Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
விஸ்வாசம் படத்தின் ரிவியூ...! ரசிகர்கள் இதுவரை காணாத செம ஜாலி அஜித்

[Image: dsfs.JPG]
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான விஸ்வாசம் படத்தின் ரிவியூ எதிர்பார்ப்புகளை கடந்து நிற்கின்றது. 
ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ:
விஸ்வாசம் படம் பார்க்கும் ஆர்வத்தில் அதிகாலை 1:30 மணிக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ காட்சிக்கு திரையரங்கங்கள் நோக்கி படையெடுத்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தின் விளிம்பிற்கு சென்றது ’தல’ படங்களுக்கு கிடைக்கும் மாமூலான ஓப்பனிங்கை காட்டுவதாகவே அமைந்திருந்தது. டிக்கெட் வாங்கிக்கொண்டு திரையரங்கிற்கு உள்ளே சென்ற ரசிகர்கள், ஓப்பனிங் காட்சியில் அஜித் அமர்ந்த பிறகு தான் அவர்களும் இருக்கையில் அமர்கின்றனர். அங்கேயே ஆரம்பித்து விடுகின்றது விஸ்வாசம் அஜித்தின் வெற்றி. 

விஸ்வாசம் ரிவியூ:
அஜித் இதுவரை நடித்துள்ள படங்களில் உச்சரித்த வசனங்களைக் காட்டிலும் விஸ்வாசம் படத்தில் தான் அவர் புதுவிதமான டயலாக் டெலிவரி பாணியை பின்பற்றியுள்ளார். அஜித் இதுபோன்ற பாடி லாங்குவேஜுடன் இதற்கு முந்தைய படங்களில் நடித்ததே இல்லை என திரையரங்கிற்குள் ரசிகர்கள் முனுமுனுத்துக் கொண்டிருந்தனர். ஜாலியாகவும், மற்ற கதாபாத்திரங்களை கலாய்த்தும் அஜித் பேசும் வசனங்கள் வேற லெவல் வரவேற்பைப் பெற்றுள்ளது. அஜித் இப்படியெல்லாம் கலாய்த்து பேசுவாரா? என்று ரசிகர்கள் யோசிக்கும் அளவிற்கு திரையில் அநாயசமாக விளையாடியுள்ளார் அல்ட்டிமேட் ஸ்டார். மறுபுறம், அஜித்திற்கு இணையான நடிப்புத்திறமையும், அழகும் கொண்டு திரையை ஹோல்டு செய்கிறார் நயன்தாரா. 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
[Image: dc-Cover-q9os19qe9cqfrqs2l1idlre0b0-2018...Medi_.jpeg]
நகர்ப்புறங்களை மையமாக வைத்து எண்ணற்ற படங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் கிராமத்து பின்புலத்தில் திரைக்கதையை உருவாக்கி அசாதாரண முயற்சியை மேற்கொண்டுள்ளார் இயக்குனர் சிறுத்தை சிவா. படங்களில் ஒவ்வொரு காட்சிகளுக்கும் உயிர் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது இமானின் பின்னணி இசை. 
படத்தின் முதல் பாதி கொஞ்சம் அப்டி இப்டி போய்க்கொண்டிருக்க, இடைவேளை காட்சியில் ஒரு மாஸ் சவாலுடன் வசனங்களை உச்சரிக்கிறார் அஜித். தல ரசிகர்களுக்கு இந்த வசனங்கள் மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. மேலும், மழையில் நடைபெறும் ஒரு சண்டைக்காட்சி தான் படத்தின் ஆகச்சிறந்த காட்சியாக பதிவாகி உள்ளது. காலா படத்தில் சூப்பர்ஸ்டார் நடித்திருக்கும் மழை சண்டைக்காட்சிக்கு நிகராக விஸ்வாசம் படத்தில் இக்காட்சி இடம்பெற்றுள்ளது.
Like Reply
[Image: ajiths-viswasam.jpg]
மொத்தத்தில் ஃபேமிலி எண்ட்டர்டெயின்மெண்ட் என்ற சிவாவின் வழக்கமான ஸ்டைல் பட்டியலில் இந்த படமும் இணைந்துள்ளது. இருந்தாலும், சிவா-அஜித் கூட்டணியில் வெளிவந்துள்ள முந்தைய படங்களைக் காட்டிலும் இந்த படத்திற்கு மாஸ் ஓப்பனிங்கே  கிடைத்துள்ளது. மேலும், விவேகம் படத்தில் அஜித்தை மாஸாக காட்ட வேண்டும் என்பதற்காக இயக்குனர் சிவா மேற்கொண்டிருந்த அனைத்து ஓவர்சீன் காட்சிகளுக்கும் இப்படத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தில் சிவா தற்போது வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறலாம். அஜித்தை திரையில் காண வேண்டுமென்ற ஆசையில் காத்திருந்த ரசிகர்களுக்கு விஸ்வாசம் படம் ஒரு நல்ல வேட்டை என்றால் அது மிகையல்ல. குடும்பத்தோடு பார்க்க வேண்டிய 'கொல மாஸ்' படம் தான் இந்த விஸ்வாசம்.
Like Reply
thanks nanba
Like Reply
விஸ்வாசம் - சினிமா விமர்சனம்
முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ்
  • 10 ஜனவரி 2019

[Image: _105132658_ajith1.jpg]படத்தின் காப்புரிமை
SATHYAJOTHIFILMS/TWITTER



திரைப்படம்
விஸ்வாசம்


நடிகர்கள்
அஜீத்குமார், நயன்தாரா, குழந்தை அனிகா, ரோபோ சங்கர், விவேக், யோகி பாபு, தம்பி ராமைய்யா, ஜெகபதிபாபு


இசை
டி. இமான்


இயக்கம்
சிவா.

சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்குப் பிறகு அஜீத் நடிக்கும் நான்காவது படம் இது. விவேகம் படத்தைப் பார்த்து ஏமாற்றத்தில் ஆழ்ந்திருந்த அஜீத் ரசிகர்களை இந்தப் படத்தில் குஷிப்படுத்த முயன்றிருக்கிறார் சிவா.
தேனி மாவட்டத்தில் வசிக்கும் தூக்குதுரை (அஜீத்) ஒரு தடாலடிப் பேர்வழி. எதிர்ப்பவர்களை நொறுக்கி அள்ளும் ரகம். ஆனால், அவருக்கு ஒரு சோகமான முன்கதை இருக்கிறது. அதாவது, தூக்குதுரையின் மனைவியான நிரஞ்சனா (நயன்தாரா), அவரது முரட்டுத்தனத்தால் அவரை விட்டுப் பிரிந்துசென்று மும்பையில் வசிக்கிறார். குழந்தையையும் (அனிகா) பார்க்கவிடுவதில்லை. இந்த நிலையில் மீண்டும் மனைவியைச் சந்திக்கச் செல்லும் தூக்குதுரைக்கு அங்கே அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது குழந்தையை ஒரு மிகப் பெரிய தொழிலதிபர் (ஜெகபதிபாபு) கொல்ல முயற்சிக்கிறார். தொழிலதிபர் ஏன் குழந்தையைக் கொல்ல முயற்சிக்கிறார், தூக்குதுரை குழந்தையை காப்பாற்றி மனைவியுடன் இணைந்தாரா என்பது மீதக் கதை.
முந்தைய படத்தில் ஏமாற்றமளித்ததால் இந்தப் படத்தில் அஜீத்தின் ரசிகர்களை உற்சாகமூட்டுவதிலேயே தன் கவனம் முழுவதையும் செலுத்தியிருக்கிறார் சிவா. அஜீத் நடப்பதை, வேஷ்டியை ஏற்றிக் கட்டுவதை, கைகளை க்ளோசப்பில் காட்டும் காட்சிகளை படம் முழுக்க அள்ளித் தெளித்திருக்கிறார்.
கலகலப்பான கிராமத்துவாசி, யாரையும் அடிக்கும் முரட்டுத்தனம், குடும்பத்திற்காக ஏங்கும் கணவன், குழந்தைக்காக ஏங்கும் தந்தை என இந்தப் படத்தில் சிக்ஸ் அடிக்க முயன்றிருக்கிறார் அஜீத். ஆனால், கலகலப்பு - நகைச்சுவை ஆகிய இரண்டும் பல இடங்களில் அஜீத்திற்குப் பொருந்தவில்லை. மற்ற ஏரியாக்களில் அனாயாசமாக ஸ்கோர் செய்கிறார் அஜீத். சிவா மீது அஜீத் ரசிகர்கள் கொண்டிருந்த கோபம் இந்தப் படத்திற்குப் பிறகு கொஞ்சமாவது தணிந்திருக்கும்.
Like Reply
இளம் மருத்துவர், மனைவி, பெரிய மருந்து நிறுவனத்தின் தலைவர், பாசமான அம்மா என பலவித பாத்திரங்களில் வரும் நயன்தாரா, ஒவ்வொரு இடைவெளியிலும் கோல் அடிக்கிறார். குழந்தையாக வரும் அனிகாவுக்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க படம்.
முற்பாதியில் யோகி பாபுவும் பிற்பாதியில் விவேக்கும் சிரிக்கவக்க முயற்சிக்கிறார்கள். அதில் யோகிபாபுவைவிட விவேக்கிற்கு கூடுதல் வெற்றிகிடைக்கிறது. ஒருவகையில் நகைச்சுவை நடிகராக விவேக்கிற்கு இது ஒரு 'கம்-பேக்' திரைப்படம் என்றுகூடச் சொல்லலாம்.
[Image: _105132660_ajith2.jpg]படத்தின் காப்புரிமைSATHYAJOTHIFILMS/TWITTER
ரோபோ ஷங்கர் - தம்பி ராமைய்யா கூட்டணியும் நகைச்சுவைக்கு முயற்சிக்கிறது. ஆனால், ஏதும் நடப்பதில்லை. படம் நெடுக தம்பி ராமைய்யா மட்டும் 'தூக்குதுரை' என்ற பெயர் போட்ட பனியனை அணிந்துவருகிறார். அது ஏதும் குறியீடா?
சிவா - அஜீத் ஜோடியின் முந்தைய படத்தோடு ஒப்பிட்டால் நிச்சயம் மேம்பட்ட படம்தான். ஆனால், பல பலவீனமான அம்சங்கள் இந்தப் படத்திலும் உண்டு. படத்தின் துவக்க காட்சிகளில் தூக்குத்துரையின் பாத்திரம் குறித்து கொடுக்கப்படும் 'பில்ட் - அப்'கள் ஒரு கட்டத்தில் பெரும் அலுப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன. மேலும் கதை மும்பைக்கு நகர்ந்த பிறகு, ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட பாதையிலேயே செல்ல ஆரம்பிக்கிறது. முடிவில் வில்லனும் திருந்தி, அஜீத் சொல்லும் அறிவுரையைக் கேட்டுக்கொள்கிறார்.
Like Reply
திரைக்கதையிலும் புதுமையான திருப்பங்களோ, எதிர்பாராத தருணங்களோ கிடையாது. அதனால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எளிதாக யூகிக்க முடிகிறது.
படத்தின் சில பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. குறிப்பாக 'கண்ணான கண்ணே' பாடல். ஆனால் பின்னணி இசைக்குப் பதிலாக பல இடங்களில் அந்தப் பாடலையே பயன்படுத்திருப்பது சற்று ஓவர். பாடல்களின் எண்ணிக்கையும் படத்தில் சற்று அதிகம்தான். அஜீத் எப்போதாவது வேஷ்டியைத் தூக்கினாலே, குதித்துக்கொண்டு பாடப்போகிறாரோ என்ற பயம் வருகிறது. ஆனால், அந்தப் பயம் வீணாவதில்லை. வேஷ்டியை ஏற்றிக்கட்டினால் இரண்டு பாட்டு லட்சியம்; ஒரு பாட்டு நிச்சயம்.
[Image: _105132666_ajith3.jpg]படத்தின் காப்புரிமைSATHYAJOTHIFILMS/TWITTER
படத்தில் பல இடங்களில் 'தான் தேனிகாரர்' என்கிறார் அஜீத். ஆனால், படம் சோழவந்தானில் நடப்பதாகக் காட்டுகிறார்கள். பாடல் காட்சிகளில் 'நான் மதுரைக்காரன்' என்கிறார். படம் உண்மையில் எந்த ஊரில் நடக்கிறது, அஜீத் எந்த ஊர்க்காரர்?
பளீரென தென்படும் வெற்றியின் ஒளிப்பதிவு படத்தின் மிக முக்கியமான பலம். பல க்ளோஸ் - அப் காட்சிகளை வடிவமைத்த விதமும் பார்வையை நிலைக்க வைக்கின்றன.
அஜீத் ரசிகர்களை இந்தப் படத்தில் திருப்திப்படுத்தியிருக்கிறார் சிவா. ஆனால், சாதாரண சினிமா ரசிகர்கள் ஏமாற்றமடையக்கூடும்.
Like Reply
பேட்ட - சினிமா விமர்சனம்

[Image: _105126155_d5950289-4083-4f3b-b2ba-2aac5ec05bfe.jpg]படத்தின் காப்புரிமைTWITTER


திரைப்படம்
பேட்ட


நடிகர்கள்
ரஜினி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், மகேந்திரன், முனீஸ்காந்த், பாபி சிம்ஹா, நரேன்


இசை
அனிருத்


இயக்கம்
கார்த்திக் சுப்புராஜ்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து இந்த ஏப்ரலுக்குள் ரஜினி நடித்து வெளிவரும் மூன்றாவது திரைப்படம் இது. 90களின் ரஜினியை மீண்டும் ரசிகர்களுக்குக் காட்ட நினைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பழைய பகையை நாயகன் நீண்டகாலத்திற்குப் பிறகு ஒழித்துக்கட்டுவதுதான் படத்தின் 'ஒன் - லைன்'.
ஒரு மலைவாசஸ்தலத்தில் இருக்கும் கல்லூரியின் வார்டனாக வருகிறார் காளி (ரஜினி). அந்தக் கல்லூரி விடுதியில் நடக்கும் அநியாயங்களை சரிசெய்வதோடு, அங்கே ரவுடித்தனம் செய்பவர்களையும் அடக்குகிறார் மனிதர். அதே கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் ஒரு காதல் ஜோடியை பிரிக்க மூன்றாமாண்டு மாணவன் ஒருவன் முயற்சி செய்ய காதல் ஜோடியை பாதுகாக்க ஆரம்பிக்கிறார் காளி. ஆனால், திடீரென வடநாட்டு கும்பல் ஒன்று காளியையும் அந்த இளைஞனையும் கொல்ல முயல்கிறது. சம்பந்தமில்லாமல் வடநாட்டிலிருந்து வரும் கும்பல் ஏன் காளியைக் கொல்ல முயல்கிறது, காளிக்கும் அந்த கல்லூரி இளைஞனுக்கும் என்ன தொடர்பு என்பது மீதிக் கதை.
சந்தேகமேயில்லாமல் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் படம்தான். சீரியஸாக ஏதோ செய்யப்போகும் எந்த பாவனையுமின்றி தன் ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ, அதைச் செய்திருக்கிறார் ரஜினி. படத்தின் துவக்ககாட்சியிலிருந்து படத்தின் க்ளைமாக்ஸ் வரை அவரது நடிப்பும் மேனரிசமும் ரசிகர்களை வெகுவாகக் கவரக்கூடும்
Like Reply
[Image: _105126146_062fc4f2-5a7d-4486-a759-d3dbd4aec08a.jpg]படத்தின் காப்புரிமைSUN PICTURES
கதாநாயகிகளாகவரும் சிம்ரனுக்கும், த்ரிஷாவுக்கும் அதிக காட்சிகள் இல்லை. இதில் சிம்ரன், தான் வரும் ஒரே காட்சியில் ஜொலிக்கிறார்.
பிரதான வில்லனாக வரும் நவாஸுதீன் சித்திக் மிகப் பிரமாதமான நடிகர். ஆனால், இந்தப் படத்தில் ஒரு வழக்கமான ரஜினி பட வில்லன். அதிலும், "என்னடா இன்னும் அவனை கொல்லலையா?" என்று கேட்கும் பழைய பாணி வில்லன். பல படங்களில் சிறிய பாத்திரங்களில்கூட அசரவைத்திருக்கும் நவாஸுதீன் இதில் சற்று ஏமாற்றமளிக்கிறார்
Like Reply
படத்தின் முற்பாதியில் அதிகம் தலைகாட்டும் பாபி சிம்ஹாவும் பிற்பாதியில் அதிக நேரம் வரும் விஜய் சேதுபதியும் கொடுத்த பாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதியைப் பொறுத்தவரை எல்லாப் பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுவதுண்டு. இந்தப் படத்தில் அப்படியில்லை.
இந்தப் படத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதியைவிட சிறப்பானது. படத்தின் துவக்கத்தில் கதவைத் திறந்துகொண்டு நுழையும் ரஜினி, கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் அதிரடியாகப் பாய்கிறார். இடைவேளைவரை இந்தப் பாய்ச்சல் தொடர்கிறது. ரஜினி நடித்து சமீபத்தில் வந்த திரைப்படங்களில் இந்த அதிரடியும் பாய்ச்சலும் 'மிஸ்' ஆகியிருந்த நிலையில், இந்த காட்சிகள் அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்திற்குள்ளாக்கக்கூடும். ரஜினிக்கும் சிம்ரனுக்கும் இடையிலான காட்சியில், இருவருமே போட்டிபோட்டுக்கொண்டு மனம் கவர்கிறார்கள்.
[Image: _105126148_b1d255c0-032f-46e9-a6f5-07bca3debd4f.jpg]SUN PICTURES
ஆனால், படத்தின் இரண்டாம் பாதியில் கதை ஃப்ளாஷ்பேக், உத்தரப்பிரதேசம் என்று நகர்ந்ததும் சற்று தொய்வடைய ஆரம்பிக்கிறது. க்ளைமேக்ஸ் நெருங்கும்போது மீண்டும் சூடுபிடிக்கிறது திரைக்கதை. முடிவில் வரும் சிறிய திருப்பமும் நல்ல சர்ப்ரைஸ்.
இசையமைப்பாளர் அனிருத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க படம். பாடல்கள் ஏற்கனவே பிரபலமாகிவிட்டன. ஆனால், பின்னணி இசையிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு கவனத்தை ஈர்த்திருக்கிறார் அனிருத். தவிர, படம் நெடுக பழைய பாடல்களை ஒலிக்கவிடுவதும் சிறப்பு.

திருவின் ஒலிப்பதிவும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வண்ணங்களும் படத்திற்கு கூடுதல் அழகைக் கொடுக்கின்றன.
இரண்டாம் பாதியில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் இந்தப் படத்தின் மூலம் பழைய பாணிக்கு திரும்பியிருக்கிறார் ரஜினி. வரவேற்கத்தக்க திருப்பம்.
Like Reply
பேட்ட vs விஸ்வாசம் - பொங்கல் ரேஸ் வின்னர் யார்? சென்னை வசூல் நிலவரம்
மேலும், விஸ்வாசம் படத்தை சென்னையில் விநியோகம் செய்த நிறுவனம் “ஜெயிச்சிட்டோம் பங்காளிகளா!!!” என்று ட்வீட் செய்துள்ளது.
 வெளியாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் விஸ்வாசம் சுமார் 88 லட்சம் ரூபாய் வசூலையும், பேட்ட 1.12 கோடி ரூபாயையும் வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விஸ்வாசம் படத்தை சென்னையில் விநியோகம் செய்த நிறுவனம் “ஜெயிச்சிட்டோம் பங்காளிகளா!!!” என்று ட்வீட் செய்துள்ளது.
 சென்னையை பொருத்தவரை வசூலில் விஸ்வாசத்தை பேட்டை படம் பின்னுக்கு தள்ளியுள்ளது.
Like Reply
Petta Day 3 Collection: சென்னையில் மட்டும் 3 நாளில் ரூ.3 கோடி பேட்டயின் வசூல் வேட்டை!

[Image: Tamil-image.jpg]

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள பேட்டபடம் சென்னையில் மட்டும் 3 நாட்களில் ரூ.3 கோடி வசூல் கொடுத்துள்ளது.
, சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பேட்ட படம் ரூ.3.49 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. முதல் நாளில் ரூ.1.12 கோடியும், 2ம் நாளில் ரூ.1.08 கோடியும் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதே போன்று, இங்கிலாந்திலும், 2 நாட்களில் ரூ.1.3 கோடி வசூலும், அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.1 கோடியும், தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் ஒட்டு மொத்தமாக ரூ.9.25 கோடி வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Like Reply
Quote:[Image: GW1NFtOZ_normal.jpg]
[/url]Ramesh Bala

@rameshlaus





#Petta continues its impressive run at the #Chennai City Box Office..

With 5th show kicking in for the weekend, its gross goes up to ₹ 1.29 Crs on Saturday

Total 3 days Chennai gross, ₹ 1.12+₹ 1.08+₹ 1.29 = ₹ 3.49 Crs

701
6:32 AM - Jan 13, 2019
Twitter Ads info and privacy


119 people are talking about this






இதே போன்று பேட்ட படத்துடன் இணைந்து வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் படம் சென்னையில் முதல் நாளில் ரூ.88 லட்சமும், 2ம் நாளில் ரூ.86 லட்சமும், 3ம் நாளில் ரூ.1.04 கோடியும் வசூல் குவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.2.78 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தடவையாக விஸ்வாசம் படம் சென்னையில் ரூ.1 கோடி வசூல் குவித்துள்ளது. 
Quote:[Image: GW1NFtOZ_normal.jpg]
Ramesh Bala

@rameshlaus





At the All-India Box Office, #Viswasam is leading #Petta (Tamil and Telugu)..

2-Days Gross Leads :#Viswasam Leads :

TN - ₹ 10 Crs #Petta Leads :

AP/TG - ₹ 4.50 Crs (#Viswasam has no Telugu Version)

KA - ₹ 2.50 Crs

KE - ₹ 1.25 Cr

ROI - ₹ 1 Cr

Tot - ₹ 9.25 Crs

4,397
9:53 PM - Jan 12, 2019
Twitter Ads info and privacy


1,613 people are talking about this





Quote:[Image: GW1NFtOZ_normal.jpg]
Ramesh Bala

@rameshlaus





#Petta on track to post Half a Million Dollars on Saturday - Jan 12th at the #USA Box office..

Also, crosses the $1.50 Million Mark in Total Gross..

As of 5 PM PST, it's Sat gross stands at $412,000

Taking the total to $1,521,977

361
6:38 AM - Jan 13, 2019
Twitter Ads info and privacy


59 people are talking about this

[url=https://twitter.com/rameshlaus/status/1084255831430844417]

Like Reply
Petta: சரித்திரம் படைத்த விஸ்வாசம்; 27 ஆண்டுகளுக்குப் பின், ரஜினியை 2வது இடத்திற்கு தள்ளிய அஜித்!

[Image: Tamil-image.jpg]


Highlights
  • தேவர் மகன், பாண்டியன் படங்கள் வெளியான போது, ரஜினியின் வசூல் 2வது இடம்
  • 27 ஆண்டுகளுக்கு பின், விஸ்வாசம் படத்தால் ரஜினிக்கு 2வது இடம்


பொங்கல் திருநாளை ஒட்டி, ரஜினிகாந்தின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்கள் திரைக்கு வந்துள்ளன. ரஜினியின் வெறித்தனமான ரசிகனாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், ரஜினி ரசிகர்களுக்காக படைத்த விருந்து தான் ‘பேட்ட’ திரைப்படம். 

முழுக்க முழுக்க ரஜினியின் ஸ்டைல், அசத்தல் நடிப்பில் வெறித்தனமான கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் 2 நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் ரூ.48 கோடி, தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.23 கோடியும் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 


விஸ்வாசம்’ படம் கிராமத்துக் கதைக் களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏராளமான நட்சத்திர பட்டாளத்துடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ‘பேட்ட’ படத்தை பின்னுக்கு தள்ளி ரூ.26 கோடி வசூலை விஸ்வாசம் ஈட்டியுள்ளது.

சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் ரூ.43 கோடியை வசூல் செய்துள்ளது. முன்னதாக அக்டோபர் 25, 1992ல் தேவர் மகன், பாண்டியன் படங்கள் ஒன்றாக வெளிவந்தன. அப்போது தேவர் மகன் படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால், பாண்டியன் படம் முதல் நாள் வசூலில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது
Like Reply
'பேட்ட' vs ’விஸ்வாசம்’: தொடரும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் - திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி

[Image: 12THPETTAANDVISWASAMRELEASEjpg]

'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களுக்குமே தொடர்ச்சியாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகி வருவதால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
ஜனவரி 10-ம் தேதி 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. முதல் முறையாக தமிழக பாக்ஸ் ஆபிஸில் ரஜினி - அஜித் படங்களின் நேரடி மோதலால் விநியோகஸ்தர்கள் தயங்கினார்கள்.
இரண்டு நடிகர்களின் ரசிகர்களுமே சமூக வலைதளத்தில் கடுமையாக போட்டியிட்டுக் கொண்டனர். இரண்டு படங்களும் வெளியாகி 4 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், இரண்டுக்குமே தொடர்ச்சியாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகி வருகின்றன. இதனால், திரையரங்க உரிமையாளர்கள் கடும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
வெளிநாடு, சென்னை ஆகிய இடங்களில் 'பேட்ட' படத்தின் வசூல் அமோகமாக இருக்கிறது. அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகியுள்ளது 'பேட்ட'. இதர மாநிலங்களில் வசூல் நிலவரம் குறித்து விசாரித்த போது, இந்தி - தெலுங்கு ஆகிய மொழிகளில் படும் தோல்வியைத் தழுவியுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவில் படும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் 'பேட்ட' படத்தின் வசூல் 2 மில்லியன் டாலர்களை நெருங்கியுள்ளது. இதோடு வெளியான அனைத்து படங்களின் வசூலைத் தாண்டி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் நல்ல வசூல் செய்து வருகிறது.
சென்னையைத் தாண்டி இதர தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் 'விஸ்வாசம்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் குடும்பத்துடன் வந்து படம் பார்க்கத் தொடங்கியுள்ளதாக, திரையரங்க உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒட்டுமொத்த தமிழகத்தின் வசூலை எடுத்துக் கொண்டால், 'பேட்ட' படத்தை விட 'விஸ்வாசம்' தான் முதலிடத்தில் உள்ளது.
இரண்டில் எது வெற்றி என்பது, விடுமுறை நாட்கள் முடிந்தவுடன் வரும் கூட்டத்தை வைத்து தான் முடிவு செய்ய முடியும். அதுவரை இரண்டு படங்களுக்குமே டிக்கெட் புக்கிங் அருமையாக இருக்கிறது என்று விநியோகஸ்தர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு தொடக்கமாக திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து தரப்புக்குமே லாபகரமான ஆண்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இரண்டு படங்களின் வசூல் நிலவரங்கள் குறித்து சில திரையரங்க உரிமையாளர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ்: வெளியான நான்கு நாட்கள் கழித்து, பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் என்பது தெளிவாகிறது. மொத்த சினிமாத்துறையும் இந்தப் படங்களின் வசூல் குறித்து மகிழ்ச்சியாக உள்ளது. கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் எடுத்து அலசி ஆராய்ந்து, எந்தப் படம் அதிக வசூல் என்று கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, இரண்டு படங்களையும் பாருங்கள். பிடித்த படத்தை மீண்டும் பாருங்கள். பொங்கல் விடுமுறையை மகிழ்ச்சியுடன் செலவிடுங்கள். 
ராம் திரையரங்கம்: டால்பி அட்மாஸ் இருக்கும் ராம் திரையில் இரண்டு படங்களுமே அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதை நான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். பேட்ட, விஸ்வாசம் இரண்டுமே எங்களுக்கு வெற்றிப் படங்கள் தான். 
ரோகிணி திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா: கடந்த 30 வருடங்களில் முதன்முறையாக எங்கள் திரையரங்கில் சிறப்பான 4 நாட்கள் வசூலை நாங்கள் பார்த்தோம். விஸ்வாசம் மற்றும் பேட்ட என இரண்டு ப்ளாக்பஸ்டர் படங்களும், ரோஹிணி திரையரங்கில், பாகுபலி 2 படத்தின் முதல் 4 நாள் வசூலை முந்தியுள்ளன. பிரம்மாண்டமான கொண்டாட்டமான பொங்கல் வாரத்தை எதிர்நோக்கியுள்ளோம். 
ஜி.கே. சினிமாஸ் உரிமையாளர் ரூபன்: தல மற்றும் தலைவர் இருவரும் பாக்ஸ் ஆபிஸை ஆண்டு கொண்டிருக்கின்றனர். ஒரு திரையரங்க உரிமையாளராக இரண்டு படங்களுமே அற்புதமாக ஓடிக்கொண்டிருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. நல்ல கதைக்களம் இருந்தால் இரண்டு பெரிய படங்கள் ஒரே நேரத்தில் வெற்றி பெறலாம் என்பதை திரைத்துறைக்கு இந்தப் படங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.
Like Reply
சினிமா செய்திகள்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு





[Image: 201901181534235185_Rajini--Patta-Ajith--...SECVPF.gif]

ரஜினியின் பேட்ட தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்த சிறிது நேரத்தில் அஜித்தின் விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அந்த படத்தின் விநியோக உரிமையை பெற்ற நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி பேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியானது. இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூல் என்று ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப்போர் நடைபெற்று வந்தது.

சினிமா டிராக்கர்ஸ் என்று கூறிக் கொள்ளும் சிலர் தமிழகத்தில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் வசூலில் சக்கை போடு போடுவதாக கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென பேட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம் தமிழகத்தில் மட்டும் பேட்ட படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக அறிவித்தது.

Quote:Here is the AUTHENTIC #Petta BO report : Veteran distributor Tirupur Subramaniam states that from this Sunday, #Petta will become the FIRST Tamil film to cross 100 crores in 11 days in Tamil Nadu ALONE.#PettaFastest100CrsInTNhttps://t.co/ETacAJY8bv@karthiksubbaraj
— Sun Pictures (@sunpictures) January 17, 2019
[color][size][font]
அதோடு மட்டும் அல்லாமல் தமிழகத்தில் வேகமாக 100 கோடி ரூபாய் வசூலை கடந்த படம் என்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியது. அடுத்த சிறிது நேரத்தில் விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அந்த படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ள கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தெரிவித்தது.
[/font][/size][/color]
Quote:#Viswasam125CroresVettai - Angali pangali ooda aadharavula #Viswasam has crossed 125 crores gross in TAMIL NADU alone by the end of today! Thank you makkaley ?#Thala#Ajith#Nayanthara@SathyaJyothi_@directorsiva@immancomposer@DoneChannel1@SureshChandraapic.twitter.com/ziZV1RAZzv
— KJR Studios (@kjr_studios) January 17, 2019
Like Reply
ராஜுமுருகன் செய்தது தான் சிறப்பான தரமான சம்பவம்: #VeryVeryBad

சென்னை: ஜீவாவின் ஜிப்ஸி படத்தில் வரும் காட்சியை பார்க்கும்போது இது தான் சிறப்பான தரமான சம்பவம் என்று தெரிகிறது.
ஜோக்கர் படம் புகழ் ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படம் ஜிப்ஸி. ஜோக்கர் படத்திலேயே வாங்கு வாங்குன்னு வாங்கிய ராஜு முருகன் இந்த படத்தில் என்ன பேசுகிறார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ஜிப்ஸியின் #VeryVeryBad பாடல் டீஸர் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.



[/url]
[Image: NZ2YCw0k?format=jpg&name=280x280][Image: aQltRN9T_normal.jpg] YouTube ‎@YouTube

Quote:[Image: 14ihjHfJ_normal.jpg]
Jiiva

@Actorjiiva





Here we go with #VeryVeryBad 1st single teaser from #Gypsyhttps://youtu.be/5yjUZ6x3wws 

1,863
12:17 PM - Jan 18, 2019
[color][font]

[url=https://twitter.com/Actorjiiva/status/1086153182156185600]
[/font][/color]
Like Reply
ஜிப்ஸி
#VeryVeryBad பாடல் டீஸர் அருமையாக உள்ளது. நீதி தேவதையின் வாயில் கருப்புத் துணி கட்டியிருப்பதுடன் டீஸர் துவங்குகிறது. அம்பேத்கர், பெரியார் புகைப்படங்களை காட்டுகிறார்கள். போலீசார் ஜிப்ஸி படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை அழைத்து வரும்போது சிறையில் உள்ளவர்கள் அவரிடம் கேட்கும்கேள்விகள் அருமை.
[Image: thirumurugangandhi-1547808974.jpg]


கைது
தோழர் ஸ்டெர்லைட்டா, அணு உலையா, நியூட்ரினோவா, மணல் கொள்ளையா எதுல உங்களை கைது பண்ணினார்கள் என்று பிற கைதிகள் சந்தோஷ் நாராயணனை கேட்கிறார்கள். மக்கள் விரோத திட்டத்திற்கு எதிரா, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரா துண்டறிக்கை கொடுத்தீர்களா என்று கேட்கும் பெண் யாரை நினைவூட்டுகிறார் என்பது உங்களுக்கே தெரியும். சிறையில் திருமுருகன் காந்தி, பியூஷ் மனுஷ் இருப்பதாகவும் காட்டியுள்ளனர்.

[Image: santhosh-1547808982.jpg]
  

திருநங்கை
சாமியார், திருநங்கைகள் பிரச்சனை, தீண்டாமை சாதிக் கொடுமை, சேலம் 8 வழிச் சாலை போராட்டம், ஈழத் தமிழர் பிரச்சனை, 7 தமிழர் விடுதலை என்று அனைத்து பிரச்சனைகளையும் பேசிவிட்டார் ராஜு முருகன். வெரி வெரி பேட் என்ற பாட்டு போட்டதற்காக கைது செய்ததாக கூறுகிறார் சந்தோஷ் நாராயணன்.
[Image: rajumurugan-1547809263.jpg]
  


ஹிட்
ஏதாவது ஒரு பிரச்சனையை பேசினாலே எதிர்ப்பு கிளம்பி விளம்பரம் கிடைக்கும். ராஜு முருகன் அத்தனை பிரச்சனையையும் கை வைத்துவிட்டார். ஜிப்ஸிக்கு அமோகமாக இலவச விளம்பரம் கிடைத்து சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
Like Reply
விஸ்வாசம் வசூலை கலாய்த்த தமிழ்ப்படம் இயக்குனர்... 


தமிழ் படம்-2 படத்தை இயக்கிய சி.எஸ். அமுதன் விஸ்வாசம் பட வசூலைக் கிண்டல் செய்யும் தொணியில் ட்விட்டரில் பதில்.
 

பொங்கல் பண்டிகையின் விடுமுறையை முன்னிட்டு அஜித் நடிப்பில் விஸ்வாசமும், ரஜினி நடிப்பில் பேட்ட படமும் கடந்த 10ஆம் தேதி ரிலீஸானது. படம் வெளியான நாள் முதலே இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த இரண்டு படக்குழுவும் அதிகாரப்பூர்வ வசூலை தெரிவித்துள்ளது.
 

முதலில் ரஜினியின் பேட்ட படம், உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்திருந்தது, தமிழகத்தில் மட்டும் 11 நாட்களுக்குள் நூறு கோடியை இத்திரைப்படம் தொட்டுவிடும் என்று தகவல் வெளியாக. அதனை தொடர்ந்து விஸ்வாசம் படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் தொட்டுவிட்டது என்று படக்குழு தகவல் அளிக்க. விஸ்வாசம் திரைப்படத்தை வாங்கி வெளியிட்ட கே.ஜே.ஆர் நிறுவனம், தமிழகத்தில் மட்டும் 125 கோடி வசூலை விஸ்வாசம் வாரி குவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், விஸ்வாசம் படம் பார்க்க சீட்டில்லாமல், அதிகப்படியான நாற்காலிகள் போட்டு பார்வையாளர்கள் பார்த்து வருவதாக தெரிவித்தது.
 

சமூக வலைதளத்தில் இந்த இரு படங்களின் வசூல் விபரங்களை, பலர் கலாய்த்து வந்தனர். இந்நிலையில் தமிழ் படம் 2 இயக்கிய அமுதனிடம் சமூக வலைதளத்தில் ஒருவர் உங்கள் படத்திற்கு எட்டாவது நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்று கேட்க, அதற்கு அமுதன்  ‘ஒரே இருக்கையில் இரண்டு , மூன்று நபர்கள் அமர்ந்திருந்தனர். கூட்டத்தைச் சமாளிக்க கூடுதல் நாற்காலிகள், மெத்தை எல்லாம் திரையரங்களுக்குக் கொண்டு வரப்பட்டதால் அதனைக் கூறுவது கடினம்’ என்றார்.
Like Reply
 பேட்ட, விஸ்வாசம் வசூல் நிலவரம்.. ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்: திருச்சி ஸ்ரீதர்
சென்னை : பேட்ட மற்றும் விஸ்வாசம் பட வசூல் குறித்து வெளியாகி வரும் அனைத்து தகவல்களும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்கள் என விமர்சித்துள்ளார் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர்.
பொங்கலையொட்டி கடந்த வாரம் ரிலீசானது ரஜினி நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் ரிலீசானது. தொடர்ந்து அமைந்த விடுமுறை காரணமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக இரண்டு படமும் ஓடி வருகிறது. இதனால் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் இரண்டு படங்களும் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால், இரண்டு படத்தில் எது அதிக வசூலை அள்ளியது என்பதில் தொடர்ந்து இருதரப்பு ரசிகர்களிடையேயும் மோதல் நீடித்து வருகிறது.


[Image: petta-1547882323.jpg]

Like Reply




Users browsing this thread: 49 Guest(s)