Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முத்தையா முரளிதரன் பயோபிக் - என்ன செய்யப் போகிறார் விஜய் சேதுபதி ?
இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்று பல சாதனைகளைப் புரிந்தவர் முத்தையா முரளிதரன். அவர் எப்போதுமே விடுதலைப்புலிகளுக்கு எதிராக பேசுபவர். அவரது பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. உடனேயே, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்கள், முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தார்கள்.
தற்போது இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் ராஜபக்சே தம்பி கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஆதரவான கூட்டத்தில் கலந்து கொண்டு முரளிதரன் பேசியுள்ளார். இது இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கடும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம். இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர்தான் முன்னாள் அதிபர் ராஜபக்சே. அவருடைய தம்பிக்கு ஆதரவாக தற்போது பிரச்சாரம் செய்து வரும் முரளிதரனையும் பலர் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அவரது பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என மீண்டும் குரல்கள் எழுந்துள்ளன. தமிழ் சினிமாவில் தமிழர்களுக்கு ஆதரவானவர்களாக தன்னை காட்டிக் கொள்ளும் விஜய் சேதுபதி இப்போது அந்தப் படம் குறித்து ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இளையராஜா இசை: ‛துப்பறிவாளன் 2' அறிவிப்பு
நடிகர் விஷால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி நேற்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது. அவரது முதல் படமான செல்லமே 2004ம் ஆண்டு செப்டம்பர் 10ந் தேதி வெளிவந்தது. இதையொட்டி தனது அடுத்த படமாக துப்பறிவாளன் 2ம் பாகத்தை நேற்று முறைப்படி அறிவித்தார்.
இதனை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கின் இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். நேற்று விஷால், மிஷ்கின், ஜி.கே.ரெட்டி ஆகியோர் இளையராஜாவை சந்தித்து அவரிடம் ஆசி வாங்கிய பிறகு, இதனை அறிவித்தனர். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள் விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
விஷால், தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‛ஆக்ஷன்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இரும்புத்திரை 2ம் பாகத்தில் நடிக்க இருக்கிறார்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த சேரன்
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்றுள்ளார் இயக்குனர் சேரன். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் மிக முக்கிய போட்டியாளராக கருதப்பட்டவர் இயக்குனர் சேரன். அவர் தான் டைட்டிலை தட்டிச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் வெளியேறினார்.
ஆனால் அவரை உடனடியாக வெளியே அனுப்பாமல் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பி வைத்தார் பிக்பாஸ். இதையடுத்து அவர் கடந்த இரண்டு நாட்களாக ரகசிய அறையில் இருந்தபடியே, ஹவுஸ்மேட்ஸ் அனைவரின் நடவடிக்கைகளையும் பார்த்து வந்தார்.
நேற்றைய எபிசோடின் போது கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு சேரன் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். அதில் தனக்கு அளித்த வாக்குறுதியை மீறி லாஸ்லியாவிடம் காதல் விவகாரம் குறித்து பேசியது ஏன் என கவினுக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கவின், இனி தான் அப்படி பேச மாட்டேன் எனக் கூறினார்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரொமோ வெளியாகியுள்ளது. அதில், இயக்குனர் சேரன் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவது காட்டப்படுகிறது. சேரனை பார்த்ததும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் துள்ளி குதிக்கின்றனர். அவரை கட்டித்தழுவி நலம் விசாரிக்கின்றனர்.
இதன் மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சேரன் மீண்டும் வந்துவிட்டது தெளிவாகிறது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
11-09-2019, 05:42 PM
(This post was last modified: 11-09-2019, 05:44 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
உன்ன அப்படியா நான் வளர்த்தேன்....காறித்துப்புறாங்க - லீக்கான வீடியோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லொஸ்லியாவின் அப்பா Freeze டாஸ்க் மூலம் உள்ளே வந்து லொஸ்லியாவை கவின் விஷயத்தில் கடுமையாக திட்டுகிறார்.
10 வருடம் கழித்து தந்தையை பார்த்ததும் அளவற்ற ஆனந்தத்தில் கட்டிப்பிடித்து கதறி அழுதார் லொஸ்லியா. ஆனால் அவரது தந்தை முகத்தில் கொஞ்சம் கூட புன்னகை இல்லை. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில் கவின் விஷயத்தில் கீழ்த்தரமாக நடந்துகொண்ட லொஸ்லியாவை அவரது அப்பா திட்டி அதட்டி கேட்கிறார். " உன்ன அப்படியா வளர்த்தேன் நானு... என்ன சொல்லி இங்க வந்த அடுத்தவங்க காறித்துப்புறதை என்ன பார்க்கவைக்குற என்று கூறி டோஸ் விடுகிறார்
அந்த நேரத்தில் சேரன் அவரது தந்தையை சமாதானம் செய்கிறார். கவினின் மூஞ்சியில் ஈ ஆடவில்லை என்ற கூறி கிண்டலடித்து வருகின்றனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
லாஸ்லியாவின் தந்தை குறித்து கமல்ஹாசன் அடித்த கமெண்ட்!
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகழ் பெற்ற ஒன்றாக 'பிக்பாஸ்' நிகழ்ச்சி உருவாகியிருக்கிறது. உலக அளவில் 'பிக்பிரதர்' என்ற பெயரில் தொடங்கி இந்தியாவிலும் பல மொழிகளில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி வெற்றிகரமாக அடுத்தடுத்த பார்ட்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிவருகிறது. முதல் இரண்டு சீசன்களையும் விட அதிக பரபரப்பு, விறுவிறுப்பு, கைகலப்பு என சென்றுகொண்டிருக்கிறது பிக்பாஸ் - 3.
இந்நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளரான கவின், தனது சக பெண் போட்டியாளர்களுடன் நெருங்கிப் பழகிவருகிறார். காதல் போன்றதொரு பிம்பத்தை ஏற்படுத்தும் அந்த உறவு நட்பு எனவும் அதற்கு மேல் எனவும் அவர்களால் சில தருணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக கவின் - லாஸ்லியா இருவரின் நட்பு பார்வையாளர்கள் மத்தியிலும் போட்டியாளர்கள் மத்தியிலும் பல்வேறு விதமான விவாதங்களுக்கு உள்ளாகி இருந்தது. இன்னொரு புறம், இது டி.ஆர்.பி ரேட்டிங் எனப்படும் பார்வையாளர் பதிவு குறியீட்டை அதிகப்படுத்துவதற்காக திட்டமிட்டு செய்யப்படும் விஷயம் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. கடந்த வாரம், பிக்பாஸ் - 3 போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் நண்பர்களும் பிக்பாஸ் இல்லத்துக்குள் திடீர் வரவாக சென்று ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் உண்டாக்கினார்கள். கடந்த வாரம் முழுவதுமே நிகழ்ச்சியில் புன்னகையும் கண்ணீரும் பொங்கி வழிந்தது.
சேரனின் மகள் உள்ளிட்டவர்கள் வர, தர்ஷன், முகின், ஷெரின் ஆகியோரின் தாய் உள்ளிட்டவர்கள் சென்று பார்த்தார்கள். கவினின் நண்பர் உள்ளே சென்றார். வனிதாவின் மகள்கள் வீட்டிற்குள் சென்று வந்தனர். இந்த வரிசையில் யாரும் எதிர்பாராத வகையில் லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் இல்லத்திற்குள் சென்றார். இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியா, தனது தந்தையை சந்தித்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்று முன்பே கூறியிருந்தார். கனடாவில் வாழும் அவர் நிகழ்ச்சிக்காக வந்தது பார்வையாளர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் லாஸ்லியாவுக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தாய் மற்றும் சகோதரிகளைத் தொடர்ந்து தந்தை உள்ளே வந்தபோது லாஸ்லியா உறைந்து நின்றார். பத்து ஆண்டுகள் கழித்து சந்திக்கும் தந்தை கட்டி அணைத்து கதறுவார் என்றெண்ணியவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் அவர். வந்தவுடன் கவின் - லாஸ்லியா நட்பு மீதான தனது கோபத்தைக் காட்டிய அவர், "எங்க கிட்ட என்ன சொல்லிட்டு வந்த? இங்க என்ன பண்ற? குடும்ப மானத்தை வாங்கிட்ட... வெளிய எல்லோரும் 'உன் பொண்ணு கல்யாணத்துக்குப் போறியா?'ன்னு கேக்குறாங்க" என்று வெடித்துத்தள்ளினார். பின்னர் சமாதானமாகி அன்பாகப் பேசி, "நீ நீயா இரு. உன் கேமை விளையாடி வென்று வா" என்று கூறிய அவர் சேரனை மிகுந்த அன்புடன் அரவணைத்து நன்றி தெரிவித்தார். அவர் உள்ளே வந்த நொடியிலிருந்தே பதற்றத்துடன் இருந்த கவினை இறுதி வரை கேள்வி கேட்கவோ திட்டவோ இல்லை லாஸ்லியாவின் தந்தை. "உங்க கேமை விளையாடுங்க தம்பி" என்று கூறிச் சென்றார்.
சமூக ஊடகங்களில் ஒரு பக்கம் அவரது இந்த செயல் பாராட்டப்பட்டாலும் இன்னொரு பக்கம் காதல் என்பது தனிமனித உரிமை, அதை தடுப்பது தவறு என்று விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் சனி, ஞாயிறு தினங்களில் நிகழ்ச்சியை வழங்கும் கமல்ஹாசன் இது குறித்து என்ன சொல்வார் என மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர் பார்வையாளர்கள். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. தனது மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா இருவரையும் முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்த கமல்ஹாசன் லாஸ்லியாவின் தந்தையின் அணுகுமுறை குறித்து என்ன சொல்வார் என அவரது ரசிகர்களும் எது நடந்தாலும் விமர்சிக்கலாம் என பலரும் காத்திருந்தனர். ஆனால், அவர் விமர்சகர்களை ஏமாற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இந்த விஷயத்தை மிக லாவகமாகவே கையாண்டார் கமல்ஹாசன்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
முதலில் லாஸ்லியாவிடம் ஒரு தந்தையாக அவரது உணர்வு எப்படியிருக்குமென அவரது இடத்திலிருந்து விளக்கினார் கமல். "ஒரு நடுத்தர குடும்பம் எப்போதுமே பக்கத்து வீடு என்ன நினைக்குமென்ற பதற்றத்தில் இருக்கும், அதுதான் அவர்கள் வாழ்க்கை. அதனால்தான் அவர் உள்ளே வந்ததும் அப்படி நடந்துகொண்டார்" என்று லாஸ்லியாவிடம் கூறினார். பின்னர் சேரனை தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல லாஸ்லியாவின் தந்தை நடத்திய விதத்தையும், கடைசி வரை கவினை ஒரு வார்த்தை கூட அதிகமாகப் பேசவிடாமல் நாகரிகமாக அணுகிய விதத்தையும் பாராட்டினார் கமல். மொத்தத்தில் தான் ஒரு தந்தையாக, இந்த விஷயத்தை எப்படி கையாண்டிருப்பேனோ அதை விட சிறப்பாகவே அவர் கையாண்டார் என்று பாராட்டினார் கமல்.
இதோடு நிற்காமல், லாஸ்லியாவின் லாஸ்லியாவின் தரப்பிலிருந்து சொல்லும் நியாயங்களாக சிலவற்றையும் எடுத்துக்கூறினார். "இந்தத் தலைமுறையின் கல்வி வேறு, அனுபவம் வேறு. அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்ய அனுமதிக்கவேண்டும்" என்று கால் மேல் கால் போட்டு அமர்வதை சொல்வது போல காதல் குறித்தும் சொன்னார் கமல். மேலும் "லாஸ்லியா உங்களை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. அவ்வளவு நன்றாக அவரை தாய் வளர்த்திருக்கிறார். எனவே நீங்க அடிக்கடி சொல்வது போல கெத்தாகவே நீங்கள் இருக்கலாம். பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி கவலைப்படாதீங்க. நல்ல நண்பர்கள் ஆறுதலாகத்தான் இருப்பார்கள், பிரச்னையை பெரிதுபடுத்தமாட்டார்கள்" என்றும் கூறினார். இப்படி வழக்கம் போல இந்த எபிசோடையும் திறமையாகவே கையாண்டு கைதட்டல் வாங்கினார் கமல்ஹாசன்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
Kaappaan Movie காப்பான் சூர்யாவுக்கு ’கேம் சேஞ்சிங்’ படம்!
Kaappaan Movie , Release Live Updates: சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக திரைகளில் அதாவது 600 ஸ்கிரீன்களில் இன்று ‘காப்பான்’ வெளியாகியுள்ளது.
Kaappaan Movie Review Updates: இயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் ’அயன், மாற்றான்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, தற்போது ‘காப்பான்’ படத்தில் நடித்திருக்கிறார். இதில் பொம்மன் இரானி, சாயிஷா, ஆர்யா, மோகன் லால், பூர்ணா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Kaappaan Movie Review: Mohanlal Starrer Kaappaan Movie Release Updates
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பிரதமராக நடிக்கும் மோகன் லால், அவருக்குக் கீழே பணியாற்றும் சிறப்பு அதிகாரி சூர்யா என இந்த அட்டகாச காம்போவை திரையில் காண காத்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். இந்நிலையில் சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக திரைகளில் அதாவது 600 ஸ்கிரீன்களில் இன்று ‘காப்பான்’ வெளியாகியுள்ளது
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் காப்பான் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 2016-ம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை இயக்குனர் கே.வி.ஆனந்திடம் தெரிவித்தாகவும், எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக ஏமாற்றி தற்போது ’காப்பான்’ படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கூறினார்.
இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'காப்பான்' திரைப்படத்தை வெளியிட தடையில்லை என கூறி ஜான் சார்லஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நடிப்பு - சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா
தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கே.வி.ஆனந்த்
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்
வெளியான தேதி - 20 செப்டம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 45 நிமிடம்
ரேட்டிங் - 3/5
ஒரு கமர்ஷியல் படத்துக்குரிய அத்தனை அம்சங்களும் அடங்கிய படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கே.வி. ஆனந்த்.
பிரதமர், அரசியல், நாட்டுப்பற்று, பாதுகாப்பு, காஷ்மீர், பாகிஸ்தான், சதி, சூழ்ச்சி, காதல், பாசம், விவசாயம், போராட்டம், கார்ப்பரேட்... இவ்வளவு விஷயங்களையும் ஒரே படத்துக்குள் எந்த சிக்கலும் இல்லாமல் சரியான விதத்தில் சேர்த்து படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் சுவாரசியமாக பரபரப்பாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
மிலிட்டரி இன்டலிஜன்ஸ் பிரிவிலிருந்து பிரதமர் மோகன்லாலின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் சூர்யா. நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர் மோகன்லால். ஒரு உயிர் போனாலும் 100 உயிர் காப்பாற்றப்ட்டால் தவறில்லை என்று நினைப்பவர். அப்படிப்பட்டவர் தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார். அதன்பின் அவருடைய மகன் ஆர்யா, அரசியல் சூழ்நிலை காரணமாக பதவியேற்கிறார். அவரையும் கொல்லத் துடிக்கிறார்கள். அவரையும் கொல்லத் துடிப்பது யார், மோகன்லாலைக் கொன்றது யார் என ஆர்யாவின் தனிப்பட்ட பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படும் சூர்யா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பத்திலேயே இது வேறு ஒரு மாதிரியான படம் என்பதை இயக்குனர் கே.வி.ஆனந்த் புரிய வைத்து விடுகிறார். விவசாயத்திலிருந்து ஆரம்பமாகி, நாட்டின் பாதுகாப்பு, பிரதமர் என கதை நகர்ந்து, கார்ப்பரேட் முதலாளியின் சூழ்ச்சியால் அரசியல் கொலையாக மாறி, வாரிசு அரசியலுக்கு நகர்ந்து, விவசாயம், காவிரி டெல்டா பிரச்சினையில் வந்து படம் முடிவடைகிறது.
எந்த சந்தர்ப்பங்களில் எந்தக் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டுமோ அதைச் சரியாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். முந்தைய அரசு செய்த தவறுகள் என சிலவற்றை வெளிப்படையாகவே விமர்சிக்கிறார்கள். விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள்.
கடந்த சில படங்களாக கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூடுதலாகவே நடித்த சூர்யா, இந்தப் படத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை மட்டுமே வழங்கியிருக்கிறார். அவரைக் கதிர் கதாபாத்திரத்திற்குள் அடக்கி சரியான நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். பாதுகாப்பு அதிகாரி என்றால் அந்த கம்பீரம், எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய உணர்வு, கழுகுப் பார்வை என சூர்யாவின் நடிப்பில் அத்தனை பொருத்தம். கதிர் என்ற கதாபாத்திரப் பெயரில் கூட விவசாயக் குறியீடு இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். இயற்கை விவசாயியாகவும் விவசாயத்துக்கு ஆதரவாக குரல் உயர்த்துகிறது கதிர் கதாபாத்திரம்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பிரதமராக மோகன்லால். அவர் பேசும் மலையாளம் கலந்த தமிழ் கூட பிரதமர் கதாபாத்திரம் என்பதால் பொருத்தமாக அமைந்துவிடுகிறது. பாகிஸ்தான் தூதரை அழைத்து அவருக்குக் கடுமையான கண்டனம் தெரிவிக்கும் காட்சிகளில் தியேட்டரில் கைத்தட்டலைப் பெறுகிறார். கார்ப்பரேட் முதலாளியிடம் பக்கத்து நாட்டு மக்களுக்காகவும் மனிதாபிமானத்துடன் பேசும் போதும் மனிதனாக உயர்ந்து நிற்கிறார். குறைவான நேரம் வந்தாலும் தன் கதாபாத்திரத்தில் மனதில் பதிய வைத்துவிடுகிறார் மோகன்லால்.
பிரதமர் மோகன்லாலின் மகனாக ஆர்யா. இவரது கதாபாத்திரம் மட்டும் நோட்டா விஜய் தேவரகொண்டாவை ஞாபகப்படுத்துகிறது. இருப்பினும் இடைவேளைக்குப் பின் ஆர்யாவும் படத்தில் ஸ்கோர் செய்கிறார். அதிலும் கார்ப்பரேட் முதலாளியை வரவழைத்து அவருடன் நேருக்கு நேராக சவால் விடும் காட்சியில் அடடே சொல்ல வைக்கிறார் ஆர்யா.
பிரதமரின் செக்ரெட்டரியாக சாயிஷா. சூர்யாவுக்கு படத்தில் ஒரு காதலி வைக்க வேண்டும் என்பதற்காக அவருக்குப் பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தில் சேர்த்திருக்கிறார்கள். கிடைக்கும் நேரத்தில் இருவரும் காதலிக்கிறார்கள். காதலுக்காக டூயட்டையெல்லாம் சேர்க்காமல் கடைசியில் சேர்த்தது சிறப்பு. சூர்யா, சாயிஷா இடையிலான முதல் சந்திப்பில் அந்த ஹோட்டல் ரூம் காட்சி இரட்டை அர்த்த காட்சியாக நகர்கிறது.
அதைத் தொடர்ந்து வரும் காட்சியில் சமுத்திரக்கனியையும் இரட்டை அர்த்த வசனம் ஒன்றைப் பேச வைத்து அதிர்ச்சியளிக்கிறார்கள். பிரதமரின் பாதுகாப்பு குழுவின் தலைமை அதிகாரியாக சமுத்திரக்கனி. அவருக்கும் மனைவி பூர்ணாவுக்கும் இடையில் ஒரு அன்பான காட்சியைக் காட்டும் போதே கிளைமாக்சில் அவருக்கான முடிவு இப்படித்தான் வருமோ என யூகிக்க முடிகிறது.
கார்ப்பரேட் முதலாளியாக பொம்மன் இரானி. அமைதியாகப் பேசி நாடே தன் கையில் உள்ளது என மிரட்டல் விடுக்கிறார். அவருக்கு நிழல்கள் ரவியின் பின்னணிக் குரல் பொருத்தம். இவர் சொல்வதைச் செய்யும் அமைச்சராக நாகிநீடு. பொம்மனின் திட்டங்களுக்காக அசாசின் வேலைகளைச் செய்பவராக சிராக் ஜானி.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அவரது வழக்கமான டியூன்களில் ஏற்கெனவே கேட்ட பாடல்கள் தான். பின்னணி இசையில் ஈடுபாட்டுடன் உழைத்திருக்கிறார். ஒளிப்பதிவு, ஸ்டன்ட் காட்சிகள் படத்திற்கு பக்கபலம். அவர்களுக்கு படத்தில் நிறையவே வேலை. டெக்னிக்கலாக படம் உயர்ந்து நிற்கிறது.
கமர்ஷியல் படம் என முடிவு செய்துவிட்டதால் பல காட்சிகளில் லாஜிக் பார்க்காமல் விட்டிருக்கிறார்கள். பிரதமர் செல்லும் இடங்களில் எல்லாம் அத்தனை பாதுகாப்புகளையும் மீறி பாம் செட் செய்வது, அவர்களுக்கு உதவி செய்வதற்காகவே பிரதமர் அலுவலகத்திலும் ஆட்களை வைத்திருப்பது என வழக்கமான சினிமாத்தனமான காட்சிகள் அடிக்கடி வந்து போகின்றன.
பிரதமர் அலுவலகத்தில் சர்வசாதாரணமாக அனைத்து ஒட்டு கேட்கும் கருவிகளையும் வைப்பதெல்லாம் ரொம்ப டூ மச்.
தமிழ்நாட்டில் தற்போது சூடாக இருக்கும் காவிரி பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை ஆகியவற்றை படத்தில் நுழைத்திருக்கிறார்கள். விவசாயமும், விவசாயிகளும்தான் நாட்டின் முதுகெலும்பு என்ற கருத்தைச் சொன்னதற்காக இந்தக் காப்பானைப் பாராட்டலாம்.
காப்பான் - மண்ணைக் காப்பவன்
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
21-09-2019, 05:37 PM
(This post was last modified: 21-09-2019, 05:38 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
சாத்தான் வேதம் ஓதுதோ
ஆரம்பத்தில் கவின் சேரனிடம் பேசிய போது, சாத்தான் வேதம் ஓதுதோ என்று சேரனை நக்கலடித்தார் சாண்டி. இந்த விஷயத்தை கமல், ஸ்டேஜில் புட்டு வைத்தார்.
[url=https://www.outbrain.com/what-is/default/en][/url]
ரசிகர்கள் வரவேற்பு
தற்போது கவினால் காயப்பட்ட நிலையில் சேரனிடம் தனது மனக்குமுறல்களை கொட்டி ஆறுதல் தேடுகிறார் சாண்டி. இதனை பார்த்த ரசிகர்கள் இப்போதாவது புத்தி வந்ததே என சாண்டியின் நகர்வை வரவேற்றுள்ளனர்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு நடிகை காஜல் அகர்வால் ட்விட்டர் மூலம் பதில் அளித்து வருவதால் ரசிகர்கள் பலர் ட்விட்டரில் குவிய தொடங்கியுள்ளனர்.
தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இதனால் அவருக்கு இந்திய அளவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். அவரது ரசிகர்கள் அவரது ட்விட்டர் மற்றும் இண்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு தொடர்ந்து பதிலளித்து வருகின்றனர்.
இந்நிலையில் காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை பதிவிட்டார். ”ரசிகர்கள் என்னிடம் கேட்க விருப்பப்படும் கேள்விகளை #AskKajal என்ற ஹேஷ்டேகில் ட்விட்டரில் பதியலாம். அந்த கேள்விகளுக்கு இன்று மாலை நான் பதிலளிப்பேன்” என்று கூறியிருந்தார்.
இதனால் உற்சாகமான ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து காஜல் அகர்வால் ஹேஷ்டேகை பிரபலப்படுத்தினார்கள். தற்போது காஜல் அகர்வால் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அதில் “உங்களுக்கு பிடித்தமான உணவு எது? ஹாலிவுட் நடிகர் யார்?” என்பது போன்ற பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் கேட்டுள்ளார்கள். அதில் ஒருவர் “உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா?” என காஜலுக்கு கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த காஜல் “உப்பு மட்டும் இல்லை இன்னும் நிறைய பொருட்களும் இருக்கிறது” என்று கூலாக பதில் சொல்லியுள்ளார்.
Quote:Haha thank you! theres salt and a lot more ingredients. I'm quite big on dental hygiene
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சென்னை ரோகினி தியேட்டருக்கு 100 மடங்கு அபராதம்..! – நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி..!
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில், அரசு நிர்ணயித்த விலையை விட அதிகவிலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், திரையரங்கம் வசூலித்த டிக்கெட் கட்டணத்தைப் போல 100 மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் ரோகிணி திரையரங்கம் உள்ளது. இங்கு குறைந்த பட்சக் கட்டணமாக 40 ரூபாயும் அதிகபட்சக் கட்டணமாக 100 ரூபாயும் மட்டுமே அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், இங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது வழக்கமான ஒன்று.
அதுவும் பண்டிகை நாட்களில் வெளியாகும் ரஜினி, அஜீத், விஜய் படங்கள் என்றால் முதல் மூன்று நாட்கள் டிக்கெட் விலை ஆயிரத்தைத் தாண்டும். அதனையும் சம்பந்தப்பட்ட நடிகரின் ரசிகர்கள் சாதனையாகக் கூறி வாங்கிச்செல்வார்கள்.
இந்த நிலையில் செம்பியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ந்தேதி ஆன்லைனில் கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளார்.
டிக்கெட் கட்டணமாக 150 ரூபாய், முன்பதிவு கட்டணமாக 35 ரூபாய் 40 பைசா என்று மொத்தம் 185 ரூபாய் 40 பைசாவை வசூலித்து உள்ளது ரோகிணி திரையரங்க நிர்வாகம்.
இதையடுத்து நுகர்வோர் நீதிமன்றத்தில் ரோகிணி திரையரங்க கட்டண கொள்ளையால் தனக்கு நேர்ந்த மன உளைச்சல், இழப்பீடு கோரி தேவராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி லட்சுமிகாந்தம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தேவராஜனுக்கு இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாயும், மனஉளைச்சலுக்காக 5 ஆயிரம் ரூபாயும் வழங்க ரோகிணி திரையரங்கத்திற்கு, நீதிபதி உத்தரவிட்டார்.
15 ஆயிரம் ரூபாய் என்பது ரோகினி திரையரங்க நிர்வாகம் கூடுதலாக வசூலித்த டிக்கெட் தொகையான 150 ரூபாயில் 100 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மால்களில் இடம்பெற்றுள்ள திரையரங்குகளில் மல்டி பிளக்ஸ் ஏசி திரையரங்குகளுக்கு அதிக பட்சமாக 150 ரூபாயும், குறைந்த பட்சமாக 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி, பேரூராட்சி, திரையரங்குகளுக்கு காம்பள்க்ஸ் ஏசி திரையரங்குகளுக்கு 100 ரூபாயும் குறைந்த பட்ச கட்டணமாக 40 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதி இல்லாத திரையரங்குகளுக்கு 80 ரூபாயும், குறைந்தபட்சக் கட்டணமாக 30 ரூபாயும் மட்டுமே வசூலிக்க வேண்டும், ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் ஏசி திரையரங்கம் என்றால் 75 ரூபாயும், குறைந்தபட்ச கட்டணமாக 25 ரூபாயும் மட்டுமே வசூலிக்க வேண்டும்.
குளிர்சாதன வசதி இல்லாத திரையரங்குகளில் அதிகபட்சமாக 50 குறைந்தபட்சமாக 20 ரூபாயும் வசூலிக்க வேண்டும். ஆனால் மால்களில் உள்ள திரையரங்குகள் முன்பதிவு என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றன.
பெரும்பாலான திரையரங்குகளில் ஒருபோதும் அரசு நிர்ணயித்த விலைக்கு டிக்கெட் விற்பது இல்லை என்கின்றனர் ரசிகர்கள்.
எந்த ஒரு திரையரங்கிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது வழக்கு தொடர விரும்புவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட டிக்கெட் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்றும், அங்கு சுயமாக வாதாடி பொறுமையாக வழக்கை ஆதாரத்துடன் எதிர் கொண்டால் இழப்பீடு பெறலாம் என்கிறார் தேவராஜன்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பிக்பாஸில் இருந்து வெளியேறிய சேரன்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இயக்குநர் சேரன் வெளியேறினார்.
பிக்பாஸ் சீசன் இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைய இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலேவுக்காக கடுமையான டாஸ்க்குகள் தரப்பட்டன. போட்டியாளர்களும் தங்களது முழு பலத்தையும் கொடுத்து இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில், அதிக மதிப்பெண்கள் பெற்றதால் முகென் வெற்றி பெற்றார். கமல் அவருக்கு டிக்கெட் டு பினாலேவை நேரில் அழைத்துக் கொடுத்தார். இதனால் பைனலுக்குச் செல்லும் முதல் போட்டியாளர் என்ற பெருமை முகெனுக்கு கிடைத்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, இந்த வாரம் நாமினேசனில் சேரன், கவின், லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் இருந்தனர். இவர்கள் நான்கு பேருமே முக்கிய போட்டியாளர்கள் என்பதால், இவர்களில் யார் வெளியேறப் போவது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் ஷெரின், கவின் காப்பாற்றப்பட்டனர். சேரன், லாஸ்லியா தனியாக அழைத்து ஒரு அறையில் அமர வைக்கப்பட்டனர். முன்னதாக லாஸ்லியா, தான் வெளியேற விரும்புவதாக பிக்பாஸிடம் தெரிவித்தார். இதன் காரணமாக அவரும் சேரன் உடன் இணைந்து வெளியேறுவதாக கூறப்பட்டது. அதைப்போல் இருவரும் வெளியேறுவது போன்ற நிகழ்வுகளும் நடந்தன. பின்னர் இறுதியாக சேரன் வெளியேற்றப்பட்டு, லாஸ்லியா மீண்டும் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அவருக்குத் தான் நாமினேசனில் மிகக் குறைவான வாக்குகள் கிடைத்தது. அப்போது அவர் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து போட்டியாளராக விளையாடி வந்தார். கடந்த வாரம் தரப்பட்ட டாஸ்க்குகளை செய்ய முடியாமல், அவர் உடல்நிலை மிகவும் பாதித்தது. முதுகுவலி உள்ளிட்ட பிரச்சினைகளால் அவர் பெரும் அவதிப்பட்டார். மேலும் அவருக்கு குறைவான ஓட்டுகள் கிடைத்ததாலும் பிக்பாஸில் இருந்து வெளியேறினார்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சிரஞ்சீவி காலில் விழுந்த விஜய் சேதுபதி
சிரஞ்சீவி நடித்துள்ள ‛சைரா நரசிம்ம ரெட்டி' படம் அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வருகிறது. அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா என பலர் நடித்துள்ள இப்படத்தின் புரொமோஷன் நிகழ்வு, சில தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடந்தது. இதில் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய சிரஞ்சீவி, பல படங்களில் பிசியாக நடித்து வந்த போதிலும் இந்த படத்திற்காக கேட்ட தேதியில் கால்சீட் கொடுத்து நடித்தார் விஜய் சேதுபதி. கடினமான அவரது உழைப்பு அற்புதமானது. எப்போதுமே என்னை அண்ணா அண்ணா என்று தான் விஜய் சேதுபதி அன்போடு அழைப்பார். இந்த தருணத்தில் அவருக்கு நன்றி என்றார். இதையடுத்து அருகில் இருந்த விஜய் சேதுபதி, சிரஞ்சீவியின் காலில் விழுந்தார். அப்போது சிரஞ்சீவி தடுத்தார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மாறாத லாஸ்லியா.. அப்பா அனுப்பி வைத்த கிப்ட் என்ன தெரியுமா? – வீடியோ இதோ
லாஸ்லியாவிற்கு அவரது அப்பா அனுப்பி வைத்த கிப்ட்டின் வீடியோவை சமூக வளையதளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
Bigg Boss Losliya Father Gift : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்னும் இரண்டு வாரங்களில் முடிய உள்ளது.
இந்நிலையில் நேற்று மஹத் மற்றும் யாஷிகா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருந்தனர். அப்போது பிக் பாஸ் கொடுத்து அனுப்பியதாக அனைவர்க்கும் கிப்ட் கொடுத்தனர்.
லாஸ்லியாவிற்கு மட்டும் அவரது அப்பா கொடுத்ததாக ஒரு போட்டோவை கொடுத்தனர். இதனை வீடியோ வெளியிட்டு இது பிக் பாஸ் ஏதோ பிளான் பண்ற மாதிரி இருக்கே என கூறி வருகின்றனர்.
Quote:
[/url]ɪᴛs_ᴍᴇ_ᴘʀɪʏᴀ [img=20.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/270c.png[/img]@Bigg_bossTS
#BiggBoss Sent Gifts To All The Contestants But For #Losliya Its From Her Dad [img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f914.png[/img][img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f914.png[/img] Idhu Nambura Madhiri Illaye[img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f62c.png[/img][img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f62c.png[/img] Indha Ponna Evalo Adichalum Strong -ga Irukka.. So Indha Technique Use Panni Papomnu Pandrangala[img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f914.png[/img][img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f914.png[/img] What Ever #BiasedBiggBossTamil3 #BiggBossTamil3 #VoteForLosliya
[url=https://twitter.com/intent/like?tweet_id=1176565439029071872]57
12:03 A
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அட்லி படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.
தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நடிகர் விஜய் உடன் மூன்று படங்களில் பணியாற்றியுள்ளார் இயக்குநர் அட்லீ. இவர் அடுத்து ஷாருக்கான் உடன் இணைகிறார் என, சில மாதங்களுக்கு முன்பு செய்தி வந்தது. ஆனால், அது பற்றி, தற்போது வரை அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.
இந்நிலையில், தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. டாப் ஹீரோவான ஜூனியர் என்.டி.ஆர்., அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். தற்போது, அவர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் முடிந்த பின், இயக்குநர் அட்லீயுடன் படம் துவங்கும் என கூறப்படுகிறது
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்
பார்வையற்ற இளைஞர் ஒருவர் விஸ்வாசம் திரைப்பட பாடலை பாடிய காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி என்ற இளைஞர் தனது இனிமையான குரலால் கண்ணானே கண்னே பாடலை பாடினார். இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட்டனர்.
அதை கண்ட இசை அமைப்பாளர் டி. இமான் திருமூர்த்தி என்ற அந்த இளைஞரை தமது அடுத்த படத்தில் பாட வைக்கப்போவதாக கூறியுள்ளார். திருமூர்த்தியின் தொலைபேசி எண் கிடைக்க காரணமான அனைத்து நெட்டிசன்களுக்கும் டி.இமான் நன்றி தெரிவித்து கொண்டார்.
first 5 lakhs viewed thread tamil
•
|