25-09-2019, 07:28 PM
சப்தஸ்வரங்கள்...
அன்பார்ந்த இணையதள வாசகர்களே...இது நண்பர் ஒருவருடைய இனிமையான கதை..பழைய வாசகர்கள் நிச்சயம் இதை படித்திருக்க கூடும்.புதிய வாசகர்களுக்ககவும்...ஏற்கனவே படித்தவர்களுக்கு மறு புத்துணர்சிக்காகவும் இந்த அருமையான கதையை இங்கு பதிவிடுகிறேன்...தங்கள் ஆதரவை
கமண்ட் மூலம் தெரிவிக்கவும்.
ஸ்வரம்-ஒன்று
-----------------
-----------------
ராகவன் காலையில் எழுந்து ரெடியாகி உடை மாற்றி விட்டு வெளியே வந்து கதவை அடைக்கும் வரை இன்று ஒரு அதிர்ஷ்டம் அடிக்க போகிறதென்பதை தெரியாமல் இருந்தான். கதவை பூட்டி விட்டு படியிறங்கி தனது ஹோண்டா மோட்டார் சைக்கிளுக்கு அருகில் போகும் போது அவனுக்காகவே காத்து நின்ற சாந்தி அக்கா அவன் கண்ணில் பட்டாள். அவளை ஒரு முறை ஏறிட்டு பார்த்து விட்டு மறுபடியும் தலையை திருப்பிக் கொண்டு அமைதியாக மோட்டார் சைக்கிளை நோக்கி திரும்ப...சாந்தி அக்காவின் குரல் முதுகிற்கு பின்னால் இருந்து அவனுக்கு கேட்டது...
'தம்பி...தம்பி' என்று அவள் இருமுறை அழைத்த பிறகே அவன் மெதுவாக திரும்பி 'என்ன' என்று கேட்பதை போல அவளை பார்க்க....'ஒரு நிமிஷம் இங்க வந்துட்டு போ...'என்று சற்று கெஞ்சலாக சாந்தி அக்கா அவனை பார்த்து சொல்ல...அதை கேட்டு விட்டு ஒரு நிமிடம் அமைதியாக எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றவனை நோக்கி...சாந்தி அக்கா மீண்டும் அதே போல மெதுவாக கெஞ்சுவதை போல அழைக்க...முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் அவளுக்கு கேட்கும் படி மெதுவாக 'இல்ல...ஆபீசுக்கு நேரமாயிட்டு....'என்று தயங்குவதை போல இழுக்க....'அதெல்லாம் பரவாயில்லை தம்பி....ஒரே ஒரு நிமிஷம் வந்துட்டு போ...' என்று மீண்டும் அதே போல கண்களால் கெஞ்சுவதை போல அழைக்க....வேறு வழியின்றி செல்வதை போல...மோட்டார் சைக்கிளை விட்டு அகன்று ஐந்தாறடி தூரத்திலேயே நின்ற அவளை நோக்கி ராகவன் நடக்க....அவன் தனது அழைப்பை ஏற்று தன்னை நோக்கி வருகிறான் என்பதை புரிந்து கொண்டு அதனால் ஒரு லேசான புன்முறுவலோடு தனது வீட்டு கதவை நோக்கி அவள் திரும்பினாள்.
ஒரே காம்பவுண்டுக்குள் அவர்கள் வீடுகள் அடுத்தடுத்து இருந்தன...சொல்லப் போனால் அந்த வீடு ஒரே வீடுதான். ஐந்து சென்ட் நிலத்தில் கட்டப்பட்ட ஓரளவு சுமாரான வீடு. சாந்தி அக்காவுக்கு சொந்தமான வீடுதான். ராகவன் அங்கே பக்கத்து போர்ஷனில் வாடகைக்கு குடி இருக்கிறான்.
சாந்தி அக்காவுக்கு கணவர் கிடையாது. வருமான வரித்துறையில் பணிபுரிந்து வந்த அவளது கணவர் எதிர்பாராத விதமாக ஏழு வருடங்களுக்கு முன்பே அலுவலகத்தில் ஏற்பட்ட ஒரு அசம்பாவித விபத்தில் இறந்து போக...அதனால் நல்ல ஒரு தொகை நஷ்ட ஈடாக கிடைத்தது மட்டுமின்றி மத்திய அரசு ஊழியராக இருந்து இறந்து போனதால் மாதம் மாதம் செழிப்பான விதத்தில் பிஎப் பணமும் வந்து கொண்டிருந்தது.,
ஒரே ஒரு மகன். சந்திரமோகன். வயது 29. ராணுவத்தில் அதிகாரியாக இருக்கிறான். வடஇந்தியாவில் வேலை என்பதால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வான். மூன்று வருடங்களுக்கு முன்புதான் அவனுக்கு திருமணம் செய்து வைத்தாள்.
சொந்தத்திலேயே தெரிந்த பெண்ணாக வாணி கிடைக்க...அவளை சாந்திக்கும் சந்திரமோகனுக்கும் உடனே பிடித்து போய்விட காலம் தாழ்த்தாமல் திருமணம் நடக்க...இதோ இப்போது வாணி ஒரு வயது பெண் குழந்தையோடு மாமியாரோடு வாணி இங்கே இருக்கிறாள்.
ஏழு அறைகள் இருக்கிற வீட்டில் மாமியாரும் மருமகளுமாக இரண்டு பேர் மட்டுமே இருக்க....
இத்தனை பெரிய வீட்டை எதற்காக சும்மா வைத்திருக்க வேண்டும் என்று அம்மாவும் மகனும் பேசி முடிவெடுத்து பக்கத்தில் இருக்கிற மூன்று அறைகளை நடுவே கதவு வைத்து தனி வீடு போல மாற்றி வாடகைக்கு விட தீர்மானித்த போதுதான் தூரத்து சொந்தமான ராகவனுக்கு இந்த ஊருக்கு மாறுதல் கிடைக்க...அகே சுற்றி இங்கே சுற்றி அந்த விஷயம் சாந்திக்கு தெரியவர ... சாந்தியும் தன்னை நேரில் வந்து சந்திக்க சொல்ல....ஒரு வழியாக ராகவன் இந்த ஊருக்கு மாறுதலாகி வந்த அடுத்த நாளே சாந்தியை வந்து பார்த்தான்.
அவனுக்கும் கல்யாணமாகி மூன்று வருடங்கள்தான் ஆகி இருந்தது. மனைவி சந்தியா ஓரளவு சுமாரான குடும்பத்தை சேர்ந்த படித்த பெண். கல்யாணமாகி இரண்டு வருடங்களுக்கு மேலாக குழந்தை இல்லாமல் இருக்க...இந்த வீட்டிற்கு வந்த யோகமோ என்னவோ தெரியவில்லை... வந்த மூன்றாவது மாதத்திலேயே சந்தியா கர்ப்பம் தரித்தாள்.
இந்த வீட்டின் ராசிதான் என்று ராகவனும் சந்தியாவும் மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோர்களுமே நினைத்து சந்தோசப்பட சாந்தியிடமும் வாணியிடமும் சந்தியா ரொம்ப ஒட்டிக் கொண்டாள்.
அவள் மட்டுமின்றி ராகவனும் சாந்தியை வாய் நிறைய அக்கா அக்கா என்று அழைப்பான். வாணியை தந்து சொந்த தங்கை என்று சொந்தம் கொண்டாடி பாசம் காட்டினான்.
வெளியே போய் விட்டு வரும்போதெல்லாம், தனக்கும் தனது மனைவிக்கும் மட்டுமின்றி சாந்திக்கும் வாணிக்கும் சேர்த்து நிறைய பொருட்கள் வாங்கி வருவான்.
இதெல்லாம் எதற்கு தம்பி என்று சாந்தி செல்லமாக அங்கலாய்த்தாலும் அதை கண்டு கொள்ளாமல் பைநிறைய பழங்களும் தின்பண்டங்களும் வாங்கி வருவான். சந்தியாவும் அதை ஆதரிப்பாள்.
அதுமட்டுமின்றி வாரத்தில் ஒரு நாள் நால்வருக்கும் சேர்த்து நல்ல ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வருவான்.
சாந்தியும் பதிலுக்கு அடிக்கடி ராகவனுக்கும் சந்தியாவுக்கும் எதையாவது ருசியாக சமைத்துக் கொடுப்பாள்.
சாந்திக்கும் சந்தியாவுக்கும் முன்பாக ராகவனும் வாணியும் மிகவும் பாசமாக பேசிக் கொள்வார்கள். நால்வரும் ஒன்றாக இருந்து டிவி பார்ப்பார்கள். சிலசமயம் வாணிக்காக நாப்கின் கூட வாங்கி வரச் சொல்லி சந்தியா ராகவனிடம் சொல்லி இருக்கிறாள்.
அதையும் தனியாக இல்லாமல் சாந்திக்கும் வாணிக்கும் முன்னால் வைத்தே சொல்வாள். ராகவன்தான் சற்று தயங்குவதை போல சந்தியாவையும் வாணி மற்றும் சாந்தியையும் மாறி மாறி பார்ப்பான்.
அந்த தயக்கமான பார்வையை பார்த்து விட்டு சந்தியாதான் மீண்டும் அவனிடம் சொல்வாள். 'எதுக்கு தயங்குறீங்க....வாணி என்ன தெரியாத பொண்ணா. ...? உங்க தங்கச்சிதானே...சும்மா போய் வாங்கிட்டு வாங்க' என்று விரட்டி இருக்கிறாள்.
அதை கேட்டு சாந்திக்கு சந்தோசம் தாங்க முடியாது. இத்தனை அன்னியோன்மாக பழகும் விதமாக வாடகைக்கு குடியிருக்க ஆட்கள் கிடைத்து இருக்கிறார்களே என்று அவளுக்கு சந்தோசமாக இருந்தது.