Posts: 39
Threads: 1
Likes Received: 0 in 0 posts
Likes Given: 2
Joined: Mar 2019
Reputation:
3
12-09-2019, 07:57 AM
(This post was last modified: 12-09-2019, 03:31 PM by Seaeagle28. Edited 1 time in total. Edited 1 time in total.)
01
குமாரமங்கலம், பார்க்கும் திசையெங்கும் பச்சை பசலேன பசுமையாக கண்ணை கவர்ந்தது! மலைத் தொடரின் அருகில் அமைந்திருந்த அந்த அழகான ஊரில், கம்பீரமாக நின்றிருந்த வீட்டின் முன் வேகமாக வந்து நின்றது அந்த பென்ஸ் கார். அதற்காகவே காத்திருந்தது போல் ராஜேஸ்வரி அவசரமாக வெளியே வந்தாள். காதோரம் மின்னிய வெள்ளி மின்னல்கள் அவளின் வயதை பறைசாற்றின. வாசலில் நின்ற கார் அவள் எதிர்பார்த்தவர்கள் வந்துவிட்டதை கூற அவளின் முகத்தில் மலர்ச்சி தோன்றியது.
“செல்லம்மா, கனகம், மகேஷும், ப்ரியாவும் வந்தாச்சு... சீக்கிரம் ஆரத்தி தட்டை எடுத்துட்டு வாங்க...”
ராஜேஸ்வரியின் குரலுக்காகவே காத்திருந்தது போல் அடுத்த வினாடியே செல்லம்மாவும், கனகமும், ஆரத்தி தட்டுடன் அவசரமாக வந்தார்கள்.
வீட்டினுள் இருந்து வெளியில் வந்த மூவரையும் பார்த்து புன்னகைத்த படியே மகேஷும், ப்ரியாவும் காரில் இருந்து இறங்கினார்கள். ராஜேஸ்வரியை பார்த்து சந்தோஷமாக கை அசைத்த ப்ரியாவின் முகத்தில் மின்னிய வெட்கம் கலந்த புன்னகையும், அவளின் கழுத்தில் பளிச்சென்று மின்னிய தாலியும் அவள் புது மணப்பெண் என்பதை தண்டோரா போட்டு அறிவித்தன. பிரம்மனின் படைப்பில் மாஸ்டர்பீஸ் என்று நினைக்க வைக்கும் அழகு தேவதையாக மின்னினாள் அவள்.
அவளின் அருகில் நின்றிருந்த மகேஷும் ஆணழகனாகவே தோன்றினான். இயல்பாகவே அவன் முகத்தில் இருந்த கம்பீரத்துடன் கூடவே அந்த அழகு தேவதையை மனைவியாக அடைந்து விட்டு பெருமையும் இருந்தது.
செல்லம்மாவும், கனகாவும் ஆரத்தி எடுத்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த ப்ரியா, அவர்கள் ஆரத்தி தட்டுடன் நகரவும், அருகில் நின்றிருந்த ராஜேஸ்வரியின் காலில் விழுந்து வணங்கினாள்.
“என்னம்மா ப்ரியா இது? எதுக்கு இதெல்லாம்? நல்லா இரும்மா, எழுந்திரு...”
“வந்த உடனேயே உங்க கிட்ட தான் ஆசிர்வாதம் வாங்கனும்னு நினைச்சேன் அத்தை, நீங்க சொன்னதற்காக தான் ஆரத்தி எடுத்து முடிக்கும் வரை காத்திருந்தேன்...” என்றாள் பிரியா வெகு அடக்கமாக.
•
Posts: 39
Threads: 1
Likes Received: 0 in 0 posts
Likes Given: 2
Joined: Mar 2019
Reputation:
3
ராஜிராம் எக்ஸ்போர்ட்ஸ் என்ற அவர்களின் நிறுவனத்தை அண்ணன் சுபாஷுடன் சேர்ந்து நிர்வகித்து வந்தான் மகேஷ். ஏலக்காய், கிராம்பு போன்ற பொருட்களை அவர்களின் நிறுவனம் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. சுபாஷ் அவர்கள் எஸ்டேட் இருந்த மலையிலேயே தங்கி இருந்து பொருட்களின் தரம் தொடங்கி அதை பேக் (pack) செய்வது வரை கவனித்துக் கொள்ள, மகேஷ் விற்பனை மற்றும் விநியோக வேலைகளை கவனித்துக் கொண்டான்.
ப்ரியாவின் தந்தை சுப்பிரமணியம், மகேஷின் தந்தையின் இளவயது தோழர். பெங்களூருவில் அவர்கள் கம்பெனியின் முக்கிய டீலர்களில் ஒருவராகவும் இருப்பவர். அலுவலக ரீதியாக பலமுறை சந்திக்க நேர்ந்த மகேஷும், ப்ரியாவும் ஒருவரை ஒருவர் நேசித்தனர். அதை இரு குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்ளவே, எந்த பிரச்சனையுமின்றி ஒரு மாதம் முன்பு அவர்களின் திருமணம் நடந்து முடிந்திருந்தது. தாயில்லாமல் வளர்ந்திருந்த ப்ரியாவிற்கு ராஜேஸ்வரியின் மீது தனி பாசம் ஏற்பட்டிருந்தது...
பேசிய படி வீட்டின் உள்ளே வந்து ஹாலில் இருந்த அந்த பெரிய சோபாவில் அமர்ந்தார்கள் மூவரும்.
“டூரெல்லாம் எப்படி இருந்தது? எல்லாம் பிளான் செய்த படியே இருந்ததா?”
“இது என்னம்மா கேள்வி நான் பிளான் செய்து ஏதாவது தப்பா போனதா சரித்திரம் இருக்கா என்ன?”
“நல்ல கேள்வி கேட்டீங்க அத்தை! ஏதாவது செய்தால் தானே தப்பா போக... ஏதோ நான் கொஞ்சம் புத்திசாலியாக இருக்கவே பிரச்சனை இல்லாமல் போச்சு...”
“அதுவும் உண்மை தான்... நீ கொஞ்சொண்டு புத்திசாலி...”
“பாருங்க அத்தை இவரை...”
சிறியவர்கள் இருவரின் சீண்டலை அதுவரை புன்னகையோடு ரசித்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரி,
“நீ சும்மா இரு மகி, அவள் சின்ன பொண்ணு தானே?” என மருமகளுக்கு 'சப்போர்ட்' செய்தாள்.
“யார் இவளா சின்ன பொண்ணு?” என்று அம்மாவிற்கு பதில் சொல்வது போல் அவளை நோக்கி ஒரு மந்தகாச புன்னகையோடு, கேலியாக ஒரு பார்வை பார்த்தான் மகேஷ்.
அவனின் பார்வையிலும், அதன் பொருளிலும் முகம் சிவந்த போதும், அவசரமாக ராஜேஸ்வரி பக்கம் திரும்பி,
“இந்த கதை எல்லாம் பொறுமையா பேசலாம் அத்தை... ரொம்ப பசிக்குது, என்ன டிபன் இன்னைக்கு?” எனக் கேட்டாள் ப்ரியா.
“அடடா பசியோடு இருப்பது கூட தெரியாமல் பேசிட்டே இருக்கேன் பார்... செல்லம்மா டிபன் எடுத்து வை...”
உள்ளே சமையலறை பக்கம் பார்த்து குரல் கொடுத்த ராஜேஸ்வரி, மகன் பக்கம் பார்த்து,
“ஏன் மகி, இப்படியா அவளை பசியோட அழைச்சிட்டு வரது? வரும் போது வழியிலேயே ஏதாவது வாங்கி கொடுக்க வேண்டியது தானே?” என்றாள்.
மகேஷ் பதில் சொல்லும் முன்,
“அவர் வாங்கி தரேன்னு தான் அத்தை சொன்னார்... எனக்கு தான் பிடிக்கலை... உங்களோடு சேர்ந்து சாப்பிடலாம்னு பசியை பொறுத்துக் கிட்டு வந்தேன்...” என்றாள் ப்ரியா.
அவள் முகம் மலர சொன்ன விதத்தில் உள்ளம் குளிர்ந்தவளாக,
“நீ மருமகளா வர நான் கொடுத்து வைத்திருக்கனும் ப்ரியா...” என்றாள் ராஜேஸ்வரி.
“முடியலைடா சாமி! போதும் இந்த செல்லம் கொஞ்சல்ஸ் எல்லாம். நான் ஆபிஸ் கிளம்பி போன பின்பு கன்டினியூ செய்யுங்க... இப்போ சாப்பிடலாம் எனக்கும் பயங்கர பசி அம்மா...”
•
Posts: 39
Threads: 1
Likes Received: 0 in 0 posts
Likes Given: 2
Joined: Mar 2019
Reputation:
3
செல்லமாவும், கனகமும் காலை உணவை பரிமாற, பசி அடங்கும் வரை அமைதியாக பூரியை ஒரு வெட்டு வெட்டிய இருவரும், பின் அடுத்த பூரி அட்டாக்கை தொடங்கியப் படியே தங்களின் தேனிலவு வெளிநாட்டு பயணத்தின் போது நடந்த சுவாரசியமான விஷயங்களை ராஜேஸ்வரியுடன் பகிர்ந்துக் கொண்டனர்.
மிகவும் சுவாரசியமாக கேட்க தொடங்கிய ராஜேஸ்வரியின் முகம் இடையிடையே சிந்தனையையும் காட்டியது.
“என்ன விஷயம் அத்தை? இரண்டு பேரும் ரொம்ப ப்ளேட் போடுறோமோ? அப்பப்போ வேற உலகத்துக்கு போயிட்டு வரீங்க?”
“அதெல்லாம் இல்லை ப்ரியா, சுபாஷ் பத்தி யோசிச்சா கவலையா இருக்கு...”
என்ன சொல்வது என்று புரியாது கணவனை பார்த்தாள் ப்ரியா.
“அண்ணன் எப்போ வரேன்னு சொன்னான் அம்மா?”
“அவன் நேத்து நைட்டே வந்துட்டான் மகி... நீங்க இரண்டு பேரும் வீட்டுக்கு வரும் போது அவன் இங்கே இருந்தால் நல்லா இருக்கும்னு நான் தான் போன் செய்து கூப்பிட்டேன்... பாவம், நைட் தனியா ஜீப்பை அவனே ஓட்டிட்டு வந்தான்... வந்து சேர்ந்த போது கிட்டத்தட்ட இரண்டு மணி...”
“அவ்வளவு நேரம் நீங்க முழிச்சிட்டா இருந்தீங்க அத்தை?”
“பின்னே என்னம்மா செய்றது? அவன் மலையில் இருந்து வரேன்னு சொன்னான்... எப்போதும் இப்படி அவனே தான் ஜீப்பில் வருவான்... வந்து சேரும் வரை எனக்கு தான் பயமா இருக்கும்... தூங்க நினைச்சாலும் தூக்கம் வராது... இப்படி அடம் பிடிக்காது அவனும் ஒரு கல்யாணம் செய்துக் கொண்டால் நல்லா இருக்கும்...”
ராஜேஸ்வரி வருந்துவதை பார்க்க பிடிக்காது,
“நீங்க கவலை படாதீங்க அத்தை, அவர் கையை காலை கட்டியாவது, எப்படியாவது அவர் கல்யாணத்தை நடத்தி வச்சிடுவோம்...” என்றாள் ப்ரியா.
“கையை கட்டி வச்சா நான் எப்படி தாலி கட்டுறது?” என்ற குரலில் மூவரும் குரல் வந்த பக்கம் திரும்பி பார்த்தனர்.
•
Posts: 990
Threads: 0
Likes Received: 354 in 311 posts
Likes Given: 472
Joined: Jul 2019
Reputation:
3
Great start. Please continue
•
Posts: 111
Threads: 0
Likes Received: 46 in 37 posts
Likes Given: 42
Joined: Sep 2019
Reputation:
1
I just love these type of romance stories. neatly written.
please give regular updates and complete the story.
•
Posts: 5
Threads: 0
Likes Received: 0 in 0 posts
Likes Given: 0
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 3,159
Threads: 0
Likes Received: 346 in 315 posts
Likes Given: 1,312
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 1,321
Threads: 0
Likes Received: 197 in 179 posts
Likes Given: 1,348
Joined: Apr 2019
Reputation:
0
•
Posts: 748
Threads: 2
Likes Received: 135 in 130 posts
Likes Given: 14
Joined: Mar 2019
Reputation:
0
•
Posts: 198
Threads: 0
Likes Received: 94 in 78 posts
Likes Given: 121
Joined: Aug 2019
Reputation:
0
•
Posts: 111
Threads: 0
Likes Received: 46 in 37 posts
Likes Given: 42
Joined: Sep 2019
Reputation:
1
•
Posts: 39
Threads: 1
Likes Received: 0 in 0 posts
Likes Given: 2
Joined: Mar 2019
Reputation:
3
13-09-2019, 02:46 PM
(This post was last modified: 13-09-2019, 03:08 PM by Seaeagle28. Edited 1 time in total. Edited 1 time in total.)
02
கேலி புன்னகையோடு உணவறையின் வாயிலில் நின்றிருந்த சுபாஷ் நடிகர் சூர்யாவை நினைவூட்டினான். பார்க்க மிடுக்குடன், பளிச்சென்று இருந்தான்.
சுபாஷின் கேள்விக்கு பதில் சொல்லாது ப்ரியா அமைதியாக இருக்க,
“வாப்பா நீயும் வந்து சாப்பிடு...” என்று அழைத்தாள் ராஜேஸ்வரி.
ராஜேஸ்வரியின் அருகில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்த சுபாஷிற்கும், கனகம் பரிமாற தொடங்கவும்,
“என்ன ப்ரியா பதிலே காணும்?” என்றான்.
“பதில் சொல்வதற்கு முன் ஒரு சந்தேகம், உங்களை எப்போதும் போல் பெயர் சொல்லி கூப்பிடுவதா, வேண்டாமா? அத்தை நீங்க சொல்லுங்க...”
“இதெல்லாம் அம்மாவிற்கான பில்ட்-அப்பா? இதில் அம்மா சொல்ல என்ன இருக்கு ப்ரியா? நீ எப்போதும் போல் என்னை பெயர் சொல்லியே கூப்பிடலாம், அதை எல்லாம் அம்மா தப்பா நினைக்க மாட்டாங்க...” என்று அவளுக்கு பதில் சொன்னான் சுபாஷ்.
அப்போதும் அவள் கேள்வியோடு ராஜேஸ்வரியை பார்க்க,
“இதில் என்னம்மா இருக்கு? நீ உனக்கு பழக்கமான மாதிரியே கூப்பிடு, ஒரு பிரச்சனையுமில்லை...” என்று மருமகளுக்கு பரிவுடன் பதிலளித்தாள் ராஜேஸ்வரி.
“அப்போ சரி... இதோ பாருங்க சுபாஷ், இவ்வளவு நாள் நீங்க அத்தையையும் இவரையும் சமாளிச்சிருக்கலாம், ஆனால் இந்த சகலகலாவல்லி ப்ரியாவை அப்படி எல்லாம் ஏமாற்ற முடியாது... இன்னும் ஒரு வருஷதிற்குள்ளே எனக்கு அக்கா ஒருத்தங்க இந்த வீட்டுக்கு வர தான் போறாங்க...”
அவள் சீரியசாக சொல்வதை புன்னகையோடு பார்த்தவன்,
“அடடா, சுப்பு அங்கிளுக்கு வேற ஒரு வைப் வேற இருக்காங்களா? உங்க அம்மாவுக்கு தெரியுமா?” என்றான்.
புரியாமல் அவள் விழிக்கவும்,
“ப்ரி, நீ அக்கா வர போறாங்கன்னு சொன்னீயே அதை தான் அண்ணன் கலாய்க்கிறான்...”
கணவன் ‘மொழி பெயர்த்து’ சொன்னதை கேட்டு சுபாஷ் பக்கம் திரும்பி முறைத்தவள்,
“இருங்க இருங்க உங்களுக்கு தெரிய தானே போகுது...” என்றாள் மிரட்டலாக.
புன்னகையை பதிலாக தந்த சுபாஷ், பேச்சை மாற்ற விரும்பியவனாய்,
“நீ இப்போதைக்கு கம்பெனி பக்கம் வர போவதில்லைன்னு மகேஷ் சொன்னான்... இது வரைக்கும் பிசியா இருந்தே பழகிய உனக்கு போர் அடிக்காதா?” எனக் கேட்டான்.
“ஹுஹும்ம்... எனக்கு தான் துணைக்கு இப்படி என்னை பார்த்து பார்த்து கவனிக்குற அத்தை இருக்காங்களே. என்னுடைய அறுவை தாங்க முடியாமல் அவங்க ஏதாவது வேலைக்கு போனால் தான் எனக்கு போர் அடிக்கும்...“
“அப்போ கூட பிரச்சனை இல்லை ப்ரி, அடுத்ததா நம்ம கனகம், செல்லம்மா கூட கடலை போடு... அவங்களும் ஓடி போயிடுவாங்க, நாம ப்ரெஷ்ஷா புது குக் கொண்டு வருவோம்...” என்று மகேஷும் தன் பங்குக்கு அவளை கேலி செய்தான்.
“ம்ம்ம்...”
மருமகள் இளைய மகன் பக்கம் சூடான பார்வை வீசுவதை கவனித்த ராஜேஸ்வரி,
“ஏன்ப்பா இப்படி அவளை வம்புக்கு இழுக்குறீங்க? பாவம்...”
“பாருங்க அத்தை...” என்று ப்ரியாவும்.
“ரொம்ப பாவம் தான் அம்மா...” என்று மகேஷும் சொல்ல, சுபாஷ் அவளுக்கு உதவிக்கு வந்தான்.
“சரி ப்ரியா நான் ஒரு ஐடியா தரேன் பிடிச்சிருந்தா ட்ரை செய்து பார்... இங்கே ஊரில் இருக்கும் ஸ்கூல் மேனேஜ்மென்ட் செய்ய பிடிக்கும்னா அதை எடுத்து செய்... இப்போ அம்மா தான் ஹெட்... நீங்க இரண்டு பேர் தான் ஒரே டீம்ல இருக்கீங்களே, சேர்ந்தே செய்யலாம்...”
“சூப்பர் ஐடியா சுபாஷ்... நான் செய்றேனே, அதுவும் அத்தையோட சேர்ந்து செய்யனும்னா கேள்வியே இல்லை... எனக்கு ரொம்ப பிடிக்கும்... தேங்க்ஸ்...” என்றாள் ப்ரியா மகிழ்ச்சியுடன்.
•
Posts: 748
Threads: 2
Likes Received: 135 in 130 posts
Likes Given: 14
Joined: Mar 2019
Reputation:
0
•
Posts: 39
Threads: 1
Likes Received: 0 in 0 posts
Likes Given: 2
Joined: Mar 2019
Reputation:
3
மகேஷும், சுபாஷும் அலுவலகத்திற்கு கிளம்பி செல்ல, ப்ரியா கருமமே கண்ணாக சுபாஷை பற்றி ராஜேஸ்வரியிடம் விசாரிக்க தொடங்கினாள்.
“எப்போதிருந்து சுபாஷ் இப்படி மலை மேல தவம் இருக்க ஆரம்பித்தார் அத்தை?”
மூத்த மகனின் இந்த தனிமை வாழ்க்கையை பற்றிய கவலையில் இருந்த ராஜேஸ்வரி, மறைக்காது தனக்கு தெரிந்த விஷயங்களை மருமகளிடம் கூறினாள்.
“காலேஜ் படித்த போது அவன் இப்படி இல்லை ப்ரியா... ரொம்பவே ஜாலியா இருப்பான்... நல்லா படிப்பான் அதே போல் ஊர் சுற்றுவதிலும் அவனுக்கு நிகர் அவன் தான்...”
“அப்படியா?”
“ம்ம்ம்... படிச்சு முடிச்சிட்டு அங்கே போக போறேன், இங்கே போக போறேன்னு சொல்லிட்டு இருந்தான்... அடுத்ததா எம்.பி.ஏ வேற படிக்க போறேன்னு சொல்லிட்டு இருந்தான்... ஆனால் என்ஜினீயரிங் கடைசி வருஷ எக்ஸாம் முடிச்ச கையோடு இங்கே வந்தது... அப்புறம் அவன் எங்கேயும் போகலை... என்ன விஷயம் ஏதுன்னு எப்படி எல்லாமோ கேட்டு பார்த்தாச்சு... ஹுஹும்ம் ஒரு பதிலும் இல்லை...”
“கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க அத்தை, சுபாஷ் படிக்கும் போது யாரையாவது காதலிச்சாரா?”
“அப்படி ஏதாவது இருந்தால் தான் நான் சந்தோஷமா சம்மதம் கொடுத்திருப்பேனே... அவன் படித்து முடித்து வந்த ஒரு வருஷத்திலேயே அவங்க அப்பா காலமாகிட்டார்... அப்புறம் சுபாஷ் தான் கம்பெனியை எடுத்து நடத்தினது... தமிழ் நாட்டுக்குள்ளே மட்டும் இருந்த வியாபாரத்தை முதலில் இந்தியா முழுக்க பரப்பி அப்புறம் இந்த எக்ஸ்போர்ட் ஆரம்பித்தது எல்லாம் அவன் தான்... அதற்குள் மகேஷ் படித்து முடித்து வரவே, அவன் வெளியூர் வேலை எல்லாம் கவனிக்க ஆரம்பிச்சான்...”
“ஓஹோ!”
“முதல் அஞ்சு வருஷம் நான் இதை எல்லாம் ரொம்ப கவனிக்கலை ப்ரியா... அவர் என்னை விட்டு போன பின்பு ஒன்றிரண்டு வருடங்கள் நானும் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தேன்... சுபாஷுக்கு இருபத்தி ஆறு வயசு ஆரம்பித்த போது அவனுக்கு கல்யாணத்திற்கு பொண்ணு பார்க்கலாம்னு நினைச்சேன்... அதை பற்றி அவனிடம் பேசினால், அவன் கல்யாணமே செய்ய போவதில்லைன்னு சொன்ன போது தான் அவனின் நடவடிக்கைகளில் இருந்த மாற்றங்கள் கண்ணில் பட தொடங்கியதே... அப்புறம் இந்த கடைசி நாலு வருஷமா எந்த மாற்றமும் இல்லை...”
“அம்மா...”
செல்லம்மாவின் குரலில் பேச்சை நிறுத்தினாள் ராஜேஸ்வரி.
“என்ன செல்லம்மா?”
“பால்ராஜ் சார் வந்திருக்கார்... ஹாலில் உட்கார சொல்லி இருக்கேன்ம்மா...”
“சரி செல்லம்மா, அவருக்கு காபி எடுத்துட்டு வா...” என்று அவளை அனுப்பி வைத்தவள், ப்ரியாவிடம்,
“ஸ்கூல் ஹெச்.எம் வந்திருக்கார் ப்ரியா, வா உன்னை அவருக்கு அறிமுக படுத்தி வைக்கிறேன்...” என்று மருமகளையும் உடன் அழைத்து சென்றாள்.
•
Posts: 87
Threads: 0
Likes Received: 37 in 32 posts
Likes Given: 29
Joined: Aug 2019
Reputation:
0
•
Posts: 181
Threads: 0
Likes Received: 48 in 43 posts
Likes Given: 1,647
Joined: Dec 2018
Reputation:
2
•
Posts: 39
Threads: 1
Likes Received: 0 in 0 posts
Likes Given: 2
Joined: Mar 2019
Reputation:
3
03
பால்ராஜ் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து விருப்ப ஒய்வு பெற்றவர். மனைவியின் உடல் நலத்திற்காக என குமாரமங்கலம் வந்தவர், ராஜேஸ்வரியின் வேண்டுகோளுக்கு இணங்கி இங்கே இருந்த ராமநாதன் நினைவு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிய தொடங்கினார்.
“வாங்க ஹெச்.எம் சார் எப்படி இருக்கீங்க?”
“நான் நல்லா இருக்கேன் மேடம், நீங்க எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேங்க... “
“பால்ராஜ் சார் இது ப்ரியா... என்னோட சின்ன மருமகள்...”
“தெரியுமே மேடம், நான் கல்யாணத்தில் பார்த்தேன்...”
“இனி அவள் தான் இந்த ஸ்கூல் வேலைகளை கவனிச்சுக்க போறா...”
“இல்லை சார், அத்தைக்கு ஸ்கூல் வேலையில் நான் ஹெல்ப் செய்ய போறேன்...”
“ரொம்ப சந்தோஷம்மா... நேரம் கிடைக்கும் போது ஸ்கூலுக்கு வாங்க...”
“நீங்க இருக்கும் போது எங்களுக்கு பெரிய கவலை எல்லாம் இல்லை சார்... ஆமாம் மேத்ஸ் டீச்சருக்கு விளம்பரம் கொடுத்திருந்தீங்களே என்ன ஆச்சு? இன்டர்வியூ எல்லாம் முடிஞ்சதா?”
“எல்லாம் நல்ல விதமா முடிந்தது மேடம்... அதை பற்றி பேச தான் வந்தேன்...”
“சொல்லுங்க சார்...”
“இன்டர்வியூவில் லாவண்யான்னு ஒருத்தங்க நல்லா செஞ்சு இருக்காங்க... நல்ல தகுதியும் அவங்களிடம் இருக்கு... அப்ளை செய்த முக்கால் வாசி பேர் பி.எஸ்ஸி பி.எட் தான்... இவங்க எம்.எஸ்ஸி எம்.எட்... நாலு வருஷ எக்ஸ்பீரியன்சும் இருக்கு...”
“பரவாயில்லையே... அப்போ அவங்களையே செலெக்ட் செய்திடுங்க... இது போல் கிராமத்தில் அவங்களை போல ஒரு நல்ல டீச்சர் கிடைப்பது கஷ்டமாச்சே...”
“அதில் தான் ஒரு சின்ன சிக்கல் மேடம்...”
“என்ன சிக்கல்? சம்பளம் அதிகமா கேட்குறாங்களா? அது எல்லாம் பிரச்சனை இல்லை...”
“இல்லை மேடம்... என்னோட பிரென்ட் தான் லாவண்யாவின் பயோ-டேட்டாவை எனக்கு அனுப்பியது... அவங்களுக்கு சம்பளம் குறைவா இருந்தாலும் பரவாயில்லையாம், ஆனால் தங்குவதற்கு மட்டும் நல்ல பாதுகாப்பான இடம் வேணும்னு சொல்றாங்க...”
“ஓ!”
“எஸ் மேடம்... அவங்க தனியா தங்க வேண்டி இருப்பதால் இதை கேட்குறாங்க... என் நண்பனுடைய தூரத்து சொந்தமாம்... உங்களிடம் கேட்காமல் முடிவு சொல்ல மனம் வரலை...”
“ம்ம்ம்... யோசிக்க வேண்டிய விஷயம் தான்... நீ என்ன நினைக்குற ப்ரியா?”
“கொஞ்சம் ரிஸ்க்கான கமிட்மென்ட் போல இருக்கே அத்தை... அவங்களுக்கு நாம இருபத்தி நாலு மணி நேர பாதுகாப்பு எல்லாம் கொடுக்க முடியுமா என்ன?”
“இல்லை மேடம், அப்படி எதுவும் அவங்க கேட்கலை... ஸ்கூலே கொஞ்சம் நல்ல பாதுகாப்பான இடம் அரேன்ஜ் செய்து கொடுத்தால் நல்லா இருக்கும்னு பீல் செய்றாங்க... அவங்க அம்மா ரிசென்ட்டா இறந்துட்டாங்களாம்... வீட்டில் பிரச்சனை இருப்பதால் வெளியே வந்து வேலை செய்வதுன்னு முடிவு செய்து இருக்காங்க...”
“இன்னும் கல்யாணம் ஆகலையா?”
“இல்லை மேடம்... உங்களுக்கு ஓகே என்றால், நான் என் வீடு பக்கத்திலேயே ஏதாவது ஒரு வீடு பார்த்து தருவேன்... ஆனால் நீங்கள் முடிவு சொன்ன பின்பு தான் எதையும் செய்ய முடியும்...”
ராஜேஸ்வரி ப்ரியாவை கேள்வியாக பார்த்தாள். ஒரு சில வினாடிகள் யோசித்த ப்ரியா,
“அவங்க ப்ரோபைலையும், இந்த இன்டர்வியூவில் கலந்துக் கொண்ட மற்றவர்கள் ப்ரோபைலையும் என்னிடம் கொடுங்க சார்... நான் ஒரு தடவை பார்த்துட்டு அத்தையிடம் சொல்றேன்...” என்றாள்.
“மொத்தம் பத்து பேர் மேடம்... எல்லாருடைய பயோ-டேட்டாவும் இந்த பைலில் இருக்கு... ஒவ்வொருத்தருடைய இன்டர்வியு மார்க்கும் இருக்கு...”
“ஓகே தேங்க்ஸ் சார்...”
•
Posts: 39
Threads: 1
Likes Received: 0 in 0 posts
Likes Given: 2
Joined: Mar 2019
Reputation:
3
பைலை கொடுத்து விட்டு பால்ராஜ் விடை பெறவும், ப்ரியா ராஜேஸ்வரியிடம்,
“நமக்கு எதுக்கு அத்தை இந்த கூடுதல் பொறுப்பு எல்லாம்? அப்புறம் ஏதாவது பிரச்சனைனா கஷ்டம்...” என்றாள்.
“அது சரி தான் ப்ரியா ஆனால் அந்த பொண்ணுக்கும் என்ன பிரச்சனையோ! நம்மால் முடிந்தால் உதவுவோம்... நீ எல்லோருடைய பயோ-டேட்டாவையும் பார்த்துட்டு சொல்லு, ஒரு முடிவு எடுப்போம்...”
“சரி அத்தை பார்த்து முடிச்சுட்டு சொல்றேன்...”
மதிய உணவிற்கு பிறகு பார்ப்பது என்று முடிவு செய்து தங்கள் அறையில் இருந்த மேஜையின் மீது வைத்தவள் அன்று முழு தினம் அதை மறந்தே போனாள்.
இரவு தனிமையில் கணவனிடமும் சுபாஷ் பற்றிய தன் ஆராய்ச்சியை தொடர்ந்தாள்.
“ஏன் மேகி, உன் அண்ணனுக்கு லவ் பெயிலியரா இருக்குமோ? அத்தை சொன்னதை வைத்து பார்த்தால் எனக்கு அப்படி தான் தோணுது...”
“ப்ச் ப்ரீ, நல்ல நேரம் கிடைத்தது உனக்கு அண்ணா பற்றி பேச! இந்த பிங்க் கலர் சாரியில் சூப்பரா இருக்க...”
கணவனின் மனம் புரிந்ததால், அவனின் கேசத்தை கலைந்தபடிக் செல்லம் கொஞ்சினாள் அவள்.
“இல்லை மேகி, அத்தை பாவம் ரொம்ப பீல் செய்றாங்க... நீ எதுவுமே ஹெல்ப் செய்யவே இல்லையா?”
“எப்படி கண்ணா சும்மா இருக்க முடியும், அம்மா, என்னிடம் மூணு வருஷம் முன்பு புலம்பிய போதே, அவனுடைய காலேஜ் பிரெண்ட்ஸ் எல்லோரையும் மீட் செய்து விசாரித்தேன்... ஒருத்தருமே உருப்படியா எதையும் சொல்லலை... ஆனால் எதையோ மறைக்குறாங்கன்னு ஒரு சந்தேகம் இருந்தது... சுரேஷ்ன்னு அண்ணாக்கு க்ளோஸ் பிரென்ட் இருந்தார் அவரிடம் கேட்டால் அவர் அண்ணன் அவங்க எல்லோருடைய வாயையும் அடைத்து வைத்திருப்பதா சொன்னார்... ஆனால் அது ஏதாவது காதல் சமாச்சாரமா இல்லையான்னு தெரியலை... நானும் சுபியிடம் பாசமா, கெஞ்சி, எமோஷனல் ப்ளாக்மெயில் செய்து இப்படி எப்படி எல்லாமோ கேட்டு பார்த்துட்டேன்... ஹுஹும்ம்... வாயே திறக்க மாட்டேங்குறான்...”
“ஓஹோ அப்படியா விஷயம்! இண்டரெஸ்ட்டிங்! அதையும் தான் பார்ப்போமே...”
“எதை வேணா பாரு, ஆனா இந்த பாவப் பட்ட மகேஷை இப்படி காய விடலாமா... பேசியது போதும்டா கண்ணா...”
“ம்ம்ம்... இந்த வழிசலுக்கு எல்லாம் குறைச்சல் இல்லை...”
“வேற எதில் குறை வச்சேன்?”
“எனக்கு கடலை மிட்டாய் வாங்கி தரேன்னு சொன்னீங்களா இல்லையா?”
“ஆ! சாரி கண்ணா... நாளைக்கு கட்டாயம் வாங்கி தரேன்... உனக்கு கடலை மிட்டாய் எவ்வளவு பிடிக்கும்னு தான் எனக்கு தெரியுமே...”
“நாளைக்கு ஆபிஸ் கிளம்பும் முன் வாங்கி தரனும், சரியா?”
“சரிடா... ப்ளீஸ்...”
கெஞ்சலாக கொஞ்சும் கணவனை காதலுடன் பார்த்தாள் ப்ரியா... அவளின் பார்வையிலேயே அவன் சொக்கி போக, அதற்கு பின் அங்கே பேச்சு தேவையில்லாமல் போனது!
•
Posts: 39
Threads: 1
Likes Received: 0 in 0 posts
Likes Given: 2
Joined: Mar 2019
Reputation:
3
அலுவலகத்திற்கு அவசரமாக கிளம்பி கொண்டிருந்த மகேஷ், ப்ரியா அறையின் ஓரத்தில் நின்று அவனையே பார்த்திருப்பதை கவனித்தான்.
“என்ன டார்லிங், காலையிலேயே இப்படி மயக்குற லுக் விடுற? இன்னைக்கு லீவ் போட்டுறவா?”
“அது மட்டும் தான் இப்போ குறைச்சல்...”
“ஹேய் என்ன இப்படி அலுத்துக்குற?”
“வேற என்ன செய்ய, சொல்லுங்க... நீங்க என்னிடம் என்ன சொன்னீங்க? கிளம்பும் முன் எனக்கு...”
“ஓ! ஓ! கடலை மிட்டாய் வாங்கி தரேன்னு சொன்னேன்... சாரி கண்ணா...” கெஞ்சலாக சொன்ன போதும் மகேஷின் முகத்தில் கேலி புன்னகை தோன்றி இருந்தது...
குமார மங்கலத்தில் வீட்டிலேயே செய்யப்படும் கைத்தொழிலாக கடலை மிட்டாய் தயாரிப்பும் இருந்தது. காதலிக்கும் போது, ஒருமுறை அதை அவன் ப்ரியாவிற்கு வாங்கி கொடுத்ததில் அவளுக்கு மிகவும் பிடித்து போக, அவ்வப்போது, அதை கேட்டு சிறு குழந்தையாக அடம் பிடிப்பது அவளின் வாடிக்கையானது...
“நாளைக்கு குழந்தை பிறந்த பிறகு, நீங்க இரண்டு பேரும் ஒவ்வொரு பக்கம் இப்படி மிட்டாய்க்கு சண்டை போடுவீங்க போல இருக்கே...”
“அதுக்கு எல்லாம் ரொம்ப நாள் இருக்கு... இப்போவே என்ன அதை பற்றிய பேச்சு?”
“ஹேய், என்ன நீ புதுசா பிளான் சொல்ற?”
“ஆமாம் மேகி... முதல்ல சுபாஷ்க்கு கல்யாணம் ஆகட்டும் அப்புறம் நாம் குழந்தை பற்றி எல்லாம் யோசிப்போம்...”
“ம்ம்ம்...”
பேசியப் படி இருவரும் தங்களின் அறையை விட்டு வெளியில் வந்து உணவறையை அடைந்தார்கள். அங்கே சுபாஷ் மலையின் மீது இருக்கும் வீட்டிற்கு செல்ல தயாராக இருந்தான்.
“ஓகே ப்ரியா, மகி, நான் கிளம்புறேன்... உங்களுக்காக தான் வந்தேன்... அம்மாவை கவனிச்சுக்கோங்க...” என்றான் சுபாஷ்.
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவனின் செல்போன் ஒலி எழுப்பியது...
“ஒரு நிமிஷம்...” என்று இருவரிடமும் சொல்லி விட்டு கைப்பேசியை எடுத்து அவன் பேச தொடங்கவும், ப்ரியா கணவனிடம்,
“கடலை மிட்டாய்...” என கிசுகிசுத்தாள்.
கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்து விட்டு,
“சரி இங்கே பக்கத்தில் இருக்கும் கடையில் இருந்து இப்போ வாங்கி தரேன், ஈவ்னிங் வரும் போது, உனக்கு பெரிய பாக்கெட் வாங்கி தரேன், சரியா?”
“ஓகே ஓகே... தேங்க்ஸ்...”
மனைவியின் முகத்தில் பொங்கிய சந்தோஷத்தை பார்த்து ரசித்த படியே பர்ஸை எடுத்து சில்லறையை தேடினான் மகேஷ்.
“அடடா, ப்ரியா எல்லாமே நூறு ரூபாய் நோட் தான் கண்ணா இருக்கு... சில்லறை இல்லாமல் அந்த கடைக்கு போவது வேஸ்ட்...”
“ப்ச்... போங்க நீங்க எப்போதும் இப்படி தான்...”
“ஹேய் கண்ணா ப்ளீஸ்...”
“இருங்க இருங்க, உங்களுக்கு சில்லறை தானே வேணும்? சுபாஷுடைய பர்ஸ் இங்கே இருக்கு, அவரிடம் சில்லறை இருக்கான்னு பார்ப்போம்...”
“ஹேய் அதெல்லாம் சரி இல்லை...” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே அங்கே மேஜை மீது இருந்த சுபாஷின் பர்ஸை எடுத்து அவள் நோண்ட தொடங்கினாள். உள்ளே இருந்து ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து மகேஷிடம் கொடுத்தவள்,
“சீக்கிரம் வாங்கிட்டு வாங்க...” என்று கணவனை அனுப்பி வைத்தாள்.
“உன்னை என்ன செய்றது?” என்று செல்லமாக கோபித்தபடி, அவள் கொடுத்த பத்து ரூபாயுடன் சென்றான் மகேஷ்.
அவன் செல்வதை சற்றே பெருமையுடன் கவனித்திருந்துவிட்டு, சுபாஷின் பர்ஸை மூட அவள் அதை திருப்பிய போது, அதன் உள்ளே இருந்து ஒரு காகிதம் கீழே விழுந்தது. குனிந்து அதை எடுத்து பார்த்தவள், ஆச்சர்யத்தில் வாயை பிளந்தாள்!
பத்து நிமிடத்தில் சின்ன கடலை மிட்டாய் பாக்கெட்டுடன் வந்த மகேஷ்,
“ப்ரீ, உனக்காக நானே நடந்து போய் வாங்கிட்டு வந்திருக்கேன், இதற்கு எல்லாம் எனக்கு தனி பீஸ் வேணும் ஓகே?” என்றான் கண்ணை சிமிட்டியப் படி...
ஆனால் ப்ரியா எப்போதும் போல் அவனை காதலுடன் பார்க்காது ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தாள். அதை பற்றி கேட்க மகேஷ் வாயை திறந்த கணம், சுபாஷ் வேகமாக வந்தான். அவனுடனே ராஜேஸ்வரியும் வந்தாள்.
“சரி நான் கிளம்புறேன்... பை...” என்றபடி மேஜை மீது வைத்திருந்த ஜீப் சாவியை எடுத்த சுபாஷிடம்,
“சுபாஷ், உங்க பர்ஸ் கீழே விழுந்திருச்சு... இந்தாங்க...” என்று கையில் வைத்திருந்த பர்ஸை கொடுத்தாள் ப்ரியா.
இவள் ஏன் பொய் சொல்கிறாள் என்று மகேஷ் மனதினுள் குழம்பிய நேரத்தில், சுபாஷ் அவனின் பர்ஸை வாங்கி அவசரமாக திறந்து பார்த்தான். அவன் பர்ஸினுள் துழாவுவதை கவனித்த பிரியா,
“என்ன ஆச்சு சுபாஷ் ஏதாவது மிஸ் ஆகுதா?” என்றாள்.
“ஆமாம் ஒரு சின்ன பேப்பர்... ரொம்ப முக்கியமான பேப்பர்... பர்சுக்குள்ளே தான் வைத்திருந்தேன்... ஆமாம், பர்ஸ் எங்கே விழுந்தது ப்ரியா? அங்கே கீழே விழுந்திருச்சோ என்னவோ?
“அதோ அந்த பக்கம் தான் விழுந்தது சுபாஷ்...” என்று கையை காட்டியவள், சுபாஷ் திரும்பிய நேரத்தில், கையில் இருந்த அந்த காகிதத்தை கீழே போட்டு விட்டு, அதை அப்போது தான் கவனித்தது போல்,
“இதுவா பாருங்க சுபாஷ்...” என்றாள்.
அவள் காட்டிய திசையில் இருந்த அந்த காகிதத்தை, அவள் குனிந்து எடுக்கும் முன் அவசரமாக வந்து குனிந்து எடுத்த சுபாஷ், அதை முழுதாக திறந்துக் கூட பார்க்காமல்,
“ஆமாம் இது தான் ப்ரியா...” என்றான் ஒரு விதமான திருப்தியான குரலில்... பின்,
“சரி, அம்மா நான் கிளம்புறேன்... பை ப்ரியா, பை மகேஷ்...” என்றபடி கிளம்பினான்.
அதுவரை அங்கே நடந்த ப்ரியாவின் விசித்திரமான நடவடிக்கைகளை கண்டும் காணாதது போல் இருந்த ராஜேஸ்வரியும், மகேஷும், அவளை கேள்வியோடு பார்த்தனர்.
“சுபாஷ் கல்யாண மேட்டரில் எனக்கு ஒரு க்ளூ கிடைச்சிருக்கே!” என்றாள் அவள் குதூகலமாக.
•
Posts: 343
Threads: 0
Likes Received: 133 in 115 posts
Likes Given: 140
Joined: Aug 2019
Reputation:
0
•
|