர் இல்ல? அவனுடைய நண்பன் ரமேஷ், என்னை பதில் கேள்வி கேட்டான்!
ஆமா, ஃபர்ஸ்ட் இயர் தான்! நீங்கதான் விஜய்யா?
இல்லை, இவந்தான் விஜய். என்ன விஷயம்?
ஓ இவரா? ஹாய்!
எஸ், நான்தான் விஜய்! என்ன விஷயம்?
உங்க சிஸ்டர், ஹேமா, ____ காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் BSc படிக்கிறாங்கல்ல?
ஆமா, உனக்கு எப்படி அது தெரியும்?
இல்ல, நான் அவிங்களை லவ் பண்றேன்! அவிங்ககிட்ட போய் லவ்வைச் சொன்னா, எப்பிடியும் உங்ககிட்ட சொல்லலாம் இல்லையா? அதான் நேரா உங்ககிட்டயே சொல்லிடலாம்னு! நீங்க வேணா உங்க சிஸ்டர்கிட்ட பேசுறீங்களா?
விஜய் மட்டுமல்ல, அவன் நண்பர்கள் இருவரும் கூட கோபம் அடைந்திருந்தனர்! விஜய் என்னைப் பிடித்து கீழே தள்ளினான்!
டேய், என்ன திமிரா? யார்கிட்ட விளையாடுற?
மெல்ல எழுந்தேன். அவனைப் பார்த்து சிரித்தேன்!
என்ன சீனியர், அமைதியா லவ்வைச் சொன்னதுக்கே இவ்ளோ கோவப்படுறீங்க?
அவன் நண்பன், ரமேஷ் சொன்னான், டேய், இன்னிக்கு சாவப் போற நீ? அடி வாங்கி செத்துடாத, ஓடிடு!
நான் விஜய் தங்கச்சியை லவ் பண்றேன்! அதை அவருகிட்ட சொல்றேன். இடையில நீங்க யாரு? ஓ, மாமன் மச்சான்னு, விளையாட்டுக்குப் பேசிக்கறீங்கன்னு நினைச்சேன்! இல்லையா? உண்மையாலுமேவா?
இப்போது ரமேஷ் கோபம் அடைந்திருந்தான்!
டேய், என்று என் சட்டையை இறுகப் பற்றினான்!
உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம்ன்னா, ஒழுங்கா தள்ளி நில்லுங்க, இல்லாட்டி கேள்வி வரத்தான் செய்யும்!
இப்போது அவன் அடிக்க கை ஓங்கியிருந்தான்!
நான் அவன் கையைப் பிடித்து நிறுத்தினேன்! இதுவரையிலான எனது உடற்பயிற்சிகளும், நான் சென்றிருந்த கராத்தே கிளாஸ்களும், இதைப் பற்றி எதுவுமே தெரியாத இவர்களை, என் முன் தூசு போல் காட்டியது!
இருந்தும் சொன்னேன், நீங்க என்னை 10 அடி அடிச்சாலும் எனக்கு அசிங்கமில்லை! ஆனா, நான் திருப்பி ரெண்டு அடி அடிச்சாலும், காலேஜ்ல உங்களுக்குதான் அசிங்கம்! ஏன்னா, நீங்க சீனியர், நான் ஜீனியர்!
தவிர, நான் கராத்தே, மார்ஷல் ஆர்ட்ஸ்லாம் போயிருக்கேன், நிமிஷத்துல உங்களை என்னால அடிச்சிட முடியும். அதுனால கொஞ்சம் யோசிச்சி கை வைங்க!
எனது தைரியமும், தெனாவெட்டான பேச்சும் அவனை கொஞ்சம் யோசிக்க வைத்தது! தவிர தூரத்தில் இருந்து சிலர் இதை கவனிப்பது போலும் இருந்தது! இது தன்மானப் பிரச்சினையாச்சே?
ஆனாலும், விஜய் கொலை வெறியில் இருந்தான்! என்னா மிரட்டுறியா? அடிச்சிட்டு போயிடுவியா? எங்கன்னாலும், இங்கதான் வந்தாகனும்! சீனியர்ஸ் மேல கை வெச்சிட்டு தைரியமா இருந்துடுவியா?
ஹலோ, நான் அடிக்கல்லாம் வரலை. லவ்வைச் சொல்லத்தான் வந்தேன். நீங்கதான் சண்டைக்கு வர்றீங்க! என்னை அடிக்க வந்தா, நான் ஒண்ணும் வேடிக்கை பாத்துட்டிருக்க மாட்டேன்! பிரிச்சு மேஞ்சுடுவேன்!
இப்போதுதான், அவனுடைய இன்னொரு நண்பன் ப்ரேம் வாய் திறந்தான்? டேய், நானும் பாக்குறேன், ஓவரா போயிட்டிருக்க! என்ன நினைச்சிட்டிருக்க? உனக்கு கராத்தே தெரியும்னு திமிரா? பாத்துரலாமா?
அந்தக் கூட்டத்திலேயே நல்லவன் ப்ரேம்தான்! அதனால், அவனுக்குரிய மரியாதையை கொடுக்க நினைத்தேன்!
ஏன் சீனியர், இவிங்க சிஸ்டர்ன்னா, லவ் பண்றேன்னு சொல்றது கூட கொலைக் குத்தம்! ஆனா, இன்னொரு பொண்ணுன்னா, லவ் பண்ணாட்டி, ஆசிட் அடிச்சிருவேன்னு கூட இவிங்க மிரட்டலாம் இல்லை?
இப்போதுதான் அவர்களுக்கு ஏதோ விஷயம் புரிவது போல் இருந்தது! ஏற்கனவே, ப்ரேம், அதற்காக விஜய்யை திட்டியிருந்தான்.
இருந்தும் இப்போதும், ரமேஷ் திமிறினான்! டேய், லாவண்யாகிட்ட லவ்வைச் சொன்னா, உனக்கு என்னடா வந்தது?
ப்ரேமை பார்த்துக் கொண்டிருந்தவன், அவனை முறைத்தேன். விஜய் தங்கச்சிகிட்ட, நான் லவ்வைச் சொன்னா, உனக்கு என்னடா வந்தது? ப்ரண்டு தங்கச்சிக்காக நீ வரலாம், அக்காவோட ஃப்ரண்டுக்காக நான் வரக் கூடாதா?
நான் இவன் தங்கச்சியை லவ் பண்றேன்னு சொன்னாலே உங்களுக்குல்லாம் கோவம் வரும்? ஆனா, இன்னொரு பொண்ணுகிட்ட, லவ் பண்ணாட்டி, ஆசிட் அடிப்பேன்னு சொல்றதுக்கு, உங்களுக்குல்லாம் நாக்கு கூசலை இல்லை?
ப்ரெண்டு லவ் பண்றேன்னு சொன்னா, அதுக்கு ஹெல்ப் பண்ணு! அவன் ஆசிட் அடிப்பேன்னு சொன்னப்ப, நீயும் வேடிக்கை பாத்துட்டுதானே நின்னிட்டிருந்த? அசிங்கமா இல்ல? இதுக்கு பேருதான் ஃப்ரண்ட்ஷிப்பா?
என் கேள்வி அவர்களை அமைதியாக்கியிருந்தது! ப்ரேமுக்கும் அது சரியென்று தோன்றியதால், என்னைத் தடுக்கவில்லை! இருந்தும் நான் தொடர்ந்து திட்டுவதால், என்னை தடுக்கக் கேட்டான்!
அப்படின்னா, இவன் லவ் பண்ணக் கூடாதா மதன்?
நான் ப்ரேமை பார்த்தேன். என்ன சீனியர் பேசுறீங்க? நான் என்ன, லவ் பண்ண வேணாம்னு சொன்னேனா? போய் லவ்வைச் சொல்லட்டும்! அவ ஒத்துகிட்டா, லவ் பண்ணட்டும், இல்லாட்டி மூடிட்டு இருக்கனும்!
இல்ல, அவ மேல தீராத லவ்வு இருக்குன்னா, அவளை ஹர்ட் பண்ணாம, தொடர்ந்து லவ்வைச் சொல்லட்டும்! கடைசி வரைக்கும் அவ ஒத்துக்காட்டி, கம்முனு விட்டுடனும். அதை விட்டுட்டு, லவ் பண்னனும் இல்லாட்டி, ஆசிட் அடிக்கனும்னு சொல்றதுக்கு பேரு லவ்வா?
நான் கடுங்கோபத்தில் இருந்தேன். என் கோபத்தில் இருந்த நியாயம் ப்ரேமுக்கும் புரிந்தது!
நான் இன்னும் பேசினேன். இவன் என்ன பெரிய புடுங்கியா? கைல காசு பெருசா இருக்கா? இல்லை ஏதாவது கேம்ல ப்ளேயரா? இல்ல படிப்புல பெரிய ஆளா? இல்ல, ஏதாவது ஆர்ட் அது இதுன்னு திறமைசாலியா? ஃபைனல் இயர் முடிச்சிட்டு என்ன புடுங்கப் போறான்? கையில வேலை இருக்கா? இவன் லவ்வைச் சொன்ன லாவண்யா, கேம்பஸ்ல செலக்ட் ஆயிட்டா! இவன் என்ன கிழிச்சிருக்கான்?
அவ யாரு தெரியுமா? ஒரு கோடிஸ்வர வீட்டுப் பையன், லவ் சொன்னதுக்கே, நியாயம் பேசி, தப்பு, முடியாதுன்னு சொன்னவ! ஆனா இவன்?
எதுவுமே இல்லாத, ஒரு சாதா மிடில் கிளாஸ்ல இருக்குற, ஆவரேஜ் பையன். இவன் வந்து சொன்னவுடனே, அவ லவ்வுக்கு ஓகே சொல்லிடனுமா? லவ்வை தனியா சொல்றதுக்கு கூட திராணியில்லாம, கூட இந்த ரமேஷைக் கூட்டிட்டு போயி சொல்ற கோழைக்குல்லாம் எதுக்கு லவ்வு? கேரக்டரும் இல்லை! திறமையும் இல்லை! குறைந்த பட்சம் தைரியம் கூட இல்லை! அப்பேர்பட்ட இவன், லவ்வைச் சொன்னா அவ எதுக்கு ஒத்துக்கனும்?
விஜய், அமைதியாய் இருந்தான். இருந்தாலும் நான் திட்டுவது அவனுக்கு அசிங்கமாய் இருந்தது.
டேய் சீனியர்னு மரியாதை இல்லை?
டேய்… கூடப் படிக்கிற பொண்ணை, ஃபிரண்டா பாக்கத் துப்பில்லை! லவ் பண்றேன்னு சொல்றியே, அந்தப் பொண்ணை ஹர்ட் பண்ணக் கூடாதுன்னு கூடத் தோணலை. உனக்குல்லாம், எதுக்குடா சீனியர்னு மரியாதை? உன்னைப் பாத்து நானே, மரியாதை கொடுக்கனும்! சீனியர்னு கொடுத்தா, அது உனக்குதான் அசிங்கம்! மூடு வாயை!
அவன் இதற்கு மேலும், லாவண்யாவை தொந்தரவு செய்யக் கூடாது! என்னிடம் திட்டு வாங்கிய கோபத்தில், அவளிடம் மீண்டும் லூச்சுத்தனமாக நடந்து கொண்டால்? அதனாலேயே சொன்னேன்!
நான் யார் தெரியுமா?
என்னைப் பற்றி சொன்னேன்.
நினைச்சிருந்தா, உன்னைல்லாம் ஆளே அட்ரஸ் இல்லாம பண்ணிருப்பேன். அவ்ளோ செல்வாக்கு, பவர் இருக்கு! சீனியர்ங்கிர ஒரே காரணத்துக்காக பேசிட்டிருக்கேன்! மத்தவிங்ககிட்ட இருந்து லவ்வரை காப்பத்துறவந்தான் உண்மையான லவ்வர். இப்பிடி, நானே அடிச்சிடுவேன்னு சொல்றவனுக்கு பேரு வேற!
இப்பிடி, உன் தங்கச்சிகிட்ட ஒருத்தன் சொல்லியிருந்தா, நீ பாத்திட்டிருப்பியா?
எனது பின்புலத்தை தெரிந்தவுடன், அவர்கள் இருவருக்கும் என் பலம் புரிந்தது! ப்ரேமுக்கும் அது பெரிய ஆச்சரியம்!
சரி விடு மதன்! தெரியாம பண்ணிட்டாங்க! நானே திட்டிகிட்டு இருந்தேன். டேய், மதன்கிட்ட சாரி சொல்லுங்க!
சாரி மதன். சாரி! இருவருமே மெல்லிய குரலில் சொன்னார்கள்!
எனக்கு எதுக்கு சீனியர் சாரி! அவகிட்ட போய் சொல்லச் சொல்லுங்க! நேத்தே இருந்து அப்செட்! அவளே, எவ்ளோ கஷ்டத்துல படிக்க வர்றா தெரியுங்களா? பாவம் அவ! அதுல நீங்க வேற!
ப்ரேம் என்னையே பார்த்தான்!
என்ன சீனியர் அப்படி பாக்குறீங்க?
உன் வயசுக்கு மீறின மெச்சூரிட்டி, தைரியம், தன்னம்பிக்கை மதன்! கீப் இட் அப்!
தாங்க்ஸ் சீனியர்!
எனக்கு ஒரு டவுட் மதன்! ஒரு கோடீஸ்வர வீட்டு பையன், லாவண்யாகிட்ட லவ் சொன்னதுக்கே ரிஜக்ட் பண்ணதாச் சொன்னியே, யாரு அது? உனக்கு எப்புடி தெரியும்?
நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்! என்ன சீனியர், என்னைப் பத்தி எனக்கு தெரியாதா?
நீயா? நீயா? குரல்கள் ஒரே நேரத்தில் ஒலித்தன!
எஸ்!
ஏய், நீ அவளை விட ரெண்டு வயசு சின்னவண்டா!
ஆமா, அந்தக் காரணத்தைச் சொல்லித்தான் அவ என்னை வேணாம்னு சொன்னா. அது மட்டுமில்லாம, எனக்கு அட்வைஸ் வேற பண்ணிட்டு போனா! சச்சின், 5 வருஷம் மூத்த பொண்ணை கல்யாணம் பண்ணி ஒற்றுமையா இருக்கிரதை ரசிக்கிரவங்க, இதை மட்டும் கேள்வி கேக்குறாங்க?
விஜய் கொஞ்சம் கோபமாகக் கேட்டான்!
நீ லவ் பண்ற ஆளுங்கிறதுனாலத்தான் சண்டைக்கு வந்தியா?
நான் அவனையே பார்த்தேன். பின் அழுத்தமாகச் சொன்னேன்! மறுபடி தப்பு பண்றீங்க சீனியர். நான் லவ் பண்ணேன். இப்பியும் பண்றேன். அவ முடியாதுன்னு சொல்லிட்டா! ஆனா, நான் இன்னமும், அவளை லவ் பண்றது அவளுக்குத் தெரியும். இருந்தும், அவளை நான் எந்தத் தொந்தரவும் பண்ணதில்லை.
இப்பியும், அவ சொல்லி, நான் வரலை. என் அக்கா சொல்லித்தான் வந்தேன். அதுவும் ஆசிட் அடிப்பேன்னு சொன்னதுனால!
நாளைக்கே ஒரு வேளை, அவ உங்களை லவ் பண்ணா, நான் தள்ளி நிப்பேன்! உங்க விஷயத்துக்குள்ள தலையிட மாட்டேன்! ஆனா, அது வரைக்கும் நான் லவ் பண்ணுவேன்! அவளை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்னுவேன்!
உனக்கு இருக்குற பக்குவம் எங்களுக்கில்ல மதன். ரியல்லி சாரி! இனி அவளை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நாளைக்கு நானே, அவகிட்ட சாரி சொல்றேன்!
ப்ரேமும், என் தோள்களில் தட்டிக் கொடுத்தான்!
நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா சாரி சீனியர்ஸ்! இதை மறந்துடலாம்! என்று சொல்லி விட்டு, நாங்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தோம்! அதை மட்டும் லாவண்யா பார்த்தாள்!
அவள் பயங்கரக் கோபமாகச் சென்றாள்!
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
72.
லாவண்யா கோபமாக என்னைத் திட்டிக் கொண்டிருந்தாள், அதுவும், என் வீட்டிலேயே! அருகில் என் அக்கா, மவுனமாக!
பின் திரும்பி, என் அக்காவையும் திட்டினாள்.
இவன்கிட்ட சொல்லச் சொல்லி நான் கேட்டேனா? நீதான் பெரிய இவளாட்டம் சொன்ன! இப்பப் பாரு, அவிங்க கூடவே சிரிச்சி பேசிட்டிருக்கான்! எப்படி மனசு வந்தது இவனுக்கு? ம்ம்?
கோபமாக சிறிது நேரம் தொடர்ந்து திட்டினாள்! அவளால், எனது செயலைத் தாங்க முடியவில்லை! அவள் கண்கள் கூட சிறிது கலங்கியிருந்தது! பின் கோபமாக என்னை முறைத்து விட்டு சென்றாள்!
இத்தனைக்கும் என் அக்கா அமைதியாகவே இருந்தாள்!
நீ எதுவும் திட்டலை? என்று என் அக்காவை அமைதியாகக் கேட்டேன்!
என்னையே பார்த்தவள் சொன்னாள். எனக்கு உன்னைப் பத்தியும் தெரியும், அவளைப் பத்தியும் தெரியும்! ஆனா, அவளுக்குதான், ஒரு விஷயம் கண்ணை மறைக்குது!
கொஞ்ச நேரம் நிறுத்தியவள், நீ என்னமோ பண்ணியிருக்க, அது மட்டும் புரியுது! இல்லாட்டி அவிங்க கூட, சிரிச்சி பேசியிருக்க மாட்ட. ஆனா, அவ, நீ சிரிச்சிதை மட்டும்தான் பாத்திருக்கா! அதான் தப்பா எடுத்துகிட்டா!
ஆனா, எனக்கே புரியாத விஷயம் ஒண்ணு இருக்கு.
நான் அவளையே பார்த்தேன்.
விஜய் லவ் சொன்னப்ப, பெருசா கண்டுக்காதவ, அவன் ஆசிட் அடிச்சிடுவேன்னு சொன்னப்ப கூட, பயந்தாலும், கண்டுக்காம விட்டுடலாம்னு சொன்னவ, அவங்ககிட்ட சண்டைக்கு போகாதவ, நீ அவங்க கூட சிரிச்சி பேசினதுக்கே இவ்ளோ கோவப்படுறா! உன்கிட்டயே வந்து சண்டை போடுறா! இந்த லாவண்யா எனக்குப் புதுசு!
அவ உன்னை, கொஞ்சம் வேற இடத்துல வெச்சிருக்கா!
நீ செஞ்சதை விட, செஞ்சது நீ, அப்படிங்கிறது தான் அவளை ரொம்ப அப்செட் பண்ணியிருக்கு! ஏதோ மறைக்கிறா என்கிட்ட!
நான் கண்களை விரித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்!
அவள் புன்சிரிப்புடன் கேட்டாள்,
என்னடா நடக்குது?
நான் உள்ளுக்குள் யோசித்தாலும், கடுப்பாய் சொன்னேன். அவளையே போய் கேளு!
அடுத்த நாள், விஜய் போய் கல்லூரியில், அவளிடம் சாரி சொல்லியிருந்தான். மதன் அவளுக்காக சண்டைக்கு வந்ததையும் சொன்னான்.
ப்ரேம் தனிப்பட்ட முறையில் என் அக்காவுடன் சேர்ந்து, அவளைச் சீண்டியிருக்கிறான், நட்பாக!
அப்படி ஒரு ஹீரோ லவ்வையே அக்செப்ட் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுக்கப்புறம், விஜய் வந்து லவ்வைச் சொன்னா கொஞ்சம் கடுப்பாத்தான் இருக்கும், இல்லையா லாவண்யா?
அதன் பின் என் அக்கா, வீட்டுற்கு வந்தவுடன், அவளிடம் வேண்டுமென்றே, சண்டையிட்டாள்!
நேத்து, என்னான்னு தெரியாமியே அவனைத் திட்டுன? இப்ப என்ன பண்ணப் போற? அவன் எவ்ளோ ஃபீல் பண்ணான் தெரியுமா?
யாரு, அந்த சிடுமூஞ்சி ஃபீல் பண்ணுச்சா? இதை என்னை நம்பச் சொல்றியா?
ஏய், என் தம்பி சிடு மூஞ்சிதான்! நீ ரொம்ப யோக்கியமா? நீ ஏண்டி நேத்து அழு மூஞ்சியா இருந்த?
அது, இவன் எப்படி, அப்டி பண்ணலாம்னு, சின்ன கோவம்! அதான்!
அதுக்கு, அப்புடித்தான் திட்டுவியா? நானே அவனை திட்டினதில்லைடி!
விஜய் தப்புக்கு, அவன் சாரி கேட்டுட்டான்! நீ பண்ன தப்புக்கு என்ன பண்ணப் போற? போய் சாரி கேளு!
அதெல்லாம் நான் தனியா கேட்டுக்குறேன்!
நேத்து திட்டுறப்ப மட்டும், என்னை வெச்சுகிட்டே திட்டுன! இப்ப சாரி கேக்கனும்னா வலிக்குதோ!
ஏய், நான், மதன்கிட்ட பேசிக்கிறேன். நீ, உன் வேலையைப் பாரு!
அது சரி, நீங்க லவ் பேர்ட்ஸ், உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்! நமக்கெதுக்கு இந்த வம்பு என்று நக்கலாகச் சொன்னாள்?!
இது எல்லாமே, என் வீட்டில், என் முன்பே நடந்தது! நான் அதை கண்டு கொள்ளாமல் லேப் டாப்பில் நோண்டிக் கொண்டிருந்தேன்! அவள் எவ்வளவு கோபித்தாலும், உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது போல் தோன்றியது எனக்கு!
என் அக்காவின் முன் எதுவும் சொல்லாதவள், பின் கிளம்பும் போது, என்னருகே வந்து சாரி என்று மெல்லியதாகச் சொன்னாள்! பின், தாங்க்ஸ் என்றும் சொல்லி விட்டும் சென்றாள்!
அதன் பின், என் அக்கா, நான் இருக்கும் போது, அவளை அதிகம் சீண்டுவாள்! அவளுக்கும் அது லேசாக பிடித்திருக்கும் போலிருந்தது! இருந்தாலும் கோபித்துக் கொள்வாள்! கோபித்தாலும், ஓரக்கண்ணால் என்னைப் பார்ப்பாள்!
அவள் இருக்கும் போது, வேண்டுமென்றே, எங்களை ஐஸ்கிரீம் பார்லருக்கோ, ஏதாவது கடைக்கோ கூட்டிச் செல்லச் சொல்வாள்! அவ்வப்போது, என்னை வைத்து அவளைச் சீண்டினாலும், நான் கண்டு கொள்வதேயில்லை!
இந்தக் கண்ணா மூச்சி ஆட்டம், நான் இஞ்சினியரிங் முடித்து ஐ ஐ எம் செல்லும் வரை தொடர்ந்தது!
இடையில், எங்களுள்ளான, புரிதல் வளர்ந்திருந்தது! அவளும் வேலைக்கு செல்லத் தொடங்கியிருந்தாள்! அவளது குடும்பத்தின் பிரச்சினை, கொடுமையும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது!
நான் ஐஐஎம் க்கு செல்லும் நாள், அவளும் வீட்டுக்கு வந்திருந்தாள்! செல்லும் போது அக்கா ரொம்ப ஃபீல் பண்ணாலும், நான் வழக்கம் போல என் உணர்வுகளைக் காட்டவில்லை. தாத்தாவைப் பாத்துக்கோ என்று மட்டும் சொன்னேன்!
லாவண்யாவும், ஆல் தி பெஸ்ட் அண்ட் டேக் கேர் என்றாள்!
ம்ம்ம். தாங்க்ஸ்!
அதன் பின் அவளைப் பார்த்தது, இரண்டு வருடங்கள் கழித்துதான்! அப்போதும், அப்படியே இருந்தாள்!
அதே மருண்ட சுபாவம்! உணர்வுகள் சொல்லும் கண்கள்! என் வருகையை எதிர்பார்க்கும் ஆசை முகம்! எனது பிரிவு அவளுக்குள் ஏதோ செய்திருக்கும் போல! நான் பார்க்காத போது, (அப்படி அவளாகவே நினைத்துக் கொண்டு), என்னை ஆசை தீர மேலும் கீழும் பார்த்தாள்!
இத்தனை நாட்கள் நாங்கள் நேரடியாக பேசிக் கொள்ளாவிடினும், அக்காவின் மூலமும், தாத்தாவின் மூலமும் நன்கு தெரிந்து கொண்டிருந்தோம்.
என் அக்காவும் அவளை சீண்டினாள்! என்னடி வேணாம்னு சொல்லிட்டு, அவனையே சைட் அடிக்கிற? பேசாம, வேணும்னு சொல்லி, பக்கத்துலியே வெச்சு பாத்துக்கோயேன்? யாரு வேணாம்ன்னு சொன்னது?
அவள் பதிலுக்கு முறைத்தாள்!
எப்படி இருக்க மதன்?
ம்ம்.. குட்! ஹவ் ஆர் யூ ஆல்!
ம்ம்ம்.. நான்லாம் நல்லாயிருக்கேன்! இன்னொரு ஆளு, இதுவரைக்கும் நல்லா இல்லை, ஆனா, இனிமே நல்லாயிருப்பா!
என் அக்காவின் ஜாடைப் பேச்சு, எனக்கு புரிந்தது!
இடைபட்டக் காலங்கள், அவள் மீதான, எனது காதலை அதிகப்படுத்தியிருந்தது! நாங்கள் இருவரும் இன்னும் பக்குவப்பட்டிருந்தோம். வெறும் டீன் ஏஜ் காதல் அல்லது இனக்கவர்ச்சி காதல் அல்ல அது என்பது இருவருக்குமே புரிந்திருந்தது. அவளது பார்வையும், என்னப் பார்க்கும் போது மலரும் முகமும் எனக்கு ஏதோ செய்தி சொன்னது!
ஆனால், ஒரு தடவை ஏமாந்த மனது, அடுத்த முறை ஏமாறத் தயாரில்லாமல், அமைதி காத்தது!
பின் பழைய கண்ணாமூச்சி ஆட்டம், மீண்டும் தொடர்ந்தது!
இந்த ஆட்டம், அக்காவின் திருமணம் வரை தொடர்ந்தது! தாத்தாவின் மரணத்திலும், அக்கா என்னைக் கூப்பிட்டு திட்டிய போது கூட, அவள் கூட இருந்தாள்!
சொல்லப்போனால், அக்கா அருகில் அவள் இருக்கிறாள் என்பதாலேயே, நான் அக்காவை நெருங்க நினைக்கவில்லை!
என் அக்காவோ, திருமணத்தின் போது கூட, அடுத்து உனக்குதாண்டா என்று அவளைப் பார்த்து ஜாடை பேசினாள்! அவளும் வெட்கப்பட்டாற்போல்தான் தோன்றியது எனக்கு!
அவள் கண்களாலேயே ஏதோ எதிர்பார்த்தாள். எனக்கு அது புரியவேயில்லை! கண்டிப்பாக, அவள் பழையபடி, நான் காதல் சொன்னதற்கு ரியாக்ட் செய்ய மாட்டாள். ஆனால், ஏற்றுக் கொள்வாளா?
எவ்வளோ பிரச்சினைகளை ஈசியாக கையாண்டவன், எந்த உணர்வையும் வெளிக்காட்டாதவன், இந்தப் பிரச்சினையையும் கையாளும் வழி தெரியாததால், வழக்கம் போல், உணர்வுகளை மறைத்தேன்!
ஒரு வேளை நான் அக்காவிடமோ அல்லது லாவண்யாவிடமோ மனம் விட்டு பேசியிருந்தால் தீர்வு கிடைத்திருக்கும்! ஆனால் நான், உணர்வுகளை முகமூடி போட்டு மறைத்தேன்.
எனக்குத் தெரியவில்லை!
ஒரு முறை, மிக ஆரம்பத்திலேயே சொன்னதால் ஏமாந்தவன், இந்த முறை சரியான சமயத்தில் சொல்லாததால் ஏமாறப் போகிறேன் என்று!
தகுந்த சமயத்தில் சொல்லப்படாத காதல், எழுதப்படாத ஒரு கவிதையைப் போன்றது!
எனது காதலும், ஒரு எழுதப்படாத கவிதைதான்!
Posts: 2
Threads: 0
Likes Received: 0 in 0 posts
Likes Given: 0
Joined: Aug 2019
Reputation:
0
•
Posts: 209
Threads: 0
Likes Received: 67 in 63 posts
Likes Given: 3
Joined: May 2019
Reputation:
3
•
Posts: 48
Threads: 0
Likes Received: 6 in 5 posts
Likes Given: 51
Joined: Jul 2019
Reputation:
0
•
Posts: 181
Threads: 0
Likes Received: 48 in 43 posts
Likes Given: 1,645
Joined: Dec 2018
Reputation:
2
Expecting happy ending bro...
•
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
16-10-2019, 10:33 AM
(This post was last modified: 16-10-2019, 10:43 AM by whiteburst. Edited 1 time in total. Edited 1 time in total.)
73.
எங்கள் இருவரிடமும் காதல் இருந்தாலும், கூடவே ஒரு தயக்கமும் இருந்தது.
ஒரு தடவை சொல்லி, பின் ரிஜக்ட் செய்ததனால், அவளே வந்து என் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன்.
அதான் என் லவ்வை ஓபனா சொல்லிட்டேன்ல. அவ ஒத்துகாட்டியும், அதை கண்டினியு பண்ணுவேன்னும் சொல்லிட்டேன்ல? இனி, அவதான, அவ மனசுல என்ன இருக்கனும்ங்கிறதை சொல்லனும்? நாந்தான் அவளைப் பாக்கிற பார்வையிலியே என் லவ்வைச் சொல்றேன்ல? என்று உள்ளுக்குள் கடுப்பானேன்.
பெண்களிடம் அதிகம் மனம் விட்டுப் பேசாததால், ஒரு பெண்ணுடைய வெட்கங்கள், தடுமாற்றங்கள், எண்ணங்களை நான் கவனிக்கத் தவறினேன்.
லாவண்யாவோ, வலிய வந்தவனை வேண்டாம்னு சொல்லிட்டு, இப்ப எந்த மூஞ்சியை வெச்சுகிட்டு போய், நீ இன்னமும் என்னை லவ் பண்றியான்னு கேக்குறது?
லூசு அவன், லவ்வை எப்படிச் சொல்லனும், எப்படிச் சொல்லனும்னு, ஒரு ஃபீல் வேணாம்? என்னமோ வீட்டுக்கு போயிட்டு வர்றேங்கிற மாதிரி, லவ்வைச் சொல்றான்?
அப்ப, நான் இன்னும் காலேஜே கூட சேரலை. +2 முடிச்ச பையன் கூட, சுத்துறா பாருன்னு மத்தவிங்க சொன்னா, எனக்கு எவ்ளோ கஷ்டம் இருக்கும்?
நாந்தான், என் ஆசையை, காதலை எல்லாத்தையும், இண்டிகேட் பண்ணிட்டு இருக்கேன்ல?! இப்பதான் MBA லாம் முடிச்சு, பெரிய பிசினஸ் மேக்னட் ஆகிட்டான்ல? இப்ப வந்து, என்கிட்ட கேக்குறதுக்கு என்ன? ஒரு பொண்ணாடா வந்து, வெட்கத்தை விட்டு கேப்பா? சரியான ஜடம்! இவனை வெச்சுகிட்டு என்னென்ன பாடு படப் போறேனோ என்று உள்ளுக்குள் சராமரியாக அவனைத் திட்டிக் கொண்டு இருந்தாள்.
இப்படியாக, அவர்கள் தங்களது காதலையும், கூடவே தயக்கத்தையும் வளர்த்துக் கொண்டு சென்றார்கள்.
MBA முடித்து வந்தவன் கம்பெனியில் கொஞ்சம் கொஞ்சமாக காலூன்றினேன். அதை விஸ்தரிக்க ஆரம்பித்தேன். அதற்கு, தாத்தா எனக்கு முழு ஒத்துழைப்பாக இருந்தார். என்னுடைய வளர்ச்சியைக் கண்டு, அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தார். அந்தச் சமயத்தில், நான் என் அக்காவை, என் கம்பெனியிலேயே, பொறுப்பினை எடுத்துக் கொள்ளச் சொன்னதற்குதான் அவள் மறுத்திருந்தாள். அவளே மறுக்கும் போது, லாவண்யாவும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதன் பின் தான், அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்தது, தாத்தாவின் மரணம், அதன் பின், சில மாதங்களில் அக்காவின் திருமணம் எல்லாம் நடந்தது.
தாத்தாவின் மரணமும், அக்காவின் பிரிவும் எனக்குள் மிகப்பெரிய ஒரு துயரத்தைக் கொடுத்திருந்தது. என் நலனை விரும்பும் மிக முக்கிய இரு ஜீவன்கள், ஏறக்குறைய ஒரே சமயத்தில், என் வாழ்விலிருந்து விலகிச் செல்வது, என்னால் உள்ளுக்குள் தாங்க முடியவில்லை.
எப்பொழுதும், எதையும் கவனிக்கும் என் அக்கா கூட, உள்ளுக்குள், தாத்தா இறந்த சோகத்திலும், தன் கணவன் தன்னை புரிந்து கொள்வானா? என்ற குழப்பத்திலும், இனி மதன் என்ன பண்ணுவான், இப்பவும் வாயைத் திறக்க மாட்டேங்குறானே, என்ற கடும் வருத்ததிலும் இருந்ததால் என்னை முழுதாக கவனிக்க வில்லை.
ஆனால், இதை ஓரளவு கவனித்திருந்த லாவண்யாவோ, அக்காவின் திருமணம் முடிந்தவுடன், என்னிடம் வந்தவள், லேசான கோபத்துடன் பேசினாள்.
நீ, இப்படியே, உன் ஃபீலிங்சை காமிக்காமியே இரு மதன்! மத்தவிங்ககிட்ட வேணா, நீ மறைக்கலாம். ஆனா என்கிட்ட முடியாது! இப்பிடியே இரு! அப்புறம் என்னிக்காவுது, இதுக்காக வருத்தப்படுவ! அவ பாவம்! மனசே இல்லாம போறா!
தாத்தா இறந்தப்பதான், அவளுக்கு ஆறுதல் சொல்லலை. இப்ப, புது வீட்டுக்கு போறப்பனாச்சும், அவளுக்கு தெம்பு சொல்லியிருக்கலாம்ல? நீ தம்பி மாதிரியா நடந்துக்குற? பல சமயங்கள்ல நீதானே அண்ணன் மாதிரி நடந்துக்குற? இந்த மேரேஜைக் கூட, தாத்தாவோட ஆசைன்னு சொல்லி, அவளைச் சம்மதிக்க வைச்சில்ல? அவகிட்ட, கொஞ்சம் தெம்பா பேசியிருக்கலாம்ல? என்னதான் பிரச்சினை உனக்கு!
அவ அம்மாகிட்ட கூட, அதை எதிர்பாக்கலைடா அவ! ஆனா, நீ கொஞ்சம் மனசு விட்டுப் பேசியிருந்தா எவ்ளோ சந்தோஷப்பட்டிருப்பா தெரியுமா? உனக்கு, உன் ஃபீலிங்ஸ்தான் முக்கியம், இப்படியே கல்லு மாதிரி இருக்கனும் இல்ல? எதுக்காகவும், யார்கிட்டயும் ஃபீல் பண்ணி பேசிடக் கூடாது. இரும்பு மனசுன்னு பாராட்டி, அவார்டு தரணுமா? சரியான செல்ஃபிஸ் என்று வறுத்தெடுத்தாள்.
எதற்காகவும் மனம் திறக்காத நான், ஏற்கனவே சோகமாய் இருந்ததால், அன்று கொஞ்சம் மனம் திறந்தேன்!
தெம்பா பேசி, என்ன பண்ணச் சொல்ற? இத்தனை நாள் பாசம் காட்டாம, இப்ப புதுசா காமிக்கச் சொல்றியா? வாழ்க்கைல, இத்தனை நாளா, பெருசா சந்தோஷத்தையே எதுவும் அனுபவிக்காதவ அவ, இப்பதான் அவளுக்குன்னு ஒரு உறவு வந்திருக்கு.
தாத்தா பாத்த மாப்பிள்ளைன்னாலும், நான் தனிப்பட்ட முறையில நல்லா விசாரிச்சிட்டேன். ஹரீஸ் ரொம்ப நல்லவரு. கண்டிப்பா, அவளுக்கு கரெக்ட்டான மேட்ச்சா, அவ வாழ்க்கையை இன்னும் சந்தோஷமா மாத்துவாரு.
கல்யாணத்துக்கு முன்னாடியே, இந்த லூசு, அவருகிட்ட என்னைப் பத்தி புலம்பியிருக்கு. இன்னும் கல்யாணமே நடக்காட்டியும், தான் கட்டிக்கப் போற பொண்ணுக்காக, அவரு, என்கிட்ட வந்து தனியா பேசுறாரு. உங்க அக்கா உன் மேல நிறைய பாசம் வெச்சிருக்கான்னு சந்தோஷமா சொல்றாரு. இப்பியே எனக்காக அவ்ளோ கவலைப் படுறவ, இன்னும் நான் பாசத்தைக் காமிச்சா அவ்ளோதான். அங்க போயும் எனக்காக ஃபீல் பண்ணிட்டு இருப்பா.
எனக்கு வேண்டியதெல்லாம், இந்த டைம்ல அவ ரொம்ப சந்தோஷமா இருக்கனும். தன் கணவன் மேல முழு அன்பையும் காட்டனும். ரெண்டு பேரும் நல்லா இருக்கனும். முக்கியமா, மத்தவங்க மேல மட்டும் அன்பைக் காட்டிட்டு இருந்தவ மேல, முழு அன்பைக் காட்ட ஒருத்தர் இருக்காருன்னு, அவ புரிஞ்சிக்கனும்!
எனக்குத் தெரியும், அவ மனசுக்கு, அவ எப்பவும் நல்லா இருப்பான்னு. அவ இடத்துல, நான் இருந்திருந்தா கூட, அவளை மாதிரி நடந்திருப்பேனான்னு எனக்கு தெரியாது. அந்தளவுக்கு அன்பு காட்டுறவ அவ, அப்படிப்பட்டவளோட முழு அன்பும், ஹரீசுக்கு போகனும். அதே அன்பை ஹரீஸ்கிட்ட இருந்து, அவ வாங்கனும். அதான் நான் தள்ளி நிக்குறேன். புரியுதா?
இந்தச் சமயத்துல அவ மனசுல ஹரீஸ் மட்டும்தான் இருக்கனும். அவ குழப்பத்துல இருந்தாலும் பராவாயில்லை. இந்தச் சமயத்துல ஹரீஸ் காட்டுற அன்பு, அவளுக்கு வாழ்க்கை முழுக்கச் சந்தோஷத்தைக் கொடுக்கும். எனக்கு அதுதான் வேணும்!
இதுவரை, லாவண்யாவின் மனதினுள் ஏதேனும் குழப்பம் இருந்திருந்தால், அது அத்தனையும் அன்று நீங்கியிருந்திருக்கும். அந்தளவு நான், அவள் மனதில், அந்த நிமிடம் விஸ்வரூபமெடுத்திருந்தேன். என் அக்கா வெளிப்படையாக காட்டிய தூய அன்பிற்கு, சற்றும் குறையாதது, என் அன்பு என்று அன்று நான் நிரூபித்திருந்தேன்.
சற்றே நெகிழ்ச்சியுடனும், பெருமையுடனும், ஆசையுடனும் என்னைப் பார்த்த லாவண்யா, பெரு மூச்சுவிட்டபடி திரும்பச் சென்றாள்.
சென்றவளை லாவண்யா என்று கூப்பிட்டேன்.
வந்து…இங்கப்…
நான் சொல்ல வருவதற்குள், என்னைப் புரிந்திருந்த லாவண்யாவே பதில் சொன்னாள். டோண்ட் ஒர்ரி, அவகிட்ட எதுவும் சொல்ல மாட்டேன் என்று புன்னகைத்தாள்.
அதன் பின் நான் மீண்டும் தனியானேன். அக்கா ஹரீசுடன் கிளம்பி விட்டாள். லாவண்யாவும் கிளம்பி விட்டாள். அக்கா இல்லாத வீட்டிற்கு, அவளால், முன்பு போல் வர முடியாது.
என் வாழ்வின் மூன்று மிக்கிய ஜீவன்கள், ஒரே நேரத்தில், என்னிடமிருந்து விலகி இருக்கும் சூழ்நிலை எனக்கு ஒருவித மனநிம்மதியின்மையைக் கொடுத்தது.
அதனாலேயே, நான் என் வெறியை, என்னுடைய நிறுவன விஸ்தரிப்பில் காட்டினேன். முதல் 4 மாதங்கள், நிறுவனத்தில் சில முக்கிய முடிவுகள் எடுத்து பெரிதாக விஸ்தரிக்க ஆரம்பித்திருந்த நான், அடுத்த 4 மாதங்களில் தான், என்னுடைய தந்தையை, என் நிறுவனத்திலிருந்து ஒட்டு மொத்தமாக ஒதுக்கி வைக்கும் வேலையை ஆரம்பித்தேன்.
நான் நினைத்தது போல் என் தந்தை எளிதில் விட்டுக் கொடுத்துவிடவில்லை. இதற்காகத்தானே, கட்டிய மனைவியையே ஏமாற்றினார். பல வழிகளில் அதற்கு முட்டுக்கட்டைகள் போட்டார். ஒரே சமயத்தில், விஸ்தரிப்பும், தந்தையின் சவால்களையும் சமாளித்து நான் விரும்பும் நிலைக்கு கொண்டு வரவும் எனக்கு அந்த 8 மாதங்கள் தேவைப்பட்டிருந்தது.
அந்த 8 மாதங்களில் நான், என் அக்கா, லாவண்யா என யாரைப் பற்றியும் யோசிக்காமல் வெறி பிடித்தாற் போல் வேலை செய்தேன். மாதக் கணக்கில் நான் கம்பெனி கெஸ்ட் அவுசிலும், ட்ரிப்பிலும் மட்டும் இருந்தேன். ஆஃபிஸ் பர்சனல் நம்பரைத் தவிர வேறெதையும் பார்க்கவே இல்லை. வீட்டிற்கும் அதிகம் போகவில்லை.
இது எல்லாவற்றையும் முடித்து விட்டு இனி லாவண்யாவை மீட் பண்ணி வெளிப்படையாக பேசிடனும்னு நினைத்த சமயத்தில்தான் எனக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. அதுவும் என் கல்லூரி சீனியர் பிரேம் மூலமாக.
அது, லாவண்யாவிற்கு 1 மாதம் முன்பாகத்தான், அவளுடைய மாமா முறை சார்ந்த ஒருவருடன் (சித்தியின் தம்பி) திருமணம் நடந்திருந்தது என்ற உண்மைதான்.
அதை விட அதிர்ச்சி, அது, ஒரு வலுக்கட்டாயமாக நடந்த திருமணம் என்பதும், அவள் எதிர்பாராத தருணத்தில், அவளை கோவிலுக்கு கூட்டிப் போவது போல் சென்று, தாலி கட்டப்பட்டது என்றும், இதற்கு அவளுடைய தந்தை, சித்தி அனைவரும் உடந்தை என்பதும் தெரிய வந்தது.
நடந்தவுடன் கடும் அதிர்ச்சியடைந்தவள், இயல்பாக பயந்த சுபாவம் கொண்டவள், மிகவும் கோபாவேசம் கொண்டு, அன்றே போலீஸ் ஸ்டேஷனில் சொந்த அப்பா முதற்கொண்டு அனைவரின் மீது புகாரும், பின் உடனே, வீட்டைக் காலி செய்து விட்டு ஒரு லேடீஸ் ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள் என்பதும், இதெல்லாம் நடந்து 15 நாட்கள் கழித்து, அந்தத் தாலி கட்டியவன், குடித்து விட்டு ஒரு ஆக்சிடெண்டில் அடிபட்டு இறந்து விட்டான் என்பதும், அப்பொழுதும் அவளுடைய ராசிதான் இதற்கு காரணம் என்று சொந்த வீட்டினராலேயே பேசப்பட்டாள் என்பதும் மிகவும் அதிர்ச்சியளித்தது.
அவள் தேடிப்பிடித்து பார்க்கச் சென்ற போது, அவள் என்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. மாறாக என்னையே வெறித்துப் பார்த்தாள்.
ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று நான் கேட்ட கேள்விக்கு, அவள் பார்த்த பார்வை என்னை மிகவும் உலுக்கியது. ஆனால் என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவள் என்னிடம் சொன்னது ஒன்றே ஒன்றுதான்! அது,
இனி என்னைப் பார்க்க விரும்பவில்லை என்பதுதான்.
அக்கா கேட்டான்னா, நான் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று மனம் வெதும்பினேன்.
சரியாக, அதற்கடுத்த நாள்தான் என் அக்கா, அவள் பிரச்சினைக்காக ஃபோன் செய்திருக்கிறாள். இவள் பிரச்சினை பற்றி தெரிந்து என்னைத் திட்டத்தான் கூப்பிட்டிருக்கிறாள் என்று நானாகவே நினைத்து, அவளிடம் சரியாக பேசவில்லை. பின் அவள் மீண்டும் வீட்டுக்கே வந்து பேச முயற்சித்த போது கூட, அவளிடம் பட்டென்று பேசினேன்.
அக்கா ஃபோன் செய்த போதே பேசியிருந்தால், குறைந்தபட்சம் சில விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம்.
நேரமும் சூழ்நிலையும், என் வாழ்க்கையில் கன்னாபின்னாவென்று விளையாடியிருக்கிறது…
அதை எப்படி நான் சரி செய்யப் போகின்றேன்???
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
16-10-2019, 10:44 AM
(This post was last modified: 16-10-2019, 10:49 AM by whiteburst. Edited 3 times in total. Edited 3 times in total.)
74.
ஃப்ளாஸ்பேக் முடிந்து, மீண்டும் இன்று!
லாவண்யாவும், அக்காவும், அடுத்த நாள் முழுதும் மனம் விட்டு பேசியிருக்கிறார்கள். அன்று மாலை, நான் லாவண்யாவைப் பார்த்த பொழுது அவள் முகம் கொஞ்சம் தெளிவாய் இருந்தது.
என்னைக் கடுப்பேற்றிய விஷயம் என்னவென்றால், என் முன்பே, ஹரீசிடம், நான் பெங்களுர் வர்றேன். எனக்கு ஏதாச்சும் வேலை வாங்கித் தர முடியுமாண்ணா என்று கேட்டதுதான். அன்று, அவள் செல்லும் போதும், என்னிடம் பேசவேயில்லை.
அதன் பின் அக்காவிடம் கேட்டேன்.
ஏன், முன்ன பாத்துட்டு இருந்த வேலை என்னாச்சு?
நடந்த பிரச்சினைல, அவிங்க சித்தி, ஆஃபிஸ்க்கே போய் ஏதோ அசிங்கமா பேசியிருக்காங்க. பெர்சனல் விஷயத்தை ஆஃபிஸுக்கு கொண்டு வராதீங்கன்னு, ஆஃபிஸ்ல வேலைக்கு வர வேணாம்னு சொல்லியிருக்காங்க. இப்பியும் அப்பப்ப, ஹாஸ்டல்ல லைட்டா பிரச்சினை பண்றாங்க போல!
அவனுக்கு ஆக்சிடெண்ட் ஆனதுக்கப்புறம், இவ கேசை வாபஸ் வாங்கிட்டா. அதான்… புடிச்சு ஜெயில்ல போட்டிருந்தா தெரிஞ்சிருக்கும் அவிங்களுக்கு.
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, அவளுக்கு உதவ முடியவில்லையே என்ற கோபமும், அதை அனுமதிக்காத அவள் மேல் கோபமும் வந்தது.
அதன் பின் அடுத்த 3 நாட்களில் அக்கா, நான் ஹரீஸ் கூட, அவர் வீட்டுக்கு போறேன் என்று என்னிடம் சொன்னாள்.
என்னால், லாவண்யா விஷயமாக என்ன முடிவெடுத்துருக்க, அவளும் வராளா என்று கேட்க முடியவில்லை.
அதனால் அமைதியாக, சரி, நான் சொன்ன மாதிரியே அங்க நடந்துக்க. அந்த வீட்டுக்கு நீதான் ராணி. நீ எவ்வளவுக்கெவ்ளோ கம்பீரமா நடந்துக்கறியோ, அவ்ளோ நல்லது. அந்தாள் எங்கியாவுது வெளிய கெளம்புறேன்னு சொன்னா விட்டுடு என்று மட்டும் சொன்னேன். அவளும் சென்று விட்டாள்.
அடுத்த வாரம் திங்கட் கிழமை காலை, அலுவலகத்தில் இருக்கும் பொழுது அக்கா கூப்பிட்டாள்!
சொல்லு, எப்டி இருக்க?
அதெல்லாம் இருக்கட்டும், உனக்குத் தெரிஞ்சு, ஏதாச்சும் நல்ல லேடீஸ் ஹாஸ்டல் பெங்களூர்ல தெரியுமா?
எனக்கு, அவள் லாவண்யாவிற்காகத்தான் கேட்கிறாள் என்று புரிந்தது. கடுப்பானேன்.
எனக்கு எப்டி தெரியும்? மாமாவுக்கு தெரியாதா?
இல்லை அவரை விட, உன் லாவண்யாவுக்கு எப்டி இருந்தா நல்லதுன்னு, உனக்குதானே தெரியும்?
நான் கடுப்பில், இதுக்குதான் காலைல கூப்பிட்டியா என்று திட்டினேன்.
பேசாத? அன்னிக்கு உன் முன்னாடியே ஹாரீஸ்கிட்ட பெங்களூர் வர்றேன்னு சொல்றா? நீ வாய் மூடிட்டு இருக்க? நாங்க, ஊருக்கு போறோம்னு சொல்றேன், அப்பியும் லாவண்யா விஷயம் என்ன பண்றதுன்னு என்கிட்ட கேட்டியா? இல்ல நீயா, ஏதாச்சும் ஸ்டெப் எடுத்தியா? அதான், பேசாம நானே அவளுக்கு ஹெல்ப் பண்ணி, நல்ல வேலை வாங்கிக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன்…
முன்னதான் மனசுல இருக்குறதை சொல்ல மாட்ட? இப்ப என்ன வந்தது? அவதான் உன் கூட பேசலை! ஆனா, என்கிட்ட, நீ ஏதாவது பேசுனியா? இன்னும் மாற மாட்டியா நீ?
அவளது கோபம் நியாயம் என்று எனக்கும் தெரிந்தது. இன்னும் சொல்லப் போனால், இப்படி இவள் திட்டுவது எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது!
என்ன பண்ணச் சொல்ற? என்னைப் பாக்குற பார்வையிலியே எரிக்கிறா? பக்கத்துல போயி பேசவே விட மாட்டேங்குறா? சரி கோபம் கொறையட்டும்னு வெயிட் பன்றேன். அதுக்காக சும்மாலாம் இல்லை. இனி அவங்க சித்தி, அவகிட்ட பிரச்சினை பண்ண மாட்டாங்க. அவ எந்த ஹாஸ்டல்ல இருக்கா, இப்ப சப்போர்ட்க்கு யாரு இருக்க, எங்க வேலைக்கு ட்ரை பண்றாங்கிற வரைக்கும் தெரியும். போதுமா?
ம்ம்… பராவாயில்லை. இதைனாச்சும் தெரிஞ்சு வெச்சிருக்கியே. அப்புறம், உங்கிட்ட இன்னொரு விஷயம் கேட்கனும்.
என்ன சொல்லு?
இல்ல, நீ எனக்கு, உங்க கம்பெனி க்ரூப்ல ஷேர் கொடுத்தீங்களே, அது உண்மைதானே, ஜோக் இல்லியே?
ஏய், விளையாடாமச் சொல்லு! அதுவா முக்கியம் இப்ப?!
ஆமா! என்னா, இன்னிக்கு உன்னைத் தேடி ஒருத்தர் வருவாங்க! அவிங்களுக்கு நீ, உன் செக்ரட்டரி போஸ்ட் தரணும்! அதுக்கு, அவிங்களே ஒத்துக்காட்டாலும், நீ அதைச் செய்யனும்! நீ எனக்கு ப்ராஃபிட்ல ஷேர் கொடுக்காட்டியும் பராவாயில்லை. இவிங்களுக்கு வேலை மட்டும் கொடு.
ஏய் என்ன விளையாடுற? யாரு அது? எனக்கு ஏற்கனவே செக்ரட்டரி இருக்குல்ல! இவிங்களுக்கு ஏன்? அதுவும் ஒத்துக்காதவங்களை எதுக்கு வற்புறுத்தனும்?
டேய், சொல்றதைச் செய்! இப்ப ஃபோனை வை!!
அப்ப்பொழுதுதான் லாவண்யா என் நிறுவனத்திற்கு வந்தாள்!
அவளை நான் எதிர்பார்த்திருக்கவில்லை! அன்று என்னிடம் சண்டை போட்டவள், வீட்டில் என்னைக் கண்டு கொள்ளாதவள், இன்று என்னைத் தேடி வந்திருக்கிறாள்!
இப்பொழுது என் அக்காவின் பேச்சு புரிந்தது! அவள் ஏதோ செய்திருக்கிறாள், பேசியிருக்கிறாள்.
எனக்கு இன்னொரு விஷயமும் தெரியும். அவளுக்கு, இப்பொழுது வேலை மிகவும் அவசியம்!
எனக்கு அவளைப் பார்க்கப் பார்க்க கோவமாகவும் இருந்தது, பாவமாகவும் இருந்தது! எப்படி இருக்க வேண்டியவ?!
மெல்ல பெரு மூச்சு விட்டவன், உட்காரு என்றேன்!
உட்கார்ந்தவள், என்னையே பார்த்தாள்! எனக்கு வேலை வேணும்! அவ, உன்கிட்ட பேசிட்டேன்னு சொன்னா!
ஏன் பெங்களூர் போல?
ப்ச்… அவதான் வர விட மாட்டேங்குறாளே? இப்ப நீ வேலை கொடுக்குறியா இல்லையா?
நீ இண்டர்வியூவுக்கு வந்திருக்கியா இல்ல இண்டர்வியூ பண்ண வந்திருக்கியா?
அவள் முறைத்தாள். பின் கேட்டாள், அவ உன்கிட்ட பேசுனாளா இல்லையா?
ஆமா! பேசுனா, ஆனா, என் செக்ரட்டரி வேலைதான் காலியா இருக்கு! அது ஓகேயா?
அவளுக்கு வேறு வழி தெரியவில்லை! ஓகே என்றாள்!
நாளையிலருந்து ஜாயின் பண்ணிக்கோ!
ஏன் இன்னைக்கே வேணா கூட…
நான் அவளைக் கூர்ந்து கவனித்தேன்! அவள் முகத்தில்ஒரு விதத் தவிப்பு தெரிந்தது!
இன்னிக்கு ஜாயிண் பண்ணிக்கிறதுல பிரச்சினையில்லை! ஆனா, இது என் செக்ரட்டரி போஸ்ட்! உன் திறமையைப் பத்தி எனக்கு தெரியும்! ஆனா, நீ மேக்சிமம் என் கூட பல மீட்டிங்க்கு வர வேண்டியிருக்கும்! பல அவுட்சைட் ட்ரிப்புக்கு கூடத்தான்!
இங்கியும் என்னைப் பாக்குறதுக்கு முன்னாடி, உன்னைதான் எல்லாரும் பாக்க வேண்டியிருக்கும்! அதுனால, நீ, இப்படி டல்லா, சோகமா, வந்தா அது நல்லாயிருக்காது! அது உனக்கு மரியாதையாவும் இருக்காது!
சோ, போயிட்டு நாளைக்கு வா! ஆனா, எனக்குத் தெரிஞ்ச லாவண்யாவா வா! இப்படி வராத! என் லாவண்யாவுக்கு, எவ்ளோ கஷ்டமான விஷயத்துலியும், எப்படி தன்னை மீட்டெடுத்துக்கனும்னு தெரியும். நான் வேண்டுமென்றே, என் லாவண்யா என்று சொன்னேன்.
அவள் முறைத்தாலும், வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டாள்!
அவள் செல்லும் போது சொன்னேன். நேரத்தைப் பாத்தியா, என் மூஞ்சிலியே முழிக்கக் கூடாதுன்னு சொன்ன, ஆனா, இப்ப டெய்லி, என் மூஞ்சிலதான் முழிக்கனும் நீ! இல்ல?!
அவள் கடுப்பானாள். எல்லாம் என் நேரம் என்ன பண்றது என்றாள். அவள் என்னிடம் சண்டைக்கு நிற்கும் போதும், உரிமையுள்ளவனிடம் எடுத்துக் கொள்ளும் சலுகை போல்தான் இருந்ததே ஒழிய, வெறுப்பின் சாயல் எங்கும் இல்லை. எல்லாரும் ரொமான்ஸ் பண்ணி லவ் பண்ண வைக்கனும்ன்னா, நம்மாளை சீண்டி விட்டுதான் லவ பண்ண வைக்கனும் போல என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்
முறைத்தவளை அமைதியாக நெருங்கினேன். நான் நெருங்க நெருங்க, அவள் ஒரு வித தவிப்புக்கு உள்ளானாள். ஆனாலும், அசையாமல் அப்படியே நின்றாள். எவ்வளவு கோபமாகக் காட்டிக்கொண்டாலும், என்னுடனே இருக்கும் வேலை என்பது அவளுக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தந்தது என்பது தெரிந்தது.
பின் அவள் கண்களையேப் பார்த்துச் சொன்னேன். உனக்கு வேணா, என் முகத்துல முழிக்கிறது கஷ்டமா இருக்கலாம்! ஆனா, எனக்கு, இனி உன் முகத்துலதான் நான் முழிப்பேங்கிறது, ரொம்ப சந்தோஷமா இருக்கு! போய், நான் சொன்ன மாதிரி நாளைக்கு வா என்று சொல்லிவிட்டு விலகினேன்.
Posts: 439
Threads: 5
Likes Received: 907 in 316 posts
Likes Given: 360
Joined: May 2019
Reputation:
37
75.
அடுத்த நாள் வந்தாள்! எதிர்பார்த்த மாதிரியே மாறியிருந்தாள்!
நான் அவளை ரசித்து விட்டு, முன்னிருந்த செக்ரட்டரியைப் போய் பார்க்கச் சொல்லி, அவளுக்கான வேலைகளை சொல்லிக் கொடுக்கச் சொன்னேன். நேற்று பழைய செக்ரட்டரி வந்திருக்கவில்லை.
அவள் ரூமை விட்டு விலகும் போது, கூப்பிட்டேன்!
லாவண்யா!
திரும்பிப் பார்த்தாள்! மெல்ல எழுந்து அவளருகில் சென்றேன். அவளையேப் பார்த்தேன்!
மேக் அப் இல்லாத முகமே, அழகாய் இருந்தது! உணர்வுகளைச் சொட்டும் அவள் கண்களும், முகமும், இன்று எந்தச் சலனமும் இல்லாமல் வெறுமையாய் இருந்தது. அது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது! எந்த ஒப்பனையும் இல்லாத இயற்கையாகச் சிவந்திருந்த அவளது உதடுகள், கொஞ்சச் சொல்லி என்னைத் தூண்டின! அவளை இழுத்து அணைக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
பின் சொன்னேன். குட்! இதான் நல்லாயிருக்கு! இப்படியே டெய்லி வா!
அவள் முறைத்தாலும், உள்ளுக்குள், நான் அவளை ரசிப்பதைக் கண்டு, வெட்கமடைந்திருந்தாள்.
ஏனோ தெரியவில்லை. காலையில் மிக நன்றாக இருந்தவள், மதியத்தில் ஒரு மாதிரி இருந்தாள். மிகவும் டிஸ்டர்ப்டாக, தவிப்புடன் இருந்தாள்.
என்ன ஆச்சு என்று கேட்ட என்னையும் வெறித்துப் பார்த்தாள். அவள் கண் கலங்கியிருந்தது. எனக்கே மிகவும் வருத்தமாயிருந்தது.
தலைவலியா? ஏன் இப்டி இருக்க? வந்த முதல் நாளே நீ இப்டி இருந்தா, எல்லாம் என்ன நினைப்பாங்க? ம்ம்ம்?
நான் ஹாஃப் டே லீவ் எடுத்துக்கட்டுமா? ஒரு வித தவிப்புடன் கேட்டாள்.
அவ்ளோதான? போயிட்டு வா!
கதவருகே சென்றவளை, மனசு கேட்காமல் கூப்பிட்டு, அவளருகே சென்றேன்.
ஏய்... என்ன பிரச்சினைன்னாலும் சரி, சமாளிக்க முடியாதுன்னு ஒண்ணும் இல்லை! ஓகே?! நீ, என்னை நம்பாட்டியும் பராவாயில்லை. ஆனா, இனி என் அக்கா, ஹரீஸ் உனக்காக இருப்பாங்க! சரியா?! இப்டி ஃபீல் பண்ணாத! என்னால, உன்னை இப்படி பாக்க முடியலை! சின்ன வயசுலியே எதையெதையோ சமாளிச்சு வந்தவ நீ! புரியுதா? தைரியமா இரு!
என்னுடைய ஆறுதல், அவளது கண்ணீரை அதிகப்படுத்தியிருந்தது. என்னையே வெறித்துப் பார்த்தாள்.
அடுத்த நாள் வந்தவள், முழுக்க பழைய லாவண்யாவாக மாறியிருந்தாள். மிகுந்த ஆர்வமாக, நிறுவனத்தின் உயர்வுக்காக கற்றுக் கொள்ளவும், உழைக்கவும் ஆரம்பித்தாள்.
என்னிடமே ஒரு நாள் சொன்னாள். சான்சே இல்லை மதன். கடைசி ஒரு வருஷத்துல ஏகப்பட்ட சேஞ்சஸ். நல்ல இம்ப்ரூவ்மெண்ட்ஸ். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!
நான் அவளைப் பார்த்து புன்னகைத்தேன். ஒரு வருஷம் கூட இல்லை லாவண்யா! இதுல ரொம்ப முக்கியம் அந்த 8 மாசந்தான். வீட்டுக்கு கூட பல சமயம் போனதில்லை. போனாலும், அங்க எனக்குன்னு யாரும் இல்லை! அதுவும் கடைசி 4 மாசம், எங்கப்பா எப்படி எப்பிடியோ தொந்தரவு பண்ணார். ஒரு கட்டத்துல, சித்தியை அனுப்பி, அழுது எமோஷனல் டிராமால்லாம் போட ட்ரை பண்ணார். ப்ச்ச்… ரொம்ப கடுப்பான பீரியட் அது!
பழைய லாவண்யாவை வெளிக் கொண்டுவர, நான் வேண்டுமென்றே ஒன்று சொன்னேன்.
என் நிலைமையைப் பாத்தியா?! ஒரு பக்கம், சின்ன வயசுன்னு கூட பாக்காம, என்னை ஏமாத்தி என் சொத்தை அடைய நினைக்கிற சொந்த அப்பா ஒரு பக்கம்! இன்னொரு பக்கம், எவ்ளோ காசு, திறமை இருந்தாலும் பரவாயில்லை, ஆனாலும், வயசுல சின்னவனா போயிட்டதுனால வேணாம்னு சொல்லி தள்ளிப் போற நீ! எல்லாருக்கும் எளக்காரமா போயிட்டேன் இல்லை?!
அவ்ளோதான், லாவண்யா கடும் கோபமடைந்தாள்.
ஏய், இனி இந்த மாதிரி லூசுத்தனமா பேசுன கொன்னுடுவேன்!
உனக்கு என்னடா குறைச்சல்?
நானே உன்னை வேணாம்னு சொல்லியிருந்தாலும், ஏண்டா, அப்படிச் சொன்னோம்னு, என்னை நீ ஃபீல் பண்ண வைக்கனும்! அதான் உனக்கு கெத்து! நீ ஃபீல் பண்ண வைப்பன்னு எனக்கு தெரியும்… அதை விட்டுட்டு, இனி இப்படி உளறுன… என்று விரலைக் காட்டி எச்சரித்து விட்டுச் சென்றாள்.
லாவண்யா ஈஸ் பேக் டூ ஃபார்ம்! நான் பாஸாம்… இவ செக்ரட்டரியாம்! என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.
இப்படியே இரண்டு வாரம் சென்றது! இப்பொழுதெல்லாம் என்னைக் கோபமாகப் பார்ப்பதில்லை. அதே சமயம், அவள் ஏன் அந்தச் சமயத்தில், என்னைத் தேடி வரவில்லை என்று தெரிந்து கொள்ள நெருங்கினால், என்னைப் பார்வையாலேயே முறைப்பாள்.
இடையே ஒரு முறை என்னைத் தேடி வந்தாள்!
என்ன லாவண்யா?
அந்த பர்சேஸ் இஞ்சினியர், கொஞ்சம் தப்பா பேசுறான்.
யாரு, மணியா?
ம்ம்…
என்ன பண்றான்? உன்கிட்ட தப்பா நடந்துகிட்டானா?
அப்படி இல்ல, ஆனா, நான் இருக்கிறப்ப, அவன் ஃபிரண்டுகிட்ட வேணும்னே தப்பா பேசுறான்!
என்னான்னு?
அவள் உதடுகளைக் கடித்தாள்!
சொல்லு!
நா… நான் சின்ன வயசுலியே புருஷனை உதறிட்டு வந்தவ, அதுனால என்னை ஈசியா கரெக்ட்… அதற்கு மேல் அவளால் சொல்ல முடியவில்லை!
எனக்கு உள்ளுக்குள் கோபம் வந்தாலும், கேட்டேன்.
உன்கிட்ட நேரடியா சொன்னானா?
இல்ல! ஆனா, நான் அவனை கிராஸ் பண்றப்ப, இல்லாட்டி என் காது பட, அவன் ஃபிரண்டுகிட்ட பேசுறான்.
இதுக்கு, நான் என்ன ஸ்டெப் எடுக்கனும்னு எதிர்பாக்குற?
இப்போது அவளுக்கு கோபம் வந்தது!
நீ, ஒண்ணும் பன்ண வேணாம். உன்கிட்ட சொல்ல வந்தேன் பாரு, என்னைச் சொல்லனும்!
இப்போது நானும் கோபம் அடைந்திருந்தேன்.
ஆமாண்டி, ஆசிட் அடிக்க வந்ததுக்கு, தப்பா பேசுறதுக்கு, எல்லாம் என்கிட்ட வந்து சொல்லு. வாழ்க்கைல, முக்கியமான கட்டத்துல என்கிட்ட வரனும்னு தோணலைல்ல? அப்புறம் என்னாத்துக்கு கண்ணாலியே பேசுன? என்னை ஆசையாப் பாத்த?
அவள் என்னையே வெறிக்கப் பார்த்தாள்! அவள் கண்களில் கண்ணீர்! அவள் உதடுகள் துடித்தது! வேகமாக ரூமை விட்டுச் சென்று விட்டாள்!
அன்று மதியம்… லஞ்ச் டைம்!
வேண்டுமென்றே, லாவண்யாவிற்கும், அந்த பர்சேஸ் மேனேஜர் மற்றும் அவனது ஃபிரண்டுக்கு கொஞ்சம் வேலை கொடுத்து, தாமதமாக லஞ்ச்க்கு செல்வது போல் ஏற்பாடு செய்திருந்தேன்!
மீன் தூண்டிலில் மாட்டியது!
Posts: 3,159
Threads: 0
Likes Received: 346 in 315 posts
Likes Given: 1,312
Joined: Nov 2018
Reputation:
9
|