Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
எம்.ஜி.ஆர் படத்தை உல்டா செய்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் -பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
 
[Image: EBvypcpU0AIuvDZ_0.jpg]

''நம்ம வீட்டு பிள்ளை'' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு முதலில் எம்.ஜி.ஆர் படமான 'எங்க வீட்டு பிள்ளை' படத்தின் டைட்டிலை வைக்க படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அப்படத்தின் தயாரிப்பு தரப்பில் இதற்கு அனுமதி கிடைகாததால்தான் தற்போது இப்படத்திற்கு 'நம்ம வீட்டு பிள்ளை' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
“கவின், லாஸ் சங்கு கிழிய போகுது.. பிக்பாஸ் வனிதா கோட்ட டா”.. மீண்டும் உயிர் கொண்ட வனிதா ஆர்மி!

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதா மீண்டும் வந்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
பிக் பாஸ் 3வது சீசனை பரபரப்பாக மாற்றியவர் வனிதா. எல்லாரையும் தனது அதிகார குரலால் அலறவிட்டார். இதன் காரணமாகவே இரண்டாவது ஆளாக வெளியே அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் இந்த வாரம் வனிதாவை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார் பிக் பாஸ். இதனால் வனிதா ரசிகர்கள் மகிழ்சசி அடைந்துள்ளனர்.


Quote:[Image: b52Hh6Vv_normal.jpg]
[/url]Vijay Television

@vijaytelevision

 · 9h



வருக வருக என வரவேற்கிறோம்! [Image: 1f60a.png][Image: 1f64f.png]#Day50 #Promo1 #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil #VijayTelevision

[url=https://twitter.com/vijaytelevision/status/1160755284672950273][Image: EBvTTKvUYAAUYCm?format=jpg&name=small]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சேரனை வீட்டுக்கு போக சொன்ன வனிதா... ஹவுஸ் மேட்ஸ் அதிர்ச்சி...

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் சரவணன் திடீரென்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு பெண்களை பற்றிய சரவணன் தெரிவித்த கருத்தே காரணம் என்று சொல்லப்பட்டது.
 
[Image: vanitha-3_0.jpg]
 

 
நாமினேஷனில் இருந்த சாக்‌ஷி, அபிராமி மற்றும் லாஸ்லியாவில் யார் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கையில் சாக்‌ஷி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று காலை வெளியான புரோமோவில் எலிமினேட் செய்யப்பட்டு வெளியான வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.

 
மதியம் இரண்டாவது புரோமோ வெளியான நிலையில் அதில் கவினை நீ ஒர்த்தே இல்லை என்று கூறி லாஸ்லியாவை அழைத்து பக்கத்தில் அமரவைத்துக்கொள்கிறார் வனிதா. கஸ்தூரியிடமும் ஏன் தர்ஷனுக்கும் ஷெரின் மாலை கொடுத்து போட சொன்னீர்கள் என்று கேட்டு அதகளம் செய்கிறார். 
 
தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் அனைத்து ஹவுஸ் மேட்ஸ்களையும் திட்டு திட்டு என்று திட்டுகிறார். அப்பா பொண்ணுலாம் பேசிட்டிருந்தா வீட்டுக்கு போங்க இங்க எதுக்கு இருக்கிங்கனு சேரனை பார்த்து கேட்கிறார். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பொய்யான காரணத்தை கூறி ஷெரினை நாமினேட் செய்த லாஸ்லியா.! ஆதாரம் இந்த குறும்படம் தான்.!
[Image: losliya-10-696x392.jpg]
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 7 [போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இந்த வார நாமினேஷனில் கவின், லாஸ்லியா, முகென், அபிராமி மற்றும் மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Quote:[Image: rrzcvbBW_normal.jpg]
[/url]Bigg Boss 3.0@offl_jack





#losliya nomination reason [img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f602.png[/img][img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f44e.png[/img]

"#Sherin mela romba jealous ah irukaanu uruthi aagiduchu".

[img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f449.png[/img] (kurumpadam) for #LosliyaArmy#BiggBossTamil3 #BiggBossTamil

[Image: _tALitUxiQPXOybm?format=jpg&name=small]


216
பிற்பகல் 10:42 - 12 ஆக., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


இதைப் பற்றி 73 பேர் பேசுகிறார்கள்

[url=https://twitter.com/offl_jack/status/1160962330819043330]



நேற்றய நிகழ்ச்சியில் ஷெரினை, லாஸ்லியா மட்டும் தான் நாமினேட் செய்திருந்தார். ஆனால், அதற்காக அவர் சொன்ன காரணம் தான் வேடிக்கையாக இருந்தது. சாக்க்ஷியிடம் இறுதியாக பேசாமல் இருந்த லாஸ்லியாவா இப்போது அவருக்காக ஷெரீனை நாமினேட் செய்துள்ளார் என்று ஒரு பக்கம் ஆச்சர்யமாக இருந்தது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
லாஸ்லியா, ஷேரினை நாமினேட் செய்ததற்கு சொன்ன காரணம், ஷெரினை, சாக்க்ஷி பயன்படுத்தினார் என்ற ஒரு விஷயம் வந்தது. ஆனால், அவரை பயன்படுத்தினரா என்று ஷெரின் சொல்லி இருந்தால் பரவா இல்லை. அதை விட்டு விட்டு இன்னொருவர் மூலமாக சொல்ல வைத்தது சரியாக படவில்லை. அந்த விஷயம் அனைவர் முன்பும் வந்த போது கூட அவர் (ஷெரின்) பெரிதாக ரியாக்ட் பண்ணவில்லை என்று கூறி இருந்தார்.
[Image: image-64.png]
ஆனால், உண்மையில் சாக்க்ஷியிடம் தர்ஷன் சொன்ன விஷயம் ஷெரீனுக்கு தெரியவே தெரியாது. சாக்க்ஷி இறுதியாக வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தர்ஷனிடம் பேசிய ஷெரின் நீ ஏன் சாக்க்ஷியை அப்படி சொன்ன என்று தான் கேட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அது மட்டுமில்லை சாக்க்ஷி வீட்டில் இருந்த வரை அவரை கண்டுகொள்ளாத லாஸ்லியா அவரை கடந்த வாரம் நாமினேட் கூட செய்திருந்தார். தற்போது அவருக்காக வருந்துவது போல ஷேரினை நாமினேட் செய்துள்ளார். ஆனால், இதற்கு முக்கிய காரணமே கவின், ஷெரினை அடிக்கடி புகழ்ந்து பேசுவதை லாஸ்லியாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அதிகமாக கட்டணம் வசூலித்த திரையரங்குகள்! பணத்தை திருப்பி ஒப்படைக்க வைத்த அதிகாரி


வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து திரையரங் குகளிலும் ஆகஸ்ட் 11 ந்தேதி மாலை ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். இதன்படி, இராணிப்பேட்டை கோட்டத்தில் உள்ள ஆறு திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக தொகை வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.  

 
[Image: vellore_19.jpg]
 

ஏசி வசதியுள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூபாய் 120 ம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பகுதிகளில் தியேட்டர்களில் ரூபாய் 100 ம் , ஊராட்சிப் பகுதிகளில் ரூபாய் 75 மட்டுமே டிக்கட் கட்டணமாக வசூலிக்க வேண்டும்.

 



அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்த திரையரங்குகளில் கூடுதலாக வசூல் செய்யப்பட்ட தொகையை திரைப்படம் பார்த்த மக்களுக்கு திருப்பித் தர ஏற்பாடு செய்யப்பட்டது. மொத்தமாக அனைத்து திரையரங்குகளிலும் ரூபாய்.34,400/- பொதுமக்களுக்கு திருப்பித் தரப்பட்டது.  

 

வரிகள் தவிர்த்து, அதிகபட்சமாக டிக்கெட் வசூல் செய்த தியேட்டர்களுக்கு  இனிமேல் அரசு நிர்ணயித்த தொகை கூடுதலாக டிக்கட் வசூல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
'என் இதயத்தை கவர்ந்தது 'பிக்பாஸ் 3' தர்ஷன் மட்டும் தான்' - சனம் ஷெட்டி ஏக்கம் !

'பிக் பாஸ் -3' புகழ் தர்ஷன், சனம் ஷெட்டி, இணைந்து நடித்து, பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன், அர்ஜுனன், அபிஷேக், பிரவின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் 'மேகி' படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வை போஸ்டரும் நேற்று வெளியிடப்பட்டது. விழாவில் அப்பட நாயகியும், இப்படத்தின் தயாரிப்பாளருமான நடிகை சனம் ஷெட்டி நாயகன் 'பிக் பாஸ் -3' புகழ் தர்ஷன் குறித்து பேசும்போது....
 
[Image: Untitled-1_74.jpg]
 

 
''சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக ‘மேகி’ இருக்கும் என்பதால் இப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. தர்ஷனை முதல்முறை விளம்பர படப்பிடிப்பில் தான் பார்த்தேன். அங்கு பலரும் இவர் பார்ப்பதற்கு கதாநாயகன் மாதிரி இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவரிடம் அணுகி ஆடிஷனுக்கு வாங்க என்று அழைத்தேன். நான் நினைத்தது போலவே தர்ஷன் பொருத்தமாக இருந்தார். அவர் பிக் பாஸ் - 3 நிகழ்ச்சியில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் வெளியே வந்ததும் படிப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும். மேலும், பல பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அனைவரின் இதயத்தையும் கவர்ந்தது தர்ஷன் மட்டும் தான். படப்பிடிப்பிலும் அப்படி தான் இருந்தார். எங்கள் அனைவரையும் கவர்ந்தார். எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் – 3 நிகழ்ச்சியின் தலைப்பு வெற்றியாளராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்'' என்றார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பிக்பாஸ் 3: வெளியேறினார் சாக்ஷி

[Image: NTLRG_20190812124753199213.jpg]

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை சாக்ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் 3வது சீசனின் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் சாக்ஷி. முதல் வாரம் அமைதியாக இருந்த அவர், இரண்டாவது வாரத்தில் இருந்து தனது வேலையை ஆரம்பித்தார். 

கவினுக்கும் அவருக்கும் இடையேயான நட்பு மேலும் நெருக்கமானது. இருவரும் காதலிக்கிறார்கள் என்றே ஹவுஸ்மேட்ஸ் பேசினர். ஆனால் கவினின் கவனம் லாஸ்லியா பக்கம் திரும்பியதால், சாக்ஷிக்கு பொறாமை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் செய்த சில வேலைகள், கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது. ரசிகர்களிடையே அவருக்கு கெட்டப்பெயரை சம்பாதித்துக் கொடுத்து. 

இந்நிலையில் இந்த முக்கோணக் காதல் கதைக்கு கடந்த வாரம் எண்டுகார்டு போட்டார் பிக்பாஸ். சென்ற வாரம் முழுவதும் அமைதியாக காணப்பட்டார் சாக்ஷி. இதற்கு முக்கிய காரணம் நாமினேஷனில் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது தான். 

சாக்ஷி, லாஸ்லியா, அபிராமி ஆகியோரது பெயர்கள் நாமினேஷனில் இருந்தது. இந்நிலையில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சாக்ஷி வெளியேற்றப்பட்டார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]`பங்காளி... வந்துட்டே இருக்கேன்!' - 'மீண்டும் ஹீரோ' வடிவேலு[/color]

[color=var(--title-color)]'தலைநகரம்' படத்தில், `எனக்காடா எண்டு கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே கிடையாதுடா' என்று வடிவேலு பேசும் டயலாக் செம ஃபேமஸ். மதுரையிலேயே முகாமிட்டிருந்தவர், தற்போது சினிமா படிப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டார்.[/color]
[Image: vikatan%2F2019-08%2F6fb965d7-4b8c-4a03-b...2Ccompress][color=var(--meta-color)]Vadivelu[/color]
[color=var(--content-color)]வடிவேலுவின் நகைச்சுவைத் திறமையை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொண்டவர், 'என்னம்மா கண்ணு' இயக்குநர் ஷக்தி சிதம்பரம். வடிவேலுவை பிரத்யேக ஹீரோவாக வைத்து கதை எழுதி, அதற்கு 'பேய் மாமா' என்று டைட்டிலையும் கவுன்சிலில் பதிவுசெய்திருந்தார். பூஜைபோட்டு, படப்பிடிப்பை தொடங்கும் நேரத்தில், 'வடிவேலுவை ஒப்பந்தம் செய்யாதீர்' என்று தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் சிவப்புக்கொடி காட்டியது. ஷக்தி சிதம்பரம் ஷாக்கானார்.
வடிவேலுவுக்கு பதில் யோகிபாபுவை ஒப்பந்தம்செய்து அட்வான்ஸ் பணமும் கொடுத்துவிட்டார். இதற்கிடையில், 'ப்ரெண்ட்ஸ்' படத்தின் நேசமணியான வடிவேலு, உலக அளவில் டிரெண்டானார். 'தயாரிப்பாளர்கள் சங்கத்துல என்னை வாழவிடாம அழிக்கப் பாக்குறாங்க' என்று தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருந்தார், வடிவேலு. சினிமா வாழ்வில், இருந்த தடைகளை எல்லாம் பேச்சுவார்த்தை வாயிலாக வைகைப் புயல் தீர்வு கண்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.
[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F9f57b360-e78e-45e0-9...2Ccompress]
வடிவேலு


[color=var(--content-color)]கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வடிவேலுவை ஹீரோவாக வைத்து முழுநீள காமெடி படத்துக்கான கதை, திரைக்கதை, வசனத்தை உருவாக்கி இருக்கிறார், இயக்குநர் சுராஜ். 'தலைநகரம்' படத்தில் 'நாய் சேகர்' கதாபாத்திரத்தையும் 'மருதமலை' படத்தில் ' ஏட்டு ஏகாம்பரம்' கேரக்டரையும் யாராலும் மறக்க முடியாது. அதனை முன்மாதிரியாக வைத்து, முழுக்க முழுக்க சிரிக்கவைக்கும் நோக்கத்தோடு வடிவேலுவுக்காக பிரத்யேகமாக கதை ஒன்றை உருவாக்கியுள்ளார், சுராஜ். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையாகத் தோன்றி தமிழ் ரசிகர்களை கவலை மறந்து சிரிக்க வைக்க இருக்கிறார் வடிவேலு. மதுரையில் இருந்த அவரிடம் பேசினோம். `` இப்போதைக்கு பேட்டி எதுவும் வேணாம் பங்காளி. அடுத்த மாசம் ஷூட்டிங் ஸ்டார்ட். அதுக்கப்புறம் மீடியா வெளிச்சத்துக்கு வர்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. வந்துகிட்டே இருக்கேன்'' என்றார் உற்சாகத்துடன்[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: varu.jpg]
திருமணமா? வாய்ப்பே இல்லை ராசா : சொல்கிறார் நடிகை வரலட்சுமி
Varalakshmi sarathkumar : நிஜ வாழ்க்கையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்
நிஜ வாழ்க்கையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கன்னி ராசி பட விழாவில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.
நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் கன்னி ராசி. இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் எஸ். முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விமல், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இதில் பங்கேற்றனர்.
இதில் நடிகை வரலட்சுமி பேசியதாவது, பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்’ என்றார்.
நடிகை வரலட்சுமியை, தனது கனவுக்கன்னியாக பாவித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, இந்த செய்தி பேரிடியாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை…
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: sachin-70.jpg]
bigg boss promo today: நம்ம சாண்டியா இது? முகெனுக்காக வனிதாவை முதன்முறையாக முறைத்த சாண்டி!
அவன் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னானா?

bigg boss promo today : பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினத்தின் முதல் 2 ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன. இதுவரை “ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது” என சுற்றிக் கொண்டிருந்த முகென் – அபி காதலுக்கு மொத்தமாக சங்கு ஊதி விட்டாரு வனிதா.
bigg boss promo 1: பிக் பாஸ் வீடு கடந்த சில நாட்களாக ரொம்ப அமைதியா, எல்லாருக்குமே கேம் புரிந்து விட்ட மாறி ஹாப்பி ஹவுசா செல்வது பிக் பாஸுக்கே பிடிக்கவில்லை போல. தீடீரென்று வெளியே போன வனிதாவை சிறப்பு விருந்தினராக மீண்டும் உள்ளே அனுப்பி அழகு பார்க்கிறார். இல்லை இல்லை பிக் பாஸ் போட்டியாளர்களை அழ வைத்து பார்க்கிறார்.
உள்ளே போன வனிதா சும்மா இருப்பாரா என்ன? போன முதல் நாளே கிழி கிழின்னு வச்சி செஞ்சிடாரு. இத்தனை நாள் அவர் வெளியில் மக்கள் போட்டியாளர்களை பற்றி என்ன பேசுகிறார்கள், எப்படி பார்க்கிறாகள், என்ன விமர்சிக்கிறார்கள் என்பதையெல்லாம் நன்கு தெரிந்துக் கொண்டார். அதையெல்லாம் வைத்து போட்டியாளர்களுக்கு அட்வைஸ் செய்வதாக நினைத்துக் கொண்டு புட்டு புட்டு வைத்தார். கவினை, லாஸ்லியாவை தன்னை பற்றி பின்னால் பேசிய மற்ற போட்டியாளர்கள் என தனது மொத்த கோபத்தை அப்பட்டமாக காட்டி அனைவரின் முகத்திலும் பெய் பயத்தை வர செய்து விட்டார்.
Quote:[Image: b52Hh6Vv_normal.jpg]
[/url]Vijay Television

@vijaytelevision





#Day51 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision

[Image: EB0ehqlU4AEdpff?format=jpg&name=small]


3,777
முற்பகல் 9:01 - 13 ஆக., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
[color][size][font]

இதைப் பற்றி 1,158 பேர் பேசுகிறார்கள்

[url=https://twitter.com/vijaytelevision/status/1161118040550805505]



இன்றைய முதல் ப்ரமோவில் அபியிடம், முகென் பின்னாடி நீ ஏன் சுற்றுகிறாய்? துர்கா யார் என்று உனக்கு தெரியுமா? அவன் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னானா? அது இதுன்னு நாரதர் வேலை பார்க்க அபி முகம் அப்படியே கோவத்தில் சிவக்கிறது.
bigg boss promo 2: வனிதா பார்த்த நாரதர் வேலை , சரியாக நகர, முகென் அபிக்கும் சண்டை வெடிக்கிறது. அபியை எல்லா போட்டியாளர்களும் சமாதானம் செய்ய, இதுவரை நான் பார்த்த அபி நீ இல்லை என உண்மையை உடைக்கிறார் முகென். (எங்களுக்கே எந்த அபி உண்மைன்னு புரியலப்பா) இதனால் பொங்கி எழும் அபி தனது கோர முகத்தை காட்ட, முகென் கோவத்தில் வழக்கம் போல் நாற்காலியை தூக்கி அபியை அடிக்க கை ஓங்குகிறார். (போன முறை கட்டில் பாஸ்)

[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Quote:[Image: b52Hh6Vv_normal.jpg]
[/url]Vijay Television

@vijaytelevision






#Day51 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil- தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision

[Image: EB1IdNQWkAE0In0?format=jpg&name=small]


4,545
பிற்பகல் 12:04 - 13 ஆக., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


இதைப் பற்றி 1,809 பேர் பேசுகிறார்கள்





மொத்தத்தில் இன்றைய நாள், வனிதாவின் நாரதர் வேலையுடன் இனிதே தொடங்குகிறது பிக் பாஸ் இல்லம்.
bigg boss promo 3: இன்றைய தினத்தின் 3 ஆவது ப்ரமோ  பிக் பாஸ் ரசிகர்களை இது கனவா என கேட்க வைத்துள்ளது. காரணம், இதுவரை நியாயம் தர்மத்தை தட்டி கேட்காமல் சுற்றித் திரிந்து வந்த  சாண்டி மாஸ்டர்   இன்று கோபத்தில் வனிதாவை முறைத்துக் கொள்கிறார்.
Quote:[Image: b52Hh6Vv_normal.jpg]
Vijay Television

@vijaytelevision






#Day51 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision

[Image: EB1xO3UXUAAoLxr?format=jpg&name=small]


3,363
பிற்பகல் 3:30 - 13 ஆக., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


இதைப் பற்றி 1,132 பேர் பேசுகிறார்கள்

[url=https://twitter.com/vijaytelevision/status/1161215819340111873]




அதற்கு காரணமே முகென் – அபியின் காதல் முறிவு. வனிதா அபியிடம் ஏதோ தனியாக பேச, அதனால் தான் சண்டை வெடித்ததாக சாண்டி வனிதாவை முறைக்கிறார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Bigg boss 3 tamil: ஆரம்பிச்சது வனிதா.. ஆனா ஜெயிலில் மாட்டிகிட்டது கஸ்தூரி
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவாக ஜொலிக்கிறது கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் ஹோட்டல் என்று மாற்றம் செய்யப்பட்டு வனிதா விஜயகுமார் விருந்தினராக வந்திருக்கிறார்.
வந்ததுமே பல விஷயங்களை பேசியவர், கடைசியாக அபிராமி, முகேன் விஷயத்தை ஆரம்பிச்சு வச்சார். உன் மேல தப்பில்லையா முகேன் என்பது போல முதல் நாள் ஆரம்பிச்சு வச்ச விஷயம், நேத்து பத்திகிட்டு எரிஞ்சுது.
இன்று ஜெயிலில் இருக்கார் கஸ்தூரி. இப்படி ப்ரோமோவில் காண்பித்து இருக்கிறார்கள் என்றாலும், உண்மையிலும் நேற்று ஹவுஸ் மேட்ஸிடம் கெட்ட பெயர் வாங்கி மாட்டிகிட்டது கஸ்தூரிதான்.
[Image: vanitha-1-1565770963.jpg]

தோத்து போயிட்டேன் ஷெரீன்
வந்த விஷயத்தை மறந்து இப்போ தோத்து போயிட்டேன் ஷெரீன் என்று அபிராமி அழுவது பாவமாகத்தான் இருக்கிறது.நேற்று மீண்டும் முகேன் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை புரிய வைக்க அபிராமி முயற்சி செய்து கொண்டு இருக்கையில், கஸ்தூரி நின்று கொண்டு நீ பேசு..இப்போ நீ பேசு என்று நீயா நானா ஷோ மாதிரி வாய்ப்பு கொடுக்க கடுப்பாகி போனார்கள் ஹவுஸ் மேட்ஸ். முதலில் நீங்க உட்காருங்க. இது ஒண்ணும் டிவி ஷோ இல்லை என்று வனிதா மற்றும் ஹவுஸ் மேட்ஸ் கத்த ஆரம்பித்து விட்டார்கள்.


[Image: mugen567-1565771036.jpg]
 
[color][size][font]
முகேன் எப்போதும்
எப்போதும் முகேன் கோவத்தில் அதை போட்டு உடைப்பது, இதை போட்டு உடைப்பது என்று இருப்பது எங்களுக்கு பிடிக்கலை .உங்களுக்கு பிடிக்குதா பிக்பாஸ். இதை வனிதா கேட்டது சரியாகத்தான் இருந்தது. தவிர நேற்று சேரை தூக்கிப் போட்டுவிட்டு, அபிராமியை அடிப்பது போல வந்த முகேனின் செயல் முகம் சுளிக்க வைத்துள்ளது. அதோடு, கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.[/font][/size][/color]

[Image: vanitha-167-1565770956.jpg]
 
[color][size][font]
கஸ்தூரி காக்கா
வனிதா அக்கா கூட சரியாத்தான் கேட்டாங்க. புதுசா வந்திருக்கே ஒரு காக்கா..அதுதான் ரொம்ப ஆட்டம் காட்டுது. நீயா நானா ஷோ மாதிரி நடத்துதுன்னு சாண்டி, முகேன்,கவின் மூணு பேரும் பேசிக்கறாங்க. அது படி பார்த்தால் வனிதா ஆரம்பிச்சு வச்ச விஷயம் ஓகேதான். அதை ஊதி பெரிசாக்கினது கஸ்தூரிதான் என்பது போல ஆகிப் போச்சு கதை.
[/font][/size][/color]

[Image: vanitha-16768-1565770947.jpg]
 
[color][size][font]

விஷயம் சூடு
வனிதா வந்ததும் பல விஷயங்கள் சூடு பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு.அது மட்டும் இல்லமால் கஸ்தூரியிடம் எதிர்பார்த்தது புஸ்ஸுன்னு போயிருச்சு. இப்போ ப்ரோமோ பார்க்கவே மக்கள் விஜய் டிவியையே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பார்க்க போனால் விருந்தாளியாக வந்த வனிதா கேட்க வேண்டியதை கேட்டுவிட்டு, ஹவுஸ் மேடாக தங்கி விடுவார் போலும்[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சிம்புவுக்கு இது முதல் தடவையல்ல... - கைவிடப்பட்ட திரைப்படங்கள் லிஸ்ட்

நடிகர் சிம்பு மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அவர் சினிமா ஷூட்டிங்கிற்கே வர மாட்டார், காலை ஒன்பது மணிக்கு ஷூட்டிங் என்றால் மாலை மூன்று மணிக்குதான் ஷூட்டிங்கிற்கே வருவார்' போன்றவை. இதுபோல பல விமர்சனங்கள், மன்மதன் படத்திலிருந்தே சிம்புவை பின் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இது ஒரு கட்டத்தில் முத்திப்போக 'செக்கச்சிவந்த வானம்' படத்தில் நடிக்க மணிரத்னம் சிம்புவை கமிட் செய்தார். பலருக்கும் ஆச்சரியம்தான். ஆனால் சிம்பு நமக்குக் கொடுத்தது மிகப்பெரிய ஆச்சரியம். கொடுத்த கால்ஷீட்டுக்கு சரியாக வந்து நடித்துக்கொடுத்துள்ளார் என்று சொல்லப்பட்டது. சிம்புவும் 'இனி நான் கமிட்டாகும் படங்களில் சரியாக நடித்துக்கொடுப்பேன், என் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தையும் என்னுடைய செயலால்  உடைத்துக்காட்டுவேன்' என்றார்.
 
[Image: simbu_20_1.jpg]
 

 
இதன் பின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், இந்தப்  படம்  தவிர்த்து 'மஹா' என்ற படத்தில் கெஸ்ட் ரோலிலும், 'மஃப்தி' என்னும் கன்னட பட தமிழ் ரீமேக்கிலும் சரியாக நடித்துக் கொடுத்துவிட்டார். 'மாநாடு' படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு வருட காலம் ஆக இருந்த நிலையில் திடீரென சுரேஷ் காமாட்சி, படத்தில் சிம்புவை நீக்கிவிட்டு வேறு ஒரு ஹீரோவை வைத்து படத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். இந்நிலையில் சிம்பு தரப்பிலிருந்து ஒரு அதிரடி அறிவிப்பு வெளியானது. சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க சிம்பு இயக்கத்தில் 'மகாமாநாடு' என்றொரு படத்தை உருவாக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு பட்ஜெட் ரூ.125 கோடியாம், ஐந்து மொழிகளில் எடுக்கப்படுகிறதாம். இந்த அறிவிப்புக்குப் பின்னர் சிம்பு போட்டிக்காகதான் இதை செய்துள்ளார் என்று பேசப்படுகிறது.

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் வெளியாகி தோல்வியடைந்த சமயத்தில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் ஒரு செய்தியாளர் சந்திப்பு வைத்து படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக வராதது குறித்தும் தனது வீட்டின் பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசியதாகவும் சொன்ன பிறகு சிம்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஹாலிவுட் தரத்தில்  ஒரு படம்' எடுப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் பலர் சிலிர்த்துப்போய் சில்லரையை விட்டு எறிந்து கொண்டாடினார்கள். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி அதற்குப் பிறகு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

தமிழ் சினிமாவில் இருக்கும் வியாபார சூழ்நிலையில் யார் கதாநாயகனாக இருந்தாலும் சில திரைப்படங்கள் கைவிடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன, அல்லது மிகத் தாமதமாக வெளிவர வாய்ப்பிருக்கிறது. இது அனைத்து நடிகர்களுக்குமே நிகழக்கூடிய, நிகழ்ந்திருக்கும் ஒன்றுதான். ஆனால், சிம்பு விஷயத்தில் இது சற்றே அதிகம். அவர் நடிப்பதாக அறிவித்து பாதியிலேயே கைவிடப்பட்ட படங்கள் குறித்தும், அவர் நடித்து பாதியிலேயே கைவிடப்பட்ட படங்கள் குறித்தும் பார்ப்போம்.
 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
'வல்லவன்' வெளியாகி ஓரளவு வெற்றி பெற, சிம்பு அடுத்து 'கெட்டவன்' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் பாடல்கள் கூட இணையத்தில் லீக்காகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. பிரபல தொகுப்பாளராகவும் மாடலாகவும் இருந்த லேகா சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு லேகா சிம்புவை குறை சொல்லி தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
 
[Image: ac_6.jpg]

'நியூ' படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே சூர்யா சிம்புவையும் அசினையும் வைத்தும் 'ஏசி' என்றொரு படத்தை எடுக்க இருந்தார். ஆனால், போட்டோஷூட்டுடன் படம் ட்ராப் ஆனது. 'வாலிபன்', நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி தயாரிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு சிம்பு இயக்கி நடிப்பதாக இருந்த படம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டு ஒரு பாடலும் வெளியாகி இருந்தது. ஆனால், இந்தப் படமும் டேக்-ஆஃப் ஆகவில்லை. 
 
[Image: vettai%20mannan.jpg]

'வேட்டை' படத்தில் ஆர்யா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சிம்புவைத்தான் தேர்வு செய்தார் லிங்குசாமி ஆனால், படத்தின் ஷூட்டிங்கிற்கு சிம்பு வராமல் காலதாமதம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் பிரச்சனைவர சிம்பு ‘வேட்டை மன்னன்’ என்னும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ஷூட்டிங்கை தொடங்கினார்.'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சனின் முதல் படம் 'வேட்டை மன்னன்'. இந்தப் படத்தின் முதல் பாதி ஷூட்டிங் மட்டும் முடிவடைந்து இணையத்தில் டீஸரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், படம் ட்ராப் ஆகிவிட்டது. 
 
[Image: kaan.jpg]
 

 
கான்... செல்வராகவன் பல தடைகளுக்குப் பின்னர் முதன் முதலில் சிம்புவை வைத்து படம் எடுப்பதாக அறிவித்து, போஸ்டரும் வெளியானது. ஆனால், காரணம் தெரியாமலேயே இந்தப் படமும் ட்ராப்பானது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான படம் 'கோ'. இந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக கமிட்டாகியிருந்தவர் சிம்புதான். நாயகியை மாற்ற வேண்டும் என்று சொல்லியதால் இயக்குனர் நாயகனை மாற்றிவிட்டதாக சொல்லப்பட்டது. தனுஷின் ஆஸ்தான இயக்குனரான வெற்றிமாறன், முதலில் சிம்புவை வைத்துதான் 'வடசென்னை' இயக்குவதாக செய்திகள் வெளியாகின. பின்னர், அந்தப் படத்தில் தனுஷ் நடித்து வெளியாகி வெற்றிபெற்றது. சிம்பு ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட 'மாநாடு' படமும் இந்த வரிசையில் சேர்ந்துவிட்டது. இதற்குப் போட்டியாக சிம்பு 'மகாமாநாடு' படத்தை அறிவித்திருக்கிறார். படப்பிடிப்பு நடந்து, படம் வெற்றிகரமாக எடுக்கப்பட்டு, வெளியாகி, வெற்றி பெற வாழ்த்துவோம். சிம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் நிறைவேற்றவேண்டும்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
மேடையில் ரஜினியை கிண்டல் செய்த யுகபாரதி!

விமல் - வரலக்ஷ்மி இணைந்து நடித்துள்ள படம் ‘கன்னி ராசி’. பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்துள்ளார். 'தர்மபிரபு' புகழ் எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கவிஞர் யுகபாரதி கலந்துக் கொண்டு ரஜினி கருத்து குறித்து பேசியபோது....
 
[Image: Yugabharathi.JPG]
 
‘கன்னிராசி படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதை விட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்துள்ளார். இந்த படத்தை பொறுத்தவரை சொல்வதற்கு நிறைய உள்ளது. ஆனால் இதையெல்லாம் சொல்லமுடியாத சூழலில் தற்போது தமிழ் சினிமா உள்ளது. இப்படத்தில் வரும் கொலு பாடலில் சிலைகளுக்கு நடுவே பெரியார் சிலையை இயக்குனர் முத்துக்குமார் வைத்துள்ளார். அவருடைய நோக்கம் என்ன என்பது இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பேசியதற்கும், விஜய் சேதுபதி பேசியதற்கும் அர்த்தமாக இது பார்க்கப்படுகிறது. இதுதான் இப்படத்தினுடைய முக்கியமான அம்சம். விமல், வரலக்ஷ்மி அல்லது முத்துக்குமார் ஆகியோரில் ஒருவர் விஜய் சேதுபதி பேசியது மாதிரியான கருத்தை பேசுவார்கள் என நம்புகிறேன். முத்துக்குமார் ஏற்கனவே தர்மபிரபுவில் இம்மாதிரியான கருத்துக்களை பேசி நிறைய பேச்சக்களை வாங்கியுள்ளார். 
 

 
இது முழுக்க முழுக்க குடும்பப் பாங்கான காமெடி திரைப்படம். இப்படத்தில் இயக்குநர் ஒரு அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதாவது காதலித்து தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற உயரிய கருத்தைச் மக்களுக்கு சொல்லிருக்கிறார். நான் இந்த நேரத்தில் இது மிக சிறந்த படம். இதற்கு தேசிய விருது கிடைக்கும் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால், நீங்கள் ஆகச்சிறந்த படங்கள் எடுத்தாலும் நிச்சயமாக இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காது. இன்றைய சூழல் அப்படி. எனவே தயாரிப்பளார்களும், இயக்குனர்களும் இதுபோன்ற வெற்றிபெறக்கூடிய நல்ல காமெடி படங்களை எடுத்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தேசிய விருதில் தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கலைஞர்களுக்கு சமூக பொறுப்பு இருக்க வேண்டும். அதேபோல் எல்லோரும் சொல்லவேண்டும், நாம் கிருஷ்ணர், அர்ஜுனரை பற்றி பேசாமல் தமிழ் திரையுலகிற்கு எதாவது நல்லது நடக்கவேண்டும் என்பதற்காக முக்கியமான நடிகர்கள், கலைஞர்கள், தமிழ் திரையுலகை காக்க நினைப்பவர்கள் உட்பட அனைவரும் இந்த தேசியவிருது அறிவிப்பு குறித்த விழிப்புணர்வை பற்றி பேசவேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றார். சமீபத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து ரஜினி மேடையில் பேசும்போது... 'மோடி, அமித்ஷாவை கிருஷ்ணன், அர்ஜுனன்' என பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கோமாளி - பட காட்சிகள் ↓
[Image: 11023429558.jpg]

  1.  
  2.  
  3.  

[color][size][font]
கோமாளி - சினி விழா ↓
[Image: 1565621674.jpg]


[/font][/size][/color]
Advertisement

கோமாளி
நேரம் 2 மணி நேரம் 22 நிமிடம்








3

  •   9  16 Google+

[color][size][font]

விமர்சனம்
[/font][/size][/color]
Advertisement

நடிப்பு - ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு
தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - பிரதீப் ரங்கநாதன்
இசை - ஹிப்ஹாப் தமிழா
வெளியான தேதி - 15 ஆகஸ்ட் 2019
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் மருத்துவத்தை மையமாக வைத்து வரும் படங்கள் மிகவும் குறைவு. மருத்துவம் என்றாலும் அதை மனநலம் சம்பந்தப்பட்டதாகத்தான் பல படங்களில் கதையாக அமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் 16 வருடங்கள் கோமாவில் இருந்து எழுந்து வந்த ஒருவருக்கு நடக்கும் விஷயங்களைப் படத்தின் கதையாக வைத்திருக்கிறார்கள். ஆனாலும், அதை சீரியசான கதைக்குள் வைக்காமல் படம் முழுவதும் கலகலப்பான காட்சிகளுடன் வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ரசிகர்களுக்கு எதைக் கொடுத்தால் பிடிக்கும் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். குறிப்பாக தியேட்டருக்கு அதிகமாகப் படம் பார்க்க வரும் 90ஸ் கிட்ஸுகளைக் கவர அதிகமாகவே முயற்சித்திருக்கிறார். ஆனால், இந்தப் படம் அனைத்து வயதினருக்குமான படமாகத்தான் இருக்கிறது.

ஜெயம் ரவி பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது உடன் படிக்கும் சம்யுக்தா ஹெக்டேவிடம் காதலைச் சொல்லும் போது விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றுவிடுகிறார். 16 வருடங்கள் கழித்து கண் விழிக்கிறார். நெருங்கிய நண்பனாக இருந்த யோகி பாபு, ஜெயம் ரவி தங்கையைத் திருமணம் செய்து கொண்டு மச்சானாக மாறியிருக்கிறார். அதோடு அத்தனை வருடங்களாக அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால், குடும்பம் கடனில் சிக்கித் தவிக்கிறது.

ஒரு வாரத்திற்குள் கடனை அடைக்க வங்கிக்காரர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். குடும்பத்துக்கு சொந்தமான சில கோடி மதிப்புடைய குடும்பத்து பரம்பரை சிலை பற்றி ஜெயம் ரவிக்கு தெரிய வருகிறது. ஆனால், அது எம்எல்ஏ கேஎஸ் ரவிக்குமாரிடம் இருக்கிறது. அதைத் திருடி குடும்பத்து கடனை அடைக்க முடிவெடுக்கிறார்கள். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

16 வருடங்கள் கோமாவில் இருந்த நாயகன் என்றதும் அதை மையமாக வைத்தே கலகலப்பான காட்சிகளை படம் முழுவதும் வைத்திருப்பார்கள் என நினைத்தால் அதில் கொஞ்சம் ஏமாற்றம்தான். இடைவேளை வரை யோகிபாபுவின் தயவில் படம் கலகலப்பாக நகர்கிறது. அதன்பின் பரம்பரை சிலை, கடன் என வேறு பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறது. 16 வருட இடைவேளி ஒரு மனிதனுக்கு எப்படி புதிதாக இருக்கிறது என்பதை ஒரு பாடலிலும், சில காட்சிகளிலும் மட்டும் காட்டிவிட்டு கடந்து போகிறார் இயக்குனர்.

குடும்பத்து கதாபாத்திரங்களுக்குள் அப்படியே பிட் ஆகி விடுகிறார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் பள்ளி மாணவனாக கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த துறுதுறுப்பை அப்படி கொண்டு வந்திருக்கிறார். 16 வருடங்களாக கோமாவில் இருந்த வந்த பின் கம்ப்யூட்டர், மொபைல் போன், ஊர் எப்படி மாறிப் போய்விட்டது என்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார். டெக்னாலஜி மாறினாலும் நம்மிடம் எமோஷன் மட்டும் மாறவில்லை என்பதை கிளைமாக்சுக்கு முன்பாக பக்கம் பக்கமாக வசனம் பேசி கொஞ்சம் யோசிக்க வைக்கிறார்.

ஜெயம் ரவியின் பள்ளிக் காதலியாக பிளாஷ்பேக்கில் சம்யுக்தா ஹெக்டே. வேறு ஒருவருடன் திருமணம் நடந்த பின்னரும் ஜெயம் ரவி மீது காதலுடன் தான் இருக்கிறார். இடைவேளைக்கு முன்பாகத்தான் வருகிறார் காஜல் அகர்வால். அவரும் கதாநாயகிதான் என்பதை சொல்லாமல் சொல்லி ஜெயம் ரவியுடன் ஒரு டூயட்டை வைத்திருக்கிறார்கள். இரண்டு கதாநாயகிகள் என்றாலும் இருவருக்குமே படத்தில் அதிக வேலையில்லை.

படத்தின் இரண்டாவது கதாநாயகனாக யோகி பாபு. படம் முழுவதும் ஜெயம் ரவியுடனே வருகிறார். எங்கெங்கெல்லாம் கேப் கிடைக்கிறதோ அங்கெல்லாம் நம்மை சிரிக்க வைக்கிறார். நீ என் பிரண்டுடா அதுக்காகத்தான் உனக்கு பண்ணன்டா எனச் சொல்லும் போது கண் கலங்கவும் வைக்கிறார்.

வில்லனாக கே.எஸ்.ரவிக்குமார். சாதாரண ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறி எம்எல்ஏவாக இருப்பவர். பெரிய வில்லத்தனம் எல்லாம் செய்யாமல் இரண்டொரு காட்சிகளே என்றாலும் நடிப்பில் ரவுடித்தனம் காட்டுகிறார்.

ஹிப்ஹாப் தமிழாவின் அதே நான்கு டியூன், வெவ்வேறு வார்த்தைகளில் இந்தப் படத்திலும் ஒலிக்கிறது. அந்த நான்கு டியூனில் உருவான நான்கு பாடல்களையும் அவரே பாடியிருப்பார் போலிருக்கிறது. எப்போதுதான் மாற்றிக் கொள்ளப் போகிறாரோ.

யு சர்டிபிகேட் படத்தில் ஆரம்பத்தில் டீக்கடையில் அந்தப் பெண்மணியின் இடுப்பை அப்படி காட்டுவதற்கு ஏ சர்டிபிகேட்டே கொடுத்திருக்கலாம். குழந்தைகளும் ஜெயம் ரவி படத்தைப் பார்ப்பார்கள் என்பதை இயக்குனர் புரிந்து கொண்டிருக்கலாம். அல்லது ஜெயம் ரவியாவது கவனித்து அந்தக் காட்சியை வேறு விதமாக மாற்றச் சொல்லியிருக்கலாம்.

டிரைலரில் இடம் பெற்று சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினிகாந்த் பற்றிய அரசியல் வசனத்தை மாற்றிவிட்டார்கள். ஆனாலும், அந்த ரஜினிகாந்த்தின் அரசியல் என்ட்ரி காட்சி ஏற்படுத்திய தாக்கதை மாற்றப்பட்ட காட்சி நிகழ்த்தவில்லை.

இடைவேளைக்குப் பின் திரைக்கதை சிலை, கடன், மனிதம் தள்ளாட ஆரம்பிக்கிறது. முதல் படத்திலேயே தான் சொல்ல ஆசைப்படும் அட்வைஸ்களை அள்ளித் தெளிக்க ஆரம்பித்துவிட்டார் இயக்குனர். ஆனாலும், ஒரு இரண்டரை மணி நேரம் போனது தெரியவில்லை.

கோமாளி - ஏமாற்றவில்லை..
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[color=var(--title-color)]`இந்தியன் 2' சேனாபதி இதைத்தான் பேசப்போகிறார்![/color]

[color=var(--title-color)]ஷங்கர் - கமல்ஹாசன் இயக்கத்தில் வெற்றிகண்ட `இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிவருகிறது. பல்வேறு தடைகளைக் கடந்து படத்துக்கான வேலைகள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. சுதந்தர தினமான நேற்று படத்தின் போஸ்டர் லுக், வெளியானது.[/color]
[Image: vikatan%2F2019-08%2Fd3cb1613-4d20-4e2a-8...2Ccompress][color=var(--meta-color)]இந்தியன் 2 ( கமல் ஹாசன் )[/color]
[color=var(--content-color)]பெரிய பொருள்செலவில் தயாராகவுள்ள `இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கமல், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரைத் தொடர்ந்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் நடந்த ஊழல் மற்றும் லஞ்சம் சம்பந்தமான பிரச்னைகளை மையக்கருவாகக்கொண்டு `இந்தியன்' படம் தயாராகியிருந்தது. படமும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. சமகாலத்துக்குக்கூட சரியாகப் பொருந்தும் `கல்ட்' ரக சினிமாவில் இப்படம் இணைந்தது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F069c2c65-63b9-47b1-9...2Ccompress]
கமல் ஹாசன்
[/color]
[color=var(--content-color)]இப்போதிருக்கும் சூழலில் நாடு அதிகமாக சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்னை பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள். இதை மையமாக வைத்துதான் `இந்தியன் 2'வை இயக்கத் திட்டமிட்டுள்ளார், ஷங்கர். தவிர, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான `நேர்கொண்ட பார்வை'யும் இதே விஷயத்தைதான் `நோ மீன்ஸ் நோ' எனப் பேசியிருந்தது. இதைத் தொடர்ந்து `இந்தியன் 2' படமும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களைப் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கஸ்தூரிகிட்ட சொன்னதை செஞ்சிட்டார் வனிதா.. மிஷன் லாஸ்லியா சக்சஸ்.. 
சென்னை: கஸ்தூரியிடம் கூறியது போல், மிஷன் லாஸ்லியாவை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார் வனிதா.
பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக திரும்பி வந்த வனிதா, முதல் வேலையாக மிஷன் லாஸ்லியாவைத் தான் கையில் எடுத்தார். கஸ்தூரியோடு சேர்ந்து கொண்டு லாஸ்லியா யார் என்பதைக் கண்டுபிடிக்கப் போகிறேன் என்றார்.
அதனை லாஸ்லியாவும் சிரித்துக் கொண்டு தான் கேட்டார். ஆனால், சம்பந்தமேயில்லாமல் அபி - முகென் பிரச்சினை, மது கவின் பிரச்சினை என ஏதேதோ தூண்டி விட்டார் வனிதா. இதனால் அவர் மிஷன் லாஸ்லியாவை மறந்து விட்டதாக மக்கள் நினைத்தனர்.


[Image: los-1566007732.jpg]



மிஷன் லாஸ்லியா:
ஆனால் உண்மை அதுவல்ல. சத்தமில்லாமல் தன் மிஷன் லாஸ்லியாவை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார் வனிதா. ஆச்சர்யமாக இருக்கிறதா. ஆம், லாஸ்லியாவின் முகமூடியைக் கிழித்து அவரது உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார் வனிதா.
[Image: madhu-1566007725.jpg]
தனிமை விரும்பி:
பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில், யாருடனும் சேர்ந்து அவ்வளவாக பேச மாட்டார் லாஸ்லியா. ஏன் கடந்த வாரம் வரை கூட அவர் அப்படித்தான் இருந்தார். தானாக ஆடிப்பாடிக் கொண்டு, சேரப்பா, சேரப்பா என கொஞ்சிக் கொண்டு, எப்போதும் சிரித்த முகமாக வளைய வருவார். அதோடு யாரைப் பற்றியும் பின்னால் புறணி பேச மாட்டார்.
[Image: fight-1566007718.jpg]
சண்டைக்காரி:
ஆனால், தற்போது அப்படியல்ல. சுத்தமாக அளே மாறிவிட்டார். அவெஞ்சர்ஸ் டீமில் சேர்ந்து அவர் நடத்தும் ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்தால், நம்மை நாமே கிள்ளித்தான் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அந்தளவிற்கு மது, வனிதா என எல்லோரிடமும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போடுகிறார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 55 Guest(s)