Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அத்தியாயம் 29
அன்று மாலை ஐந்து மணி.. கிழக்கு கடற்கரை சாலையில் சோழிங்கநல்லூர் அருகே அமைந்திருக்கிற ISKCON ராதாகிருஷ்ணா திருக்கோயில்..!! வழக்கத்தைவிட அதிகமாகவே கோவில் வளாகத்துக்குள் கூட்டம் நிரம்பி வழிந்தது..!! ஆடல்கோலத்தில் அழகுற வீற்றிருக்கும் ராதையையும் கிருஷ்ணனையும் தரிசிக்க.. ஆலயத்தின் வாயிலிலிருந்தே பக்தர்கள் நெருக்கியடித்தவாறு வரிசையில் நின்றிருந்தனர்..!! கோயிலின் சின்னஞ்சிறு மூலை முடுக்குகளில் கூட.. ஒரேயொரு மந்திரம் மட்டும் தெய்வீகமாக ஒலித்துக்கொண்டே இருந்தது..!!
"ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா..
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே..!!
ஹரே ராமா ஹரே ராமா..
ராமா ராமா ஹரே ஹரே..!!"
அசோக்கும் பாரதியும் அப்போதுதான் தரிசனம் முடித்துவிட்டிருந்தனர்.. மார்பிள் பதிக்கப்பட்ட தரையில் அமர்ந்து தற்போது இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.. அவர்களுக்கு அருகிலேயே வாழைப்பழங்கள் எட்டிப்பார்க்கிற அர்ச்சனை பாத்திரம்..!! இருவரது கையிலும் இலையால் வேயப்பட்ட ஒரு கிண்ணம்.. அதில் நெய்யின் செறிவு நிறைந்து போயிருந்த பருப்புசாத பிரசாதம்..!! இருவருமே ஏதோ யோசனையாய் இருந்தனர்.. அவ்வப்போது பிரசாதத்தை விண்டு வாயில் போட்டுக் கொண்டனர்..!!
இரண்டு நாட்களாக நடந்த விஷயங்களை எல்லாம்.. ஒன்று கூட ஒளிவு மறைவு இல்லாமல்.. அசோக் தன் அம்மாவிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டிருந்தான்..!! மீராவுக்கு நடந்திருந்த கொடுமையையும்.. அசோக்கின் கவலையான மனநிலையையும்.. அவர்களது காதலுக்கு தற்போது ஏற்பட்டிருக்கிற சிக்கலையும்.. பாரதி நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள்..!! ஆறுதல் வார்த்தைகளை சொல்லி.. நேற்றே மகனை தேற்றியும் வைத்திருந்தாள்..!!
இந்தமாதிரி கோயிலுக்கு வருவதெல்லாம் அசோக்கின் வழக்கம் கிடையாது.. இன்று ஏனோ அம்மா அழைத்தபோது அவனால் மறுக்க இயலவில்லை..!! கவலையும் குழப்பமும் அவனுடைய மனதில் நிறைந்து போயிருக்க.. கடவுளின் சந்நிதானத்தில் அதற்கான நிம்மதி கிடைக்கும் என்று நினைத்தானோ என்னவோ..!! கவலைக்கு காரணம் மீராவை தேடிக்கண்டுபிடிக்க முடியுமா முடியாதா என்பது.. குழப்பத்திற்கு காரணம் இரண்டு நாட்களாய் அவன் செய்த வேலைகள் எல்லாம் சரியா தவறா என்பது..!! அரிக்கிற குழப்பத்தை அடக்க முடியாமல்.. அசோக் இப்போது அம்மாவிடம் மெலிதான குரலில் சொன்னான்..!!
"நான் பண்றதெல்லாம் சரிதானான்னு சந்தேகமா இருக்கு மம்மி..!!"
"எ..எதை சொல்ற..??" பாரதி மகனின் பக்கமாய் முகத்தை திருப்பி கேட்டாள்.
"அதான் மம்மி.. அந்த பென்டன்ட்டை மறைச்சது.. எஸ்.பி ஸாரை பேச விடாம தடுத்தது.. போலீஸ்ட்ட பொய் சொன்னது..!!"
"ம்ம்.. அதுல என்ன சந்தேகம் உனக்கு..?? நீ செஞ்சதுல எந்த தப்பும் இல்ல அசோக்.. எல்லாம் சரிதான்..!!"
"இல்ல மம்மி.. நம்ம வசதிக்காக சட்டத்தை ஏமாத்துறது தப்பு இல்லையா..?? நமக்கு வேணா மீரா நல்லவளா தெரியலாம்.. ஆனா.. சட்டத்தோட பார்வைல அவ குற்றவாளிதான..??"
அசோக் அவ்வாறு கேட்கவும்.. பாரதி மகனின் கண்களையே கூர்மையாக ஒரு பார்வை பார்த்தாள்..!! அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல்.. சிலவினாடிகள் அமைதியாக இருந்தாள்..!! பிறகு ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தியவள்.. அந்த பேச்சை மாற்றும் விதமாக அவனிடம் கேட்டாள்..!!
"அந்த பையனோட செல்ஃபோனை மீரா தூக்கிட்டு போயிட்டான்னு சொன்னேல..??"
"ம்ம்.. ஆமாம்..!!"
"அதை ஏன் அவ எடுத்துட்டு போனான்னு ஏதாவது யோசிச்சியா..??"
"யோசிச்சேன் மம்மி.. பட்.. எதுவும் புரியல..!!"
"ப்ச்.. என்னடா நீ.. இந்தக் காலத்து புள்ளையா இருந்துட்டு இப்படி சொல்ற..?? டெயிலி ந்யூஸ் பேப்பர்லாம் படிக்கிறியா, இல்லையா..?? 'செல்ஃபோனில் படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டல்..' னு எத்தனை ந்யூஸ் வருது..!!" பாரதி சொல்ல வருவது, இப்போது அசோக்கிற்கு புரிய ஆரம்பிக்க,
"................" அவன் அம்மாவையே யோசனையாக பார்த்தான்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 3,160
Threads: 0
Likes Received: 346 in 315 posts
Likes Given: 1,312
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
"மீராவை லவ் பண்ற மாதிரி நடிச்சு அவன் ஏமாத்திருக்கான்னு சொல்ற.. அமெரிக்கா போனவன் ரெண்டு நாள் முன்னாடிதான் இந்தியா வந்தான்னு சொல்ற.. வந்த ரெண்டாவது நாளே இப்படி நடந்திருக்கு..!! ஏமாத்திட்டு ஓடிப்போனவன் இந்தியா வந்தது இவளுக்கு எப்படி தெரியும்..?? நிச்சயமா அவன்தான் இவளை ஃபோன் பண்ணி வரவச்சிருக்கணும்..!! ரெண்டு பேரை இப்படி கொலை பண்ணி போட்ருக்கான்னா.. அவ்வளவு வெறி வர்ற அளவுக்கு அவனுக அவளை என்ன டார்ச்சர் பண்ணிருக்கணும்..?? அந்த செல்ஃபோனை கரெக்டா எடுத்துட்டு போயிருக்கான்னா.. அதுல ஏதோ விஷயம் இருக்கனுமா இல்லையா..??"
"இ..இருக்கணும் மம்மி..!!"
"கண்டிப்பா இருக்கணும்..!! அவளை அசிங்கமா படம் எடுத்து வச்சுட்டு அவங்க மிரட்டிருக்கனும்.. அதான் அவனுகள கொன்னுபோட்டுட்டு அந்த செல்ஃபோனை எடுத்துட்டு ஓடிருக்கா..!!"
"ம்ம்.. எனக்கும் அப்படித்தான் தோணுது..!!"
"சட்டம் வேற, தர்மம் வேற அசோக்.. சரி தப்புன்றதும் ரெண்டுக்கும் வேற வேற..!!" மகன் முதலில் கேட்ட கேள்விக்கு, பாரதி இப்போது திடீரென வந்தாள்.
"எ..என்ன மம்மி சொல்ற..??" சுருங்கிய புருவத்துடன் அசோக் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
"பொண்ணுகளை கிள்ளுக்கீரையா, வெளையாட்டு பொம்மையா, வெறும் போகப்பொருளா நெனைக்கிற ரெண்டு அரக்கனுகளை கொன்னது.. சட்டத்துக்கு வேணா தப்பா தெரியலாம் அசோக்.. ஆனா தர்மப்படி அது தப்பே இல்லடா..!!" தீர்க்கமான குரலில் சொன்ன அம்மாவை, அசோக் திகைப்பாக பார்த்தான்.
"மம்மி.."
"சட்டம்ன்றது மனுஷங்களா வச்சுக்கிட்டதுதான்டா மகனே..!! ஆனா.. தர்மம்ன்றது அந்த ஆண்டவன் விதிச்சது..!! காலகட்டத்துக்கு தகுந்த மாதிரி சட்டதிட்டம் மாறும்.. தர்மம் எப்போவும் மாறாது..!! உலகம் பொறந்த நாள்ல இருந்து தர்மம்ன்றது எப்போவும் ஒண்ணுதான்..!!"
"................"
"அதர்மம் தலை எடுக்குறப்போலாம் நானே அவதாரம் எடுத்து வருவேன்னு.. கீதைல கிருஷ்ண பரமாத்மா சொல்லிருக்காரு..!! மீரா ரெண்டு அரக்கனுகளை கொன்னுருக்கான்னா.. அவளை ஏன் நாம ஒரு அவதார பொறப்பா நெனைக்க கூடாது..??"
"................"
"அந்த ஆண்டவனோட சன்னிதானத்துல இருந்துதான் இதை சொல்றேன் அசோக்.. சொல்றப்போ எனக்கு கொஞ்சம் கூட மனசு உறுத்தல..!!"
அம்மா சொல்ல.. அசோக் இப்போது சற்றே தலையை திருப்பி பின்னால் பார்த்தான்.. தூரத்தில் புல்லாங்குழலுடன் சிரித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கண்ணில் பட்டார்..!! விஜயசாரதியின் வீட்டில் பார்த்த ரத்தத்தில் தோய்ந்த கிருஷ்ணனின் சிலை இப்போது அவனுடைய நினைவுக்கு வர.. மனதில் இருக்கிற குழப்பம் மெல்ல விலகுவது போல ஒரு உணர்வு..!! கூடவே.. விஜயசாரதி என்கிற பெயர் கூட கிருஷ்ணனைத்தான் குறிக்கும் என்கிற யோசனையும் வர.. அவனது உதட்டில் மெலிதான ஒரு புன்னகை பரவியது..!!
பாரதி தோடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்..!!
"நம்ம கைல எதுவும் இல்ல அசோக்.. நடக்குறதுக்குலாம் ஏதோ காரணம் இருக்கு..!! அந்த நேரத்துக்கு நீ எதுக்கு சரியா அந்த எடத்துக்கு போகணும்..?? அந்த பெண்டன்ட் எதுக்கு கரெக்டா உன் கண்ணுல மட்டும் படணும்..?? அந்த எஸ்.பிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.. அவர் எதுக்கு உனக்கு ஹெல்ப் பண்ணனும்.. மீரா பத்தின விஷயத்தை போலீஸ்ட்ட இருந்து அவர் மறைக்கணும்..?? நல்லா யோசிச்சு பாரு.. எல்லாத்துக்கு ஏதோ காரணம் இருக்குற மாதிரி தெரியல..??"
"ம்ம்..!!"
"மீராவுக்கு தண்டனை கெடைக்கனுமா இல்லையான்றத முடிவு பண்ண வேண்டியது நீயோ, நானோ, போலீஸோ இல்லடா.. அந்த ஆண்டவன்..!! தேவையில்லாததை எல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காம.. அடுத்து என்ன பண்றதுன்னு யோசி..!! போலீஸ் உதவி இல்லாம மீராவை எப்படி கண்டு பிடிக்கிறதுன்னு எதாச்சும் யோசிச்சியா..??"
அம்மா பேசிய வார்த்தைகளில் பொதிந்திருந்த அர்த்தத்தினை தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த அசோக்.. பாரதி அந்த மாதிரி கேட்டதும் அந்த யோசனையில் இருந்து விடுபட்டான்..!! பதிலேதும் சொல்லாமல் அம்மாவின் முகத்தையே அமைதியாக பார்த்தான்..!! நேற்று இரவு.. கொலையான வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்பு.. கே.கே.மூர்த்தியின் பி.ஏவை தனியாக அழைத்து.. அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தது, இப்போது அவனது நினைவுக்கு வந்தது..!! கேஷுவலாக சில கேள்விகளை கேட்டு.. விஜயசாரதியை பற்றி சில விஷயங்களை.. அவர் மூலம் அறிந்து கொண்டிருந்தான் அசோக்..!!
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 3,160
Threads: 0
Likes Received: 346 in 315 posts
Likes Given: 1,312
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
"இல்ல.. ஸ்கூல் மட்டுந்தான் சென்னைல படிச்சாரு.. டிக்ரி படிச்சதுலாம் ஹைதராபாத்ல..!!" அவர் அந்த மாதிரி சொன்னதும் அசோக்கிற்கு சுருக்கென்று இருந்தது.
"பொறந்தது காரைக்குடில.. செட்டிலானது சென்னைல.. படிச்சது ஹைதராபாத்ல..!!" என்று மீரா எப்போதோ சொன்னது திடீரென ஞாபகத்துக்கு வந்தது.
மீரா ஹைதராபாத்தில்தான் படித்திருப்பாள் என்று ஆரம்பத்தில் அவன் நம்பியிருந்தான். அவள் சரளமாக தெலுங்கு பேசியதும் அவனது நம்பிக்கைக்கு வலு சேர்த்திருந்தது. பிறகு ஃபுட்கோர்ட் விளம்பர போர்டை பார்த்ததும், அது பொய்யென்று நினைத்தான். இப்போது கே.கே.மூர்த்தியின் பி.ஏ இப்படி சொன்னதும், மீண்டும் 'மீராவும் ஹைதராபாத்தில்தான் படித்திருப்பாளோ.. அங்குதான் அவளுக்கும் இந்த விஜயசாரதிக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்குமோ..?' என்கிற ரீதியில் அவனுக்குள் எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன.
"நீ உண்மைன்னு நெனச்சது எல்லாம் பொய்யா போச்சுன்னு சொன்னல..?? அப்படினா.. நீ பொய்னு நெனைக்கிற விஷயம் எதாவது ஏன் உண்மையா இருக்க கூடாது..??"
கிஷோரின் அக்கா பவானி சொன்னது வேறு மூளையில் பளிச்சிட, அவன் மேலும் குழம்பிப் போனான். அவனுடைய புத்தி மெல்ல மெல்ல, தவறான புரிதலின் ஆழத்துக்கு செல்ல ஆரம்பித்தது. அந்த தவறான புரிதலுடன்தான்..
"மீரா டிக்ரி படிச்சது ஹைதராபாத்தா இருக்கும்னு நெனைக்கிறேன் மம்மி..!!" என்று இப்போது பாரதியிடம் சொன்னான்.
"ஓ.. எப்படி சொல்ற..??"
அசோக் தனது அனுமானத்தை அம்மாவிடம் விளக்கி கூறினான்.. கே.கே.மூர்த்தியின் பி.ஏவிடம் பேசியது பற்றி.. மீரா முன்பு தன்னிடம் குறிப்பிட்டது பற்றி.. எல்லாம் அவளிடம் பொறுமையாக எடுத்துரைத்தான்..!!
"ரெண்டு பேரும் ஒரே காலேஜ்லதான் படிச்சிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.. அங்கதான் அவங்க ரெண்டு பேருக்கும் பழக்கம் ஆகிருக்கணும்..!! அந்த காலேஜ்ல போய் விசாரிச்சா.. கண்டிப்பா மீரா பத்தி ஏதாவது லீட் கெடைக்கும் மம்மி..!!"
"ஹ்ம்ம்.. அந்த காலேஜ் பேரு, அந்தப் பையன் எந்த வருஷம் படிச்சு முடிச்சான்.. அதுலாம் அவர்ட்ட விசாரிச்சியா..??"
"ம்ம்.. எல்லாம் விசாரிச்சு வச்சிருக்கேன்..!!"
"அப்புறம் என்னடா.. உடனே கெளம்ப வேண்டியதுதான.. இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..??"
"இன்னைக்கு நைட் கெளம்புறேன் மம்மி.. கிஷோரும் கூட வர்றேன்னு சொல்லிருக்கான்..!!"
"ம்ம்.. நல்லது..!! உடனே கெளம்பு.. அந்த காலேஜ்ல போய் விசாரி.. ஏதாவது தகவல் கெடைக்கும்.. எல்லாம் நல்லபடியா நடக்கும்..!!"
"மீரா எனக்கு கெடைப்பாளா மம்மி..??" அசோக் திடீரென அந்த மாதிரி ஏக்கமாக கேட்கவும், பாரதி புன்னகைத்தாள்.
"போடா.. போய் தேடு..!! தேடுனாத்தான் எதுவும் கெடைக்கும்.. தட்டினாத்தான் எதுவும் திறக்கும்..!!" நம்பிக்கையாக சொல்லிவிட்டு, மகனின் தலைமுடியை கோதிவிட்டாள்.
அன்று இரவே அசோக்கும் கிஷோரும் ஜெட் ஏர்வேஸில் ஹைதராபாத் கிளம்பினார்கள்.. ஒரு மணி நேர பயணத்தின்பின் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் வந்து இறங்கினார்கள்.. பஞ்சாரா ஹில்ஸ் சென்று, அவர்களது கல்லூரி நண்பன் பரணியின் வாடகை வீட்டு காலிங்பெல்லை அழுத்தினார்கள்..!! தெலுங்கு திரைப்பட இயக்குனர் பூரி ஜகன்னாத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறான் பரணி..!!
"இதுதான் மச்சி என் பேரு..!!"
சமீபத்தில் பூரி ஜகன்னாத் இயக்கி ஹிட்டடித்த ஒரு தெலுங்கு படத்தின் டைட்டில் கார்டில்.. அடுக்கடுக்காக காணப்பட்ட ஜாங்கிரி வரிசையில்.. நான்காவது வரியை சுட்டிக்காட்டி பல்லிளித்த பரணியை.. அசோக்கும் கிஷோரும் வெறுப்புடன் பார்த்தார்கள்..!!
"கூடிய சீக்கிரம் தமிழ்ல என் பேரு வரும்டா.. அதுவும் தனியா..!!"
கான்ஃபிடன்ட்டாக சொன்ன பரணியை கடுப்புடன் முறைத்தவாறே.. அவன் வாங்கிவைத்திருந்த ஹைதராபாத்தி சிக்கனை எடுத்து கடித்தார்கள்..!! இவர்கள் விழித்திருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையில்.. பரணி தனது டாலிவுட் அனுபவங்களை சொல்லிக்கொண்டிருக்க.. இருட்டுக்குள் அவனை தனியாக புலம்பவிட்டு.. இவர்கள் குறட்டை இல்லாமல் உறங்கினார்கள்..!!
அடுத்தநாள் காலையே அசோக்கும், கிஷோரும் இப்ராஹிம் பாக்கில் இருக்கும் வாசவி இஞ்சினியரிங் கல்லூரிக்கு சென்றார்கள்..!! எப்படி ஆரம்பிப்பது என்றே இருவருக்கும் ஆரம்பத்தில் படுகுழப்பம்..!! விஜயசாரதி கொலையாகியிருந்த விஷயம் அவனது கல்லூரிக்கு இன்னும் பரவியிருக்கவில்லை.. இவர்களும் அந்த விஷயத்தை யாருக்கும் தெரிவிக்கவில்லை..!! கல்லூரி பேராசிரியர்கள் சிலரை சந்தித்து பேசினார்கள்.. விஜயசாரதி அந்த கல்லூரியில் படித்து முடித்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன.. நிறைய பேராசிரியர்கள் மாறியிருந்தனர்.. ஒருசில பழையவர்கள் விஜயசாரதியை நினைவு கூர்ந்தாலும், 'ரோக்' என்று அவனை திட்டியதை தவிர, அவர்களால் உருப்படியான தகவல் எதையும் தர முடியவில்லை..!!
பிறகு.. கல்லூரிக்கு வெளியே இருந்த பெட்டிக்கடையில்.. காசில்லாமல் சிகரெட் மறுக்கப்பட்ட அவனை பிடித்தனர்.. அந்த கல்லூரியில் ஆபீஸ் அசிஸ்டன்டாக பணிபுரிபவன்..!! அவனிடம் சில கரன்ஸிகளை அள்ளி தெளித்து.. அவன் மூலமாக அந்தக் கல்லூரியில் அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் படித்த மாணவர்களின் தகவல்களை ஒரு குறுந்தட்டில் கிடைக்கப் பெற்றனர்..!! மாணவர்களுடைய புகைப்படங்களும் அந்த குறுந்தகட்டில் இடம்பெற்றிருந்தன..!!
அந்த புகைப்படங்களை கவனமாக ஆராய்ந்து.. விஜயசாரதி அந்த கல்லூரியில் பயின்ற காலத்தில் மீரா அங்கு பயிலவில்லை என்ற உண்மையை கண்டறிந்தனர்..!! 'சரி.. ஹைதராபாத்திலேயே வேறு கல்லூரியாக இருக்கும்..' என்று மீண்டும் ஒரு தவறான நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டனர்..!! குறுந்தகட்டில் கிடைத்த தகவல் மூலம்.. ஹைதராபாத்தில் விஜயசாரதி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று முதலில் விசாரித்தனர்..!!
அவர்கள் மூலம் இன்னொருவர்.. அவர் மூலம் வேறொருவர்.. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம்.. அந்த இடத்திலிருந்து அடுத்த இடம் என்று.. அவர்களது விசாரணை அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்துகொண்டே இருந்தது..!! விஜயசாரதியின் புகைப்படத்தை காட்டி அவனை நினைவுறுத்துவது.. பிறகு மீராவின் அடையாளங்களை சொல்லி அந்த மாதிரி யாராவது ஒரு பெண்ணை அந்த விஜயசாரதி காதலித்தானா என கேட்பது.. என்கிற மாதிரிதான் அவர்களது விசாரணை பொதுவாக அமைந்திருந்தது..!!
விஜயசாரதியை பற்றி விசாரிக்க விசாரிக்க.. அவனது தீய குணங்களும், கெட்ட சகவாசங்களும்.. மேலும் மேலும் அவர்களுக்கு தெரியவந்தன..!!
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பேகும்பேட்டில் ஒரு விபச்சார விடுதி..
"இவளுக எல்லாம் அவன் காதலிச்சவளுகதான்.. ஒவ்வொருநா ராத்திரிக்கும் ஒவ்வொருத்தி..!!" - தன்னிடமிருந்த பெண்களை கைகாட்டி பேசினாள், அந்த விடுதியின் தலைவி.
ஹைடெக் சிட்டியில் ஒரு பார்..
"என்ன ஸார்.. விஜயோட ஃப்ரண்டுன்றீங்க.. டோப் இருக்கானு கேட்டா இல்லைன்றீங்க..??" - மிதமிஞ்சிய போதையில் வாய்குழற சொன்னான், விஜயசாரதியுடன் கல்லூரியில் படித்த ஒருவன்.
துமுகுன்ட்டாவில் ஒரு சேரிப்பகுதி..
"அவன்ட்ட சொல்லி வைங்க.. என்னைக்கா இருந்தாலும் என் கையாலதான் அவனுக்கு சாவு.. அண்ணா அடுத்த மாசம் வெளில வர்றாரு..!!" - விஜயசாரதி இறந்துபோன விஷயம் தெரியாமல் கறுவினான், ஒற்றை கையை இழந்துபோயிருந்த ஒரு ரவுடி.
எர்ரகடாவில் ஒரு ஓபன் கார்டன் ரெஸ்டாரன்ட்..
"அதெல்லாம் ஒரு கனவா நெனச்சு மறந்துட்டு.. இப்போ நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன் ஸார்..!! தயவு செஞ்சு.. என் வீட்டுக்காரர்ட்ட மட்டும் இந்த விஷயத்தை சொல்லிடாதிங்க.. உங்களை கையெடுத்து கும்பிடுறேன்..!!" - கையில் ஒருவயது குழந்தையுடன் கெஞ்சினாள், விஜயசாரதியிடம் காதலென்ற பெயரில் கற்பிழந்த இன்னுமொரு பெண்.
அசோக் ஹைதராபாத்தில் விஜயசாரதி பற்றி விசாரித்து அலைந்து கொண்டிருந்த சமயத்தில்.. மீரா சென்னையில் வளைகுடா பயணத்தின் விசா பிரச்சினைக்கு அலைந்து கொண்டிருந்தாள்..!! வேலைக்கு ஏற்பாடு செய்திருந்த கன்சல்டன்ஸிக்கு சென்று மேனஜரை சந்தித்து பேசினாள்.. வெளிநாட்டில் தான் தங்குவதற்கான ஏற்பாட்டை பற்றி விவாதித்தாள்..!! முதல் மாச சம்பளம் வரும்வரை செலவுக்கு தேவையென.. தனது செயின், ப்ரேஸ்லட்டை எல்லாம் விற்று காசாக்கினாள்..!! அந்தக்காசின் கணிசமான தொகையை.. ஐயாயிரம் சவூதி ரியாலாக மாற்றி.. தனது ஹேண்ட் பேகுக்குள் திணித்தாள்..!!
"எந்த நாட்டுக்கு போறேன்னு கூட சொல்ல மாட்டியா..??" கேட்ட மனோகரிடம்,
"எனக்கு சொல்ல விருப்பம் இல்ல..!! இன்னும் ரெண்டே நாள்.. அப்புறம் நீங்க யாரோ நான் யாரோ..!!" என்று வெடுக்கென சொன்னாள்.
"ஹ்ம்ம்.. எதுக்கு இந்த கஷ்டம்லாம்..?? இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல.. நீ மட்டும் கொஞ்சம் உன் பிடிவாதத்தை விட்டுட்டேன்னு வச்சுக்கோ.. ராணி மாதிரி வாழலாம்..!!" பல்லிளித்தவனிடம்,
"செருப்பு பிஞ்சுடும்..!!!!" கண்களில் கோபக்கனலுடன் எச்சரித்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பே.. வெளிநாட்டு பயணத்திற்கான பேக்கிங் வேலைகளை ஆரம்பித்திருந்தாள்.. ஒரு பெரிய பெட்டியில் தனது உடைகளை எல்லாம் அடுக்கி வைத்தாள்.. மறவாமல் அந்த உடைகளுக்கு நடுவே அசோக்கின் புகைப்படத்தை செருகினாள்..!!
இன்னொரு பக்கம்.. கொலையாளியை கண்டுபிடிக்கிற முயற்சியில் மலரவன் மிகத் தீவிரமாக இறங்கியிருந்தார்..!! உயர் அதிகாரியிடம் டெலிஃபோனில் பேசியவர்.. 'கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சுடுவேன் ஸார்' என்று நம்பிக்கையாக சொன்னார்..!! கொலை நடந்த இடத்தில் கிடைத்த கைரேகை பிரதிகளை கவனமாக ஆராய்ந்தார்.. பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஒரு வரி விடாமல் கூர்ந்து வாசித்தார்..!! விஜயசாரதியிடமும், காசியிடமும் சமீபகாலமாக மொபைலில் பேசியவர்களை ஒவ்வொருவராக விசாரித்து முடித்தார்..!! தண்டையார்பேட்டை ஸ்லம் ஏரியாவில்.. சேறு நிறைந்த ஒரு சாலையில் நடந்து சென்று.. ஒருவாரம் முன்பு ஜெயிலில் இருந்து ரிலீசான ஒரு ரவுடியின் வீட்டு கதவை தட்டினார்..!! ஒரு நாளுக்கு நான்கு மணி நேரங்கள் மட்டுமே ஓய்வெடுத்துக்கொண்டு.. மிச்ச நேரங்களில் தனது ஜீப்பில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்..!!
மூன்று நாட்கள் ஹைதராபாத்தில் கழித்துவிட்டு.. நான்காம் நாள் காலை.. அசோக் வெறுங்கையுடன் சென்னை திரும்பினான்..!! மீராவும் அன்று மாலை வெளிநாட்டுப் பயணத்திற்கு தன்வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தாள்..!! மூன்று நாட்கள் அலைச்சல்.. திரும்ப வருகையில் ரயில் பயணம்.. களைப்படைந்து போயிருந்தான் அசோக்.. வந்ததுமே தனது அறைக்கு சென்று படுக்கையில் வீழ்ந்தவன்.. அடித்துப் போட்டாற்போல உறங்கிப் போனான்..!!
மகன் தூங்கட்டும் என்று விட்டுவிட்டிருந்த பாரதி.. மதியம் ஆனதும் ஒரு காபியுடன் சென்று அவனை எழுப்பினாள்..!! பல்துலக்கிவிட்டு அந்த காபியை அவன் உறிஞ்ச.. அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தவள், மெல்ல ஆரம்பித்தாள்..!!
"என்னடா.. என்னாச்சு.. உபயோகமா ஏதாவது தெரிஞ்சதா..??"
அம்மா கேட்கவும், ஹைதராபாத்தில் நடந்த விஷயங்களை அசோக் சுருக்கமாக அவளுக்கு எடுத்துரைத்தான். அவன் சொன்னதை எல்லாம் அவளும் கவனமாக கேட்டுக் கொண்டாள்.
"அவன் ஏமாத்தின இன்னும் ரெண்டு மூணு பொண்ணுகளை பத்தித்தான் தகவல் கெடைச்சது மம்மி.. மீரா பத்தி எந்த தகவலும் கெடைக்கல..!!"
"ம்ம்.. அப்போ அலைச்சல்தான் மிச்சமா..??"
"அப்படியும் சொல்லிட முடியாது..!! அந்த விஜயசாரதி பத்தி நெறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது..!! அப்புறம்.. இங்க சென்னைல அவனோட க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சது.. அவங்களுக்கு கண்டிப்பா மீரா பத்தி தெரிஞ்சிருக்கும்னு நம்புறேன்.. அவங்களை பத்தின டீடெயில் கலக்ட் பண்ணிட்டு வந்திருக்கேன்..!! ஆனா.. இப்போ உடனே அவங்களை போய் விசாரிக்க முடியாது.. கொலை நடந்திருக்குற இந்த சமயத்துல நான் போய் விசாரிச்சா.. தேவையில்லாத சந்தேகம் வரும்..!! அதனால.. இதை கொஞ்சநாள் ஆறப்போட்டு.. அப்புறம் அவங்களை விசாரிக்கலாம்னு நெனைச்சிருக்கேன்..!! அதுவரை மீராவுக்கு மட்டும் எதுவும் ஆகிடக்கூடாது மம்மி..!!" அசோக் கவலையாக சொல்ல,
"ஹ்ம்ம்.. அவளுக்கு எதுவும் ஆகாது.. நீ தேவையில்லாம கவலைப்படாத..!! அவ கண்டிப்பா உனக்கு கெடைப்பா.. நீங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் சேர்ந்து வாழப் போறீங்க.. அம்மாவுக்கு அதுல எந்த சந்தேகமும் இல்ல..!!" பாரதி அவனுக்கு நம்பிக்கையூட்டினாள்.
"தேங்க்ஸ் மம்மி..!!"
"அம்மா கீழ போறேன்டா.. இன்னும் அரைமணி நேரத்துல சாப்பாடு ரெடியாயிடும்..!! காலைல வேற நீ சாப்பிடல.. குளிச்சுட்டு கீழ வா.. மொதல்ல வந்து நல்லா வயிறாற சாப்பிடு.. என்ன பண்ணலாம்னு அப்புறமா யோசிச்சுக்கலாம்..!! சரியா..??" சொல்லிவிட்டு பாரதி அந்த அறையினின்று வெளியேறினாள்.
குளித்து முடித்து வேறு உடை மாற்றி கீழே செல்ல.. அசோக் முழுதாக ஒருமணி நேரம் எடுத்துக் கொண்டான்..!! படியிறங்கி கீழே வந்தவன், நேராக ஹாலுக்குத்தான் சென்றான்..!! ஹாலில் இருந்த டிவியில் ஜஸ்டின் டிம்பர்லேக் அலறிக்கொண்டிருந்தார்..!!
"Aren't you something to admire..?
'Cause your shine is something like a mirror..!!"
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 3,160
Threads: 0
Likes Received: 346 in 315 posts
Likes Given: 1,312
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
டிவிக்கு முன்னால் கிடந்த சோபாவில் சங்கீதா அமர்ந்திருந்தாள்.. ஆனால் டிவியில் ஓடிய பாடலுக்கு காதுகொடாமல்.. கையில் விரித்து வைத்திருந்த ஒரு புத்தகத்தில் தன் கவனத்தை செலுத்தியிருந்தாள்..!! அசோக் வந்ததும் புத்தகத்திலிருந்து முகத்தை திருப்பி.. அண்ணனை ஏறிட்டு புன்னகைத்தாள்..!! அசோக்கும் பதிலுக்கு புன்னகைத்து.. அவளுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான்..!! சங்கீதா உடனே ரிமோட்டை எட்டி எடுத்து சேனல் மாற்றினாள்.. ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டு சென்றவள்.. ஒரு சேனலில் விளம்பரம் ஓடியதை பார்த்ததும்.. அதிலேயே வைத்துவிட்டு அசோக்கிடம் திரும்பி கேலியாக சொன்னாள்..!!
"ஹ்ம்ம்.. நீங்கதான் டிவில அட்வர்டைஸ்மன்ட் மட்டுந்தான பார்ப்பிங்க.. பாருங்க..!!"
"ஹஹா.. லூஸு..!!"
தங்கையின் கிண்டலுக்கு அசோக் மெலிதாக சிரித்தான்..!! அவளும் சிரித்துவிட்டு மீண்டும் புத்தகம் வாசிக்க ஆரம்பிக்க.. இவன் டிவியை பார்க்காமல்.. டீப்பாயில் இருந்த செய்தித்தாளை கையில் எடுத்துக் கொண்டான்..!! ரெட்ஹில்ஸ் கொலை கேஸ் புலன் விசாரணையில்.. சமீபத்தைய முன்னேற்றத்தை வாசித்து தெரிந்துகொள்ள ஆரம்பித்தான்..!!
"சங்கீஈஈஈ..!!!!" சமையலறையில் இருந்து பாரதி அலறினாள்.
"என்ன மம்மி..??"
"இங்க கொஞ்சம் வாடி..!!"
"என்னன்னு சொல்லு..!!"
"ப்ச்.. வாடின்னு சொல்றேன்ல.. வா..!!!"
பாரதியின் குரல் அவ்வாறு கோபமாக ஒலிக்க.. சங்கீதா இப்போது எரிச்சலானாள்..!! அந்த எரிச்சலை பதிலுக்கு கத்துவதில் காட்டாமல்.. பக்கத்தில் இருந்த அண்ணனிடம் குறைபட்டுக் கொண்டாள்..!!
"ஹ்ம்ம்.. பாருடா இந்த மம்மியை.. நிம்மதியா ஒரு புக் கூட படிக்க விடமாட்டேன்றாங்க..!! ச்சே..!!"
சலிப்பாக சொன்னவள், கையிலிருந்த புத்தகத்தை மடக்கி, டம்மென்று டீப்பாய் மீது வைத்தாள். அசோக்கின் பார்வை இப்போது எதேச்சையாக அந்த புத்தகத்தின் மீது விழுந்தது. அந்த புத்தகத்தை பார்த்ததும், அவனுடைய நெற்றி நெருக்கமாய் சுருங்கிக் கொண்டது. அது.. மும்தாஜ் இவனிடம் படிக்க சொல்லி கொடுத்த அந்த புத்தகம்.. கிறித்தவ மத போதனைகளை உள்ளடக்கிய புத்தகம்.. ஆர்வமில்லாமல் இவன் இத்தனை நாட்களாய் படிக்காமலே வைத்திருந்த புத்தகம்..!!
"ஹேய்.. சங்கி.. இ..இது.. இது என்னோட.." அசோக் முடிக்கும் முன்பே,
"ம்ம்.. ஆமாம்.. உன் பேக்ல இருந்த புக்தான்.. போரடிக்குதுன்னு நான்தான் எடுத்துட்டு வந்து படிச்சுட்டு இருந்தேன்..!! சும்மா சொல்லக் கூடாது.. ஜீசஸோட லைஃப் ஹிஸ்டரி.. படிக்கிறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு..!!"
சங்கீதா சிந்திய வார்த்தைகளில் உண்மையான ஒரு உற்சாகம் பொங்கியது..!! அசோக் இப்போது மீண்டும் அந்த புத்தகத்தின் மீது பார்வையை வீசினான்.. புத்தக முகப்பில் பெரிதாக எழுதப்பட்டிருந்த அந்த தலைப்பை கண்களாலேயே வாசித்தான்..!!
"தட்டுங்கள் திறக்கப்படும்..!!"
அதை வாசித்த அந்த நொடியிலேயே...
"மனம் போலே எல்லாம் நடக்கும்..!!" டிவியில் பாண்ட்ஸ் விளம்பர பாடல் ஓடியது.
"போடா.. போய் தேடு..!! தேடுனாத்தான் எதுவும் கெடைக்கும்.. தட்டினாத்தான் எதுவும் திறக்கும்..!!"
என்று.. பாரதி மூன்று நாட்களுக்கு முன்னால், கிருஷ்ண பகவான் கோவிலில் வைத்து அவனிடம் சொன்னதும் நினைவுக்கு வர.. அவனது உடலில் ஒரு இனம்புரியாத சிலிர்ப்பு எழுந்து அடங்கியது..!! அந்த புத்தகத்தை எடுப்பதற்காக மெல்ல கையை நீட்டினான்.. புத்தகத்தை பற்றி டீப்பாயில் இருந்து எடுத்தான்..!! அதே நேரத்தில்.. சங்கீதா அம்மாவின் அழைப்பிற்காக சோபாவில் இருந்து அவசரமாய் எழ.. ஆக்சிடன்டலாக அண்ணனின் கையை தட்டிவிட்டாள்..!!
அந்த புத்தகம் அசோக்கின் கையிலிருந்து விடுபட்டு.. எங்கோ அந்தரத்தில் பறந்தது..!! சங்கீதா 'ஓவ்' என்று ஓசை எழுப்பிக்கொண்டே.. அந்த புத்தகத்தை கீழே விழாமல் பிடிப்பதற்காக.. கைநீட்டியவாறே திடீர் பரபரப்புடன் நகர்ந்தாள்..!! அந்த புத்தகத்தில் இருந்து விடுபட்ட அது மட்டும்.. காற்றில் மிதந்து.. பறந்தவாறே கீழிறங்கி.. அசோக்கின் மடியில் வந்து மெல்ல அமர்ந்தது..!!
அது.. ஒரு புகைப்படம்.. ஒரு பெண்ணின் புகைப்படம்..!! அந்தப் பெண்ணின் முகம் மட்டுமே பிரதானமாக தெரியுமாறு.. படம்பிடிக்கப்பட்ட புகைப்படம்..!! அந்த முகம் கூட முழுதாக தெரியவில்லை.. அந்தப்பெண் தனது துப்பட்டாவால் பாதி முகத்தை மூடி சுற்றியிருக்க.. அவளது கண்கள் மட்டுமே தெளிவாக பிரகாசித்தன..!!
அசோக் அந்த புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்தான்..!! பார்த்ததுமே அவனது விழிகள் படக்கென விரிந்து கொண்டன.. இருதயம் வெடுக்கென சுண்டி விடப்பட்டு துடித்தது.. நாடிநரம்பெல்லாம் ஜிவ்வென்று ஒரு அதிர்வலை.. நாளங்களிலெல்லாம் ரத்தம் புது வேகத்துடன் பீய்ச்சியடித்தது..!!
எத்தனை நாட்கள் அந்த கண்களை மணிக்கணக்கில் பார்த்தவாறு அமர்ந்திருப்பான்..?? எத்தனை காதலுடன் அந்த விழிகளின் ஒவ்வொரு மில்லி மீட்டரையும் பார்த்து ரசித்திருப்பான்..?? அந்த கண்கள்தானே அவனுடைய படுக்கையறை சுவற்றை முழுதாக ஆக்கிரமித்திருக்கின்றன.. அந்த பார்வைதானே அவனது விழிவழி பாய்ந்து, இதயத்தை சூழ்ந்து பிசைந்தது..!! புகைப்படத்தை பார்த்த அந்த நொடியே அவனால் கண்டுகொள்ள முடிந்தது..அவனையும் அறியாமல் அவனது உதடுகள் முணுமுணுத்தன..!!
"மீரா..!!!!!"
அசோக் சோபாவில் இருந்து எழுந்து, அந்த புகைப்படத்தையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்க.. சங்கீதா கீழே விழுந்த புத்தகத்தை, கையால் அள்ளி வாரி எடுக்க.. டிவியில் அந்த வாசகத்துடன் பாண்ட்ஸ் விளம்பரம் நிறைவு பெற்றது..!!
"இப்போ வந்ததுல லவ் ஸ்டோரில ட்விஸ்ட்..??"
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அத்தியாயம் 30
காதலியின் புகைப்படத்தை கையில் ஏந்தியிருந்த அசோக்.. இதயத்தை ஆட்கொண்ட அந்த இன்ப அதிர்ச்சியில்.. சில வினாடிகள் சிலை போலவே உறைந்திருந்தான்..!! வெகுதூரம் ஓடிக்களைத்தவன் போல அவனுக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டது.. வெடவெடத்த விரல்களால் புகைப்படத்தை பற்ற கடினமாயிருந்தது..!! உடலெல்லாம் ஜிலீரென்று ஒரு சிலிர்ப்பு.. உள்ளமெல்லாம் ஜிவ்வென்று ஒரு பூரிப்பு..!! சில வினாடிகள்தான்.. உடனடியாய் அவனை ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது..!!
"மம்மிஈஈஈஈ..!!" என்று கத்திக்கொண்டே உள்ளறைக்கு ஓடினான்.
"என்னடா..??" பாரதி கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்தாள்.
"மீ..மீரா.. மீரா மம்மி..!!" நடுநடுங்கிய கையிலிருந்த புகைப்படத்தை அவளிடம் நீட்டினான்.
"மீ..மீராவா..??" புகைப்படத்தை கையில் வாங்கிப் பார்த்த பாரதிக்கு எதுவும் புரியவில்லை.
"இ..இந்த ஃபோட்டோ.. இ..இது.. இது மீரா மம்மி.. இ..இது.. எ..என் மீராதான்.. ச..சந்தேகமே இல்ல..!!" உள்ளத்தில் இருந்த தவிப்பில் உதடுகள் படபடக்க, வார்த்தைகள் தெளிவாக வெளிவர மறுத்தன.
"ஓ..!! இ..இது.. இது எப்படி..??" பாரதி சந்தோஷமும், குழப்பமுமாய் மகனை ஏறிட்டாள்.
"நா..நான்.. நான் உன்கிட்ட சொல்லிருக்கேன்ல.. அ..அந்தப்பொண்ணு.."
"எந்தப்பொண்ணு..??"
"அ..அதான் மம்மி.. அந்த மும்தாஜ்.. எ..எனக்கு யோகா சொல்லி தந்த பொண்ணு..!!"
"ஆமாம்..!!"
"அ..அந்தப்பொண்ணுதான்.. அ..அவ... அவங்க.. படிக்கிறதுக்கு எனக்கு ஒரு புக் தந்தாங்க மம்மி.. அ..அந்த புக்குக்குள்ளதான் இந்த ஃபோட்டோ இருந்தது..!!"
"அ..அப்படினா..??"
"ஆமாம் மம்மி..!!! அ..அந்த மும்தாஜ்க்கு மீரா பத்தி தெரிஞ்சிருக்கணும்.. அவங்கட்ட விசாரிச்சா மீராவை எப்டியாவது கண்டுபுடிச்சுடலாம்..!! யெஸ்.. யெஸ்.. யெஸ்..!!!!"
இப்போது பதற்றம் சற்றே குறைந்து நம்பிக்கை தெறிக்கிற குரலில் அசோக் உற்சாகமாக சொன்னான். அவனது உற்சாகம் அவனுடைய அம்மாவிற்கும் தொற்றிக்கொண்டது.
"நெ..நெஜமாத்தான் சொல்றியாடா.. எ..என்னால நம்பவே.."
ஆச்சரியத்தில் பேச்சு வராமல் பாரதியும் தடுமாறினாள்..!! அசோக்கும் அவளுடைய பேச்சுக்கு காது கொடுக்கிற நிலையில் இல்லை.. அவசரமாக அடுத்த அறைக்கு ஓடினான்.. சார்ஜரை பிடுங்கி எறிந்து தனது செல்ஃபோனை தனியே பிரித்தெடுத்தான்.. பதற்றத்தில் நடுங்கிய விரல்களுடன் மும்தாஜின் தொடர்பு எண்ணை தேடினான்..!!
இவர்களது பேச்சு சப்தம் கேட்டு வெளியே வந்த அசோக்கின் குடும்பத்தினர் அனைவரும்.. இப்போது ஹாலில் ஒன்றாக குழுமியிருந்தனர்..!! நடந்த விஷயத்தை பாரதியே அவர்களுக்கு விளக்கி சொல்ல.. எல்லோருடைய முகத்திலுமே அப்படி ஒரு ஆச்சரியமும் மலர்ச்சியும்..!! அவள்தான் வேண்டும் என்று அசோக் ஒற்றைக்காலில் நின்றதற்கு.. இப்போது நல்லதொரு பலன் கிடைத்திருப்பதாக அனைவருக்குமே ஒரு திருப்தி..!!
அவ்வாறு அவர்கள் பூரிப்பில் திளைத்திருந்தபோதே..
"ச்சே..!!" அசோக் சலிப்பான குரலுடன் ஹாலுக்குள் பிரவேசித்தான்.
"என்னடா ஆச்சு..??" மகனை கேட்டாள் பாரதி.
"ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்காங்க மம்மி.. யோகா க்ளாஸ்ல இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்..!!"
"ஓ..!! கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்ணிப் பாரேன்..!!"
"இல்ல மம்மி.. நான் உடனே கெளம்புறேன்.. நேர்லயே போய் அவங்களை பாத்து பேசிடுறேன்..!!" பரபரப்பு குறையாதவனாய் பைக் சாவி எடுக்க கிளம்பியவன்,
"இ..இது அண்ணிதானாடா.. நல்லா தெரியுமா..?? கண்ணு மட்டுந்தான் தெரியுது..??"
என்று ஃபோட்டோவை பார்த்தபடியே சங்கீதா சந்தேகக்குரல் எழுப்பியதும் அப்படியே நின்றான். தங்கைக்கு அசோக் பதில் சொல்ல வாயெடுக்கும் முன்பே, அவனுடைய தாத்தா அவனது உதவிக்கு வந்தார்.
"ப்ச்.. காதலிக்கிறவன் அவன் சொல்றான்.. கரெக்டாத்தான் இருக்கும்..!! கண்ணை பார்த்து கண்டுபிடிக்கிறது என்ன கஷ்டமா.. நான்லாம் காத்துல வர்ற வாசனையை வச்சே இவளை கண்டுபிடிச்சுடுவேன்..!!" நாராயணசாமி அவ்வாறு சிரிப்புடன் சொல்ல,
"ச்சீய்.. போங்க..!!"
அசோக்கின் பாட்டி அழகாக வெட்கப்பட்டாள். அந்த வெட்கத்தில் ஒருவித பெருமிதமும் ஏராளமாய் கலந்திருந்தது. அவளது வெட்கத்தை பார்த்து, 'ஹாஹாஹா' என்று அனைவருமே இப்போது அடக்கமுடியாத ஒரு சிரிப்பினை உதிர்த்தனர். அசோக்குமே தனது பதற்றம் தணிந்து மெலிதாக ஒரு புன்னகையை வெளிப்படுத்தினான். இப்போது மணிபாரதி சற்றே நகர்ந்து அசோக்கை நெருங்கினார். மகனுடைய தோளில் கைபோட்டவர், இதமான குரலில் சொன்னார்.
"போடா.. போய் என் மருமகளை கூட்டிட்டு வா.. போ..!!"
தங்கையின் கையிலிருந்த புகைப்படத்தை பிடுங்கிய அசோக், பைக் சாவி எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.. வாசலுக்கு வந்த அவனது குடும்பத்தினர் அனைவரும், அவன் கிளம்புவதையே எதிர்பார்ப்பும் சந்தோஷமுமாய் பார்த்தனர்..!! பைக்கை கிளப்பிய அசோக் ஆக்சிலரேட்டரை முறுக்கி பறக்க ஆரம்பித்தான்..!! தொலைந்துபோன காதலியை காணப்போகிற அவனது வேகத்தை.. அவனுடைய பைக்குக்கும் சரியாக புரிந்து கொண்டிருந்தது.. சாலையில் சர்ர்ர்ரென சீறிப் பாய்ந்தது..!!
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பத்தே நிமிடத்தில்.. அந்த தற்கொலை தடுப்பு ஆலோசனை மைய வளாகத்தின் முன்பாக வந்து நின்றது அசோக்கின் பைக்..!! வண்டியில் இருந்து இறங்கியவன், வராண்டாவை அடைந்து வேகமாக நடைபோட்டான்.. நீளமான காரிடாரின் கடைசி அறைக்குள் புயலென புகுந்தான்..!! மார்பிள் பதித்த தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த பத்துப் பேரும்.. அவர்களுக்கு எதிர்ப்புறம் அதே தோற்றநிலையில், தனியாக அமர்ந்திருந்த மும்தாஜும் காணக்கிடைத்தனர்.. அனைவருமே ஆழ்ந்ததொரு தியானத்தில் திளைத்திருந்தனர்..!!
அங்கு நிலவிய அமைதியை குலைக்க அசோக் சற்றும் தயங்கவில்லை..!!
"மும்தாஜ்..!!!"
என்று சத்தமிட்டுக்கொண்டேதான் அந்த அறைக்குள் நுழைந்தான்..!! படக்கென விழிகள் திறந்து அனைவரும் அசோக்கை குழப்பமாய் பார்க்க.. மும்தாஜோ முகத்தில் ஒரு திகைப்புடன் அவனை ஏறிட்டாள்..!!
"அசோக்..!!"
அசோக் மும்தாஜை நெருங்கி அவளது புஜத்தை பற்றினான்.. தரையில் இருந்து எழுப்பினான்..
"எ..என்னாச்சு அசோக்..??"
"வாங்க சொல்றேன்..!!"
எதுவும் புரியாமல் விழித்த மும்தாஜை, அந்த அறைக்கு வெளியே இழுத்து வந்தான்.. அவளது புஜத்தை விடுவித்தவன், கையிலிருந்த புகைப்படத்தை அவளிடம் நீட்டி, பதற்றமும் பரிதவிப்பும் கலந்த குரலில் கேட்டான்..!!
"இ..இது.. இது யாரு மும்தாஜ்..??"
இப்போது அந்த புகைப்படத்தின் மீது பார்வையை வீசிய மும்தாஜ், உடனே நெற்றியை சுருக்கினாள்.
"இ..இது.. இ..இந்த ஃபோட்டோ எப்படி உங்கட்ட..??"
"நீங்க எனக்கு ஒரு புக் தந்திங்கல்ல.. அதுக்குள்ள இருந்தது..!!"
"ஓ..!! இ..இது.. ஆனந்த விகடன் ஃபோட்டோக்ராஃபி கான்டஸ்ட்க்காக நான் எடுத்த ஃபோட்டோ..!! ஆல்பத்துல வச்சிருந்தேன்.. இ..இது எப்படி அந்த புக்குக்குள்ள.."
"ஹையோ.. அதை விடுங்க மும்தாஜ்..!! இ..இந்த பொண்ணு யாருன்னு சொல்லுங்க..!!"
"எ..எனக்கு தெரிஞ்ச பொண்ணுதான்.. எதுக்கு கேக்குறீங்க..??"
"தெ..தெரிஞ்ச பொண்ணுனா..??"
"இ..இங்க கவுன்சிலிங் வந்த பொண்ணு..!! என்னை மாதிரிதான் இவளும்.. சூஸயிட் அட்டம்ப்ட் பண்ணி.. இங்க கவுன்சிலிங் வந்து.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறி..!! நான்தான் இவளுக்கு யோகாலாம் சொல்லி தந்தேன்.. கொஞ்சநாள் இங்க ஆர்ட் ஆஃப் லிவிங் ட்யூட்டரா கூட வொர்க் பண்ணினா.. அப்டித்தான் எங்களுக்குள்ள பழக்கம்..!!"
மும்தாஜ் சொன்ன விஷயங்கள்.. அசோக்கிற்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஒருசேர அளித்தன..!! அவனுடைய முகம் ஒருவித திகைப்பு சாயம் பூசிக்கொண்டது..!!
"இ..இப்போவும் இங்க வொர்க் பண்றாளா..??"
"இல்ல.. இப்போ கொஞ்ச நாளா வர்றது இல்ல..!!"
"ஓ..!!"
"எ..எனக்கு எதுவும் புரியல அசோக்.. எதுக்கு இதெல்லாம் கேக்குறீங்க..??"
மும்தாஜ் இப்போது பொறுமையில்லாமல் கேட்டுவிட்டாள். அவளுடைய கேள்விக்கு அசோக் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு பதில் சொன்னான்.
"நான் மீரா மீரான்னு சொல்வேனே.. அது இவதான் மும்தாஜ்..!! நான் லவ் பண்றவ.. என் மனசு பூரா நெறைஞ்சிருக்குறவ.. என்ன ஏதுன்னு எதுவுமே சொல்லாம என்னைவிட்டு பிரிஞ்சு போனவ..!! இத்தனை நாளா இவளை தேடிக்கண்டுபிடிக்கத்தான் பைத்தியம் மாதிரி அலைஞ்சிட்டு இருக்குறேன் மும்தாஜ்.. நான் இங்க கவுன்சிலிங் வர்ற மாதிரியான நெலமைக்கு காரணமே இவதான்..!!" ஆதங்கத்துடன் அசோக் சொல்ல, மும்தாஜ் அப்படியே ஆச்சரியப்பட்டு போனாள்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 3,160
Threads: 0
Likes Received: 346 in 315 posts
Likes Given: 1,312
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
"இ..இவளா.. இவளா உங்க மீரா..?? எ..என்னால நம்பவே முடியல அசோக்..!!"
"சொல்லுங்க மும்தாஜ்.. இ..இவளை எப்டி பாக்கலாம்.. எப்டி கான்டாக்ட் பண்றது..?? இ..இவ அட்ரஸ்.. ஃபோன் நம்பர் ஏதாவது..??" அசோக்கின் குரலில் அடக்கமுடியாத ஒரு தவிப்பு.
"டோன்ட் வொர்ரி அசோக்.. இவ ரெகார்ட்ஸ் கண்டிப்பா இங்க இருக்கும்..!! நாம பவானி அக்காவை போய் பாக்கலாம்.. வாங்க..!!"
சொன்ன மும்தாஜ்.. அசோக்கின் பதற்றத்தை தனக்குள் வாங்கியவளாய்.. அவசரமாய் திரும்பி அந்த காரிடாரில் நடக்க ஆரம்பித்தாள்..!! ஓரிரு வினாடிகள் கழித்துதான்.. அசோக் புரிந்துகொண்டு அவளை பின்தொடர ஆரம்பித்தான்..!! நடக்க ஆரம்பித்தவனுக்கு திடீரென ஏதோ ஞாபகம் வர..
"மும்தாஜ்..!!" என்று அழைத்தான்.
"ம்ம்..??" மும்தாஜ் திரும்பி பார்த்தாள்.
"இ..இவ.. இவ பேர் என்ன மும்தாஜ்..??"
அசோக் அந்தமாதிரி ஏக்கமான குரலில் கேட்க.. மும்தாஜ் ஒருகணம் திகைத்துப் போனாள்..!! உள்ளம் நிறைய இவனுக்கு அவள் மீது காதல் இருந்தாலும்.. உயிரையும் அவள் இல்லாத ஏக்கத்தில் விட துணிந்திருந்தாலும்.. அவளது உண்மையான பேர் இவனுக்கு தெரியாது என்கிற நிதர்சனம்.. உடனடியாய் மும்தாஜுக்கு உறைக்க மறந்ததால் வந்த திகைப்பு அது..!! பிறகு அந்த உண்மை உறைத்ததும்.. உதடுகளுக்கு ஒரு உலர்ந்த புன்னகையை கொடுத்தவள்..
"நித்தி..!!!!" என்று உங்களது நீண்டகால கேள்விக்கான பதிலை உச்சரித்தாள்.
இருவரும் பவானியின் பிரத்தியேக அறைக்கு சென்று அவளை சந்தித்தனர்.. விஷயத்தை இருவரும் அவளுக்கு விளக்கி சொல்ல, அவள் மும்தாஜை விட பலமடங்கு ஆச்சரியத்திற்கு உள்ளானாள்..!!
"இவளா..?? இவளா நீ சொன்ன மீரா..?? ஐ கான்ட் பிலீவ் திஸ்..!!! இவளையா இத்தனை நாளா நீ உருகி உருகி லவ் பண்ணிட்டு இருந்த..??" - நம்பமுடியாதவளாய் அசோக்கை திரும்ப திரும்ப கேட்டாள்.
"பாரு மும்தாஜ்.. கடைசில.. இவனை இத்தனைநாளா சுத்தல்ல விட்டது நம்ம நித்திப்பொண்ணு..!!" - மும்தாஜிடம் ஆச்சரியத்தை பகிர்ந்துகொண்டாள்.
பிறகு அசோக்கின் அவசரத் தூண்டுதலால்.. தனது அலுவலகக் கணிணியை இயக்கியவள்.. மீரா (அலையாஸ்) நித்தியின் தொடர்பு விவரங்களை.. வெண்திரையில் வெளிக்கொணர்ந்தாள்..!! அதில் தரப்பட்டிருந்த மொபைல் நம்பருக்கு.. தனது செல்ஃபோனில் இருந்து பவானி டயல் செய்ய.. அசோக் அவளை அவசரமாக தடுத்தான்..!!
"வேணாம்க்கா.. ஃபோன் பண்ண வேணாம்.. அட்ரஸ் இருக்குல.. நேர்லயே போயிறலாம்..!!"
"ஏன்டா..??"
"எவ்வளவுதான் அவ விலகி போனாலும்.. எங்களோட லவ், எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கும்னு நான் அவகிட்ட சொன்னேன்..!! அந்த லவ்வுக்கு சக்தி இருந்தா எங்களை நேருக்கு நேர் சந்திக்க வைக்கட்டும்னு.. அவ பதிலுக்கு சவால் விட்டா..!! இப்போ.. திடீர்னு அவ முன்னாடி போய் நிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குக்கா.. சர்ப்ரைஸா..!!!! அ..அதும் இல்லாம.. அவளோட கான்டாக்ட் டீடெயில்ஸ நான் கண்டுபிடிச்சுட்டேன்னு தெரிஞ்சா.. அவ எங்கயாவது எஸ்கேப் ஆகி ஓடுறதுக்கு கூட சான்ஸ் இருக்கு..!! I don't want to miss her again..!!" அசோக் சொன்னதை கேட்டு பவானி மெலிதாக புன்னகைத்தாள்.
இரண்டே நிமிடங்களில் அசோக்கும் பவானியும் அங்கிருந்து காரில் கிளம்பினார்கள்.. பவானியுடைய கார்தான் அது..!! அவளே கார் ஓட்டினாள்.. அருகிலிருந்த இருக்கையில் அசோக் அமர்ந்திருந்தான்..!!
பவானி காரை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டே.. மீராவின் குடும்ப சூழ்நிலை பற்றியும்.. தற்கொலைக்கு அவள் தள்ளப்பட்ட கதையினையும்.. பிறகு தங்களது மனோதத்துவ சிகிச்சையால் அவள் மனதைரியம் பெற்றதையும்.. அசோக்கிற்கு சுருக்கமாக எடுத்துரைத்தாள்..!! எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்ட அசோக்கிற்கு.. இதயத்தில் ஒரு இனம்புரியாத வலி..!! மீராவுக்கு வேதனையான ஒரு பின்புலம் இருக்கும் என்று, ஏற்கனவே அவன் கணித்திருந்தான்.. ஆனால் அந்த பின்புலத்தில் வேதனை தவிர வேறேதும் இருக்காது என்று அவன் நினைத்தேயிரவில்லை..!! காதலி அனுபவித்த கடுந்துயரினை கேட்க கேட்க.. கண்களில் அவனுக்கு நீர் முட்டிக்கொண்டு வந்தது.. கஷ்டப்பட்டு அதை கட்டுப்படுத்திக் கொண்டான்..!!
ஆர்காட் ரோட்டில் அந்தக்கார் விரைந்துகொண்டிருந்த அதே சமயத்தில்.. சிந்தாதிரிப்பேட்டையில்.. மீரா தனது வீட்டு ஹாலின் மையத்தில் நின்றிருந்தாள்..!! துடைத்து எடுக்கப்பட்டது போல வீடு வெறுமையாக இருந்தது.. வீட்டு சுவர்களையே வெறித்துக் கொண்டிருந்த மீராவுடைய பார்வையிலும் ஒரு வெறுமை..!! அவள் பிறந்து வளர்ந்த வீடு.. தவழ்ந்து ஓடிய வீடு.. தாயுருவில் நீலப்ரபா என்ற தெய்வம் வாழ்ந்த வீடு.. மனம் விட்டு இருவரும் அழுவதற்கு, மறைவாக நான்கு சுவர்களைத் தந்த வீடு..!! இனி இந்த வீடு அவளுடைய வாழ்வில் இல்லை..!!
மீராவின் முகத்தில் தெரிந்த இறுக்கத்திற்கு காரணம்.. பிறந்த வீட்டை பிரிந்து செல்கிற சோகம் மட்டும் அல்ல.. அசோக்கின் நினைவுகள் அவளுக்கு அளித்த வேதனையும்தான்..!! ஏதாவது ஒரு அதிசயம் நடந்து.. அவனுடன் இணைந்துவிட மாட்டோமா என்று.. ஐந்து நாட்களாக அவளுமே ஏங்கியிருந்தாள்..!! இந்த நொடி வரை எதுவும் நடக்கவில்லை.. இனி நடப்பதற்கும் வாய்ப்பு இல்லை என்றே அவளது மனம் அவளுக்கு உரைத்தது..!! அசோக் இனி அவளது வாழ்வில் இல்லை என்கிற நினைவுதான்.. அவளுக்கு அதிகப்படியான வேதனையை அளிப்பதாக இருந்தது..!!
first 5 lakhs viewed thread tamil
Posts: 3,160
Threads: 0
Likes Received: 346 in 315 posts
Likes Given: 1,312
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
"ரொம்ப ஏக்கமா இருந்தா.. இங்கயே இருந்திடவேண்டியதுதான..??"
சப்தம் கேட்டு மீரா திரும்பிப் பார்த்தாள். மனோகர் பல்லிளித்தவாறு நின்றிருந்தான். அவனுடைய கண்களில் டன் டன்னாய் காமம். மீரா அவனுடைய முகத்தை ஏறிட்டு முறைத்தாள். அவனது இளிப்பிற்கு பதில் ஏதும் சொல்லாமல், தனது கையில் இருந்த வீட்டுச்சாவியை அவன் கையில் திணித்தாள். தோளில் அணிந்த பேகுடன், விடுவிடுவென வீட்டு வாசலை நோக்கி நடந்தாள்.
"நீ எப்போவேணா திரும்ப வரலாம் நித்தி.. நானும் ரெடியா இருப்பேன்.. இந்த வீடும் ரெடியா இருக்கும்..!!"
மனோகரின் பேச்சை கண்டுகொள்ளாமல், மீரா வீட்டை விட்டு வெளியே வந்தாள். தயாராக இருந்த டாக்ஸியில் ஏறிக்கொண்டாள். கதவை அறைந்து சாத்தினாள்.
"கெளம்பலாமா மேடம்..??" என்று கேட்ட ட்ரைவருக்கு,
"ம்ம்..!!" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.
டாக்ஸி சீரான வேகத்துடன் அண்ணாசாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது.. மீராவின் மனநிலையோ சீரற்றுப்போய் ஒருவித இனம்புரியாத அழுத்தத்தில் சிக்கி தத்தளிக்க ஆரம்பித்திருந்தது.. இறுகிப்போன முகத்துடனே சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..!!
தேனாம்பேட்டை சிக்னலை அடைந்தபோது பலத்த போக்குவரத்து நெரிசலில் டாக்ஸி சிக்கிக்கொண்டது..!! வாகனங்களுக்கு மத்தியில் அந்த டாக்ஸி அசையாமல் நின்றிருந்த நேரத்தில்.. எதிர்ப்புறம் இருந்து அந்த கார் மெல்ல மெல்ல நகர்ந்து.. மீராவின் டாக்ஸிக்கருகே பக்கவாட்டில் வந்து நின்றது.. அந்தக்காருக்குள் அமர்ந்திருந்தான் அசோக்..!!!!
இருவரில் ஒருவர் தலையை திருப்பி பார்த்தால் கூட.. அடுத்தவர் முகத்தை கண்டுகொள்கிற மாதிரியான நெருக்கமான நிலை..!! ஆனால்.. இருவருக்கும் ஏனோ அச்சமயத்தில் முகம் திருப்ப தோன்றவில்லை..!! மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்து டென்ஷனான மீராவின் கவனமோ.. போக்குவரத்து விளக்குகளின் மீதே படிந்திருந்தது..!! அவளுக்கு ஒரு மீட்டர் தொலைவில் அமர்ந்திருந்த அசோக்கோ.. அருகிலிருந்த பவானியிடம் தவிப்பான குரலில் பேசிக்கொண்டிருந்தான்..!!
"சிந்தாதிரிப்பேட்டைல ஒரு வீடு விடாம சலிச்சு எடுத்தாச்சுக்கா.. இவ வீடு மட்டும் எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரியல..!!"
"ம்ம்..!! போய் பாக்கலாம் அசோக்.. பொறுமையா இரு..!!"
"வேடிக்கையை பாரேன்.. கம்ப்யூட்டர் க்ளாஸ் அட்டண்ட் பண்றதுக்காக, அவ டெயிலி வடபழனி வந்துபோயிட்டு இருக்கான்னு நான் நெனச்சுட்டு இருந்தேன்.. அவ என்னடான்னா.. உங்க சென்டர்ல ஆர்ட் ஆஃப் லிவிங் க்ளாஸ் எடுக்குறதுக்காக வந்துபோயிட்டு இருந்திருக்கா..!!"
"ம்ம்.. எங்ககிட்ட கவுன்சிலிங் வந்தப்புறம், அவளுக்கு யோகால ரொம்ப ஈடுபாடு வந்திருச்சு அசோக்.. எங்க சென்டர்ல அவளுக்கு ஏதோ ஒரு அமைதி கெடைச்சிருக்கனும்..!! அவளே வாலன்டியரா வந்து ட்யூட்டரா இருக்க ஆசைப்படுறேன்னு சொன்னா.. ரொம்ப நாள் ரெகுலராவும் வந்துட்டு இருந்தா..!! இப்போ கொஞ்ச நாளாத்தான் வர்றது இல்ல.. அவ அம்மா இறந்ததுல இருந்து..!!"
"அ..அவங்க எப்போ இறந்தாங்க..??"
அசோக்கின் கேள்விக்கான பதிலை பவானி தோராயமாக சொல்ல.. சிறு யோசனைக்கு பிறகு அவனால் அந்த காலகட்டத்தை கண்டறிந்துகொள்ள முடிந்தது..!! முன்பொருநாள் பாரில்.. மூச்சுமுட்ட குடித்துவிட்டு மீரா உளறியவையெல்லாம் இப்போது அவனுடைய ஞாபகத்துக்கு வந்தன..!!
"ம்ஹூம்.. வீடு வேணாம்.. நோ வீடு.. வீடு எனக்கு புடிக்கல..!!"
"என்ன வெளையாடுறியா.. வீட்டுக்கு போகலனா உன்னை தேட மாட்டாங்க..??"
"தேட மாட்டாங்க.. வீட்ல யாரும் இல்ல.. நான் மட்டுந்தான்..!!"
அன்றே.. தனியறையில் அவள் தவிப்பும் ஏக்கமுமாக சொன்னதும் இப்போது நினைவுக்கு வந்தது..!!
"என்னை பத்தி கவலைப்பட யாரும் இல்ல.. என் மேல அன்பு காட்டுறதுக்கும் யாரும் இல்ல.. எனக்குன்னு யாருமே இல்லடா..!!"
அந்த நினைவு வந்ததுமே அசோக்கின் மனதை ஒரு இனம்புரியாத உணர்வு அழுத்தி பிசைந்தது..!!
'ஆறுதலுக்கென்று இருந்த அம்மாவையும் தொலைத்துவிட்ட அவள்.. அன்று எவ்வளவு வேதனையான ஒரு மனநிலையில் இருந்திருப்பாள்..?? அத்தனையும் மனதிலேயே போட்டு புதைத்துக்கொள்ள எப்படி முடிந்தது அவளால்..?? சரியான நெஞ்சழுத்தக்காரி..!!'
இவனுடைய மனநிலை அறியாத பவானி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்..!!
"அம்மான்னா அவளுக்கு அவ்ளோ பிடிக்கும்.. உலகத்துல அவளுக்குன்னு இருந்த ஒரே ஜீவன் அவ அம்மா மட்டுந்தான்.. அவங்களும் இல்லைன்னதும் ரொம்ப உடைஞ்சு போயிட்டா..!!"
first 5 lakhs viewed thread tamil
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
"..................."
"அவளை ஏமாத்திட்டுப்போன அந்தப்பையனை பத்தி நாங்க எவ்ளோ கேட்ருப்போம் தெரியுமா.. எதுவுமே அவ சொன்னது இல்ல..!! ஏமாந்துட்டமேன்றதுக்காக கூட அவ சூசயிட் அட்டம்ப்ட் பண்ணிக்கல அசோக்.. 'தன்னோட நெலமை தன் மகளுக்கும் வந்திருச்சே'ன்னு அவ அம்மா பட்ட வேதனையை தாங்கிக்க முடியாமத்தான்.. அந்த ஸ்ட்ரெஸ் அதிகமாகித்தான்.. கத்தியால கை நரம்பை கட் பண்ணிக்கிட்டா..!! இதோ.. இந்த எடத்துல.. இப்படி..!!"
பவானி சொல்ல.. அசோக்கின் மனதுக்குள் பளிச்சென்று ஒரு மின்னல்..!! முன்பொருமுறை மீராவுடன் ஃபுட்கோர்ட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது.. தனது கற்பனை அப்பாவின் காதல் வெறுப்பினைப்பற்றி அவள் கதையடித்ததுக்கு இடையில்..
"நான் செகண்ட் இயர் படிக்கிறப்போ.. ஒருதடவை அப்பா என்னை பாக்குறதுக்காக எங்க காலேஜுக்கு வந்திருந்தாரு.. அந்த நேரம் பார்த்து நான் என் க்ளாஸ்மேட் பையன் ஒருத்தன்ட்ட சப்ஜக்ட் பத்தி சந்தேகம் கேட்டுட்டு இருந்தேன்.. நாங்க பேசிட்டு இருக்குறதை அப்பா பாத்துட்டாரு..!! அன்னைக்கு நைட்டு அப்பா என் கைல போட்ட சூடுதான் இது..!!"
இடது கையில் இருந்த தழும்பை காட்டி.. அவள் அப்போது அப்பாவியாக சொன்னது.. இப்போது அசோக்கின் நினைவுக்கு வர.. அவன் தலையை பிடித்துக் கொண்டான்..!! 'இன்னும் என்னவெல்லாம் புதிர் ஒளித்து வைத்திருக்கிறாயடி பிசாசே..??' என்பது மாதிரியான சலிப்புடன்.. பிடித்த தலையை பிசைந்து விட்டுக் கொண்டான்..!!
போக்குவரத்து நெரிசல் சற்றே குறைய.. இரண்டு கார்களும் மெல்ல மெல்ல நகர.. அசோக்கும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலே.. எதிரெதிர்த்திசையில் பயணிக்க ஆரம்பித்தினர்..!!
அசோக்கும் பவானியும் சிந்தாதிரிப்பேட்டை வீட்டை சென்றடைய மேலும் இருபது நிமிடங்கள் ஆயின..!! வீட்டை பார்த்ததுமே அசோக்கால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.. அவனது தேடுதல் வேட்டையின் முதல் வீடே அதுதானே..??
'அப்படியானால்.. அன்று கண்ணாடியில் நான் கண்ட பிம்பம் என் மீராவுடையதுதானா..?? வீட்டுக்குள் ஒளிந்துகொண்டேதான் இல்லையென்று சொல்ல சொல்லியிருந்தாளா..?? இரக்கமற்ற இராட்சசி..!!!'
ஒருபக்கம் மீராவின்மீது அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டிருந்தாலும்.. இன்னொரு பக்கம், இப்போது அவளை நேரிலேயே காணப்போகிற சந்தோஷமும் அவனுக்குள் எக்கச்சக்கமாய் ஏறிப்போயிருந்தது..!! அவர்களுக்கு முன்பாக தோன்றி மனோகர் சொன்ன செய்தி.. அத்தனை சந்தோஷத்தையும் மொத்தமாய் வடிந்து போக வைத்தது..!!
"ஹேய்.. நீ.. அந்த நித்தி வளைச்சுப்போட்ட பையன்ல..?? என்ன இந்தப்பக்கம்..??"
மனோகரின் ஆரம்பமே அசோக்கின் கோபத்தை கிளறிவிடுவதாய் இருந்தது.. அதை கட்டுப்படுத்திக்கொண்டுதான் அவன் மீரா பற்றி விசாரித்தான்..!! மனோகரோ அலட்சியமாகவே அவனுக்கு பதில் சொன்னான்..!!
"எந்த நாட்டுக்கு போறா.. எத்தனை மணிக்கு ஃப்ளைட்.. எத்தனை வருஷம் இருக்கப் போறா.. எப்போ திரும்பி வருவா.. எதுவும் எனக்கு தெரியாது..!!"
அவனுடைய பதிலில் அசோக் நொந்துபோனான்.. அவனுடைய மனதில் மெலிதாக ஒரு பதற்றம் பரவ ஆரம்பித்தது..!!
"அ..அக்கா.. அவ நம்பருக்கு கால் பண்ணிப் பாருக்கா..!!"
பதற்றத்துடனே அசோக் சொன்னதும்.. பவானி தனது எண்ணிலிருந்து மீராவின் மொபைல் நம்பருக்கு கால் செய்தாள்..!! இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பார்த்தவள்.. பிறகு அசோக்கிடம் திரும்பி சலிப்பாக சொன்னாள்..!!
"ரிங் போகுது அசோக்.. எடுக்க மாட்டேன்றா..!! ட்ராவல்ல இருக்குறா.. கவனிக்கல போல..!!"
"ப்ச்..!!"
அசோக்கின் பதற்றம் இப்போது இன்னும் அதிகமாயிருந்தது..!! 'மீண்டும் அவளை மிஸ் செய்துவிடுவோமோ..?' என்பது மாதிரி அவனுக்குள் ஒரு கிலி கிளம்ப ஆரம்பித்தது..!! மனோகரிடம் திரும்பி கெஞ்சலாக கேட்டான்..!!
"ஸார்.. ப்ளீஸ் ஸார்..!! நான் எப்படியாவது அவளை மீட் பண்ணியாகணும்.. ஃப்ளைட் ஏர்றதுக்குள்ள அவளை புடிச்சாகனும்..!! உங்களுக்கு ஏதாவது யூஸ்ஃபுல் இன்ஃபர்மேஷன் தெரிஞ்சா சொல்லுங்க.. ப்ளீஸ்..!!"
"ப்ச்.. நான்தான் எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்றேன்ல..?? வேலை விஷயமா வெளிநாட்டுக்கு போறாளா.. இல்ல.. வேற ஏதும் தொழில் பண்ணப் போறாளான்னு கூட எனக்கு தெரியாது..!!"
மனோகரின் வக்கிரமான வார்த்தைகள் அசோக்கை உக்கிரமாக்கின.. சட்டென அவனுக்குள் ஆத்திரம் பீறிட்டு கிளம்ப, 'ஏய்ய்..!!' என்று கத்தியவாறு மனோகருடைய சட்டையை கொத்தாகப் பிடித்தான்..!! பதிலுக்கு மனோகரும் 'ஹேய்.. என்ன..?' என்று சூடாக.. பவானிதான் இடையில் புகுந்து அசோக்கை தடுத்தாள்..!!
"விடு அசோக்.. விடுன்றேன்ல..!! சொன்னா கேளு.. இப்போ இதுக்குலாம் நேரம் இல்ல..!! இந்தா.. நீ உடனே கெளம்பு.. ஏர்ப்போர்ட் போய் அவளை ஸ்டாப் பண்ணு.. போ..!!"
என்றவாறு கையில் இருந்த கார்ச்சாவியை அசோக்கிடம் நீட்டினாள்..!! அசோக் இன்னும் ஆத்திரம் தணியாதவனாய், மனோகரை முறைத்தவாறே ஒரு சில வினாடிகள் யோசித்தான்.. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன், கார்ச்சாவியை கையில் வாங்கிக்கொண்டான்.. பவானியுடைய செல்போனையும் அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டான்.. பதற்றத்தில் துடிக்கிற மனதுடன், கேட் திறந்து வெளியேறினான்..!!
அசோக்கின் அவசரத்துக்கு, தான் இடையூறாக இருப்போம் என்று கருதியே.. பவானி அவனை தனியாக கிளம்ப சொன்னாள்..!! காரில் ஏறி அமர்ந்த அவனும்.. வண்டியை கிளப்பியதுமே சர்ரென்று புயல் வேகத்தில் பறந்தான்..!!
கார் காற்றைக் கிழித்துக்கொண்டு அண்ணாசாலையில் சீறியது..!! பயமும் தவிப்புமாய்.. 'படக் படக்' என அடித்துக்கொள்கிற இருதயமுமாய்.. உச்சபட்ச வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்தான் அசோக்..!! 'கீய்ங்.. கீய்ங்..' என்று ஹார்ன் ஒலியெழுப்பி முன்னால் சென்ற வாகனங்களை முந்திச்சென்றான்.. பவானியின் செல்ஃபோனில் இருந்து மீராவின் எண்ணுக்கு அவ்வப்போது கால் செய்து பார்த்து, 'ப்ச்' என்று சலிப்பை உதிர்த்தான்.. சிக்னலிலோ, ட்ராஃபிக்கிலோ மாட்டிக்கொள்ள நேர்ந்தபோது, 'ஷிட்' என்று ஸ்டியரிங்கை குத்தினான்..!!
கத்திப்பாரா ஜங்க்ஷனை கடந்து இடது புறம் திரும்பியதுமே.. தூரத்தில் அந்த ஆள் தெரிந்தான்..!! கொள்ளைகொள்ளையாய் தாடிமயிர்களும்.. கொழுகொழுவென்ற சதைப்பிதுக்கங்களும்.. கோணிப்பை மாதிரியான கால்ச்சட்டையும்.. கோழிமுட்டை கண்ணுக்கு கண்ணாடியுமாக..!! ப்ரேக்டவுன் ஆகிப்போன ஆல்ட்டோவுக்கு அருகே.. முதுகில் பெரிய மூட்டையுடன் நின்றிருந்தான்..!! கையை இவனது காருக்கு குறுக்கே காட்டி..
"லிஃப்ட்.. லிஃப்ட்.. ப்ளீஸ்..!!"
என அந்த ஆள் பரிதாபமாக கத்தியது அசோக்கின் காதில் விழவே செய்தது.. அவனுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணம் கூட அசோக்கிற்கு தோன்றியது..!! இருந்தாலும் இது சமயமில்லை என்ற எண்ணத்துடன்.. அந்த ஆளின் கதறலை அசோக் அலட்சியம் செய்தான்.. காரின் வேகத்தை சற்றும் குறைக்காமல் 'விஷ்க்க்' என கடந்து சென்றான்..!!
அடுத்த பத்தாவது நிமிடம்.. மீனம்பாக்கம் இன்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் இருந்தான் அசோக்..!! பார்க்கிங் ஏரியாவில் காரை விட்டவன்.. பரபரப்பாக ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸுக்குள் நுழைந்தான்..!! மீரா எங்காவது தென்படுகிறாளா என்று.. தவிப்புடன் தலையை திருப்பி திருப்பி பார்த்தான்..!! விமான பயணச்சீட்டு இல்லாமல்.. பயணிகள் அமர்ந்திருக்கிற பகுதிக்கு அனுமதிக்க முடியாது என்று.. அசோக்கை தடுத்தார் ஏர்போர்ட் செக்யூரிட்டி ஒருவர்..!! அசோக் அவரிடம் கெஞ்சினான்..!!
first 5 lakhs viewed thread tamil
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
"ப்ளீஸ் ஸார்.. என்னை உள்ள அலவ் பண்ணுங்க.. அவளை நான் பார்த்தே ஆகணும்.. இது என் லைஃப் பிரச்சினை ஸார்.. கொஞ்சம் புரிஞ்சுக்கங்க.. ப்ளீஸ்..!!"
"உன்னை உள்ளவிட்டா என் வேலை போய்டும்பா.. எனக்கும் இது லைஃப் பிரச்சினைதான்.. நீ கொஞ்சம் புரிஞ்சுக்கோ.. ப்ளீஸ்..!!"
அசோக்கின் நிலையை ஓரளவு புரிந்துகொண்ட அந்த செக்யூரிட்டி.. மிஞ்சுவதற்கு பதிலாக கெஞ்சலாய் சொல்ல.. அதற்கு மேலும் என்ன செய்வது என்று புரியாமல், அசோக் நெற்றியைப் பற்றி பிசைந்தான்..!! மீரா தென்படுகிறாளா என்று மீண்டும் ஒருமுறை அவன் தலையை திருப்பி பார்க்க.. அவனுக்கு பின்பக்கமாக அந்த ஆள் வந்து 'பொத்'தென்று மோதினான்..!! சற்றுமுன் சாலையில் லிஃப்ட் கேட்ட அந்த கொழுகொழு ஆசாமி..!!
"ஹலோ கண்ணு தெரியாதா உங்களுக்கு..??" ஆளை அடையாளம் கண்டுகொண்டும், அசோக் எரிச்சலாகவே எகிறினான்.
"ஸாரி ஸார்.. ஸாரி..!! ஃப்ளைட்க்கு லேட் ஆய்டுச்சு.. அதான்..!! ஸாரி ஸாரி ஸாரி..!!"
ஸாரிக்களை மானாவாரியாக இறைத்தவாறு.. அந்த ஆள் நிற்கக்கூட நேரமின்றி அவசரமாக உள்ளே ஓடினான்..!! ஒருசில வினாடிகள் செயலற்றுப் போய் நின்றிருந்த அசோக்.. பிறகு, 'போர்டிங் ஏரியா தவிர வேறு எங்காவது மீரா இருந்தால், அவளை பிடிக்கலாமே..' என்பது மாதிரியான எண்ணத்துடன்.. விசிட்டர்கள் ஏரியா பக்கமாக ஓடினான்..!!
அதே நேரம்..
போர்டிங் ஏரியாவுக்குள்.. இரண்டாவது மாடியில் இருந்த அந்த புக் ஸ்டாலில்.. மீரா நின்றுகொண்டிருந்தாள்..!! ட்ராவல் பேகை அவள் செக்கின் செய்திருக்க.. தோளில் மட்டும் அந்த சிறிய பேக்..!! ஃப்ளைட்டில் அனுமதிக்கப்பட இன்னும் சிறிது நேரமே இருக்கிற நிலைமையில்.. திடீர் யோசனை தோன்றியவளாய் அந்த புக் ஸ்டாலுக்கு வந்திருந்தாள்..!! சவூதி அரேபியா பற்றிய உபயோகமான தகவல்கள் அடங்கிய அந்தப் புத்தகத்தை வாங்கியிருந்தாள்..!! பில்லுக்கு பணம் எடுத்து கொடுத்துவிட்டு.. புத்தகத்தை பேகுக்குள் திணித்தபோதுதான்.. அவளுடைய கவனத்தை அது ஈர்த்தது.. பேகுக்குள் கிடந்த அவளுடைய செல்ஃபோன்..!!
எதேச்சையாக எடுத்துப் பார்த்தவள்.. பவானியின் நம்பரில் இருந்து ஏகப்பட்ட மிஸ்ட் கால்ஸ் வந்திருப்பதை கவனித்தாள்..!! 'இவர்கள் எதற்கு இந்த நேரத்தில்?' என ஓரிரு வினாடிகள் குழம்பினாள்.. புக் ஸ்டாலை விட்டு அவசரமாக வெளியே வந்தாள்.. வெளியே வந்ததுமே பவானியின் நம்பருக்கு கால் செய்தாள்..!!
அதே நேரம்.. விசிட்டர் ஏரியாவில்..
ஏக்கமும் தவிப்புமாய் மீராவை தேடிக்கொண்டிருந்த அசோக்கின் கையில் இருந்த செல்ஃபோனுக்கு.. அவளிடமிருந்தே கால் வர.. அந்த நொடியில் அவன் அடைந்த மகிழ்ச்சியை அளவிடவே முடியாது..!! அவனது முகம் பட்டென பரவசத்துக்கு செல்ல.. காலை உடனே பிக்கப் செய்து காதில் வைத்தான்..!!
"ம்ம்.. சொல்லுங்கக்கா.. கால் பண்ணிருந்தீங்களா..??"
எதிர்முனையில் மீராவின் குரல்.. அந்தக்குரலை கேட்டதும் அசோக்கின் உள்ளத்தில் பலவகை உணர்ச்சி அலைகள்..!!
"மீ..மீரா.. மீரா.."
வார்த்தைகள் வெளிவராமல் தவித்தான்.. அவளுடைய உண்மையான பெயர் நித்தி என்று மூளைக்கு தெரிந்திருந்தும்.. அவனுடைய மனம் என்னவோ 'மீரா மீரா' என்றே இன்னும் அலறியது..!! அடுத்த முனையில் அவனுடைய குரலை கேட்ட மீராவும்.. பலத்த அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்கும் உள்ளானாள்.. அவளும் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கியவளாய் தடுமாறினாள்..!!
"அ..அசோக்.. அசோக் நீயா..??"
"நா..நான்.. நான்தான் மீரா..!!"
"அசோக்.. நீ.. நீ எப்படி..??"
"எ..எங்க.. நீ எங்க மீரா இருக்குற..??"
"நா..நான்.. நான் உன்னை விட்டு தூரமா போறேன் அசோக்.. இன்னும் பத்து நிமிஷத்துல.. எனக்கு.."
"தெரியும் மீரா.. நீ ஏர்ப்போர்ட்ல இருக்குறன்னு எனக்கு தெரியும்.. நானும் இப்போ ஏர்ப்போர்ட்லதான் இருக்குறேன்..!! ஏர்ப்போர்ட்குள்ள எங்க இருக்குறன்னு சொல்லு மீரா.. நான் உன்னை பாக்கணும்.. உன்கூட பேசணும்..!! ப்ளீஸ் மீரா.. போயிடாத.. மறுபடியும் என்னை தவிக்கவிட்டுட்டு போயிடாத.. என்கிட்ட வந்துடு.. ப்ளீஸ்..!!"
அசோக்கின் குரல் தழதழத்துப் போய் ஒலிக்க.. அடுத்த முனையில் அதைக்கேட்ட மீரா அப்படியே உருகிப்போனாள்..!! 'தன்மீது எத்தனை காதல் இருந்தால்.. தன்னை தேடிக்கண்டுபிடிக்க இவன் இத்தனை முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பான்..?' என்பது மாதிரியான எண்ணம் அவளுக்குள் தோன்ற.. உள்ளத்தில் அசோக்கின்மீது பீறிட்டு கிளம்பிய காதல் ஊற்றினை.. அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை..!! கண்களுக்குள் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.. உதடுகளை பற்களால் அழுந்த கடிக்கவும்.. இமைகளை பொத்துக்கொண்டு கண்ணீர் வெளிச்சிந்தியது..!!
இந்தப்பக்கம் இவளது உணர்சிகளை, அந்தப்பக்கம் அறியாத அசோக்.. அவளது அமைதியை மட்டும் தவறாக அர்த்தம் எடுத்துக்கொண்டு.. பதற்றம் கொப்பளிக்கிற குரலில் மீராவை கெஞ்சினான்..!!
first 5 lakhs viewed thread tamil
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
"ப்ளீஸ் மீரா.. ஏதாவது பேசு.. ஃபோனை மட்டும் கட் பண்ணிடாத.. ப்ளீஸ்..!! எ..என்னை.. என்னை விட்டு போயிடாத மீரா.. என்னால தாங்கிக்கவே முடியாது.. ப்ளீஸ் மீரா.. என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்..!!!"
கரகரத்த குரலில் அசோக் அவ்வாறு கெஞ்ச.. முன்பொருமுறை தனது மடியில் மடியில் சரிந்து மயங்கிப் போவதற்கு முன்பாக.. அவன் கெஞ்சிய வார்த்தைகள் மீராவின் காதுக்குள் இப்போது மீண்டும் ஒலித்தன..!!
"போ..போகாத மீரா..!! எ..எனக்கு நீ வேணும் மீரா..!!"
அவ்வளவுதான்..!! அதற்கு மேலும் உள்ளுக்குள் பொங்கிய உணர்சிகளை மீராவால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.. இதற்கு மேலும் இவனை தவிக்க விடுவது தவறென்று உணர்ந்துகொண்டாள்..!!
'இல்ல அசோக்.. உன்னை விட்டு போக மாட்டேன்டா.. எப்போவும் போக மாட்டேன்..!!' என்று கத்துவதற்காக அவள் வாயெடுத்தபோதுதான்.. அவள் மீது தொம்மென்று வந்து இடித்தான் அந்த ஆள்.. சற்றுமுன் அசோக்கை இடித்த, அதற்குமுன் அசோக்கிடம் லிஃப்ட் கேட்ட அதே கனத்ததேக ஆசாமி..!! அவன் இடித்த வேகத்தில்.. மீராவின் கையிலிருந்த செல்ஃபோன் எகிறி.. எங்கோ அந்தரத்தில் பறந்தது..!! இரண்டாவது மாடியிலிருந்து கீழ்நோக்கி நழுவி.. தரைத்தளத்தில் சென்று ஜிலீரென மோதி.. இரண்டு மூன்று பாகங்களால தெறித்து.. மூலைக்கொன்றாக சிதறி ஓடியது..!!
"ஸாரி மேடம்.. ஸாரி ஸாரி ஸாரி.. ஐ'ம் இன் எ ஹர்ரி... ஸாரி..!!"
வழக்கமான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு.. தனது பின்புற சதைகள் குலுங்க குலுங்க.. அந்த ஆள் எங்கேயோ ஓட ஆரம்பித்தான்..!!
அவனுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிற மனநிலையில் மீரா இல்லை.. காதலும், ஏக்கமும், தவிப்பும் அவள் நெஞ்சை கொள்ளை கொள்ளையாய் அடைத்திருந்தன.. படக்கென ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டவளாய் படிக்கட்டு நோக்கி ஓடினாள்.. கால்கள் ரெண்டும் பிண்ணிக்கொள்ள, தடதடவென படியிறங்கினாள்.. இறங்குகையிலேயே, கீழே விழுந்த செல்ஃபோன் கண்ணில் தட்டுப்படுகிறதா என்று தவிப்பாக பார்த்தாள்..!!
இவளுடைய நிலையை அறியாத அசோக்.. மீராதான் காலை கட் செய்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டான்..!! நடுங்கிய விரல்களுடன் மீண்டும் கால் செய்து பார்க்க.. ஸ்விட்ச் ஆஃப் என்று வர..
"ஷிட்..!!!"
என்று கத்தியவன்.. ஏதோ ஒரு வேகத்தில் செல்ஃபோனை தரையில் ஓங்கி அடித்து விசிறினான்..!! தேங்காய் உடைத்தது போல.. பவானியின் செல்ஃபோன் சில்லு சில்லாக சிதறி ஓடியது..!!
'இன்னும் பத்து நிமிடங்கள்தான் உள்ளன.. எங்கே என்றே தெரியாத ஒரு வெளிநாட்டுக்கு, என்னருமைக்காதலி தப்பிச்செல்லப் போகிறாள்.. செல்ஃபோனை வேறு ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டாள்.. எப்படியாவது அவளை தடுத்தாக வேண்டும்.. என்ன செய்வது இப்போது..??'
எதுவும் புரியாமல் அசோக் நெற்றியை பிசைந்துகொண்டான்..!! எதேச்சையாக அவன் திரும்புகையில்தான்.. அந்த விளம்பரம் அவனுடைய பார்வையில் விழுந்தது..!! அதை பார்த்ததுமே அவனுடைய மூளையில் பளிச்சென்று ஒரு யோசனை..!! செய்யலாமா வேண்டாமா என்று சிந்திக்கக்கூட அவகாசம் ஒதுக்காமல்.. செய்துவிடவேண்டும் என்கிற உறுதியான முடிவுடன்.. தலையை சுழற்றி சுழற்றி எதையோ தேடினான்..!! அவன் தேடியது கிடைக்காமல் போகவும்.. அவசரமாக ஏர்போர்ட் என்ட்ரன்சை விட்டு வெளியே வந்தான்..!! வெளியே ஓடிய சிமெண்ட் சாலைக்கு அந்தப்பக்கமாக அவன் தேடியது காட்சியளித்தது.. அந்த கண்ணாடிக்கூண்டு.. பப்ளிக் டெலிஃபோன் பூத்..!!
அதே நேரத்தில்.. ஏர்ப்போட்டுக்குள்ளே.. உடலின் அத்தனை உறுப்புகளிலும் பதற்றம் தொற்றிக்கொண்டவளாய் மீரா தனது செல்ஃபோனை தேடிக்கொண்டிருந்தாள்..!! அவளுடைய கண்களில் பொலபொலவென கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.. புறங்கையால் அந்தக் கண்ணீரை அவ்வப்போது துடைத்துக் கொண்டாள்.. உதடுகள் அடிக்கடி 'அசோக்.. அசோக்..' என்று உச்சரித்துக் கொண்டிருந்தன..!! கீழ்த்தளத்தில் இருந்த இருக்கைகள், மேஜைகள், இண்டு இடுக்குகள் எல்லாம்.. தரையில் அமர்ந்து குனிந்து குனிந்து தேடினாள்..!!
"என்னம்மா.. என்ன தேடுறீங்க..??" அவளை கவனித்த ஒரு செக்யூரிட்டி வந்து கேட்டார்.
"எ..என் செல்ஃபோன்.. என் செல்ஃபோன் மேல இருந்து கீழ விழுந்துடுச்சு..!!"
மீராவுக்கு அந்த செக்யூரிட்டி உதவி செய்தார்.. அவளுடன் சேர்ந்து அவரும் செல்ஃபோன் தேட ஆரம்பித்தார்..!! சிதறிப்போன செல்ஃபோன் பாகங்களை.. இருவருமாக தேடிக்கண்டுபிடித்து ஒன்றிணைக்க.. ஐந்து நிமிடங்கள் ஆகிப் போயின..!!
"சென்னையிலிருந்து ரியாத்துக்கு செல்கிற ஏர்-இண்டியா விமானத்தின் பயணிகள்.. உடனடியாக ட்ரான்ஸ்போர்ட் டெஸ்கை அணுகவும்..!!"
மீரா பயணிக்கவிருந்த விமானம் புறப்பட தயார் நிலையில் இருக்கிற விஷயம்.. ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது..!! அதைக் கண்டுகொள்ளாமல்.. அவசரமாக பவானியின் எண்ணுக்கு கால் செய்த மீராவுக்கு.. ஏமாற்றமே பரிசாக கிடைத்தது.. செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக செய்தி..!!
"ப்ளீஸ் அசோக்.. பிக்கப்.. பிக்கப்..!!!!"
தவிப்பும் பதற்றமுமாய் அழுகையுடன் கதறிய மீரா.. திரும்ப திரும்ப அந்த எண்ணுக்கு கால் செய்து கொண்டிருந்தாள்..!! அப்போதுதான் திடீரென..
"கீய்ங்க்.. கீய்ங்க்.. கீய்ங்க்.. கீய்ங்க்..!!!!!"
என ஏர்ப்போர்ட்டுக்குள் எமர்ஜன்ஸி அலார்ம் அடித்தது.. ஆங்காங்கே சிவப்பு விளக்குகள் பளிச் பளிச்சென்று மின்னின.. அனைவரையும் உடனே ஏர்ப்போர்ட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய அவசரகால அறிவிப்பு..!!
"ஏதோ பிரச்சினைன்னு நேனைக்கிறேன்மா.. வா வெளில போயிடலாம்..!!" மீராவுக்கு உதவிய அந்த செக்யூரிட்டி பதற்றமாக சொன்ன அதே நேரத்தில்..
"ஏர்ப்போர்ட்ல பாம் வச்சிருக்காங்களாம்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வெடிக்கப் போகுதாம்.. எல்லாரும் ஓடுங்க.. ஓடுங்க..!!"
வெளியில் கசிந்த விஷயத்தை அறிந்துகொண்ட யாரோ.. டப்பிங் பட டயலாக் எஃபக்டில் கத்தினார்கள்..!!
அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் தேகத்தில் மழை பெய்த எருமை மாடுகளாய், அங்குமிங்கும் ஊர்ந்துகொண்டிருந்த மனிதர்கள்.. பட்டென வாலில் தீப்பிடித்துக்கொண்ட குரங்குகளாக மாறிப்போயினர்.. ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸ் நோக்கி திமுதிமுவென ஓடினர்..!! அத்தனை பேரின் மனதிலும் ஒரு உயிர்ப்பயம்.. அனைவரது முகத்திலும் ஒரு மரணபீதி..!! பயம்.. குழப்பம்.. அவசரம்.. இடைஞ்சல்.. நெரிசல்.. தள்ளுமுள்ளு..!!
எதுவும் புரியாமல் திகைத்தவாறு நின்றிருந்த மீராவை, அந்த செக்யூரிட்டியே..
"வாம்மா..!!" என்றவாறு கைபிடித்து இழுத்து சென்றார்.
first 5 lakhs viewed thread tamil
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸ்க்கு வெளியே.. அசோக் டெலிஃபோன் பூத்துக்கு அருகாகவே நின்று காத்திருந்தான்..!! எந்த நேரமும் வாசலை கிழித்துக்கொண்டு மனிதக்கும்பல் வெளிப்படும் என்று எதிர்பார்த்திருந்தான்..!!
"அஞ்சு நிமிஷத்துல பாம் வெடிக்கப் போகுது.. ஏர்ப்போர்ட் மொத்தமும் இடிஞ்சு தரைமட்டம் ஆகப்போகுது.. எத்தனை பேரை காப்பாத்த முடியுமோ அத்தனை பேரை காப்பாத்திக்கோங்க..!! எங்களை பகைச்சுக்குற வரைக்கும் இந்தியாவுக்கு இதே நெலமைதான்..!!"
பப்ளிக் டெலிஃபோன் பூத்தில் இருந்து.. ஏர்ப்போர்ட் அத்தாரிட்டிக்கு வடஇந்தியரின் ஸ்லாங்கில் அவன் விடுத்த எச்சரிக்கை.. நிச்சயம் பலனளிக்கும் என்றே அவன் எதிர்பாத்திருந்தான்..!! அவனுடைய எதிர்பார்ப்பு சற்றும் வீணாகவில்லை.. புற்றில் இருந்து புறப்பட்ட ஈசல்களாய்.. அந்த சிறிய நுழைவாயிலில் இருந்து புசுபுசுவென மனிதர்கள் வெளிப்பட்டு.. இவனை நோக்கி ஓடிவந்தனர்..!!
ஆனால்.. ஒருவகையில் அசோக்கிற்கு ஏமாற்றம்தான்..!! அமைதியாய் இயங்கிக்கொண்டிருந்த அந்த ஏர்ப்போர்ட்டுக்குள்.. அத்தனை மனிதர்கள் அடங்கியிருப்பார்கள் என்று அவன் கொஞ்சமும் நினைத்திரவில்லை..!! ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும்.. அடுத்தடுத்து.. வரிசையாகவும் வேகமாகவும் வெளிப்பட.. அவர்களுக்குள் மீராவின் முகத்தை தேடிக்கண்டுபிடிப்பது அவனுக்கு சிரமமாக இருந்தது..!! கருவிழிகளை அப்படியும் இப்படியுமாய் அசைத்து.. காதலியின் அழகுமுகத்தை அந்த மனிதத் தலைகளுக்குள் காணத்துடித்தான்..!!
ஒருவரை ஒருவர் இடித்து தள்ளிக்கொண்டு பயணிகள் அங்குமிங்கும் ஓடினர்.. அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய செக்யூரிட்டி கார்ட்களும் அவர்களுடன் சேர்ந்து ஓடினர்..!! இடையில் இருந்த சாலையில்.. பாம்ஸ்குவாட் வாகனங்கள்.. தலையில் ஒளிர்ந்த சிவப்பு விளக்குகளுடன்.. 'வீல்.. வீல்..' என்று அலறிக்கொண்டு.. எதிர்ப்புறம் சர்ர் சர்ர்ரென விரைந்தன..!!
அப்போதுதான்.. இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து வெளியே வந்த மீராவின் முகம்.. அசோக்கின் பார்வையில் விழுந்தது..!! அவளை கண்டுகொண்டதுமே அசோக்கிற்கு அப்படியொரு சந்தோஷம்..!!
"மீரா...!!!!!"
என்று கத்தியே விட்டான். அவன் கத்தியதை மீரா கவனிக்கவில்லை.
"மீரா...!!!!!"
மீண்டும் பெருங்குரலில் கத்தினான்.. இப்போது மீராவின் காதுகளில் இவனது சப்தம் கேட்டுவிட்டது.. உடனே திரும்பி பார்த்தாள்.. அசோக்கின் முகத்தை கண்டதும் அவளுக்குள் ஒரு திகைப்பு கலந்த பூரிப்பு..!!
"அசோக்...!!!!!"
அவளும் பதிலுக்கு அந்தப்பக்கம் இருந்து கத்தினாள்..!! குழப்பத்துடன் முண்டியடித்த ஜனங்களை விலக்கிக்கொண்டு.. அசோக்கின் பக்கமாக வரமுனைந்தாள்..!! ஆனால்.. அசோக்கிற்குத்தான் சற்றும் பொறுமை இல்லை.. உடனே அவளிடம் சென்று, அவளை தன்வசப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது மாதிரியாக அவனுக்குள் ஒரு உந்துதல்..!!
போக்குவரத்து தடுப்பை தடுப்பை தாண்டி குதித்தான்.. 'மீரா...!!' என்று கத்திக்கொண்டே சாலையின் குறுக்காக, மீராவை நோக்கி ஓடினான்.. விர்ரென்று சீறிக்கொண்டு வந்த அந்த கருநீல நிற வாகனத்தை கவனிக்க மறந்தான்..!! படுவேகத்தில் வந்த அந்த ஜீப் அசோக் மீது பலமாக மோதியது.. மோதியவேகத்தில் 'கிர்ர்ர்ர்ர்ர்ர்' என்று பிரேக்கடித்து நின்றது..!! ஆகாயத்தில் அசோக் தூக்கி எறியப்பட்டான்.. அவனுடைய தலை தரையில் சென்று நச்சென்று அடித்தது.. முகம் சிமெண்ட் சாலையில் உரசி உராய்ந்தது.. உடல் கடகடவென உருண்டு ஓடியது..!!
"அசோக்..!!!"
பார்த்த காட்சியில் பதறிப்போன மீரா.. அலறிக்கொண்டே அவள்பக்கம் இருந்த போக்குவரத்து தடுப்பில் ஏறி குதிக்கவும்.. அம்பு தைத்த பறவையாய், அவளுடைய காலடியில் சென்று அசோக் சொத்தென்று விழுவதற்கும்.. சரியாக இருந்தது..!!
"அசோக்..!!!"
மீரா அவசரமாய் குனிந்து அசோக்கை கையில் அள்ளிக்கொண்டாள்.. அவனுடைய முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே தோல் பெயர்ந்து வெளிறிப் போயிருந்தது.. நெற்றியில் அடிப்பட்ட இடத்திலிருந்து சிவப்பாய் ரத்தம் வழிந்தது.. அவனுடைய கண்கள் பாதி செருகிப் போயிருந்தன.. மார்புகள் படக் படக்கென காற்றுக்காக அடித்துக்கொண்டன..!! அத்தனை வேதனையிலும் அவனுடைய முகத்தில் மட்டும் ஒரு அசாத்திய நிம்மதி.. நினைத்ததை சாதித்துவிட்ட நிம்மதி..!!
first 5 lakhs viewed thread tamil
Posts: 3,160
Threads: 0
Likes Received: 346 in 315 posts
Likes Given: 1,312
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஐயோ.. ரத்தம்..!!!!" மீரா அழுகுரலில் அலறினாள்.
"எ..என்னடா இது.. ஏன்டா இப்படிலாம் பண்ற..??" புலம்பி அரற்றினாள்.
பாதி செருகிய விழிகளுடனும்.. படபடக்கிற உதடுகளுடனும்.. அசோக் இப்போது திக்கி திணறி பேசினான்..!!
"நா..நான்.. நான்தான் சொன்னேன்ல.. ந..நம்ம காதல் நம்மள சேர்த்து வைக்கும்னு..!! ந..நம்மள.. நேருக்கு நேர்.. மீட் பண்ண வச்சிருச்சு பாத்தியா..??"
"ஐயோ.. அசோக்..!!!!" அலறிய மீரா அசோக்கை தன் மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
"போ..போயிடாத மீரா.. எ..என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்..!!" கெஞ்சலாக கேட்டுக்கொண்டே.. அசோக் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்துக்கு சென்றான்..!!
"இல்லடா.. போகமாட்டேன்.. உன்னை விட்டு எங்கயும் போகமாட்டேன்..!!"
அவனது தலையை தாங்கிப் பிடித்திருந்த மீராவின் உள்ளங்கையில்.. ஈரமாய் எதுவோ பிசுபிசுக்க.. கையை வெளியே எடுத்து பார்த்தாள்..!! ரத்தம்..!!! அவனுக்கு பின்னந்தலையிலும் அடிபட்டிருக்கிறது என்று மீராவுக்கு புரிய.. நெஞ்சுக்குள் அடைத்த துக்கத்துடன் 'ஓ' வென்று கத்தினாள்..!!!
"யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன்.. ப்ளீஸ்..!!!"
அங்குமிங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து மீரா கெஞ்சலாக அலற.. அவளுடைய குரல்கேட்டு முதல் ஆளாக உதவிக்கு ஓடிவந்தான் அவன்.. அசோக்கையும் மீராவையும் ஆக்சிடன்டலாக இடித்து தள்ளிய அதே குண்டு ஆசாமி..!!
ஆழ்ந்த மயக்கத்தில் அசோக் இருந்திருந்தாலும்.. அந்த மயக்கம் முழுவதையும் மீராவே நிறைத்திருக்க வேண்டும்..!! அவள் தன்னுடன் இருப்பாளா.. இல்லை விட்டுச் சென்றுவிடுவாளா என்கிற ஏக்கம் அந்த மயக்கமும் முழுவதிலும் விரவிக் கிடந்திருக்க வேண்டும்..!! அதனால்த்தான்.. மயக்கத்தில் இருந்து விடுபட்டதுமே..
"மீரா..!!!"
என்று பதறியடித்துக்கொண்டே எழுந்தான்.. எழுந்ததுமே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.. எதிரே கவலையாக அமர்ந்திருந்த பாரதியும், மணிபாரதியும் காணக்கிடைத்தார்கள்.. ஆனால் அவனுடைய கண்களோ மீராவையே பரிதவிப்புடன் தேடின..!!
"மீ..மீரா.. மீரா எங்க மம்மி.. மீரா.. மீரா..!!"
அவனுடைய பார்வை அங்குமிங்கும் அலைபாய்ந்தது..!! திடீரென எழுந்ததுமே மகன் இவ்வாறு தவிக்கிற தவிப்பை பார்த்ததும்.. பெற்றோர்கள் இருவருக்கும் ஒருவகை திகைப்பு.. அவர்கள் பேச வாயெடுக்கும் முன்பாகவே..
"நா..நான் இங்க இருக்குறேன்..!!"
அசோக்கின் பின்புறமிருந்து மீராவின் குரல் கேட்டது.. எழுந்ததுமே அவளை எதிரே தேடினானே ஒழிய, தனது தலைக்கருகே அவள் அமர்ந்திருக்கிறாள் என்பதை அவன் கவனிக்கவில்லை.. இப்போது அவளது குரல் கேட்டதும், படக்கென திரும்பி பார்த்தான்..!! மீரா தன்னை விட்டுச்செல்லவில்லை, தன்னுடன்தான் இருக்கிறாள் என்ற உண்மை புரிந்ததும்.. அவனுடைய முகத்தில் ஒருவித நிம்மதியும் பரவசமும் ஒரே நேரத்தில் பரவின..!!
மீராவோ காதலும், கருணையும், ஏக்கமுமாய் இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அத்தனை உணர்சிகளும் கலந்துகட்டி அவளுடைய முகத்தில் கொப்பளித்தன..!! இரண்டடி நகர்ந்து முன்னால் வந்தவள்.. அசோக்கின் பெற்றோர்கள் அங்கிருக்கிறார்கள் என்பதைக்கூட மறந்துபோய்.. அவனை அப்படியே இறுக்கி அணைத்துக் கொண்டாள்..!! அசோக்கும் அந்த நொடிக்காகத்தான் காத்திருந்தவன் போல.. தனது கரங்களுக்குள் வைத்து அவளை பூட்டிக் கொண்டான்..!!
இணைந்துவிட்ட இளங்காதலர்கள் இருவரையும்.. முதிர்ந்த காதலர்கள் இருவரும் ஓரிரு வினாடிகள் பெருமிதமாக பார்த்தனர்..!! பிறகு முகத்தை திருப்பி ஒருவரை ஒருவர் பார்த்து மெலிதாக புன்னகைத்துக் கொண்டனர்..!! இருவருக்கும் இப்போது ஒரு முழு நிம்மதி வந்திருக்க.. 'இடத்தை காலி செய்வது நல்லது' என்று புரிந்துகொண்டு.. அந்த அறையை விட்டு வெளியேறினர்..!!
அசோக்கும் மீராவும் பேசிக்கொள்ளவே இல்லை.. இறுக்கி அணைத்துக் கொண்டவர்கள், அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தனர்..!! ஒருவருடைய கைவிரல்கள் அடுத்தவரின் முதுகைப் பற்றி பிசைந்தன.. ஒருவருடைய மார்புத்துடிப்பை அடுத்தவரின் மார்புகொண்டு உணர முடிந்தது.. ஒருவருடைய சுவாசத்தில் அடுத்தவருடைய மூச்சுக்காற்று கலந்திருந்தது..!! செயலற்றுப்போய் அவர்கள் அவ்வாறு அமர்ந்திருந்தாலும்.. அவர்களுடைய உதடுகள் மட்டும் ஒரே வாக்கியத்தை திரும்ப திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தன..!!
first 5 lakhs viewed thread tamil
•
|