Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ராசி பலன்
#21
RASI PALAN 2019 IN TAMIL - விருச்சிகம்
2018 முடிந்து 2019 பிறக்கிறது. இந்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமான பலன்கள் பற்றியும் பரிகாரத் தலங்கள் பற்றியும் விரிவாக விவரிக்கிறார் ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரன்.

  • [Image: newyear-top-banner2.jpg]

    [Image: newyear-top-banner2.jpg]


[Image: 8.png]
தன்மானத்துடன் வாழ விரும்புபவர்களே!
உங்கள் ராசிக்கு 12-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், சின்னச் சின்ன கனவுகள் நிறைவேறும். கடன் பிரச்னைகளை இதமாகப் பேசி சமாளிப்பீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவி செய்வீர்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். விலை உயர்ந்த நவீன சாதனங்கள் வாங்குவீர்கள்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.2.19 வரை ராசிக்கு 3-ல் கேது இருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராசிக்கு 9-ல் ராகு இருப்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தையாருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். அடிக்கடி வீண் டென்ஷன் ஏற்படும். தந்தையுடன் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். 13.2.19 முதல் கேது 2-லும், ராகு 8-லும் இருப்பதால், மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. கண்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
வருடம் முழுவதும் ஏழரைச் சனியில் பாதச் சனி நடப்பதால், பல் வலி, காது வலி ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளை எதற்கும் வற்புறுத்தவேண்டாம். கூடுமானவரை அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வெளியிடங்களில் முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம். பணப்பற்றாக்குறை ஏற்படும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.
ராசிநாதன் செவ்வாய் 5-ல் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. குழந்தையின் வளர்ச்சியை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வது நல்லது. சகோதரர்களால் அலைச்சலும் செலவுகளும் இருக்கும். மற்றவர்களை விமர்சித்துப் பேசுவதைத் தவிர்க்கவும். பூர்வீக சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்க முயற்சி செய்யவும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்ளுங்கள். அவர்கள் விரும்பும் கல்விப் பிரிவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசியில் அமர்ந்து ஜன்ம குருவாக இருப்பதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். மஞ்சள்காமாலை, தலைச்சுற்றல், காய்ச்சல் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அடிக்கடி சச்சரவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கையில் பிடிப்பின்மை ஏற்பட்டு நீங்கும். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமாகவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரப்படியும் குரு உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால், பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேர்வீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஒதுங்கி இருந்த உறவினர்களும் நண்பர்களும் வலிய வந்து உறவாடுவார்கள். புது வீடு கட்டி கிரகபிரவேசம் செய்வீர்கள்.
Like Reply
#23
வியாபாரிகளே! வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். வேலையாள்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களைக் கவர புதுப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களே! உங்கள் நிர்வாகத் திறமை கூடும். பாரபட்சமாக நடந்துகொண்ட அதிகாரி உங்களைப் பாராட்டும் நிலை ஏற்படும். கூடுதல் சலுகைகள் கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட்டாலும் அதனால் நன்மையே உண்டாகும். ஆனால், ஏழரைச் சனி தொடர்வதால் மறைமுக பிரச்னைகள் இருக்கும். சக ஊழியர்களுடன் அளவோடு பழகவும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம்.
மாணவர்களே! தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்கள் உங்கள் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் முன்னேறுவீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.
இந்த வருடம் உங்கள் திறமைகளை அதிகப்படுத்துவதுடன், பணப்புழக்கத்தையும் வெற்றியையும் தருவதாக இருக்கும்.
பரிகாரம்: மதுரை மாவட்டம் பேரையூர் என்னும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை பூசம் நட்சத்திரத்தன்று சென்று வழிபட சுபிட்சம் உண்டாகும்.
Like Reply
#24
RASI PALAN 2019 IN TAMIL - தனுசு
2018 முடிந்து 2019 பிறக்கிறது. இந்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமான பலன்கள் பற்றியும் பரிகாரத் தலங்கள் பற்றியும் விரிவாக விவரிக்கிறார் ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரன்.

  • [Image: newyear-top-banner2.jpg]


[Image: 9.png]
இரக்க சுபாவம் கொண்டவர்களே!
ராசிக்கு லாபவீட்டில் சந்திரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், வருமானம் உயரும். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். பாதியில் நின்றுவிட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வாய்ப்பு ஏற்படும். அறிஞர்களின் நட்பால் தெளிவு பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.
12.2.19 வரை ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு இருப்பதால், சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரயம், இனம் தெரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். கண், காது, பல் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால், கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். திடீர்ப் பயணங்கள் ஏற்படும். ஆனால், தூக்கம் குறையும். கணவன் - மனைவிக்கிடையே ஈகோ பிரச்னையால் பிரிவு ஏற்படக்கூடும் என்பதால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணைக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். வழக்குகளால் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும்.
Like Reply
#25
வருடம் முழுவதும் ஜன்மச் சனி தொடர்வதால், அடிக்கடி பழைய கசப்பான நிகழ்ச்சிகளை நினைத்து உங்களை நீங்களே வருத்திக்கொள்வீர்கள். உங்களைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் பேசியவற்றை மறக்கப் பாருங்கள். படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போதல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். சிலர் கண்களைப் பரிசோதித்து கண்ணாடி அணிய நேரிடும். பணம் எவ்வளவு வந்தாலும் சேமிக்கமுடியாதபடி செலவுகளும் ஏற்படும். மற்றவர்களை எடுத்தெறிந்து பேசவேண்டாம். வழக்குகளால் கவலை ஏற்பட்டு நீங்கும்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் நிற்பதால், திடீர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கொஞ்சம் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். தூக்கமின்மை, படபடப்பு, கனவுத் தொல்லை வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்துகிறதே என்று ஆதங்கப்படுவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தில் கௌரவிக்கப்படுவீர்கள். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரத்திலும் குரு உங்கள் ராசியில் ஜன்ம குருவாக இருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாயுக்கோளாறு வந்து நீங்கும். காய்ச்சல், யூரினரி இன்ஃபெக்‌ஷன் போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே பிரிவு ஏற்படக்கூடும் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இனம் தெரியாத சின்னச் சின்ன கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பல வருடங்களாகப் பழகிய நண்பர்கள்கூட உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படக்கூடும்.
Like Reply
#26
வியாபாரிகளே! லாபம் சுமாராகத்தான் இருக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வது நல்லது. வேலையாள்களால் சின்னச் சின்ன நஷ்டங்கள் ஏற்படக்கூடும். துரித உணவகம், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பினாலும், ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் பணிகளை உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். ஆனால், ஜன்மச் சனி தொடர்வதால் மனதில் இனம் தெரியாத அச்ச உணர்வு இருந்தபடி இருக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது.
மாணவர்களே! படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். அவ்வப்போது தூக்கம், மறதி ஏற்பட்டு நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர அதிக செலவு செய்யவேண்டி வரும்.
கலைத்துறையினரே! உங்கள் தனித் திறமையை வெளிப்படுத்துவீர்கள். முடங்கிக் கிடக்கும் உங்களின் படைப்பு வெளியாக சில முக்கியப் பிரமுகர்கள் உதவி செய்வார்கள்
இந்தப் புத்தாண்டு சகிப்புத் தன்மை மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் என்னும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு சரபேஸ்வரரை ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபடுங்கள். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.
Like Reply
#27
RASI PALAN 2019 IN TAMIL - மகரம்
2018 முடிந்து 2019 பிறக்கிறது. இந்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமான பலன்கள் பற்றியும் பரிகாரத் தலங்கள் பற்றியும் விரிவாக விவரிக்கிறார் ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரன்.

  • [Image: newyear-top-banner2.jpg]


[Image: 10.png]
கலாசாரத்தை விட்டுக் கொடுக்காதவர்களே!
ராசிக்கு 10-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், இழப்புகள், ஏமாற்றங்களில் இருந்து விடுபடுவீர்கள். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வீர்கள். மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வீடு, வாகன வசதிகள் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
செவ்வாய் 5-ல் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், வீடு, மனை வாங்குவது விற்பது சுலபமாக முடியும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். கடனாக வாங்கிய பணத்தைத் தந்து முடிப்பீர்கள். நீண்ட நாளாகத் தேடியும் கிடைக்காத முக்கிய ஆவணம் கைக்குக் கிடைக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முக்கிய பிரமுகர்களின் ஆதரவால் சில காரியங்களை சுலபமாக முடிப்பீர்கள்.
Like Reply
#28
12.2.19 வரை ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால், தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மன இறுக்கம் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்து போகும். வாழ்க்கைத்துணைக்கு தைராய்டு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். ஆனால், 13.2.19 முதல் வருடம் முடியும் வரை கேது 12-லும் ராகு 6-லும் இருப்பதால், மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வந்து சேரும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
வருடம் முழுவதும் சனி விரயச் சனியாக இருப்பதால், அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். வேலைச்சுமை அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் உறக்கம் குறையும். கடந்து போன கசப்பான விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. கடன்களால் கௌரவம் குறைந்துவிடுமோ என்று அடிக்கடி கவலைப் படுவீர்கள்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு லாப வீட்டில் இருப்பதால், உங்களின் செல்வம், செல்வாக்கு கூடும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். புதுப் பதவிகள் தேடி வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். திருமணப் பேச்சு வார்த்தை நல்லபடி முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமாகவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரப்படியும் குரு 12-ல் மறைவதால், வீண்செலவுகளால் கையிருப்பு கரையும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். திடீர் பயணங்கள் ஏற்படும். உங்களைப் பற்றிய வதந்திகள் ஏற்படும். பழைய கடன்களை நினைத்து அடிக்கடி கவலைப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.
Like Reply
#29
வியாபாரிகளே! விரயச் சனி தொடர்வதால், புதுத் தொழில் தொடங்குவதைத் தவிர்ப்பதுடன், பெரிய முதலீடுகள் செய்வதையும் தவிர்ப்பது நல்லது. போட்டிகளைச் சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாள்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. தள்ளிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி, எண்டர்பிரைசஸ், மரம், ஸ்டேஷனரி, கல்வி நிறுவனங்கள், எரிபொருள்கள் வகைகளால் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் சின்னச் சின்ன அவமானங்களைச் சந்திக்கவேண்டி வரும். ஆனாலும், உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல நல்ல வாய்ப்புகள் ஏற்படும். சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பார்கள். இழந்த சலுகைகளை திரும்பப் பெறுவீர்கள்.
மாணவர்களே! படிப்பதுடன் படித்தவற்றை மறுபடி எழுதிப் பார்ப்பது அவசியம். கடினமாக உழைத்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற முடியும். கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.
தடைகள் ஏற்பட்டாலும் முயற்சியினால் முன்னேற்றம் ஏற்படும் வருடமாக அமையும்.
பரிகாரம்: சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு லட்சுமி கோபாலரை சனிக்கிழமைகளில் சென்று வழிபடுவது முன்னேற்றம் தருவதாக அமையும்.
Like Reply
#30
RASI PALAN 2019 IN TAMIL - கும்பம்
2018 முடிந்து 2019 பிறக்கிறது. இந்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமான பலன்கள் பற்றியும் பரிகாரத் தலங்கள் பற்றியும் விரிவாக விவரிக்கிறார் ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரன்.

  • [Image: newyear-top-banner2.jpg]


[Image: 11.png]
பிறரின் நிறைகளை மட்டும் பார்ப்பவர்களே!
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும்போது வருடம் பிறப்பதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் நல்லபடி முடியும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். செலவுகளும் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
வருடம் பிறக்கும்போது செவ்வாய் 2-ல் இருப்பதால், வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இனிமையாகப் பேசிப் பழகுவது அவசியம். உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலர் வீடு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். முக்கிய வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது.
Like Reply
#31
12.2.19 வரை கேது 12-ல் தொடர்வதால், நீண்டநாள்களாகச் செல்ல நினைத்த குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். சில நாள்களில் தூக்கம் குறையும். ஆனால், ராகு 6-ல் இருப்பதால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். 13.2.19 முதல் கேது லாப வீட்டில் அமர்வதால், செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், ராகு 5-ல் இருப்பதால், அலைச்சல், செலவுகள் ஏற்படும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும்.பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
வருடம் முழுவதும் சனி லாப வீட்டில் தொடர்வதால், வசதி வாய்ப்புகள் பெருகும். பிற மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். வீடு வாங்கவும், புதுத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருப்பவர்களின் பணி நிரந்தரமாகும்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு ராசிக்கு 10-ல் இருப்பதால், அடுக்கடுக்கான வேலைகளால் உடல் அசதி உண்டாகும். மறைமுக அவமானம் ஏற்பட்டு நீங்கும். கௌரவம் குறைந்துவிடுமோ என்று ஓர் அச்சம் மனதை வாட்டும். வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரத்திலும் குரு லாப வீட்டில் அமர்வதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுச் சொத்து வாங்குவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும்.
Like Reply
#32
வியாபாரிகளே! அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வியாபார ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வேலையாள்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. துணி, சிமெண்ட், செங்கல்சூளை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்கவேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். உங்கள் உழைப்பைப் பயன்படுத்தி மற்றவர்கள் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடித்தான் வேலை வாங்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
மாணவர்களே! பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கணிதம், வேதியியல் பாடங்களைப் படிப்பதுடன் அடிக்கடி எழுதிப் பார்ப்பது அவசியம். விரும்பிய பாடப் பிரிவில் சேர சிலரின் சிபாரிசு தேவைப்படும். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.
கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யவும். விமர்சனங்களைக் கடந்து முன்னேறுவீர்கள்.
இந்தப் புத்தாண்டு அனுபவத்தாலும் சமயோசித அறிவாலும் வெற்றி பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: கோவை மாவட்டம் வடவள்ளி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு காட்டு விநாயகரை சதுர்த்தி திதி நாளில் சென்று வழிபட சங்கடங்கள் நீங்கும்
Like Reply
#33
RASI PALAN 2019 IN TAMIL - மீனம்
2018 முடிந்து 2019 பிறக்கிறது. இந்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமான பலன்கள் பற்றியும் பரிகாரத் தலங்கள் பற்றியும் விரிவாக விவரிக்கிறார் ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரன்.

  • [Image: newyear-top-banner2.jpg]


[Image: 12.png]
மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுபவர்களே!
சுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். தங்க ஆபரணம், விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். இழுபறியாக இருக்கும் வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழியில் உதவி கிடைக்கும். ஆனால், சந்திரன் 8-ல் இருப்பதால், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வறட்டு கௌரவத்துக்காக செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.
செவ்வாய் ராசியில் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பேச்சில் கம்பீரம் ஏற்படும். வழக்குகள் சாதகமாக முடியும்.எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். வீடு கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
Like Reply
#34
12.2.19 வரை லாப வீட்டில் கேது இருப்பதால், எவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் மனவலிமை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ல் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு 4-லும் கேது 10-லும் அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழி ஏற்படக்கூடும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும்.
வருடம் முழுவதும் சனி 10-ல் இருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். ஆனாலும், உத்தியோகத்தில் சில பிரச்னைகள், வீண்பழிகள் ஏற்படக்கூடும். நெருக்கமானவர்களிடம்கூட குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேலை இல்லாதவர்களுக்கு புது வேலை கிடைக்கும். புதுப் பதவிகளுக்கும், கௌரவப் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். செலவைக் குறைத்து சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 10.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ல் இருப்பதால், சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கி, அதிக வட்டிக் கடனைத் தந்து முடிப்பீர்கள். நீண்டநாள்களாகச் செல்ல நினைத்த வெளி மாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரத்திலும் குரு 10-ல் அமர்வதால், சிறுசிறு அவமானங்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய பிரச்னைகள் மறுபடியும் தலைதூக்குமோ என்பது போன்ற அச்ச உணர்வு ஏற்படும். சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்தப் பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு அநாவசிய வாக்குறுதி தரவேண்டாம். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும்.
Like Reply
#35
வியாபாரிகளே! லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்து வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். அனுபவம் மிக்க வேலையாள்கள் பணியில் சேருவார்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், தோல்பொருள் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.
உத்தியோகஸ்தர்களே! பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பணிகளை முடிப்பதில் சுணக்கம் காட்டவேண்டாம். சக ஊழியர்கள் மதிப்பார்கள். பதவி உயர்வுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மாணவர்களே! பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். நண்பர்களைச் சரியாகப் புரிந்துகொள்வீர்கள். நினைவாற்றலை அதிகரித்துக் கொள்வீர்கள்.
கலைத்துறையினரே! உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.
இந்த வருடம் செயல் வேகத்தை அதிகப்படுத்துவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றியைத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு விருத்தகிரீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வழிபட நன்மைகள் கூடும்.
Like Reply
#36
Monthly Rasipalan


[Image: 1.png]
[Image: 2.png]
[Image: 3.png]
[Image: 4.png]
[Image: 5.png]
[Image: 6.png]
[Image: 7.png]
[Image: 8.png]
[Image: 9.png]
[Image: 10.png]
Like Reply
#37
Monthly Rasipalan

[Image: 1.png]
மேஷம்: 10-ல் சூரியன், கேது; 8-ல் குரு; 8, 9-ல் சுக்கிரன்; 10, 11-ல் புதன்; 12, 1-ல் செவ்வாய்; 9-ல் சனி; 4-ல் ராகு மாதம் முழுவதும் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். வெளிவட்டா ரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின்போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும், வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். பிரபல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள். மாணவ - மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சாதகமான நாள்கள்: ஜன: 15, 16, 19, 20, 25, 26, 27, 28, 29, பிப்: 3, 4, 5, 6, 7, 11, 12 சந்திராஷ்டம நாள்கள்: ஜன: 30, 31 அதிர்ஷ்ட எண்கள்: 2,5 வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், துர்கை பரிகாரம்: தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வது நல்லது.
Like Reply
#38
Monthly Rasipalan

[Image: 2.png]
ரிஷபம்: 9-ல் சூரியன், கேது; 7-ல் குரு; 7, 8-ல் சுக்கிரன்; 9, 10-ல் புதன்; 11, 12-ல் செவ்வாய்; 8-ல் சனி; 3-ல் ராகு மாதம் முழுவதும் குரு, மாதப் பிற்பகுதியில் சுக்கிரன், புதன் ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும். பழுதான மின்சார, மின்னணு சாதனங்களை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். தந்தை வழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல்நலனில் ஆரோக்கியம் தேவை. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நினைத்த வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஷேர் மூலம் பணம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. மாத முற்பகுதியில் தாய்மாமன் வழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் ஆலோசனைகள் பாராட்டப்படும். சக ஊழியர்கள் கேட்கும் சந்தேகங்களைத் தீர்ப்பதுடன், அவர்களுடைய பணிகளில் உதவி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது. கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மாதப் பிற்பகுதியில் பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். மாணவ - மாணவியர்க்கு கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். நண்பர்களுடன் பழகுவதில் மிகவும் கவனம் தேவை. சந்தேகங்களை அவ்வப் போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும். ஆனாலும், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சாதகமான நாள்கள்: ஜன: 17, 18, 21, 22, 27, 28, 29, 30, 31, பிப்: 6, 7, 9, 10 சந்திராஷ்டம நாள்கள்: பிப்: 1, 2 அதிர்ஷ்ட எண்கள்: 5,7,9 வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன், தட்சிணாமூர்த்தி பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செம்பருத்திமாலை அணிவித்து அர்ச்சனை செய்வதும், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வதும் நன்மை தரும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.
Like Reply
#39
Monthly Rasipalan

[Image: 3.png]
மிதுனம்: 8-ல் சூரியன், கேது; 6-ல் குரு; 6, 7-ல் சுக்கிரன்; 8, 9-ல் புதன்; 10, 11-ல் செவ்வாய்; 7-ல் சனி; 2-ல் ராகு மாதம் முழுவதும் செவ்வாய், சுக்கிரன், மாத முற்பகுதியில் புதன் ஆகியோர் மட்டுமே அனுகூலப் பலன்களைத் தருவார்கள். மற்றபடி சூரியன், குரு ஆகியோர் சாதகமாக இல்லாத காரணத்தால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். அரசாங்கக் காரியங்கள் தாமதமாகவே முடியும். வழக்குகளால் மனதில் ஓர் அச்ச உணர்வு ஏற்படக்கூடும். ஆனால், செவ்வாய் அனுகூலமாக இருப்பதால், எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். மாத முற்பகுதியில் புதன் சாதகமாக இருப்பதால், எடுத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். மாதத்தின் பிற்பகுதி யில் உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லைசென்ஸ் போன்ற விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கித் தொகையும் வந்து சேரும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். மாணவர்களுக்கு மாத முற்பகுதியில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் மிகச் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆனால், சக மாணவர்களிடம் கவனமாகப் பழகவும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகம் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சாதகமான நாள்கள்: ஜன: 15, 16, 19, 20, 23, 24, 30, 31, பிப்: 1, 2, 9, 10, 11, 12 சந்திராஷ்டம நாள்கள்: பிப்: 3, 4, 5 அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7 வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், மகாலட்சுமி பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவதும் சிறந்த பலன்களைத் தரும்.
Like Reply
#40
Monthly Rasipalan

[Image: 4.png]
கடகம்: 7-ல் சூரியன், கேது; 5-ல் குரு; 5, 6-ல் சுக்கிரன்; 7, 8-ல் புதன்; 9, 10-ல் செவ்வாய்; 6-ல் சனி; 1-ல் ராகு மாதம் முழுவதும் குரு, சனி, மாதப் பிற்பகுதியில் செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோர் நன்மை செய்வார்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. குரு சாதகமாக இருப்பதால், முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனால், பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்பதால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவிகளும் உண்டு. ஆனால், மாதக் கடைசியில் அவர்களில் சிலரால் பிரச்னைகளும் ஏற்படலாம் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் நலன் அடிக்கடி பாதிக்கப்படக்கூடும். உடனுக்குடன் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரி களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தொழில், வியாபாரம் நன்றாகவே இருக்கும். போட்டிகள் குறையும். சக வியாபாரிகள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். சிலருக்கு வியாபார விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். ஆனால், அரசாங்க வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கவனமாகப் பயன் படுத்திக் கொள்வது அவசியம். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். கஷ்டப்பட்டு படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். சாதகமான நாள்கள்: ஜன: 15, 16, 17, 18, 21, 22, 25, பிப்: 1, 2, 3, 4, 5, 11, 12 சந்திராஷ்டம நாள்கள்: பிப்: 6, 7 அதிர்ஷ்ட எண்கள்:5,6 வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வெங்கடாசலபதி பரிகாரம்: விஷ்ணுசஹஸ்ரநாமம் மற்றும் மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைத் தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)