Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் ரோஷம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூட அறியாது அவள் செய்து கட்டி வைத்த உணவை எடுத்துக் கொண்டு வழக்கம் போல வீட்டை விட்டு கிளம்பினான் குமார். அவன் கிளம்பும்போது பெட்ரூமில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தாள் சங்கீதா “disgusting object” என்று முனுமுனுத்துகொண்டாள். (disgusting தமிழில்: அருவருப்பான ஒன்று). அங்கும் இங்கும் கையில் சிக்காமல் திறிந்த ரஞ்சித்தையும், சமத்தாக அம்மாவுக்கு உதவியாய் அனைத்தையும் செய்து குடுக்கும் ஸ்நேஹாவையும் அவர்களது ஸ்கூல் வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டில் யாரும் இல்லாமல் கொஞ்சம் அமைதியாய் ஹாலில் மீண்டும் அமர்ந்தாள். சற்று முன்பு நடந்த விஷயங்களை நினைக்க விரும்பவில்லை, எனவே தனது mobile phone எடுத்தாள், அதில் “message from Raghav” என்று இருந்தது. பரவசமாய்ப் பார்த்தாள் “did you reached home safely?” என்று நேற்று இரவு இரண்டு மணி அளவில் அனுப்பி இருந்தான். பதிலுக்கு மெசேஜ் அனுப்புவதற்கு மாறாக ராகவ்க்கு கால் செய்தால் சங்கீதா.. “ஹலோ….” – திருவிழா கூட்டத்தில் தொலைந்த குழந்தை தாயைத் தேடுவது போல எப்போது அவன் குரலைக் கேட்க முடியும் என்று தவித்தது சங்கீதாவின் மனது. “ஹலோ சங்கீதா” – களைப்பான குரலில் பேசினான். இதுநாள் வரை இல்லாது இப்போது அவன் குரல் கேட்க்கையில் கன்னத்திலும், கைகளிலும் ஊசி முடிகள் எழுந்து நின்றது. மகிழ்ச்சியில் கண்கள் சிறிதளவில் அகலமானது, இதழ்கள் அதன் பங்குக்கு இரு புறமும் அழகாய் விரிந்தது இந்த தேவதைக்கு அவள் தேவனின் குரல் கேட்டது.
“sorry என்னால நேத்து ராத்திரி phone பண்ண முடியல அதான் மெசேஜ் அனுப்பினேன். ராத்திரி ஒன்னும் problem இல்லைல? – என்றான் ராகவ். “அதெல்லாம் ஒன்னும் இல்லைடா, முதல்ல உனக்கு காயம் எப்படி இருக்குன்னு சொல்லு?” “இதெல்லாம் சின்ன விஷயம்தான் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்க, சாவியால கீரினதால எதுவும் septic ஆகப் போறதில்ல, இருந்தாலும் ஆயிடக் கூடாதுன்னு கொஞ்சம் மருந்து குடுத்து இருக்காங்க. “பைத்தியமாடா நீ? அவனைத் தப்பிக்க வைக்க வேற வழி தெரியாதா என்ன? சும்மாவே ஓட விட்டிருக்கலாம் இல்ல, மனசுல பெரிய கமல்னு நெனைப்பா? ரொம்பவே ஓவர் ஆக்டிங் பண்ணுற!.. அங்கேயே உன்னை காலர் புடிச்சி ஒரு அறை அறைஞ்சிட்டு வந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன். மௌனமாய் எதுவும் பேசாமல் சங்கீதாவின் அண்பு கலந்த அக்கறையான வார்த்தைகளை ரசித்தான் ராகவ். அவள் பேச பேச அது அவனுக்கு கீறல் விழுந்த நெஞ்சுக்கு மருந்தாய் இருந்தது “ராகவ்…” “உம்..” இஸ்ஹ்ம்ம் (ஒன்றும் பேசாமல் கொஞ்சம் பேரு மூச்சு விட்டாள் சங்கீதா..) “என்ன சொல்லுங்க…” “ஒன்னும் இல்ல, (சில நிமிடங்கள் மௌனம்..) நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் டா. வண்டி அனுப்பி வைக்க முடியுமா? I want to see you டா.. please” – எப்படியாவது பார்க்க வேண்டுமென்று அவள் மனது கேட்பதை ராகவ் உணர்ந்தான். “என்ன கேள்வி இது சங்கீதா, one minute please” – என்று சொல்லிவிட்டு பக்கத்தில் உள்ள intercom phone ல் சஞ்சனாவை அழைத்து “சங்கீதா வீட்டுக்கு உடனே நம்ம company வண்டிய அனுப்புங்க please” என்றான். அவன் பேசுவதை phone ல் கவனித்து “thanks டா..” – என்றாள் சங்கீதா. “என்ன விஷயமா சங்கீதா பார்க்கணும்?” – என்றான் ராகவ் ஒன்றும் தெரியாதவனாய் . “உம்…. பஜ்ஜி மாவு பத்தியும் வடை மாவு பத்தியும் பேசுறதுக்கு டா” – என்று பொய்யான கோவத்தில் சிரித்து பேசினாள் சங்கீதா. “ஹா ஹா ஹா, சரி சரி சொல்லுங்க..” “கொஞ்சம் மணசு சரி இல்லைடா…..(சில நொடி மௌனங்களுக்கு பிறகு தொடர்ந்தாள்) நீ ஏண்டா இப்படி எனக்கு ஒரு லெட்டர் குடுத்த?” – வார்த்தைகளை முடிக்கும்போது லேசாக அழ ஆரம்பிக்கும் குரல் கேட்டது ராகவ்க்கு. சங்கீதா ப்ளீஸ்… என்னாச்சு? நான் சொன்னது தப்புன்னு தொனுச்சின்னா விட்டுடுங்க. நீங்க உங்க வேலை குடும்பம்னு கவனிங்க – என்று ராகவ் அக்கறையாக பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் குறுக்கிட்டு நிறுத்தினாள் சங்கீதா. “என்னுடைய தனிப்பட்ட இறுதி முடிவை நாந்தான் எடுக்கணும், அதைப் பத்தி சொல்லுறதுக்கு நீ யாருடா?” – அமர்ந்திருக்கும் chair நுனிக்கு நிமிர்ந்து வந்து எதிரில் உள்ள கண்ணாடியின் முன் முறைத்துக் கொண்டு சத்தமாக உரிமையுடன் கொஞ்சம் கோவமாக கத்தினாள். ஏதோ தன்னிடம் இருந்து பறிக்கப் படுவது போல. “இல்ல அது வந்து…” – ராகவ் க்கு ஒரு நொடி ஏன் இப்படி பேசினோம் என்றிருந்தது. இன்று வரை சங்கீதா இப்படி கோவத்தில் கத்தி அவன் கேட்டதில்லை. “Will you just shut up?” – மீண்டும் குரல் உச்சத்துக்கு போனது சங்கீதாவுக்கு… கண்ணாடியில் கண்கள் முறைத்தன. “நீ கொட்ட வேண்டியத எல்லாம் கொட்டிட்ட நான் என்ன சொல்லணும் னு நினைக்கிறேனோ அதை நான் தான் சொல்லணும், அதுக்கும் நீயே பதில் சொல்லிகிட்டா அப்புறம் நான் நடுவுல உப்புச்சப்பானா?” correct… correct னா?, அப்போ நான் உப்புச்சப்பானா? அய்யோ…. இல்ல இல்ல உங்க முடிவு உங்கள் கையில் னு நீங்க சொன்னது correct னு சொன்னேன். (சில நொடிகளுக்குப் பிறகு தொடர்ந்தான்) ஹ்ம்ம்.. என் கடிதத்துல ஒரு விஷயம் எழுத மறந்துட்டேன். என்னது? – சங்கீதாவின் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு இருப்பதை அவள் முன்பு இருக்கும் கண்ணாடி மட்டும் அறிந்தது. ஆனால் அவனுடன் பேசும்போது வாயின் மீது கை வைத்து மூடி அந்த சிரிப்பின் சத்தத்தை மறைத்தாள் இந்த தேவதை. “வெடிக்கும் எரிமலையிடம் என் தேவதையின் கோவத்தைப் பார்த்தால் நீ கூட அமைதியாய் அடங்கி விடுவாய்” னு எப்படி? correct தானே?” – என்று ராகவ் சொல்ல…. அதற்கு பாதி கோவமும், பாதி சிரிப்பும் கலந்து என்ன பேசுவதென்றே தெரியாமல் அமைதியாய் இருந்தாள் சங்கீதா. “ஹலோ என்ன ஆச்சு?” – என்றான் ராகவ். “ஒன்னும் இல்ல.” – மெதுவாக முந்தானையின் நுனியை பிடித்து திருகிக் கொண்டே சத்தமில்லாமல் முணுமுணுத்தாள் . – இது அப்படியே ஒரு காலத்தில் ரமேஷ் அவளது வாழ்க்கையில் இருக்கும்போது சங்கீதாவுக்கே உரிய அக்மார்க் குணம்….. ஏன் பல பெண்களுக்கே உரிய குணமும் கூட. “ஒன்னும் கேட்கல, திருப்பி சொல்லுங்க please” – என்றான் ராகவ். “ஒன்னும் இல்ல னு சொன்னேன்..” – சத்தமாக கத்தி கூறினாள்..
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
“நான் ஒன்னு கேட்டா தப்பா நினைசிகாதீங்க ப்ளீஸ்..” “நீ கேட்க்குறதை ப் பொறுத்துதான் அது இருக்கு.. கேளு’” – என்றாள் “சரி, ஆரம்பத்துல நல்லாதானே பேச ஆரம்பிச்சீங்க? ஏன் போக போக என் கிட்ட கோவத்துல கத்துறீங்க?” “கோவமா..? கோவம் இல்லையே…. எதுக்கு நான் உன் கிட்ட கோவப்ப்படனும்?” “ஒஹ்ஹ்… அப்போ அதுக்கு பேரு கோவம் இல்லையா?” “இல்ல….” – கண்களை மூடி மென்மையாக சிரித்து பேசினாள். “நிஜம்மா?” சங்கீதாவிடம் மௌனம்…. “ஹலோ ஹலோ ஹலோ….” மீண்டும் சங்கீதாவிடம் மௌனம்…. “சரி line கட் ஆயிடுச்சி போல இருக்கு….” – என்று சொல்லி ராகவ் mobile cut செய்யும் போது… “ஹலோ….” – என்றாள் மெதுவாக. “ஹ்ம்ம்… line cut பண்ணுறேன்னு சொன்னாதான் சத்தமே வருது..” “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நான் பேசிட்டுதான் இருந்தேன் உனக்கு கேட்கல.. காது செவிடாகிடுச்சி போல இருக்கு” – மீண்டும் அவளின் முந்தானையின் நுனி அவளிடம் மாட்டிக்கொண்டு “யாராவது காப்பாத்துங்க” என்று தவித்தது.
நீங்க மனசுக்குல்லையே பேசிக்கிட்டா எனக்கு எப்படி கேட்க்கும்? ஹா ஹா…” “சப்.. போடா…” – இப்போது காற்று அதிகம் + குரல் கம்மி சங்கீதாவிடம். “ஹா ஹா ஹா….” – சங்கீதாவின் மனதை திருடிய அதே வசீகர சிரிப்பு ராகவிடம். “உன் மனசுல ஏன் என்னைப் பத்தி அப்படி ஒரு எண்ணம் ராகவ்?” “என்ன எண்ணம்?” “உனக்கு தெரியும்? பதில் சொல்லு..” “ஹ்ம்ம்…. நிறைய காரணம் உண்டு..” “என்னென்ன சொல்லு, எனக்கு தெரிஞ்சிக்கணும். மணசு குழப்பத்துல இருக்கு.. உன்னைப் பத்தின விஷயத்தை உன் கிட்டேயே பேச வேண்டியதா இருக்கு.” “ஏன்?” என்ன ஒரு confusion இருந்தாலும் உன் கிட்டதான் மணசு விட்டு பேசுவேன், நீ சொல்லுற பதில்ல அர்த்தம் இருக்கும், convincing ஆ இருக்கும். அதாண்டா… இதைப் பத்தி நான் ரம்யா கிட்ட கூட பேசல. கூடவே மத்தவங்க கிட்ட நான் இதைப் பத்தி பேசவும் கூடாது…. (சில வினாடிகள் மௌனம்) ப்ளீஸ் பேசு ராகவ்.” “எனக்கு மனசுல…” – ராகவ் பேச ஆரம்பித்தான்.. “டிங்…. டிங்….” – calling bell அடித்தது. சரி வண்டி வந்திருக்கும்னு நினைக்குறேன். வந்து பேசுறேன் – என்றாள். “ஒஹ் சரி சரி வாங்க, I will be waiting for you..” – ராகவ், சங்கீதா இருவருமே ஒருவருக்கொருவர் எப்போது தங்களது முகங்களைப் பார்த்துக் கொள்வோம் என்று அடி வயற்றில் கிச்சி கிச்சி ஏற்படும் வண்ணம் பரவசம் அடைந்தனர். கதவைத் திறந்தாள் சங்கீதா. டிரைவர் தாத்தா “வணக்கம் மா, எப்படி இருக்கீங்க?” – என்று வழக்கமாக வழிய “இருங்க ஒரு நிமிஷம் வந்துடுறேன்” என்றாள். உள்ளே சென்று அவளுடைய டைரியும் பேனாவையும் எடுத்துக் கொண்டு சேலையை கண்ணாடியின் முன்பு எப்படி இருக்கிறது என்று பார்த்தாள். வலது புறம், இடது புறம் என்று திரும்பி பார்த்துவிட்டு ஏதோ ஒரு நொடி யோசித்தாள். பிறகு லேசாக கொசுரை தொப்புளுக்கு கீழ் கொஞ்சமாக இறக்கி இடுப்பின் இரு புறமும் V வடிவில் கொண்டு சென்று பின்புறம் இடுப்புக்கும் முதுகுக்கும் இடையே இருக்கும் சதைப் பகுதியை மறைத்து பக்கவாட்டிலும் மறைத்தவாறு கட்டி இருந்தாள். – இந்த வகையில் கட்ட வேண்டும் என்பது அவளுடைய பிரத்யேக விருப்பம். அதை அட்ஜ்ஸ்ட் செய்து கட்டிக்கொண்டு கண்ணாடியை ப் பார்த்து “hereafter I will live my life like how I want to lead it & will never allow it in other’s hand & I dont bother about what others think” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு பக்கத்தில் உள்ள புது குண்டுமல்லியை தலையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 72
Threads: 0
Likes Received: 26 in 18 posts
Likes Given: 12
Joined: Aug 2019
Reputation:
0
romba pidicha kadhai. thodarnthu update kudunga.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சங்கீதா - இடை அழகி 66
(தமிழில்: (hereafter I will live my life like how I want to lead it & will never allow it in other’s hand & I dont bother about what others think) – என் வாழ்கையை இனி என் விருப்பப்படிதான் வழி நடத்திக் கொள்வேன், யாருக்கும் அதில் குறிக்கிட இனி உரிமை கிடையாது. மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலையும் கிடையாது.) டிரைவர் தாத்தா மிதமான வேகத்தில் Benz காரை ஒட்டிச்செல்லும்போது பின் இருக்கையில் கண்களை மூடி சாய்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள். வாய் நிறைய தோழிகளும், கூட்டமும் அவளது நடனத்தை பாராட்டியதை நினைத்து மகிழ்ந்தாள், தொகுத்து வழங்கும்போது ஆங்கிலத்தில் பேசிய உச்சரிப்பை ரொம்பவும் கச்சிதமாக இருந்தது என்று பலரும் பாராட்டியதை எண்ணி சிலிர்த்தாள். பிரபலங்கள் பலர் அவள் கண் முன் நின்று பாராட்டியது அவளுக்கு வாழ்வில் என்றும் மறக்க முடியாத சந்தோஷ பதிவுகள். சிறு வயதில் இருந்து ஒரு முறையாவது நேரில் பார்க்க முடியுமா என்று ஏங்கிய ரஜினியை பக்கத்தில் பார்த்துப் பாராட்டு பெற்றதை எல்லாம் நினைத்து கண்களை மூடி சந்தோஷத்தில் மெளனமாக சிரித்துக் கொண்டாள். இவைகள் அனைத்தையும் எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு “இதுக்கெல்லாம் காரணம் நீதாண்டா, எனக்குள்ள இருக்குற இன்னொருத்திய எனக்கு காமிச்சிட்டடா, you are simply great da….” என்று அவள் உதடுகள் மெளனமாக ராகவைப் பாராட்டி உச்சரித்துக் கொண்டிருந்தது.
கார் நேற்றைய அலங்காரங்கள் முழுவதுமாய் கலைக்காமல் இருந்த IOFI வளாகத்துக்குள் சென்றது. ராகவின் cabin entrance முன்பு நிறுத்தப் பட்டிருந்த வண்டியின் கதவை சஞ்சனா திறந்து. “வாங்க சங்கீ…. என்ன.. நல்ல தூக்கமா நேத்து….” “ஹ்ம்ம்…. தூக்கம் இல்லை, முழுக்க முழுக்க துக்கம் தான்” – என்றாள் சங்கீதா “ஏன் என்னாச்சு?” “ஒன்னும் இல்ல personal….” – என்று சங்கீதா சொல்ல, நாகரீகமாக மேலும் தொடராமல் நிறுத்திக்கொண்டாள் சஞ்சனா. “ராகவ் பார்க்கணும், எங்கே இருக்கான்?” – ஆர்வமாக அவனது cabin நோக்கி பார்த்தாள் சங்கீதா. அவன் clinic ல இருக்கான்.. – என்று சஞ்சனா சொன்னதும் “clinic அ என்னாச்சு?” – ராகவ் பேசும்போது இதை நம்ம கிட்ட சொல்லவே இல்லையே என்று லேசாக குழம்பினாள். நெஞ்சுல ஏதோ கல்லு கொஞ்சம் குத்திடுச்சாம், சரி நேத்து ராத்திரி படபடக்க ராகவ் என் கிட்ட audiences & celebrities (தமிழில்: பார்வையாளர்கள் மற்றும் பிரபலங்கள்) பார்த்துக்கோ நான் இதோ வந்துடுறேன் ன்னு சொல்லிட்டு அவசர அவசரமா ஓடினான், என்ன விஷயம் மேடம்? – என்று கேட்க.. “அது ஒன்னும் இல்லை சஞ்சு…. சமயம் வரும்போது சொல்லுறேன். இப்போ ராகவ் எங்கே?” “சரி சரி இந்தப்பக்கம் வாங்க” – என்று சொல்லி IOFI வளாகத்துக்குள் இருக்கும் executives personalized clinic உள்ளே அழைத்து சென்றாள். (தமிழில்: executives personalized clinic: உயரதிகாரிகளின் தனிப்பட்ட மருத்துவமனை.)
கதவைத் திறந்ததும் சங்கீதாவுக்கு லேசான மனக் கஷ்டம், காரணம் ராகவின் நெஞ்சில் கெட்டியான பஞ்சு வைத்து மார்பில் பிளாஸ்டர் போடப் பட்டிருந்தது. தலை முடியை free யாக விட்டு hair band போட்டிருந்தாள் சங்கீதா, வழக்கமான குண்டு மல்லியுடன், dark maroon சேலையில் பளிச்சென இருந்தாள். சஞ்சனவுடன் உள்ளே சென்று ராகவ் அருகே அமர்ந்தாள். “ஹாய்… வாங்க சங்கீதா..” – உற்சாகமாய் சொன்னான் ராகவ். “சஞ்சனா we want to have some private time, hope you understand, please” – என்று ராகவ் சொல்ல சஞ்சனா அங்கிருந்து விடைப் பெற்றாள். (தமிழில்: we want to have some private time, hope you understand, please- எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் தனிமை வேணும் ப்ளீஸ்..) சங்கீதாவின் இடுப்பருகே அவள் சேலை கட்டிய புதிய விதத்தை ராகவ் பார்க்க தவறவில்லை. வழக்கத்துக்கு மாறாக அவள் style இருப்பதைப் பார்க்கையில அவன் காதலை அவள் ஒப்புக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று நம்பிக்கை தந்தது ராகவ்க்கு. அவனது special ரூம் உள்ளே ஒரு சிறிய TV ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் சில நேரம் என்ன பேச ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமர்ந்திருக்க ராகவ் லேசாக தொண்டையை “க்ஹம்” என்று கரகரத்தான்.. இப்போது சங்கீதாவே ஆரம்பித்தாள். “சொல்லு ராகவ், எது வெச்சி என்னை உன் மனசுல எனக்கு அந்த இடம் குடுத்த?” – வீட்டில் இருந்து கிளம்பும்போது எதில் விட்டாளோ அதில் இருந்து துல்லியமாக ஆரம்பித்தாள் சங்கீதா. “அட…. correct ஆ எங்கே phone ல விட்டீங்களோ அதுல இருந்து ஆரம்பிக்கிரீங்களே? ஹா ஹா” – ராகவ் பேசுகையில் சங்கீதா தன் தலையை குனிந்து வைத்திருந்தாள் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை அவளாள். “சப்.. கேள்விக்கு பதில் சொல்லு ராகவ்.” – மீண்டும் முந்தானை நுனியை எடுத்து திருக, அதை ராகவ் கவனிக்கிறான் என்று தெரிந்து அதை கீழே விட்டாள். “ஹ்ம்ம்.. சொல்லுறேன்…. என் வாழ்க்கைல இன்னிக்கி வரைக்கும் எல்லாமே எனக்கு நான் மட்டுமே தான் செஞ்சிக்கிட்டேன். படிப்பாகட்டும், வேலைல முன்னேருறதாகட்டும், என் எதிரிங்க கிட்ட என்னை காப்பதிக்குறதாகட்டும், என் போட்டியாளர்களை சமாளிக்குறதாகட்டும், என் சந்தோஷம், என் தனிமை, என் விருப்பு, வெறுப்புகள், என் ரசனைகள் எல்லாமே ரொம்ப ரொம்ப வித்யாசமானது. எல்லார்கிட்டயும் நட்பா பழகுவேன் ஏன்னா அது என்னோட பதவிக்காக, ஆனா மனசார சொல்லனும்னா என் குணத்தை சரியா புரிஞ்சி நடந்துக்குற பெண் யாரும் என் வாழ்க்கைல இன்னிக்கி வரைக்கும் வரல. “ஆனா உனக்கு இன்னும் வயசு இருக்கு ராகவ்..” – இப்போது ராகவின் முகத்தை நேரில் பார்த்து பேசினாள். ஆனால் அந்த கண்களை மட்டும் அவளாள் முடியாது, அப்படி ஊடுருவிப் பார்த்து மனதின் ஆழத்துக்கு செல்லும் சக்தியுடையது அவன் கண்கள். “வயசு கம்மியா இருக்கட்டும், ஆனா என் கிட்ட ஒரு குணம் இருக்கு, ஒரு விஷயம் புடிச்சி போறா மாதிரி இருந்தா அதை ப் பத்தி நிறைய யோசிச்சி யோசிச்சி பார்ப்பேன், ஒரு தடவைக்கு பத்து தடவ யோசிப்பேன். கடைசியா என்னால அந்த பெண் இல்லாம வாழவே முடியாதுன்னு என்னை உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு தள்ளி விடுற அளவுக்கு என் மணசு எப்போ என்னை கட்டாயப் படுத்துதோ அப்போதான் நான் என் காதலை உணரனும் னு யோசிச்சி இருந்தேன். உங்களுக்காக சொல்லல சத்தியமா இன்னிக்கி வரைக்கும் யார் கிட்டயும் எனக்கு இப்படி தோணல. (சில நொடிகள் மௌனத்துக்கு பிறகு….) உங்களைத் தவிர…..” – என்று முடித்தான் ராகவ். சங்கீதாவிடம் ஆழ்ந்த மௌனம்… மனசளவுல நீங்க உங்களுக்கு ஏதாவது குழப்பம் இருந்தா என் கிட்ட பேசி கொட்டிக்குறேன்னு சொன்னீங்க, ஆனா நிஜத்துல நானும் உங்க கிட்ட பேசும்போதுதான் அப்படி feel பண்ணுறேன். யார் கிட்டயும் அந்த wooden piece மேட்டர் நான் சொன்னதில்லை. ஆனா உங்க வேலைல நீங்க காமிக்குற கெட்டிக் காரத்தனம் என்னை வியக்க வெச்சது. அதுதான் உங்க மேல நம்பிக்கை வெச்சி இந்த விஷயத்தை உங்க கிட்ட சொல்லலாம்னு தோன வெச்சது. ஆரம்பத்துல இது உங்களால முடியாதுன்னுதான் நானும் நினைச்சேன் ஆனா அதுக்கான checmical composition கண்டு புடிக்குற அளவுக்கு முயற்சி எடுத்து இருக்கீங்க.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
“ஆனா அதெல்லாம் நான் என்னோட சொந்த விருப்பதுல உனக்காக உதவ செஞ்சது ராகவ்… அதுக்காகவா என்னை நீ காதலிக்குற?” – அவனுடைய வயதை மனதில் வைத்து ஏன் இந்த காதலில் அவன் விழ வேண்டுமென்ற எண்ணத்தில் சொன்னாள் சங்கீதா…. “இல்லை…. என்னைக் கொஞ்சம் பேசி முடிக்க விடுறீங்களா? ப்ளீஸ்” “இஸ்ஹ்ம்ம் (கொஞ்சம் பெருமூச்சுவிட்டு) சரி சொல்லு…” – என்றாள். “ஒரு உண்மைய சொன்னா ஒத்துகுவீன்களா?” மௌனமாய் கேள்விக்குறியுடன் ராகவின் முகத்தைப் பார்த்தாள் சங்கீதா.. “what?.. கேட்கவா?” “ஹ்ம்ம் கேளு..” “உங்க கிட்ட நான் மணிக்கணக்குல பேசும்போது எல்லாம் நீங்க என் பேச்சை மட்டும் ரசிச்சா மாதிரி எனக்கு தெரியல.. ஏதோ ஒன்னு உங்களை என் பக்கம் கவனமா பார்க்க வெச்சி இருக்கு அது என்னென்னு எனக்கு தெரியாது, but I could feel it. இது மட்டும் எனக்கு நிச்சயமா புரிஞ்சிக்க முடிஞ்சிது. கரெக்ட் தானே?” (உள் மனதில் பழைய மறக்க முடியாத ரமேஷ் காதல் தான் அதற்கு காரணம் என்று சங்கீதாவுக்கு echo ஒலித்தது, ஆனால் வாய் திறந்து சொல்லவில்லை) அது உண்மையா இல்லையா? ராகவின் கேள்விக்கு ஆழமான மௌனம் இருந்தது அவளிடம். “வெளிப்படையா பேசலாம் ப்ளீஸ்… ஹானஸ்ட் பதில் வேணும்.” – ராகவ் தொடர்ந்தான் மீண்டும் மௌனமாகவே இருக்க ராகவ் “இந்த மௌனத்தை நான் ஆமாம் னு எடுத்துக்கவா?” இதற்கும் சங்கீதாவிடம் மௌனம்… சரி அப்போ நான் சொன்னது உங்களை பொருத்த வரைக்கும் correct… இப்போ என்னோட பதிலை சொல்லுறேன். உங்க மனசுல எந்த ஆம்பளைங்க கூடவும் நீங்க இப்படி மணிக் கணக்குல பேசினது இல்ல, அது மட்டும் இல்லாம இந்த function க்கு compering பண்ண உங்க அந்தஸ்துல இருக்குற பெண் யாரா இருந்தாலும் யோசிப்பாங்க. ஆனா நீங்க எனக்காக ஒத்துக்கிட்டீங்க. இதெல்லாம் வெச்சிப் பார்க்கும்போது உண்மையிலேயே உங்களுக்கு என் மனசுல ஒரு உன்னதமான இடம் இருக்குன்னு தெரிஞ்சுது. உலகத்துல கோடிக் கணக்குல சம்பாதிக்கிறது, ஒரு உயர் பதவிக்கு கிடு கிடுன்னு முன்னேருறதெல்லாம் எனக்கு பெரிய காரியமே இல்லை. ஆனால் பொறந்ததுல இருந்து இப்போ வரைக்கும் மனசளவுல நான் அண்பு விஷயத்துல ரொம்பவே காயப் பட்டு நொந்திருக்கேன். உண்மையாவே உலகத்துல சாதனை படைக்கிற விஷயம் எதுன்னு என்னை கேட்டால் அது ஒரு நல்ல குணாதிசயங்கள் உள்ள குறிக்கோள்கள் உடைய, சமுதாயத்துல எடுத்துக் காட்டா இருக்குற ஒரு மரியாதை வாய்ந்த பெண்ணோட இதயத்துல இடம் பிடிக்குறதுலதான் இருக்கு. அப்படி நான் இடம் பிடிச்சி இருக்கேனா னு எனக்கு தெரியாது. ஆனா நான் சொல்ல விரும்பினதை சொல்லிட்டேன். சத்தியமா நீங்க எனக்குன்னு வெச்சி இருக்குற அன்பை நான் இழக்க விரும்பல. “நான் கேட்க்குறேன்னு தப்பா நினைக்காத ராகவ், உன் காதல் என் வெளித் தோற்றத்தைப் பார்த்து வந்திருக்கலாம் இல்ல? ஏன்னா உன் வயசு அப்படி டா, என்னை தப்பா நினைக்காத உன் மேல இருக்குற அக்கறையில்தான் கேட்க்குறேன்.” “ஹா ஹா… எல்லாத்தையும் logic படி யோசிக்குற நீங்க எப்படி இதை மட்டும் தப்பா யோசிக்குறீங்க சங்கீ, எனக்கு இருக்குற காசுக்கும் அந்தஸ்துக்கும் காம சுகம் மட்டும் தான் வேணும்னா நான் தினமும் ஒரு சினிமா நடிகை கூட இருக்க முடியும். ஆனா இது உடல் உரசுர சந்தோஷம் இல்ல, மணசு உரசுர சந்தோஷம். என் மனசுல உங்க நினைவுகளும் உணர்வுகளும் உரசுரது எனக்கு எந்த விஷயத்துலயும் கிடைக்காத சந்தோஷம். “என்.. எனக்கு.. (பேச தயங்கினால் சங்கீதா.) ஆனா நான் ஏற்கனவே கல்யாணம் ஆணவ, ரெண்டு பசங்களுக்கு தாய், அதையும் தாண்டி தான் யோசிச்சியா?”
“ஹ்ம்ம்… வாழ்க்கைல நான் இன்னைக்கி வரைக்கும் வரை முறைப் படி தான் வாழனும் னு வாழ்ந்திருந்தா ஒரு மண்ணாங்கட்டியும் சாதிச்சி இருக்க முடியாது. என் வேலை உட்பட. அதுக்காக குறுக்கு வழியைத் தேர்ந்தேடுப்பவன்னு தப்பா நினைக்க வேண்டாம், மனசுக்கு ஒரு விஷயம் பிடிச்சி அதுவும் நம் கண்ணு முன்னாடி இருக்குறப்போ அதை எடுத்துக்குறதும் எடுத்துகாததும் நம்ம விருப்பம். எந்த விஷயத்தையும் அடைய ஒரு protocol (வழிமுறை) இருக்கு, அந்த வகையில ரொம்ப ஆழ்ந்த சிந்தனைக்கு அப்புறம் தான் என் காதலை உங்க கிட்ட ஒரு கடிதம் மூலமா சொன்னேன்…… தடைகளை எல்லாம் தாண்டிதான் என் முடிவை நான் எடுத்தேன். அதாவது நான் என் காதலைப் பொருத்த வரை என்னை விட முதிர்ச்சி அடைஞ்ச பெண், இரண்டு குழந்தைக்கு அம்மா, அப்படின்னு எல்லாம் யோசிக்கல, என்னைப் பொருத்த வரை உங்களை நான் மனசார விரும்புறேன். ஒரு ஒரு தடவையும் உங்க கூட பேசும்போது என் மனசுல ஏற்படுற சந்தோஷம் நான் சம்பாதிச்சி இருக்குற அத்தனை காசையும் எங்கயாவது கொண்டு போய் கொட்டினாலும் கிடைக்காது. எனக்குன்னு இன்னைக்கு ஒருத்தரை நான் நம்பி எல்லாத்தையும் பகிர்ந்துக்க முடியும்னா அது நீங்க ஒருத்தர் மட்டும்தான். infact ஒரு விஷயம் சொல்லவா? சொல்லு.. – நிமிராமல் குனிந்துகொண்டே கேட்டாள்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 2
Threads: 0
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Jul 2019
Reputation:
0
Semmma
Sk
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சங்கீதா - இடை அழகி 67
என் காதலி எப்படி இருக்கணும் னு யோசிச்சேன் தெரியுமா? எப்படி? – சற்று பணித்த கண்களுடன் குனிந்து அவனது பதிலை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கினாள். “என் மனசுல இடம் பிடிக்குறவ எனக்கு வெறும் காதலியா இருக்கக்கூடாது, அக்கறை காமிக்குறதுளையும் அண்பு செலுத்துறதுலயும் அவ எனக்கு இன்னொரு அம்மாவா இருக்கணும் னு தான். அந்த உணர்வு எனக்கு உன் கிட்ட கிடைச்சுது சங்கீ..” இப்போது அவனை நிமிர்ந்து பார்த்தாள், இந்த வார்த்தைகளைக் கேட்டபோது ஒரு நிமிடம் தன்னையும் அறியாது சங்கீதாவின் கண்களின் ஓரம் லேசாக நீர் வர, உடனே சந்கோஜத்தில் திரும்பிக் கொண்டு சுண்டு விரலால் துடைத்துக் கொண்டாள். அதை ராகவ் கவனித்தான்.
என்னாச்சு சங்கீதா? ஒன்னும் இல்ல ராகவ்.. நான் உண்மையா இங்கே வந்ததுக்கு கார…காரணம்.. – உள்ளுக்குள் எழும் மனக் குமுறல்களை அடக்கியதில் குரல் உடைய தொடங்கியது சங்கீதாவுக்கு.. காரணம் நீ என்னை விட வயசுல சின்னவன், உனக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி புரிய வைக்கலாம் னு நினைச்சேன். என்னை விடு, நான் எப்பவோ என் பல கனவுகளை வாழ்க்கைல தொலைச்சவ, ஆனா உனக்கு நிறைய வயசு இருக்கு, உன் மனசுல ஆசைய உண்டாக்கி உன் வாழ்கைய பாழாக்க விரும்பல, அது எனக்கு ஒரு குற்ற உணர்சிய உண்டாக்கும் டா. அதான் சொல்லிட்டு போக வந்தேன்.. முடிஞ்ச வரைக்கும் உன் மனசை மாத்திக்கோ டா ப்ளீஸ்.. நேத்து ராத்திரி அழுதீங்களா? நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுறா? சப்… கேட்ட கேள்விக்கு பதில் வேணும்…. “ஆமாம்.. என் கண்ணு லேசா வீங்கி இருக்குரதைப் பார்த்து கேட்க்குரியாக்கும்? இஷ்ம்ம்” – லேசாக கண்ணீர் வந்ததில் விசும்பி மூக்கை உறிஞ்தாள் சங்கீதா. “ஹா ஹா confirmed” – என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ராகவ். “என்ன confirmed? குதர்க்கமா பேசாத” – கண்ணைத் துடைத்துக் கொண்டு பேசினாள் சங்கீதா.. “மனசளவுல உங்களால என்னை மறக்க முடியாது, அதுக்கான ஆதாரம்தான் நேத்து ராத்திரி நீங்க அழுத அழுகை.” ஒன்றும் பதில் பேசவில்லை சங்கீதா…. “சங்கீதா…. வாழ்க்கை ல கலாச்சாரம் முக்கியம்தான், ஆனா பாவம் மணசு என்ன செய்துச்சி. ஒவ்வொரு தடவையும் அதை அடக்கி அடக்கி அதோட ஆசைகள் எல்லாத்தையும் மண்ணோட மன்னா புதைச்சி வெச்சி நாம நம்மளையும் சேர்த்துதானே மன்னாக்கிகுறோம். இந்த நிமிஷம், இந்த ஒரு நொடி உங்க மனசுல கை வெச்சி கண்ணை மூடி சத்தியமா நிஜம் என்ன, உண்மை என்ன னு யோசிச்சி பாருங்க. உங்க கண்ணை மூடி என்னை ரெண்டு நிமிஷமாவது மறக்க முடிஞ்சி வெறும் உங்க குடும்பம், புருஷன், பசங்க ன்னு உங்களால நினைக்க முடியுதான்னு எனக்கு சொல்லுங்க…. I will wait sangeethaa…. – என்று ராகவ் சொல்ல இவன் காதலை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று அவள் ஆழ் மனது கதற ஆரம்பித்தது அதே சமயம் மறு பக்கம் வாழ்க்கை இந்த உலகில் ஒரு முறைதான், ஏற்கனவே நான் இழந்ததை கடவுள் எனக்கு திரும்பவும் வேறு ஒரு ரூபத்துல குடுக்குறார், அதை நான் இப்போவும் நிராகரிக்குறதா? இல்லை என் சந்தோஷத்துக்காகவும் நிம்மதிக்காகவும் இதை நான் ஏற்க்கனுமா?…. மீண்டும் மணப் போராட்டம்….. சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்தவாறு யோசித்தாள். என்னதான் யோசித்தாலும், முயற்சி செய்தாலும் அவள் மனதில் இருந்தும் கண்களில் இருந்தும் ராகவை நீக்குவதேன்பது அவளாள் சத்தியமாக முடியாத காரியம் என்று அவள் மனது தெளிவாக கூறியது. “என்னாச்சு சங்கீதா…” – என்று ராகவ் கேட்க, தனது டைரியில் பேனாவால் எழுத தொடங்கினாள். ஒரு ஐந்து நிமிடம் சிந்தித்து ஏதோ ஒன்றை எழுதினாள் ராகவ் அவள் எழுதும் வரைக் காத்திருந்தான். சங்கீதா எழுதி முடித்த கடிதத்தை டைரியில் இருந்து கிழித்து மடித்து ராகவின் சட்டை பாக்கெட் உள்ளே வைத்தாள் – அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் மௌனமான சிரிப்பில் கண்களால் ஆயிரம் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். கடிதத்துக்கு பதில் வாயில இருந்து வரும்னு பார்த்தேன், கடிதத்துலையே வருதே? – என்று சொல்லி சிரித்தான் ராகவ். சரி, நான் எழுதின கடிதத்தைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே? – என்று ராகவ் கேட்க சங்கீதா அந்த கடிதத்தை அருகில் உள்ள தனது handbag ல் இருந்து எடுத்து பிரித்து அவன் எதிரில் அவன் எழுதிய வார்த்தைகள் மீது ஒரு முத்தம் குடுத்து அவனை ஒரு நொடி மட்டுமே நேரில் பார்த்து மேற்கொண்டு பார்க்க முடியாமல் வெட்கத்தில் கீழே பார்த்து சிரித்தாள்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ராகவால் இதை நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றான் இப்போது TV யில் ஒரு (Click)காட்சி ஓடிக்கொண்டிருந்தது, அந்த காட்சியில் வரும் அழகான முதிர்ச்சியான மங்கை ஒரு வாலிபனின் திறமையைக் கண்டு வியந்து பாரட்டுகிறாள் -அமைதியாய் இருந்த இருவரும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்து மென்மையாக சத்தம் இன்றி சிரித்தார்கள். “பாராட்டு வெறும் கடிதத்துக்கு தானா? அதை எழுதினவனுக்கு இல்லையா? – என்று ராகவ் அந்த காட்சியில் வரும் வாலிபனைப் போல கேட்க, சங்கீதா மெல்ல அருகே வந்து அவனின் தலையில் மென்மையாக ஒரு முத்தம் குடுத்தாள். அப்போது ராகவ்க்கு ஒரு நொடி உடல் முழுதும் புல்லரித்தது.நான் சொல்ல நினைச்சதெல்லாம் உன் பாக்கெட் ல இருக்குற கடிதத்துல எழுதி இருக்கேன் டா.. நான் இங்கே இருந்து கிளம்பினதுக்கு அப்புறம் படி ப்ளீஸ். என்று சொல்லிவிட்டு கிளம்பும்போது கதவின் அருகே சென்றவள் ஒரு நிமிடம் நின்று ராகவின் முகத்தைத் திரும்பிப் பார்த்து சிரித்தாள். ராகவும் அவனுடைய தேவதையின் சிரிப்பை தரிசித்தான். அவள் குடுத்த கடிதத்தை தனிமையில் பிரித்து உற்சாகமாய் படிக்க தொடங்கினான்..
அதில்….. என்னை முழுதாய் திருடியவனே…. உன்னைப் போல எனக்கு வர்னிச்சி எழுத வராது டா.. ஆனா மனசுல உள்ள உண்மைய சொல்லுறேன்…. வாழ்க்கையில் நான் தொலைத்த இன்பங்கள், தேடும் சந்தோஷங்கள், வேண்டிய நிம்மதி, விரும்பும் அமைதி… இவை அனைத்தும் எனக்கு உன்னிடம் இருந்துதான் கிடைக்குது. எவ்வளவோ முயற்சி பண்ணாலும் என்னதான் எனக்கு நானே விளக்கங்கள் குடுத்தாலும் என்னால் உன்னை மறக்க முடியாது. நீ சொன்ன மாதிரி உன் உணர்வுகளும் அன்பும் என் மனசை உரசுறதை நானும் நிறைய நேரங்களில் மௌனமாய் அனுபவித்திருக்கிறேன். அந்த ரகசிய சந்தோஷத்தை இன்று தான் முதலில் உனக்கு தெரியப் படுத்துகிறேன். மனசார சொல்லுறேண்டா….. உன் காதல ஏத்துக்க பெருமை படுகிறேன். Yes….. I am in Love with you with immense proud. (தமிழில்: ஆம், நானும் உன்னை காதலிக்கிறேன்… உன் காதலை ஏற்றுக் கொள்ள நான் அளவிலா பெருமை படுகிறேன்.) -இப்படிக்கு உன் சரா.. இந்த கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு கட்டிலில் இருந்து எழுந்து hooohooo bingo yes yes yes…. ummmmaaahhhhh ummmaaahhhhh ummmaahhhhhh என்று அவளின் கடிதத்துக்கு முத்தங்கள் குடுத்து துள்ளி குதித்தான் ராகவ். இப்போது அவளிடம் இருந்து ராகவ்க்கு sms வந்தது. பார்த்தான்..
(beep beep) message from sangee: “படிச்சிட்டியா டா? …..” (beep beep) message from raghav: “hmm…. படிச்சேன் ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியல”.. (beep beep) message from sangee: “டேய் மண்டு, அதுல என்னடா உனக்கு புரியல” (beep beep) message from raghav: “அதென்னது சரா?” (beep beep) message from sangee: “சொல்ல மாட்டேன்” (beep beep) message from raghav: “தயவுசெய்து சொல்லு சங்கீ ப்ளீளீளீளீளீளீளீளீளீளீளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….” (beep beep) message from sangee: “நீயெல்லாம் எப்படிடா CEO ஆன மக்கு மக்கு….” (beep beep) message from raghav: “ஆமாம் நான் ஒரு மக்குதான் என் தேவதை தான் எனக்கு எல்லாம் சொல்லித் தரனும்…. சொல்லு….” (beep beep) message from sangee: “ச்சே என் வாயாலேயே சொல்ல வைக்கிறானே….., சங்கீதா + ராகவ் = சரா…. போதுமா…. ச்சீ.. வெட்கமா இருக்குடா, இதுக்கு மேல எதுவும் புரியலைன்னு கேட்காத என் கிட்ட….” அடுத்த மெசேஜ் எதிர் நோக்கி phoneஐ மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கொஞ்ச நேரம் sms எதுவும் வராமல் இருந்தது ராகவிடம் இருந்து.. அமைதியாய் உள்ளுக்குள் தவித்தாள் சங்கீதா (beep beep) என்று சத்தம் கேட்டவுடன் ஒரு நிமிடம் கார் சீட்டின் நுனிக்கு வந்து உடனே மெசேஜ் பார்த்தாள்.. message from raaghav: “என் தேவதை சராவுக்கு இந்த மக்கு ராகவ் குடுக்கும் இதழோடு இதழ் பதித்த ஆயிரம் முத்தங்கள்….” படித்து முடித்த பிறகு, அப்படியே கத்தி சிரிக்க வேண்டுமென்று இருந்தது சங்கீதாவுக்கு, ஆனால் காரில் செய்ய முடியாததால் அப்படியே கண்களை இறுக்கி மூடி பின்னாடி சாய்ந்து அவளது நினைவில் ராகவை கட்டி அனைத்து அவன் குடுத்த இதழ் முத்தங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டாள். முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. வயிற்றினில் உண்மையாகவே யாருடைய விரலும் இல்லாமல் அப்படி ஒரு கிச்சி கிச்சி உணர்வு வந்தது சங்கீதாவுக்கு. “என்னம்மா ஆச்சு ஏதாவது வயிறு பிரச்னையா soda வாங்கட்டுமா? சீட்டுல முன்னுக்கும் பின்னுக்கும் வந்து போறீங்க?” – என்று டிரைவர் தாத்தா அக்கறையாக கேட்க…. ஒரு நொடி சத்தமாகவே “ஹா ஹா ஹா” என்று சிரித்தாள். “தாத்தா….” “சொல்லுமா….” நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… கொஞ்சம் ரேடியோ போடுங்க ப்ளீஸ்… – என்று இந்த தேவதை கட்டளை இட்டதும் தாத்தா அடித்து புடித்து ரேடியோவை on செய்தார். அப்போது அதில் வந்த (Click)பாடலைக் கேட்ட போது உண்மையாகவே மனதில் ரொம்பி வழியும் சந்தோஷத்தோடு தனது பருவ உணர்வுகளை தாங்கிய வயதை பின் நோக்கி பயணித்தாள் இந்த தேவதை…. மேடம் bank போகனுமா? இல்லை வீட்டுக்கு போகனுமா? bank க்கு போங்க தாத்தா. தாத்தா ஓட்டும் மிதமான வேகத்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்திருந்தாலும், ஏதோ பத்து நொடிகளில் bank வந்தது போல் இருந்தது சங்கீதாவுக்கு. மனதுக்குள் காதல் உருவெடுத்து இருக்கும் தாக்கம்!! சங்கீதா இறங்குகையில் டிரைவர் தாத்தா சங்கீதாவை அழைத்தார். “மேடம்..” “என்ன தாத்தா?” “இந்தாங்கம்மா..” “என்னது இது?” “காலைல வண்டி எடுக்கும்போதே நீங்க திரும்பி போகும்போது குடுக்க சொல்லி உத்தரவு. என்னன்னு எனக்கு தெரியாது மா..” ஒரு brown sealed கவரில் IOFI என்று அச்சிடப்பட்டு இருந்தது. கீழே ஏதோ எழுதி ராகவ் என்று கையெழுத்து இருந்தது. அதை தனிமையில் சென்று படிப்போம் என்று எண்ணி தாத்தாவை அனுப்பி வைத்துவிட்டாள் சங்கீதா. “மன்னவன் பெயரை சொல்லி மந்திரம் பாடி வந்தேன்….” – வண்டியில் கேட்ட பாடலை முனு முணுத்துக் கொண்டே முகத்தினில் அதே சிரிப்புடனும் சந்தோஷத்துடனும் உள்ளே சென்றாள்.
உள்ளே வந்தவள் ரம்யாவின் இருக்கையில் அவளுடைய handbag இருப்பதைப் பார்த்தாள். சாப்பாடு நேரம் நெருங்கி இருந்தது. இருப்பினும் ஒரு மணி நேரம் அவளது மேஜையில் அவளுக்கென இருக்கும் வேலைகள் என்னென்ன என்று பார்த்துவிட்டு ரம்யாவுக்கு phone செய்தாள். ரம்யாவின் phone ரிங்டோன் அருகில் கேட்பது தெரிந்து நிமிர்ந்து பார்த்தபோது “ஹாய் மேடம்….” என்று சிரித்துக்கொண்டே உள்ளே வந்தாள். ஏய் லூசு, எங்கடி போய் தொலைஞ்ச? last one hour நான் உனக்காக waiting. ஹா ஹா…. சரி சரி வாங்க போகலாம். இருவரும் கான்டீன் சென்று அவர்களுடைய வழக்கமான ஜன்னல் ஓர இருக்கையில் சாப்பிட அமர்ந்தார்கள்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சங்கீதா - இடை அழகி 68
சரி சொல்லுங்க, காலைல எங்கே போய் இருந்தீங்க மேடம். ராகவ் பார்க்க போய் இருந்தேன்.. – வியர்வைப் பனித் துளிகளை தனது கைக்குட்டையால் நெற்றியில் துடைத்துக் கொண்டே பேசினாள் இந்த தேவதை. “ஒஹ்ஹ்….” – கொஞ்சம் ஓரக்கண்ணால் பார்த்து கிண்டலாய் சிரித்தாள் ரம்யா.. “சப்”… இதோ பார்.. நீ இப்படி எல்லாம் சிரிச்சா நான் அப்புறம் பேசவே மாட்டேன் போ..
“ஹா ஹா.. சரி சரி சொல்லுங்க..” “கொஞ்சம் ஆழமா கீறல் ஏற்பட்டிருக்கு, அவன் நெஞ்சுல மருந்து வெச்சி பிளாஸ்டர் போட்டு இருகாங்காடி. கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி.” “ஹ்ம்ம்.. ஆமாமாம் உங்களாலதானே ஆச்சு….” – ரம்யாவுக்கு ஏதோ சங்கீதாவை வெருப்பேத்துவதில் சின்ன சுகம்.. இதைக் கேட்டவுடன் கோவத்தில் சங்கீதா அப்படியே சாப்பிட்ட கையுடன் எழுந்து தட்டை எடுத்துக் கொண்டு நடக்க…. “அய்யோ ஒரு நிமிஷம் இருங்க, ஐஅம் சாரி, ஐஅம் சாரி….” – சற்று பாடுபட்டு சங்கீதாவின் கையைப் பிடித்து மீண்டும் அமரவைத்தாள் ரம்யா. கண்னங்கள் சிவந்திருந்தது, நெற்றி இன்னும் வேர்த்து இருந்தது இந்த தேவதைக்கு. “நானா போய் அவன சாவி எடுத்து நெஞ்சுல குத்திக்க சொல்லி சொன்னேன். கொஞ்சமாவது அறிவு இருக்கணும், அந்த கோபிய சும்மா ஓட சொல்லி இருந்தா கூட போதும், பெரிய இவனாட்டம் சாவிய எடுத்து குத்திக்குட்டான் ராஸ்கல்.” – ராகவ் மீது இருக்கும் காதல் காரணமாக கொண்ட கோவத்தில் சகஜமாக பேசிவிட்டாள் சங்கீதா. சில நொடிகளுக்கு பிறகு ஏன் இப்படி பேசினோம் என்றெண்ணி ரம்யாவின் முகம் பார்ப்பதைத் தவிர்த்து மெளனமாக சாப்பிட ஆரம்பித்தாள். உள்ளே வரும்போது இருந்த முகத்தின் பிரகாசத்தையும், ராகவ் பத்தி பேசும்போது சங்கீதாவின் முகத்தில் மாறுபடும் உணர்வுகளையும் ரம்யா கவனிக்க தவறவில்லை. பட படவென ராகவ் பத்தி பேசிய பின்பு ரம்யா ஒன்றும் பேசாமல் இருப்பதைக் கண்டு சற்று சங்கோஜமானது சங்கீதாவுக்கு.. என்னடி? பேசு ஏதாவது, நான் ஏதாவது தேவை இல்லாம கோவப் பட்டிருந்தா சாரி – என்றாள் சங்கீதா.. ச்ச…. ச்ச…. என்ன மேடம் என் கிட்ட போய் formal அ பேசுறீங்க. free யா விடுங்க. உங்களுக்கு மனசளவுல கொஞ்சம் relaxation வேணும். நான் சொன்னா மாதிரி வேணும்னா 2 நாள் லீவ் எடுங்க – ரம்யா பேசும்போது சங்கீதா குறுக்கிட்டாள். எனக்கு relaxation வேலையிலையும் என் மனசுக்கு பிடிச்சவங்க கூட பேசுறதுலையும்தான். வீட்டுல இல்ல. அப்படியே இருந்தாலும் அது என் பசங்களோட மட்டும்தான். actually நான் இன்னைக்கி காலைல அவனை பார்க்குற idea ல இல்ல, ஆனா… ஆனா..? என்ன சொல்லுங்க மேடம்.. காலைல கொஞ்சம் மணசு சரி இல்ல. அதான் நேரா வேலைக்கு வர்ரத விட கொஞ்சம் ராகவ் கிட்ட பேசிட்டு வரலாம் னு தோணுச்சி. ஒஹ், ஏன் எங்க கிட்ட எல்லாம் பேசக் கூடாதா? இதற்கு சங்கீதாவிடம் இருந்து மௌனம்.. மீண்டும் ஏதோ கொஞ்சம் தவறாக கேட்டு விட்டோமோ என்று எண்ணி ரம்யா பேச்சை மாற்றினாள். “சரி சரி விடுங்க மேடம்.. இப்போ கொஞ்சம் relaxed இருக்கீங்களா?” “ஹ்ம்ம்..” – சாப்டுக்கொண்டே தலையை மெதுவாக ஆட்டினாள். இப்போது ஏனோ திடீரென மனதில் ராகவிடம் கூறிய காதலை எண்ணினாள் சங்கீதா, அப்போது…. “என்னைப் பத்தி நீ என்ன நினைக்குற ரம்யா?” ஹா ஹா என்ன இது திடீர்னு புது கேள்வி? சப்.. சொல்லுடி.. – சத்தமே இல்லாமல் ஒரு பெருமூச்சு அவளிடம். “ஹ்ம்ம்… எந்த ஒரு விஷயத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவ யோசிப்பீங்க. எதையும் டக்குன்னு செய்ய மாட்டீங்க? நல்லா ஆழ்ந்து சிந்திச்சி முடிவு எடுப்பீங்க. ஆனா அதையும் சீக்கிரமாவே எடுப்பீங்க. கடைசியில எடுக்குற முடிவு உங்க மனசாட்சிக்கு விரோதமா இருக்காது. முக்கியமா இன்னொன்னு சொல்லணும். என்னது? – பார்வையில் ஆச்சர்யகுரியுடன் கேட்டாள் சங்கீதா. உங்க முடிவு முழுக்க முழுக்க உங்க மனசளவுல யோசிச்சி எடுக்குற முடிவா அமையும். யாருடைய தேவை இல்லாத advice ம் காதுல வாங்கிக்காம எப்போவும் சொந்தமாதான் முடிவு எடுப்பீங்க. அதே சமயம் அது தப்பான முடிவாவும் இருந்ததில்லை. ஹ்ம்ம்… வேறென்ன விட்டுட்டேன்.. (சில நொடிகளுக்குப் பிறகு தொடர்ந்தாள்).. ஆங்.. முடிவு எடுத்த பிறகு வீணா மனசை போட்டு குழப்பிக்க மாட்டீங்க. எதையும் தைரியமா ஒரு கை பார்ப்பீங்க. you will take the perfect decision at the end.” – என்று ரம்யா கூறியதும் சங்கீதாவின் முகத்தில் ஒரு மௌனமான புன்னகை தோன்றியது. “சரி ஏன் இதை கேட்டீங்கன்னு சொல்ல முடியுமா? – என்றாள் ரம்யா..” “ஒன்னும் இல்ல, சும்மா திடீர்னு கேட்கணும்னு தோணுச்சி. என்னைப் பத்தி மத்தவங்க என்ன நினைக்குறாங்கன்னு சொல்லி கேட்கனும் போல இருந்துச்சி. அதான்.”
“ஹலோ…. நான் உங்க friend, என்னை ஏன் மதவங்கன்னு சொல்லி ஒதுக்குறீங்க?” “தெரியும் டி, அதான் உன் கிட்ட மட்டும் வெளிப்படையா நானே கேட்டு தெரிஞ்சிகுட்டேன். இல்லைனா இப்படி வாய் பேசுற ஜென்மமா நான். ஹா ஹா – தன்னைத் தானே கிண்டல் அடித்துக் கொண்டாள் சங்கீதா.” ரம்யா பேசியது அனைத்தையும் கேட்டு முடித்தவுடன் சாப்பாடு தட்டை wash areaவில் போட்டுவிட்டு தன் இருக்கைக்கு செல்வதற்கு முன் ரம்யாவிடம் இருந்து தனியே விலகி வந்து ராகவ்க்கு தன் mobile எடுத்து “I Love You so much sweetheart” என்று sms அனுப்பினாள் ராகவின் தேவதை. (beep beep) message from SH (sweet heart) – “SH” என்று சங்கீதா, ராகவின் பெயரை மொபைலில் store செய்திருந்தாள். அதில் இருந்த message: “I born in this world only for you sara” என்றிருந்ததைப் பார்த்து ஒரு நொடி சந்தோஷத்தின் உச்சத்தில் லேசாக கண்களின் ஓரத்தில் நீர்த்துளிகள் போங்க அதை யாருக்கும் தெரியாமல் முந்தானை நுனியால் லேசாக துடைத்துக் கொண்டு மனதில் சொல்லிக் கொண்டாள் “you are crazy about me da…. my sweet rascal”.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மீண்டும் பீப் பீப் என்று சத்தம் கேட்க phone எடுத்து ப் பார்த்தாள். “No reply honey?” என்று இருந்தது.. அதற்கு சங்கீதா “little busy da kanna, I will call you after going home” என்று message அனுப்பினாள். சற்று நிமிடம் கழித்து “என் மேல் விழுந்த மழைத் துளியே” என்று மெதுவான சத்தத்தில் சங்கீதாவின் phone சிணுங்க உடனே அதை எடுத்து attend செய்தாள். காரில் டிரைவர் தாத்தா ஓட்டி வரும்போது ராகவ் நம்பருக்கு மட்டும் அவள் வைத்த ரிங்டோன் அது. உற்சாகமாய் எடுத்து அட்டென்ட் செய்தாள்.. “ஹலோ..” – இருக்குமிடம் bank என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு அடக்க முடியாத சந்தோஷமாகவே இருந்தாலும் கொஞ்சம் அடக்கமாக சிரித்தாள் சங்கீதா. “ஹ்ம்ம்.. பேசுறது என்னோட சரா வா?” – கட்டிலில் ஆயாசமாக சாய்ந்து பேசினான் ராகவ். “ஹ்ம்ம்…. ஆமாம்…” – சங்கீதாவின் வாய் அருகில் mike வைத்தால் கூட கேட்காது. அவ்வளவு மெலிதான குரலில் பேசினாள் தனது தேவனுடன். “இப்போ என்ன பண்ணுற சரா?” – காதலில் விழும் அனைவரும் கேட்க்கும் அழகான முட்டாள்தனமான கேள்வி இது. ராகவ் மட்டும் விதிவிளக்கா என்ன? “ஹ்ம்ம்…. வேலை பார்க்குறேண்டா கண்ணா….” – வேறு யாராவது (நண்பர்கள் உட்பட) இதைக் கேட்டால் “எனக்கு தெரிஞ்சி இப்போதிக்கு உங்கள போல வெட்டியா இல்லைன்னு நினைக்குறேன்.. do you have anything important to say” என்று கூறும் தேவதை தன் தேவனுக்கு கண்ணும் கருத்துமாக கொஞ்சி அக்கறையாக பதில் கூறினாள். – உலகில் காதலுக்கே உரிய தனி power அது. “சரி, நாளைக்கு உன்னோட scehdule IOFI ல இருக்கு தெரியும் இல்ல?” “ஒஹ்ஹ்… ஆமா நியாபகம் இருக்கு” – சொல்லும்போது தனது dairy எடுத்து check பண்ணி பார்த்தாள். full day IOFI schedule என்று இருந்தது. அதைப் பார்த்து மென்மையாக புன்னகைத்துக் கொண்டாள். “நாளைக்கு உனக்கு நான் ஒரு surprise வெச்சி இருக்கேன்” என்றான் ராகவ். “என்னது?” “வந்து பாரு சொல்ல மாட்டேன்.” “ஏன்டா இப்படி கொல்ற, சொல்லேண்டா?” “ஹா ஹா….” “சிரிக்காத டா சொல்லு….” “ராகவிடம் இருந்து மௌனம்….” “நானும் உனக்கு ஒரு surprise வெச்சி இருக்கேன், சொல்லவா?” என்றாள் சங்கீதா. “ஹா ஹா.. இப்படி சொல்லி பழி வாங்கலாம் னு நினைக்காத, கண்டிப்பா நான் என்ன surprise னு கேட்க மாட்டேன், அதுக்காக காத்து இருக்குறதுல கிடைக்குற சந்தோஷம் ரொம்ப ரொம்ப சுகம்.. அதை அனுபவி சரா, நாளைக்கே ரெண்டு பேரும் நம்ம surprise என்னன்னு தெரிஞ்சிக்கலாம். ஒகவா?….” (உண்மையில் சங்கீதாவிடம் ராகவ் க்கு surprise தர ஒன்னும் இல்லை, அவனுடைய வாயில் இருந்து பதில் வாங்கவே வெறுமென போட்டு வாங்க பார்த்தாள் ஆனால் ராகவ் கவிழவில்லை. “சப்” என்று உச்சுக் கொட்டிக் கொண்டாள் சரா..) மெளனமாக இருக்கவே “என்ன ஒகவா?” என்று மீண்டும் கேட்டான் ராகவ்.. “ஹ்ம்ம்..” – சற்று சந்தோஷமும், ஏமாற்றமும் கலந்து பேசினாள் சங்கீதா…. “சரி அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், நம்ம டிரைவர் கிட்ட உனக்கு ஒரு கவர் குடுக்கணும் னு சொல்லி இருந்தேனே, கொடுத்தாரா?” “ஆமா குடுத்தார்.” “சரி சரி வீட்டுக்கு போய் பொறுமையா பாரு. carry on with your work. I Love You honey.” “Love you too da sweet heart.” – இருவரும் மணம் இல்லாமல் phone கட் செய்தார்கள். கையில் ஒரு sweet box உடன் சங்கீதாவின் இருக்கைக்கு வந்தார் Mr.Vasanthan. “ஹலோ Sir” – என்றாள் சங்கீதா…. (அகண்ட சிரிப்புடன்….) ஹலோ.. seriously நீங்க தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போறீங்கன்னு தெரிஞ்சதும் surprising அ இருந்துச்சி. fantastic speech sangeetha. என்னோட wife கூட உங்கள ரொம்ப பாராட்டினாங்க, நேத்து எங்க வீட்டுல அவ தேங்கா பர்பி செஞ்சி இருந்தா, இன்னைக்கி காலைல கண்டிப்பா உனக்கும் நான் ஒரு பாக்ஸ் குடுக்கணும் னு சொல்லி இருந்தா. இந்தாமா வாங்கிக்க.” என்றார்.
“மேடம் க்கு நான் மனசார நன்றி சொன்னதா சொல்லுங்க சார்.” “இன்னொரு நல்ல விஷயம் சொல்ல போறேன்.” “நல்ல விஷயம்னா சீக்கிரம் சொல்லுங்க சார், தாமதிகாதீங்க.. ப்ளீஸ்..” “உங்களுக்கு அடுத்த மாசத்துல இருந்து 40% சம்பளம் அதிகரிக்குறதுக்கு மேலதிகாரிங்க ஒத்துக்கிட்டாங்க. congradulations.” “இதை கேட்டவுடன் மனதுக்குள் சங்கீதாவுக்கு மிதமான சந்தோஷம் தான். காரணம் சம்பளத்தை விடவும் செய்யும் தொழிலில் மண நிம்மதியை தேடுபவள் சங்கீதா.” “உங்க நல்ல மனசுக்கு நன்றி Mr.Vasanthan.” – என்று சுருக்கமாக மரியாதையுடன் சொல்லி அமர்ந்தாள் சங்கீதா. “மாலை நேரம் கிளம்பும் வேலையில் ரம்யா அவளது things அனைத்தும் pack செய்யும் போது அவளது handbag ல் இருந்து ஒரு cone மருதாணியை எடுத்து வந்து சங்கீதாவிடம் குடுத்தாள்.” “இன்னைக்கி காலைல வீட்டுக்கு பக்கத்து கடைல கிளம்பும்போது வாங்கினேன், அப்படியே உங்களுக்கும் சேர்த்து ஒன்னு வாங்கினேன். வச்சிக்கோங்க மேடம். நாளைக்கு பார்க்கலாம் bye.” “thanks டி” – உற்சாகமாய் சொன்னாள் சங்கீதா, மருதாணி என்றால் அவளுக்கு உயிர். அதை பத்திரமாக வைத்துக் கொண்டாள். “ஏய், கோபியை பார்த்தியா டி?” என்றாள் சங்கீதா “இல்லை, ஆளே காணும்” என்றாள் ரம்யா. Mr.unknown number என்று store செய்த நம்பரை டயல் செய்து பார்த்தாள் சங்கீதா. அதற்க்கு “நீங்கள் அழைக்கும் நம்பர் switch off செய்யப் பட்டுள்ளது” என்று மெசேஜ் வர ஒன்றும் புரியாமல் கடவுளிடம் கோபி நன்றாக இருக்க வேண்டுமென்று வேண்டிவிட்டு கிளம்பினாள். மாலை traffic ஐ சமாளித்து ஒரு வழியாக வீட்டை சென்றடைந்தாள் சங்கீதா. ரஞ்சித்தும் ஸ்னேஹாவும் அமைதியாய் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல சங்கீதா வர தாமதம் ஆகும் தருவாயில் நிர்மலா இவர்களுக்கு வீட்டை திறந்து விட்டு குடிக்க ஒரு டம்ளர் பால் குடுப்பது வழக்கம். இந்த முறையும் அப்படியே செய்திருந்தாள் நிர்மலா.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சங்கீதா - இடை அழகி 69
ஹலோ அக்கா, நல்ல ரெஸ்ட் எடுத்தீங்களா?” “நான் எடுக்குறது இருக்கட்டும், நீதான் முக்கியமா எடுக்கணும். நீ எப்போ வருவேன்னு காத்திட்டு இருக்குது இதுங்க ரெண்டும். கொஞ்சம் நேரம் இதுங்களுடன் விளையாடிட்டு படுத்து ரெஸ்ட் எடும்மா. உனக்கும் உள்ள சூடா காபி போட்டு வெச்சி இருக்கேன்.”
“thanks அக்கா, இன்னைக்கி வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சி. நீங்க ஏதாவது சாப்டீங்களா?” “இப்போ எதுவும் வேணாம்டா, நீ பார்த்துக்கோ, நான் இப்போ கிளம்புறேன். கொஞ்சம் வீட்டுலயும் வேலை இருக்கு.” – என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் நிர்மலா. “என்னங்கடா பண்ணீங்க ரெண்டு பேரும் இன்னைக்கி?” – என்று பேசிக் கொண்டே சங்கீதா சமையல் அறைக்கு செல்ல பின்னாடியே ஸ்நேஹா மெதுவாக வந்தாள். “என்னடா கண்ணா?” – என்றாள் சங்கீதா.. “அம்மா, நேத்து கேட்கனும் னு இருந்தேன், அன்னிக்கி என்னையும் ரஞ்சித்தயும் ஸ்கூல் ல இருந்து ஒரு நாள் கூட்டிட்டு வந்தாரே ராகவ் மாமா, அந்த மாமா தானே அன்னிக்கி function ல stage மேல இருந்தாரு?” “ஹா ஹா, ஆமாம், ஏண்டா கேட்குற?” – ராகவ் பத்தி கேட்டவுடன் சங்கீதாவுக்கும் மனதில் ஒரு வித சந்தோஷம். “ஒன்னும் இல்லைமா, எனக்கு அந்த மாமவ ரொம்ப பிடிச்சி இருக்கு, திரும்பவும் பார்க்க முடியுமா மா?” “எதுக்கு? இன்னொரு talking barbie doll வாங்கிக்கவா? ஹா ஹா..” “அது இல்லைமா, வேற ஏதாவது புதுசா பொம்மை வாங்கிக்கலாமே னு கேட்டேன்..அதான்.” – பால்வடியும் முகத்துடன், வெளிப்படையாக பேசினாள் ஸ்நேஹா. “எப்போ நினைச்சாலும் பார்க்கலாம், அம்மா நாளைக்கு அவரை தான் பார்க்க போறேன்”. – தன் மகளிடம் இதை சொல்லும்போது சங்கீதாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷ சிரிப்பு. பேசிக் கொண்டிருக்கும்போது phone பீப் பீப் என்று சத்தம் குடுக்க, உற்சாகமாய் மொபைலை எடுத்தாள். அதில் “I wont come home today also, I will stay with my friend tonight” என்று குமார் sms அனுப்பியதைப் பார்த்துவிட்டு சற்று சலிப்புடன் “ஹ்ம்ம்…. இன்னைக்கி night ஒருத்தருக்கு குறைச்சி சமைக்கணும்” என்று மட்டுமே எண்ணினாள் சங்கீதா. டிக் டிக் என்று கடிகாரத்தில் பெரிய முள் சுழன்று சுழன்று சிறு முள்லை கிட்டத்தட்ட 10 நோக்கி அழைத்து சென்றது. நீண்ட நேரம் pogo, மற்றும் chutti tv என குழந்தைகள் இருவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டு சங்கீதா குடுத்த உணவை சமத்தாக சாப்பிட்ட பிறகு தூக்கம் அவர்களது இமைகளை இழுக்க அவர்கள் இருவரையும் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு தனிமையில் சற்று ஹாலில் வந்து வழக்கமாக கண்ணாடியின் முன் fanனின் கீழ் அமர்ந்தாள். இப்போது ராகவ் குடுத்த கவரை ப் பிரிப்பதற்கு முன் அதில் என்ன எழுதி இருக்கிறதென்று பிரித்துப் பார்த்தாள் “newly designed saree for working women” என்று எழுதி இருந்தது. I am honouring the saree by giving the first piece to my தேவதை சரா – என்று எழுதி ராகவ் சிக்னேச்சர் போட்டிருந்தான். புடவைப் பார்ப்பதற்கு நைசாகவும் அதே சமயம் கனம் கம்மியாகவும், உடுத்தினால் transparent ஆக இல்லாத விதமாகவும், கூல் effect குடுப்பது போல் இருக்கும் என்று அந்த புடவையின் தன்மையைப் பற்றி அந்த கவரில் படித்து தெரிந்து கொண்டாள். உற்சாகமாய் பிரித்துப் பார்த்தாள், வானத்தின் நீல நிறம் காட்டிலும் சற்று dark ஆக இருந்தது புடவையின் நிறம். அதில் அழகாக சிறிய பளபளக்கும் கல் வைத்து design செய்யப்பட்டிருந்தது, இன்னும் ஏராளமான புதிய விஷயங்கள் அந்த புடவைக்கு சிறப்பம்சம் சேர்த்தது. சங்கீதாவுக்கு தனது குழந்தைகள் தூங்கும் அறைக்கு சென்று night lamp on செய்து அங்குள்ள கண்ணாடியின் முன்பு இந்த புடவையை கட்டிப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அப்போது பீப் பீப் என்று sms வர எடுத்துப் பார்த்தாள் “message from SH” என்று இருந்தது.. அதில்.. “Is it right time to talk honey?” என்று இருந்தது.. “நீ எதையும் permission கேட்டு செய்யுற ஆளோ?” – என்று reply செய்தாள். சில நொடிகளுக்கு பிறகு “என் மேல் விழுந்த மழைத் துளியே” என்று சங்கீதாவின் மொபைல் சிணுங்க கண்ணாடியின் முன் வேகமாக ஒரு சுத்து சுத்தி கூந்தல் காற்றில் ஆட தன் தேவனின் குரல் கேட்க ஆவலுடன் phone attend செய்தாள். ஹலோ ஸ்வீட் ஹார்ட்” – தனக்கே உரிய அந்த வசீகர குரலில் பேசினான். “ஹலோ ஹணி” “என்ன செய்யுற இப்போ?” “நீ குடுத்த புடவைய பார்த்துட்டு இருக்கேன்.” “சும்மா பார்த்துட்டு மட்டும்தான் இருக்கியா?” “கட்டி பார்த்துக்குட்டு இருக்கேன் டா…” “ஒஹ்ஹ் சாரி அப்போ நான் ரூம் விட்டு வெளியே போயிடுறேன்….” “ஏய் naughty… நீ phone ல தான் இருக்கே, ரூம்குள்ள கிடையாது. இங்கே மட்டும் இருந்திருந்தால் நானே புடிச்சி வெளியே தள்ளி இருப்பேன். ஹா ஹா..” “ஹா ஹா.. சரி சரி கட்டி பார்த்தாச்சா?” “ஹ்ம்ம்.. பார்துக்குட்டே இருக்கேன்….” – இந்த புடவையை அணிந்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் சற்று அவசரமாகவே கட்டினாள். இன்றுவரை எத்தினையோ புடவைகள் கட்டினாலும் இப்போது கட்டிப் பார்க்கும் போது கண்ணாடியில் சாராவின் முகத்தினில் ஒரு விதமான அழகிய வெட்கம் தெரிந்தது. காரணம் ஒரு புறம் தன் மணம் விரும்பும் காதலன் பேசிக்கொண்டிருக்க அதே சமயம் மற்றொரு புறம் புடவையைக் கட்டிகொண்டிருப்பது இந்த தேவதைக்கு சற்று கூச்சத்தை ஏற்படுத்தியது. டக்கென ஒரு நிமிடம் “ஹாஹ்” என்று குறைவான சத்தத்தில் கூச்ச சிரிப்பைக் குடுத்தாள். “என்ன ஆச்சு? எதுக்கு சிரிப்பு?. புடவை சரியா இல்லையா?” “No no, I just love the saree, நான் வேற எதுக்கோ சிரிச்சேன் டா..” “ஹா ஹா.. கவல படாத சரா, நான்தான் சொன்னேனே ரூம் விட்டு வெளியே போயிடுறேன்னு. அதையே நினைச்சிட்டு இருந்தா உனக்கு சிரிப்புதான் வரும்.” “ஹையோ…., ஐயாவுக்கு மனசுல ரொம்பதான் நினைப்பு. நான் ஒன்னும் அதெல்லாம் நினைக்கல.” – இப்படி பேசிவிட்டு வாயை மூடி ராகவின் reaction எப்படி இருக்கும் என்று எண்ணி சத்தம் இல்லாமல் வயிறு குலுங்க சிரித்தாள் சரா.
“சரி சரி… என்னை ஒட்டினது போதும், நாளைக்கு எனக்கு ஏதோ surprise தரேன்னு சொன்னியே? என்னது அது?” “ஹலோ Mr.Sweet CEO. பொம்பளைங்க வாய் பொதுவா ஒட்ட வாய்தான் ஆன நான் அப்படி இல்ல, நீ எப்படி உன் surprise சொல்ல மாட்டியோ அதே மாதிரி நானும் சொல்ல மாட்டேன்.” – ( surprise எல்லாம் குடுக்க நிஜம்மா என் கிட்ட ஒன்னும் இல்லடா.. என்னை இன்னும் நம்பிக்குட்டு இருக்கியேடா லூசு?” என்று கண்ணாடியின் முன் மனதுக்குள் எண்ணி வாயில் விரலைக் கடித்து சிரித்துக் கொண்டாள்.)
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
“நீ கொஞ்சம் அடம் பிடிக்குற டைப் டி ச்ச..?” “ஹா ஹா…. ரொம்ப ரொம்ப அடம் பிடிப்பேன்….” “cool…. எனக்கு அடங்காத குதிரைதான் ரொம்ப பிடிக்கும்.” “ஹா ஹா….. ஹேய், dont get naughty….” – பேசிக் கொண்டிருக்கும்போது மதியம் ரம்யா குடுத்த மருதாணி சங்கீதாவின் handbag ல் இருந்து வெளியே தன் தலையை நீட்டி அவள் கண்ணில் பட, சட்டென ஒரு நொடி தீப்பொறி போல் மனதில் ராகவ்க்கு ஒரு புது surprise குடுக்கும் எண்ணம் தோன்றியது சங்கீதாவுக்கு. “actually உனக்கு நான் ஒரு surprise தரத்தான் போறேன்..” “அதான் ரொம்ப நேரமா சொல்லுறியே… அது என்னன்னு சொல்லேன்?” “Wait till tomorrow my sweet heart. சரி நான் இப்போ phone வைக்குறேன். நாளைக்கு காலைல sharp அ 10 மணிக்கு எனக்கு வண்டி அனுப்பிடு..சரியா?” “நான் வேணும்னா 9 மணிக்கு அனுப்பவா?” “ஹேய்… எனக்கு வீட்டுலயும் வேலை இருக்குடா.. சில விஷயங்கள முடிசிட்டுதான் உன் IOFI consultation வேலைய பார்க்க முடியும்.” “consultationக்கு மட்டுமே full டைம் ஒதுக்கிடாதே, கொஞ்சம் இந்த மக்கு ராகவ்க்கும் டைம் ஒதுக்கு.” “உனக்காக டைம் ஒதுக்குன்னு சொல்லு ஒத்துக்குறேன், ஆனா உன்னை மக்குன்னு சொல்லாத, உன் மூலைய வெச்சி உலகத்துல முடியாதது எதெல்லாம் இருக்குன்னு லிஸ்ட் போட்டு குடுத்தா ஒன்னு ஒன்னுத்தயும் என்னால மட்டும்தான் முடியும்னு சாதிச்சி காட்டிடுவடா மை ஸ்வீட் ராஸ்கல்.” “ஹா ஹா… board meetting ல என்னை மத்தவங்க புகழுறதை விடவும் நீ குடுத்த இந்த பாராட்டு செம நச்சுன்னு இருக்கு சரா.. இதுக்காகவே நான் அந்த surprise என்னன்னு உனக்கு சொல்ல ஆசைப் படுகிறேன்….” – உணர்ச்சி வசப் பட்டு வாய் வரை வார்த்தைகள் வந்தது ராகவ்க்கு.. “ஹ்ம்ம்…. சொல்லு சொல்லு சொல்லு….” – சங்கீதா அடக்க முடியாத ஆர்வத்தில் கேட்டாள்…. “ஹ்ம்ம்.. அது வந்து… வேணாம், நேர்லயே வந்து பார்த்துக்கோ… சொல்ல மாட்டேன்.” “சப்.. போடா..” “ஹா ஹா… சரி நான் இப்போ வைக்குறேன், ரெஸ்ட் எடுத்துட்டு காலைல 10 மணிக்கு வண்டி வரும், கிளம்பி வா. மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம்… good night honey.” “good night sweet heart, I love you so much. ummaahh…” “my god….நம்ப முடியல… இன்னொரு தடவ அந்த ummaahh கிடைக்குமா? ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்….” “ஹா ஹா…. ச்சீ போடா…. நாளைக்கு பார்க்கலாம். வைக்குறேன்.” சுத்தமாக மணம் இன்றி இருவருடைய விரல்களும் அவரவர் phone ல் உள்ள cancel பட்டனை அழுத்தியது. ராகவ் குடுத்த புடவையை அடுத்த நாள் காலை IOFI க்கு கிளம்பும்போது கட்டிக் கொண்டிருந்தாள் சங்கீதா. அதற்கு பொருத்தமான blouse அணிந்து வழக்கம் போல இல்லாமல் தலை முடியை freeயாக விட்டு நடுவில் வகிடு எடுப்பதற்கு பதிலாக பக்கவாட்டில் வகிடு எடுத்து கொஞ்சம் hair dryer உதவியால் முடியின் நுனியில் curly ஸ்டைல் செய்து கொஞ்சம் வித்யாசமான designer வகை வளையல்களை அணிந்திருந்தாள். தன் காதலனுக்கு காண்பிக்கப் போகும் surprise எண்ணி மகிழ்ந்தாள். நேரம்: காலை 10:00 மணி. டிங் டிங்…. – calling bell சத்தம் கேட்டு விரைந்தாள். வெளியே நின்றது டிரைவர் தாத்தா அல்ல, குமார். “வாங்க.. ராத்திரி எங்கே தங்கி” – சங்கீதா பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டான். “எங்கயோ தங்கினேன், தயவு செய்து என்னை எதுவும் கேட்க்காத. நீ உன் வேலைய பாரு” – சங்கீதா அவன் முகம் கொஞ்சம் அதிகம் வேர்த்திருப்பதை கவனித்தாள். குமாரிடம் மீண்டும் ஏதோ கேட்க முனையும்போது மீண்டும் “டிங் டிங்” சத்தம்… “என்ன மேடம்.. ரெடியா?” – என்று டிரைவர் தாத்தா வாசலில் நின்று கேட்க.. “இருங்க வந்துடுறேன்.” – என்று சொல்லிவிட்டு குமாரை ஒருமுறைப் பார்த்தாள். அவன் தன் அறைக்கு சென்று கதவை “டமால்” என்று பலமாக சத்தம் வரும்விதம் சாத்திக் கொண்டான். “எதுவும் சொல்லாமல் சங்கீதாவும் அங்கிருந்து கிளம்பினாள்.” IOFI Benz கார் ராகவ் cabin அருகே சென்று நின்றது. சந்கீதாவைப் பார்த்ததும் sheila ki jawani பாடலுக்கு மேடையில் சங்கீதா ஆடியதைப் போல குறும்பாக இடுப்பை ஆட்டி பாவனை செய்து “ஹாய் சங்கீ” என்று முக மலர்ச்சியுடன் சிரித்து வரவேற்றாள் சஞ்சனா. “ஹா ஹா… போதும் நிறுத்துடி, எங்கே ராகவ்?” “வர வர IOFI உள்ள வந்தாலே எடுத்தவுடன் ராகவ் ராகவ் ராகவ், ஏன் எங்க முகம் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?”
“ஹேய்…. அப்படி இல்லடி இன்னைக்கி consultation இருக்கு, அதான்..” “சரி சரி புரியுது, அய்யா மீட்டிங் ல இருக்காரு, கொஞ்சம் இருங்க….” – மீண்டும் குறும்பாக சிரித்து சொல்லிவிட்டு சென்றாள். சஞ்சனா ராகவின் meeting அறையை விட்டு வெளியே வந்து சங்கீதாவை உள்ளே அழைத்தாள். “நல்ல ஜில்லென்று AC காற்றும், மேல்தரத்து மஞ்சள் விளக்கு வெளிச்சம் கொண்ட அதி நவீன மர வேலை பாடுகள் கொண்ட மேஜைகளும், நாற்காலிகளும் இருந்த அந்த அறைக்குள் சங்கீதா நடந்து வருகையில் ராகவின் கண்களுக்கு உண்மையில் ஒரு தேவதை நடந்து வருவது போல தான் உணர்ந்தான். சங்கீதா உள்ளே சென்றதும் கோட் சூட் உடையில் அமர்ந்திருக்கும் மரியாதை நிமித்தமான மனிதர்கள் அனைவரும் ஒரு முறை தங்களது கழுத்தை நிமிர்த்தி, புருவங்களை உயர்த்தி ஒரு முறைப் பார்த்தால் பத்தாது என்று அவர்களின் கண்கள் கெஞ்சும் விதம் மீண்டும் சிறிது சங்கோஜத்துடன் குனிந்து ஒருவருக்கொருவர் தெரியாத வண்ணம் சரா தேவதையை அவ்வப்பொழுது நோட்டம் விட்டார்கள்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 8,665
Threads: 201
Likes Received: 3,315 in 1,860 posts
Likes Given: 6,357
Joined: Nov 2018
Reputation:
25
full story iruka?
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 30
Threads: 0
Likes Received: 29 in 27 posts
Likes Given: 18
Joined: Jun 2019
Reputation:
1
•
Posts: 30
Threads: 0
Likes Received: 29 in 27 posts
Likes Given: 18
Joined: Jun 2019
Reputation:
1
This story will abounded??
•
|