Romance உன்னருகே நானிருந்தால்
#1
Heart 
“உன்னருகே நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் ...............................” அன்னைக்கி மத்தியானம் 12 மணிக்கு banglore பஸ் ஸ்டாப்ல செம climate, சாயந்திரம் 6 மணி மாதிரி இருட்டா இருந்துச்சு .. நா சென்னைக்கு போற பஸ்ல என்னோட சீட்ல bag வச்சுட்டு கீழ வந்து இந்த climateku ஒரு டி குடுச்சா சூப்பரா இருக்கும்னு கீழ இறங்குனேன் , ஆனா அது மழைக்கு பொறுக்காம கீழ இறங்கி ரெண்டு steps நடக்குங்காட்டி மழை வேகமா பெய்ய ஆரம்பித்தது .. 

ஒரு டீக்கு ஆசைப்பட்டு fulla நனையனுமானு யோசிச்சு மறுபடியும் பஸ்லயே ஏறி உட்காந்தேன் .. மழை பெய்தாலே நம்ம எல்லார் மனசுக்குள்ளயும் ஒரு சின்ன சந்தோஷம் வந்திருதுல .. அதுவும் பஸ்ஸோட ஜன்னல் சீட்ல உட்காந்து வெளிய அந்த மழைய பாத்து ரசிச்சிகிட்டே நம்ம இளையராஜாவோட பாட்டுங்கள போன்ல போட்டு விட்டு கேட்க ஆரம்பிச்சோம்னா சும்மா அபிடியே சொர்க்கம் மாதிரி இருக்கும் .. அந்த சந்தோஷமான தருனத்த கெடுகின்ற விதமா யாரோ போன் பண்ணாங்க போன எடுத்து பார்த்தா என்னோட மாமா attend பண்ண உடனே hellonu கூட சொல்லாம பஸ் ஸ்டோப்கு போய்டியா இல்லையான்னு ? கேட்டாரு ..

இது அவர் இன்னிக்கி இதோட 5vadhu வாட்டி எனக்கு போன் பண்ணி கேட்குறாரு .. இப்ப பஸ்லதான் உட்காந்துட்டு இருக்கேனு சொன்னேன் .. அவர் இப்படி என்கிட்ட கேக்குறதுக்கு காரணம் நா சென்னைய விட்டு bangloreku வந்து 2 வருஷமாச்சு ஆனா இது வரைக்கும் ஒரு வாட்டி கூட சென்னைக்கு போகல அதான் .. சரி மாமாவையும் அக்காவையும் கேட்டதா சொல்லு அப்றம் போன உடனே வந்துறாத ஒரு 10 நாள் இருந்துட்டு வா ஆபீஸ்ல நா சொல்லிகிறேனு சொன்னார் .. சரி மாமா நா சென்னைல இறங்குனப்புரம் போன் பண்றேன் என்று சொல்லிவிட்டு கட் செய்தேன் .. பஸ் புறப்பட்டது .. என்னதான் சொர்கமாவே இருந்தாலும் ஒரு அரை மணி நேரம் கழித்து அதுவும் போர் அடிக்க தொடங்கிவிடும் ..


அதேபோல் அந்த மழையும் போர் அடிக்க தொடங்கியது .. பக்கத்தில் உட்காந்திருன்தவன் ஏதோ ஹிந்தி பாட்டை கேட்டு கொண்டே வந்த வேலையே அவசரமாக தொடங்கினான் அதான் கொறட்டை விட்டு தூங்க தொடங்கினான் .. அவன பாக்கும்போதுதான் இந்தியா ஒரு சுதந்திர நாடுனே தோணுது .. ஒரு தமிழன் பேச்சு துணை இல்லாமல் பயணம் செய்வது என்பது கௌதம் மேனன் இங்கிலீஷ் கலக்காமல் தமிழ் படம் எடுப்பது போல ரொம்ப கஷ்டமான விஷயம் .. கண்ணை மூடி தூங்கலாம்னு நெனச்சா என்னோட சக சிட்டிசன் கொறட்டைய இப்ப 4 வது கியர்ல ஓட்டிக்கிட்டு இருந்தார் .. போன்ல full sound வச்சேன் .. பேச்சு துணைக்கும் ஆளில்ல, தூங்கவும் முடியல வேற வலி என்னோட வாழ்க்கைல நா பாத்த, அனுபவித்த விஷயங்கள மறுபடியும் மனசுல ஓட விட வேண்டியதுதான் ..


என்னோட பேரு பாலச்சந்தர் , ஆனா யார் என்கிட்ட பேர கேட்டாலும் சந்த்ருனுதான் சொல்லுவேன் .. மத்தவங்களும் என்ன அப்டிதான் கூப்பிடனும்னு ஆசை படுவேன் ..அதுக்கு காரணம் நா பாலச்சந்தர்னு என்னோட பேர சொன்னவுடனே k.பாலச்சந்தராநு? கேட்டுட்டு மொக்கையா சிரிப்பாங்க .. என்னோட வாழ்க்கைல எதையாவது மாத்தணும்னு நெனச்சா நா முதல்ல என்னோட பேர்தான் மாத்துவேன் .. என்னோட friendungalaam என்ன பாலானு கூப்பிடுவாங்க இல்ல சந்த்ருனு கூப்பிடுவாங்க ஒரே ஒரு நாதாரிய தவிர அவன் என்னோட ஸ்கூல் friendu அந்த நாய் மட்டும் என்ன வெருப்பெதுரதுகாகவே பாலச்சந்தர்நுதன் இன்னிக்கு வரைக்கும் கூபிடுறான் .. அதுவும் வெளிய திற்றேகு , ஹோடேல்குலாம் செமைய டிரஸ் பண்ணி கூலிங் glasslaam போட்டு கிட்டு பொண்ணுங்க முன்னாடி போகும்போது என்ன பாலச்சந்தர்னு சத்தம் போட்டு கூப்டு கேவல படுத்துவான் .. இதனாலேயே இந்த பேரு மேல எனக்கு செம கடுப்பு ..


ஒரு சராசரி சென்னை மிடில் கிளாஸ் பையனோட வாழ்க்கைல இருக்கும் அதே ஆசை , கனவு , சந்தோஷம் , ஏமாற்றம்னு எல்லாம் என்னோட சின்ன வயசுலயும் நா அனுபவுசேன் .. இந்த உலகத்துல இருக்க எல்லாருக்கும் காதல் வந்திருக்கும்னு சொல்ல முடியாது ஆனா ஸ்கூல் படிக்கிற நாட்கள்ல எல்லாருக்குமே ஸ்கூல்லையோ இல்ல வீடு கிட்டயோ யார்மேலயாவது ஒரு விதமான ஈர்ப்பு வரும் , அவங்க நம்மள விட்டு பிரிஞ்சிட்டா அது ஈர்பாகவே போய்டும் , ஆனா ஒரு வேல நம்ம கூடவே இருந்தா அந்த ஈர்ப்பு காதலா மாறிடும் எனக்கு நடந்ததும் அதுதான் ..... ………………
[+] 1 user Likes wealthbell's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Good start
Like Reply
#3
super. write more.
Like Reply
#4
…………………………….. என்னோட அப்பா போலீஸ் ஆபீசர் என்னோட அம்மா ஸ்கூல் டீச்சர் .. நா 6 வது படிக்கும்போது போலீஸ் கோர்டேர்ஸ்ல இருந்து மாறி பகதுலையே வீடு கட்டி எங்க சொந்த வீட்டுக்கு வந்தோம் .. அன்னகி எங்க வீடோட க்ரஹா பிரவேஷம் அன்னக்கிதான் நா முதல் முறையா ப்ரியாவ பாத்தேன் .. அவ அப்போ 5 வது படிச்சிட்டு இருந்தா .. மாடியில சாப்பாடு போட்டோம் .. அவளும் அவளோட அப்பா அம்மா தங்கச்சி எல்லோரும் உட்காந்து சாப்டு கிட்டு இருந்தாங்க .. நா யாருக்கும் தெரியாம 6 வது ஐஸ் கிரிம சாப்டு கிட்டு இருந்தேன் ..


நா சாபிட்ரத பாத்துட்டு எனக்கும் ஐஸ் கிரீம் வேணும்னு அவளோட அம்மாகிட ப்ரியா கேட்டா .. வழக்கம்போல ஐஸ் கிரீம் சாப்டா சளி பிடிக்கும்னு சொல்லி அவல அவங்க அம்மா off பண்ணிடாங்க .. இதை பார்த்து கொண்டிருந்த என்னோட அம்மா ஒரு ஐஸ் கிரீம்தான சாபிடட்டும்னு சொல்லிடு ,நா ஏற்கனவே சேகரிச்சு வச்சிருந்த ஐஸ் சரியாமல இருந்து ஒன்ன புடுங்கி அவ கிட்ட குடுத்தாங்க .. அவளும் சந்தோஷமாக சாப்பிட தொடங்கினால் .. நான் அந்த ஒரு ஐஸ் கிரிமின் இழப்பை ஈடு கட்ட ஐஸ் கிரீம் டப்பாவிலிருந்து 2 ஐஸ் கிரீமை எடுத்து கொண்டேன் ..
Like Reply
#5
அதுகபுரம் தினமும் நானும் அவளும் அந்த தெருவுல இருந்த மத்த பசங்களோட சேந்து iceboy, busciness,chess, carrom board, video gamesnu எல்லாம் விளையாடுவோம் .. தீபாவளி பொங்கல்னு எல்லா பண்டிகையும் சேர்ந்தே கொண்டாடுவோம் .. அது வரைக்கும் அவ மேல எனக்கு எந்த ஈர்ப்பும் இல்ல .. நாட்கள் நகர்ந்தன நா 9 தகு வந்தேன் இப்ப நறைய தமிழ் படங்கள் பார்த்து என்னோட general knowledge ரொம்பவே வளந்துடுச்சு .. என்கூட ஸ்சூல படிக்கிற பசங்கல்லாம் லவ் பண்ண ஆரம்பிச்சாங்க .. சினிமா tv collegenu எங்க பாத்தாலும் காதல் .. Classla எவன்லாம் லவ் பண்றானோ அவன எல்லாரும் கெத்தா பாத்தாங்க . என்னோட friendunga நீ யார லவ் பண்றனு என்ன கேட்பானுங்க .. லவ் பண்ணலேன்னு சொன்னா மதிக்க மாட்டாங்கனு நானும் லவ் பண்றேன்னு சொன்னேன் .. யார பண்றனு கேட்டானுங்க ? வீடு பக்கதுல ஒரு பொண்ணுன்னு சொன்னேன் ... எனக்கும் mathskum ரொம்ப தூரம் . எந்த maths examlayum 10 மார்க்குக்கு மேல வாங்க மாட்டேன் .அப்படி தப்பி தவறி 10 மார்க்கு மேல வாங்குனான அதுக்கு காரணம் நிச்சயமா எனக்கு முன்னாடி உட்காந்து exam எழுதுற என்னோட friendaaladhan.ஒரு முறை maths சொல்லி குடுக்க என்னோட friendu ஏன் வீட்டுக்கு வந்திருந்தான் .அப்ப ப்ரியா என்னோட வீட்டுக்கு எங்க அம்மாகிட டம்ளர்ல தயிர் வாங்க வந்தா .நானும் என்னோட friendum படிச்சிட்டு இருந்தத பாத்துட்டு . கலகுற சந்துரு இந்த வாட்டி mathsla சென்டம்தான் போலன்னு நக்கலா சிரிசிகிடே சொன்னா .நீ மூடிட்டு போடின்னு சொல்லிடு ரூம் கதவ சாதிடேன் .. என்னோட friendu உன்னோட ஆளு செம அழகா இருக்காடா பேரேன்னணு கேட்டான் ?.. அவன் சொன்னதுக்கு இல்லன்னு சொன்னா யார லவ் பண்ற காட்டுன்னு சொல்லுவான் அதுக்கு இவளையே லவ் பண்றேன்னு நம்ப வச்சிடலாம்னு நெனச்சு ப்ரியான்னு சொன்னேன் .. அடுத்தநாள் ஸ்கூலுக்கு போனா எல்லாரும் என்ன ப்ரியான்னு கூப்டு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுடானுங்க .. முதல கடுப்பா இருந்தாலும் அப்பறம் அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு .. பொதுவா இந்த லவ் பண்றவங்கள கலாய்ச்சா கோபம் வர மாதிரி நடிபானுங்க ஆனா உண்மையா உள்ள அவனுங்களுக்கு செம சந்தோஷமா இருக்கும் .. அதுகபுரம் எனக்கு பிரியா மேல ஒரு ஈர்ப்பு வந்துச்சு ..



எங்க வீட்டு bed room ஜன்னல்ல இருந்து பாத்தா ப்ரியா வீடோட ஹால் தெரியும் .. அடிகடி அவங்க வீடு ஹால்ல அவ இருகாலானு பாப்பேன் .. நாளுக்கு நாள் அவ எனக்கு ரொம்ப அழகா தெரிஞ்சா .. முன்னாடி மாதிரி அவ கூட என்னால சகஜமா பேச முடியல .. அவல தூரத்துல இருந்து அவளுக்கு தெரியாமையே அவல பாத்து கிட்டே இருப்பேன் .. சாயந்திரம் எப்பவும் எங்க ரோட்ல shuttle cork விளையாடுவோம் .. அவதான் எப்பவும் எங்க வீட்டுக்கு வந்து விளையாட கூபிடுவா .. நானும் வேண்டா வெறுப்பா போவேன் .. ஆனா இப்பலாம் மதியத்துல இருந்தே விளையாடுறதுக்கு ரெடி ஆகி அவ எப்ப வந்து கூப்டுவானு wait பண்ணிகிட்டே இருப்பேன் .. மழை காலம் வந்தாலே எனக்கு செம கடுப்பா இருக்கும் காரணம் ரோடு fulla தண்ணி தேங்கிகும் அவ கூட என்னால shuttle cork விளையாட முடியாது .. அவ என்ன சந்த்ருனு கூப்டும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் .. அவ கூட நறையநேரம் பேசுனம்னு தோணும் ஆனா பேச பயமா இருந்துச்சு .. அந்த timela வந்த படங்கள பாத்துட்டு நானும் அவளோட photova மறைச்சு வச்சு அப்ப அப்ப எடுத்து பாப்பேன் .. எப்பவும் ஒரு மாதிரி கனவுலேயே சுத்திக்கிட்டு இருந்தேன் அவ கூட பேசும்போது மட்டும்தான் இந்த உலகத்துக்கே வருவேன் .. அந்த ஒரு வருஷத்துல அவ மேல எனக்கிருந்த attraction எப்படி காதலா மாறுச்சுன்னு எனக்கே தெரியல ..



இந்த உலகத்துல யாராலையும் தனக்கு எந்த நொடில காதல் வந்துச்சுன்னு மட்டும் கரெக்டா சொல்லவே முடியாது .. இப்ப நா 10th ஏற்கனவே நா படிப்புல புலி இதுல காதல் வேற முதல் டெஸ்ட்ல எந்த சப்ஜெக்ட்ளையும் 10 மார்க்கு மேல வாங்க முடியல .. என்னோட அப்பாவையும் அம்மாவையும் ஸ்கூல கூப்டு இப்படியே விட்டா உங்க பையன் நிச்சயமா 10th பப்ளிக் exaamla பாஸ் பண்ண மாட்டான் .. பேசாம tc வாங்கிட்டு போயடுங்கனு மிரட்ட ஆரம்பிச்சாங்க .. பிரின்சிபால் ரூம்ல என்ன நிக்க வச்சு எல்லா டீசெரும், பிரின்சிபாலும் என் அப்பா அம்மா முன்னாலேயே திட்ட ஆரம்பிச்சாங்க, என்னோட அப்பாவும் அம்மாவும் அவமானத்துல தலைய குனுன்ஜாங்க .. அவங்கள அப்படி பாத்ததும் அங்கேயே அழ தொடங்கினேன் .. கடைசியாக அடுத்த டெஸ்டில் பாப்போம் எதுவும் improvement தெரியலேனா அபாரம் என்னால ஒன்னும் ஹெல்ப் பண்ண முடியாதுனு பிரின்சிபால் என்னோட parentskitta சொன்னார் ..


அதுகபுரம் எங்க வீட்ல என்ன வீட்ட விட்டு வெளியபோகவே விடல .. சாயந்திரம் shuttle corkum விளையாட விடல .. புக் கூடவே படுத்து புக் கூடவே எந்திரிப்பேன் .. ஆனா என்னால படிப்புல கவனம் செலுத்தவே முடியல .. எங்க வீடு Bed room ஜன்னல் வழியா அவ அவங்க வீட்டு ஹாலுக்கு வருவாளான்னு அங்கேயே பாத்துகிட்டு இருப்பேன் ..எப்பயாச்சு அவ என்னோட வீட்டுக்கு வருவா .. அந்த சில நிமிடங்கள் மட்டும் சந்தோஷமா இருக்கும் அப்பறம் மறுபடியும் புக் குள்ள தலைய விடனும் .. ஒரு வழியா அடுத்த டெஸ்ட்ல எல்லா subjectlayum 50 மார்க் கிட்ட வாங்குனேன்


ஆனா அந்த mathsla மட்டும் fail aagiten .. இப்ப எங்க வீட்ல என்ன maths tutionla சேர்த்து விட்டாங்க .. ஸ்கூல் விட்டு வந்த உடனே tutionku போய்டுவேன் .. அவ கிட்ட பேச கூட எனக்கு சந்தர்பம் கிடைகள .. அடிகடி ஜன்னல் வழியா மட்டும் அவல பாப்பேன் .. அவ மேல இருந்த காதல் மட்டும் எனக்கு குறையவே இல்ல .. 10th result வரதுக்கு முன்னாடி நாள் எனக்கு செம பயம் .. நா fail ஆகிட்டா என் life wastaagidumdradha விட என்னோட parents என்ன சொல்லுவாங்க ?, அதோட ப்ரியாகுலாம் தெரிஞ்சா ரொம்ப கேவலமைடுமேனு பயம் மனசுக்குள்ள வந்து வந்து போயிடு இருந்துச்சு ..அடுத்த நாள் காலைல இருந்து bedlaye படுத்துகிட்டு எப்படியும் mathsla fail ஆகிடுவோம் நமக்கு இந்த படிபுலாம் ஒத்து வராது , பேசாம வேற ஊருக்கு போய் வேளைக்கு போலாம்னு முடிவு பண்ணி bedlaye படுத்திருந்தேன் ..

ஒரு வழியா result வந்துச்சு என்னோட அப்பா resulta பாத்துட்டு பாஸ் ஆகிடனு சொன்னபுரம்தன் எனக்கு உயிரே வந்துச்சு .. எந்த புண்ணியவான் என்னோட maths papera கரெக்ட் பண்ணானோ அவன் 100 வருஷம் நல்லா வாழணும்னு தோனுச்சு .. உடனே chocklate pocket வாங்கிட்டு பிரியா வீட்டுக்கு போனேன் .. அவளோட அப்பா tv பாது கிட்டு இருந்தாரு .. Uncle நா பாஸ் ஆகிடேனு சொன்னேன் .. Oh மோத கைய குடுன்னு சொல்லி கை குடுத்துட்டு எவ்ளோவ் percentagenu கேட்டாரு .. Percentage போன்ற அளவுகேல்லாம் எனக்கு maths தெரிஞ்சா நா ஏன் இப்படி இருக்கேனு தோனுச்சு .. இன்னும் percentage calculate பண்ணலன்னு சொன்னேன் .. ப்ரியாவோட அம்மா ஒரு கைல மாவோட வாப்பா பாஸ் பண்ணிட போலன்னு சொல்லிடு chocklate எடுத்துட்டு உள்ள பிரியவும் மானசாவும் இருக்காங்க போய் குடுபானு சொன்னாங்க .. நா உள்ள ரூம்குள்ள போறப்ப , ப்ரியாவோட அம்மா தெலுங்குல ப்ரியாவோட அப்பாகிட ஏதோ சொன்னாங்க .. ஆனா அவங்க சொன்ன modulationa வச்சு பாக்கும்போது அவன் பாஸ் ஆனதே பெரிய விஷயம் அவன்கிட்ட போய் பெர்செண்டகேலாம் கேட்குரிங்கனு சொன்ன மாதிரிதான் எனக்கு தோனுச்சு .. ரொம்ப நாள் கலுச்சு ப்ரியாவ பேச போற சந்தோஷத்துல உள்ள போனேன் .உள்ள அவளும் அவ தங்கச்சியும் chess விளையாடிட்டு இருந்தாங்க .. அவ என்ன பாத்தவுடனே ஆச்சர்யம் கலந்த சிரிப்புடன் கலகுற சந்துரு பாஸ் பண்ணிடயானு சொல்லி கை குடுத்தா .. உண்மையிலேயே நா பாஸ் ஆனதுகாக அபதான் ரொம்ப சந்தோஷ பட்டேன் .. அடுத்து என்ன group எடுக்க போர்னு கேட்டா நா தெரியலன்னு சொன்னேன் .. நா 10th பாஸ் பன்னுவேன்னே எனக்கு நம்பிக்கை இல்ல இதுல groupa பதிலாம் யாரு யோசிச்சா .. அவளோட தங்கசிகும் சாக்லேட் குடுத்துட்டு .. கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு எங்க வீட்டுக்கு வந்துட்டேன் ..



அடுத்தநாள் காலைல நா எங்க வீடு மாடில நின்னுகிட்டு இருந்தேன் .. அவ ஸ்கூல் uniformlaam போட்டு கிட்டு வெளிய வந்தா , heynu காத்திடு ஒழுஞ்சுகிடேன் .. அவ சுத்தி சுத்தி யார்னு பாத்துகிட்டு இருந்தா .. ரெண்டாவது வாடி கத்தும்போது பாத்துட்டு சிரிச்சா .. என்ன இப்பவே ஸ்கூல் ஆரம்பிசுடாங்கலானு கேட்டேன் .. ஆமா 10thku இப்பவே class ஆரம்பிச்சுடாங்க .. Ok late ஆகிடுச்சு bye nu சொல்லிடு கெளம்பிட்டா .. இப்ப 11th fullaa நா freeya இருந்தேன் ஆனா அவ 10th நாள எப்ப பாத்தாலும் படுசிகிடே இருந்த .. எப்பயாவது பாத்தா சிறிபா நாலு வார்த்த பேசுவா அந்த நாலு வார்த்த பெசுரதுகாகவே அவ எப்ப வெளிய வருவான்னு wait பண்ணிகிட்டே இருந்து நானும் correcta வெளிய வருவேன் .. 11th la நா வேற collegeuku போனேன் .. எல்லாரும் Computer science group எடுக்க சொன்னாங்க நானும் அதே எடுத்தேன் .. அங்க நறைய புது friendslaam கேடசாங்க , அவனுங்கதான் எனக்கு sigarette, beerunu பல நல்ல விஷயங்கள கத்து குடுத்தானுங்க .. Naanum அந்த நல்ல விஷயங்கள வீட்டுக்கு தெரியாம அப அப செஞ்சுகிட்டு இருந்தேன் .. 11thla என்ன சுத்தி நிறைய மாற்றங்கள் ஆனா அவ மேல இருந்த காதல் மட்டும் மாறல ..



அவளோட தங்கச்சி அடிகடி எங்க வீட்டுக்கு வருவா . . அவ priyaavuku opposite எப்ப பாத்தாலும் பேசிகிட்டே இருப்பா .. அவ தங்கசிகிட mostly அவளோட அக்காவ பத்திதான் கேட்டு கிட்டு இருப்பேன் .. அவ என்ன அண்ணன்னு கூப்டுவா அந்த ஒரு விஷயம்தான் ரொம்ப கடுப்பா இருக்கும் .. எத்தனையோ தடவ சொல்லி பாத்துட்டேன் என்னோட பேர solli கூப்டு இல்ல அசிங்கமா கேட்ட வார்த்தைல கூட கூப்டுக்கனு , ஆனா அவ என்ன அண்ணன்னு கூபுடரத மாத்திக்கவே இல்ல .. என்னோட பிரிண்டுங்க அவ அப்படி கூபிடரத பாத்து அவளுக்கு நீ அண்ணன்னா அப்ப அவளோட அக்காக்கும் நீ அண்ணன்தான மச்சி nu சொல்லி கடுபெதுவானுங்க .. அடுத்து நா 12th வந்தேன் முன்னாடி நா படுச்ச collegea விட இந்த college ரொம்ப strictunu நா 12th வந்தப்புறம்தான் தெரிஞ்சுச்சு ..

அந்த college principaldhan என்னோட முதல் எதிரி அவனுக்கு ஏன் மேல அவளா பாசம் , 12th முடிகருதுக்குள்ள என்னோட parentsa principal atleast ஒரு 10 வாடியாசு வர சொல்லி tc வாங்கிட்டு போயடுங்கனு சொல்லி இருப்பான் .. இத கேட்டு கேட்டு சனியன் புடிச்சவனுங்க tc குடுத்துட்டா வேற ஏதாவது வேலையாச்சு பாக்கலாம்னு கூட எனக்கு தோணும் .. 12thla நல்லா படிக்காத பசங்களுக்கு nightu 10 மணி வரைக்கும் coaching class வச்சு சாகடிபாங்க .. கோபிநாத் இவன்தான் என்னோட இரண்டாம் எதிரி இவன்தான் என்னோட 12th maths teacher.. அவன் நின்னா என்னோட shoulder கிட்டகூட வரமாட்டான் .. நா heighta இருக்கேனு கடுப்போ என்னமோ தெரியல ஓயாம என்ன அடுசுகிடே இருப்பான் .. அவன் boardla sum போடும்போது அவனுக்கு correcta அன்ச்வேர் வரலேன கூட சனியன் புடிச்சவன் என்னைய வந்து அடிப்பான் .. அவன் chinna vayasula kaththu கிட்ட foot ball, volley ballalam என்னோட உடம்புலதான் விளையாடுவான் .. ஒவ்வொரு test முடுஞ்சு maths paper குடுகும்போதும் என்ன design designa அடிப்பான் எங்க class பசங்களுக்கு செம entertainmenta இருக்கும் .. அவன் எவ்ளோவ் அதுசாலும் நா மத்தவங்க மாதிரி அழ மாட்டேன் அடிவாங்கிட்டு அமைதியா நிப்பேன் அதனாலேயே நா classla கேத்தைடேன் .. ஆனா அந்த கெத்த maintain பண்றதுக்கு நா ரொம்ப கஷ்ட பட்டு இருக்கேன் .. கடைசி revision test exam முடுஞ்சு maths papera எடுத்துகிட்டு கோபிநாத் வந்தான் .. வந்த உடனே என்னோட பேரையும் என்ன மாதிரியே மார்க் வாங்குன மத்த பசங்களையும் கூப்டு class முன்னாடி நிக்க வச்சான் .. முதல் papere என்னோடதுதான் 3 மார்கோ 4 மார்கோ வாங்குனேன்னு நினைக்கிறன் என்னோட papera கிளுச்சு என்னோட மூஞ்சில இருந்ஜான் .. என்னோட tie ya இறுக்கி புடுச்சான் நா போட்டு இருந்த கண்ணாடிய அவனே கழட்டி table மேல வச்சுட்டு அடிக்க ஆரம்பிச்சோம் அவனுக்கு என்னோட கன்னம் எட்டல அதனால ஒரு கைல என்னோட tie ya புதுசு jump panni jump panni அடுசான் .. இத பாது கிட்டு இருந்த பசங்களுக்கு சிரிப்பு வந்து சத்தமா சிரிக்க ஆரம்பிச்சுடாங்க .இதனால அவன் ரொம்ப கடுப்பாகி ரெண்டு கையாளும் மாறி மாறி கண்டபடி அடிக்க ஆரம்பிச்சான், tablela இருந்த ஸ்டீல் scale எடுத்து கண்ணா பின்னான்னு அடிச்சான் classla இருந்த பசங்க எல்லாருமே பயத்துல அப்படியா silenta உட்காந்திருந்தாங்க அவன் ஒரு 5nimisham தொடர்ந்து அடிச்சான் அபாரம் அடுத்த பையன வர சொன்னான் . . என்னால வலி தாங்க முடியல , புடுச்சு இழுத்ததுல tie ye பிஞ்சுருசு , என் வாழ்க்கைல அந்த மாதிரி அடி நா யார்கிட்டையும் வாங்குனதிள்ள .. பசங்க எல்லாம் என்ன பரிதாபமா பாக்குறத பாதபுரம் எனக்கு அழுகை வந்திருச்சு .. தரையை பாத்துகிட்டே கண்ணா தொடசுகிட்டு அழாம இருக்க ட்ரை பண்ணேன் ஆனா control பண்ண முடியாம அழுதுட்டேன் .. 12th முடுஞ்சபுரம் அவன கொலை பண்ண பல திட்டங்கள போட்டு வச்சிருந்தேன் .. ஆனா அவனோட அதிஷ்டம் அவன் என்னோட கண்ணுல படவே இல்ல .. விசாரிச்சதுல அவன் வேற ஊருக்கு போய்டதா கேள்வி பட்டேன் ..12th maths public examla எனக்கு முன்னாடி உட்காந்திருன்தவன் எனக்கு 40 choosekum answer சொன்னான் .. ஏதோ அவன் புண்ணியத்துலயும் gopinaathoda அடிக்கு பயந்து நா கொஞ்சம் படுச்சனாளையும் எப்படியும் பாஸ் பண்ணிடுவேன்னு தெயர்யமா இருந்தேன் .. ரிசல்ட் வரதுக்கு ஒரு நாளைக்கு முன்னாடியே chocklatelaam வாங்கி வச்சுட்டேன் .. ஆனா அன்னகி முன்னாடி நாள் nightu அவ familyoda hyderabadku ஏதோ கல்யாணத்துக்கு போய்டா .. அடுத்தநாள் ரிசல்ட் வந்துச்சு பாஸ் ஆகிட்டேன் . . Friendungalukellam சொச்க்ளடே குடுத்தேன் ஆனா அவ ஊர்ல இல்லாதனால நா பாஸ் ஆனது எனக்கு 10thla பாஸ் ஆனா அளவுக்கு சந்தோஷமாவே இல்ல .. அப்பறம் கொஞ்ச நாள் கலுச்சு அவ வந்தா , பாக்கும் போதெல்லாம் படிப்ப பதியே பேசுவா .. எனக்கு அவ பேசுறது கொஞ்சம் கூட புடிகலன்னு சொல்றதவிட புரியலனுதான் சொல்லணும் இருந்தாலும் சிரிச்சே சமாளிப்பேன் .. நாளுக்கு நாள் ரொம்ப அழகா தெரிஞ்சா , அதே மாதிரி நாளுக்கு நாள் அவ என்கூட பேசுறதும் ரொம்ப கம்மியாச்சு .. 12th la நறைய மார்க் எடுக்கணும்னு எப்ப பாத்தாலும் படிசிகிட்டே இருந்தா ..

அப்ப engineering ரொம்ப populara இருந்த time யார கேட்டாலும் engineeringdhaan படிகிறேனு சொல்லுவாங்க .. எங்க வீட்லயும் என்ன engineering படிக்க சொன்னாங்க .. எதுல வேணும்னாலும் சேர்த்து விடுங்க படிக்க போறவன்தான் அதை பதிலாம் கவலை படுவான் , நா எதுக்கு அதெல்லாம் யோசிசுகிட்டுன்னு அவங்க இஷ்டத்துகே விட்டுட்டேன் .மார்க் கம்மியா இருந்தனால councellingla கிடைகள ஒன்ற லட்சம் donation அழுது management quotaa la mechanical engineering செந்தேன் .. வீட்ல அடம்பிடுச்சு ஒரு cell phone வாங்குனேன் .. நா போன் வாங்கிடேனு அவளுக்கு காடுரதுகாக மாடிக்கு வந்து சத்தமா பாட்டு கேட்பேன் இல்லாட்டி customer careku போன் பண்ணி பேசுவேன் .. ஒரு வாடி நா phone பேசிக்கிட்டு இருக்கும்போது பாத்து சிரிச்சா .. நா உடனே phone கட் பண்ணிட்டு சிரிச்சேன் .. கலகுற சந்துரு phonelaam வாங்கிட போலன்னு சொன்னா .. ஆமான்னு சிரிச்சுகிட்டே சொன்னேன் .. என்ன model எவ்ளோவ்னு கேட்டா .. நானும் கீழ போய் அவ கிட்ட phone குடுத்தேன் அவளும் ஆர்வமா வாங்கி பாத்துட்டு என்னோட phone no. வாங்கிகிட்டா .. இதனை வருஷமாதான் maths படிக்கச் சொல்லி சாகடுசானுங்கனா இப்ப என்கிநீரிங்க்ளையும் maths படிக்க சொன்னானுங்க .. மோத வருஷத்துல 4 subject arrier அதுல ரெண்டு subject maths.. அவ 12thla நறைய மார்க் வாங்கி ஒரு பெரிய collegela computer engineering சேந்தா.. இது வரைக்கும் college uniformla பாத்ததுக்கும் இப்ப collega போனப்புறம் அவ இன்னும் ரொம்ப அழகா இருந்தா .. அவ கூட pesuradhu ரொம்ப கம்மி ஆகிடுச்சு பாக்கும்போது siripaa apparam அவளோட வேலைய பாத்துட்டு போய்டுவா .. Naa என்னோட வீட்ல படிகிறேனு சொல்லிடு ஜன்னல் வழியா அவல உக்காந்து பாத்து கிட்டே இருப்பேன் .. தான் லவ் பண்ற பொண்ண தூரத்துல இருந்து பாத்து ரசிக்கிற சுகமே தனிதாங்க அது லவ் பன்றவனுகுதான் தெரியும் .. அவ phone வாங்கிட்டான்குற விஷயமே அவளோட தங்கச்சி மூலமாதான் எனக்கு தெரியும் .. அவ கிட்ட எப்படி no. வாங்குறதுன்னு யோசிச்சேன் .. ஒரு நாள் ava மாடில head set மாடி பாட்டு கேட்டு கிட்டு இருந்தா .. நானும் பாட்டு கேட்கற மாதிரி எங்க வீட்டு மாடிக்கு போனேன் .. என்ன பாத்து சிரிச்சா .. போன்லாம் வாங்கிட போலன்னு கேட்டேன் .. ஆமான்னு சொல்லிடு என்னோட no.ku hi nu ஒரு msg அமுச்சா .. அந்த msg save பண்ணி வச்சுட்டு அப்ப அப்ப பாத்து சந்தோஷ பட்டுகுவேன் .. ரெண்டாவது வருஷம் முடிகுங்காடி 4 arriera இருந்தது 9 arriera மாறிடுச்சு அதுல 4 சுப்ஜெக்ட் maths.. எந்த engineer அவ வீட்ட design பண்ணானோ தெரியல அந்த நல்லவனுக்குதான் நா thanks சொல்லணும் அவன் புன்னியதாலதான் நா dailyum எங்க வீட்டு ஜன்னல் வழியா அவல பாக்க முடியுது .. ஒரு நாள் படிப்புலாம் எப்படி போகுதுன்னு கேட்டா ?.. பரவா இல்ல ஏதோ போகுதுன்னு சொன்னேன் .. அவ maths3 ரொம்ப கஷ்டமா இருக்குனு சொன்னா .. oh maths2 va விட maths3 easy யாச்சேன்னு சொன்னேன் .. ஆனா நா maths2 maths3 ரெண்டுதளையும் fail அது வேற விஷயம் .. தெரியில எனக்கு maths3dhan கஷ்டமா இருக்குனு சொன்னா .. நல்லவேள அவ என்ன சொல்லிகுடுக்க சொல்லிடுவாலோனு பயந்து silentaa இருந்துட்டேன் .. அவ first year all clear பண்ணிட்டா எங்க வீட்ல இருந்தவங்க பேசாம அவளை வேனா maths சொல்லிகுடுக்க சொள்ளட்டுமானு சொன்னாங்க .. அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்ன அசிங்க படுத்தாம இருங்கன்னு சொல்லிடு வழக்கம்போல bedroomku போய் ஜன்னல் pakkathula உக்காந்து அவ வீட்ட பாக்க ஆரம்பிச்சேன் .. Dailyum forward message அனுப்புவேன் ஆனா அவகிட்ட இருந்து எப்பயாச்சு ஒன்னு ரெண்டு forward message வரும் அந்த msgellaam store பண்ணி வச்சு அடிகடி பாதுகுவேன் .. எங்க வீட்டுக்கு பின்னாடி இருந்த landla புதுசா வீடு கட்டி ஒரு குடும்பம் குடி வந்தாங்க .. அன்னகி மாடில நின்னுகிட்டு இருக்கும்போது .. அந்த புது வீட்டு மாடில நின்னு ஒருத்தன் தம் பிடிச்சிட்டு இருந்தான் .. ரெண்டு மூணு நாள் கழுச்சு நா பஸ் stopla ஒரு டி கடைல மறஞ்சு நின்னு தம் அடிச்சிட்டு இருந்தேன் .. அன்னகி மாடில நின்னு தம் அடிச்சிட்டு இருந்தவனும் தம்ம வாங்கிகிட்டு என்ன பாத்து சிரிச்சிட்டு தம் அடிக்க ஆரம்பிச்சான்

தம் அடிக்கிற விஷயம் வீட்டுக்கு தெரியாதான்னு கேட்டான் .. ஆமா உங்க வீட்டுக்கு தெரியுமான்னு கேட்டேன் தெரியாதுன்னு சொன்னான் .. எப்பவுமே தம்மடிக்கிற ரெண்டு பெரும் சரி குடிகாரனுங்க ரெண்டு பெரும் சரி ரொம்ப சீக்கிரம் friend ஆகிடுவாங்க .. நாங்களும் அப்படிதான் .. அவன் பேரு மோகன் computer engineering போன வருஷம்தான் முடுச்சதா சொன்னான் .. Hcl la place ஆகிட்டேன் call letterkaaga wait பண்ணிட்டு இருக்கறதா சொன்னான் .. நானும் என்ன பத்தி சொன்னேன் .. அதுகபுரம் dailyum எங்க அப்பா அம்மா office போனப்புறம் திருட்டு தம் அடிக்க எங்க வீட்டுக்கு வருவான் .. நானும் எனக்கு ஒரு தம் freeya வாங்கி தரான்னு நெனச்சு நானும் அவன வீடுக்குள்ள விட்டேன் .. பாக்குறதுக்கு பண கார வீடு பையன் மாதிரி வெள்ளையா மீசை இல்லாம கொஞ்சம் அழகாவே இருப்பான் .. ஒரு வேல ப்ரியாவ அவன் கரெக்ட் பண்ணிடுவானொன்னு கூட தோணும் .. ஆனா இவன் அவல கண்டுக்கவே இல்ல .. என்கூட அவ பேசிகிட்டு இருக்கறத பாதா கூட அவன் கண்டுக்காம அவன் வேலைய பாத்து போய்டே இருப்பான் .. அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சுதான் சொன்னான் அவனோட collegela படிச்ச ஒரு பொண்ண லவ் பன்றதாகவும் அவளும் இவன லவ் பன்றதாவும் சொன்னான் .. அப்பாட எனக்கு பிரச்சனை இல்லன்னு நா சந்தோஷமா இருந்தேன் .. ஒரு நாள் என்னோட friendu birthday treatkaaga பார்க்கு போனோம் அப்ப மோகன் அங்க தண்ணி அடுச்சுட்டு வண்டிய எடுக்க முடியாம விழுந்து கடந்தான் .. நானும் என்னோட பிரிண்டுகளும் சேந்து என்னோட வீட்டுக்கு மோகன கொண்டு பொய் வச்சிருந்தோம் . . தெளிஞ்சபுரம் என்ன ஆச்சு ஓவரா அடுசிடிங்க போலன்னு கேட்டேன் .. அவன் லவ் பண்ண பொண்ணுக்கு கல்யானமைடுசுனு solli அழுதான் .. கொஞ்ச நாளுகபுரம் normal ஆனான் ஆனா அவனால அவன் லவ் பண்ண பொண்ண மறக்க முடியல dailyum வந்து ஒரு தம் அடிச்சிட்டு என்கிட்ட பொலம்பிட்டு போவான் .. ஒரு நாள் நானும் அவனும் எங்க வீடுகிட்ட நின்னு தம் அடிக்க போலாமான்னு பேசிகிட்டு இருந்தோம் .. அப்ப ப்ரியா எங்கம்மாகிட அவங்க வீட்டு சாவிய வாங்க வந்தா .. என்கிட்டே ஏதோ புரியாத மொழில ஏதோ software இருக்கானு கேட்டா .. அவ என்ன கேட்டானே எனக்கு புரியல .. இல்லன்னு சொன்னேன் .. மோகன் என்கிட்ட இருக்கு நா தரேன்னு சொன்னான் .. Oh thanksnu சொன்னா .. Computer engineering படிகிரியானு கேட்டான் .. அவளும் ஆமான்னு சொன்னா .. நானும் Computer engineeringதான் last year தான் முடுச்செனு சொல்லிட்டு நிறுத்தாம, Hcl ல place ஆனதையும் சொன்னான் .. நா அவங்க ரெண்டு பெரும் பேசிக்கிட்டு இருக்கும்போது மாறி மாறி அவங்க வாயவே பாத்துகிட்டு இருந்தேன் .. அவ எவ்ளோவ் cgp நு கேட்டா? இவன் 83nu சொன்னான் .. அவ நா இப்ப வரைக்கும் 85 வச்சிருக்கேன் ஆனா கோரஞ்சிடும்னு நேனைகிறேன்னு சொன்னா .. என்னோட cgp ya கேட்டுரவாங்கலோனு பயந்து கிட்டு இருந்தேன், எனக்கு அதா எப்டி calculate பன்றதுனே தெரியாது .. எனக்கு நிறைய doubt இருக்குனு சொல்லிடு ஏதோ linked லிஸ்ட், heap sortnu என்னனமோ பேச ஆரம்பிச்சாங்க .. நா அங்க எதுக்கு நிக்கிறேனே தெரியாம நின்னுகிட்டு இருந்தேன் .. அவன் கடைசியா அப்பறமா பாக்கலாம்டநு சொல்லிட்டு அவ கூடவே அவ வீட்டுக்கு போனான் .. அவனாச்சு பரவா இல்ல bye nu சொல்லிடு போனான் ஆனா இவ என்ன ஒரு மனுஷனா கூட மதிகள .. அதுக்கப்புறம் அவன் எங்க வீட்டுக்கு தம் அடிக்கவே வரல .. ஒரு நாள் மாடில இருந்து பாக்கும்போது அவளும் அவனும் அவ வீட்டுகிட்ட நின்னு பேசிட்டு இருந்தாங்க .. இப்பதான் அவனுக்கு லவ் failure ஆச்சு அவன் எப்படியும் அவல லவ் பண்ண மாட்டான்னு கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சு .. இன்னொரு நாள் அவ அவன்கூட bikela எங்கயோ போனா .. இதுவரைக்கும் நா அவள மத்த பசங்க கூட பேசியே பாத்ததில்ல ஆனா இப்ப ... அப்ப கூட மனசுல ஒரு ஓரத்துல அவங்க ரெண்டு பெரும் friendsaadhaan இருப்பாங்கனு நெனச்சு மனச தேத்திகிட்டேன் .. ஆனா அன்னகி ஒரு நாள் அவளோட தங்கச்சி மூலமாதான் தெருஞ்சுகிட்டேன் அவங்க ரெண்டு பேரும் லவ் பன்றான்கனும் அவங்க ரெண்டு பேரு வீட்லயும் சம்மதுசுடாங்க ஆனா கல்யாணம் மட்டும் இன்னும் ரெண்டு வருஷம் கலுச்சு வச்சுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கறதா சொன்னா ..

நா 7 வருஷமா நெனவாகும்னு நெனச்சு நா மனசுல கட்டி வச்சிருந்த கனவு அந்த ஒரு secondla கனவாவே போய்டுச்சு .. எனக்கு அழறதுக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்காது .. என்னோட வாழ்க்கைல எப்பவுமே நா second option வச்சிருப்பேன் .. அவ என்ன லவ் பண்ணலேனா தண்ணி அடுச்சு தம் அடிச்சுட்டு அவளுக்காகவே காத்துகிட்டு இருந்து என்னோட life waste பண்ற அளவுக்கு நா த்யாகியும் இல்ல காதலுக்காக வால்கயவே விடற அளவுக்கு என்னோட காதலும் worthilla.. Manasa thethikitu yennoda velaya paathukitu irundhen.. அவ வீட்ல கல்யானதுகாக இப்பவே வீட்டுல modificationlaam பண்ண ஆரம்பிச்சாங்க .. அவனும் அவளும் அடிகடி வண்டியில வெளிய போக ஆரம்பிச்சாங்க .. ஒரு நாள் நா வெளிய போகும்போது அவங்க ரெண்டு பெரும் மாடில நின்னு பேசிட்டு இருந்தாங்க .. என்ன பாத்ததும் ரெண்டு பெரும் சிரிசிகிட்டே கை ஆடுனாங்க நானும் பதிலுக்கு கஷ்டப்பட்டு சிரிச்சேன் .. இதனை வருஷமா அவ கூட இருந்தோம் ஆனா அவளுக்கு என் மேல லவ் வரல ஆனா அவன் இங்க வந்து ஒரு வருஷம்கூட ஆகல ஆனா அவன அவ லவ் பண்ணிடாலேன்னு யோசிச்சேன் .. பய பாக்குறதுக்கு வேற ஹிந்தி பட hero மாதிரி இருக்கான் , IT கம்பெனில வேலை பயனும் நல்லவன் நல்ல குடும்பம் வேற எந்த போன்னுகுதான் பிடிக்காம போகும்னு தோனுச்சு .. என்ன விட எல்லா விதத்துலயும் அவன் betternu தோனுச்சு .. ரெண்டு பெரும் தெலுங்கு கம்முநிட்டிதான் அதனால அவங்க ரெண்டு பேரோட வீட்லயும் பிரச்சனை இல்ல .. என்னதான் நா மனச தேதிகிட்டாலும் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா போறத பாக்கும்போது தாங்க முடியல .. எப்படியாச்சு arriera ச்லேஅர் பண்ணிட்டு வேற ஊருக்கு வேளைக்கு போய்டனும்னு முடிவு பண்ணேன் .. காதலிச்சவ கல்யாணத்துக்கு போய் வாழ்த்திட்டு அர்ச்சதை போட்டுட்டு வாழ்த்திட்டு வர அளவுக்கு நா ஒன்னும் விக்ரமன் படத்துல வர ஹீரோ அளவுக்கு நல்லவன் இல்ல .. எல்லா arrierayum clear பண்றதுக்கு ஒரு வருஷமாச்சு .. என்னோட மாமாகிட்ட ஏற்கனவே என்னோட வேலைய பத்தி கேட்டு இருந்தேன் .. Arrier clear பண்ணிட்டு வா வாங்கிதரேன்னு சொன்னாரு .. Clear பண்ண உடனே bangloreku கெளம்புனேன் அவரும் அவருக்கு தெரிஞ்ச ஒரு companyla வேலை வாங்கி குடுத்தாரு .. Banglore எனக்கு வேற வாழ்கைய கத்து கொடுத்துச்சு .. நாட்கள் நகர நகர இந்த உலகத்துல எவ்ளோவ் பெரிய கஷ்டமும் சாதாரணமா மாறிடும் .. ஒரு வருஷத்துல அவல சுத்தமா மறந்துட்டேன் இருந்தாலும் "கலக்குற சந்துரு" விளம்பரம் பாகுரபலாம் அவ ஞாபகம்மட்டும் வரும் .. அப சேரிச தெருஞ்சது இப்ப நெனச்சா செம காமெடியா இருக்கு .. இது தான் என்னோட காதல் கதைன்னு சொன்னா எல்லாரும் சிரிகிறாங்க..ஒரு பய்யன் ஒரு பொண்ண லவ் பன்னுவாறான் ஆனா அந்த பொண்ணு அவனோட frienda லவ் பண்ணுவாளாம் போய் வேலைய பாருடா , இதெல்லாம் காதல் கதைன்னு வெளிய சொல்லிராதநு சொல்லி சிரிப்பாங்க, இந்த கதையதான் பல வருஷங்களா தமிழ் சினிமால எடுத்துகிட்டு இருக்காங்க .. அவங்க அப்படி சொல்றாங்கன்றதுகாக நா வேற ஒருத்தரோட காதல் கதையவா சொல்ல முடியும்.. பஸ் கோயம்பேடு பஸ் stopkulla வந்துச்சு .. இறங்கி 70A பஸ் புடுச்சு அம்பத்தூர் வந்து செந்தேன் .. ரெண்டு வருஷத்துல எதுவுமே மாரல அந்த தெரு .. மேடு பள்ளமான ரோடு .. டாஸ்மாக் கடைல சண்டை எல்லாம் அப்படியே இருந்துச்சு .. வீடுக்குள்ள போன உடனே என்னோட அப்பா அம்மாக்கு ரொம்ப சந்தோஷம் .. Baga என்னோட bed roomla வச்சுட்டு , அந்த ஜன்னல பாத்தேன் அந்த ஜன்னலும் அது பக்கத்துல இருந்த டேபிள் chairum அதே இடத்துல இருந்துச்சு .. பல நாட்கள் அந்த chairla உட்காந்து அவ வீட்டையே பாத்து கிட்டு இருந்தத நினைக்கும்போது சிரிப்பா இருக்கு .. அந்த chairla உட்காந்து அதே மாதிரி அவ வீட்ட பாத்தேன் .. அவளோட அப்பா எப்பவும்போல உட்காந்து tv பாத்து கிட்டு இருந்தாரு .. ஜில்லுனு ஈர காத்து முகம் முழுக்க வீசுச்சு, காத்துல எங்க வீட்டு தென்ன மரம் அசஞ்சுகிடு இருந்துச்சு அந்த தென்ன மரத்தையே பாத்து கிட்டு இருந்தேன் .. "பொதுவா ஒரு பொண்ணு அழகா இருந்தா நாம impressaagiduvom அவ மட்டும் நம்ம பக்கத்து வீடா இருந்தா உடனே காதலிக்க ஆரம்பிசுடுவோம்னு " கொஞ்ச நாளுக்கு முன்னாடி hari krishnanu ஒருவர் எழுதுன கதைல வரும் .. அது ரொம்ப correctunu தோனுச்சு .. தமிழ் நாட்டுல இருக்க ஒவ்வொரு தெருவுலயும் இந்த மாதிரி சொல்லபடாத அழகான காதல் கதைகள் இன்னமும் வாழ்ந்துகிடுதான் இருக்கு .. என்னதான் என்னோட காதல் தோல்வில முடுன்ஜாலும் அத ஒவ்வொரு வாட்டி நெனச்சு பாக்கும்போதும் மனசு லேசாகிடுது .... வைரமுத்து சொன்னது போல் "உன்னருகே நானிருந்த ஒவ்வொரு மணி துளிகளும் மரண படுக்கையிலும் மறவாது கண்மணியே ..
Like Reply
#6
super
Like Reply
#7
Super bro innum varuma continue bro
Like Reply
#8
Nice bro
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)