Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[Image: template-3-3.jpg]
தேர்தல் நடத்த அதிகாரம் - நடிகர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு
Nadigar sangam elelction : பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த அதிகாரம் உள்ளதா என்பது குறித்து பதில் அளிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு...
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த அதிகாரம் உள்ளதா என்பது குறித்து பதில் அளிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொது செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், தேர்தலை நடத்த அனுமதித்த நீதிபதி, வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது எனவும் உத்தரவிட்டார். அத்ன்படி, ஜூன் 23 ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

விஷால் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளித்த சங்கங்களின் பதிவாளர், பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் அதிகாரியை நியமித்தது தேர்தல் நடத்த முடியாது என்றும், பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பதவிக்காலம் முடிந்த பின் சங்க நடவடிக்கைகளை கவனிக்கவும், தேர்தலை நடத்தவும் கூடாது என்று தடை செய்ய எந்த சட்ட விதிகளும் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து, பதவிக்காலம் முடிந்த பின்னர் தேர்தல் நடத்த அதிகாரம் உள்ளதா என்பது குறித்தும், இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமை உள்ளதா என்பது குறித்தும் விளக்க மனு தாக்கல் செய்யும்படி விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 20 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நேர்கொண்ட பார்வை படம் எப்படி இருக்கு? - திரை விமர்சனம்
பெண் உரிமை குறித்த இன்றைய காலக்கட்டத்துக்கு தேவையான மிக முக்கியமான வாதத்தை ஒரு உச்ச நட்சத்திரத்தின் வாயிலாக உரக்க பேசியதில் உயர்ந்து நிற்கிறது இந்த ’நேர்கொண்ட பார்வை’.
ஆணாதிக்க சிந்தனை கொண்ட சமூகத்துக்கு எதிராக 2016-ம் ஆண்டு இந்தியில் வெளிவந்து இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய படம் பிங்க். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் நேர்கொண்ட பார்வை.

இதில் ஒரிஜினல் கதையை அப்படியே எடுத்துக் கொண்டு அதில் அஜித்தின் கதாபாத்திர வடிவமைப்பை மட்டும் கொஞ்சம் மாற்றி உருவாக்கியிருக்கிறார்கள்.


பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் ஏற்று நடித்த வழக்கறிஞர் வேடத்தில் தமிழில் அஜித் குமார் நடித்துள்ளார். பிங்க் படத்தை இந்தியா முழுக்க கொண்டாட அமிதாப் பச்சனின் அசாத்திய நடிப்பும் ஒரு முக்கிய காரணம். அமிதாப் நடிப்புடன் ஒப்பிடாமல் பார்த்தால் இதில் அஜித்தின் நடிப்பும் ரசிக்கும்படியே அமைந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்புக்கு தீனி போடும் ஒரு கதாபாத்திரத்தில் அஜித்தை பார்ப்பது நிச்சயம் அவர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

குறிப்பாக அவர் ரசிகர்களை திருப்திபடுத்துவதற்காக புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஆக்‌ஷன் காட்சிகளும் பிளாஷ்பேக் காட்சிகளும் அவர் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும்.

படத்தில் அஜித்துக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்வது யுவனின் பின்னணி இசை. குறிப்பாக அஜித் – யுவன் கூட்டணியில் எப்போதுமே ஒரு கூடுதல் ஸ்பெஷல் இருக்கும் என்பதை இந்தப் படம் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக நிருபித்துள்ளது.

அஜித்தை விட படத்தில் அதிகம் இடம்பெறுவது ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா டரியங் ஆகியோர்தான். படம் முழுக்க சோகமாகவே இருக்கவேண்டும் என்ற வரையரைக்குள் இயல்பு மீறாத நடிப்பை வெளிப்படுத்தி கவர்கிறார்கள்.

அதேபோல் இரண்டாம் பாதியில் அறிமுகமானாலும் அதன்பின் இறுதிகாட்சி வரை அஜித்துடன் போட்டி போட்டு நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நெறியாளர் ரங்கராஜ் பாண்டே நடித்திருக்கிறார். முதல் படம் என்ற பிம்பமே இல்லாமல் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஒருகட்டத்தில் அதுவே கொஞ்சம் எல்லை மீறுவதுபோலவும் தோன்றுகிறது.

வெகுசில படங்கள்தான் எதிர்ப்பாளர்களேயின்றி எல்லோராலும் ஏற்றுகொள்ளப்படும். அப்படி ஒட்டுமொத்த திரை ரசிகர்களாலும் பெரிதும் கொண்டாடி தீர்க்கப்பட்ட ஒரு படம் பிங்க். அதன் ஜீவனை கொஞ்சமும் சிதைக்காமல் தமிழாக்கம் செய்த விதத்திலேயே இயக்குநர் ஹெச். வினோத் பாதி வெற்றியை பெற்றுவிட்டார். இதில் அஜித் ரசிகர்களையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற கூடுதல் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்த விதத்தில் முழு வெற்றியையும் ருசித்துவிட்டார்.

மொத்தத்தில், பெண் உரிமை குறித்த இன்றைய காலக்கட்டத்துக்கு தேவையான மிக முக்கியமான வாதத்தை ஒரு உச்ச நட்சத்திரத்தின் வாயிலாக உரக்க பேசியதில் உயர்ந்து நிற்கிறது இந்த ’நேர்கொண்ட பார்வை’.

செய்தியாளர் : ராகேஷ் பிரபாகர்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பிக் பாஸ் வீட்டிலிருந்து சரவணன் எப்படி வெளியே அழைத்து செல்லப்பட்டார் தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் சரவணன் திடீரென்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு பெண்களை பற்றிய சரவணன் தெரிவித்த கருத்தே காரணம் என்று சொல்லப்பட்டது. வெளியேறும் போது கன்ஃபெஷன் ரூமின் மற்றொரு கதவு வழியாக அழைத்து செல்லப்பட்டார். 
 

அப்போது சரவணனின் கண்களை கறுப்புத் துணியால் கட்டி, அழைத்து சென்றனர் நிகழ்ச்சி குழுவினர். இந்த விஷயங்கள் நேற்றைய எபிசோடில் காண்பிக்கப்பட்டன. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் பெரும் அதிர்த்திச்சி அடைந்தனர். அவரை குற்றவாளி போல் கண்களை கருப்பு துணி கட்டி அழைத்து செல்ல காரணம் என்ன என்று சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை கிளம்பியது. இது பற்றி விசாரித்த போது, பிக்பாஸ் வீட்டின் கட்டமைப்பு, சுற்றியுள்ள நிகழ்ச்சி தயாரிப்பு, எடிட்டிங் உள்ளிட்ட அறைகள் ஆகியவற்றை பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே அவரை கண்ணை கட்டி அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. வரும் சனிக்கிழமை சரவணன் வெளியேற்றப்பட்ட முழு காரணம் தெரியும் என்று கூறிவருகின்றனர்.[Image: 735.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சென்சாரில் ஏகப்பட்ட வெட்டு...! ரிவைசிங் கமிட்டிக்கு செல்லும் 'பாரீஸ் பாரீஸ்'!

ஹிந்தியில் வெற்றி பெற்ற 'குயின்' திரைப்படத்தை, மீடியண்ட் பிலிம் சார்பாக தயாரிப்பாளர் மனுகுமரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார்.
 
[Image: 1N6A4045-%281%29.jpg]
 
தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் 'பாரீஸ் பாரீஸ்' எனவும், தெலுங்கில் தமன்னா நடிப்பில் 'தட்ஸ் மகாலட்சுமி' எனவும், கன்னடத்தில் பருல் யாதவ் நடிப்பில் 'பட்டர்ஃபிளை' எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் 'ஜாம் ஜாம்' எனவும் பெயரிடப்பட்டுள்ளது. கன்னடத்திலும், மலையாளத்திலும் சென்சார் கிடைத்த நிலையில் தமிழ் ரீமேக்கான 'பாரீஸ் பாரீஸ்' திரைப்படத்திற்கு சென்சார் போர்டு பல ஆடியோ, வீடியோ வெட்டுகள் மற்றும் காட்சி இருட்டடிப்புகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறது. இந்நிலையில் இதனை மறுபரிசீலனை செய்வதற்கு ஏதுவாக ரிவைசிங் கமிட்டியின் பார்வைக்கு எடுத்து செல்வது என தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் விரைவில் இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
கூடா நட்பினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன..? தொரட்டி விமர்சனம் 

1980களில் ஊர்ஊராக சென்று ஆட்டுக்கிடை போட்டு விளைநிலங்களுக்கு ஆட்டு புழுக்கை உரம் கொடுக்க கடைபோடும் கீதாரி குடும்பங்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது ‘தொரட்டி’. 
 
[Image: thorati-movie-stills-starring-shaman-mit...s-0001.jpg]
 
நாயகன் ஷமன் மித்ரு குடும்பத்தோடு வெளி ஊரில் உள்ள தூரத்து உறவினர் உதவியுடன் ஆட்டுக்கிடை போடுகிறார். அங்கு அவருக்கு மூன்று திருடர்களுடன் நட்பு கிடைக்கிறது. அவர்கள் ஷமனிடம் உள்ள பணத்தில் கும்மாளம் அடிக்கின்றனர். இந்த கூடா நட்பினால் குடி பழக்கத்திற்கு ஆளாகும் ஷமன் மித்ருவிற்கு திருமணம் செய்து வைத்தால் திருந்திவிடுவார் என எண்ணி தன் தூரத்து உறவினர் பெண்ணான நாயகி சத்யகலாவை ஷமனுக்கு திருமணம் செய்து வைக்கிறது அவரது குடும்பம். இதற்கிடையே அந்த மூன்று திருடர்களும் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டு தப்பித்து செல்லும்போது நாயகி சத்யகலா அவர்களை ஊர் மக்களிடம் காட்டி கொடுத்துவிடுகிறார். இதையடுத்து அவர்கள் போலீசால் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை அனுபவிக்கிறார்கள். பின்னர் வெளியே வரும் அவர்கள் நாயகி சத்யகலாவை பழிவாங்க எண்ணி அவரை கொலைசெய்ய முயற்சிக்கும்போது சத்யகலா இவர்களது நண்பன் ஷமனுடைய மனைவி என்று தெரியவருகிறது. இதையடுத்து நட்பா, வஞ்சகமா..? என குழப்பத்தில் இருக்கும் இவர்கள் சத்யகலாவை என்ன செய்தார்கள், இவர்கள் நட்பால் ஷமனுக்கு ஏற்பட்ட நிலைமை என்ன..? என்பதே 'தொரட்டி' படத்தின் கதை.
 
[Image: 876641.jpg]
 
கீதாரி குடும்பத்தை சேர்ந்த ஆடு மேய்ப்பவர்களின் கண்ணீர் வாழ்க்கையை மிக இயல்பாக பதிவு செய்துள்ளது இந்த தொரட்டி. இவர்களுக்குள் கொலை, கொள்ளை செய்யத்துணியும் ஒரு கருப்பு ஆட்டு கூட்டம் நுழைவதால் எளிய மனிதர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை தெளிவாகவும், உணர்வுபூரவமாகவும் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் மாரிமுத்து. தென்தமிழகத்தின் வழக்காடலை சிறப்பாக வசனங்கள் மூலம் கடத்தி ரசிக்கவைத்துள்ளார். முதல்பாதி முழுவதும் கீதாரிகளின் வாழ்வியல், குடும்ப சூழல், நட்பு, காதல், திருமணம் முறை என கலகலப்பாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் செல்லும் படம் பிற்பகுதியில் துரோகம், கொலை, கொள்ளை என க்ளிஷேவான காட்சிகள் மூலம் நகர்ந்துள்ளது. இருந்தும் மண்சாந்த விஷயங்கள் படத்தோடு ஒன்றவைத்து அயர்ச்சியை தவிர்க்க முயற்சி செய்துள்ளது.
 
[Image: A045_C042_0731BW_002.R3D.13_02_51_12.jpg]
 
நாயகன் ஷமன் மித்ரு பாத்திரம் அறிந்து நடித்துள்ளார். தன் நடிப்பு, உடல் மொழி மூலம் கீதாரிகளை அப்படியே கண்முன் நிறுத்த முயற்சி செய்துள்ளார். படத்தின் மிக பெரிய பலமாக நாயகி சத்யகலாவின் நடிப்பு அமைந்துள்ளது. துடுக்கான பெண்ணாக வரும் அவர் காதல், ஊடல், கூடல் என காட்சிக்கு காட்சி மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பில் பாஸ் மார்க் வாங்கியுள்ளார். இவரே படத்திற்கு இன்னொரு நாயகனாக இருந்து படத்தை தாங்கி பிடித்துள்ளார். ஷமனின் தந்தையாக வரும் அழகு படத்திற்கு ஜீவனை கூட்டியுள்ளார். ஷமனின் நண்பர்களாக வரும் திருடர்கள் கதாபாத்திரம் கவனம் ஈர்த்துள்ளனர். 
 
வேத் ஷங்கரின் இசையில் 'சவுகாரம்' பாடல் மனதை வருடியுள்ளது. ஜித்தன் ரோஷன் பின்னணி இசை படத்தோடு ஒன்றவைத்துள்ளது. குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவி கட்சிகளுக்கு உயிர் சேர்த்துள்ளது. 
 
தொரட்டி - ஆடு மேய்ப்பவர்களின் எதார்த்த வாழ்வு.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
நோ, நோ' என்று சொல்லிவிட்டு நுழைந்த கஸ்தூரி

[Image: NTLRG_20190808125214571069.jpg]

பிக்பாஸ் 3 வீட்டிலிருந்து சரவணன் சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அதனால் குறைந்து போன ஒரு போட்டியாளருக்குப் பதிலாக வைல்டு கார்டு மூலம் யாராவது நுழைவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பே அதில் நடிகை கஸ்தூரி கலந்து கொள்வார் என்று தகவல் பரவியது. ஆரம்பமான பின்னும் அடிக்கடி அந்த தகவல்கள் செய்தியாகவும் வெளிவந்தன.

இல்லை, இல்லை என்று சொன்னாலும் மீண்டும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப் போகிறேன் என செய்திகள் வருகிறது என்று கஸ்தூரியும் குறைபட்டுக் கொண்டார். இந்நிலையில் இன்று(ஆக.,8) காலை ஒளிபரப்பான புரோமோவில் கஸ்தூரி வீட்டில் திடீரென நுழையும் காட்சி ஒளிபரப்பானது. அடுத்து சற்று முன் ஒளிபரப்பான புரோமோவிலும் கஸ்தூரி தான் இடம் பெற்றுள்ளார்.

அதிகாரப்பூர்வமாக கஸ்தூரி போட்டியாளராக நுழைந்துள்ளார் என்று எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் புரோமோக்களை மட்டும் வெளியிட்டிக் கொண்டிருக்கிறார்கள். 'கருத்து' கஸ்தூரி என அழைக்கப்படும் கஸ்தூரி நுழைவால் பிக்பாஸ் வீடு களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
எம்ஜிஆராக அரவிந்த்சாமி

[Image: NTLRG_20190808150722892997.jpg]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, ‛தி அயர்ன் லேடி' என்ற பெயரில் பிரியதர்ஷினி படமாக இயக்கி வருகிறார். ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். 

அதேபோல் இயக்குனர் விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கையை கங்கனா ரணாவத் கொண்டு ‛தலைவி' என்ற பெயரில் படம் இயக்குகிறார். இப்படத்திற்காக ஜெயலலிதா பற்றிய அனைத்து விசயங்களையும் சேகரித்து அதற்கு ஏற்றபடி நடிக்க தயாராகி வருகிறார் கங்கனா.

இந்நிலையில், இந்த படத்தில் எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இடம் பெற போகிறது. இதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பரிசீலனை செய்து வந்த ஏ.எல்.விஜய், இப்போது அரவிந்த் சாமியிடம் பேசி வருகிறார். அவர் சம்மதம் சொல்லும் பட்சத்தில் இப்படத்தில் இணைவார் என தெரிகிற
first 5 lakhs viewed thread tamil
Like Reply
மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு நீக்கம்...!

[Image: simbu21.png]

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு நீக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிகழ்ந்ததே தவிர படம் தொடங்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு "நடிக்க இருந்த" மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை என குறிப்பிட்டுள்ளார். 
சிம்புவின் அன்பும், நட்பும் தொடரும் என கூறியுள்ள அவர், இதுவரை தம் மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றும் தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் தமது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு விரைவில் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை...
“வணக்கம்... நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. 
மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி... துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. 
அதனால் சிம்பு "நடிக்க இருந்த" மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 
வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!
first 5 lakhs viewed thread tamil
Like Reply
என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா... கேப்மாரியும் 50 மும்பை அழகிகளும்

சென்னை:கேப்மாரி என்கிற சி.எம். படத்திற்காக நாயகன் ஜெய் உடன் 50 மும்பை அழகிகள் ஆடும் பாடல் காட்சி சென்னை எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது.
இளம் நாயகன் ஜெய்யும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் இணைப்பில் உருவாகும் படம் தான் கேப்மாரி என்கிற சி.எம். இது ஜெய்யிற்கு 25ஆவது படமாகும். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 70ஆவது மற்றும் கடைசி படமாகும். இந்தப்படத்துடன் இவர் ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.



அதனால் இந்த படத்தை இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில், காதல், காமெடி, கவர்ச்சி, இளமைக் குறும்புகளுடன், அனைத்து அம்சங்களையும் கொண்டதாக மொத்தத்தில் இன்னொரு செந்தூரப் பாண்டி படம் போல் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
நடிகர் விஜய்க்கு செந்தூரப் பாண்டி எப்படி திருப்பு முனையாக அமைந்ததோ அதே போல் ஜெய்யிற்கும் கேப்மாரி என்கிற சி.எம் படம் நிச்சயமாக திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான படங்கள் பெரும்பாலும் அரசியல் வாடை அதிகமாக இருக்கும். அதே போல் இந்தப் படமும் இருக்கக்கூடும். இந்தப் படத்தின் கதையானது இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள், எப்படி இருக்கக்கூடாது, எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இருக்கும் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கனவே கூறி இருக்கிறார். [Image: capmaari-engira-cm-movie-photos-1565169080.jpg]

கேப்மாரி என்கிற சி.எம் படத்தில், நாயகன் ஜெய் உடன் இந்தப் படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சி சென்னை எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. இதற்காக விழிகளை விரிய வைக்கும் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.



என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா

என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா

என்ற ஹரிசரண் பாடிய பாடலை 50க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர் ஃபுல்லாக படமாக்கப்பட்டது.



இந்தப் பாடலுக்காக நாயகன் ஜெய் அதிக சிரத்தை எடுத்து சிறப்பாக நடனமாடி உள்ளார். தெறி, பேட்ட ஆகிய படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீஃப் மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

படத்தில் இடம் பெற்றள்ள ஒவ்வொரு காட்சியும் இன்றைய இளைஞர்களை விசிலடித்து துள்ளாட்டம் போட வைக்கும் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார். கேப்மாரி என்கிற சி.எம் படம் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பின்பு இவர் இயக்கும் படமாகும். 2015ஆம் ஆண்டு டூரிங் டாக்கிஸ் என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்திருந்தார்

first 5 lakhs viewed thread tamil
Like Reply
காதலிப்பதாக ஏமாற்றிய கவினுக்கு ஸ்பெஷல் தண்டனை கொடுத்த கஸ்தூரி! என்னன்னு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பெண் போட்டியாளர்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய கவினுக்கு வைல்டு கார்டு என்ட்ரியான கஸ்தூரி ஸ்பெஷல் தண்டனை ஒன்றை கொடுத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எதிர்பாராத விதமாக சரவணனை பிக்பாஸ் வெளியேற்றிவிட்டார். அதே நேரத்தில் இந்த வாரம் எவிக்ஷனும் உள்ளது.
இதனால் பிக்பாஸ் வீட்டின் ஸ்ட்ரென்த்தை அதிகரிக்க நேற்று நடிகை கஸ்தூரியை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பினார் பிக்பாஸ். உள்ளே வந்த கஸ்தூரி 45 நாட்கள் நிகழ்ச்சியை பார்த்து யார் யார் எப்படி என்ற கணக்கோடு வந்திருப்பதால் வந்த வேகத்திற்கு எல்லோரையும் இக்கு வைத்து பேசி மிரள விட்டார்.


[Image: kasturi-22-1565292768.jpg]



ஆனா வேற மாதிரி
இதைத்தொடர்ந்து இந்த வாரம் ஜெயில் தண்டனை இல்லை என்பதை கஸ்தூரி மூலமாக அறிவித்தார் பிக்பாஸ். ஆனால் அதற்கு பதிலாக கஸ்தூரி, அவர் விரும்புபவருக்கு தண்டனை கொடுக்கலாம் அதற்கான ஸ்பெஷல் பவர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வாயாலேயே அறிவிக்க செய்தார்.
[Image: kasturi-23-1565292821.jpg]
 
[color][font]
சாக்ஷிக்கு புரியும்
இதைத்தொடர்ந்து கஸ்தூரி ஹவுஸ்மேட்களில் சிலருக்கு தண்டனை வழங்கினார். அதன்படி சாக்ஷியை தலைகீழாக நிற்குமாறு தண்டனை கொடுத்த அவர், இதற்கான அர்த்தம் சாக்ஷிக்கு புரியும் என்றார் சூசகமாக.
[Image: bigg-boss23-1565293093.jpg][/font][/color]
 
[color][font]
குடை பிடித்த மதுமிதா
இதைத்தொடர்ந்து தர்ஷனுக்கு நிழலாக இருக்க வேண்டும் என்றும் அவருக்கு குடை பிடிக்க வேண்டும் என்றும் மதுமிதாவுக்கு பனிஷ்மென்ட் கொடுத்தார் கஸ்தூரி. இந்த பனீஷ்மென்ட்டை இருவருமே விளையாட்டுத்தனமாகவே எடுத்துக்கொண்டனர். குறிப்பாக மதுமிதா, தர்ஷனுக்காக எக்கி எக்கி குடை பிடித்து தனக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்தார்.
[Image: kasturi-241-1565293101.jpg][/font][/color]
 
[color][font]
வித்தியாசமான தண்டனை
இதேபோல் ஷெரினுக்கு சொல்லும் இடத்தில் தோப்புக்கரணம் போட வேண்டும் என்று தண்டனை கொடுத்தார். அடுத்தபடியாக கவினுக்கு கொடுத்த தண்டனை சற்று வித்தியாசமானது.
[Image: kasturi-22-1565292768.jpg][/font][/color]
 
[color][font]

மூக்கால் எழுதவைத்து
அதாவது கவினை மூக்கால் மன்னித்துவிடு என எழுதும்படி பனீஷ்மென்ட் கொடுத்தார். இந்த தண்டனை கவினுக்கு தான் பொறுந்தும் என்று கூறி அந்த தண்டனையை அவருக்கு வழங்கினார் கஸ்தூரி. கவினும் ஏன் எதற்கு என கேட்காமல் அதனை செய்து முடித்தார்.
[Image: sakshi-981-1565293284.jpg][/font][/color]
 
[color][font]
சாக்ஷி பெயர் நாமினேட்
கவின் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களின் உணர்வுகளோடு விளையாடினார். இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் கவினுக்கும் சாக்ஷிக்கும் இடையே பிரேக்கப் ஆன பிறகு, கவின் முதலில் சாக்ஷி பெயரை நாமினேட் செய்தார்.
[/font][/color]
Quote:[Image: hyMuq_ri_normal.jpg]
[/url]Kasturi Shankar

@KasthuriShankar





இருக்கவரைக்கும் ஜாலி, இல்லைனா வெளியே போடி என்பது ஆணின் குணம்
ஏமாத்தினவனை கூட விட்டுக்கொடுக்காதது பெண்கள் மனம் #BiggBossTamil #nomination #kavin #sakshi #losliya

442
முற்பகல் 1:42 - 23 ஜூலை, 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
[color][font]

இதைப் பற்றி 132 பேர் பேசுகிறார்கள்

[url=https://twitter.com/KasthuriShankar/status/1153397434023927808]





ஆணின் குணம்
அதனை கண்டித்த கஸ்தூரி, இருக்கவரைக்கும் ஜாலி, இல்லைனா வெளியே போடி என்பது ஆணின் குணம். ஏமாத்தினவனை கூட விட்டுக்கொடுக்காதது பெண்கள் மனம் என பதிவிட்டிருந்தார்.

[Image: kasturi-23-1565292821.jpg][/font][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: 1565266641-0473.jpg?fit=740%2C417&ssl=1]
நயன்தாரா, டாப்ஸிக்கு போட்டியாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்! மக்கள் விரும்பத்தக்கது தலைப்பு இதோ!
BY ILAYARAJA ON AUG 8, 2019


நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு திரைப்படத்தின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். 
விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ். குறிப்பாக ‘நடிகையர் திலகம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் .
ஆனால், கீர்த்தி தரமான கதாபாத்திரங்ககளை மட்டுமே தேர்வு செய்து வருகிறாராம். அதிலும் கதாநாயகிக்கு முக்கியவத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடிக்கவிருப்பதாகவும் முடிவெடுத்துள்ளாராம். 
அந்தவகையில் தற்போது தெலுங்கில் அறிமுக இயக்குனர் நரேந்திரா நாத் இயக்கும் புது படத்தில் நடிக்கவுள்ளராம். கதாநாயகன்யினை மையப்படுத்திய உருவாகவுள்ள இப்படத்திற்கு “மிஸ் இந்தியா” என்ற தலைப்பு வைத்துள்ளனர். எனவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இப்படத்தின் மூலம் நயன்தாரா, டாப்ஸி போன்ற நடிகைகளை போன்றே கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் கீர்த்தி நடிக்கவிருப்பதால் அவர்களுக்கு போட்டியாக வெற்றி கொடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போ
first 5 lakhs viewed thread tamil
Like Reply
'திருமணம் ஆனவருடன் தவறான உறவு வைத்திருந்தேன்' ஆண்ட்ரியா ஓபன் டாக்!

பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. சிறந்த பாடகியான ஆண்ட்ரியா கடைசியாக விஸ்வரூபம் 2, வட சென்னை முதலிய படங்களில் நடித்தார். அதற்கு பின் எந்த படத்திலும் அவர் கமிட்டாகமால் இருந்தார். கடந்த சில மாதங்களாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததால் சில மாதங்களாக நடிப்பில் இருந்து விலகி இருந்தார். ஆனால் மாதக்கணக்காய் ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் அளவுக்கு அவரை தாக்கிய சோகம் எது என்பது பற்றி தெரியாமல் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.
 
[Image: kk_13.jpg]

இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார் ஆண்ட்ரியா. அப்போது, முறிந்த சிறகுகள் என்ற தலைப்பில் சோகமான கவிதைகளை வாசித்துள்ளார். சோகத்தை பிரதானப்படுத்துவதை போன்று அந்த கவிதை அமைந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் அதற்கான காரணத்தை கேட்டுள்ளனர். இதைதொடர்ந்து பேசிய ஆண்ட்ரியா, " நான் திருமணம் ஆன ஒருவரோடு உடல் ரீதியாக தொடர்பில் இருந்தேன். ஆனால் அவர் என்னை மனதளவில் காயப்படுத்தினார். அதில் இருந்து மீள முடியாமல் இருந்த போதுதான் இந்த கவிதையை எழுதினேன்" என்றார். ஆயுர்வேத சிகிச்சைக்கான காரணமும் இதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ரஜினிகாந்த் செய்த உதவி! விஜயலட்சுமி வெளியிட்ட 2வது வீடியோ

நடிகை விஜயலட்சுமி, தான் பண கஷ்டத்தில் இருப்பதாகவும் ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில் இருப்பதாகவும் பேசி, ரஜினிகாந்த் எனக்கு உதவ வேண்டும் என்றும் கூறி வீடியோ வெளியிட்டார்.
 
[Image: vijayalakshmi_0.jpg]
 
தற்போது அவர் வெளியிட்டுள்ள 2வது வீடியோவில்,   “வீடியோவில் எனது கஷ்டங்களை பகிர்ந்து ரஜினியிடம் ஒரு முறை பேச வேண்டும் என்று கூறினேன். இதை பார்த்து ரஜினிகாந்த் என்னை போனில் தொடர்பு கொண்டார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அன்போடு எனது பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுத்ததுடன், நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார்.   அவர் சிறந்த மனிதர். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவருடைய எண்ணத்தை மதிக்கிறேன். அவர் மீது நான் கொண்ட மரியாதை நூறு மடங்கு அதிகரித்துவிட்டது. இப்படி ஒரு நல்ல மனிதர்தான் நமக்கு தலைவராக இருக்க வேண்டும். என்னுடைய கஷ்டங்களை கேட்டு உதவி செய்தார்.
ரஜினிகாந்த் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும். ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய எளிமை அவரிடம் அதிகமாகவே இருக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.
 
first 5 lakhs viewed thread tamil
Like Reply
தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்! வேறு யார் யார் என்னென்ன விருதுகள்...

66வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார். 
 
[Image: keerthy-suresh.jpg]
 

 
வருடா வருடம் இந்த விருது அறிவிப்பு ஏப்ரல் மாதம் நடைபெற்று மே மாதம் 3ஆம் தேதி வழங்கப்படும் ஆனால், இந்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெற்றதால் இது தள்ளிவைக்கப்பட்டது. விரைவில் விருது வழங்கும் நாள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சிறந்த மாநில படங்கள்...
தமிழ்  - பாரம்
ஹிந்தி- அந்தாதுன்
தெலுங்கு- மஹாநடி
மலையாளம் - சுதானி ஃப்ரம் நைஜிரீயா
 
 
சிறந்த படம் - ஹெல்லாரோ(குஜராத்தி)
சிறந்த பாப்புலர் படம்- பதாய் ஹோ (ஹிந்தி)
சிறந்த இயக்குனர்- ஆதித்ய தார் (உரி)
சிறந்த நடிகர்- ஆயுஷ்மான் குர்ரானா (அந்தாதுன்) மற்றும் விக்கி கவுஷல் (உரி)
சிறந்த நடிகை-  கீர்த்தி சுரேஷ் (மகாநடி)
சிறந்த ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் - கேஜிஎஃப்  (கன்னட படம்) மற்றும் ஆவ் (தெலுங்கு படம்)
சிறந்த சண்டை காட்சி- கேஜிஎஃப்
சிறந்த பாடல் வரிகள் - கன்னட படம் நத்திசாராமி
சிறந்த சமூக அக்கறை கொண்ட படம்- பேட்மேன்
சிறந்த இசையமைப்பாளர் - சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத் படம் )
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ரூ. 50 கோடி வீட்டை விற்று ரூ. 140 கோடி வீட்டை வாங்கிய பிரபல நடிகை...

டந்த 2000ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் பெற்றார். இதனையடுத்து பாலிவிட்டில் நடிகையாக வலம் வந்தவர், படிபடியாக உயர்ந்து ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். 
 

இதன் பின் பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை கடந்த வருடம் திருமணம் செய்து லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஆடம்பர வீட்டில் குடியேறினார். இந்த வீடு நிக் ஜோனசுக்கு சொதமான வீடு, இதன் விலை 50 கோடி ஆகும். மிகவும் பிரம்மாண்ட வசதிகளை கொண்ட இந்த வீட்டை தற்போது நிக் விற்றுவிட்டார்.
 
அதே பெவர்லி ஹில்ஸ் பகுதியில் இன்னொரு புதிய வீட்டை விலைக்கு வாங்க முடிவு செய்து இருப்பதாக ஹாலிவுட் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.
 
புதிய வீட்டின் மதிப்பு ரூ.140 கோடி என்று கூறப்படுகிறது. தனது சகோதரர்களுடன் சேர்ந்து நிக் ஜோனஸ் ஹேப்பினஸ் பிகின் டூர் நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு உள்ளார். இந்த இசை சுற்றுலாவுக்காக நிக் ஜோனஸ் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டி உள்ளது. 
[Image: priyanka%20chopra%20house.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
"இதுக்காகவா நான் பிக்பாஸிற்கு போனேன்?" சரவணன் அளித்த முதல் பேட்டி!


பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்ற சரவணன், பேருந்தில் பெண்களை உரசியதாக கூறியதால் அந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். சரவணன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து  வெளியேறியதால் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. 




 
இந்த நிலையில் சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் முதன் முறையாக பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் பிக்பாஸில் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு பணம் பங்குபெற்று வரலாம் அதன் மூலம் புது வாழ்க்கையை துவங்கலாம் என எண்ணியிருந்தேன் . ஆனால், எனக்கு இப்படியொரு அவப்பெயரையும், கலங்கத்தையும் ஏற்படுத்தி என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள். 
 
நான் கல்லூரி படித்த காலத்தில் பேருந்தில் பெண்ககளிடம் விளையாட்டாக  தவறாக நடந்து கொண்டது உண்மை தான். ஆனால் நான் பிக்பாஸ் வீட்டிற்கு அதற்காக செல்லவில்லை. அங்கிருக்கும் பெண்களிடம் கண்ணியமாக தான் நடந்துகொண்டேன். அப்படியிருந்தும் என்னை இப்படி அவமானப்படுத்தி வெளியேற்றிவிட்டார்கள். 
 
இது முன்னரே தெரிந்தால் நான் பிக்பாஸிற்கு சென்றிருக்கவே மாட்டேன். எனக்கு ஒரே ஒரு மன கஷ்டம் தான், நான் நான் கூறிய கருத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் இவ்வாறு நடந்து கொண்டது என்னக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அதனால் தான் வீட்டிலிருந்த மற்ற போட்டியாளர்களிடம் கூட சொல்லாமல் வெளியேறி விட்டேன். என மிகுந்த வேதனையோடு கூறியுள்ளார்
[Image: 1565409205-9803.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
விஜய் சேதுபதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக் கான்..! – திகைத்து போன மக்கள் செல்வன்..!


விஜய் சேதுபதி என் வாழ்க்கையில் நான் பார்த்த நபர்களிலேயே மிக அற்புதமான மனிதர், அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெருமையாக கூறியுள்ளார். விஜய் சேதுபதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பாலிவுட் பாட்சா ஷாருக்கான்.
[Image: vijay-sethupathi-sharuk.jpg]
இந்திய மொழித் திரைப்படங்கள் பங்குபெறும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா ஆகஸ்டு 8ஆம் தேதி தொடங்கி வரும் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதும் 22 மொழிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பங்கு பெற்றன.
இதில் சிறந்த படமாக விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படமும், சிறந்த நடிகருக்கான விருது, இந்தப் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது, இந்தப் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும் கிடைத்துள்ளது.
இதையடுத்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதியை பாராட்டிப் பேசிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான, விஜய் சேதுபதியை ஒரேயடியாக புகழ்ந்து தள்ளிவிட்டார். அதோடு விஜய் சேதுபதியிடம் பல கேள்விகள் கேட்டு சந்தோஷப்பட்டார்.
அதோடு, விஜய் சேதுபதி என் வழ்க்கையில் நான் பார்த்த மிக அற்புதமான மனிதர் (the wonderful actor ever seen in my life) என்று ஷாருக் கான் புகழாரம் சூட்டியது தமிழ் சினிமாவுக்கும், விஜய் சேதுபதியின் நல்ல நடிப்புக்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. ஷாருக்கான் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது, அடுத்த 10 ஆண்டுகளில் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வருவார் என்றே தமிழ் சினிமா பிரபலங்கள் கருதுகின்றனர்.
ஷாருக் கான், அர்ஜுன் கபூர், தபு, விஜய் சேதுபதி, காயத்ரி ஷங்கர் இவர்கள் எல்லோரும் ஒன்றாக நின்று ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். விஜய் சேதுபதியின் நடிப்பையும், அவரது எளிமையும் என்னை மிகவும் கவர்ந்தது என்று ஷாருக் கான் சொன்னதாகவும், இப்படி பட்ட ஒரு கலைஞனிடம் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்று சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹரும் மேடையில் பேசும் போது, இந்திய திரைப்படமான சூப்பர் டீலக்ஸ், அந்தாதுன் மற்றும் கல்லி பாய், என இந்த மூன்று திரைப்படங்களின் கதைக் கருவை கூறுவதற்கு ஒரு தைரியத்தையும் மாற்று முகத்தையும் பிரதிபலிப்பதாகக் கூறினார்.
இந்திய சினிமாவைப் பார்க்கும் முறையையும், உலகம் முழுவதும் எவ்வாறு பயணித்தன என்பதையும் கூறுகிறது. இவை அனைத்தும் புலம்பெயர்ந்தோருக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள சர்வதேச பார்வையாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளன, இது இந்திய சினிமாவை மிகவும் பெருமைப்படுத்துகிறது, என்று கூறினார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
[Image: z1551-750x506.jpg]
Kolaiyuthir Kaalam Review: கொலையுதிர் காலம் விமர்சனம் - முடியல!
Kolaiyuthir Kaalam Review: தன் பங்களிப்பில் எந்தவித குறையும் வைக்காமல் நயன் மிளிர்கிறார். காது கேட்காத ரோலில் ஏற்கனவே அவர் நானும் ரவுடி தான் படத்தில்
சிறு வயது முதல் ஆசிரமத்தில் வளர்ந்த நயன்தாராவால் பேசவும், கேட்கவும் முடியாது. ஆனால், அபாரமாக ஓவியம் வரையக் கூடியவராக நயன் இருக்கிறார். இந்தச் சூழலில், அந்த ஆசிரமத்தின் உரிமையாளரை, அதற்கு முன் ஒருமுறை கூட பார்த்திராத நயன், அச்சு அசலாக வரைந்து வைத்திருக்கிறார். இதனால், லண்டனில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஆசிரம உரிமையாளர், நயன்தாராவை வளர்ப்பு மகளாக தத்தெடுத்து கொள்கிறார். ஆசிரமத்தின் உரிமையாளர் உயிரிழக்கும் நிலையில், லண்டனில் இருக்கும் சொத்துக்களை வளர்ப்பு மகள் நயன்தாராவிற்கு எழுதி வைத்துவிடுகிறார்.
லண்டனுக்கு செல்லும் நயன்தாராவிடம், ஆசிரம உரிமையாளரின் உறவினர்களான பூமிகா மற்றும் அவரது கணவர், இது எங்களுக்கு சொந்தமான சொத்து என்று முறையிட்டு சொத்தை அபகரிக்க நினைக்கிறார்கள். இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் நயன்தாராவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.
இறுதியில் அந்த மர்ம நபர் யார்? எதற்காக நயன்தாராவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்? பூமிகா மற்றும் அவரது கணவரின் எண்ணம் நிறைவேறியதா? இதிலிருந்து நயன்தாரா எப்படி மீண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
மேலும் படிக்க – நயன்தாரா அடித்த ஹாட்ரிக்!!
தன் பங்களிப்பில் எந்தவித குறையும் வைக்காமல் நயன் மிளிர்கிறார். காது கேட்காத ரோலில் ஏற்கனவே அவர் நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததை ரசிகர்கள் பார்த்திருந்தாலும், இப்படத்திலும் அவரது நடிப்பை ரசிக்க முடிகிறது. பூமிகா வில்லத்தனம் செய்திருப்பது நாம் எதிர்பார்க்காத ஒன்று. சமத்துப் பெண் முக அமைப்பு கொண்ட பூமிகா, இதில் ரஃப்னஸ் காட்டி ரசிகர்களை மிரட்டுகிறார்.
ஆனால், படத்தின் மாபெரும் மைன்ஸ் ஸ்க்ரீன் பிளே. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. த்ரில்லர் படம் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த த்ரில் எங்கே இருக்கிறது என சீட்டுக்கு அடியில் ரசிகர்கள் தேடியதை நம்மால் பார்க்க முடிந்தது.
திரில்லர் படங்களில் பெரிதாக லாஜிக் பார்க்கத் தேவையில்லை தான். அதற்காக இப்படியா!!?
ஒட்டுமொத்தத்தில், கோலமாவு கோகிலா ரேஞ்சுக்கு நயன் படத்தை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply
பேரன்பு, பரியேறும் பெருமாள் தரமான படங்கள் இல்லையா? - வசந்த பாலன் கோபம்

[Image: _108283261_b8e6fd92-9801-4718-963b-12f232ee5010.jpg]
தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வசந்த பாலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது
கடந்த 66வது திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்த கன்னடப் படமான கே.ஜி.எஃப் படத்திற்கு சிறந்த சண்டை திரைப்படத்திற்கான தேசிய விருதும், மகாநதி (தெலுங்கு) படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.
[Image: _108283263_8d02cd0c-9d61-49bc-813f-1b04226c911e.jpg]
விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான உரி திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் என்பவருக்கு சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தமிழ் திரைப்படமாக பாரம் படமும், இந்தியில் அந்தாதுன் திரைப்படமும் தேர்ந்தேடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், தேசிய விருது வழங்குவதில் தமிழ் கலைஞர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.
"தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதி"
வசந்த பாலன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், இந்த வருடம் தேசிய விருதுக்கு பேரன்பு, பரியேறும் பெருமாள், வடசென்னை, ராட்சசன், 96 உள்ளிட்ட திரைப்படங்கள் சென்றிருந்தும் ஏன் புறக்கணிக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "பேரன்பு திரைப்படத்தில் மம்முட்டி, சாதனா தன் உயிரை கொடுத்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருந்தனர். யுவனின் இசை மற்றும் தேனி ஈஸ்வரினின் ஒளிப்பதிவில் என்ன குறை கண்டீர்கள் ? பிறகு கேள்விப்பட்ட போதுதான் தெரிந்தது, தமிழில் இருந்து நல்ல நடுவர்கள் யாரும் தேர்வுக் குழுவுக்கு அழைக்கப்படவில்லை," என்று மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் தேர்வுக்குழுவை சாடியிருந்தார்.
[Image: _108283265_11bf308c-79ed-4b47-ba8a-abcc5e5d1a88.jpg]
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய விருது கமிட்டி நடுவராக ஒரு தினத்திற்கு முன்பு தன்னை அழைத்ததாகவும், முப்பது நாட்கள் டெல்லி பணிக்கு ஒரு நாள் முன்பு தகவல் தெரிவிப்பது சரியா என்றும், இது கண்துடைப்பின்றி வேறென்ன? என்றும் வசந்த பாலன் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ் உச்ச நட்சத்திரங்களும், திரை ஆளுமைகளும், தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், இந்நிலை மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்ட மம்மூட்டி
பேரன்பு திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைக்காததால் மம்மூட்டியின் ரசிகர்கள் தேர்வு குழுவின் தலைவர் ராகுல் ரவைலை திட்டித்தீர்த்து மெயில் அனுப்பியுள்ளனர். ரசிகர்களின் இந்த செய்கையை இணையத்தில் மம்மூட்டியிடம் புகார் கூறிய ராகுல், பேரன்பு திரைப்படம் உள்ளூர் தேர்வு குழுவால் நிராகரிக்கப்பட்டதாகவும், தேர்வு குழுவின் முடிவை எதிர்த்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்றும் கடுகடுத்திருந்தார். மம்மூட்டியும், ரசிகர்களின் தொந்தரவுக்காக மன்னிப்பு கேட்பதாக கோரினார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 50 Guest(s)