Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சாயிரா நரசிம்மா ரெட்டி - சினிமா விமர்சனம்
படத்தின் காப்புரிமைSYERAANARASIMHAREDDY / FACEBOOK
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் இருந்த உய்யலவாடாவைச் சேர்ந்த பாளையக்காரரின் மகனான நரசிம்ம ரெட்டியின் கதை.
1840களின் பிற்பகுதியில் விவசாயிகளை திரட்டி அவர் நடத்திய புரட்சியின் கதைதான் சாயிரா நரசிம்மா ரெட்டி. வரலாற்றுக் கதையை சினிமாவுக்காக ரொம்பவே மாற்றி திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.
திரைப்படம்
சாயிரா நரசிம்மா ரெட்டி
நடிகர்கள்
சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, தமன்னா, நயன்தாரா, அமிதாப்பச்சன், சுதீப், ஜகபதிபாபு, ரவி கிஷண்
இசை
அமித் த்ரிவேதி, ஜூலியஸ் பாக்கியம்
ஒளிப்பதிவு
ரத்னவேல்
இயக்கம்
சுரேந்தர் ரெட்டி
உய்யலவாடாவின் பாளையக்காரர் நரசிம்மா ரெட்டி (சிரஞ்சீவி). அவரது ஆட்சிக் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி விவசாய வரி வசூல் முறையில் சில மாற்றங்களை செய்கிறது. இதனை விவசாயிகளும் பல பாளையக்காரர்களும் எதிர்க்கிறார்கள்.
குறிப்பாக நரசிம்மா ரெட்டி கடுமையாக எதிர்க்கிறார். விவசாயிகளும் அவர் பின்னால் திரள்கிறார்கள். முடிவில் கைதுசெய்யப்படும் நரசிம்மா ரெட்டி தூக்கிலிடப்படுகிறார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சுருக்கமாகச் சொன்னால், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிராக விவசாயிகளைத் திரட்டி நரசிம்மா ரெட்டி நடத்தும் போராட்டம்தான் இந்தப் படம்.
வரலாற்றுத் திரைப்படங்களை எடுக்கும்போது அதற்கு ஒரு காவியத் தன்மை கொடுப்பதற்காக நிஜமாக நடந்த கதையில் சில மாற்றங்களைச் செய்வதுண்டு. இந்தப் படத்திலும் அவையெல்லாம் உண்டு.
பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், மெய்சிலிர்க்கவைக்கும் சண்டைக் காட்சிகள், பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் பங்கேற்கும் போர்க்களக் காட்சிகள் ஆகியவையும் உண்டு.
துவக்கத்திலிருந்தே பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்துப் போராடும் வீரனின் கதை என்று வைத்த பிறகு, அவருக்கு ஒரு காதலி, ஒரு மனைவி, அவர்களுக்கென பாடல்கள் என பொறுமையைக் கடுமையாக சோதிக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து வந்து நரசிம்மா ரெட்டியுடன் சேர்ந்துகொள்கிறது ராஜபாண்டி (விஜய் சேதுபதி) என்ற பாத்திரம்.
ஆனால், கதையோடு சுத்தமாக ஓட்டவில்லை. பல இடங்களில் பாகுபலி படத்தின் தாக்கம் தெரிகிறது. குறிப்பாக துவக்கத்தில் மாடுகள் வெறிபிடித்து ஓடிவரும் காட்சி.
படத்தின் காப்புரிமைSYE RAA NARASIMHA REDDY / FACEBOOK
சிரஞ்சீவியைப் பொறுத்தவரை அவரது மறுவருகைக்குத் தேவையான கவனத்தை இந்தப் படம் கொடுக்கும். ஆனால், படத்தில் உள்ள பிறருக்கு அப்படிச் சொல்ல முடியாது. குறிப்பாக அமிதாப் வரும் காட்சியெல்லாம் கூர்ந்து கவனித்தால்தான் உண்டு.
கதாநாயகிகளாக வரும் நயன்தாரா, தமன்னாவுக்கும் பெரிய பாத்திரங்கள் இல்லை.
பின்னணி இசை பரவாயில்லை ரகம். மொத்தம் நான்கு பாடல்கள். அதில் இரண்டு பாடல்கள் தேறுகின்றன. ரத்னவேலின் ஒளிப்பதிவு படத்தின் பலங்களில் ஒன்று. படத்தில் வரும் போர்க்களக் காட்சிகள் அட்டகாசமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.
2007க்குப் பிறகு சிரஞ்சீவியை மீண்டும் தெலுங்கு திரைக்களத்தில் நிறுத்துகிறது இந்தப் படம். ஆனால், மற்ற ரசிகர்கள் சும்மா பார்த்துவைக்கலாம்.
படத்தின் காப்புரிமைSYERAANARASIMHAREDDY / FACEBOOK
எல்லாம் இருந்தும் திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார்கள். 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படம் பல இடங்களில் சோர்வையும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. பல படங்கள் எப்போது முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
ஆனால், இந்தப் படத்தில் பல காட்சிகளே எப்போது முடியுமென்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அளவுக்கு நீளம்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நம்ம வீட்டுப் பிள்ளை: சினிமா விமர்சனம்
படத்தின் காப்புரிமைTWITTER
திரைப்படம்
நம்ம வீட்டுப் பிள்ளை
நடிகர்கள்
சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், சூரி, யோகிபாபு, நட்டி, ஆர்.கே. சுரேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அர்ச்சனா, வேல ராமூர்த்தி, சண்முகராஜா
பின்னணி இசை
டி. இமான்
இயக்கம்
பாண்டிராஜ்
மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களுக்குப் பிறகு, இயக்குனர் பாண்டிராஜும் சிவகார்த்திகேயனும் ஒன்றுசேர்ந்திருக்கும் மூன்றாவது படம் நம்ம வீட்டுப் பிள்ளை. வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், சிவகார்த்திகேயன் மிகவும் எதிர்பார்த்திருந்த படம் இது.
பெரியவர் அருள்மொழி வர்மனின் (பாரதிராஜா) பேரன் அரும்பொன் (சிவகார்த்திகேயன்). தந்தை சின்ன வயதிலேயே இறந்துவிட, தாய் மற்றும் தாத்தாவால் வளர்க்கப்படுகிறார் அரும்பொன். இவருடைய தங்கை துளசி (ஐஸ்வர்யா ராஜேஷ்). அருள்மொழி வர்மனின் மற்ற மகன்கள் அரும்பொன்னின் குடும்பத்தை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். ஆனால், துளசியின் திருமணத்தில் ஏற்படும் பிரச்சனை, அரும்பொன்னை பெரும் சிக்கலில் தள்ளுகிறது. அதிலிருந்து மீண்டு, தன் தங்கையின் வாழ்வை எப்படி காப்பாற்றுகிறார் அரும்பொன் என்பது மீதிக் கதை.
கிட்டத்தட்ட கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்ப்பதுபோல இருக்கிறது. பெரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் இருக்க அவர்களையெல்லாம் ஒன்றிணைக்கும் இளைஞனுக்கு என்னென்ன அவமானங்கள் அந்தப் படத்தில் வந்ததோ, அதே அவமானங்கள் இந்தப் படத்திலும் கதாநாயகனுக்கு ஏற்படுகின்றன. அந்தப் படத்தில் முடிவின் கதாநாயகன் ஒரு நீண்ட வசனத்தின் மூலம் உறவினர்களை எப்படி திருத்தி, மனமாற்றம் செய்வாரோ அதேபோலத்தான் இந்தப் படத்திலும். அந்தப் படத்தில் இருந்த சூரி இந்தப் படத்திலும் இருக்கிறார். இதனால் பல தருணங்களில் ஏற்கனவே பார்த்த படத்தைப் பார்ப்பதுபோலவே இருப்பது இந்தப் படத்தின் மைனஸ்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தவிர, இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள் படம் நீண்ட நேரம் ஓடும் உணர்வை ஏற்படுத்துகின்றன.
கடந்த இரண்டு, மூன்று படங்களில் தான் உருவாக்கிக் கொண்டிருந்த ஆக்ஷன் ஹீரோ இமேஜிலிருந்து சற்று விலகி, ஒரு பொறுப்பான குடும்பத்து இளைஞன் இமைஜை உருவாக்க முயன்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் அவருக்கு கிட்டத்தட்ட வெற்றிதான்.
படத்தின் காப்புரிமைTWITTER
ஹீரோவுடனேயே வரும் வழக்கமான பாத்திரம் சூரிக்கு. பெரிதாக சிரிக்கவைக்க முயலாமல், தன் பாத்திரத்தில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார். சில காட்சிகளில் மட்டும் வந்துபோகும் யோகிபாபு, அந்தந்தக் காட்சிகளில் மட்டும் கலகலப்பேற்படுத்துகிறார்.
ஆனால், இந்தப் படத்தைக் கிட்டத்தட்ட நகர்த்திச் செல்பவர் துளசியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்தான். அவருடைய திரைவாழ்க்கையில் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.
இந்தப் படத்தில் நாயகியின் பாத்திரத்திற்குப் பெரிய வேலையில்லை. கதாநாயகியான அனு இமானுவேலுக்கும் கதாநாயகனுக்கும் இடையிலான காதல் காட்சிகள் பெரிதாக வசீகரிக்கவில்லை.
டி இமானின் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன.
சுற்றியிருக்கும் எல்லோரும் கெட்டவர்களாகவும் மையக் கதாபாத்திரங்கள் மட்டும் நல்லவர்களாக வரும் தொலைக்காட்சித் தொடர் ரசிகர்களுக்கு இந்தப் படம் ரொம்பவுமே பிடிக்கக்கூடும்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
படத்தின் காப்புரிமைV CREATIONS/கலைப்புலி எஸ். தாணு
திரைப்படம்
அசுரன்
நடிகர்கள்
தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டி.ஜே. அருணாச்சலம், பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, பசுபதி, நரேன்;
இசை
ஜி.வி. பிரகாஷ்
இயக்கம்
வெற்றிமாறன்
பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படங்களுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் தனுஷும் இணைந்திருக்கும் நான்காவது படம். எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் திரைவடிவம்தான் அசுரன்.
1960களில் நடக்கிறது கதை. தன் அண்ணனைக் கொலை செய்த வடக்கூரானை (ஆடுகளம் நரேன்) கொலை செய்கிறான் 15 வயதுச் சிறுவனான சிதம்பரம் (கென் கருணாஸ்). வடக்கூரானின் ஆட்களும் காவல்துறையும் தேட ஆரம்பிக்க, சிதம்பரமும் அவனது தந்தை சிவசாமியும் (தனுஷ்) காட்டுக்குள் தப்பிச் செல்கிறார்கள். மிகவும் பயந்தவராகவே தன் தந்தையை அறிந்திருந்த சிதம்பரத்திற்கு காட்டுக்குள் பதுங்கியிருக்கும்போதுதான் அவரது மறுபக்கம் தெரிகிறது. இந்தக் கொலை வழக்கிலிருந்தும் வடக்கூரான் குடும்பத்தின் பகையிலிருந்தும் சிதம்பரத்தின் குடும்பம் எப்படி மீள்கிறது என்பது மீதிக் கதை.
வெற்றி மாறனின் படங்களில் பெரும்பாலானவை தீராப் பகையையும் துரோகத்தையும் பழிவாங்குவதையும் மனம் திடுக்கிடும் வகையில் சொல்லிச் செல்பவை. இந்தப் படமும் அதேபோலத்தான். ஒரு நாவல் திரைப்படமாகும்போது, அதன் மையப் புள்ளியிலிருந்து விலகி, வேறொரு கதையாக மாறிவிடும். ஆனால், பூமணியின் வெக்கையை கிட்டத்தட்ட அதே உக்கிரத்துடன் திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.
ஒரு கொலையைச் செய்துவிட்டு சிதம்பரமும் சிவசாமியும் காட்டுக்குள் நுழைய, மெல்ல மெல்ல ஒரு கரிசல்காட்டு வாழ்க்கையை திரையில் விரிக்கிறார் வெற்றிமாறன். வெக்கை நாவலின் ஆசிரியரான பூமணி ஒரு முறை அந்த நாவலைப் பற்றிப் பேசும்போது, "கொலை செய்தது சிதம்பரம். காட்டுக்குள் திரிந்தது நான்" என்றார். இப்போது அந்தக் காட்டுக்குள் ரசிகர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார் வெற்றிமாறன். அவரது மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். ஏன் மிகச் சிறந்த படமாகக்கூட ஒருவர் கருதலாம்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சிவசாமி பாத்திரத்திற்கு தனுஷ் மிகச் சிறந்த தேர்வு. பல காட்சிகளில் தன் முந்தைய உயரங்களைத் அனாயாசமாகத் தாண்டிச் செல்கிறார் அவர். குறிப்பாக, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி மஞ்சு வாரியர் கேட்கும்போது, தனுஷின் முகத்தில் இருக்கும் பரிதவிப்பு, அட்டகாசம்.
கொலை செய்துவிட்டு தந்தையுடன் தப்பிச் செல்லும் சிறுவனாக வரும் கென் கருணாஸ், ஒரு மிகச் சிறந்த அறிமுகம். 16 வயதுச் சிறுவனுக்கே உரிய படபடப்பு, கோபம், பயம் எல்லாவற்றையும் தொடர்ந்து முகத்தில் தக்கவைக்கிறார் கென்.
பசுபதி, நரேன், பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி என ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பொருத்தமான ஆளைப் பார்த்துத் தேர்வுசெய்திருக்கிறார் இயக்குநர்.
படத்தின் காப்புரிமைINDIAGLITZ/ASURAN
ஜி.வி. பிரகாஷின் இசை படத்தில் மிகப் பெரிய பலங்களில் ஒன்று. படத்தின் தீவிரத்தை இவரது இசை இன்னும் பல மடங்கு அதிகரிக்கிறது. 'கத்தரிப் பூவழகி' பாடல், கொடும் பாலைவனத்தில் பெய்யும் பெரு மழையைப் போல இருக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவும் அபாரம்.
பல கொலைகளுக்குப் பிறகும், பிரச்சனைகளுக்குப் பிறகும் இறுதியில் ஒரு நம்பிக்கைக் கீற்றை விதைக்கிறது படம். 'பிறகு', 'வெக்கை' என பூமணியின் எல்லா நாவல்களிலும் அடிப்படையான அம்சம் இதுதான். பிரச்சனைகள், அழிவுகளைத் தாண்டியும் மனித வாழ்க்கை முன்னோக்கிச் செல்லும் என்பதற்கான நம்பிக்கையை அவரது கதைகள் கொடுத்துக்கொண்டே இருக்கும். வெற்றி மாறனின் இந்தப் படமும் அதே நம்பிக்கைக் கீற்றுடன் முடிகிறது.
ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது ஒன்று திரைக்கதைக்காக நாவல் மாற்றப்பட்டு முற்றிலும் அடையாளம் தெரியாமல் போய்விடும். அல்லது அப்படியே படமாக்கப்பட்டு பார்க்கச் சகிக்காமல் இருக்கும். ஆனால், ஒரு நாவலை சிறந்த திரைக்கதையாக்கும் சூத்திரத்தை இந்தப் படத்தில் முன்வைத்திருக்கிறார் இயக்குநர். அந்த வகையிலும் இது முக்கியமான படம்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அரசியலுக்கு வரவேண்டாம்- ரஜினிக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
அரசியலுக்கு வரவேண்டாம் என ரஜினிகாந்துக்கு அறிவுரை கூறியதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சன், ரஜினி
[size][font]
ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் ’சைரா நரசிம்மா ரெட்டி’. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார். அவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர்.
[/font][/size]
[size][font][size][font]
இப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் கலந்து கொண்டு பேசும்போது, சிரஞ்சீவியை அரசியலுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தினேன். அதை அவர் கேட்கவில்லை. இதே அறிவுரையை ரஜினிகாந்துக்கும் சொன்னேன் என்றார்.[/font][/size][/font][/size]
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
3 வாரங்களில் 3 முக்கிய படங்கள்: தடுமாறும் தியேட்டர்கள்
தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நல்ல தியேட்டர்களைப் பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்குத் தீர்வாக முன்னணி நடிகர்களின் படங்களை விசேஷ நாட்களில் மட்டும் வெளியிட வேண்டும் என்றெல்லாம் முந்தைய தயாரிப்பாளர் சங்கத்தில் திட்டம் கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு வாரமும் வெளிவரும் படங்களை முன்கூட்டியே திட்டமிடுதலும் சில மாதங்கள் நடந்தது. அதன்பின்னர், அவையெல்லாம் காணாமல் போய்விட்டது.
இந்த வருடத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படங்கள் வெளியாவதில் எந்த திட்டமிடலும் இல்லாமல் சிக்கல் தொடர்கிறது. கடந்த மூன்று வாரங்களாக மூன்று முக்கிய நடிகர்களின் படங்கள் வெளிவந்து தியேட்டர்களைத் தடுமாற வைத்துள்ளது.
செப்டம்பர் 20ம் தேதி சூர்யா நடித்த 'காப்பான்', செப்டம்பர் 27ம் தேதி சிவகார்த்திகேயன் 'நம்ம வீட்டுப் பிள்ளை', இன்று அக்டோபர் 4ம் தேதி தனுஷ் நடித்த 'அசுரன்' ஆகிய படங்கள் வெளிவந்தன. ஒரு வார இடைவெளியில் இப்படி அடுத்தடுத்து பெரிய படங்கள் வெளிவருவதால் அவை பிக்-அப் ஆகி ஓடுவதற்குக் கூட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. இவற்றுடன் போட்டிக்கு வரும் படங்களின் நிலைமைதான் படுமோசம். தியேட்டர்களும் கிடைக்காமல் கிடைத்த தியேட்டர்களில் கூட்டமும் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு எப்போது விடிவு காலம் வருமோ என தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல தியேட்டர்காரர்களும் தவிக்கிறார்கள்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
07-10-2019, 09:37 AM
(This post was last modified: 07-10-2019, 09:38 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
கேம் சேஞ்சர் கவின்.. அடக்கமான சேரன்.. ஆல் ரவுண்டர் தர்ஷன்.. பிக்பாஸ் முழு விருது பட்டியல்!
சென்னை: பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் யாருக்கு என்ன விருது, எவ்வளவு பரிசுத்தொகை என்ற மொத்த விவரமும் தற்போது வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மொத்தமாக நடந்து முடிந்துள்ளது. 107 நாட்கள் பயணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முடிந்து இன்று விருதுகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்றது. மூன்றாவது சீசன் தற்போது மிகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று, டிஆர்பியும் எகிறி உள்ளது.மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட பலரும் தமிழகம் முழுக்க பிரபலமாகி உள்ளனர்.
[url=https://www.outbrain.com/what-is/default/en][/url]
கவின் விருது
இந்த விழாவின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் இந்த விருதை வழங்கினார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது கவினுக்கு கேம் சேஞ்சர் விருது வழங்கப்பட்டது. இவர் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறியது போட்டியை மொத்தமாக மாற்றியது. அதனால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.
ஷெரின் விருது
இந்த நிகழ்ச்சியில் சிறந்த நண்பர் (best buddy) விருது ஷெரினுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் யாருடனும் இவர் பெரிதாக சண்டை போடவில்லை. எல்லோருடனும் நட்பாக இருந்தார் என்று இந்த விருது வழங்கப்பட்டுள்ளது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ரன்னர் அப்[url=https://www.outbrain.com/what-is/default/en]
இந்த போட்டியில் ரன்னர் அப் விருது சாண்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. போட்டியில் சிறப்பாக விளையாடினார். மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்பதற்காக இவருக்கு ரன்னர் அப் விருது வழங்கப்பட்டுள்ளது.
யார் வின்னர்
இந்த நிலையில் போட்டியில் வெற்றியாளராக முகேன் ராவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மற்ற போட்டியாளர்களை விட இவர் அதிகமான வாக்குகளை பெற்று இவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தலைவா பட பாணியில் பிகிலுக்கு சிக்கல்! -அதிர்ச்சியில் விஜய்
நடிகர் விஜய்யின் தலைவா பட பாணியில் தற்போது அவருடைய பிகில் படத்திற்கும் சிக்கல் முளைத்திருக்கிறது. இதனால், நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ உள்ளிட்ட பட குழுவினர் அனைவரும் அதிரிச்சியில் இருக்கிறார்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ’ அரசியல் ‘ செய்து வரும் நடிகர் விஜய், அவ்வப்போது ஆளும் எடப்பாடி அரசை அட்டாக் பண்ணி வருகிறார். அட்லீயின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக, சமீபத்தில் நடந்த பிகில் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் ஆளும் கட்சிக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்து கைத்தட்டல் வாங்கினார் விஜய். இதனையடுத்து ஏகத்துக்கும் விஜய் மீது கடுப்பில் இருக்கிறது எடப்பாடி அரசு.
அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர் விஜய் ஆளும் கட்சியை பகைத்துக்கொள்வது புதிதல்ல. அவர் நடித்த காவலன் படம் வெளி வரும் நேரத்தில் திமுக ஆட்சியில் இருந்தது. கலைஞரின் மகன் மு.க.அழகிரியின் மகனின் திரைப்பட நிறுவனம் விஜய்க்கு தொல்லைக் கொடுத்தது. இதனால் அந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்தது.
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவை விஜய்யும் அவரது தந்தை சந்திரசேகரும் சந்தித்து உதவும்படி கேட்டனர். ஜெயலலிதாவும் ஆதரவு தந்தார். பட்டம் ரிலீஸானது. இதற்கு பிரதிபலனாக, தேர்தலில் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என ஜெயலலிதா வைத்த கோரிக்கையை விஜய் தரப்பு ஏற்றது. ஆனால், புத்திசாலியான சந்திரசேகர், 2011 சட்டமன்ற தேர்தலில் விஜய்யை தேர்தல் களத்தில் இறக்காமல் விஜய் ரசிகர் மன்றத்தை மட்டும் அதிமுகவுக்காக தேர்தல் பணி செய்ய பணித்தார். ரசிகர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டதோடு அதிமுகவுக்காக வாக்களிக்கவும் செய்தார்கள்.
2011 தேர்தல் வெற்றிக்குப் பிறகு, விஜய்யின் ரசிகர் மன்றத்தால்தான் அதிமுக ஜெயித்தது என சந்திரசேகர் கொளுத்திப்போட டென்சன் ஆனார் ஜெயலலிதா. விஜய்க்கு எதிராக கம்பு சுழற்றுமாறு அதிமுகவினருக்கு கட்டளையும் போயஸ்கார்டனிலிருந்து கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் நொந்து போனார்கள் விஜய்யும் அவரது தந்தையும்.
இந்த சூழலில்தான் தலைவா படத்துக்கு கமிட் ஆனார் விஜய். ஜெயலலிதா மீதிருந்த கோபத்தை தலைவா படத்தில் பல காட்சிகள் மூலம் சீண்டியிருந்தார் விஜய். சந்திரசேகரனின் யோசனையின் பேரில் அத்தகைய காட்சிகள் புகுத்தப்பட்டிருந்தன. தலைவா – டைம் டு லீட் என்கிற துணை தலைப்பும் விஜய்யின் ஆலோசனையின் படி இணைக்கப்பட்டது. ( தலைவா படத்தின் நோக்கம், அதன் பின்னணி குறித்து நக்கீரன் தான் முதன் முதலில் அம்பலப்படுத்தியது )
இதனையடுத்து, தலைவா படம் ரிலீஸ் தேதி குறிக்கப்பட்ட நிலையில், படம் வெளியாகும் முதல்நாள் அப்படத்தை வெளியிட முடியாத சூழலை உருவாக்கி, தலைவா-வுக்கு சிக்கலை ஏற்படுத்தியது அப்போதைய ஜெயலலிதா அரசு. இதனால் ஏகத்துக்கும் அதிர்ச்சியடைந்த விஜய்யும், அவரது தந்தை சந்திரசேகரும் போயஸ்கார்டனுக்கும் கொடநாடுக்கும் சென்று ஜெயலலிதாவை சந்திக்க தவம் இருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களை சந்தித்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் கால்களில் விழுந்து இருவரும் வணங்கினர். அவர்களுக்கு ஜெயலிதா கொடுத்த ஓவர் டோஸில் ஆடிப்போனார்கள் தந்தையும் மகனும். அவர்கள் ஜெயலலிதாவிடம் மன்னிப்புக் கேட்க, அதன்பிறகே, குறிப்பிட்ட பல காட்சிகள் கட் செய்யப்பட்டு படம் ரிலீஸானது. இப்படி ஆளும் கட்சியோடு மோதி, பல சிக்கல்களை தனது படத்துக்கு எதிர்கொண்டவர் விஜய். அந்த வரிசையில் தற்போது பிகில் !
தலைவா படத்துக்கு ஏற்பட்ட சிக்கலை அடுத்து கொஞ்ச காலம் அரசியலே வேண்டாம் என அமைதியாக தனது தொழிலை மட்டும் கவனித்து வந்தார் விஜய். இந்த நிலையில், தற்போது கலைஞரும் ஜெயலலிதாவும் இல்லாத சூழலைப் பயன்படுத்தி மீண்டும் அரசியல் செய்ய துணிந்திருக்கிறார் நடிகர் விஜய். அதன் வெளிப்பாடுதான் பிகில் பட ஆடியோ ரிலீஸ் விழாவில் அதிமுக ஆட்சியையும் அதன் தலைவர்களையும் மறைமுக விமர்சித்திருப்பது.
நடிகர் விஜய்யின் பேச்சு ஆளும் கட்சியை கடுப்பாக்க, ஜெ.பாணியில் பிகில் படத்துக்கு சிக்கலை உருவாக்க அனைத்து செயல்திட்டங்களையும் போட்டுக்கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. பிகில் படத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மூலம் பிரச்சனை ஏற்படுத்த காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் விநியோகஸ்தர்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடமும் அரசாங்கத்தை எப்படி பகைத்துக்கொள்வது என்கிற எண்ணம் வந்திருக்கிறது. இதனையடுத்து பல கட்ட ஆலோசனைகள் அவர்கள் தரப்பில் நடந்து வருகின்றன. மேலும், சென்சார் போர்டிலும் ஆளும் தரப்பு மூக்கை நுழைத்திருக்கிறது. இதனால் 8.10.2019 வரை சென்சார் செய்வதற்கான பட்டியலில் பிகில் படம் இடம்பெறவில்லை. இதனால் நொந்து போயிருக்கும் நடிகர் விஜய், திட்டமிட்டபடி பிகில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதில்தான் தனது கௌரவம் இருப்பதாக சொல்லி வருகிறாராம்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ரஜினி கட்சி தொடங்கினால்... ராதாரவி பேச்சு...
காராத்தே தியாகராஜன் தனது பிறந்தநாளை இன்று தனது இல்லத்தில் கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி, ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ராதாரவி, ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் இணைந்து பணியாற்றுவேன். நான் அதிமுகவில் இருக்கிறேன் என்று பார்க்க வேண்டாம். அதிமுக, பாஜக எல்லாம் ஒரே கூட்டணிதான். இதில் ரஜினியும் இணையும்போது ஒன்றாக பணியாற்றுவோம் என்றார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
புதிய படத்துக்கு தயாராகிறார் வைரலாகும் அஜித் இளமை தோற்றம்
வினோத் இயக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்க உள்ளார். போனிகபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாகிறது. இதர நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.
அதிரடி சண்டை கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்பந்தய காட்சிகள் இடம்பெறுகின்றன. மங்காத்தா, என்னை அறிந்தால், விவேகம் படங்களுக்கு பிறகு புதிய படத்திலும் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வருகிறார். முந்தைய படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் இருந்த அவர் புதிய படத்துக்காக தலைமுடியை கருப்பாக்கி இளமையாக மாறியுள்ளார்.
விமான நிலையத்துக்கு சென்ற அஜித்குமாரை சிலர் செல்போனில் படம்பிடித்தனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 10 வருடங்களுக்கு முன்பு பார்த்த அஜித்தை போலவே இருக்கிறார் என்றும் புதிய படம் ஸ்டைலாக இருக்கும் என்றும் ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவிடுகிறார்கள்.
இளமை தோற்றத்துக்கு மாறியுள்ள அஜித்குமார் டெல்லியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் கலந்து கொண்ட படங்களும் வெளியாகி உள்ளன. பயிற்சி மையத்தில் உள்ளவர்களுடன் ஆலோசனை நடத்துவதுபோலவும் துப்பாக்கியால் சுட தயாராக நிற்பது போன்றும் இந்த படங்கள் உள்ளன.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சர்ச்சைக்குரிய கதையில் நடிக்க ‘ஓகே’ சொன்ன அமலா பால்!
ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய அமலா பால் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சமீபத்தில் வெளியான ஆடை படத்தில் பாராட்டுக்களையும், எதிர்ப்புகளையும் ஒரு சேர பெற்றவர் அமலா பால். அந்த படத்தில் அவர் நிர்வாணமாக இருப்பது போல நடித்திருந்தாலும் ஒவ்வொரு காட்சியும் ஆபாசம் ஏதும் இல்லாமல் காட்டப்பட்டிருந்து. இருந்தாலும் இந்த படத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்திருந்தனர். இதனிடையே தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குறிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் அமலா பால்.
பெண்களுக்கு காமத்தின் மீது ஏற்படும் உணர்ச்சியை சொல்லும் லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் வெப்சீரிஸ் கடந்தாண்டு வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கியது. நெட்பிளிக்ஸ் இந்தியில் வெளியிட்டிருந்த இந்த வெப்சீரிசில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால், கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக இதன் கதையம்சம் இருந்ததாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதையெல்லாம் தாண்டி இந்திய அளவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வெப்சீரிஸ் எனும் பெருமையையும் லஸ்ட் ஸ்டோரிஸ் பெற்றது
இந்நிலையில் இதனை தெலுங்கில் திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அமலா பால் நடிக்க உள்ளார். நான்கு கதைகள் கொண்ட இந்த படத்தின் நான்கு கதைகளையும் நான்கு வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கவுள்ளனர். இதில் ஒரு கதையைத்தான் சமீபத்தில் வெளியான ஓ பேபி திரைப்படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இயக்கவுள்ளார். இவரது இயக்கத்தில் அமலாபால் மற்றும் ஜெகபதிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.
லஸ்ட் ஸ்டோரிஸ் வெப்சீரிசில் பெற்றோர் கண்முன்னே நாயகி சுய இன்பத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியில் கியாரா அத்வானி நடித்த இந்த கதாப்பாத்திரத்தில் தான் தற்போது அமலா பால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்ததற்காக பலதரப்பிலிருந்தும் இருந்தும் கியாரா அத்வானிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய அமலா பால் தற்போது பெண்களுக்கான பாலியல் தேவைகள், அதில் உள்ள முரண்பாடுகள் தொடர்பான வில்லங்கமான கதையில் நடிக்க உள்ளார். இது அவருக்கு பாராட்டுக்களை பெற்றுத்தருமா அல்லது இந்தியை போன்றே கடும் விமர்சனங்களை ஏற்படுத்துமா என்பது படம் வெளியான பின்பே தெரிய வரும்...
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
49 பேர் மீது தேச துரோக வழக்கு : ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கேள்வி...!
மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினால் அது தேச துரோகமா? என ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுபான்மை மக்களைப் பாதுகாத்திட வலியுறுத்தி, பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது மணிரத்னம் உள்ளிட்ட பலர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது குறித்து பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு கருத்துக்கள் கொண்டிருப்பார்கள் என்றும் அதற்காக அவர்கள்மீது தேச துரோக வழக்கு தொடரப்படுமா? என்றும் கேட்டுள்ளார். இவ்வாறு மக்களின் வாயை மூடுவது அபாயகரமானது எனவும் பி சி ஸ்ரீராம் எச்சரித்துள்ளார்.
மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
“உங்க கண்ணுக்கு லாஸ்லியா மட்டும்தான் அழகா”.. ‘கத்தரிக்காயை’ வீசி போராட்டம் நடத்திய ஷெரின் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் - ஷெரின் காதல் காட்சிகளை ஏன் அதிகம் காட்டவில்லை எனக் கேட்டு கத்தரிக்காய் வீசி போராட்டம் நடத்தியுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 3யில் கவின், லாஸ்லியா காதலைப் போலவே ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது ஷெரின் - தர்ஷன் கெமிஸ்ட்ரியும் தான். இருக்கு ஆனா இல்ல என்ற ரேஞ்சுக்கு அவர்கள் ரொமான்ஸ் காட்சிகள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் இருந்தது.
அதோடு தர்ஷனை ஷெரின் காதலிக்கிறார் என வனிதா கொளுத்திப் போட்டதும் பிக் பாஸ் வீட்டில் இரண்டு முறை பெரும் பரபரப்பான சம்பவமாக மாறியது.
[size=undefined]
ஷெரின் - தர்ஷன் காதல்
ஆ[/size]னால், நிகழ்ச்சியில் ஷெரின் - தர்ஷன் காட்சிகளை ஊறுகாய் மாதிரி தான் காட்டினார்கள். இதனால் அவர்களது அவர்களது ஆர்மியினருக்கு பிக் பாஸ் மீது தனிப்பட்ட ஒரு கோபம் இருந்து வந்தது. அதனை தங்களது சமூகவலைதளப் பக்கங்கள் மூலம் அவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தனர்.
[url=https://twitter.com/endrum_tamil]
படத்தொகுப்பாளர்கள்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா, பிக் பாஸ் படத்தொகுப்பாளர்கள் நான்கு பேருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்ததும் ஷெரின் ரசிகர்கள் பொங்கி எழுந்து விட்டனர்.
கோபம்
‘உங்கள் கண்களுக்கு லாஸ்லியா மட்டும் தான் அழகா? லாஸ்லியா கவின் காதல் காட்சிகளை மட்டும் தான் புரொமோவில் போடுவீர்களா? ஏன் எங்கள் தர்ஷன் - ஷெரின் காதல் காட்சிகளைக் காட்டவில்லை' என ஆளாளுக்கு சண்டைக்கு வந்து விட்டனர்.
Quote:கத்தரிக்காய் போராட்டம்
கோபத்தில் ஒரு ரசிகர், ‘வாங்க நம்ம கத்தரிக்காயை வீசி போராட்டம் நடத்துவோம்' என ஜாலியாக ஷெரின் ஆர்மியினருக்கு அழைப்பு விடுக்கிறார். உடனே சில நெட்டிசன்கள் கத்தரிக்காய் எமோட்டிகன்களாக அனுப்பி தங்களது ஆதரவை அவருக்கு தெரிவித்துள்ளனர். இப்படியாக ஷெரினுக்காக கத்தரிக்காய் போராட்டம் டிவிட்டரில் களை கட்டியது.
first 5 lakhs viewed thread tamil
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
காதல் தோல்வி… போதைக்கு அடிமை.. – சினிமாவில் ஒதுங்கியிருந்த ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்..!
நடிகர் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் பிஸியாக நடித்து வந்த ஸ்ருதிஹாசன், பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவருடன் நட்பாக பழகி வந்தார்.
இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறிய நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தங்களுக்குள் நிலவிய கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.
இதையடுத்து சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார் ஸ்ருதிஹாசன். இந்நிலையில் காதல் முறிவு குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் ஸ்ருதிஹாசன், “நன் மிகவும் கூலான நபர். உணர்வுப்பூர்வமானரும் கூட. எனக்கு அது ஒரு நல்ல அனுபவம். இது சினிமா காதல் அல்ல.
ஒரு சிறந்த காதலை தற்போது தேடிக்கொண்டிருக்கிறேன். அது என்னைத் தேடி வரும்போது இதற்காகத்தான் காத்திருந்தேன் என உலகத்துக்கு அறிவிக்க காத்திருக்கிறேன்” என்றார்.
அதேபோல் சினிமாவிலிருந்து சிறிதுகாலம் ஓய்வெடுத்ததற்கான காரணத்தைக் கூறியுள்ள ஸ்ருதிஹாசன், ஒரு காலத்தில் நான் விஸ்கிக்கு அடிமையாக இருந்தேன். அதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இதனால் தான் சினிமாவிலிருந்து சில காலம் விலகியிருந்தேன்” என்றார்.
ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு கட்டமராயுடு என்ற தெலுங்கு படம் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.
first 5 lakhs viewed thread tamil
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இஸ்லாமியரையும், பிராமணரையும் படுக்கையில் இணைத்து ஆபாசப்படுத்துவதா? - பிக்பாஸுக்கு தடை கோரும் பாஜக எம்.எல்.ஏ
பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சி கலாச்சாரத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி, அதற்கு தடை கேட்டு உ.பி. பாஜக எம்எல்ஏ மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி நமக்கு தான் புதிது. ஆனால், ஹிந்தியில் பல வருடங்களாக பல சீசன்கள் அரங்கேறியுள்ளன. இந்நிலையில், பிக்பாஸ் ஹிந்தியின் 13 வது சீசனை வழக்கம் போல் சல்மான் கான் நடத்தி வருகிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த இரு வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், வீட்டில் குழந்தைகள் பார்க்க முடியாத வகையில் நிகழ்ச்சி இருப்பதாகவும் இதற்கு தடை விதிக்க வேண்டுமென பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
பிக்பாஸ் மீது புகார்
உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜார், பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவினால் மிகப்பெரிய கலாச்சார கேடு விளைவிப்பதாக கூறிவருகிறார். இதற்கு தடை கோரி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக எம்எல்ஏ அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
Quote:
[/url]ANI UP
✔@ANINewsUP
Ghaziabad: BJP MLA from Loni, Nand Kishor Gurjar has written to Minister of Information & Broadcasting, Prakash Javadekar asking him to immediately stop the telecast of 'Bigg Boss - 13' alleging that the show is 'spreading vulgarity & hurting the social morality of the country'.
1,361
முற்பகல் 9:27 - 10 அக்., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
இதைப் பற்றி 579 பேர் பேசுகிறார்கள்
[url=https://twitter.com/ANINewsUP/status/1182143006012346368]
“இந்த நிகழ்ச்சி ஆபாசமான மற்றும் மோசமான செயல்களை ஊக்குவிப்பதாக உள்ளது. குடும்பத்தினர் வீட்டில் அமர்ந்து பார்க்க தகுதியற்ற ஒரு நிகழ்ச்சியாக உள்ளது. நாட்டின் கலாச்சார நெறிமுறைகளுக்கு எதிராகவும் மிகவும் ஆட்சேபனைக்குரிய நெருக்கமான படுக்கைக்காட்சிகள் கொண்டுள்ளது. இதில் வேறுபட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் படுக்கையை ஷேர் செய்வது போல் காட்டுகின்றனர். இஸ்லாமியர்களையும், பிராமணர்களையும் ஒரே படுக்கையை பகிர்வது போல காட்டுகின்றனர். குடும்பத்தினரோடு அமர்ந்து பார்க்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாது.
குழந்தைகளும் சிறார்களும் தொலைக்காட்சியைப் பார்க்கிறார்கள், ஆனால் இந்நிகழ்ச்சி வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது. மேலும் நிகழ்ச்சிகள் இணையத்திலும் கிடைக்கின்றன.
ஒருபுறம், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா தனது இழந்த பெருமையை மீண்டும் பெற முயற்சிக்கிறார், மறுபுறம், இதுபோன்ற நிகழ்ச்சிகள் நாட்டின் கலாச்சாரத்தை இழிவுபடுத்துகின்றன.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் உள்ளடக்கத்திற்கான தணிக்கை பொறிமுறைகள் வரையறுக்கப்பட வேண்டும். நேரடியான ஆபாச காட்சிகள் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
|