Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய ரயில்வே
#1
அறிவியல் பட்டதாரிகளுக்கு இந்தியன் ரயில்வே வழங்கும் வேலை வாய்ப்பு... எப்போது விண்ணப்பிக்கலாம்?
RRB Recruitment 2019 : அறிவியல் பட்டதாரிகளுக்கு இந்தியன் ரயில்வேத்துறையில் புதிய வேலை வாய்ப்பு வழங்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியன் ரயில்வே சமீபத்தில் B.Sc இயற்பியல் மற்றும் வேதியியல் பட்டம் வேட்பாளர்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. வேதியியல் மற்றும் மெட்டாலஜிக்கல் அசிஸ்டண்ட் பதவிக்கு 494 இடங்கள் அறிவியல் பட்டதாரிகளுக்கு மட்டுமே உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் ஜூனியர் பொறியாளர் மற்றும் டிப்போ மெட்டீரியல் கண்காணிப்பு பதவிகளுக்கான வேலை வாய்ப்பு குறித்து அறிவித்திருக்கிறது.
RRB Recruitment 2019 : இந்தியன் ரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு
மொத்தம் 14033 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு, ஆள் சேர்ப்பு முழுக்க முழுக்க கணினி தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படும். இதற்கான ஆன்லைன் பதிவு ஜனவரி 2ம் தேதி தொடங்குகிறது.
வேதியியல் மற்றும் மெட்டாலஜிக்கல் உதவி பதவிக்கு, வேதியியல் மற்றும் வேதியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பொறியாளர் (ஐ.டி), பி.எஸ்.சி. (கணினி அறிவியல்) விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். பி.சி.ஏ., வேட்பாளர்கள் மற்றும் DOEACC ‘B’ நிலைப்பாடு கொண்டவர்கள் 3 ஆண்டுகள் காலியிடத்திற்கு தகுதியுடையவர்கள்.
இந்த ஆண்டு மட்டுமே மூன்றாவது முறையாக வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை இந்தியன் ரயில்வே வெளியிடுகிறது.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
நம் டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றலாம்... எப்படி? - IRCTC டிப்ஸ்![Image: 143196_thumb.jpg]
Like Reply
#3
ரயில்வே முன்பதிவென்றாலே இன்று பெரும்பாலும் ஆன்லைன்தான் என்றாகிவிட்டது. இதற்கான முன்பதிவு தளமான IRCTC தளத்திலும், ரயில் முன்பதிவு பற்றியும் ஓரளவு அனைவருக்கும் பரிச்சயம் இல்லாத சில வசதிகளைப் பற்றி பார்ப்போம்.
உங்கள் ரயில் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்ற முடியுமா?
முடியும், ஆனால் அவர் உங்களது தந்தை, தாய், மனைவி/கணவர், சகோதரர், சகோதரி ஆகிய உறவுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இதை IRCTC இணையதளத்தில் செய்யமுடியாது. அருகில் உள்ள ரயில்நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்துக்குச் சென்றுதான் இதைச் செய்யமுடியும். ரயில் புறப்படும் நேரத்திலிருந்து 24 மணிநேரங்களுக்கு முன் உங்களது இ-டிக்கெட்டை பிரிண்ட் செய்து (electronic reservation slip) அதையும், உங்களது ID ப்ரூஃப் ஏதேனும் ஒன்றையும், மாற்ற நினைப்பவருக்கும் உங்களுக்குமான உறவை உறுதிசெய்யும் ஏதேனும் ஓர் ஆவணத்தையும் அங்கு கொடுத்தால் உங்கள் டிக்கெட் அவர் பெயருக்கு மாற்றித்தரப்படும். பணிக்காகப் பயணம் செய்யும் அரசு ஊழியர்களுக்கும் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்றச் சிறப்பு அனுமதி உண்டு.
டிக்கெட்டில் எழுத்துப்பிழை ஆகிவிட்டால் என்ன செய்வது?
ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது சிறிய எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுவிட்டால் கவலைகொள்ளவேண்டாம், டிக்கெட் பரிசோதனையாளரால் அதை மாற்றிக்கொள்ளமுடியும். ஆனால், அதற்கென்று பெயரே வேறு பெயராக தெரியும் அளவுக்குப் பிழை இருத்தல் கூடாது. இதைப்போன்ற விஷயங்களில் டிக்கெட் பரிசோதனையாளர் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. பெயர் வேறாக இருந்தால் நீங்கள் டிக்கெட் இல்லாமல் பயணித்ததாகதான் எடுத்துக்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Like Reply
#4
பிரீமியம் தட்கல்
 
தட்கல் ரயில் டிக்கெட்கள் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது ரயில் புறப்படும் நாளுக்கு முந்தைய நாள் கொடுக்கப்படும், இதனுடன் பிரீமியம் தட்கல் என்ற பிரிவு டிக்கெட்களும் கொடுக்கப்படும். ஆனால், பிரீமியம் தட்கல் என்றால் என்னவென்று புரியாமல் அதை அப்படியே விட்டுவிடுவர். பிரீமியம் தட்கல் என்றால் என்ன? இதற்கும் சாதாரண தட்கலுக்கும் இருப்பது ஒரே ஒரு வித்தியாசம்தான். தட்கலுக்கு வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணத்துடன் பிரீமியம் தட்கல் டிக்கெட்களுக்கு 'Dynamic Fare' என்ற கட்டணமும் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் என்பது மக்கள் டிக்கெட் எடுக்க எடுக்க அதிகரிக்கும். அதாவது 120 டிக்கெட்கள் பிரீமியம் தட்கல் பிரிவில் விற்கப்படுகிறது என்றால் முதல் சில டிக்கெட்கள் எடுப்பவர்களுக்கு 'Dynamic Fare' இருக்காது. பின் அது ஏறிக்கொண்டே இருக்கும். கடைசி சில டிக்கெட்கள் மட்டும் மீதமிருக்கும்போது மிக அதிகமாக இருக்கும் டிக்கெட்டின் விலை. எனவே தட்கல் டிக்கெட்கள் கொடுக்கும் நேரத்தில் சரியாக முன்பதிவு செய்தால் டிக்கெட் விலை சாதாரணமாக இருக்கும், தட்கலுக்கு பதில் இதையும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். மேலும் அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை வருகையில் பிரீமியம் தட்கல் பிரிவில் டிக்கெட் இருக்கிறதா என்று பார்க்கலாம். பல நேரங்களில் சார்ட் ரெடி ஆகும் முன்வரை இதில் டிக்கெட் இருக்கும். ஆனால், விலை அதிகமாக இருக்கும். இது அவசர வேளைகளில் கூடுதல் விலை என்றாலும் பரவாயில்லை என்று இருக்கும்போது உதவும்.
[Image: Premium_22312.jpg]
Like Reply
#5
'Auto Upgradation'
ஸ்லீப்பர் டிக்கெட் எடுத்து ஏசியில் பயணிக்க விருப்பமா? அதற்கும் வாய்ப்பளிக்கிறது IRCTC. நீங்கள் ஸ்லீப்பரில் முன்பதிவு செய்யும்போது 'Consider for Auto Upgradation' என்ற செக்பாக்ஸை டிக் செய்திருந்தால் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டலாம். அதாவது நீங்கள் ஸ்லீப்பர் முன்பதிவு செய்து சார்ட் தயார் செய்யும்போது ஏசி கோச்சில் காலி இடங்கள் இருந்தால் உங்கள் டிக்கெட் ஏசி கோச்சிற்கு மாற்ற வாய்ப்புண்டு. 
[Image: AutoUpgrade_22090.jpg]
Like Reply
#6
Cash on Delivery
 
அமேசான், ஃபிளிப்கார்ட்டை போன்று ரயில் டிக்கெட்டையும் வீட்டில் 'Cash on Delivery'-யாக பெறமுடியும். BookmyTrain என்ற செயலி மூலம் இதைச் செய்யலாம். சமீபத்தில்தான் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதால் சில ஊர்களில்தான் இந்த வசதி இருக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் சிலருக்கு செயலி சரியாக வேலை செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே, உங்களுக்குச் சரியாக வேலை செய்கிறதென்றால் ரயில் புறப்படுவதற்கு ஐந்து நாள்கள் முன் வரை இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும். உங்களிடம் பணம் பெறமுடியவில்லை என்றால் நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் ரத்து செய்யப்படும்.
[Image: COD_22507.jpg]
Like Reply
#7
'இனி RAC டிக்கெட்களுக்கு எளிதாக பெர்த் கிடைக்கும்' -ரயில்வேயின் புது திட்டம்
 பொதுவாக ரயில்களில் முன்பதிவு செய்யும்போது 'Waiting list' டிக்கெட்களைப் பலரும் எடுப்பர். இதற்கு முக்கிய காரணம் எப்படியும் யாரேனும் தங்களது டிக்கெட்டை ரத்து செய்தால் நமக்கு பெர்த் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கைதான். சிலருக்கு பெர்த்தும் கிடைக்கும், சிலருக்கு அவை RAC டிக்கெட்களாக மாறும். 'Reservation Against Cancellation' எனப்படும் இந்த டிக்கெட்களுக்குப் பாதி பெர்த்  கொடுக்கப்படும் என்பதை அனைவரும் அறிவர். பயணம் செய்ய வேண்டிய யாரேனும் வரவில்லை என்றால்தான் அவர்களுக்குப் பெர்த் கிடைக்கும். அதுவரை உட்கார்ந்தே தான் பயணிக்கவேண்டும். இப்போது ரயில்வே கொண்டு வரப்போகும் இந்த புதிய திட்டத்தின் மூலம் இதில் சில முன்னேற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[Image: Berth_23438.jpg]

Like Reply
#8
அது என்ன மாற்றம் என்றால், முன்பு போல அல்லாமல் சார்ட் தயாரான பின் தங்கள் டிக்கெட்களை ரத்து செய்யும் பயணிகளின் தகவல்களும் இனி உடனுக்குடன் ரயிலில் உள்ள TTE-க்கு வந்துசேருமாம். இதற்காக அவர்களுக்கு மொபைல் அளவிலான ஒரு சிறப்பு சாதனம் கொடுக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. இவை நேராக ரயில்வே சர்வரிடம் கனெக்ட் ஆகிவிடும். இதன்மூலம்  TTE-க்கு தாமதாக ரத்தாகும் பெர்த்க்களை பற்றி உடனுக்குடன் தெரியவரும். எனவே உடனடியாக அவரால் RAC டிக்கெட்களுக்கு அந்த பெர்த்தை அளிக்கமுடியும். இதற்கு முன்புவரை பயணி ஏறவேண்டிய ரயில்நிலையத்திலிருந்து 2 ரயில் நிலையங்கள் வரை அவருக்காக TTE பொறுத்திருந்து பார்ப்பார் பின்தான் பெர்த் இன்னொருவருக்குக் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில் சோதனை செய்யப்பட்டுவரும் இது விரைவில் அனைத்து ரயில்களுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அனைத்து TTE-க்கும் உடனடியாக இந்த சாதனங்களை கொடுப்பது அவ்வளவு எளிதல்ல என்பதால் பல கட்டங்களாகப் பிரித்து இவை வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Like Reply
#9
first post of this thread : RRB JE Recruitment 2019
indiatoday.in Wrote:Official notification for more than 14000 vacancies for various posts released
Indian Railways has notified about RRB JE Recruitment after three years span.

In 2015, the RRBs had released the notice in June for more than 2000 vacancies.

The Railway Recruitment Board (RRB) has released the notification in order to invite the
applications for recruitment to the posts of Junior Engineer, Depot Material Superintendent
and Chemical and Metallurgical Assistant in various Zonal Railways and Production Units of
Indian Railways.

The candidates have to keep the documents ready and start applying from January 2 onwards.

RRB JE Recruitment 2019: Application through online mode only

Eligible candidates can apply for RRB JE Recruitment 2019 through the online mode only.
The candidates are suggested to go through the official website of the respective Railway
Recruitment Board (RRB) of Railway Zone.

Interested candidates seeking to apply for RRB CEN 03/2018 for 14033 Junior Engineer (JE)
and other vacancies can apply online from January 2, 2019 from 10.00 am onwards while the
online registration will close on January 31, 2019 at 23.59 hrs.

Eligibility criteria

Candidates must have qualified diploma/degree in the relevant discipline of the vacancy.

Age limit

   The age of the candidate should be between 18 to 31 years as on January 1, 2019
   Age relaxation is applicable for the reserved category candidates as per the govt rules

   OBC applicants will get relaxation of 3 years
   and SC / ST applicants will get relaxation of 5 years

Important dates

   Opening date & time for online registration and submission of applications:
January 2, 2019 from 10.00 am
   Closing date & time for online registration and submission of applications:
January 31, 2019 at 23.59 hrs
   Last date & time for payment of application fee - online payment:
February 5, 2019 at 22.00 hrs

Application fee

General and OBC categories students are required to pay Rs 500,
while it is Rs 250 for SC and ST categories.
Like Reply
#10
[Image: giphy.gif]

ஹாப்பி நியூ இயர்  Heart
Like Reply
#11
^ looks like that dog is a doll

however it is not unusual that some animals behave friendly
though they are foes by birth. Humans have to learn from them!
Like Reply
#12
ஹிமாச்சல் டூர் போக பிளான் போட்டவர்களுக்கு IRCTC கொடுக்கும் வாய்ப்பு
IRCTC Offers 9 Day Tour to Shimla, Kufri, Manali, Solang Valley : இமாச்சல் ஃபேண்டஸி டூர் பேக்கேஜ்... அறிய விஷயத்தை காண...

IRCTC Himachal Tour Package 2019 : ஐ.ஆர்.சி.டி.சி ஹிமாச்சல் டூர் பேக்கேஜ்
இத்தகைய அறிய விஷயத்தை காண எப்படி செல்வது என குழம்பி நிற்கும் மக்களுக்காகவே ஐ.ஆர்.சி.டி.சி ஒரு டூர் பேக்கேஜ் வழங்குகிறது. 9 நாட்கள் சுற்றுப்பயணம் அடங்கிய இந்த பேக்கேஜ்ஜில், சிம்லா, கஃப்ரி, மணாலி, சோலாங் வேலி, குளு மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களை சுற்றிப்பார்க்கலாம்.
மதுரை – சென்னை விரைவு ரயில்… தேஜஸ் எக்ஸ்பிரஸ் குறித்து நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது
இந்த பயணம் மேற்கொள்பவர்கள், ஸ்கேண்டல் பாயிண்ட், கெய்ட்டி தியேட்டர், பந்தோ அணை, ஹனோகி மாதா கோவில், ஸ்கீ ஸ்லோப்ஸ், கோதி கோர்ஜ், குலாபா, மார்ஹி, குள்ளு வைஷ்ணோ தேவி கோவில், ரோஸ் கார்டன், ராக் கார்டன் மற்றும் பல இடங்களை சுற்றிப்பார்க்கலாம்.
திருப்பதி, ராமேஸ்வரம், பத்மாவதி கோவிலுக்கு செல்ல வேண்டுமா? IRCTC புதிய திட்டம்
3A/SL கிளாஸ் ரயில் டிக்கெட், ஏசி அறையில் தங்கும் வசதி, ஏசி பஸ் மற்றும் இதர சேவைகளுக்காக கட்டணம் இந்த பேக்கேஜில் அடங்கும். இதற்கான கட்டண செலவை ஐ.ஆர்.சி.டி.சி இணையத்திலேயே செலுத்தலாம்.
Like Reply
#13
ஒரு நபருக்கான விலை : 
[Image: IRCTC.png]
தங்கும் வசதி : 
[Image: IRCTC-2.png]
நிபந்தனைகள் :
  1. தாமதம் ஆகும் ரயில்களால் ஒன்றோ அல்லது ஒரு சில சேவைகளோ தவரினால் அதற்கு ஐஆர்சிடிசி பொறுப்பு ஏற்காது.
  2. ரயில் அல்லது சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பஸ்ஸை தவரவிட்டால் பயணியே முழு செலவை ஏற்று அந்த இடத்திற்கு வந்து சேர வேண்டும்.
  3. அவரவர்களின் பொருட்களை அவரவர்களே பாதுகாக்க வேண்டும். ஏதேனும் திருட்டு அல்லது காணாமல் போனால் ஐ.ஆர்.சி.டி.சி பொறுப்பேற்காது.
  4. ஒருவேளை கோவில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் தரிசனம் கேன்சல் செய்யப்பட்டால் தவரவிட்ட சேவைக்கு மட்டுமே பணம் திருப்பி அளிக்கப்படும்.
  5. உங்களின் கவனக் குறைவால் எதையாவது நீங்கள் தவரவிட்டால் அதற்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படாது.
Like Reply
#14
குளு குளு ஊட்டியை பொம்மை ரயிலில் சுற்றிப் பார்க்க வேண்டுமா? IRCTC புதிய ஏற்பாடு

IRCTC : சுற்றுலா பயணிகளுக்காக பல சலுகைகளையும், சுற்றுலா ஆஃபர்களையும் அளித்து வரும் ஐ.ஆர்.சி.டி.சி, ஊட்டி பொம்மை ரயிலுக்கு அசத்தல் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது.
ஊட்டியில் உள்ள டீ அருங்காட்சியகம், ஊட்டி ஏறி, பூங்கா மற்றும் பைக்காரா அறுவி போன்ற பெரும்பாலான சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்க்க ஐ.ஆர்.சி.டி.சி இந்த புதிய சுற்றுலா பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாகவே ஊட்டி என்றால் அனைவரின் மனதிற்குள்ளும் வந்து செல்லும் ஒரே எண்ணம் பொம்மை ரயிலில் பயணிக்க வேண்டும் என்ற ஒரே ஆசை தான். உங்களின் அந்த ஆசையை நிறைவேற்றவே இந்தியன் ரயில்வே இந்த முயற்சியை எடுத்துள்ளது.
நீலகிரி மலை ரயில்வே பிரபலமான சுற்றுலா தளமாகும். குளு குளுவென இருக்கும் ஊட்டியை இந்த பொம்மை ரயிலில் சுற்றி வருவதே ஒரு தனி அனுபவம் தான். மேட்டுப்பாளையம் முதம் ஊட்டி வரை சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவை கொண்டது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது, பயணிகளை இயற்கை கட்டி தழுவுவது போன்ற உணர்வு ஏற்படும். 250 பாளங்கள், 16 சுறங்கங்களை கடந்து செல்கிறது இந்த ரயில்.
 
IRCTC Toy Train Package : ஊட்டி ரயில் டூர் பேக்கேஜ் என்னென்ன சலுகை உள்ளது
  1. சென்னை – மேட்டுப்பாளையம் 3ம் ஏசி பெட்டியில் பயணம்.
  2. மேட்டுப்பாளையம் – ஊட்டி : 2ம் கிளாஸ் பொம்மை ரயில் பயணம்.
  3. 2 நாட்கள் ஊட்டியில் தங்கும் வசதி
  4. சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்ப்பது
  5. சுற்றுலா காப்பீடு
  6. குழுவாக செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தல்
Like Reply
#15
IRCTC : எப்படி டிக்கெட் புக் செய்வது?
ஐ.ஆர்.சி.டி.சி தளத்திலேயே டிக்கேட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ரயில் புறப்படும் நாளுக்கு 4 நாட்கள் முன்னதாக மட்டுமே டிக்கெட் பெற முடியும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த பயணம் தொடங்கும். குறிப்பாக உங்களுக்கு எந்த பெர்த் வேண்டுமென்று கூட நீங்களே முடிவு செய்துக் கொள்ளலாம்.
ஊட்டி ரயில் பேக்கேஜ் டிக்கெட் விலை:
 
இரண்டு பேர் ஷேரிங் : 10,500 ரூபாய்
மூன்று பேர் ஷேரிங் : 8,940 ரூபாய்
5 – 11 வயது வரையிலான குழந்தைகள் : 6,650 ரூபாய் (கட்டில் வசதியுடன்)
5 – 11 வயது வரையிலான குழந்தைகள் : 6,650 ரூபாய் ( கட்டில் வசதி இல்லாமல்)
குழுவாக செல்ல (4-6 பயணிகள்) : 
இரட்டை புக்கிங் : 9,200 ரூபாய்
மூன்று புக்கிங் : 8,750 ரூபாய்
5 – 11 வயது வரையிலான குழந்தைகள் : 7,850 ரூபாய் (கட்டில் வசதியுடன்)
5 – 11 வயது வரையிலான குழந்தைகள் : 7,850 ரூபாய் ( கட்டில் வசதி இல்லாமல்)
Like Reply
#16
[Image: 3-32-750x506.jpg]
X

IRCTC Ticket Cancellation Rules : ஐஆர்சிடிசி -யில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!
Like Reply
#17
IRCTC Ticket Cancellation Rules 2019 : ஐஆர்சிடிசி இணையதளமான www.irctc.co.in மூலமாக இந்திய ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்களை 120 நாட்கள் முன்னதாகவே புக் செய்ய முடியும். இந்தச் சேவையினை மேலும் மெறுகேற்ற்வும் விதமாக ரயில்வே அமைச்சகம் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் தட்கல் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யும் போது டிக்கெட் புக் செய்த பிறகு கட்டணத்தினைச் செலுத்தும் முறையினை அன்மையில் ஐஆர்சிடிசி நிறுவனம் அறிவித்தது.
இந்த முறையினை இணையதளம், செயலி என ஐஆர்சிடிசி சேவையில் தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது பெறலாம். தட்கல் டிக்கெட் என்பது கடைசி நேரத்தில் வெளியூர் செல்ல முடிவு செய்தவர்கள் ஒரு நாள் முன்பு முன்கூடியே புக் செய்யப்படும் டிக்கெட் ஆகும். மேலும் தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது அடையாள எண் குறிப்பிட வேண்டும் என்றும் பயணம் செய்யும் போது அதனைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.
IRCTC Ticket Cancellation Rules 2019:தட்கல் வசதி மட்டுமில்லை ஐஆச்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் இதையெல்லாம் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்!
1. ஒரு ஐஆர்சிடிசி இணையதள ஐடி கீழ் மாதம் 6 டிக்கெட்கள் வரை புக் செய்யலாம். இதுவே ஒரு பயணி அல்லது ஐஆர்சிடிசி ஐடி வைத்துள்ளவர்கள் ஆதார் சரிபார்ப்பினை செய்தால் 12 டிக்கெட்கள் வரை புக் செய்யலாம்.
2. ஐஆர்சிடிசி பயனர் ஒருவரால் அட்வான்ஸ் ரிசர்வேஷன் நேரமான காலை 8 மணி முதல் 10 மணி வரை 2 டிக்கெட்கள் மட்டுமே டிக்கெட்களைப் புக் செய்ய முடியும்.
3. ஒரு பயனரால் ஒரு நேரத்தில் ஒரு முறை மட்டுமே ஐஆர்சிடிசி ஐடியில் உள்நுழைய முடியும். அதாவது ஒரு ஐடியை ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் ஒரே நேரத்தில் உள்நுழைய முடியாது.
4. ஐஆர்சிடிசி இணையதளத்தின் ஒரு பக்க குவிக் ரயில் டிக்கெட் புக் சேவையானது காலை 8 மணி முதல் பிற்பகள் 12 மணி வரை செயல்படாது.
5. ரயில் டிக்கெட் புக்கிங்கில் பாதுகாப்பினை அதிகரிக்கக் கூடுதல் விவரங்கள் பெறப்படும். அவை தான் பெயர் பெயர், மின்னஞ்சல், மொபைல் என், செக் பாக்ஸ் போன்றவை ஆகும். பயணிகள் விவரங்களை 25 நொடிகளில் நிரப்ப வேண்டும்.
உங்கள் ரயில் பயணத்தில் கடைசி 30 நிமிடம் போர்வை இருக்காது, ஏன் தெரியுமா?
6. காலை 10:00 மணி முதல் 12:00 மணி நேரத்தில் தட்கள் டிக்கெட்டினை ஒரு பயனர் ஐடியில் இருந்து 2 டிக்கெட்கள் மட்டுமே புக் செய்ய அனுமதி வழங்கப்படும். ஒரு செஷனில் ஒரு தட்கள் டிக்கெட் மட்டுமே புக் எய்ய முடியும். மேலும் ஒரு இணையதள ஐபி முகவரிக்குத் தட்கள் நேரமான காலை 10:00 மணி முதல் 12:00 மணி நேரத்தில் 2 டிக்கெட்கள் மட்டுமே புக் செய்ய முடியும்.
Like Reply
#18
[Image: a330-750x506.jpg]
X

IRCTC: உங்கள் ரயில் பயணத்தில் கடைசி 30 நிமிடம் போர்வை இருக்காது, ஏன் தெரியுமா?
1.95 லட்சம் டவல்கள் திருடுப் போயுள்ளன...
Like Reply
#19
ரயிலில் பயணிகள் பலர், படுக்கை, தலையணை உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதால், ஐஆர்சிடிசி சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கு ரயில்வே வெளியிட்ட தகவலில், 2017ல் ரயிலில் பயணம் செய்த பயணிகள் 1.95 லட்சம் டவல்கள், 81,736 பெட்-ஷீட்கள், 55,573 தலையணை உறைகள், 5,038 தலையணைகள், 7,043 போர்வைகளை திருடிச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, 200 டாய்லேட் கப்புகள், கிட்டத்தட்ட 1000 பைப்புகள், 300க்கும் மேற்பட்ட ஃபிளஷ் பைப்புகள் ஆகியவற்றையும் பயணிகள் திருடிச் சென்றிருப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 79,350 கை துடைக்கும் டவல்கள், 27,545 பெட் ஷீட்கள், 21,050 தலையணை உறைகள், 2,150 தலையணைகள், 2,065 போர்வைகள் திருடப்பட்டுள்ளதாம். இதன் மொத்த மதிப்பு 62 லட்சம்.
பயணிகள் இப்படி பொட்டுகளை எடுத்துச் செல்வதை தடுக்கும் பொருட்டு, அவர்கள் இறங்கும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே பெட்ஷீட், தலையணை, போர்வை உள்ளிட்டவை பொறுப்பாளர்களால் கலெக்ட் செய்யப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் அனைத்தும் சரியாக ரிட்டர்ன் ஆகியுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது
Like Reply
#20
[Image: a314-750x506.jpg]
X

ரயில் புறப்படுவதற்கு 20 நிமிடங்கள் முன்பே ஸ்டேஷனில் இருக்கணுமாம்!! வருகிறது புதிய கட்டுப்பாடு
ரயில் நிலையங்களில் ரயில் புறப்படுவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பே பயணிகள் உள்ளே சென்றுவிட வேண்டும்
Like Reply




Users browsing this thread: