Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[Image: cheran-1566007710.jpg]

சேரப்பாவுடன் சண்டை:
அதேபோல், சேரப்பாவோடு அவர் பேசி ரெண்டு மூன்று நாட்கள் ஆகி விட்டன. சேரனை யாருடனும் விட்டுத்தர விரும்பாத லாஸ்லியா, இப்போது அவரது எதிரணியில் இருந்து கொண்டு அவருடனும் சண்டை போடுகிறார். தன்னுடன் சண்டைப் போட்டவர்கள் பற்றி பின்னணியில் புறணி பேசுகிறார்.
[Image: fight657-1566007703.jpg]
நிஜமுகம்:
இப்படியாக லாஸ்லியா ஆளே மாறிப் போய் விட்டார். அவர் நீதிக்காக போராடுகிறாரா இல்லை கவினுக்காக களத்தில் குதித்தாரா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தற்போது தான் தன் உண்மையான முகத்தைக் காட்டி பிக் பாஸில் விளையாட ஆரம்பித்திருக்கிறார் லாஸ்லியா என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
மதரீதியாக கேள்வி எழுப்பிய நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்த மாதவன்!
எம்மதமும் சம்மதமே. எனது மகனும் இதனைப் பின்பற்றவார் என நம்புகிறேன் என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.


[Image: MADHAVAN.jpg]நடிகர் மாதவன்

[Image: sficon.gif][Image: sticon.gif]
Web Desk | news18 
Updated: August 16, 2019, 4:07 PM IST

ட்விட்டரில் மத ரீதியாக கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் மாதவன்.

இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ராக்கெட்ரி நம்பி விளைவு.


இந்தப் படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகிறது. . நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் மாதவன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம், ரக்‌ஷா பந்தன் மற்றும் ஆவணி அவிட்டத்தைத் தனது வீட்டில் கொண்டாடினார் மாதவன். அந்தப் புகைப்படங்களைத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.



அந்தப் புகைப்படத்தில் மாதவன் வீட்டில் இந்துக் கடவுள்கள் புகைப்படத்துடன் சிலுவையும் இருந்தது.

[Image: madhavan1.jpg]

அதைக் குறிப்பிட்டு ரசிகை ஒருவர், "பின்னணியில் ஏன் இந்து கடவுள்களுடன்  சிலுவை இருக்கிறது.
Quote:[Image: xfRel2Uk_normal.jpg]
[/url]JIXSA@jiks





Why do they have a across in the background?! Is that a Mandir? You just lost my respect. Do you find ***** Gods in Christian churches? All this is fake drama you did today!
[Image: ECC6D7tWsAA_k3u?format=jpg&name=360x360][Image: ECC6D70XsAUAsDv?format=jpg&name=360x360]


707
4:15 AM - Aug 16, 2019
Twitter Ads info and privacy
[color][size][font][color][size]

606 people are talking about this







அது என்ன கோயிலா? நீங்கள் எனது மதிப்பை இழந்துவிட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்துக் கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் இன்று செய்தது எல்லாம் கபட நாடகம்" என்று விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு காட்டமாக சமூக வலைதளத்தில் மாதவன் பதிலளித்துள்ளார்.  அதில், உங்களை போன்ற ஆட்களிடம் இருந்து நான் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். அந்த புகைப்படத்தில் உள்ள பொற்கோவில் படத்தை பார்த்துவிட்டு, சீக்கியராகிவிட்டீர்களா என்று கேட்காதது வியப்பாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
[/size][/color][/font][/size][/color]
Quote:[Image: TxuF60JI_normal.jpg]
Ranganathan Madhavan

@ActorMadhavan





[img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f64f.png[/img][img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f64f.png[/img][img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f64f.png[/img] https://twitter.com/jiks/status/1162133284320681986 …
[Image: ECEDyu6U8AIzU30?format=jpg&name=medium]


12.5K
9:37 AM - Aug 16, 2019
Twitter Ads info and privacy
[color][size][font][color][size]

4,088 people are talking about this

[url=https://twitter.com/ActorMadhavan/status/1162214360787197953]





மேலும், தர்காக்களில் இருந்து ஆசி நான் பெற்றுள்ளேன். உலகில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத்தலங்களில் இருந்தும் ஆசி பெற்றுள்ளேன். கடவுள்களின் படம் சில பரிசாக வந்தது, சில வாங்கியவை என்று தெரிவித்த மாதவன் என் வீட்டில் அனைத்து மதங்களும் ஏற்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

எனது பால்ய பருவத்திலிருந்தே எனக்கு இது கற்பிக்கப்பட்டுள்ளது. ஆம், எனது அடையாளத்தைப் பெருமிதத்துடன் சுமக்கும் வேளையில் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எம்மதமும் சம்மதமே. எனது மகனும் இதனைப் பின்பற்றவார் என நம்புகிறேன். நான் தர்காவுக்குச் செல்வேன், குருத்வாராவுக்குச் செல்வேன். தேவாலயத்துக்குச் செல்வேன். அருகில் கோயில் இல்லாதபோது இப்படி மற்ற வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது என்றும் மாதவன் காட்டமாக பதிலளித்துள்ளார்[/size][/color][/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அஜித் ரசிகர்களால் தமிழ் படங்களையே புறக்கணிக்க முடிவு செய்த உலக புகழ்பெற்ற திரையரங்கம்...


நேர்கொண்ட பார்வை படம் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பாலிவுட்டில் பிங்க் என்ற தலைப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம். இதில் அமிதாப் கதாபாத்திரத்தில் அஜித்குமார் நடித்திருந்தார். டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். ஹெச்.வினோத் இயக்கிய இந்த படத்திற்கு விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
 
[Image: nerkonda-parvai-ajith-kumar_2.jpg]
 



 

இந்த வருடத்தில் அஜித் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படமான இதுவும் ஹிட் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிரபல திரையரங்கம் லீ கிராண்ட் ரெக்ஸில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரயரங்கில் படங்கள் வெளியாகுவதே கௌரவமாக பார்க்கப்படுகிறது. 
 

இப்படத்தைப் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் சிலர் அஜித் திரையில் தோன்றும் காட்சியில் ஆடிப் பாடி, திரையை கை வைத்து, தொட்டுக் கும்பிட்டுக் கொண்டாட ஆரம்பித்தனர். இதனால் அந்தத் திரை சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து திரையை மாற்ற 7000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.5.5 லட்சம்) நஷ்ட ஈட்டை விநியோகஸ்தர்களிடம் திரையரங்க நிர்வாகம் கோரியுள்ளது. மேலும் இனி இந்த திரையரங்கில் தமிழ் படங்களை வெளியிடவும் மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
 

Quote:[Image: NPKueHt3_normal.jpg]
[/url]





[img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/2139.png[/img][img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/26a0.png[/img]

[Image: 1Q4hmrGgG41OyukD?format=jpg&name=small]












Quote:INFORMATION ℹ️..! and it’s is more important than movie entries...! ⚠️ [url=https://t.co/kZPjwkIIDy]pic.twitter.com/kZPjwkIIDy
— EOY ENTERTAINMENT ® (@eoyentertainmen) August 15, 2019

இதன் பின் இந்த செயலை கண்டித்து பிரான்ஸ் திரையரங்க விநியோகஸ்தர் அமைப்பு, அஜித் ரசிகர்கள் திரையை கிழித்த வீடியோவை பதிவிட்டு கண்டித்துள்ளது. இந்த செயலை சமூக வலைதளத்தில் பலரும் கண்டித்து வருகின்றனர். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அர்ச்சகர்கள் நயன்தாராவை தரிசித்த போது.. அருகில் அத்திவரதர்.. வைரலாகும் புகைப்படம்!
சென்னை: அத்திவரதரை நடிகை நயன்தாரா தரிசிக்க சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
காஞ்சிபுரத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்று வரும் அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அங்கு கூட்டம் அலைமோதுகிறது.

[Image: naya-23-1565939961.jpg]
ஏராளமான பிரபலங்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேற்று அத்திவரதரை தரிசித்தார். இதனால் காஞ்சிபுரம் நகரமே பரபரப்பானது.


இந்நிலையில் அத்திவரதரை நயன்தாரா தரிசித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில், அத்திவரதர் சிலை முன்பு நயன்தாரா நிற்கிறார். அர்ச்சகர்கள் அனைவரும் நயன்தாராவை பார்த்தபடி இருக்கிறார்கள்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், "அர்ச்சகர்கள் நயன்தாராவை தரிசித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். அருகில் அத்திவரதர்", என கமெண்ட் செய்துள்ளனர்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
தற்கொலைக்கு முயற்சித்த மது.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்.. ஷாக் தரும் புரொமோ!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்த நடிகை மதுமிதா, நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக இரு அணிகளாக பிரிந்து சண்டை நடந்து வருகிறது. இதில், ஆண்கள் அணியில் லாஸ்லியாவும், பெண்கள் அணியில் சேரனும் உள்ளனர். முதலில் கவினுக்கும், மதுமிதாக்கும் இடையே சண்டை உண்டானது. அதில், பிக் பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள், பெண் போட்டியாளர்களை அடிமைப்படுத்துவதாக மது குற்றம் சாட்டினார்.
இது தொடர்பான சண்டை நேற்றும் தொடர்ந்தது. சேரன் சமாதானம் செய்கிறேன் பேர்வழி என தர்ஷனையும், மதுவையும் பேச வைக்க, அது மற்றொரு சண்டையில் போய் முடிந்தது.


[Image: madhumitha12-9-1566043695.jpg]



குழப்பத்தில் மதுமிதா
கடைசியில் மதுவிற்கு சேரனும், வனிதாவும் அறிவுரை செய்தனர். இதனால் மது தீவிர மன அழுத்தத்திற்கு ஆளானார். அவர் பெரும் குழப்பத்தில் இருந்தது அவரது முகத்திலேயே தெரிந்தது. ஆனால், அதற்குப் பின்னர் நடந்த கேப்டனுக்கான போட்டியில் அவர் கலந்து கொண்டு ஜெயித்தார்.
[Image: madhumitha12-956-1566043681.jpg]
கோல்மால் செய்தாரா?
அப்போட்டியில் அவர் கோல்மால் செய்து தான் ஜெயித்ததாக நெட்டிசன்கள் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர். இந்தப் பிரச்சினை பிக் பாஸ் வீட்டிலும் வெடித்திருக்கும் எனத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த மது தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: mugen-12-1566043776.jpg]

முகென் வனிதா விவகாரம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படித்தான் முகென் வனிதாவை அறைந்து விட்டதாக ஒரு தகவல் பரவியது. ஆனால், அது தொடர்பான எந்தக் காட்சிகளும் நிகழ்ச்சியில் இடம் பெறவில்லை. எனவே, மதுமிதா தற்கொலை முயற்சியும் பொய்யாகத்தான் இருக்கும் என மக்கள் கருதினர். ஆனால், கமல் முன்பு அவர் கையில் கட்டுடன் நிற்கும் காட்சிகள் அவர் தற்கொலைக்கு முயற்சித்ததை உறுதி செய்துள்ளன.

[Image: madhumitha123-1566043708.jpg]
மது தற்கொலை முயற்சி
மதுமிதா ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஒருவேளை கவினுடனான பிரச்சினையால் தான் அவர் தற்கொலைக்கு முயன்றாரா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும். இப்புரொமோவில் சேரனும் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
[Image: madhumitha12-1566043715.jpg]
உண்மை தகவலா?
டிவிட்டரில் பலர் இது குறித்துப் பேசி வருகின்றனர். கடந்த வாரம் தான் மதுமிதா இறுதிச் சுற்று வரை செல்வார் என சக போட்டியாளர்கள் தெரிவித்திருந்தனர். கமலும் மதுவைப் பாராட்டி இருந்தார். இந்தச் சூழ்நிலையில் அவர் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கமர்ஷியல் படத்திற்காக மீண்டும் இணையும் ஹரி சூர்யா கூட்டணி!

தொடர்ந்து ஆக்சன் கதையை கொடுத்து வந்த ஹரி சூர்யா கூட்டணி மீண்டும் கமர்ஷியல் படத்திற்காக இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

[Image: suriya.jpg]கமர்ஷியல் படத்திற்காக மீண்டும் இணையும் ஹரி சூர்யா கூட்டணி!
நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கும் “காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் சூர்யா இதில் சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரியாக நடித்துள்ளார். மோகன்லால் பிரதம மந்திரியாக நடித்துள்ளார். நடிகர் ஆர்யா பிரதம மந்திரியுடன் மகனாக நடித்துள்ளார். இந்நிலையில் காப்பான் படம் வெளிநாட்டில் மட்டுமே ரூ 13 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா39 படத்தில் அடுத்ததாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்க உள்ளனர். தற்போது இறுதிசுற்று இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார். பைலட் ஒருவரின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரியுடன் மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “ஆறு”, “வேல்”, “சிங்கம்”, “சிங்கம் 2”, “சிங்கம் 3” என்று தொடர்ச்சியாக சூர்யாவிற்கு வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் கமர்ஷியல் படமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

சூர்யா நடிப்பில் “காப்பான் படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த மாதம் 21ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தை லைகா தயாரிப்பில் கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரகனி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் டீசரும், ஒரு பாடலும் இணையத்தில் வெளியாகி மக்களிடம் அமோக ஆதரவு பெற்று வருகிறது. இப்படத்தின் பாடல்களை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: Madhavan-750x506.jpg]
எனக்கு எல்லா மதங்களையும் மதிக்க கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது - விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த மாதவன்
Madhavan Ranganathan: நான் தர்காவுக்குச் செல்வேன், குருத்வாராவுக்குச் செல்வேன். தேவாலயத்துக்குச் செல்வேன்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நடிகர் மாதவன் தமிழில் மட்டுமல்ல, இந்தியா சினிமாவிலேயே முக்கிய இடத்திலுள்ள நடிகர். தனது கதாபாத்திரத்திற்காக அதிக அர்ப்பணிப்புகளை மேற்கொள்ளும் மிக சில நடிகர்களில் மேடியும் ஒருவர். தற்போது நடந்துள்ள ஒரு விஷயம், மாதவனின் மத நல்லிணக்கத்தை வெளிக்காட்டியுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி தனது தந்தை ரங்கநாதன் மற்றும் மகன் வேதாந்த் ஆகியோருடன் தனது வீட்டில் நடந்த “பூனூல்” மாற்றும் நிகழ்வில் எடுத்துக் கொண்ட படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார் மாதவன். அதோடு, சுதந்திர தினம், ரக்‌ஷா பந்தன், ஆவணி அவிட்டம் ஆகிய மூன்றிற்கும் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.

அந்த புகைப்படத்தில் மாதவன் வீட்டில் இந்துக் கடவுள்கள் உடன் ஒரு சிலுவையும் இருந்தது. அதைப் பார்த்த ரசிகை ஒருவர், ”இந்துக் கடவுள்களுடன் ஏன் சிலுவை இருக்கிறது? நீங்கள் எனது மதிப்பை இழந்து விட்டீர்கள். எந்த தேவாலயத்திலாவது இந்தக் கடவுள்கள் இருக்கிறார்களா? இது எல்லாம் உங்களின் நாடகம்” என்று ட்விட்டரில் விமர்சித்திருந்தார்.
Quote:Why do they have a across in the background?! Is that a Mandir? You just lost my respect. Do you find ***** Gods in Christian churches? All this is fake drama you did today! pic.twitter.com/w5mdrSKxRL
— JIXSA (@jiks) August 15, 2019

இதற்கு பதில் அளித்துள்ள மாதவன், ”உங்களைப் போன்ற ஆட்களிடம் இருந்து நான் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். இந்த புகைப்படத்தில் உள்ள கோல்டன் டெம்பிளைப் பார்த்து நீங்கள் சீக்கியர் ஆகி விட்டீர்களா என்று நீங்கள் கேட்காதது எனக்கு வியப்பாக உள்ளது. நான் தர்காக்களில் ஆசி பெற்றுள்ளேன். ஏன், உலகில் உள்ள அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் ஆசி பெற்றுள்ளேன். கடவுள்களின் படங்கள் சில பரிசாக வந்தவை, சில வாங்கியவை. என் வீட்டில் அனைத்து மதமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
Quote:[Image: TxuF60JI_normal.jpg]
[/url]Ranganathan Madhavan

@ActorMadhavan





[img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f64f.png[/img][img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f64f.png[/img][img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f64f.png[/img] https://twitter.com/jiks/status/1162133284320681986 …
[Image: ECEDyu6U8AIzU30?format=jpg&name=medium]


13.8ஆ
முற்பகல் 9:37 - 16 ஆக., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


இதைப் பற்றி 4,538 பேர் பேசுகிறார்கள்

[url=https://twitter.com/ActorMadhavan/status/1162214360787197953]




எனது சிறு வயதிலிருந்தே எனக்கு இது கற்பிக்கப்பட்டுள்ளது. ஆம், எனது அடையாளத்தைப் பெருமிதத்துடன் சுமக்கும் வேளையில் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எம்மதமும் சம்மதமே. எனது மகனும் இதனைப் பின்பற்றுவார் என நம்புகிறேன். நான் தர்காவுக்குச் செல்வேன், குருத்வாராவுக்குச் செல்வேன். தேவாலயத்துக்குச் செல்வேன். அருகில் கோயில் இல்லாதபோது இப்படி மற்ற வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது” என்று அந்த ரசிகைக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் மாதவன்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
தீபாவளிக்கு முன்பே விஜய்யின் பிகில் ரிலீஸ்
19 ஆக, 2019 - 17:15 IST
0 கருத்துகள்  கருத்தைப் பதிவு செய்ய



[Image: whatsapp.png]

  0  7 Google+
எழுத்தின் அளவு:


[Image: NTLRG_20190819171558673109.jpg]

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, இந்துஜா, யோகிபாபு, கதிர், ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடித்து வரும் படம் பிகில். கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடை பெற்று வரும் பிகில் படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியான நிலையில், வெறித்தனம் என்ற பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், தற்போது பிகில் படம் தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வெளியாகயிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

அதாவது அக்டோபர் 27-ந்தேதி தீபாவளி தினமாகும். ஆனால் மூன்று நாட்கள் முன்பே 24-ந்தேதி வியாழக்கிழமை அன்று பிகில் படத்தை வெளியிடப் போகிறார்களாம். அஜித் தான் தனது படங்களை வியாழக் கிழமைகளில் வெளியிடுவார். அதேபோன்று இப்போது விஜய் படமும் வியாழக்கிழமையில் வெளியாகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
லோஸ்லியா செய்தது பச்சை துரோகம்- நெட்டிசன்கள் விளாசல்..!

பிக்பாஸ் தமிழின் இன்றைய நிகழ்ச்சியில் சேரனை நாமினேட் செய்துள்ளார் லோஸ்லியா. இதனால் அவர் மீது அதிருப்தி தெரிவித்து நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil | Updated:Aug 19, 2019, 07:23PM IST




[/url]


[Image: -vs-.jpg]சேரன் Vs லோஸ்லியா- பொங்கி எழும் நெட்டிசன்கள்
பிக்பாஸ் வீட்டில் பிரச்னை ஏற்பட்ட போதெல்லாம் [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D]சேரன்
தனக்கு ஆதரவாக நிற்கவில்லை என்று கூறி அவரை லோஸ்லியா நாமினேட் செய்திருப்பது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் லோஸ்லியா மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 





காய்த்த மரம் தான் கல்லடி படும் என்ற பழமொழிக்கு ஏற்ப, பிக்பாஸ் வீட்டில் வயதில் மூத்தரவாக உள்ள சேரனிடம் கவின், சாண்டி கேங் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த வரிசையில் லோஸ்லியாவும் இணைந்துவிட்டார் என்பது தான் இங்கே கோடிட வேண்டிய செய்தி. 

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கிய புதிதில் இலங்கைத் தமிழில் கொஞ்சலாக பேசி அனைவர் மனதிலும் சட்டென இடம் பிடித்தவர் லோஸ்ஸியா மரியநேசன். தன்னுடைய சொந்த அப்பா, இயக்குநர் சேரன் போலவே இருப்பார் என்று கூறிக்கொண்டு, அவரை சேரப்பா... சேரப்பா என்று அழைக்க தொடங்கினார். 


இதுவரை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த புதியவர்கள் பலரும், லோஸ்லியாவை குறிப்பிடும் போது சேரனின் மகள் என்றே அடையாளம் கொடுக்கின்றனர். அந்தளவிற்கு சேரன் - லோஸ்லியாவின் தந்தை மகள் உறவு பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அண்மையில் வீட்டுக்குள் விருந்தினராக வந்த வனிதாவே, லோஸ்லியாவை சேரனின் மகள் என்றே குறிப்பிட்டு பேசினார். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஆரம்பத்தில் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருந்த லோஸ்லியா, கவினின் காதல் வலையில் சிக்கி மக்கள் வெறுப்பை சம்பாதிக்க தொடங்கினார். முக்கோண காதல் விவகாரம் வீட்டுக்குள் விஸ்வரூபம் எடுத்த நிலையிலும், கவினை விட்டு விலகாமலே இருந்து வருகிறார். குறிப்பாக அந்த பிரச்னைக்கு பிறகு தான் கவின் - சாண்டி கேங்குடன் நெருக்கமாக இருக்கிறார் லோஸ்லியா. 

நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் - லோஸ்லியாவுக்கு இடையே ஏற்பட்ட உரசல் குறித்து விசாரித்தார் கமல்ஹாசன். அப்போது பேசிய சேரன், தன்னுடைய மகள் லோஸ்லியாவுக்கு அனைவரிடமும் பழகும் முழு சுதந்திரம் உண்டு. சமயம் கிடைக்கும் போது அவருடைய சமீபத்திய நடவடிக்கை குறித்து பேசுவேன் என்றார். அவ்வாறு நிகழ்ச்சி முடிந்தவுடன், லோஸ்லியாவிடம் மனம் விட்டு பேசினார் சேரன். 
கவின் கேங்குடன் சேர்ந்துவிட்டதால் முன்பு போல் லோஸ்லியா இல்லை. நடவடிக்கைகள் மாறிவிட்டன. முன்பு போல தன்னிடம் சகஜமாக பேசுவது கிடையாது. இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது என்று தெரிவித்தார். பேசிக் கொண்டே இருந்த சேரன் திடீரென உடைந்து அழுதுவிட்டார். லோஸ்லியாவும் உடன் அழுதார். அப்போது பேசிய லோஸ்லியா, பிக்பாஸ் வீட்டில் இரண்டு முறை சிறைக்கு செல்லும் நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போது சேரன் தனக்கு ஆதரவாக நிற்கவில்லை என்றார். 

ஆனால் சேரன், விளையாட்டு வேறு பாசம் வேறு என பதில் அளித்தார். இதனால் லோஸ்லியா சமாதானம் அடைந்தது போல தெரிந்தது. ஆனால் அவர் அடையவில்லை, பழித்தீர்க்க காத்திருக்கிறார் என்று இன்று தான் புரிந்தது. இன்று நடக்கும் எலிமினேஷனுக்கான நாமினேஷனில், சேரன் பெயரை பரிந்துரைக்கிறார் லோஸ்லியா. தான் சிறைக்கு சென்றதை ஆதரித்ததாக சேரன் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். 


இதுதொடர்பான ப்ரோமோ வெளியானதை தொடர்ந்து, லோஸ்லியாவை ஏகத்துக்கும் விமர்சித்து சமூகவலைதளங்களில் கண்டனங்கள் பதிவாகியுள்ளன. மற்றொரு ப்ரோமோவில் சேரனை நாமினேட் செய்ததை குறித்து கவின் மற்றும் தர்ஷனிடம் வருத்தம் தெரிவித்து அழுகிறார் லோஸ்லியா. தனக்கு ஆதரவு நிலை எடுக்கவில்லை என்று தான் சேரனை நாமினேட் செய்தேன். அது தவறா? என்று லோஸ்லியா தர்ஷன் மற்றும் சேரனிடம் கேட்கிறார். 
முன்னதாக, நேற்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் சமையலறையில் கவினுடன் பேசி கொண்டிருந்த லோஸ்லியாவிடம் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு உறங்கச் சென்றார். அவர் அங்கியிருந்து சென்றதும் லோஸ்லியாவிடம் பேசிய கவின், எதற்காக இந்த நாடகம்? என்பது போல கேட்டார். 

அதை தொடர்ந்து இன்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெறுகிறது. அதில், நேற்று கமலிடம் கூறிய அதே காரணங்களை முன் வைத்து சேரன் நாமினேட் செய்கிறார் லோஸ்லியா. இதனால் இன்றைய நிகழ்ச்சி மீது பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ரெண்டு நாளா கமல் வனிதாவ வச்சு செஞ்சதுக்கு இதான் காரணமா?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக வனிதாவை கமல் டேமெஜ் செய்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீடு கடந்த ஒரு வாரமாக பெரும் களேபரமாக உள்ளது. மதுமிதாவுக்கு மக்களிடையே நல்ல பெயர் உள்ளது என்பதை அறிந்த வனிதா, அவரை தூண்டிவிட்டு டேமெஜ் செய்தார்.
இதேபோல் அபிராமி, தர்ஷன், ஷெரின், முகென் என பலரையும் தூண்டிவிட்டு வந்தார் வனிதா. இதன் வெளிப்பாடாக பிக்பாஸ் வீடு இரண்டாக பிளவுப்பட்டு ரணகளமாய் ஆனது.


[Image: vanitha65767567-1566204051.jpg]

விசாரித்த கமல்
இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஆகிய கடந்த இரண்டு நாட்களாக நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களை சந்தித்தார். அப்போது பிக்பாஸ் வீட்டில் கடந்த ஒரு வாரமாய் நடந்த பிரச்சனை குறித்து விசாரித்தார்.
[Image: vanitha65767-1566204058.jpg]
வத்திக்குச்சி வனிதா
குறிப்பாக கடந்த இரண்டு நாட்களும் வனிதாவை போதும் போதும் என்னும் அளவுக்கு வச்சு செய்தார் கமல். வனிதாவை வத்திக்குச்சி என்றும், பிரச்சனையை தூண்டி விடுகிறார் என்பதை மற்றவர்களுக்கெல்லாம் தூண்டு கோளாய் இருக்கிறீர்கள் என்றும் கூறினார்.
[Image: kamal87-1566204082.jpg]
சிரித்து ரசித்த கமல்
கமல் கூறியபோதெல்லாம் வனிதாவின் முகம் மாறிவிட்டது. குறிப்பாக கஸ்தூரி வனிதாவை வத்திக்குச்சி என்று கூறியதை கமல்ஹாசன் சிரித்தப்படி ரசித்தார்.
[Image: sandy-1566204098.jpg]
தொங்கிபோனது
அங்கிருந்த பார்வையாளர்களும் வனிதாவை பேசவிடாமல் வெறுப்பேற்றினர். வனிதா பேசுவதற்கு வாய்திறந்த போதெல்லாம் கைத்தட்டி, கத்தி கூச்சலிட்டு அவரை ஒரு வழியாக்கிவிட்டனர். இதனால் வனிதாவின் முகம் தொங்கிபோனது.
[Image: vanith-1566204105.jpg]

அசிங்கப்படுத்திய கமல்
மேலும் வனிதா பேசும்போது கூட மக்கள் பக்கம் திரும்பி என்னங்க என மக்களிடம் கேட்டு வனிதாவை அசிங்கப்படுத்தினார் கமல். ஒவ்வொரு முறையும் கமல் அசிங்கப்படுத்தியதை வனிதா நன்றாகவே உணர்ந்தார் வனிதா.
[Image: vanitha6578-1566204089.jpg]
வத்திக்குச்சி என்ற கமல்
நீங்கள் எதுக்காக வந்தீங்க என்றபோது கூட வத்திக்குச்சி என்றே வனிதாவை குறிப்பிட்டார் கமல்ஹாசன். ஏனெனில் அமைதியாக இருந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து, அதகளப்படுத்திய வனிதா, வெற்றி வாய்ப்புடன் இருந்த மதுமிதாவையும் திட்டம் போட்டு வெளியேற்றியுள்ளார்.
[Image: vanitha657-1566204035.jpg]
மதுவை விரட்டிய வனிதா
மதுமிதா கையை வெட்டிக்கொள்ளவும் வெளியேறவும் முக்கிய காரணமாக இருந்தவர் வனிதாதான் என கூறப்படுகிறது. மதுமிதாவுக்கு எதிராக மொத்த ஹவுஸ்மேட்ஸ்களையும் திருப்பிவிட்டு கேங்கை உருவாக்கி மதுமிதாவை தனிமைப்படுத்தி விரட்டியவர் வனிதா.

[Image: vanitha65767567657-1566204044.jpg]



இதுதான் காரணம்
வெற்றி பெற வேண்டிய ஒரு போட்டியாளரை, நேர்மையாக விளையாடிய ஒரு போட்டியாளரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி விரட்டிவிட்டுள்ளார் வனிதா. இந்த காரணத்தினாலேயே வனிதாவை கமல் இன்சல்ட் செய்ததாக கூறப்படுகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
மாநாடு - தயாரிப்பாளருக்கு மீண்டும் சிம்பு தூது

[Image: NTLRG_20190819192217505604.jpg]

சென்னை: மாநாடு படத்தில் நடிக்க மீண்டும் வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளருக்கு நடிகர் சிம்பு தூது அனுப்பிருப்பதாக தெரிகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். கடந்த ஆண்டு இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது.


செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய படங்களில் நடித்த முடித்த சிம்பு உடனடியாக இந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வழக்கம் போல படப்பிடிப்பை தொடங்காமல் தவிர்த்து வந்தார்.

சிம்புவிடம் இருந்து கிடைத்த கால்ஷீட்டை விட்டுவிடக் கூடாது என்பதற்காக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் பொறுமையாக காத்திருந்தார். இயக்குனர் வெங்கட்பிரவும் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் தவிர்த்து வந்தார்.

ஆனால் இருவரின் பொறுமையையும் சோதித்த சிம்பு, ஹன்சிகாவின் மகா படத்தில் முதல் கெஸ்ட் ரோலில் நடித்தார். பின்னர் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார். அப்போதும் மாநாடு படக்குழு சிம்புவுக்காக காத்திருந்தது.

ஆனால் மாநாடு படத்தில் நடிக்க சிம்பு வரவேயில்லை. சனி, ஞாயிறு நடிக்க மாட்டேன், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே நடிப்பேன் என ஏகப்பட்ட கன்டிசன் போட்டார். இதனால் பொறுமையிழந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்புவை மாநாடு படத்தில் இருந்து நீக்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிம்பு, மாநாடு படத்துக்கு போட்டியாக மகா மாநாடு படத்தை எடுக்கப்போவதாக அறிவித்தார். அதுவும் தனது சொந்த தயாரிப்பில் அந்த படம் எடுக்கப்படும் என சிம்பு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியது. 

மாநாடு தயாரிப்பாளரை பயமுறுத்துவதற்காகவே சிம்பு இந்த அறிவிப்பை மறைமுகமாக வெளியிட்டார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுரேஷ் காமாட்சிக்கு போன் செய்த சிம்பு, படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாகவும், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு சம்பளத்தை குறைத்துக்கொள்ள தயார் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிம்புவை தொடர்ந்து அவரது அம்மாவும், தயாரிப்பாளருக்கு போன் செய்து அதே கருத்தை கூறியிருக்கிறாராம். ஆனால் மாநாடு படத்தில் இருந்து சிம்புவை நீக்கியதில் இருந்து பின்வாங்குவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம் சுரேஷ் காமாட்சி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலர், வெங்கட்பிரபுவிடம் மாநாடு கதை கேட்டு வருகின்றனர். அவர்களில் யார் முதலில் ஓகே சொல்கிறார்களோ, அவரை வைத்து படத்தை துவக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு
first 5 lakhs viewed thread tamil
Like Reply
லவ் ஆக்சன் டிராமாவை நம்பியிருக்கும் நயன்தாரா

[Image: NTLRG_20190819192411604206.jpg]

நயன்தாரா நடித்த ஐரா, மிஸ்டர் லோக்கல் சமீபத்தில் வெளியான கொலையுதிர் காலம் என மூன்று படங்களும் வரிசையாக தோல்வியைத் தழுவியுள்ளன. இந்தநிலையில் நயன்தாரா தற்போது மலையாளத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லவ் ஆக்சன் டிராமா என்கிற படத்தில் நடித்துள்ளார்.


பிரபல கதாசிரியர் மற்றும் நடிகர் சீனிவாசன் எழுதி நடித்த வடக்கு நோக்கி எந்திரம் என்கிற ஹிட் படத்தின் நவீன ரீமேக் ஆகத்தான் இந்த படம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் படத்தின் நாயகனாக நடிக்கும் நிவின்பாலியை விட அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாராவிற்கு இந்த படத்தில் நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

தொடர் தோல்விகளால் சற்றே மனம் துவண்டு இருக்கும் நயன்தாரா அடுத்ததாக லவ் ஆக்சன் ட்ராமா படத்தை தான் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.. வரும் ஓணம் பண்டிகையில் இந்த படம் வெளியாக இருக்கிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கமலுடன் நடிக்க 30 ஆண்டுகள் காத்திருந்த விவேக்... 

கடந்த 1987ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்று பாலசந்தர் இயக்கிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் விவேக். சுமார் 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், காமெடியன் என்று வலம் வருகிறார். இக்கால உச்ச நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என்று பலருடனும் நடித்துவிட்டார் விவேக். இருந்தாலும் இதுவரை கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் கூட அவர் நடித்ததில்லை.
 
[Image: kamal-hassan_1.jpg]
 

 
கமல் ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால கனவு என விவேக் பல்வேறு நிகழ்ச்சிகளில் தெரிவித்துள்ளார். தற்போது அந்த கனவை நிஜமாக்கியுள்ளார் இயக்குனர் ஷங்கர். 
 
கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் விவேக் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கையை அறுத்துக் கொண்டது பற்றி மதுமிதா விளக்கம்



[Image: NTLRG_20190820153803010750.jpg]

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் தன்னை மிகவும் இழிவுப்படுத்தியதாக நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.


தற்கொலைக்கு முயற்சித்த காரணத்தால் பிக் பாஸ் அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் நடிகை மதுமிதா. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார் என்பது குறித்து போலீஸ் விசாரிக்க வேண்டும் என நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு மதுமிதா அளித்துள்ள பேட்டியில், பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " கடந்த வியாழக்கிழமை ஹலோ ஆப் டாஸ்கில் நான் என்னுடைய கருத்தை சொன்னேன். வருண பகவான் கூட கர்நாடககாரர் தான் போலிருக்கு. நமக்கு மழையே கொடுக்க மாட்டேங்கிறார். தயது செய்து வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என்று கூறினேன்.

இதற்கு ஷெரீன் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவை சேர்ந்த நான் இங்கு இருக்கும் போது எப்படி நீ இப்படி ஒரு கருத்தை கூறலாம். இது ஒன்றும் உன்னுடைய சமூக வலைதளம் கிடையாது என ஷெரீன் கத்தினார்.

இதற்கு நானும் பதில் அளித்தேன். ஹலோ ஆப் ஒரு சமூக வலைதளம் தானே. அதில் என்னுடைய கருத்தை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டேன். ஆனால் அவர்கள் ஒற்றுக்கொள்ளவில்லை. நீ என்ன எப்ப பார்த்தாலும் தமிழ் பெண் என சொல்ற. தமிழக மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா எனக் கேட்டனர்.

அதனால் தான் நான் எனது கையை அறுத்துக்கொண்டு எனது வாதத்தை நிரூபித்தேன். நான் கையை அறுத்துக்கொண்ட போது எனக்கு ஆதரவாக இருந்தது சேரனும், கஸ்தூரியும் தான். வேறு யாரும் என்னிடம் வரவில்லை. இனி பிக் பாஸ் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க மாட்டேன்" என மதுமிதா தெரிவித்தார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நடிகை மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் போலீஸில் புகார்...!

[Image: madhumitha.png]

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை மதுமிதா மீது கிண்டி காவல்நிலையத்தில் விஜய் டிவி நிர்வாகம் புகாரளித்துள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. 
[Image: bigg.png]
சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் ஏசியென்நெட் ஸ்டார் கம்யூனிகேசன்ஸ் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், விஜய் டிவியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் -3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட. நடிகை மதுமிதா தன்னை  காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் 50 நாட்களிலேயே  நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். 
[Image: madu.png]
அதுமட்டுமல்லாமல், ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா,  ஏற்கனவே 11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளதாகவும் மீதமுள்ள 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.  அதனை ஒப்புக்கொண்ட மதுமிதா, கடந்த 19ம் தேதி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஸ்பைடர் மேனை காப்பாற்றுங்கள்! உலகளவில் வைரலாகும் ரசிகர்களின் குமுறல்கள்...
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வெளியான பின்பு மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸிலிருந்து ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் படம் வெளியானது. உலகம் முழுவதும் வெளியான இப்படம் மார்வெல் யுனிவர்ஸின் 23வது படம் ஆகும். இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 1.1 பில்லியன் டலர்களை வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் அதிகபட்சமாக 375 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.
 
[Image: spider-man_0.jpg]
 

 
 
சோனி நிறுவனம் தயாரித்துள்ள படங்களில் அதிக வசூலை குவித்துள்ள பெருமையை இந்த படம் பெற்றிருக்கிறது. இதனால் மீண்டும் இப்படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் வசூலை 400 மில்லியன் டாலர்களாக(இந்திய மதிப்பில் 2870 கோடி) உயர்த்த சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்காக நான்கு நிமிட காட்சியை இப்படத்தில் சேர்த்துள்ளதாம்.

 
வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி அமெரிக்கா மற்றும் கனடாவில் குறிப்பிட்ட திரையரங்களில் ‘ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ புதிய காட்சிகளுடன் மீண்டும் வெளியாகிறது.

 
என்னதான் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை மார்வெல் நிறுவனம் உருவாக்கியிருந்தாலும், அதன் உரிமையை சோனி நிறுவனம்தான் வைத்திருக்கிறது. ஸ்பைடர் மேன் படத்தை மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் இணைக்க 2015ஆம் ஆண்டு டிஸ்னியும் சோனியும் இணைந்து ஒரு ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் ஸ்பைடர் மேன் படத்தை உருவாக்கும்போது இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்க செலவு செய்யும் என்றும், படம் எடுத்த வசூலை டீலின்படி பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். தற்போதுவரை வெளியான ஸ்பைடர் மேன் இரண்டாம் பாகம் வரை இந்த டீல் சரியாக நடந்துள்ளது. ஆனால், இதனை தொடர்ந்து வரப்போகும் ஸ்பைடர் மேன் படத்தில் வசூலை பிரித்துக்கொள்வதில் முடிவு கிடைக்கவில்லை என்பதால் 2015ல் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஸ்பைடர்மேன் இனி மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் படங்களில் இந்த கதாபாத்திரம் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
உலகம் முழுவதும் உள்ள மார்வெல் ரசிகர்கள், இதை வன்மையாக கண்டித்து வருகின்றனர். இதுவரை வெளியான ஸ்பைடர்மேன்களிலேயே டாம் ஹாலந்து நடித்திருக்கும் அதுவும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் இருப்பதுதான் நன்றாக இருக்கிறது அதனால் இதை தொடர வெண்டும் என்று குறிப்பிட்டு #SaveSpiderman என்ற ஹேஸ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன்! பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்!


எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துக்குவான் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அமீர், பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி கடுமையாக விமர்சித்தார்.  அந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இயக்குநர் சேரனின் நிலையை நினைத்து வேதனைப்பட்டார்.

 

அவர், ’’நான் பார்த்த வரையில் சமீபத்தில் எனக்கு ரொம்ப மனவேதனையை கொடுத்த நிகழ்வு என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் அழுததுதான்.  நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை.  பார்க்கவும் மாட்டேன்.  அந்த நிகழ்ச்சியால் சமூகத்திற்கு எந்தப்பலனும் இல்லை.  

 

சேரன் பங்கேற்று பிரச்சனை வந்தபோது என்னிடம் அந்த வீடியோவை காட்டினார்கள்.   

 
[Image: ameer_9.jpg]
 

நானும், பாலாவும் உதவி இயக்குநராக இருந்தபோது பார்சன் காம்ப்ளக்சில் இருந்தோம்.   சிறிய அறை என்பதால் வளாகத் தில் உள்ள கோவில் வாசலில் பெரும்பான்மையான நேரங்கள் படுத்துக்கிடப்பேன்.   அப்போது பொற்காலம் ரிலீசான நேரம்.  பாரதிராஜாவை பார்க்க பொக்கேவுடன் காரில் இருந்து இறங்கி கம்பீரமாக சென்றார் சேரன்.    அதன்பின்னர், நான்  கடன் வாங்கி ராம் படத்தை எ டுத்துக்கொண்டிருந்தேன்.  அப்படி இருந்தும், 25 ஆயிரம், 50 ஆயிரம் என்று கடன் வாங்கி ராம் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது,  ஆட்டோகிராப் படத்தை எடுத்து முடித்திருந்த சேரன், விழாவில் பேசும்போது, எத்தனை கையெழுத்துதான் போடுவது என்று தனக்கு இருக்கும் கடன் பிரச்சனையை சொல்லி மேடையிலேயே அழுதார்.   அவர் மேடையை விட்டு இறங்கியதும், கையை பிடித்துக்கொண்டு, நான் வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாய் தரட்டுமா? என்று கேட்டேன்.  வேண்டாம்...தேவைப்பட்டால் கேட்டு வாங்கிக்கிறேன் என்று சொன்னார்.  



 

ஆட்டோகிராப் வெற்றி நினைத்து பார்க்கமுடியாத வெற்றி.  அந்த வெற்றி அவர் வாழ்க்கையை புரட்டி போட்டது.   அதன் பின்னர் லயோலா கல்லூரியில் பச்சை மனிதன் திரைப்பட விழாவிற்கு காரில் இருந்து இறங்கி நடந்து வந்தார்.   அவர் மேடைக்கு வரும் வரைக்கும்  இந்த பக்கம் ஆயிரம் பேர், அந்த பக்கம் ஆயிரம் பேர் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார்கள்.   அதைப்பார்த்து பிரமித்தேன்.  

 

அவர் அலுவலத்திற்கு சென்றாலும் பிரமிப்பேன்.  பிலிம்பேர் விருதுகள், தேசிய விருதுகள், மாநில விருதுகள் என்று குவிந்து கிடக்கும்.    அப்படிப்பட்ட சேரன் பிக்பாஸுக்கு சென்றார்.   போவதுமுடிவெடுத்துவிட்டு முதல் நாள் சொல்லிக்கொண்டு போனார்.  அந்த நேரத்தில் என்ன சொல்வது. சரி, என்று சொல்லிவிட்டேன்.

 

அந்த நிகழ்ச்சியில், ஒரு பெண் தன்னை கையை பிடித்து இழுத்துவிட்டதாக புகார் கூறுவதையும், அதற்காக மனம் நொந்து, நான் எதற்காக இங்கே வந்தேன்... என் பிள்ளைகளுக்காகத்தான் வந்தேன்.. என்று அழுதபோது எனக்கு வேதனையாக இருந்தது.    அப்போது எனக்கு வந்த ஆத்திரத்திற்கு  நேரே அந்த ஸ்டூடியோவுக்கு சென்று உடைத்துக்கொண்டு போய் சேரனை தூக்கிட்டு வந்திடலாம் என்று தோணுது.   சமூகம் அவருக்கு கொடுத்திருக்கும் இடம்  சாதாரணது கிடையாது.   ஒரு முதல்வரை கடத்திக்கொண்டு போய் விவசாயம் பார்க்க வைத்ததாக தமிழ்சினிமாவில் வந்த முதல் கதை தேசியகீதம் படம்தான்.   அப்படிப்பட்ட இயக்குநர் இப்படிப்போய் உட்கார்ந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு.   சினிமாவில் புகழ் வெளிச்சம், எதுவும் நிரந்தமில்லை’’என்று தெரிவித்தார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 23 Guest(s)