screw driver ஸ்டோரீஸ்
"என்னாச்சு அசோக்..??" மீண்டும் கேட்ட மும்தாஜிடம் திரும்பி,

"ஸாரி மும்தாஜ்.. நீங்க ஏதாவது ஒரு ஆட்டோ பிடிச்சு போயிடுறீங்களா.. எனக்கு அர்ஜண்டா ஒரு வேலை இருக்கு..!!" என்றான்.

மும்தாஜின் பதிலுக்காக கூட காத்திராமல், அலுவலகத்தை விட்டு அவசரமாய் வெளியேறினான்.. தடதடவென படியிறங்கி கீழ் தளத்துக்கு வந்தான்.. பைக்கின் நெற்றியில் சாவி போட்டு திருகி, கிக்கரை படக்கென உதைத்தான்.. ஆக்சிலரேட்டரை முழுவதுமாக முறுக்கி, வண்டியை விர்ரென பறக்க விட்டான்..!!

அடுத்த ஐந்தாவது நிமிடம்.. அசோக் ஸ்ரீனிவாச பிரசாத்தின் முன்பாக அமர்ந்திருந்தான்..!! யாரிடமோ டெலிபோனில் பேசியவர்.. பேசிமுடித்ததும் ரிஸீவரை அதனிடத்தில் வைத்தார்..!! அசோக்கோ பொறுமையற்றவனாய் கேட்டான்..!!

"என்ன ஸார் சொல்றாங்க..??"

"அந்த விஜயசாரதி இந்தியாதான் வந்திருக்கானாம்.. ரெண்டு நாளாச்சு..!! அவனோட இண்டியன் காண்டாக்ட் நம்பர் தெரியலைன்னு சொல்றாங்க..!!"

"ஓ..!! இப்போ என்ன ஸார் பண்றது..??"

"ம்ம்ம்ம்.. அவங்களோட மாதவரம் பங்களா அட்ரஸ் எனக்கு தெரியும்.. அங்கதான் போய் விசாரிக்கணும்..!!"

"அ..அப்போ வாங்க ஸார் இப்போவே கெளம்பலாம்..!!" அசோக் அவசரப்பட்டான். ஸ்ரீனிவாச பிரசாத் நிதானமாகத்தான் இருந்தார்.

"டேய்.. கேக்குறேன்னு தப்பா நெனைக்காத..!! உன் சந்தேகம் சரிதான்னு உனக்கு தோணுதா..??"

"ஹையோ.. நான் ஸ்ட்ராங்கா நம்புறேன் ஸார்..!! இந்த விஜயசாரதிதான் மீராவுக்காக அந்த ஸிம் வாங்கி தந்திருக்கணும்.. அவளை லவ் பண்ற மாதிரி நடிச்சு ஏமாத்திருக்கணும்.. அதனாலதான்.. நீங்க மீராவோட அடையாளம்லாம் சொல்லி அவளை தெரியுமான்னு கேட்டப்போ.. அவன் தெரியாதுன்னு சொல்லி மழுப்பிருக்கனும்..!! அவன்தான் ஸார்.. அவனேதான்.. சந்தேகமே இல்ல..!! அவனை விசாரிச்சா என் மீரா எங்க இருக்கான்னு தெரிஞ்சிடும் ஸார்..!!"

"ஹ்ம்ம்..!! சரி நீ சொல்றது உண்மைனே வச்சுப்போம்..!! இப்போ மட்டும் அவன் வாயை திறப்பான்னு என்ன நிச்சயம்..?? இப்போவும்.. அவளை எனக்கு தெரியவே தெரியாதுன்னு அவன் அடம்பிடிச்சா..??"

"விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா உண்மையை சொல்லுவான் ஸார்..!!"

"டேய்.. அவங்கள்லாம் பெரிய ஆளுங்கடா.. அந்த மாதிரிலாம் அடிச்சு விசாரிக்க முடியாது..!!"

"ஹையோ நானும் அந்த அர்த்ததுல சொல்லல ஸார்..!! அவன்கிட்ட எப்படியாவது, கெஞ்சி கூத்தாடியாவது மீரா பத்தி தெரிஞ்சுக்கணும்.. ப்ளீஸ் ஸார்..!!"

அசோக் கெஞ்சலாக சொல்ல.. ஸ்ரீனிவாச பிரசாத் அவனுடைய முகத்தையே சில வினாடிகள் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார்..!! 'காதல் மனிதனை என்னன்ன பாடெல்லாம் படுத்துகிறது?' என்பது மாதிரி இருந்தது அவரது பார்வை..!! பிறகு ஒரு பெருமூச்சுடனே எழுந்து கொண்டவர்..

"சரி வா.. கெளம்பலாம்..!!" என்றார்.

வடபழனி காவல் நிலையத்தில் இருந்து.. அசோக்கும் ஸ்ரீனிவாச பிரசாத்தும் போலீஸ் ஜீப்பில் கிளம்பினார்கள்..!! நூறு அடி சாலையை அடைந்ததும்.. ஸ்ரீனிவாச பிரசாத் ஜீப்பின் வேகத்தை அதிகரித்தார்..!! அரை மணி நேரமும், ஐந்து நிமிடங்களும் கழிந்த போது.. அந்த மாதவரம் வீட்டை அவர்கள் அடைந்திருந்தனர்..!! ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு முன்பே அறிமுகமாகியிருந்த.. கே.கே.மூர்த்தியின் பி.ஏவை சந்தித்து பேசினர்..!!

"என்ன ஸார்.. தம்பியை தேடிக்கிட்டு அடிக்கடி வர்றீங்க.. எதுவும் பிரச்சினை இல்லையே..??"

"இல்ல ஸார்.. ஆக்சுவலா இது வேற பிரச்சினை.. மிஸ்டர் விஜயசாரதி மூலமா யூஸ்ஃபுல் இன்ஃபர்மேஷன் ஏதாவது கெடைக்குமான்னு பாக்குறோம்.. வேற ஒன்னுல்ல..!!"

"ஹ்ம்ம்.. தம்பி ரெண்டு நாளு முன்னாடிதான் இந்தியாவுக்கே வந்தாப்ல..!!"

"தெரியும் ஸார்.. நீங்க தந்த நம்பருக்கு ட்ரை பண்ணிட்டுத்தான் இங்க வர்றேன்..!!"

"ஓ.. அப்படியா.. சரி சரி..!! ம்ம்ம்.. அவர் இப்போ வீட்ல இல்லிங்களே.. வெளில போயிருக்காரு..!!"

"எங்க போயிருக்காருன்னு தெரிஞ்சுக்கலாமா..??"

"எங்க போயிருப்பாரு.. சனிக்கிழமை சாயந்திரம்.. ஃப்ரண்ட்ஸ் யாரையாவது கூட்டிக்கிட்டு ரெட்ஹில்ஸ்ல இருக்குற கெஸ்ட் ஹவுஸுக்கு போயிருப்பாரு..!!"

"ம்ம்.. அவரை காண்டாக்ட் பண்றதுக்கு எதுவும் நம்பர் இருக்கா..??"

"ஓ எஸ்.. இருக்கே..!!"

அவர் நம்பரை சொல்ல.. அசோக் தனது செல்போனில் சேகரித்துக் கொண்டான்..!! சேகரித்துக் கொண்ட வேகத்திலேயே அந்த எண்ணுக்கு கால் செய்தான்.. என்கேஜ்டாக இருந்தது..!! சிறிது நேரம் காத்திருந்துவிட்டு.. மீண்டும் கால் செய்து பார்க்க.. மீண்டும் என்கேஜ்ட்..!! திரும்பவும் அந்த எண்ணை முயற்சி செய்ய நினைத்த அசோக்கை.. இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் தடுத்தார்..!!

"வேணாம் அசோக்.. விடு..!!"

"ஏன் ஸார்..??"

"இந்த மேட்டரை ஃபோன்ல பேசுறது அவ்வளவு நல்லதில்லன்னு தோணுது.. நேர்லயே போய் பேசிடலாம்..!!" அமர்த்தலாக சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத், எதிரே இருந்த பி.ஏவிடம் திரும்பி,

"ஸார்.. அந்த ரெட்ஹில்ஸ் கெஸ்ட் ஹவுஸோட அட்ரஸ் கொஞ்சம் சொல்றீங்களா..??" என்று கேட்டார்.

அதே நேரம்..

"No 37, தேவன்பு ஸ்ட்ரீட், off G.N.T ரோட், ரெட்ஹில்ஸ்..!!"

கார் ஓட்டிக்கொண்டிருந்த விஜயசாரதி.. காதில் வைத்திருந்த செல்ஃபோனில் அந்த கெஸ்ட் ஹவுஸின் முகவரியை சொல்லிக்கொண்டிருந்தான்..!! அடுத்த முனையில் அதைக் கேட்டுக்கொண்டிருந்தது.. சாட்சாத் நமது மீராவேதான்..!!!!

"நீதான் ஏற்கனவே அந்த வீட்டுக்கு வந்திருக்கல..?? உடம்புல ஒட்டுத்துணி இல்லாம.. நாலு மணி நேரம் அந்த வீட்ல படுத்திருந்த.. ஞாபகம் இல்ல..??" விஜயசாரதியின் குரலில் எள்ளல் தொனித்தது.

"ஏன் இப்படிலாம் பண்ற..??" கேட்ட மீராவின் குரலில் ஒரு மிதமிஞ்சிய ஆத்திரமும், ஆதங்கமும் வெடித்து சிதறியது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
[Image: RA+64.jpg]



"ஹாஹா.. அப்படி என்ன பண்ணிட்டேன்..??"

"ஏற்கனவே என் வாழ்க்கையை கெடுத்து நாசமாக்கிட்ட.. இன்னும் உனக்கு வெறி அடங்கலையா..??"

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!" பெரிதாக ஒரு சிரிப்பை வெளிப்படுத்திய விஜயசாரதி தொடர்ந்து பேசினான்.

"என்ன பண்ண சொல்ற டார்லிங்..?? நான் பாட்டுக்கு கம்முனு இருந்தேன்.. உண்மையை சொல்லப்போனா.. என் செல்லத்தை நான் சுத்தமா மறந்தே போயிட்டேன் தெரியுமா..?? ப்ராமிஸ்டா செல்லம்.. என்னை நம்பு..!!"

"...................."

"ஹ்ம்ம்.. சும்மா இருந்தவன்கிட்ட வந்து.. 'நான் இருக்கேன், நான் இருக்கேன்'ன்னு உன்னை நீயே ஞாபகப்படுத்தி விட்டுட்டு.. இப்போ என்னை குத்தம் சொன்னா என்ன நியாயம் டார்லிங்..??"

"நான் என்ன பண்ணினேன்..??"

"என்ன பண்ணுனியா..?? உன்னை யார் போலீஸ்க்குலாம் போக சொன்னது..??"

"எத்தனை தடவை சொல்றது.. நான் போலீஸ்க்கு போகல, போலீஸ்க்கு போகலன்னு..!!"

"அப்புறம் எப்படி அவங்களுக்கு என் நம்பர் தெரிஞ்சது.. உன்னை பத்திலாம் தெரிஞ்சது..??"

"அது வேற பிரச்னை.. சொன்னா உனக்கு புரியாது..!!"

"ஹாஹா.. வாட்டெவர்.. ஐ டோன்ட் கேர்..!! சும்மா இருந்தவன் மனசுல.. அந்த ஆள் கால் பண்ணி உன்னை பத்தி விசாரிச்சதும் ஆசை வந்துடுச்சும்மா..!! உன் உடம்பு.. அந்த ஷேப்.. அந்த ஸ்மெல்.. நீ எனக்கு தந்த சுகம்.. வாவ்...!!! நெனச்சு பாத்ததுமே உடம்புல அப்படியே குப்புனு ஒரு சூடு ஏறிடுச்சு செல்லம்..!! அதான் இன்னும் ரெண்டு வாரத்துல இண்டியா போறோமே.. ரெண்டாவது இன்னிங்ஸ் ஆடிப்பாக்கலாமான்னு ஒரு ஆசை வந்துடுச்சு..!! அந்த ஆசையை அடக்க முடியாமத்தான் அன்னைக்கு உனக்கு கால் பண்ணினேன்..!!"

"ப்ளீஸ் விஜய்.. இது வேணாம்.. என்னை விட்ரு..!!" மீரா திடீரென கெஞ்சினாள்.

"அப்போ அந்த வீடியோ உனக்கு வேணாமா..?? நெட்ல போட்ரலாமா..??"

"நோ..!!!!"

"எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லப்பா.. என் மூஞ்சி அதுல சுத்தமா தெரியாது..!! உன்னோட லவ்லி ஃபேஸ்தான் அதுல ஹைலைட்டே..!!"

"ஏன் என்னை இப்படி சித்திரவதை பண்ற.?? ப்ளீஸ்.. அந்த வீடியோவை எங்கிட்ட குடுத்திடு..!!"

"அப்போ ரெட்ஹில்ஸ் வா.. ஜஸ்ட் இன்னைக்கு நைட் மட்டும்.. சித்திரவதை பண்ண கூப்பிடல.. சந்தோஷமா இருக்கலாம்னுதான் கூப்பிடுறேன்..!! இன்னும் என் செல்ஃபோன்லதான் அந்த வீடியோ இருக்குது.. காலைல நீ போறப்போ என் செல்ஃபோனோட சேர்த்து, அதை உனக்கு காதல்பரிசா குடுத்துடுறேன்.. ஓகே வா..??"

"...................."

"ஹ்ம்ம்.. அன்னைக்கு நீ மயக்கத்துல இருந்ததால.. நெறைய விஷயம் ட்ரை பண்ண முடியலடி செல்லம்.. எனக்கு ரொம்ப வருத்தம் தெரியுமா..?? அதெல்லாத்தையும் இன்னைக்கு பண்ணி பாக்குறோம்.. எல்லாம் உன்னோட சுயநினைவோட.. தெகட்ட தெகட்ட..!! You are going to enjoy this chellam.. I promise..!!"

விஜயசாரதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. அவனது நம்பருக்கு இன்னொரு கால் வருவதை.. 'கீங் கீங்' என்று ஒலியெழுப்பி அவனது செல்ஃபோன் அறிவித்தது..!! உடனே..

"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுடா செல்லம்.. எனக்கு இன்னொரு கால் வருது.. நான் திரும்ப கூப்பிடுறேன்..!!"

என்றுவிட்டு மீராவுடனான தொடர்பை துண்டித்தான்..!! செல்ஃபோன் டிஸ்ப்ளே பார்த்தவன்.. அன்னோன் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்திருந்தப்பதை தெரிந்துகொண்டான்.. அசோக்கின் நம்பர் அது..!! அன்னோன் நம்பர் என்று தெரிந்ததும்.. திரும்ப கால் செய்யும் எண்ணத்தை கைவிட்டான்.. மீண்டும் மீராவின் எண்ணை அழைக்க நினைத்தான்..!! அதற்குள்ளாகவே அவனது செல்ஃபோனுக்கு வேறொரு நம்பரில் இருந்து கால் வந்தது..!!

"KASI CALLING..!!!"

என்று பளிச்சிட்டது செல்ஃபோன் டிஸ்ப்ளே..!! காசி.. போதைப்பொருள் விநியோகிப்பவன்.. போலீஸாரால் வலைவீசி தேடப்படுகிறவன்..!! விஜயசாரதி அந்த காலை அட்டண்ட் செய்தான்.. குரலில் ஒரு புது உற்சாகத்துடன் பேசினான்..!!

"சொல்லு மாமு.. எங்க இருக்குற..??"

"அங்கதாண்டா வந்துட்டு இருக்குறேன்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்..!!"

"ஓ.. நானும் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்..!! அதுசரி.. சரக்கு ரெடியா..?? அதை சொல்லு மொதல்ல..!!"

"ம்ம்.. ரெடி ரெடி..!! நீ சொன்னதை விட நெறயவே ரெடி..!!"

"வாவ்...!!!!! தேட்ஸ் க்ரேட்..!!!!!" விஜயசாரதி குதுகலிக்க, காசியின் குரலில் ஒரு சீரியஸ்னஸ்.

"மாமு இன்னொரு விஷயம்..!!"

"என்ன..??"

"சொல்றேன்னு தப்பா நினைக்காத.. அமவுன்ட்டு உடனே வேணுண்டா..!!"

"ஏய்.. என்னடா இது.. ஏதோ புது ஆள்ட்ட பேசுற மாதிரி பேசுற..?? நமக்குள்ள பணம்லாம் ஒரு பிரச்சினையா..??"

"அதுக்கு சொல்லல மாமு..!! முன்ன மாதிரி இல்ல.. இப்போலாம் கெடுபுடி ஜாஸ்திடா.. உனக்காக ரொம்ப கஷ்டப்பட்டு அரேஞ்ச் பண்ணிருக்கேன்..!! அதில்லாம.. நானே இப்போ பல பிரச்னைல இருக்கேன்..!! பணம் இல்லாம ஒன்னும் பண்ண முடியாது மாமு..!!"

"ப்ச்.. ஒன்னும் கவலைப்படாத.. உடனே வாங்கிக்கலாம்..!! ஆமாம்.. வேற எதோ பிரச்னைன்னு சொன்னியே.. என்னது..??"

"இப்போ வேணாம்.. எல்லாம் அங்க வந்து விவரமா சொல்றேன்..!!"

"வா வா..!! ரொம்ப நாள் அப்புறம் மீட் பண்றோம்ல.. உனக்கு பணம் மட்டும் இல்ல.. செம்மையா ஒரு விருந்தே ரெடி பண்ணி வச்சிருக்கேன் மாமு..!!"

"விருந்தா.. என்ன விருந்து..??"

"கோழி விருந்து மாமு..!! பொட்டைக் கோழி.. அதுலயும் சக்கையான வெடக்கோழி..!!"

"ஏய்.. என்னடா சொல்ற..??"

"அனுஷ்கா பிடிக்குமா உனக்கு ..??"

"யாரு.. நம்ம அருந்ததி அனுஷ்காவா..??"

"ம்ம்.. அவளேதான்..!!"

"பிடிக்குமே.. ஏன் கேக்குற..??"

"அவள்லாம் இவகிட்ட பிச்சை வாங்கணும்.. அந்த அளவுக்கு இருப்பான்னா பாத்துக்கோ..!!"

"யார்டா அது.. ஐட்டமா..??"

"ஐட்டமா..?? அடப்பாவி.. நானே தேத்துனதுடா..!!"

"நீயே தேத்துனதா.. அப்புறம் என்னையும் கூப்பிடுற.. அந்தபொண்னுக்கு ஓகேவா..??"

"அவகிட்ட பெர்மிஷன்லாம் வேற கேக்கணுமா..?? நாம நில்லுனா நிப்பா.. உக்காருனா உக்காருவா மாமு..!!"

"என்னடா சொல்ற.. எனக்கு ஒன்னும் புரியல..!!"

"அவ மேட்டர் ஒன்னு நம்மகிட்ட மாட்டிருக்குது மாமு.. நாம என்ன சொன்னாலும் அவ கேட்டுத்தான் ஆகணும்..!! என்ன்ன்ன சொன்னாலும்..!!! புரியுதா..??"

"ஓ..!! ஏதாவது பிரச்னையாகிட போகுதுடா..!!"

"ஒரு பிரச்னையும் இல்ல மாமு.. அவளை எனக்கு நல்லா தெரியும்.. சரியான தொடை நடுங்கி.. புள்ளப்பூச்சி மாமு அவ..!! அந்த புள்ளப்பூச்சியை இன்னைக்கு பறக்கவிட்டு பறக்கவிட்டு அடிச்சு நசுக்குறோம்.. புரியுதா..?? சீக்கிரம் வா.. ஒரு பொண்ணுகிட்ட இதெல்லாம் பண்ணிப் பாக்கனும்னு உனக்கு அசிங்கமான ஆசைலாம் இருக்கும்ல.. அதெல்லாம் அவகிட்ட இன்னைக்கு பண்ணிப் பாத்துடலாம்.. வா..!!" குரூரமாக சொல்லிவிட்டு காலை கட் செய்தான் விஜயசாரதி
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Interesting
Like Reply
அதேநேரம்..

ரெட்ஹில்ஸ் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த மீரா.. விஜயசாரதியிடம் பேசிமுடித்து கையிலேயே வைத்திருந்த செல்ஃபோனை.. (அசோக்குடன் பழகிய காலத்தில் அவன் அறியாமல் பதுக்கி வைத்திருந்த அந்த செல்ஃபோனை..) இப்போது ஹேண்ட் பேக் திறந்து உள்ளே வைத்தாள்..!! அந்த மாதிரி அவள் உள்ளே வைக்கையில்.. பேகுக்குள் இருந்த அந்த வஸ்து பளிச்சென்று வெளியே தெரிந்தது..!!

அரையடிக்கும் சற்று அதிகமான நீளத்தில்.. பளபளவென மினுமினுத்த ஒரு உலோக கத்தி..!!

"இந்த லெஃப்ட் எடுத்துக்கோங்கண்ணா..!!" ஆட்டோ ட்ரைவரிடம் மிக இயல்பான குரலில் சொன்னாள் மீரா.

அதேநேரம்..

அசோக்கும் ஸ்ரீனிவாச பிரசாத்தும் ஜீப்பில் ஏறியிருந்தார்கள்.. ரிஸ்வான் ரோட்டில் மிதமான வேகத்தில் ஜீப் சென்றுகொண்டிருந்தது..!! அசோக்கும் சரி.. ஸ்ரீனிவாச பிரசாத்தும் சரி.. எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.. முகத்தை மிக இறுக்கமாகவே வைத்திருந்தனர்.. அவரவர் மூளைகளில் விழைந்த சிந்தனைகளிலேயே மிக கவனமாக இருந்தனர்..!!

திருமுருகன் நகர் ஜங்கஷனில் எதிர்கொண்ட ட்ராஃபிக்கை சமாளித்து.. ரெட்ஹில்ஸ் வந்து சேர அவர்களுக்கு அரைமணிநேரம் ஆனது..!! பி.ஏவிடம் வாங்கிக்கொண்ட முகவரியை அடைய மேலும் ஐந்து நிமிடங்கள் ஆனது..!!

இளஞ்சிவப்பு நிறத்தில் மிக பளபளப்பாக நின்றிருந்தது அந்த விருந்தினர் மாளிகை.. அருகில் வேறேதும் வீடுகள் இன்றி தனித்திருந்தது..!! பத்தடி உயரத்திற்கு காம்பவுண்ட் சுவர்.. பச்சை மரங்கள் அந்த காம்பவுண்ட் சுவரை ஒட்டி வளர்ந்து, நீளநீளமாய் வெளியே தலைநீட்டின..!! இரும்பு பட்டைகளாலும் மரத்தகடுகளாலும் ஆன அகலமான வாயிற்கதவு..!! பறவைகளின் சப்தத்தை தவிர.. சுற்றிலும் நிசப்தம்..!!

வாசலில் வாட்ச்மேன் இல்லை.. கேட்டை திறந்த ஸ்ரீனிவாச பிரசாத் உள்ளே நுழைந்தார்.. அசோக் அவரை பின்தொடர்ந்தான்..!! கேட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் இருந்த வீட்டுக்கு.. இங்கிருந்தே சிமென்ட்டில் சாலை போடப்பட்டிருந்தது.. ஒரே ஒரு கார் மட்டுமே செல்லும் அகலத்திலான குறுகலான சாலைதான்..!! அந்த சிமெண்ட் சாலையின் இருபுறமும்.. பச்சை பச்சையாய் கொத்து கொத்தாய் வளர்ந்திருந்த செடிகள்.. அழகாகவும் கச்சிதமாகவும் முடிவெட்டிக் கொண்டிருந்தன அந்த செடிகள்..!! அசோக் அந்த செடிகளில் விரல்கள் நுழைத்து தடவியவாறே.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் பின்னால் சென்றான்..!!

வீட்டை அடைந்ததும்.. ஸ்ரீனிவாச பிரசாத் காலிங் பெல் அழுத்தினார்..!! உள்ளே குருவி கத்துகிற எஃபக்டில் காலிங் பெல் கதறுவது வெளியிலேயே கேட்டது..!! இருந்தாலும் சிறிது நேரத்திற்கு உள்ளிருந்து எந்த எதிர்ச்செயலும் இல்லை..!! மேலும் இரண்டு மூன்று முறை காலிங் பெல் அழுத்தி ஸ்ரீனிவாச பிரசாத் சோர்ந்து போன சமயத்தில்தான்.. அசோக் எதேச்சையாக கதவின் மீது கை வைக்க.. அது கொஞ்சமாய் திறந்து கொண்டது..!! உடனே இருவரது முகத்திலும் ஒரு ஆச்சரியம்.. கொஞ்சம் குழப்பம்..!!

"தெறந்தேதான் இருக்கு ஸார்..!!"

சொல்லிக்கொண்டே அசோக் கதவின் மீது கைவைத்து நன்றாக உள்ளே தள்ள.. அது முழுவதுமாய் திறந்து கொண்டது..!! இயல்பாக உள்ளே நுழைந்து வீட்டுக்குள் பார்வையை வீசிய இருவரையும்.. ஒரு உச்சபட்ச அதிர்ச்சி வந்து தாக்கியது.. இருவரது இருதயங்களும் படக்கென சொடுக்கிவிடப்பட்டு, தறிகெட்டு துடித்தன..!!

உள்ளே.. கருஞ்சிவப்பான ரத்தவெள்ளத்தில்.. இரண்டு மனித உடல்கள் மிதந்து கொண்டு கிடந்தன.. இரண்டுமே ஆணின் உடல்கள்..!! ஒருவன் சோபாவில் சரிந்திருந்தான்.. ஒருவன் தரையில் வீழ்ந்திருந்தான்..!! தலை, மூக்கு, மார்பு, தொடை என.. உடலின் எல்லா பாகங்களில் இருந்தும் சராமாரியாக குருதி வெளிப்பட்டு வெளியே வடிந்திருந்தது..!! ரத்தத்தில் நனைந்த கண்ணபிரானின் உலோக சிலை வேறு.. அவர்களுடன் சேர்ந்து தரைவிரிப்பில் வீழ்ந்து கிடந்தது..!! இருவரும் நூறு சதவீதம் இறந்துவிட்டார்கள் என்பது.. பார்க்கையிலேயே தெரிந்தது..!!

ஸ்ரீனிவாச பிரசாத்தாவது பரவாயில்லை.. அசோக் அந்த மாதிரி ஒரு அதிர்ச்சியை தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை.. கண்களில் கண்ட காட்சியில் அப்படியே வெலவெலத்துப்போய் நின்றிருந்தான்..!! ஸ்ரீனிவாச பிரசாத்-தான் முதலில் சுதாரித்துக் கொண்டார்.. எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல், படக்கென அவருடைய வலதுகையில் அந்த பிஸ்டல் முளைத்தது.. அதன் மேற்புறத்தை பிடித்து இழுத்து, சேஃப்டி கேட்சை விடுவித்துக் கொண்டவர்.. தடதடவென வீட்டுக்குள் ஓடினார்..!! அசோக் என்ன செய்வதென்றே தெரியாமல்.. இறந்து கிடந்த பிணங்களை பார்த்தவாறு அசையாமல் நின்றிருந்தான்..!!

உள்ளே ஓடிய ஸ்ரீனிவாச பிரசாத்.. கையில் விறைப்பாக பிடிக்கப்பட்ட துப்பாக்கியுடன்.. ஒவ்வொரு அறையாக சென்று அலசினார்.. ஒருவரும் அகப்படவில்லை..!! பின்பு வீட்டுக்கு பின்புறமாக ஓடினார்.. பின்புற வாசல் திறந்தே கிடந்தது..!! வீட்டுக்கு பின்புறம் காம்பவுண்ட் சுவர் இல்லை.. பெரிய பரப்பிலான காலியிடம்.. குட்டையும், நெட்டையுமாய் ஆங்காங்கே செடிகள்..!! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை.. ஆள்நடமாட்டம் ஏதும் இல்லை..!!

ஸ்ரீனிவாச பிரசாத் சிறிது நேரம் அங்கேயே நின்று சுற்று முற்றும் பார்த்தார்.. உபயோகமாக எதுவுமில்லை என்று அறிந்தபிறகு, 'ச்சே' என்ற சலிப்புடன் மீண்டும் வீட்டுக்குள் புகுந்தார்..!! அவர் வீட்டுக்குள் புகுந்த சில வினாடிகளில்.. வீட்டு சுவற்றை ஒட்டியிருந்த புதருக்குள் இருந்து.. மீரா வெளிப்பட்டாள்..!!!! அவளுடைய முகம் வியர்த்து வடிந்தது.. செடிகளுக்கு மத்தியில் நீளமாக சென்ற அந்த ஒத்தையடிப்பாதையில் நுழைந்து.. புயல்வேகத்துடன் ஓடினாள்..!!

ஹாலுக்குள் நுழைந்த ஸ்ரீனிவாச பிரசாத்.. பிஸ்டலின் சேஃப்டி கேட்சை போட்டு.. இடுப்பில் செருகிக்கொண்டார்..!! பிரம்மை பிடித்தவன் மாதிரி நின்றிருந்த அசோக்கிடம்..

"உள்ள யாரும் இல்ல அசோக்..!! உசுரு இருக்குதான்னு பாத்தியா..??" என்று கேட்டார்.

அவனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே.. அவரே ரத்தவெள்ளத்தில் மிதந்தவர்களிடம் பார்வையை திருப்பினார்.. அதில்.. சோபாவில் சரிந்திருந்தவனின் முகத்தை சற்றே உன்னிப்பாக கவனித்ததும்.. நெற்றியை சுருக்கினார்..!!

"இவன் நெற்குன்றம் காசில..?? இவன் எப்படி இங்க..??" என்று குழப்பமாக முணுமுணுத்தார்.

விழுந்து கிடந்தவர்களிடம் குனிந்து.. அவர்களது மூச்சையும், நாடித்துடிப்பையும் சோதனை செய்து பார்த்தார்..!! ஒருசிலவினாடிகள்.. பிறகு எழுந்துகொண்டவாறே.. அசோக்கிடம் சொன்னார்.!!

"உசுரு இருக்குற மாதிரி தெரியல அசோக்.. எதுக்கும் நான் ஆம்புலன்ஸ்க்கு கால் பண்றேன்..!! நீ அப்படியே அசையாம நில்லு.. இங்க இருக்குற எதையும் தொட்டுறாத.. சரியா..??"

பதட்டமான குரலிலேயே சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத்.. பாக்கெட்டில் இருந்து செல்ஃபோன் எடுத்தார்.. 'பட் பட்'டென அந்த செல்ஃபோனை அழுத்தியவர்.. பிறகு..

"ஆங்.. கனகு.." என்றவாறே வாசலை நோக்கி நடந்து வெளியே சென்றார்.

அசோக் வீட்டுக்குள்ளேயே அசையாமல் நின்றிருந்தான்.. இதயத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னுமே அவனால் மீளமுடியவில்லை.. உண்டான படபடப்பு அடங்க சிறிது நேரம் பிடித்தது அவனுக்கு..!! கொஞ்சம் கொஞ்சமாய் அவன் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போதுதான்.. அவனுடைய கவனத்தை அந்தப்பொருள் ஈர்த்தது..!! உடனே அவனுடைய முகத்தில் ஒரு சீரியஸ்னஸ்.. கண்களில் ஒரு கூர்மை..!! நின்ற இடத்தில் இருந்து மெல்ல அடியெடுத்து வைத்தான்.. தரையில் விழுந்து கிடந்தவனை அடைந்ததும்.. சற்றே குனிந்து.. கீழே கிடந்தவனின் காலுக்கடியில் கிடந்த அதை கையில் எடுத்தான்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கோல்ட் கலரினால் ஆன.. ஹார்ட் ஷேப்பினால் ஆன.. பளபளப்பான அந்த குட்டி பென்டன்ட்..!! மீராவின் ப்ரேஸ்லட்டில் மினுமினுப்புடன் தொங்குமே.. அதே பென்டன்ட்..!!

[Image: RA+65.jpg]



அதைப் பார்த்ததுமே அசோக்கிற்கு சுரீர் என்றது.. அவனுடைய புத்தி சரமாரியாய் எதை எதையோ யோசிக்க ஆரம்பித்தது..!! 'அப்படியானால்.. அப்படியானால்.. மீராதான் இதையெல்லாம் செய்ததா..?? காதலித்து ஏமாற்றியவனை கத்தியெடுத்து பழி தீர்த்துக் கொண்டாளா..??' ஆமாம் என்றது அவனது மூளை.. நம்ப மறுத்தது அவனது மனம்..!!

கருப்பொருள் ஒன்றிருக்குதடா..
காவுக்காய் காத்திருக்குதடா..!!


மீரா எழுதிய கவிதையின் கடைசி வரிகள் அவனது காதுக்குள் க்றீச்சிட்டன..!! வியர்த்துப் போனது அவனுக்கு இப்போது.. உடம்பெல்லாம் வெடவெடக்க ஆரம்பித்தது.. இருதயம் இன்னும் வேகமாய் படபடக்க ஆரம்பித்தது..!!

அப்போதுதான் அவனது மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல் கீற்று..!! 'மீரா இங்கே வந்து சென்றிருக்கிறாள் என்றால்.. ஒருவேளை.. நான் இந்த விஜயசாரதிக்கு கால் செய்தபோது என்கேஜ்டாக இருந்ததே.. அந்த நேரத்தில் இவன் மீராவுடன் பேசிக்கொண்டிருந்திருப்பானோ..?? அப்படியானால்.. இவனது செல்ஃபோனில் மீராவின் தொடர்பு எண் பதிவாகியிருக்க வேண்டும் அல்லவா..??'

அந்த எண்ணம் மனதில் உதயமானதும் அசோக் மீண்டும் பரபரப்பானான்..!! 'எதையும் தொட்டுறாத' என்று எச்சரித்து விட்டு சென்றிருந்த ஸ்ரீனிவாச பிரசாத்தின் வார்த்தைகளை அலட்சியம் செய்தான்..!! செங்குருதியில் நனைந்துபோய் கிடந்த விஜயசாரதியிடம் குனிந்தான்.. அவனுடைய சட்டை, பேன்ட் பாக்கெட் எல்லாம் தடவி.. அவனது செல்ஃபோனுக்காக துழாவினான்.. கிடைக்கவில்லை..!! அருகில் இருந்த மேஜை, டீப்பாய், அலமாரி எல்லாம் அவசரமாக தேடினான்.. எங்கேயும் செல்ஃபோனை காணவில்லை..!!

உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தவன்.. தனது செல்ஃபோன் எடுத்து.. சேகரித்து வைத்திருந்த விஜயசாரதியின் எண்ணுக்கு கால் செய்தான்.. கால் செய்ததுமே.. ரிங்டோன் சத்தம் எங்கிருந்தாவது வருகிறதா என்று.. காதுகளை கூர்மையாக்கி கொண்டான்..!!

ரிங்டோன் சத்தம் வரவில்லை.. மறுமுனையில் இருந்து டயல்டோன் சத்தம்தான் காதில் ஒலித்தது..!! 'கால் செல்கிறது.. ரிங்டோன்சப்தம் வரவில்லையே..' என்று அசோக் குழப்பமாக விழித்துக் கொண்டிருக்கையிலேயே.. அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்பட்டது..!! அடுத்த நொடியே.. ஆதங்கமும், கோவமும் நிறைந்த மாதிரியாக மீராவின் குரலும்..!!

"பைத்தியக்காரன் மாதிரி பண்ணிட்டு இருக்காத அசோக்.. நீ நெனைக்கிறதுலாம் எப்போவும் நடக்காது.. புரிஞ்சுக்க..!!" சூடாக சொன்னாள் மீரா.

அசோக்கால் நம்பவே முடியவில்லை..!! 'நிஜம்தானா..?? மீராதானா இது..?? என் மீராதான் இப்போது என்னுடன் பேசுவதா..?? நிஜமாகவே அவளுடைய குரல்தான் இப்போது என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறதா..??' உள்ளத்தில் ஆச்சரியம் பீறிட.. உடனே ஒரு பதற்றமும் அவனை வந்து தொற்றிக்கொள்ள..

"மீ..மீரா.. மீரா.." என்றான் தவிப்பாக.

"ஏண்டா இப்படி பண்ற..?? போய்த் தொலையுறா சனியன்னு விட்டு தொலைக்க வேண்டியதுதான..?? எதுக்கு இன்னமும் என்னை தேடிட்டு இருக்குற..??" மீரா சீற, அசோக்கின் கண்களில் முணுக்கென்று கண்ணீர்.

"எ..என்ன மீரா பேசுற.. நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்.. நீ எனக்கு வேணும் மீரா..!! ப்ளீஸ் மீரா.. எங்கிட்ட வந்துடு...!!"

"இல்ல அசோக்.. என்னால அது முடியாது.. சொன்னா புரிஞ்சுக்கோ..!!"

"இன்னும் என்ன புரிஞ்சுக்கணும்.. எனக்கு உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சு போச்சு மீரா..!! இதுக்காகத்தான நீ ஓடி ஒளிஞ்ச.. இப்போ எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு..!! உன்னோட பழைய வாழ்க்கை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல மீரா.. நீ எனக்கு வேணும்.. அவ்வளவுதான்..!! நீ இப்போ எங்க இருக்குறன்னு சொல்லு.. நான் மட்டும் தனியா வர்றேன்.. நாம பேசி ஒரு முடிவுக்கு வரலாம்..!! நான் உன்மேல எந்த அளவுக்கு லவ் வச்சிருக்கேன்னு கொஞ்சமாவது புரிஞ்சுக்கோ மீரா.. ப்ளீஸ்..!!"

"ஐயோ.. உன் லவ்வை பத்தி நான் நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்டா.. நீதான் என் மனசை புரிஞ்சுக்க மாட்டேன்ற..!! இந்த விஷயம் தெரிஞ்சா நீ என்னை ஏத்துக்க மாட்டேன்னு நெனச்சா.. நான் உன்னை விட்டு விலகுனேன்னு நெனைக்கிற..?? சொன்னா கேளுடா.. நான் உனக்கு வேணாம்.. இந்தப்பாவி உனக்கு வேணவே வேணாம்..!!" மீராவின் குரல் இப்போது அழுகையாக ஒலித்தது.

"இல்ல.. நீதான் எனக்கு வேணும்..!! நீ எனக்கு சொந்தமானவ மீரா.. நீ என் லைஃப்ல வந்ததுக்கு காரணம் இருக்கு.. என்கூட பழகுனதுக்கு காரணம் இருக்கு.. என்னை விட்டு பிரிஞ்சதுக்கு காரணம் இருக்கு..!! இப்போ என்கூட ஃபோன்ல பேசிட்டு இருக்குறதுக்கு கூட காரணம் இருக்கு மீரா..!!"

"எ..என்ன சொல்ற நீ..??"

"நம்ம காதல் உண்மையானது மீரா.. அது நம்மளை சேர்த்து வைக்க எடுத்துக்கிட்ட முயற்சிதான் இதெல்லாம்..!! அந்த காதல்தான் இப்போ உன்னையும் என்னையும் பேச வச்சிருக்கு..!! புரிஞ்சுக்கோ மீரா.. நீயும் நானும் சேரணும்.. அதுதான் விதி..!!"

அசோக் சொல்ல.. அடுத்த முனையில் மீரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்..!! அவளுடைய அமைதி அசோக்கை பதற்றம் கொள்ள செய்தது..!!

"மீ..மீரா.. என்னாச்சு மீரா.. ஏதாவது பேசு மீரா..!!"

"ஓ.. நம்ம காதல் நம்மள சேர்த்து வைக்குமா..??" மீராவின் குரலில் ஒருவித இறுக்கம்.

"ஆ..ஆமாம்..!!" அசோக்கின் குரலில் ஒருவித தடுமாற்றம்.

"சரி.. அதையும் பாக்கலாம்.. அது எப்படி நம்மள சேர்த்து வைக்குதுன்னு பார்க்கலாம்..!! நீ சொல்ற அந்தக்காதல்.. உன்னையும் என்னையும் இன்னொரு முறை நேருக்கு நேர் சந்திக்க வைக்கட்டும்.. அப்போ நான் அக்ஸப்ட் பண்ணிக்கிறேன்.. நீயும் நானும் ஒண்ணா சேர்றதுதான் விதின்னு..!! இப்போ கட் பண்றேன்.." படபடவென பேசிய மீரா ஒருகணம் நிறுத்தி..

"ஐ லவ் யூ..!!" என்று தழதழக்கிற குரலில் சொல்லிவிட்டு, பட்டென்று இணைப்பை துண்டித்தாள்.

"மீ..மீரா.. ப்ளீஸ் மீரா.. கட் பண்ணிடாத மீரா..!!"

என்று பதட்டத்துடன் கதறிக்கொண்டிருந்த அசோக்கிற்கு.. இணைப்பு துண்டிக்கப்பட்ட ஓசையே கேட்க கிடைத்தது..!! மீண்டும் அந்த எண்ணுக்கு அவன் கால் செய்ய.. ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது..!!

என்ன செய்வதென்று புரியாத அசோக்.. அப்படியே தலையை பிடித்துக்கொண்டான்.. தலை எல்லாம் வின்வின்னென்று வலிப்பது போல ஒரு உணர்வு..!! சோர்ந்து போய் தரையில் மண்டியிட்டு அமர்ந்தான்..!! அவனுடைய இதயமெல்லாம் தாங்க முடியாத மாதிரி ஒரு வலி..!! கண்களில் கண்ணீர் பூத்து..கன்னம் நனைந்து ஓட ஆரம்பித்தது..!!

"பேசிட்டேன் அசோக்.. வந்துட்டு இருக்காங்க..!!"

சொல்லிக்கொண்டே ஸ்ரீனிவாச பிரசாத் வீட்டுக்குள் நுழைய.. அசோக் அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தான்..!! கையிலிருந்த பென்டன்ட்டை.. அவர் அறியாமல் தனது பாக்கெட்டுக்குள் திணித்து மறைத்தான்..!! அவர் பக்கமாய் திரும்பி.. மிக இயல்பாக ஒரு பார்வை பார்த்தான்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
V v vry interesting bro
Like Reply
அத்தியாயம் 27

இருட்டுக்குள் இப்போது மிக பிரகாசமாக நின்றிருந்தது அந்த விருந்தினர் மாளிகை.. கூரையில் இருந்து கீழ்தொங்கிய மின்விளக்குகள் வீட்டுக்குள்ளே வெளிச்சத்தை கிளப்பின என்றால்.. தரையில் இருந்து மேற்கிளம்பிய குமிழ்விளக்கு கம்பங்கள் வீட்டுக்கு வெளியே ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன..!! வாயிற்கதவுக்கருகே ஸ்ரீனிவாச பிரசாத்தின் ஜீப்போடு சேர்த்து.. இப்போது மேலும் இரண்டு போலீஸ் ஜீப்புகள், ஒரு ஒழுங்கற்ற கோணங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.. அதில் ஒரு ஜீப்பின் நெற்றியில், சிவப்பு விளக்கு இன்னும் ஒளிர்ந்து கொண்டிருந்தது..!! விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வெளியே குழுமியிருந்த ஜனங்களின் கண்களில்.. ஒருவித ஆர்வமும், மிரட்சியும் ஒருசேர காணக்கிடைத்தன..!! வீட்டை சுற்றி வளர்ந்திருந்த மரங்கள்.. சூழ்நிலையின் தீவிரம் உணர்ந்து.. அசையக்கூட மனமின்றி அப்படியே உறைந்து போயிருந்தன..!!

வீட்டுக்குள்ளே.. காவல்துறையை சேர்ந்த கைரேகை மற்றும் தடவியல் குழுவினர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்..!! அவர்களிடம், ரெட்ஹில்ஸ் இன்ஸ்பெக்டர் மலரவன் ஏதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டும், உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டும்.. குற்றம் நடந்திருந்த இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்..!! ஆதாரங்கள் என்ற பெயரில் வீட்டிலிருந்த சில பொருட்கள் சேகரிக்கப்பட்டன.. ரத்தத்தில் நனைந்திருந்த மாய கிருஷ்ணனின் சிலை, பாலித்தீன் கவருக்குள் பத்திரமாக்கப்பட்டது..!! அறையின் ஒருமூலையில்.. எச்சில் வடிகிற நாக்கை நீளமாக தொங்கப் போட்டுக்கொண்டு அந்த மோப்ப நாய்.. வீட்டுக்குள் நுழைந்ததுமே வீராவேசமாக பின்பக்கம் ஓடி.. ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு சீறிப்பாய்ந்து.. பிறகு ஒரு புதரைக் கண்டதும் சிறுநீர் பெய்துவிட்டு.. மீண்டும் வீட்டுக்குள் வந்து ஓரமாக செட்டில் ஆகியிருந்தது..!!

உயிரற்ற உடல்கள் பிரேத பரிசோதனைக்கென மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க.. அவை விழுந்து கிடந்த இடங்கள் சாக்பீஸால் மார்க் செய்யப்பட்டிருந்தன..!! எப்போதோ உறைந்து போயிருந்த கருஞ்சிவப்பு ரத்தச்சேற்றில்.. இப்போது ஈக்கள் ரீங்காரமிட்டபடி வந்தமர்ந்து, மொய்க்க ஆரம்பித்திருந்தன..!! காற்றில்கூட குருதியின் நெடி கலந்துபோய்.. சுவாசிப்பவர்களின் முகத்தை சற்றே சுளிக்க வைத்தது..!!

வீட்டுக்கு வெளியே.. அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும் அந்த காவல்த்துறை வாகனத்தின் மீது சாய்ந்திருந்தனர்.. அவர்களை சுற்றிலும் ஒரு மெலிதான புகை மூட்டம்.. அவர்களுடைய ஒரு கையில் பாதி காலியான டீ க்ளாஸ்.. இன்னொரு கையில் பாதி கரைந்திருந்த சிகரெட்..!! ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகம் ஒருமாதிரி இறுகிப் போயிருக்க.. அசோக்கின் முகமோ ஒருவித கவலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது..!! அவனது பாக்கெட்டில் கிடந்த பென்டன்ட் தொடையை உறுத்த.. பலவித குழப்ப எண்ணங்கள் அவனது மூளையை உறுத்திக் கொண்டிருந்தன..!!

'மீரா ஒரு குற்றவாளி.. கொலைக்குற்றம் செய்திருக்கிறாள்.. அவள் செய்த குற்றத்துக்கு சட்டப்படி தண்டனை உண்டு..!! அப்படியிருக்கையில்.. அவளுடன் உனது வாழ்க்கையை பங்குபோட்டுக் கொள்ள நினைப்பது அறிவுள்ள செயலா..?' என்று.. அவனது புத்தி கிடந்து பதறியது..!! அதையெல்லாம் அவனுடைய காதல்மனம் அப்படியே புறந்தள்ளியது..!!

'குற்றம் செய்த எல்லோரும் தண்டனையை அனுபவித்துதான் ஆகவேண்டுமா..? நம்நாட்டு அரசியல்வாதிகளும், செல்வந்தர்களும் இதைக்கேட்டால்.. விழுந்து விழுந்து சிரிக்க மாட்டார்களா..? பணமும், பதவியும் படைத்தவர்கள் எல்லாம் சட்டத்தை ஏய்த்து சந்தோஷமாக திரிகையில்.. பாவப்பட்ட என் மீரா மட்டும் எதற்காக தண்டனை அனுபவிக்க வேண்டும்.. அதுவும் இரு கொடியவர்களை கொன்று முடித்ததற்காக..? அவசியமே இல்லை..!! அவள் சிக்குவது என்னிடமாக இருக்கவேண்டுமே ஒழிய.. போலீஸின் வசம் அல்ல..!! அவள் வாழ வேண்டியது என் மனச்சிறையில்தானே ஒழிய.. மத்திய சிறையில் அல்ல..!!' என்பது மாதிரி இருந்தது அவனது இதயத்தில் எழுந்த எண்ணம்..!!

காதலியை கண்டுபிடிக்கிற காரியத்துக்கு.. காவல்துறையை ஒரு கருவியாகத்தான் இத்தனை நாள் அசோக் கருதியிருந்தான்.. இனி அப்படி கருதுவதற்கு வாய்ப்பில்லை என்று இப்போது அவனுக்கு தெளிவாக புரிந்தது..!! சற்று ஒதுங்கியிருப்பதுதான் நல்லது.. இனி மீராவைப்பற்றி போலீஸிடம் என்ன பேசினாலும்.. அது அவளுக்கு ஆபத்தாகவே முடியும் என்று தோன்றியது..!! ஏற்கனவே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் பேசிய சில விஷயங்களே.. மீராவுக்கு சிக்கல்களை உருவாக்கக் கூடியவைகளாக இருந்தன..!!

"கைல ஒரு ப்ரேஸ்லட் போட்ருப்பா ஸார்.. அதுல ஹார்ட் ஷேப்ல ஒரு கோல்ட் பென்டன்ட் தொங்கும்..!!"

மீராவின் அங்க அடையாளங்களை பற்றி ஸ்ரீனிவாச பிரசாத்திடம் முன்பு சொன்னபோது.. அந்த பதக்கத்தைப் பற்றியும் அசோக் குறிப்பிட்டிருந்தான்..!! அசோக்கின் கண்ணில்பட்ட அந்த பதக்கம் மட்டும்.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் பார்வையில் சிக்கியிருந்தால்.. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது மாதிரி காவல்த்துறையின் வேலை மிக எளிதாக முடிந்து போயிருக்கும்..!! அந்த பதக்கம் தனது கண்ணில் பட்டதற்காக, அசோக் இப்போது கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டான்..!! காவல்த்துறையின் பிடியில் இருந்து மீராவை காப்பாற்றிவிட்டது போன்றொரு திருப்தி அவனுக்குள்..!!

அதேநேரம்.. போலீஸின் உதவியில்லாமல் மீராவை எப்படி தேடிக் கண்டுபிடிக்கப் போகிறோம் என்ற கேள்வியும்.. அவன் மனதில் எழாமல் இல்லை..!! ஒருசில யோசனைகள் அவன் மூளையில் உதித்தாலும்.. அவை யாவுமே வலுவான யோசனைகளாய் அவனுக்கு படவில்லை..!! இருந்தபோதிலும்.. எத்தனை கஷ்டப்பட நேர்ந்திட்டாலும்.. இனி போலீஸின் உதவியை மட்டும் நாடக்கூடாது என்று மட்டும், மனதுக்குள் ஒரு உறுதியான முடிவெடுத்துக் கொண்டான்..!!

'நானே தனியா அவளை தேடிக் கண்டுபுடிக்கணும்.. போலீஸ்ட்ட மட்டும் அவ பிடிபட்டுட கூடாது..!!'

"ஹ்ம்ம்.. அதுலாம் அவளை புடிச்சுடலாம்.. எங்க எஸ்கேப் ஆயிட போறா..!!"

ஸ்ரீனிவாச பிரசாத் திடீரென அவ்வாறு சொன்னதும்.. அசோக் சற்றே பதறிப்போய் அவரை திரும்பிப் பார்த்தான்.. அவன் முகத்தில் ஒருவித திகைப்பு..!! ஸ்ரீனிவாச பிரசாத்தோ.. ஒரு மெலிதான புன்முறுவலுடன் இவனையே பார்த்துக் கொண்டிருந்தார்..!!

"எ..என்ன ஸார் சொல்றீங்க..??" அசோக்கின் குரல் தடுமாற்றமாக ஒலித்தது.

"இல்லடா.. அந்த விஜயசாரதிட்ட இருந்து, உன் ஆள் பத்தி ஏதாவது இன்ஃபர்மேஷன் கெடைக்கும்னு நெனச்சோம்.. அவன் என்னடான்னா இங்க செத்துப்போய் கெடக்குறான்..!! அவளை கண்டுபிடிக்க இருந்த ஒரே சான்ஸும், இப்படி ஆயிருச்சேன்னு நெனச்சு நீ வொர்ரி பண்ணிக்காத.. கூடிய சீக்கிரம் எப்படியாவது அவளை கண்டுபிடிச்சுடலாம்னு சொன்னேன்.. புரியுதா..??"

அசோக்கின் தடுமாற்றத்தை கவனியாமல், ஸ்ரீனிவாச பிரசாத் அவனுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சொன்னார். அவர் அவ்வாறு சொன்னதும்தான், அவ்வளவு நேரம் நின்று போயிருந்த அசோக்கின் மூச்சு இப்போது நிம்மதியாக வெளிப்பட்டது.

"ம்ம்.. பு..புரியுது ஸார்..!!" என்றான் உலர்ந்த குரலில். ஸ்ரீனிவாச பிரசாத் இப்போது அசோக்கின் தடுமாற்றத்தை கண்டுகொண்டார்.

"எ..என்னடா ஆச்சு.. கண்டுபிடிச்சுடலாம் சொல்றேன்.. உன் மூஞ்சில ஒரு எக்ஸ்ப்ரஸனே காணோமே..??"

"ஒ..ஒன்னும்.. ஒன்னுல்ல ஸார்..!!" என்ன பதில் சொல்வதென்று திணறிய அசோக்கிற்கு,

"ஹ்ம்ம்.. ரத்தத்தை பார்த்த ஷாக் இன்னும் போகலையா..??" ஸ்ரீனிவாச பிரசாத்தே உதவி செய்தார்.

"ஆ..ஆமாம்..!!"

"ஹ்ஹ.. இட்ஸ் ஓகே.. நைட் தூங்கி எந்திரிச்சா, காலைல எல்லாம் சரியா போயிடும்..!! உனக்கு ஃபர்ஸ்ட் டைம்ல.. அதான்..!! எனக்கு இதுலாம் பழகிப் போச்சு..!!"

ஸ்ரீனிவாச பிரசாத் அவ்வாறு அமர்த்தலாக சொன்னதும்.. அசோக் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்..!! புகை உள்ளிழுத்து குபுகுபுவென வெளியிட்டவாறே.. எதையோ தீவிரமாக யோசித்தான்..!! பிறகு மனதில் ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.. ஸ்ரீனிவாச பிரசாத்தை ஆழம் பார்ப்பது மாதிரி.. மெல்லிய குரலில் அந்த கேள்வியை கேட்டான்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
யா..யாரு இதை பண்ணிருப்பாங்க ஸார்..??"

"எதை..??"

"இ..இந்தக் கொலையை..!!" அசோக் அந்த மாதிரி தயக்கமாக சொன்னதும், ஸ்ரீனிவாச பிரசாத் பட்டென சிரித்துவிட்டார்.

"ஹாஹா..!! டேய்.. என்னை என்ன மந்திரவாதின்னு நெனச்சுட்டியா.. இங்க்-க வெத்தலைல தடவி பட்டுன்னு சொல்றதுக்கு..?? எல்லாம் இன்வெஸ்டிகேட் பண்ணித்தான் கண்டுபிடிக்கணும்..!! ஹ்ம்ம்.. அதுவும்கூட இப்போ என் வேலை கெடையாது.. எல்லாம் ரெட்ஹில்ஸ் போலீஸ் பாத்துப்பாங்க.. கொலை செஞ்சது யாருன்னு அவங்க கண்டுபிடிப்பாங்க..!!"

"தெ..தெரியும் ஸார்.. சும்மா கேட்டேன்..!!"

மெலிதான புன்னகையுடன் சொல்லிவிட்டு அசோக் அமைதியானான். இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் எதையோ நினைத்துக்கொண்டு புருவத்தை நெறித்தார். ஒரு திடீர் யோசனை தோன்றியவராய் அசோக்கிடம் திரும்பி சொன்னார்.

"அ..அசோக்.. நான் ஒன்னு சொல்லவா..??"

"என்ன ஸார்..??"

"உன் ஆள் பத்தி ரெட்ஹில்ஸ் போலீஸ்ட்ட சொல்லலாமா..??" ஸ்ரீனிவாச பிரசாத் கேட்கும்போதே, அசோக்கின் உடலில் சுரீர் என்றொரு மின்சாரம் பாய்ந்தது.

"மீ..மீரா பத்தியா..??"

"ம்ம்..!!"

"எ..என்ன சொல்லலாம்னு சொல்றீங்க..??"

"அதான்டா.. இந்த விஜயசாரதி உன் ஆளை லவ் பண்ற மாதிரி நடிச்சது.. அவளை அனுபவிச்சுட்டு அப்புறம் ஏமாத்தினது.. அதனால ஆம்பளைங்கன்னாலே உன் ஆளுக்கு ஒரு வெறுப்பு இருந்தது.." ஸ்ரீனிவாச பிரசாத் சொல்லிக்கொண்டு போக, அசோக் இடையில் புகுந்து அவரை தடுத்தான்.

"ஹையோ ஸார்.. அ..அதுலாம் ஜஸ்ட் என்னோட அஸம்ப்ஷன்தான..?? உ..உண்மையா இருக்கனும்னு ஒன்னும் அவசியம் இல்லையே..??"

"ஆமான்டா.. உன்னோட அஸம்ப்ஷன்தான்..!! அதைத்தான் இவங்கட்ட சொல்லலாம்னு சொல்றேன்..!!"

"அதை எதுக்கு இவங்கட்ட..??"

"புரியலையா..?? இந்த கொலையை பண்றதுக்கு உன் ஆளுக்கு ஸ்ட்ராங் மோட்டிவ் இருக்குன்னு இவங்கட்ட சொல்லலாம்.. ஐ மீன்.. அவங்க நம்புற மாதிரி பொய் சொல்லலாம்..!!"

"அ..அதனால என்ன யூஸ்..??"

"ரெட்டை கொலைடா..!! அதுல ஒருத்தன், சென்னைலயே முக்கியமான பிக் ஷாட்டோட பையன்..!! இன்வெஸ்டிகேஷன் ரொம்ப ரொம்ப சீரியஸா இருக்கும்..!! உன் ஆளுக்கு மோட்டிவ் இருக்குன்னு மட்டும் இவங்க நம்பிட்டாங்கன்னு வச்சுக்கோ.. சும்மா விடமாட்டாங்க.. எப்படியாவது அவளை கண்டுபிடிச்சுடுவாங்க..!!"

"ஓ..!!"

"அவளை கண்டுபிடிச்சுடுறாங்கன்னு வச்சுக்கோ.. அப்புறம் அவகிட்ட என்கொய்ரி பண்றப்போ.. அவளுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தம் இல்லன்னு இவங்களுக்கே தெரிஞ்சிடும்.. விட்டுடுவாங்க..!! அப்புறம் என்ன.. இவங்க மூலமா உனக்கு உன் ஆளு கெடைச்சுடுவா.. எல்லாம் சுபம்..!! சிம்பிளா சொல்லப்போனா.. இந்த மர்டர் சம்பந்தமான இன்வெஸ்டிகேஷனை.. உன் ஆளை தேடிக் கண்டுபிடிக்கிறதுக்கு யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்றேன்.. இப்போ புரியுதா..??"

"புரியுது ஸார்.. ஆ..ஆனா.."

"என்ன ஆனா..??"

"அ..அந்த மாதிரி பண்ணுனா.. மீரா பத்தின விஷயம் ந்யூஸ்பேப்பர்ல-லாம் வரும்ல..??" அசோக் கேட்க, ஸ்ரீனிவாச பிரசாத் நெற்றியை சுருக்கினார்.

"ஆ..ஆமாம்..!!"

"எ..எல்லாம் என்னோட அஸம்ப்ஷன்தான்.. இருந்தாலும்.. ஒ..ஒருவேளை.. ஒருவேளை அது உண்மையா இருந்தா.. அவ வாழ்க்கைல நடந்த அந்த அசிங்கம்.. அப்புறம் ஊருக்கே தெரிஞ்சு போயிடும்.. இல்ல..??"

"ம்ம்..!!" அசோக் எங்கே வருகிறான் என்று ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு இப்போது தெளிவாக புரிந்தது.

"வேணாம் ஸார்.. எனக்கு அதுல விருப்பம் இல்ல..!!"

"இ..இல்லடா.. கொஞ்சம் யோசி.. அவளை கண்டுபிடிக்கிறதுக்கு இது ஒரு.."

"அவளை கண்டுபிடிக்கிறது எனக்கு முக்கியந்தான் ஸார்.. ஆனா அதை விட.. அவளுக்கு எந்த களங்கமும் வராம பாத்துக்குறது ரொம்ப ரொம்ப முக்கியம்..!! அவளை என் உயிரைவிட அதிகமா நேசிக்கிறேன்.. என்மூலமா அவளுக்கு ஒரு கெடுதல் நடந்துச்சுனா.. சத்தியமா அதை என்னால தாங்கிக்கவே முடியாது ஸார்..!! அவ எனக்கு கெடைக்காட்டா கூட பரவால.. இந்த மாதிரி ஊருக்கே அந்த விஷயம் தெரிஞ்சு, அவ அசிங்கப்பட கூடாது..!! ப்ளீஸ் ஸார்.. தயவு செஞ்சு மீரா பத்தி எந்த விஷயமும் இவங்கட்ட சொல்லிராதிங்க.. நான் சொன்னதெல்லாம் உங்க மனசோடவே இருக்கட்டும்.. ப்ளீஸ் ஸார்.. உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்.. ப்ளீஸ்..!!"

அழுதுவிடுகிற குரலில் படபடவென அசோக் கெஞ்சலாக சொல்ல, ஸ்ரீனிவாச பிரசாத் அவனையே திகைப்பாக பார்த்தார். அந்தப்பார்வையில் 'ஏமாற்றி சென்றவள் மீதுதான் இவனுக்கு எத்தனை காதல்..?' என்பது மாதிரியான பிரமிப்பும் கலந்திருந்தது. முழுதும் கரைந்துபோன சிகரெட் இப்போது அவருடைய விரலை சுட, கையை உதறி அதனை விசிறினார். தலையை மெலிதாக உலுக்கிக்கொண்டவர், வேறுபக்கமாக பார்வையை வீசினார். தூரத்தில் கேட்டுக்கருகே தெரிந்த மனித கும்பலை வெறித்தவாறே, எதையோ யோசிக்க ஆரம்பித்தார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: RA+66.jpg]



அவ்வளவு நேரம் அவரிடம் அப்பாவியாக, பரிதாபமாக ஒரு முகத்தை காட்டிக்கொண்டிருந்த அசோக்.. இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் அந்த முகத்தை மாற்றிக் கொண்டான்..!! அவனுடைய முகம் இப்போது பாறை போல இறுக ஆரம்பித்தது..!! அப்படியே தலையை மெல்ல திருப்பி.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தான்..!! அவருடைய முகத்தில் தெரிந்த குழப்பத்தை பார்த்ததும்.. அசோக்கின் மனதுக்குள் ஒருவித நிம்மதியும், திருப்தியும் ஒருசேர பரவின.. அவனது உதட்டோரத்தில் ஒரு குறும்புன்னகை மெலிதாக கசிந்தது..!!

'மீரா பற்றிய பேச்சினை இவரே ஆரம்பித்தது, மிக வசதியாக போயிற்று.. இவர் ஆரம்பித்ததை மீராவுக்கு சாதகமாக திருப்பியாயிற்று..!! குற்றத்தை புலனாய்வு செய்யப் போகிறவர்களிடம்.. மீரா பற்றிய விஷயங்களை இவர் சொன்னால்.. நிச்சயம் அது அவளுக்கு ஆபத்தாகவே முடியும்..!! அவர்களுடைய சந்தேகப்பார்வை மீரா இருக்கிற திசைக்கே திரும்பக்கூடாது.. அதற்கு.. மீரா பற்றி இவர் அவர்களிடம் வாயை திறக்கவே கூடாது..!! என் மீது இவருக்கு அன்பிருக்கிறது.. என் கெஞ்சலை இவர் நம்பிவிட்டார்.. இப்போது குழப்பத்தில் இருக்கிறார்.. சொல்வதா வேண்டாமா என்று..!! இவரை மேலும் குழப்ப வேண்டும்.. இவருக்கு என் மீதிருக்கும் அன்பினை, மீராவுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ளவேண்டும்..!!'

மனதில் அந்த மாதிரி எண்ணம் ஓடவும்.. அசோக் இப்போது மீண்டும் தனது முகத்தை அப்பாவித்தனமாக மாற்றிக் கொண்டான்..!! மேலும் சில சென்டிமன்டான டயலாக்குகளை அவசரமாக யோசித்துக் கொண்டவன்.. அவற்றை ஸ்ரீனிவாச பிரசாத்திடம் சொல்வதற்காக வாயை திறந்தபோதுதான்..

"என்ன ஸார்.. இங்க வந்து தனியா நின்னுட்டிங்க..??"

அவர்களுக்கு பின்னால் இருந்து அந்த சப்தம் கேட்டது.. உடனே இருவரும் திரும்பி பார்த்தார்கள்..!! தடித்த மீசைமயிர்களுடனும்.. கனத்த கன்னக்கதுப்புகளுடனும்.. இரவு நேரத்திலும் அணிந்த குளிர்கண்ணாடியுமாக.. இன்ஸ்பெக்டர் மலரவன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்..!! இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் அவரிடம்,

"ஒன்னுல்ல ஸார்.. உங்க வேலையை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னுதான்..!!" என்றார் மெலிதான புன்னகையுடன்.

"அதனால என்ன ஸார்.. பரவால..!!" சொன்ன மலரவன் அவரை நெருங்கி,

"Can I borrow a cigarette..??" என்று கேட்டார் ஆங்கில இளிப்புடன்.

உடனே ஸ்ரீனிவாச பிரசாத் சிறு பதற்றத்துடன், சிகரெட் பாக்கெட் எடுத்து அவசரமாக அவரிடம் நீட்ட.. மலரவன் அதிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி உதட்டில் பொருத்திக் கொண்டார்..!! ஸ்ரீனிவாச பிரசாத் நெருப்பு பற்றவைக்க.. மலரவன் புகையிழுத்து வெளியே ஊதி, வளிமண்டலத்தை மாசுபடுத்த ஆரம்பித்தார்..!!

"வெப்பன் கெடைச்சதா ஸார்..??" கேட்டார் ஸ்ரீனிவாச பிரசாத்.

"எங்க..??? எவ்வளவு தேடியும் கெடைக்கலை..!! Knife மாதிரி எதோ ஷார்ப்பான வெப்பன்தான் ஸார்.. உடம்பு பூரா அப்படியே பஞ்சர் பண்ணிருக்காங்க..!! அந்த மூர்த்தி ஸார் பையனோட பின்னந்தலைல.. இந்த எடத்துல.. செமத்தியா ஒரு அடி விழுந்திருக்கு.. அனேகமா அந்த கிருஷ்ணன் சிலையை வச்சுத்தான் அடிச்சிருக்கனும்னு தோணுது..!! ஹ்ஹ்ம்ம்ம்.. அதுதான் இப்போதைக்கு கெடைச்சிருக்குற ஒரே வெப்பன்..!!" பதில் சொன்னார் மலரவன்.

"ம்ம்.. மூர்த்தி ஸார்க்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சா..??"

"பண்ணியாச்சு..!! மனுஷன் மலேசியால இருக்காரு போல.. மேட்டரை சொல்றேன், பெருசா அவர்ட்ட ஷாக்கே இல்ல ஸார்..!! சொன்னதெல்லாம் 'ம்ம்.. ம்ம்..'ன்னு பொறுமையா கேட்டுக்கிட்டாரு.. உடனே கெளம்புறேன்னு மட்டும் சொன்னாரு.. காலைல இங்க இருப்பாருன்னு நெனைக்கிறேன்..!! ஹ்ம்ம்... அப்புறம்.. இன்னொரு விஷயம் ஸார்.."

"என்ன..??"

"உள்ள எங்களுக்கு நெறைய ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் கெடைச்சிருக்கு..!! உங்க ரெண்டு பேரோட ஃபிங்கர் ப்ரின்ட்ஸ் கூட எங்களுக்கு வேணும்.. எலிமினேட் பண்றதுக்கு..!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
"ஷ்யூர்.. அதனால என்ன.. குடுத்திடலாம்..!!"

"தேங்க்ஸ்..!! இப்போ வேணாம்.. நாளைக்கு பாத்துக்கலாம்.. சரியா..?? ம்ம்ம்ம்ம்ம்.. அப்புறம்.. உங்களை இன்னொன்னு கேக்கனும்னு நெனச்சேன்.."

"கேளுங்க..!!"

"நீ..நீங்க எப்படி.. இ..இந்த நேரத்துக்கு.. கரெக்டா இங்க..??"

நெற்றியை சுருக்கியவாறு மலரவன் அந்தமாதிரி கேட்க.. அத்தனை நேரம் அமைதியாக நின்றிருந்த அசோக்கின் மனதுக்குள்.. இப்போது திடீரென ஒரு கலக்கம்..!! படக்கென பக்கவாட்டில் திரும்பி ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தை ஏறிட்டான்.. அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று.. பதற்றம் அப்பிய முகத்துடன் அவரையே பார்த்தான்..!! அவரும் தனது முகத்தை திருப்பி, அசோக்கை ஒரு சலனமற்ற பார்வை பார்த்தார்.. பிறகு மலரவனிடம் திரும்பி..

"நாங்க.. ஒரு ஃப்ராட் பொண்ணை ட்ரேஸ் பண்ணிட்டு இருக்கோம் ஸார்..!!" என்றார்.

"ஓகே..!!"

"அந்தப்பொண்ணு யூஸ் பண்ணின மொபைல் நம்பர்.. இந்த விஜயசாரதியோட பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருந்தது.. அது சம்பந்தமா விசாரிக்கத்தான் வந்தோம்..!!"

"ஓ..!! ம்ம்... அப்போ அந்தப்பொண்ணுக்கும் இந்த பையனுக்கும்..??" மலரவன் கேள்வியாக பார்க்க,

"இல்ல.. எந்த சம்பந்தமும் இல்ல..!!" ஸ்ரீனிவாச பிரசாத் அழுத்தம் திருத்தமாக சொன்னார். சொன்னவர் கோர்வையாக மேலும் தொடர்ந்தார்.

"ரெண்டு வாரம் முன்னாடியே.. விஜயசாரதி கூட நான் ஃபோன்ல பேசினேன்.. அப்போவே தெளிவா சொல்லிட்டான்.. இவனுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு..!! ஆக்சுவலா.. இவன் யூ.எஸ் போறதுக்கு முன்னாடியே.. இவனோட செல்ஃபோனை எங்கயோ தொலைச்சிருக்கான்.. அது அந்தப்பொண்ணு கைல சிக்கிருக்கு.. அவ அதே நம்பரை அவளோட ஃப்ராட் வேலைக்கு யூஸ் பண்ணிருக்கா.. தேட்ஸ் ஆல்..!!"

"ஹ்ஹ.. ஓகே ஓகே..!! ஹ்ம்ம்.. அப்படி என்ன ஃப்ராட் பண்ணினா அந்தப்பொண்ணு..??"

"பேங்க்ல லோன் வாங்கி தர்றதா சொல்லி.. ஒரு நாலஞ்சு பேர்ட்ட, பத்து லட்ச ரூபாக்கு மேல ஆட்டையை போட்டுட்டு.. ஆள் எஸ்கேப் ஆகிட்டா..!! ஒருமாசமா அலையுறோம்.. அவளை ட்ரேஸ் பண்ணவே முடியல..!!"

"ம்ம்ம்... செம கேடியா இருப்பா போல..??"

"சந்தேகமே வேணாம் ஸார்.. பயங்கர கேடி..!!" சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கிடம் திரும்பி,

"என்ன அசோக்.. சரிதான..??" என்று சற்றே கிண்டலான குரலில் கேட்டார்.

"ஆ..ஆமாம்..!!" அசோக் தடுமாற்றமாக சொன்னான்.

"ஹ்ம்ம்.. So.. What's your next move..??" மலரவன் அவ்வாறு கேட்க,

"Next move-னா..?? புரியல..!!" ஸ்ரீனிவாச பிரசாத் புரிந்தும் புரியாதவர் போல திரும்ப கேட்டார்.

"இல்ல.. இ..இப்போ இந்த விஜயசாரதியும் இல்ல.. அந்தப்பொண்ணை எப்படி கண்டு பிடிக்கப் போறீங்கன்னு கேட்டேன்..!!"

"ஹாஹா.. அது என் தலைவலி ஸார்.. உங்களுக்கு எதுக்கு..??"

அந்த விஷயத்தை பற்றி, அதற்கு மேலும் பேச தனக்கு விருப்பம் இல்லை என்பதை.. ஒரு சிரிப்புடன் ஸ்ரீனிவாச பிரசாத் நாசுக்காக சொன்னார்..!! மலரவனுக்கும் அது புரியாமல் இல்லை.. பதிலுக்கு புன்னகைத்தவர்..

"ஹாஹா.. ஆமாமாம்.. உங்க தலைவலி எனக்கெதுக்கு..?? எனக்குத்தான் ஏற்கனவே ரெட்டைத்தலைவலி வந்துடுச்சே.. அதைப்போய் என்னன்னு பாக்குறேன்..!!"

என்று சிரிப்புடனே சொல்லிவிட்டு.. சிகரெட்டை கீழே போட்டு காலால் மிதித்து நசுக்கிவிட்டு.. அங்கிருந்து நகன்றார்..!! இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கிடம் திரும்பி.. 'என்னடா.. திருப்தியா..?' என்பது போன்ற பார்வையுடன் புன்னகைத்தார்..!! அசோக்கும்.. அவர் மலரவனிடம் பேசிய விதத்தில் விளைந்திருந்த ஒருவகை நிம்மதியுடன்..

"தேங்க்ஸ் ஸார்..!!" என்றான் மெலிதாக.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Nice bro
Like Reply
அத்தியாயம் 28

அசோக்கிற்கு வந்திருந்த அந்த நிம்மதி.. அதேசமயம் தனது படுக்கையறை மெத்தையில் வீழ்ந்து கிடந்த மீராவிடம்.. துளியும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..!! உள்ளம் முழுக்க அழுத்தத்துடன் வீடு நுழைந்தவளுக்கு.. உடைகளை மாற்றிக் கொள்கிற எண்ணம் கூட வரவில்லை..!! மூளைக்குள் குடைச்சலுடன் படுக்கையில் சரிந்தவள்.. முதுகு குலுங்க விம்மி விம்மி அழ ஆரம்பித்திருந்தாள்..!! அவளுடைய கண்களில் இருந்து வழிந்த நீர்த்துளிகள்.. கைக்குள் அகப்பட்டிருந்த அசோக்கின் புகைப்படத்தில் பட்டு தெறித்தன..!! அழுகையினூடே.. அவ்வப்போது அந்த புகைப்படத்துக்கு.. தனது சிவந்த உதடுகளால் முத்தங்களும் வைத்தாள்..!!

விஜயசாரதியின் விருந்தினர் மாளிகையில் வைத்து.. அசோக்கை காணநேரிடும் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திரவில்லை.. அதுவும் அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில்..!! செல்ஃபோனை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தவளுக்கு.. தூரத்தில் காவல்துறை அதிகாரி ஒருவருடன் நடந்துவந்த அவளது காதலன் காணக்கிடைத்தான்..!! ஒருகணம் என்ன செய்வதென்றே அவளுக்கு எதுவும் புரியவில்லை.. நீண்ட நாட்களுக்கப்புறம் பார்ப்பதற்கு வாய்த்த அந்த ஆசைமுகம்.. அவனுக்கு இணையாக நடந்து வந்த அந்த காவல்துறை அதிகாரி.. குருதியிலே குளித்து முடித்த மாதிரி வீட்டுக்குள்ளே இரட்டைப் பிணங்கள்..!!

தடுமாறினாள்.. மூளை சிந்திக்க மறுத்து சிக்கிக்கொண்டது.. கால்கள் நகர மறுத்து பிண்ணிக்கொண்டன..!! எப்படியோ ஒருவழியாக சமாளித்து சுதாரித்துக் கொண்டாள்.. அவசரமாய் யோசித்து ஒரு முடிவெடுத்தவள்.. அப்படியே பின்னால் நகர்ந்து வீட்டின் பின்புறம் ஓடினாள்..!!

அந்த காவல்துறை அதிகாரியின் கண்ணில் சிக்காமல் தப்பித்து.. கல்லிலும் முள்ளிலும் கால்கள் வதையுற ஓடிக்களைத்து.. சீற்றமாக எதிரே வந்த ஆட்டோவை கையசைத்து நிறுத்தி.. 'சிந்தாதிரிப்பேட்டை போகணும்' என்றபடி ஏறியமர்ந்தபோதுதான்.. கையிலிருந்த அந்த செல்ஃபோன் சப்தம் எழுப்பியது..!! பதற்றத்துடனேதான் செல்ஃபோன் டிஸ்ப்ளேயில் பார்வையை வீசினாள்.. பார்த்ததுமே அவளுடைய நெஞ்சுக்குள் ஒரு பனிச்சிதறல்..!!

எத்தனை நாட்கள் அந்த எண்களின் வரிசையை ஏக்கமாக பார்த்திருப்பாள்.. எவ்வளவு ஆசையாக அந்த எண்களை அவளது கட்டை விரல் டயல் செய்யும்..?? கண்ணில் விழுந்ததுமே காதலனின் தொடர்பு எண்கள் என்று பளிச்சென அவளுக்கு தெரிந்து போனது..!! பேசலாமா வேண்டாமா என மிகுந்த மனப் போராட்டத்துக்கு பிறகுதான்.. காலை பிக்கப் செய்து அவனுடன் பேசினாள்..!!

நேரில் அசோக்கின் முகத்தை பார்த்ததிலும், ஃபோனில் அவனது குரலை கேட்டதிலும்.. சிறிது நாட்களாக இறுகிப் போயிருந்த மீராவின் இதயம்.. இப்போது மீண்டும் இளக்கம் கொடுக்க ஆரம்பித்திருந்தது..!! அவளும்.. காதலுக்கும் கழிவிரக்கத்துக்கும் இடையில் சிக்குண்டு.. சிதையுற ஆரம்பித்திருந்தாள்..!!

'மீ..மீரா.. ப்ளீஸ் மீரா.. கட் பண்ணிடாத மீரா..!!'

அசோக் சற்றுமுன் ஃபோனில் தவிப்புடன் கதறியது.. இப்போது மீராவின் காதுக்குள் மீண்டும் ஒலிக்க.. அவளது அழுகை ஒலியின் டெசிபல் மேலும் அதிகமாகவே செய்தது..!! அழுதவாறே 'ஸாரிடா அசோக்' என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள்.. புகைப்படத்தில் படிந்திருந்த கண்ணீர் துளிகளை, கட்டைவிரலால் துடைத்தெடுத்தாள்..!!

'நம்ம காதல் உண்மையானது மீரா.. அது நம்மளை சேர்த்து வைக்கும்..!!'

அவளுக்குள் மீண்டும் அசோக்கின் குரல்..!! உடனே.. 'அப்படி ஏதாவது ஒரு அதிசயம் நடந்து.. அவனுடன் இணைந்து விடமாட்டோமா..??' என்றொரு ஏக்கமான உணர்வு.. மீராவின் மனதுக்குள் பரவியது..!! வேதனையில் பொசுங்கிக் கொண்டிருந்த அவளது இதயத்தை.. மெல்லிய மயிலிறகால் வருடிச் சென்றது அந்த உணர்வு..!!

'உன்னோட பழைய வாழ்க்கை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல மீரா.. நீ எனக்கு வேணும்.. அவ்வளவுதான்..!!'

'என்மீதுதான் அவனுக்கு எத்தனை அப்பழுக்கற்ற காதல்..?? விலகிச் சென்றாலும் விட மறுக்கிறானே..?? களங்கம் பொருட்டல்ல கலந்திடலாம் வா என்றழைக்கிறானே..?? கலந்திடலாமா.. காற்றென இப்போதே கிளம்பி சென்று, காதலனின் நெஞ்சில் சாய்ந்து கவலைதீர அழலாமா..??'

ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டு மார்பில் முகம் புதைத்துக் கொள்வது மாதிரி.. அவள் மனதுக்குள் ஒரு கற்பனை ஓட.. அந்த நொடியில்.. அவளுடைய மனதை இறுக்கிக்கொண்டிருந்த அழுத்தம் மொத்தமும்.. இலவம்பஞ்சென மாறிச்சிதறி அவளை விட்டகன்று.. அவளுக்கும் அப்படியே காற்றில் பறப்பது போலொரு இலகுவான உணர்வு..!! ஆனால் அடுத்த நொடியே.. அந்த மாதிரி நினைத்ததற்காக தன்னைத்தானே அவள் கடிந்து கொண்டாள்..!!

'ச்ச்சே.. ஏனடி பைத்தியம் இப்படி எல்லாம் மனதை அலைபாய விடுகிறாய்..?? 'உடலை இன்னொருவனுடன் பகிர்ந்துகொண்டவள் என்கிற உண்மையறிந்தும்.. உன்னுடனே வாழ்வினை பகிர்ந்துகொள்வதில் அவன் உறுதியாக இருக்கிறான்..' என்பதினால் உருவாகிட்ட உவகையோ..?? அவனுக்குத்தான் உன்மீது பித்து என்றால்.. உனக்கெங்கே போயிற்று புத்தி..?? அவனுடைய காதல் அழுத்தமானதுதான்.. ஆனால் அத்தகைய காதலுக்கு நீ பொருத்தமானவளா..?? யோசி..!!!!'

என்பது மாதிரி ஒரு எண்ணம் இப்போது அவளுக்குள் தோன்ற.. மீண்டும் கழிவிரக்கத்தின் பிடியில் சிக்கி கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்..!! அவளது உதடுகள் துடிக்க.. மூக்கு விசும்பிக் கொண்டது..!!

'வேண்டாத நினைப்பெல்லாம் வெட்டி எறிந்துவிடு.. எடுத்த முடிவில் எப்போதும் உறுதியாக இரு..!! அவனுக்கு நீ வேண்டாம்.. அவனுடைய நல்ல மனதிற்கு தகுதியான ஒருத்தியுடன்தான், அவனது இல்வாழ்க்கை அமைந்திட வேண்டும்.. அதை என்றும் மனதில் நிறுத்திக்கொள்..!!'

திரும்ப திரும்ப அந்த மாதிரி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு.. அலைபாய்கிற மனதை ஒருநிலையில் நிறுத்தி வைக்க முயன்றாள்..!! ஆனால்.. அந்த முயற்சியில் அவளால் வெற்றி பெற முடியவில்லை..!! புள்ளிமானாய் துள்ளியோடிய மனதை கட்டிப்போட.. காய்ந்தகொடியாய் துவண்டிருந்த மீராவால் சற்றும் முடியவில்லை..!!

'கற்பென்பது உடல்ரீதியானதா.. மனரீதியானதா..??' - மனதின் ஓரத்தில் ஒரு பட்டிமன்றம்.

'அவன் மீது உனக்கு அளவிலா காதல் உள்ளது.. அவனுக்கு வாழ்க்கைத் துணைவியாவதற்கு, அந்தக்காதலை தவிர வேறென்ன தகுதி வேண்டிக் கிடக்கிறது..??' - நறுக்கென்று கேள்வி கேட்டது நல்ல மனதொன்று.

'உண்மையை சொல்லி காதலைப் பெற்றவர்களுக்குத்தான் அதெல்லாம் பொருந்தும்..!! அவனது கண்மூடித்தனமான காதலை உனக்கு சாதகமாய் உபயோகித்துக்கொள்ள.. இப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுகிறாயே.. வெக்கமாயில்லை உனக்கு..??' - பரிகாசம் செய்து பார்த்து ரசித்தது இன்னொரு மனது.

'இன்னும் ஐந்தே நாட்கள்தான்.. அப்புறம் எந்தப் பிரச்சினையும் இருக்கப் போவதில்லை..!! அதுவரை பொறுமையாக இரு.. தெளிவாக சிந்தி.. குழப்பத்திற்கு இடம் தராதே..!!' - தெளிவாகவே குழப்பியது அடுத்தொரு மனது.

அப்படியும் இப்படியுமாய் அல்லாடிய எண்ணங்கள்.. பிறகு வேறொரு நினைவு வந்ததும், ஒரு நிதான நிலையை அடைந்தது..!! சற்றுமுன் அசோக்கிடம் ஃபோனில் பேசிய கடைசி வார்த்தைகளின் நினைவுதான் அது..!!

'சரி.. அதையும் பாக்கலாம்.. அது எப்படி நம்மள சேர்த்து வைக்குதுன்னு பார்க்கலாம்..!! நீ சொல்ற அந்தக்காதல்.. உன்னையும் என்னையும் இன்னொரு முறை நேருக்கு நேர் சந்திக்க வைக்கட்டும்.. அப்போ நான் அக்ஸப்ட் பண்ணிக்கிறேன்.. நீயும் நானும் ஒண்ணா சேர்றதுதான் விதின்னு..!!'

அந்த நினைவு வந்த பிறகு.. அவள் சிந்திய வார்த்தைகளை அவளே சற்று தீவிரமாக ஆராய்ச்சி செய்த பிறகு.. அத்தனை நேரம் குழப்பத்தில் உழன்று கொண்டிருந்த மனதில் ஒருவித நிம்மதி பரவுவதை அவளால் உணர முடிந்தது..!! அவள் இருந்த நிலைமையில் அந்த முடிவுதான் சரியென அவளுக்கு தோன்றியது.. அசோக்கை போலவே அவளும் காதலின் மீது பாரத்தை போட முடிவு செய்தாள்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Super bro
Like Reply
பார்க்கலாம்.. நானாக எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை.. அப்படியே எடுத்தாலும், அது அவனை விட்டு விலகிப் போகிற முயற்சியாகவே இருக்கும்..!! உண்மையிலேயே எங்கள் காதலுக்கு சக்தி இருந்தால்.. எனது முயற்சியையும் மீறி, அந்த காதல் அவனுடன் என்னை சேர்த்து வைக்கட்டும்..!! இன்னும் ஐந்து நாட்கள்.. ஐந்தே ஐந்து நாட்கள்.. அதன்பிறகு அவனை விட்டு நான் வெகுதூரம் சென்று விடுவேன்.. அப்புறம் அவன் என்னை தேடிக்கண்டுபிடிப்பது நடவாத காரியம்..!! எங்களுடைய காதல் உண்மையானதாக இருந்தால்.. அந்தக் காதலுக்கென்று ஒரு வலிமை இருந்தால்.. நானும் அவனும்தான் கரம் கோர்க்கவேண்டும் என்பது விதியாக இருந்தால்.. இன்னும் ஐந்து நாட்களுக்குள், எனது இருப்பிடம் அறிந்து அவனே என் எதிர் வந்து நிற்கட்டும்.. அவனும் நானும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளுமாறு ஆகட்டும்..!! பார்க்கலாம்.. எங்கள் காதலுக்கு எத்தனை ஆற்றல் உள்ளதென்று..!!'

அலைபாய்ந்த மனது இப்போது அமைதியாகிப் போய்விட.. அத்தனை நேரம் உறக்கம் இல்லாமல் உருகிக் கொண்டிருந்த கண்களும், மெல்ல மெல்ல மூடிக் கொண்டன..!! எப்போது உறங்க ஆரம்பித்தோம் என்ற உணர்வே இல்லாமல்.. மீரா நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்து போனாள்..!!

இரவு நெடுநேரம் தூங்காமல் விழித்திருந்ததால்.. காலையிலும் அவள் எழுந்து கொள்ள தாமதமானது..!! சுள்ளென்று கன்னத்தில் வெயில் அடித்த போதிலும்.. சுரணையற்று சுருண்டு கிடந்தாள்..!! கடிகாரத்தின் சின்ன முள் ஒன்பதை தொட்ட சமயத்திலும்.. கடைவாயில் நீரொழுக தலையணை நனைத்து கிடந்தாள்..!!

பிறகு.. அவளுக்கு அருகே குப்புற கிடந்த செல்ஃபோன்.. 'விர்ர்ர்ர்ர்.. விர்ர்ர்ர்ர்...' என்று பதறி துடித்ததும்.. உடலும், தலையும் சிலிர்த்துக்கொண்டு உறக்கம் கலைந்தாள்..!! இமைகளை பிரித்து ஓரிரு வினாடிகள் மலங்க மலங்க விழித்தவள்.. அப்புறம் குப்புறக் கிடந்தவாறே துள்ளிய அந்த செல்ஃபோனை கையில் எடுத்தாள்..!! புதியதொரு எண்ணிலிருந்து வந்திருந்த அழைப்பு அது..!! ஓரிரு வினாடிகள் குழம்பியவள்.. பிறகு கால் பிக்கப் செய்து.. தூக்கம் நிறைந்த குரலிலேயே சொன்னாள்..!!

"ஹ்..ஹலோ..!!"

"மேடம்.. நான் ஹீசுலியா ட்ராவல்ஸ்ல இருந்து பேசுறேன்..!!"

"ம்ம்.. சொல்லுங்க..!!"

"உங்க ஃப்ளைட் டிக்கெட்ஸ் ரெடி..!! அட்ரஸ் சொன்னிங்கன்னா.. வந்து டெலிவர் பண்ணிடுவோம்..!!"

கரகர குரலில் கேட்டவனுக்கு.. மீரா தனது வீட்டின் முகவரியை சொன்னாள்..!! எப்போ டெலிவர் பண்ணுவிங்க என்று இவள் கேட்க.. இன்னைக்கு ஈவினிங்கே என்று அந்த கரகர குரல் சொல்ல.. தேங்க்ஸ் என்று திருப்தியானாள்..!! காலை கட் செய்து.. செல்ஃபோனை மெத்தையின் ஓரமாய் தூக்கி போட்டாள்..!!

அவளுடைய முகம் உறங்கி வழிந்தாலும், மனம் இப்போது மிக தெளிவாக இருந்தது.. நேற்று இரவு இறுதியாய் எடுத்த முடிவினால் வந்திருந்த தெளிவு அது..!! இரவு மார்போடு அணைத்தபடி படுத்திருந்த அசோக்கின் புகைப்படத்தை இப்போது கையில் எடுத்தாள்.. காதலாக ஒரு பார்வை பார்த்தாள்.. இதமாக ஒரு புன்னகையை சிந்தினாள்.. ஈரமாக ஒரு முத்தம் வைத்தாள்..!! அருகிலிருந்த டேபிளில் புகைப்படத்தை வைத்துவிட்டு.. படுக்கையில் இருந்து எழுந்தாள்..!!

பாத்ரூம் சென்று முகம் கழுவிக்கொண்டாள்.. ப்ரஷ் எடுத்து பேஸ்ட் பிதுக்கிக் கொண்டாள்.. வாய்க்குள் ப்ரஷுடன் வாசலுக்கு வந்தாள்.. கீழே கிடந்த தினமலரை கையில் எடுத்தாள்..!! முதல் பக்கத்திலேயே.. கீழ்ப்புற கால்வாசி பரப்பை அடைத்திருந்தது அந்த செய்தி.. ரெட்ஹில்ஸ் ரெட்டைக்கொலை செய்தி..!! ந்யூஸ் பேப்பரை விரித்து வைத்து.. ஒரு கையை இப்படியும் அப்படியுமாய் அசைத்து பல் துலக்கிக்கொண்டே.. அந்த செய்தியின் ஒவ்வொரு எழுத்தையும் மிக கவனமாக வாசித்தாள்..!!

பல் துலக்கி முடித்ததும் ஏதோ நினைவுக்கு வந்தவளாய், சமயலறைக்கு சென்று.. அந்த பிளாஸ்டிக் கேனை கையில் எடுத்தாள்.. அப்படியே அந்த பெரிய சைஸ் சமையலறை தீப்பெட்டியையும்..!! படுக்கையறைக்கு வந்து விஜயசாரதியின் செல்ஃபோனை கையகப்படுத்தினாள்.. வீட்டுக்கு பின்புறம் சென்றாள்.. சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்து, யாரும் தென்படவில்லை என்பதை உறுதி செய்துகொண்டாள்..!! செல்ஃபோனை கீழே விசிறி.. கேனில் இருந்த திரவ எரிபொருளை அதன் மீது ஊற்றி.. தீக்குச்சி கிழித்து விட்டெறிய.. குப்பென்று பற்றிக்கொண்டது நெருப்பு..!!

கொழுந்து விட்டெரிகிற தீஜுவாலையை பார்த்தவாறே சிறிது நேரம் சலனமில்லாமல் நின்றிருந்தாள்.. பிறகு சாம்பல் மிச்சத்தை அள்ளிக்கொண்டு மீண்டும் பாத்ரூம் சென்றாள்.. டாய்லட் சின்க்குக்குள் கொட்டி தண்ணீர் திறந்துவிட்டாள்..!! நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டாள்..!!

அப்படியே ஷவருக்கு அடியில் சென்று நின்று.. ஜில்லென்று சிதறிய நீரில் நனைந்தாள்.. குளித்து முடித்து பாத்ரூமில் இருந்து வெளிப்பட்டாள்..!! வேறு உடை மாற்றிக்கொண்டு கண்ணாடி முன் வந்து நின்றாள்.. சீப்பு எடுத்து கேசம் வாரியபோதுதான் அதை கவனித்தாள்.. ப்ரேஸ்லட்டில் தொங்குகிற பென்டன்டை காணவில்லை..!!!!

[Image: RA+67.jpg]



'ப்ச்' என்று ஒரு சலிப்பை உதிர்த்தாள்.. 'எங்கே விழுந்திருக்கும்..' என்று நெற்றியை கீறினாள்.. 'ஒருவேளை அங்கே..??' என்பது மாதிரி ஒரு எண்ணம் தோன்றவும் உடல் சிலிர்த்துக் கொண்டது..!! 'சேச்சே.. அப்டிலாம் இருக்காது.. வேற எங்கயாவது விழுந்திருக்கும்..' என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்..!!

படுக்கையறையில் தேடிப் பார்க்கலாம் என்று அவள் திரும்பிய போதுதான்.. திடீரென.. 

“கிர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்...!!!!”

என்று காலிங்பெல் சப்தம் எழுப்பியது..!! அந்த சப்தத்தை கேட்டதுமே, மீரா அப்படியே ப்ரேக் போட்ட மாதிரி டக்கென்று நின்றாள்.. கண்களில் மெலிதான ஒரு மிரட்சியுடன் திரும்பி, வாசற்கதவை வெறித்தாள்..!! அவளுடைய உடலில் ஒருவித பதற்றம் ஊற்றெடுக்க.. உதடுகள் சன்னமான குரலில் முணுமுணுத்தன..!!

"போலீஸ்..!!!!"
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Super bro
Like Reply
மீராவின் பென்டன்டை கைப்பற்றியதிலும்.. ஸ்ரீனிவாச பிரசாத்தை பேச விடாமல் தடுத்ததிலும்.. அசோக் மிகுந்த திருப்தியுற்றிருந்தான்..!! போலீசின் கவனத்தை மீராவின் பக்கம் இருந்து திருப்பியாயிற்று.. அவர்கள் அவளை நெருங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்திருந்தான்..!! அவன் செய்த விஷயங்கள் மீராவுக்கு மிகவும் சாதகமான விஷயங்களாக அமைந்த போதிலும்.. போலீஸ் மீராவை நெருங்குவதை தவிர்க்கும் அளவிற்கு போதுமானதாக இருக்கவில்லை..!!

அந்தவகையில் அசோக்கை விட மீரா மிகவும் கூர்மையாக இருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்..!! விஜயசாரதியை பார்ப்பதற்கு கிளம்பும்போது, சமையலறை சென்று அந்த கத்தியை எடுத்து தனது கைப்பைக்குள் திணித்தாளே.. அந்த நொடியே.. அடுத்தநாள் தன் வீட்டு வாசலில் வந்து போலீஸ் நிற்கும் என்பதை தெளிவாக அறிந்தே வைத்திருந்தாள்..!! அதனால்தான்.. இப்போது கதவை திறந்ததும்.. எதிர்ப்பட்ட இரண்டு காக்கி உடுப்புகளை பார்த்து.. அவளால்..

"எஸ்..!!" என்று இயல்பாக சொல்ல முடிந்தது..!!

கான்ஸ்டபிள்கள் இருவர் மீராவின் வீட்டை அணுகியிருந்த அதே சமயத்தில்.. அசோக் ரெட்ஹில்ஸ் காவல் நிலையத்தில்தான் இருந்தான்.. அவனுடன் ஸ்ரீனிவாச பிரசாத்தும் இருந்தார்..!! இருவரும் சேர்ந்து.. முதல்நாள் நடந்த சம்பவத்தினைப் பற்றி.. ஒரு ஃபார்மல் ஸ்டேட்மன்ட் எழுதி தர வேண்டி இருந்தது..!! அப்புறம்.. முதல்நாள் மலரவன் கேட்டுக்கொண்ட மாதிரி.. இருவரது கைரேகை பிரதிகளையும் ரெட்ஹில்ஸ் போலீஸ் வசம் ஒப்படைத்தனர்..!! மலரவன் மேலும் சில கேள்விகளுடன் தயாராக இருந்தார்.. அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி அவரை திருப்தி செய்தனர்..!!

"விஜய சாரதியோட செல்ஃபோன் இன்னும் கெடைக்கல..!! பட்.. அவரோட செல்நம்பர் வச்சு.. அவருக்கு நேத்து வந்த கால்லாம் ட்ரேஸ் பண்ணினோம்.. லாஸ்டா உங்க நம்பர்ல இருந்துதான் அந்த நம்பருக்கு கால் போயிருக்கு.. ஐ மீன்.. கொலை நடந்த கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்..!!” மலரவன் சொல்லிவிட்டு அசோக்கை கூர்மையாக பார்த்தார்.

"ஓ..!!" அசோக் திகைப்பது போல நடித்தான். அவசரமாய் தன் செல்ஃபோன் எடுத்து பார்த்தான்.

“அந்த காலை யாரோ அட்டண்ட் பண்ணிருக்காங்க.. ஒருநிமிஷம் வரை அந்த கால் போயிருக்கு..!!"

"தெ..தெரியல ஸார்..!! என் மொபைல பேன்ட் பாக்கெட்ல வச்சிருந்தேன்.. தானா டயல் ஆகி இருக்கும்ன்னு நெனைக்கிறேன்.. நிச்சயமா நானா பண்ணல..!!" 

"கொலை பண்ணினவங்கதான் செல்ஃபோனை எடுத்துட்டு போயிருக்கனும்.. அவங்கதான் அந்த காலையும் அட்டன்ட் பண்ணிருக்கணும்..!!"

"இருக்கலாம் ஸார்..!! நான் ஆக்சிடண்டா டயல் பண்ணின மாதிரி.. அவங்களும் ஆக்சிடண்டா கால் பிக்கப் பண்ணிருக்கலாம்..!! தெரியல ஸார்.. ஐம் நாட் ஷ்யூர்..!!"

அசோக்கின் சமாளிப்பை நம்புவதை தவிர மலரவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. அசோக்கிற்கு பொய் சொல்ல எந்த அவசியமும் இல்லை என்று அவர் உறுதியாக நம்பியதால்.. அவன் சொன்ன அந்த ஆக்சிடன்ட் டயல் லாஜிக்கை ஒரு பெருமூச்சுடன் ஏற்றுக் கொண்டார்..!! பிறகு.. ஸ்ரீனிவாச பிரசாத் கேட்ட சில பொதுவான கேள்விகளுக்கும்.. மலரவன் பதிலளித்தார்..!!

"மூர்த்தி ஸார் வந்தாச்சா..??"

"ம்ம்.. காலைலேயே வந்துட்டார்..!!"

"இன்வெஸ்டிகேஷன்ல ஏதாவது இம்ப்ரூவ்மன்ட்..??"

"ப்ச்.. எதுவும் இல்ல ஸார்..!! என்ன மோட்டிவ்னு கூட இன்னும் தெரியல..!! பட்.. இன்வெஸ்டிகேஷன் புல் ஃஸ்விங்ல ஸ்டார்ட் பண்ணிருக்கோம்.. ரெண்டு ஆங்கிள்ல இன்வெஸ்டிகேஷன் மூவ் பண்ண நெனைச்சிருக்கோம்..!!"

"ஓ.. என்ன ஆங்கிள்ஸ்..??"

"ஒன்னு.. மூர்த்தி ஸாரோட பிஸினஸ் எதிரிங்க யாராவது, அவர் மேல இருக்குற பகைல.. அவரோட ஒரே பையனை தீர்த்து கட்டிருக்காங்களான்னு..!! இன்னொன்னு.. அந்த காசிப்பயலோட ட்ரக் பெட்லிங் கேங்ல யாராவது.. அவன் மேல இருக்குற பகைல இதைப் பண்ணிருக்கலாமான்னு..!!"

"ஓகே ஓகே.. குட்..!!"

எல்லா சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு.. அசோக்கும் ஸ்ரீனிவாச பிரசாத்தும் அங்கிருந்து கிளம்ப.. ஒருமணி நேரத்துக்கும் மேலாகிப் போனது..!!

"ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயம் தம்பி.. கேஸ் கோர்ட்டுக்கு வர்றப்போ.. நீ வர்ற மாதிரி இருக்கும்..!! உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே..??" கிளம்புகிற சமயத்தில் மலரவன் அசோக்கிடம் கேட்க,

"இ..இல்ல ஸார்.. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!!" அவன் புன்னகையுடன் சொல்லிவிட்டு திரும்பி நடந்தான்.

அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும் மலரவனின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர்.. வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீனிவாச பிரசாத்தின் ஜீப்பில் ஏறிக் கொண்டனர்..!! சாவி திருகி ஜீப்பை கிளப்பினார் ஸ்ரீனிவாச பிரசாத்.. ஆக்சிலரேட்டரை மிதித்து வேகம் கூட்டினார்..!! அந்த ஜீப்.. காவல்நிலைய வளாகத்தின் நுழைவாயிலை தாண்டியபோது.. எதிர்ப்பக்கம் இருந்து இன்னொரு ஜீப் க்ராஸ் செய்து, காவல் நிலையத்துக்குள் நுழைந்தது..!! அந்த ஜீப்பில்.. பின் சீட்டில்.. அமர்ந்திருந்தாள்.. மீரா..!!!

ஒரு ஜீப்பில்.. 'அடுத்து என்ன செய்யப் போகிறோம்?' என்ற கவலை தோய்ந்த முகத்துடன் அசோக்..!! அடுத்த ஜீப்பில்.. எதைப் பற்றிய அக்கறையும் இல்லாமல்.. எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மீரா..!! இரண்டு ஜீப்புகளும் ஒன்றை ஒன்று எதிரும் புதிருமாய் க்ராஸ் செய்து கொண்டன.. அசோக்கும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வாய்ப்பில்லை..!! இருவரையும் சந்தித்துக்கொள்ள வைத்து.. அவர்களது காதலுக்கு உதவி செய்கிற மாதிரி ஒரு எண்ணம்.. பாழாய்ப்போன அந்த விதிக்கும் வரவில்லை..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Interesting bro
Like Reply
அடுத்த ஐந்தாவது நிமிடம்.. மீரா மலரவனின் முன்பு அமர்ந்திருந்தாள்..!! அவளுடைய இதயத்தின் துடிப்பு வழக்கத்தைவிட அதிகமாயிருந்தது.. ஆனால் அந்த பதற்றத்தை தனது முகத்தில் காட்டாமல், மிக லாவகமாக மறைத்திருந்தாள்..!! சில வினாடிகள் அவளை ஏற இறங்க பார்த்த மலரவன்.. பிறகு மிக இயல்பாகவே தன் விசாரணையை ஆரம்பித்தார்..!!

"இது ஜஸ்ட்.. ஒரு ஃபார்மல் என்கொய்ரிதான்..!! நீங்க எதுவும் நெர்வஸ் ஆகிக்க தேவை இல்ல..!!"

"இ..இல்ல ஸார்.. ஆகல.. சொல்லுங்க..!!"

"ஹ்ம்ம்.. ந்யூஸ் பேப்பர் பாத்திருப்பிங்கன்னு நெனைக்கிறேன்....??"

"ம்ம்.. பார்த்தேன் ஸார்.. பாத்ததுக்கு அப்புறந்தான் எனக்கு விஷயமே தெரிஞ்சது.. அப்படியே.. I was shocked..!! எப்படி சொல்றதுன்னு தெரியல.. I.. I just.. I couldn't believe that..!!"

பொருத்தமான ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து.. அழுதுவிடுகிற குரலில் சொன்னாள் மீரா..!! மிக திறமையாகவே நடித்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.. முணுக்கென்று அவளுடைய கண்களில் ஒருதுளி கண்ணீர் பூத்தது.. அதை அவசரமாக கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள்..!! அவளுடைய நடிப்பை மலரவன் அப்படியே நம்பிவிட்டார் போல தோன்றியது.. அவளது அழுகை அவரிடம் ஒரு பதற்றத்தை கொடுத்திருந்தது..!!

"ப்ளீஸ் மிஸ்.. கண்ட்ரோல் யுவர்செல்ஃப்..!!"

என்றார் கனிவான குரலில். உடனே மீரா ஒருமுறை மூக்கை விசும்பிக் கொண்டாள். விசும்பிக்கொண்டவள், ஒருவித குசும்புடன் கேட்டாள்.

"யா..யார் பண்ணாங்கன்னு கண்டுபிடிச்சாச்சா ஸார்..??"

"இன்னும் இல்ல.. இப்போத்தான் இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிச்சிருக்கோம்.. கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சிடுவோம்..!!"

"ம்ம்..!!

"ஆக்சுவலி.. விஜய சாரதியோட செல்ஃபோன் எங்களுக்கு இன்னும் கெடைக்கல..!! பட்.. அவரோட செல்லுக்கு வந்த கால்லாம் எங்களால கண்டு பிடிக்க முடிஞ்சது.. அது மூலமாத்தான் உங்க நம்பர் எங்களுக்கு கெடைச்சது..!!"

"ம்ம்.. புரியுது ஸார்..!!"

"அவர் இந்தியா வந்து ரெண்டு நாள்தான் ஆகுது.. அதுக்குள்ள அஞ்சாறு தடவை உங்களுக்கு கால் பண்ணி பேசிருக்காரு.. இல்லையா..??"

"எஸ்..!!

"ஹ்ம்ம்.. நேத்து ஈவினிங் நீங்க எங்க இருந்தீங்கன்னு சொல்ல முடியுமா..??"

மலரவன் அந்த மாதிரி கேட்டதும், மீரா படக்கென உஷாரானாள். நேற்று இறுதியாக விஜயசாரதியுடன் ஃபோனில் பேசியபோது, தான் ஆட்டோவில் வந்துகொண்டிருந்தது எந்த இடம் என்று அவசரமாக யோசித்தாள். யோசித்தவள்,

"அண்ணாநகர்ல ஷாப்பிங் போயிருந்தேன்.. மத்தபடி என் வீட்லதான் இருந்தேன்..!!" என்றாள் இயல்பான குரலில்.

"உங்க வீடு சிந்தாதிரிப்பேட்டைல..??"

"எஸ்..!!"

"உங்களுக்கும் விஜயசாரதிக்கும் எப்படி பழக்கம்னு நான் தெரிஞ்சுக்கலாமா..??"

தானும் விஜயசாரதியும் முதன் முதலாக சந்தித்துக்கொண்ட அந்த சம்பவத்தை.. மீரா இப்போது நினைவுக்கு கொண்டுவந்தாள்..!! அந்த நினைவு எப்போதும் அவளுக்கு வேதனையையே தரும்.. இன்றும் தந்தது..!! ஆனால் அந்த வேதனையை தனது முகத்தில் காட்டிக்கொள்ளாமல்.. சலனமற்ற முகபாவத்துடனே சொன்னாள்..!!

"I'm a nurse..!! வியாசர்பாடில.. மூர்த்தி சார்க்கு சொந்தமான ஒரு ஹாஸ்பிடல் இருக்குது.. அங்கதான் நான் வொர்க் பண்ணினேன்..!! மொதலாளின்ற முறைல விஜய் அந்த ஹாஸ்பிடல்க்கு அப்பப்போ வருவாரு..!! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. ஒருதடவை ஃப்ரண்ட்ஸோட வந்திருந்தாரு.. அவரோட ஃப்ரண்ட் யாருக்கோ மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் வேணும்னு வந்திருந்தாரு..!! அன்னைக்குத்தான் நாங்க முதமுதலா மீட் பண்ணிக்கிட்டோம்..!!"

"ம்ம்..!!"

"நான் ஹாஸ்பிடல் ரெஸ்டாரன்ட்ல தனியா உக்காந்து சாப்பிட்டு இருந்தேன்.. அவர் எதிரே உக்காந்து சாப்பிட்டாரு.. அவரே தானா வந்து எங்கிட்ட பேசினார்.. ஃப்ரண்ட்ஷிப் வச்சுக்கிட்டாரு..!!" என்பதுவரை உண்மையை சொன்ன மீரா, அப்புறம் குரலை மாற்றாமலே ஒருசில பொய்களை சொன்னாள்.

"ரொம்ப நல்ல டைப்.. பணக்காரர்ன்ற பந்தா கெடையாது.. ரொம்ப டீசண்டா, கண்ணியமா நடந்துப்பாரு.. எனக்கும் அவரை ரொம்ப பிடிச்சு போச்சு..!! வீ ஆர் வெரி குட் ப்ரண்ட்ஸ்..!!!" மீரா அப்படி சொன்னதுக்கு மலரவன் மெலிதாக புன்னகைத்தார். அதை கவனித்த அவள்,

"எ..என்ன ஸார்.. சிரிக்கிறீங்க..??" என்று கேட்டாள்.

"ஒன்னுல்ல.. அந்த விஜயசாரதியை இவ்வளவு புகழ்றீங்களேன்னு பார்த்தேன்..!!"

"ஆ..ஆமாம்.. ஏன்..??"

"இல்ல.. இதுவரை நான் விசாரிச்ச வரைக்கும்.. அவரை பத்தி வேற மாதிரிதான் கேள்விப்பட்டேன்..!! ஹ்ம்ம்ம்ம்.. எனிவே.. அது அவங்க அவங்க வ்யூ..!! ஹ்ம்ம்.. உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்..!!"

"ம்ம்.. சொல்லுங்க..!!"

"விஜயசாரதி இறந்து போறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி.. கடைசியா அவர் பேசுனது ரெண்டு பேர்ட்டதான்..!! ஒன்னு.. அவர் கூடவே இறந்து போன அந்த காசி.. இன்னொன்னு நீங்க..!!" மலரவன் சொல்லிவிட்டு மீராவின் கண்களையே கூர்மையாக பார்க்க, அவளோ

"ஓ.. இஸ் இட்..??" என்று ஆச்சரியப்பட்டு அவரை குழப்பினாள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
"எ..எஸ்.. நேத்து ஈவினிங் உங்ககிட்ட அவர் பேசின ஒரு அரை மணி நேரத்துலதான்.. மர்டர் நடந்திருக்கு..!!"

"ஓகே..!! எ..எனக்கு அது தெரியாது..!!"

"ஹ்ம்ம்.. லாஸ்டா அவர்கிட்ட நீங்க என்ன பேசுனிங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..??"

"ரெண்டு பேரும் நேர்ல மீட் பண்ணிக்கிறது பத்தித்தான் பேசிக்கிட்டோம்..!! அவரை பாத்து ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு.. இவ்வளவு நாளா அவர் யூ.எஸ்ல இருந்தாரு.. இப்போ.. இன்னும் ஃபைவ் டேஸ்ல நான் கல்ஃப் கெளம்புறேன்.. அப்புறம் அஞ்சாறு வருஷம் கழிச்சுத்தான் திரும்ப வருவேன்..!! அதான்.. இந்த அஞ்சு நாள் விட்டா.. அப்புறம் ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கவே முடியாதுன்னு.. அதுக்கு நடுவுல ஒருநாள் மீட் பண்ணிக்க நெனச்சோம்..!! ஆக்சுவலா.. இன்னைக்கு மீட் பண்றதா இருந்தது.. அ..அதுக்குள்ள.. அதுக்குள்ள இப்படி.."

சொன்னதை முடிக்காமலே மீரா போலியாக விசும்ப ஆரம்பித்தாள்.. மலரவன் மீண்டும் தலையை சொறிந்துகொண்டார்.. அழுகிறவளை அவரே மறுபடியும் சமாதானம் செய்யுமாறு ஆகிப் போனது..!!

அதன்பிறகும் மலரவன் மீராவை பல கேள்விகள் கேட்டார்.. எல்லாமே விஜயசாரதி பற்றியும், அவனுக்கும் மீராவுக்கும் இருந்த நட்பு பற்றியுமான கேள்விகளாகவே இருந்தன..!! எல்லா கேள்விகளுக்கும் மீரா மிக இயல்பாக, புத்திசாலித்தனமாக, எந்த சந்தேகத்திற்கும் இடம் கொடுக்க முடியாத வகையில் பதில் சொன்னாள்..!! ஒரு கட்டத்தில் மலரவன் சலிப்படைந்து போனார்.. ஆரம்பத்தில் மீரா மீது இருந்த சிறிய சந்தேகமும் இப்போது அவருக்கு இல்லாமல் போயிருந்தது..!!

இருந்தாலும்.. அவளை சந்தேக லிஸ்டில் இருந்து முழுமையாக நீக்குவதற்கு முன்பு.. இன்னும் ஒரு காரியம் செய்ய நினைத்தார்.. அவளுடைய கைரேகையை கலெக்ட் செய்துகொள்வதுதான் அது..!! அதை அவளிடம் நேரடியாக கேட்டு பெறுவதற்கும் அவருக்கு மனமில்லை.. அவள் பெண் என்பதும், அதிலும் அழகான பெண் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.. அவள் அறியாமலே அதை செய்யவேண்டும் என்று நினைத்தார்..!!

"வந்துமே கேட்ருக்கணும்.. ஏதோ ஞாபகத்துல மறந்துடுச்சு..!! ஏதாவது சாப்பிடுறீங்களா..?? காபி, டீ, ஜூஸ்..!!" என்று திடீரென கேட்டார்.

"இ..இல்ல ஸார்.. அதுலாம் வேணாம்..!!" மீரா தயங்கினாள்.

"பரவால.. சாப்பிடுங்க..!!"

"நோ ஸார்.. நீங்க மொதல்ல கேட்டு முடிங்க.. அப்புறமா.."

"கேக்க வேண்டியதுலாம் கேட்டு முடிச்சாச்சு.. அவ்வளவுதான்..!! ஏதாவது சாப்பிட்டு நீங்க வீட்டுக்கு கெளம்பலாம்..!!"

"ஓ..!!"

"சொல்லுங்க.. என்ன சாப்பிடுறீங்க..??"

"இ..இல்ல ஸார்.. ஒன்னும் வேணாம்..!!"

"நோ நோ.. அப்படிலாம் சொல்லக் கூடாது.. எங்க இன்வெஸ்டிகேஷனுக்கு ஹெல்ப் பண்றதுக்காக இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க.. யு லுக் ஸோ டயர்ட் ஆல்ஸோ.. கண்டிப்பா ஏதாவது சாப்பிடனும்..!! சொல்லுங்க..!!" அவர் மிகவும் வற்புறுத்தவும்,

"ஓகே.. ஜூஸ்..!!" என்று மீரா ஒத்துக் கொண்டாள்.

மலரவன் ஒரு கான்ஸ்டபிளை அழைத்து ஜூஸ் கொண்டுவருமாறு சொன்னார்.. அப்படி சொல்கையிலே கண்ணை சிமிட்டி அந்த கான்ஸ்டபிளுக்கு ஒரு சிக்னல் கொடுத்தார்..!! கைரேகை சேகரிப்பதற்கான யுக்தி அது என்பதை.. அந்த கான்ஸ்டபிளும் புரிந்துகொண்டு ஜூஸ் எடுத்துவர நகர்ந்தார்..!!

மீரா உஷாராக இருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.. மலரவன் அந்த கான்ஸ்டபிளுக்கு கண்ணால் கொடுத்த சிக்னலை.. அவள் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.. தனது கைரேகையை சேகரிக்கத்தான் இந்த கரிசன நாடகம் எல்லாம் என்பது.. அவளுக்கும் விளங்காமல் இல்லை..!!

விஜயசாரதியின் வீட்டில் இருந்து செல்ஃபோனை எடுத்துக் கொண்டு கிளம்புகையில்.. அந்த வீட்டுக்குள் தனது கைரேகை படிந்திருக்க வாய்ப்பிருக்கிற இடங்களை எல்லாம்.. கைக்குட்டையால் துடைத்து முடித்து அவள் கிளம்பிய காட்சி.. இப்போது அவளது மனத்திரையில் பளிச்சிட்டது..!! மலரவனின் சிறுபிள்ளைத்தனமான இந்த முயற்சியை நினைத்து, அவளுக்கு மெலிதாக சிரிப்பு வந்தது.. அதை மிக எளிதாக அடக்கிக் கொண்டாள்..!!

இரண்டே நிமிடங்களில்.. மஞ்சள் நிறத்திலான பழச்சாறு நிறைந்த ஒரு கண்ணாடி டம்ளர்.. மீராவுக்கு முன்பாக கொண்டு வந்து வைக்கப்பட்டது..!! அவள் எந்த தயக்கமும் இல்லாமல் அந்த டம்ளரை பற்றி.. கையில் எடுத்து உயர்த்தி.. அப்படியே தொண்டைக்குள் சரித்து.. மடக் மடக்கென முழுதும் குடித்து முடித்தாள்..!! கைக்குட்டையால் உதட்டை ஒற்றிக்கொண்டாள்..!! காலி டம்ளரை டேபிளில் வைக்காமல்.. மலரவன் முன்பாக உயர்த்தி பிடித்து காட்டியவாறே.. கொஞ்சம் கேலி கலந்த குரலில் அவரிடம் கேட்டாள்..!!

"இப்போ திருப்தியா ஸார்..??"

"வாட்..??" மலரவன் புருவத்தை சுருக்கினார்.

"இல்ல.. குடிச்சே ஆகணும்னு கம்ப்பெல் பண்ணுனிங்களே.. குடிச்சு முடிச்சாச்சு.. இப்போ திருப்தியான்னு கேட்டேன்..!!" கேட்டுவிட்டு மீரா புன்னகைக்க,

"ஹாஹா.. எ..எஸ் எஸ்.. திருப்தி..!!" மலரவன் ஒரு அசட்டு புன்னகையை சிந்தினார்.

"ம்ம்.. அப்போ நான் கெளம்புறேன் ஸார்..!!"

இயல்பான குரலில் சொன்ன மீரா.. டம்ளரை டேபிளில் வைத்துவிட்டு.. மலரவனின் பதிலுக்கு கூட காத்திராமல்.. சேரிலிருந்து எழுந்து.. திரும்பி விடுவிடுவென நடந்து.. ரெட்ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறினாள்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Nice bro
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)