Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
‘இந்தியாவில் ஒரே ஒரு மெகா ஸ்டார்தான்’ - பிரபல நடிகரை புகழ்ந்து தள்ளிய சிரஞ்சீவி

கைதி நம்பர் 150 படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சீரஞ்சீவி நடிக்கும் படம்  ‘சைரா நரசிம்மா ரெட்டி’. அவருடைய மகன் ராம் சரண் இப்படத்தை தயாரிக்க சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
 
[Image: sye-raa.jpg]
 

 
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகிறது. மேலும் மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. கொனிடேலா என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிகர் ராம் சரண் தயாரிக்கிறார். படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது. 
 
பல மொழி நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் குவிந்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அண்மையில் இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது அப்போது பேசிய சிரஞ்சீவி, “அமிதாப் தான் என் நிஜ வாழ்க்கையின் வழிகாட்டி. ஒரே ஒரு மெகாஸ்டார் தான், அது அமிதாப் பச்சன் தான். அவர் பக்கத்தில் யாரும் நெருங்க முடியாது. அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம். அவருக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். என் ஆசான் கதாபாத்திரத்தில் அமிதாப் நடிக்க வேண்டும் என இயக்குநர் விரும்பினார். அது ஒரு விசேஷமான கதாபாத்திரம். கண்டிப்பாக அமிதாப் தான் வேண்டும் என்றார். அதனால் அமிதாப் அவர்களை அழைத்து எனது ஆசான் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். ஒரு வாரம் தான் ஆகும் என்றேன். அவர் உடனே சரி என்றார். இந்த இந்தியா மெகாஸ்டாருக்கு என் இதயம் நன்றி கூறியது” என்று கூறினார். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
ரசிகர்களுக்கு விஜய்சேதுபதியின் பிறந்தநாள் ட்ரீட்...

[Image: rajapa-std.jpg]
 
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. இதில் சிரஞ்சீவி ஹீரோவாகவும் விஜய் சேதுபதி, தமன்னா, நயன்தாரா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் விதமாக 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் அவருடைய தோற்றத்தை வெளியிட்டு அந்த படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் அவரது பெயர் ராஜபாண்டி எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 

Quote:[Image: zJXCXsd9_normal.jpg]
[/url]Konidela Pro Company@KonidelaPro





Wishing Makkal Selvan @VijaySethuOffl a very Happy Birthday. Here's the dynamic look of #RaajaPaandi from #SyeRaaNarasimhaReddy.#HBDVijaySethupathi #SyeRaa
[Image: DxAYx3FXQAAjzA6?format=jpg&name=900x900]


8,272
10:04 AM - Jan 16, 2019
Twitter Ads info and privacy


1,530 people are talking about this

[url=https://twitter.com/KonidelaPro/status/1085394815997698048]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]`பேமென்ட் தர்றோம்னு சொல்லிட்டு புகார் கொடுத்திருக்காங்க!’ - மதுமிதா[/color]
[color=var(--title-color)]தனியார் நிறுவனம், தன்மீது காவல் நிலையத்தில் ஒரு பொய்யான புகாரை கொடுத்துள்ளதாக மதுமிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.[/color]



[color=var(--content-color)]ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானவர், நடிகை மதுமிதா. இவர், தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சில தினங்களுக்கு முன், நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாகத் திடீரென அதிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நிறுவனத்தின் சார்பில் மதுமிதா மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.


[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F75204581-0c14-4d98-9...2Ccompress]
Madhumitha
[/color]

[color=var(--content-color)]இந்நிலையில், மதுமிதா செய்தியாளர்களைச் சந்தித்தார். ``தனியார் நிறுவனம் என்மீது காவல் நிலையத்தில் ஒரு பொய்யான புகாரைக் கொடுத்துள்ளது. இந்தப் புகாரை கொடுப்பதற்கு முன், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, உங்களுக்கு வரவேண்டிய செட்டில்மென்டுகளைக் கொடுத்துவிடுகிறோம். இன்வாய்ஸ் அனுப்புங்கள் என என்னிடம் கூறினர். என் கணவர் மூலமாக அவர்கள் கேட்டதைக் கொடுத்துவிட்டோம். உங்களுக்கான தொகை விரைவில் வந்துவிடும் எனக் கூறி அனுப்பினர். அதன் பின்னர், ஏன் இப்படி ஒரு புகாரை அளிக்க வேண்டும் என எனக்குத் தெரியவில்லை.[/color]

[color=var(--content-color)]என்மீது புகார் கொடுத்ததே எனக்குத் தெரியாது. நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து என்னிடம் கேட்டபோதுகூட அப்படி இருக்காது. வாட்ஸ்அப்-பில் பரவும் வதந்தியாகத்தான் இருக்கும் என முதலில் நினைத்தேன். அதன்பின்னர் வந்த தொடர் அழைப்புகளையடுத்து, எனது வழக்கறிஞரைத் தொடர்புகொண்டு, காவல்நிலையத்தில் விசாரிக்கச் சொன்னேன். இதுதொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் விசாரித்தபோது, புகார் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.[/color]

[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F05126722-1b8b-4007-a...2Ccompress][/color]
[Image: vikatan%2F2019-08%2Fb6e5603f-609a-496d-a...2Ccompress]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
first 5 lakhs viewed thread tamil
Like Reply
வெறித்தனம் பாடல் “லீக்” – அதிர்ச்சியில் பிகில் படக்குழு..!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தின் வெறித்தனம் பாடல் இணையத்தில் லீக் ஆகியதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கி வரும் இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தீபாவளி தினத்தில் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையில் பாடியுள்ள விஜய், முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடலை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கும் நிலையில், இணைய தளத்தில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் பாடிய ‘சிங்கப்பெண்ணே’ பாடலும் இதே போல் இணையத்தில் லீக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
விஷால் திருமணம் நிறுத்தம்? – கிசுகிசுக்கும் சினிமா வட்டாரம்..!

விஷாலின் திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், திருமணம் நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்.
விஷாலுக்கும், ஆந்திரா தொழிலதிபர் மகளும், நடிகையுமான அனிஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறினார்கள்.
இதனையடுத்து இரண்டு குடும்பத்தினரும் தீவிரமாக திருமண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருக்கிறார்.
இதனால், விஷால், அனிஷா திருமணம் நிறுத்தப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. சினிமா வட்டாரங்களில் இது தொடர்பாக கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் இதுகுறித்து விஷால் மற்றும் அனிஷா தரப்பினரிடையே எந்த தகவலும் வெளியாகவில்லை. இது வதந்தியா, உண்மையா என்று விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’

சென்னை: பெண்கள் கபடியில் தேசிய அளவில் நடக்கும் ஊழலும், அந்த தடைகற்களை தாண்டி வெற்றி பெறும் தமிழக வீராங்கனைகளுமே கென்னடி கிளப் படத்தின் மையக்கரு.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கென்னடி க்ளப் எனும் பெண்கள் அணியை நடத்தி வருகிறார் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான பாரதிராஜா. தனது ஓய்வூதியத்தைக் கூட கபடிக்காக செலவழிக்கும் அளவுக்கு ஈடுபாடு கொண்ட கோச் அவர். கபடி விளையாட்டில் திறமையான ஏழை மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் பயிற்சி அளித்து வருகிறார். அந்த மாணவிகளை எப்படியாவது நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது பாரதிராஜாவின் லட்சியம்.


[Image: kennedy-club-m2222-1566477151.jpg]


இந்நிலையில் அவருக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டு, தொடர்ந்து பயிற்சி கொடுக்க முடியாத நிலை உருவாகிறது. இதனால் தனது முன்னாள் மாணவரான சசிகுமாரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். சசியும் மாணவிகளுக்கு சிறப்பான பயிற்சி கொடுத்து, மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற வைக்கிறார்.

கென்னடி கிளப் அணியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இந்திய அளவில் சேரும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தேர்வாளர் முகேஷ் ரத்தோர் அந்த மாணவியிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்கிறார். இதனால் மனமுடையும் அந்த மாணவி தற்கொலைக்கு முயல்கிறார். மற்ற மாணவிகளின் பெற்றோரும் கபடி வேண்டாம் எனக்கூறி தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்கின்றனர். கென்னடி கிளப் அணி ஆளில்லாமல் போகிறது. கென்னடி கிளப்பை மீண்டும் உயிர்ப்பிக்க செய்யும் சசிகுமார் எடுக்கும் முயற்சிகளும், ஊழல் அதிகாரிக்கு எதிராக அவர் நடத்தும் தர்மயுத்தமும் தான் மீதிப்படம்.


[Image: kennedy-club-334445-1566477117.jpg]

விளையாட்டு படங்கள் அனைத்துக்கும் ஒரே டெம்ப்ளேட் தான். கென்னடி கிளப்பும் அதில் இருந்து வித்தியாசப்படவில்லை. ஆனால் உண்மையான கபடி வீராங்கனைகள் களத்தில் இருந்து, இரண்டரை மணி நேரத்திற்கு கபடி போட்டி நடத்தி காட்டியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். தனது முதல் படமான வெண்ணிலா கபடி குழுவில் உள்ளூர் கபடியை காட்டிய காட்டிய சுசீ, கென்னடி கிளப்பில் தேசிய அளவிலான கபடி போட்டிகளை காண்பித்து சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார்.

திரையில் கபடி விளையாடுவது உண்மையான வீராங்கனைகள் என்பதால் எந்த போட்டியும் சினிமாவாக தெரியவில்லை. டிவியில் புரோ கபடி பார்த்த உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது தான் படத்தின் மிகப்பெரிய பிளஸ்.
ஆனால் மிக எளிதில் யூகிக்கக்கூடிய திரைக்கதை என்பதால், இது தான் நடக்கப்போகிறது என முன்னரே தெரிந்துவிடுகிறது. இறுதிச்சுற்று, கனா உள்பட ஏற்கனவே வெளிவந்த பல விளையாட்டு படங்களின் பாதிப்பு கென்னடி கிளப்பில் நிறையவே தெரிகிறது. வில்லன் கதாபாத்திரமும், சசிகுமாருடன் அவருக்கான மோதலும் கிட்டத்தட்ட இறுதிச்சுற்றையே நினைவுப்படுத்துகிறது.


[Image: kennady23232-1566477108.jpg]

க்ளைமாக்ஸ் காட்சியில் பாரதிராஜா பேசும் வசனங்கள் எல்லாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்து போரடித்து போன ஒன்று. அதுவும் எக்ஸ் மிலிட்டரிமேனான பாரதிராஜா இந்தி தெரியாமல் சசிகுமாரிடம் அர்த்தம் கேட்பதெல்லாம் லாஜிக் பிழையின் உச்சம். ஒட்டன்சத்திரத்தில் கென்னடி கிளப்பிற்காக கபடி விளையாடும் பெண்கள், தமிழ்நாட்டுக்காக தேசிய போட்டியில் கலந்துகொள்வது, ரயில்வே ஊழியரான சசிகுமார் அதற்கு கோச்சாக இருப்பது என ஒரு ஆளே உள்ளே நுழையும் அளவுக்கு லாஜிக் ஓட்டைகள் ஏராளம்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
படம் ஆரம்பிக்கும் போதே நேரடியாக கபடிக்குள் சென்றுவிடுகிறார் இயக்குனர். அதுவும் தங்களை கிண்டல் செய்த ஆண்களை கபடி விளையாடி துவம்சம் செய்யும் பெண்களின் ஆட்டம் செம மாஸ். இதை பார்த்ததும், "ஓ படம் சூப்பராக இருக்கும் போல " என நினைக்கும் போதே, சசிகுமார் எண்ட்ரியாகி, ரஜினி ஸ்டைலில் சண்டை எல்லாம் போட்டு, "அப்படி எல்லாம் தப்பு கணக்கு போடாதீங்க" என நமக்கும் சேர்த்து அடி போடுகிறார்.
மாவட்ட கபடி போட்டியில் தஞ்சாவூர் அணிக்கு செம பில்டப் கொடுத்துவிட்டு, அந்த அணியின் கோச்சாக சூரியை கொஸ்ட் ரோல் செய்ய வைத்திருப்பது எல்லாம் கடுப்பேற்றும் காமெடி. ஆனால் கபடி பெண் கலையரசியில் கவிதை காதலன் செம ஆறுதல். மொக்கையாக கவிதை சொல்லி இம்சித்தாலும், கடைசியில் சோலார் ஸ்டார் ராஜகுமாரனாக மாறி சிரிக்க வைக்கிறார்.
பலவீனமான திரைக்கதையுடன் கூடிய இந்த படத்தை தாங்கிப்பிடிப்பது இமானின் இசையும், கபடி கேர்ள்ஸ்சின் உழைப்பும் தான். 'கபடி கபடி' பாடல் பெண்களை ஊக்கப்படுத்தும் அர்த்தமுள்ள 'மகளிர் ஆந்தம்'.
கபடி வீராங்கனைகளாக நடித்துள்ள அனைத்து பெண்களும் இந்த படத்தின் நிஜ ஹீரோயின்ஸ். சசிகுமார், பாரதிராஜா எல்லாம் கெஸ்ட் ரோல் கணக்கு தான். வழக்கம் போல தன்னுடைய அமைதியான நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்கிறார் சசிகுமார். வயதான பயிற்சியாளராக, யதார்த்த மனிதராக தெரிகிறார் பாரதிராஜா.

குருதேவின் ஒளிப்பதிவை நிறையவே பாராட்டலாம். கபடி போட்டிகளை தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார். திரைக்கதை பலவீனமாக இருந்தாலும், தனது கட்ஸ்களால் விறுவிறுப்பாக்கி இருக்கிறார் எடிட்டர் ஆண்டனி.

ஏற்கனவே வந்த பல விளையாட்டு படங்களின் சாயல் இருந்தாலும், 'பெண்கள் கபடி' எனும் ஒன்றை சொல்லில் தனித்து நிற்கிறது கென்னடி கிளப்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஒரு வழியாக வெளியானது என்னை நோக்கி பாயும் தோட்டா ட்ரெய்லர்..!

[Image: ennai.png]

பல்வேறு தடைகளை தாண்டி ரசிகர்கள் படம் வருமா என்று எதிர்பர்த்து காத்திருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிசி இயக்குநராக இருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன் 2013 ஆம் ஆண்டு என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற திரைப்படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு 2016ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையில் ஏற்கனவே வெளியான  இத்திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே ஹிட் அடித்தது. இந்நிலையில் பாடல்கள் வெளியாகி வருடம் கடந்ததால் படம் எப்போதுதான் வரும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டு வந்தது.  

இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக தற்போது இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் படத்தின் வெளியிட்டு தேதி வெளியாகியுள்ளது. இதனை பார்த்து வரும் ரசிகர் இது கனவா நிஜமா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நயன்தாரா, நிவின்பாலி நடிப்பில் உருவான படத்தின் டீசர் வெளியானது!

[Image: nivinpauly.png]

நயன்தாரா, நிவின் பாலி நடிப்பில் உருவான "லவ் ஆக்‌ஷன் ட்ராமா" திரைப்படத்தின் டீசர் இணையதளங்களில் வெளியானது.
ஃபன்டாஸ்டிக் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நிவின்பாலி, நயன்தாரா ஆகியோர் முதன்முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் லவ் ஆக்‌ஷன் ட்ராமா. மலையாள நடிகர் தயன் சீனிவாசன் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த 2017ம் ஆண்டே வெளியானது. இப்படத்திற்கான எழுத்து வேலைகள் அந்த ஆண்டே முடிந்துவிட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது. நயன்தாரா, நிவின் பாலி ஆகியோர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்ததால் அவர்களது கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர். ஒருவழியாக படப்பிடிப்பு ஜூலை 2018ல் தொடங்கும் என்று தயாரிப்பாளர் அஜு வர்கீஸ் அறிவித்தார். 
அதன்படி இப்படத்திற்கான படப்பிடிப்பு ஜூலை 2018ல் தொடங்கியது. நிவின் பாலிக்கு வெற்றிப்படமாக அமைந்த  ஓம் சாந்தி ஓசானா திரைப்படத்தில், நிவின் பாலியுடன் நடித்த, இயக்குநருமான வினீத் ஸ்ரீனிவாசனும் இப்படத்தில் நடித்திருக்கிறார். வினித் ஸ்ரீனிவாசனின் தீரா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான தயன் ஸ்ரீனிவாசன் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல், ஆக்‌ஷன் திரைப்படமான லவ் ஆக்‌ஷன் ட்ராமா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியானது.


மலையாளத்தில் மட்டும் வெளியாகும் இத்திரைப்படம், தமிழகத்தில் ஏற்கனவே நிவின்பாலி மற்றும் நயன்தாரா ஆகியோருக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இளைஞர்களை வாவ் சொல்ல வைக்கும் ரம்யா பாண்டியனின் நியூ போட்டோஸ்...!

[Image: ramya-13-thumb.jpg][Image: ramya-13-thumb.jpg]

[/url]
ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்தப் படத்தைத் தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார்.


[Image: ramya-1-edit.jpg][Image: ramya-1-edit.jpg]

[url=http://twitter.com/share?text=%20%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%20%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9.&url=https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-actress-ramya-pandian-new-photos-goes-on-viral-msb-198427-page-2.html]
ரம்யா பாண்டியன் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: ramya-edit.jpg][Image: ramya-edit.jpg]

[/url]
ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது


[Image: ramya-2.jpg][Image: ramya-2.jpg]

[url=http://twitter.com/share?text=%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D:%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20@actress_ramyapandian/&url=https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-actress-ramya-pandian-new-photos-goes-on-viral-msb-198427-page-4.html]
போட்டோஸ்: இன்ஸ்டாகிராம் @actress_ramyapandian/
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: ramya-3.jpg][Image: ramya-4.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: ramya-5.jpg][Image: ramya-6.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: ramya-7.jpg][Image: ramya-9.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: ramya-11.jpg][Image: ramya-12.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: Bigg-Boss-Tamil-3-3-750x506.jpg]
பிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி!
Bigg Boss Tamil 3, Episode 63 Written Update: ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தன்னுடைய வெற்றி வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக மற்றவருக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில்...
first 5 lakhs viewed thread tamil
Like Reply






Bigg Boss Tamil 3 Episode 63: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 63-ம் நாளான நேற்று போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அறிவுரைகளை வழங்கினார் கமல். இது தனித்த நபருக்கான போட்டி. ஆனால் போட்டியாளர்களோ, அந்த மனநிலையில் இல்லாமல் இருக்கிறார்கள். பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் இங்கே தங்களுடைய தனிப்பட்ட அடையாளத்தை வெளிக்கொண்டு வராமல், குழு மனப்பான்மையில் இருப்பதாக, போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து, தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கமல். அதோடு ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தன்னுடைய வெற்றி வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக மற்றவருக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆரம்பத்திலிருந்தே தனித்துத் தெரிவது சேரன் மட்டும் தான் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
கமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை
“உங்களுடைய வெற்றிக்காக நீங்கள் பாடுபட வேண்டும். குறிப்பாக மற்ற நாட்டில் இருந்து வந்திருப்பவர்களுக்கு இந்த பொறுப்பு கூடுதலாக இருக்கிறது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்துவிட்டு, வெற்றியை குறிக்கோளாக கொண்டு விளையாட வேண்டும்” ஹவுஸ்மேட்ஸுக்கு நிறைய அறிவுரைகளை வழங்கினார் கமல்.
ஒவ்வொருவருடன் தனித்தனியாக பேசி விட்டு, லிவிங் ஏரியாவில் அனைவரிடமும் எப்போதும் போல பேசுகையில், “தன்னுடைய வழக்கு வரும் போது வழக்கறிஞராகி விடும் வனிதா, மற்றவர் பிரச்னை என்றால் நீதிபதியாகிவிடுகிறார்” என்று கமல் தெரிவிக்க, இதைக் கேட்டதும் பார்வையாளர்கள் வெடித்து சிரித்தனர்.
பின்னர் 2 காலர்கள் தர்ஷன் மற்றும் கவினிடம் பேசினர். குறிப்பாக கவினிடம் பேசிய அந்த நபர், நீங்கள் ஏன் எப்போதும் சாண்டியையே சார்ந்திருக்கிறீர்கள் எனக் கேட்டார். அவரை எனக்கு வெளியிலும் தெரியும், என் மீது ரொம்ப அன்பு கொண்டவர் என சொல்லி மழுப்பினார் கவின். முன்னதாக போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்கள் குறித்துப் பேசியிருந்தனர். அந்த ஆசிரியர்கள் போட்டியாளர்களைப் பற்றி (தத்தம் மாணவர்களை) பேசிய குரல் பதிவு சர்ப்ரைஸாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. இது அங்கு ஒருவித நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கஸ்தூரியின் மகனும், மகளும் போனில் பேசியதை கேட்டவுடன், தன்னை வெளியே விட்டு விடும் படி  கஸ்தூரி அழுதது கண்ணீரை வரவழைத்தது. இறுதியாக பேசிய கே.எஸ். ரவிக்குமார், சேரனைப் பற்றி பல நல்ல விஷயங்களையும், மற்ற போட்டியாளர்களுக்கு தமது வாழ்த்துகளையும் தெரிவித்தார். அவருக்கு கமல் ஹாசன் தனது நன்றியை தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து நிகிழ்ச்சியில் எலிமினேஷன் நேரம் வந்தது. இதில் கஸ்தூரி வெளியேற்றப்படுவதாக அறிவித்தார் கமல். போட்டியாளர்களிடம் பிரியா விடை கொடுத்த போது கவினிடம் பேசிய அவர், கூடிய விரைவில் அவரை வெளியில் சந்திப்பதாகக் கூறி நக்கல் அடித்தார்.
வெளியில் வந்த கஸ்தூரி அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்துப் பேசினார். அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை கூறிக் கொண்ட அவர், தனிப்பட்ட முறையில் முகினின் வெற்றியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர், கஸ்தூரிக்கு ‘சீக்ரெட் ரூம்’ வாய்ப்பை வழங்கினார் கமல். ஆனால் அதை ஏற்க மறுத்த கஸ்தூரி, தன்னுடைய குழந்தைகளின் குரலை கேட்ட பின்பு பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்க முடியாது என அந்த வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இறுதியாக பேசிய கமல் ஹாசன், ”பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்‌ஷன் நடைமுறை கிடையாது. ஆனால் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு இது தெரியாது” என்றார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 65 Guest(s)